பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 02, 2009

முக்கியமான இரண்டு அறிவிப்பு

மிக முக்கியமான இரண்டு செய்திகள்

1. மத்திய அரசு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்க இருப்பதாலும், காற்றாலை மின் உற்பத்தி காரணமாகவும் மே மாதம் 15ஆம் தேதிக்கு பிறகு தமிழ்நாட்டில் மின்தட்டுப்பாடு இருக்காது என்று தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்துள்ளார்.
மே 16 தேர்தல் முடிவுகள் வந்துவிடும். எந்த வருஷம் என்று சொல்லவில்லை, கவனியுங்க

2. கர்நாடக மாநிலம் தும்கூரில் வருகிற 12-ந் தேதி நடைபெறும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் 3-வது அணி உதயமாகிறது. இந்த அணியில் சேர சம்மதம் தெரிவித்து உள்ள இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பார்வர்டு பிளாக், தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி, அ.தி.மு.க, மதசார்பற்ற ஜனதா தளம், இந்திய குடியரசு கட்சி ஆகிய 8 கட்சிகளின் தலைவர்கள் 3-வது அணி உதயமாகும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். 3-வது அணியின் கொள்கைகள் இந்த கூட்டத்தில் வெளியிடப்படும். சொன்னவர் தேவகவுடா

மூன்றாவது முறையாக மூன்றாவது அணி உதயமாகிறது.

3 Comments:

Anonymous said...

மூன்றாவது அணினு அப்பப்போ கரடி விட்டுடு இருக்காங்க .. இந்த முறையாவது இருக்குமோ .. அந்த கடவுளுக்கே வெளிச்சம்.. நம்ம மினசாரர அமைச்சரும் வரும் வரும்னு சொல்றார் ஆனா வர்ல.. கல்யாணத்துல மக்கள் தருவாங்க மின்சாரம்.. அப்போ தெரியும் .. இலவசம் முக்கியமா அல்லது மின்சாரம் முக்கியமனு...

Kots said...

மூன்றாவது அணி எத்தனை முறை உதயமானாலும் அவர்கள் Congress அல்லது பா.ஜ.க
விற்கு கூஜா தூக்கத் தான் போகிறார்கள். இவர்களால் தனித் தவில் வாசிக்க
முடியாது .

மின் வெட்டு துறை அமைச்சர் வீராசாமி காமெடிக்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது

Anonymous said...

ரொம்ப முக்கியம்