பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, March 14, 2009

காந்தி பொருட்களை கொடுக்க மறுக்கும் ஒடிஸ்!

மகாத்மா காந்தி பயன்படுத்திய மூக்கு கண்ணாடி, செருப்பு, தட்டு, தம்ளர், கடிகாரம் ஆகியவை அமெரிக்காவைச்சேர்ந்த ஜேம்ஸ் ஒடிஸ் என்பவரிடம் இருந்தது. அதை அவர் தர மறுத்துள்ளார்...

நியூயார்கில் சமீபத்தில் காந்தி பயன்படுத்திய பொருட்கள் ஏலம் விடப்பட்டது. அதை கடைசி நிமிஷத்தில் விஜய் மல்லையா 9 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார்.

காந்தி பொருட்களை மத்திய அரசிடம் ஒப்படைக்க மல்லையா முடிவு செய்துள்ளார். இன்னும் சில தினங்களில் மகாத்மாகாந்தி பொருட்கள் இந்தியா வந்து விடும் என்று தகவல் வெளியானது.

இந்த நிலையில் ஜேம்ஸ் ஒடிசிடம் திடீரென மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்களை இந்தியருக்கு கொடுக்க விருப்பம் இல்லை. மீண்டும் நானே வைத்துக்கொள்ளப்போகிறேன் என்று கூறி உள்ளார். இது தொடர்பாக தன் வக்கீல்கள் விபரங்களை திரட்டி வருவதாகவும் அவர் கூறினார். ஆனால் எந்த விதியை கடைபிடித்து, காந்தி பொருட்களை தக்க வைத்துக்கொள்ளப்போகிறேன் என்ற விபரத்தை ஜேம்ஸ் ஒடிஸ் வெளியிடவில்லை.

ஒடிசின் இந்த திடீர் மன மாற்றதுக்கு காரணம் காந்தியை வைத்து நம் தலைவர்கள் நடத்தும் ‘அரசியல்’ என்கிறார்.

8 Comments:

Rajaraman said...

காந்தியின் கொள்கைகளை எப்போதோ ஏலம் விட்டு அவை இப்போது எங்கு இருக்கின்றன என்றே தெரியவில்லை. இந்நிலையில் காந்தி பயன் படுத்திய பொருட்கள் வந்தால் என்ன வராவிட்டால் என்ன.

ஓடிஸ் அவர்களை கேள்வி கேட்க நமக்கு அருகதை இல்லை. இந்திய தேசிய காங்கிரஸ் ச்சே இத்தாலிய தேசிய காங்கிரஸ் ஒண்டு இங்கு செயல்படுவதாக கேள்வி.

K SRINIVASAN said...

There is another reason for his dis appointment. He expected atleast 10 crores thinking Indian Government will buy it at any cost.

Poor guy he never understood the fact that in India now some other Gandhis are more important than the original gandhi.

Who is he to advise us to increase our spending on poor people. Does he know that we got Oscars only because of our people and their slums.

பெசொவி said...

பாவம் பரிதாபம், காந்தி தாத்தா!

Anonymous said...

//Who is he to advise us to increase our spending on poor people. Does he know that we got Oscars only because of our people and their slums.//

Great!

Anonymous said...

If he hates so much to give those items to Indians then he should have banned Indians from the Auction...What he is doing now is not fair...

Anonymous said...

//Who is he to advise us to increase our spending on poor people. Does he know that we got Oscars only because of our people and their slums.//

Excellant! Keep it up.

R.Gopi said...

குடுக்க மாட்டேன்னு சொல்றவன் கிட்ட, "சோனியா காந்தி" பேர சொன்னீங்களா??

சொல்லி பாருங்க, உடனே, அவரு அலறி அடிச்சுக்கிட்டு இங்க வந்து, நம்ம "தல"ய பாத்து, கோபாலபுரத்துல அவர்கிட்டவே குடுத்துடுவாரு.

அரசியல்-ல பண்றது எல்லாம் அராஜகம். ஏன், அங்க இந்த மஹாத்மா காந்தி கொள்கையை பின்பற்ற வேண்டியதுதானே??

இவனுங்க பண்ற அரசியல்-ல அஹிம்சை கிடையாது. ஆனா, இந்த மாதிரி விஷயம் வரும்போது, மஹாத்மா, மஹாத்மா-ன்னு உயிரை விடறது மாதிரி நடிப்பானுங்க.

Anonymous said...

வெள்ளைக்காரி ஆளும் நாட்டில் வெள்ளைக்காரன் செய்த திருட்டைப் பற்றி யாரும் வாயைத் திறக்க மாட்டேன் என்கிறார்கள்.

முதலில் இந்த ஓடிஸிடம் எப்படி இந்தப் பொருட்கள் வந்தன?

ஓடிஸ் டாக்குமண்டரி எடுக்கும் சாக்கில் வந்த ஆள். நேர்மையாக இருக்கவேண்டும் என்று சொல்லிய காந்தியின் பொருட்களைத் திருடிக்கொண்டு போய்விட்டார். சட்டப்படி இந்தியாவை விட்டு வெளியேறும்போது இந்திய கஸ்டம்ஸிடம் இந்தப் பொருட்களை அவர் காட்டி அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யாமல் கடத்திக்கொண்டு போய்விட்டார் இந்த வெள்ளைக்காரத் துரை.

இங்கிருந்து திருடிய பொருட்களை இங்குள்ளவர்களுக்கே ஏலம் விட்டுவிட்டு இங்கே இருப்பவர்கள் மோசமான அரசியல் செய்கிறார்கள், அதனால் அந்தப் பொருட்களைத் தரமாட்டேன் என்று ஓடிஸ் சொல்லுகிறார்.

இதைக் கேள்வி கேட்காத வெள்ளைக்காரியின் அரசாங்கம், 1 கோடிக்கு மேல் வரிகட்டினால் மட்டும்தான் இந்தியாவுக்குள் இந்தப் பொருட்களை அனுமதிப்போம் என்று விஜம் மல்லையாவிடம் சொல்லிவிட்டது.

இந்த அநியாயத்தை யாரும் கேள்வி கேட்கவில்லை. பார்த்துக்கொண்டே இருங்கள். இந்தப் பொருட்களை விஜய் மல்லையாவோ அவரது குடும்பத்தை சேர்ந்த வேறு யாரோ நாளை ஏலம் விடும்போது, “காந்தி ஹமாரா மகான்” என்று சொல்லி விஜய் மல்லையாவைக் குறை சொல்லுவார்கள்.

ஏனென்றால் விஜய் மல்லையா இந்தியாக்காரர். வெள்ளைக்காரர் இல்லை.