பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, March 25, 2009

ஜெயலலிதாவுடன் டாக்டர் ராமதாஸ் சந்திப்பு

சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற்ற பா.ம.க. பொதுக்குழுவில் அ.தி.மு.க. கூட்டணியில் சேருவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைதொடர்ந்து பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் போயஸ் காடனுக்கு வந்தார். அவருடன் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, டாக்டர் அன்புமணி ராமதாஸ், வேலு, காடுவெட்டி குரு ஆகியோர் உடன் வந்தனர். டாக்டர் ராமதாசுக்கு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா பொன்னாடை போர்த்தி வரவேற்றார். இதன் பின்பு ஜெயலலிதாவும், டாக்டர் ராமதாசும் தனியாக சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து சுமார் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்கள்.


அவசரத்துக்கு இந்த படம் தான் கிடைத்தது. கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள் ;-)


இந்த செய்தி தினத்தந்தியில் கொஞ்சம் நேரம் முன்பு வந்தது. இப்ப இந்த செய்தி இல்லை ஏன் என்று தெரியவில்லை.

14 Comments:

Anonymous said...

Nothing wrong in the photo, if one takes this as a prelude to next General Election to the next Loksabha Elections - may be in 2014.

மாயவரத்தான் said...

Where did u got this news?

Anonymous said...

///அவசரத்துக்கு இந்த படம் தான் கிடைத்தது. கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள் ;-)///

ரொம்ப கஸ்டப்பட்டு....கஸ்டப்பட்டு
தேடி எடுத்து போட்டமாதிரி தெரியுது....

அரைவேக்காடு (திரவிட)தனமா
சொல்லும்னா
சும்மா டைமிங்க் பஞ்ச் மச்சி

எங்க தலைவர் ஸ்டைலில் சொல்லனும்னா
So ஸ்வீட்....

சோ (So)...
இட்லி வடையும் சூடுபறக்க ஆரம்பித்துவிட்டது
தமிழக அரசியலும் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது

K SRINIVASAN said...

போனால் போகட்டும் போடா ....
இந்த கூட்டணியில் நிலையாய் இருந்தவர் யாரடா ???
போனால் போகட்டும் போடா ....

Anonymous said...

ஐயா இட்லி வடை!
நாளைக்குதானே பொதுக்குழுக்கூட்டம்? அதுக்குள்ள எப்டி இந்த news?

ரொம்பதான் குசும்பு ஒங்களுக்கு!

T.V.ராதாகிருஷ்ணன் said...

admk- 23
pmk - 7
vaiko-4
cpi -3
cpm-3

ரிஷபன்Meena said...

திராவிட பானியில இந்தப் படத்துக்கு பதில் சொல்லனுமா இல்லையா என்பதை பொதுக் குழு கூட்டி முடிவெடுத்து விட்டு சொல்கிறேன்.

Krish said...

இத விடக் கேவலம் ஒன்னும் இல்லை. அடுத்தவன் முதுகுல சவாரி செஞ்சே பழக்கப்பட்ட இவங்களுக்கு இந்த தடவையாவது மக்கள் படம் புகட்டட்டும்.

Krish said...

//////ராமதாஸ் : விரக்தியின் விளிம்பிற்கும், கோபத்தின் உச்சிக்கும் சென்றுவிட்டால், ஒருவர் எப்படியெல்லாம் பேசுவார், எழுதுவார் என்பதற்கு முதல்வர் கருணாநிதியின், "கள்ளத்தோணி' கருத்து சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. முதல்வர் போன்ற பொறுப்பான பதவியில் உள்ள ஒருவர், "கள்ளத்தோணியில் படையெடுத்துப் போங்கள், குறுக்கே நிற்கமாட்டோம்' என்று சொல்லியிருப்பது, எந்த அளவிற்கு அவர் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்ட அரசியல் சட்டத்திற்கு உட்பட்டது என்பதை சட்ட வல்லுனர்கள்தான் விளக்க வேண்டும்.
முதல்வரின் இந்தப் புதிய நிலைப்பாடு, இனப்படுகொலையிலிருந்து ஈழத்தமிழர்களைக் காக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டிலிருந்து நழுவிச் சென்று விட்டதற்கு ஒப்பானது என்று அடையாளம் காட்டியது தான் முதல்வரின் ஆத்திரத்திற்கெல்லாம் காரணம். இந்த திடீர் ஞானோதயம் முதல்வருக்கு எப்படி வந்தது என்பது நமக்கெல்லாம் புரியாமல் இல்லை. எஞ்சியிருக்கும் காங்கிரசும், கையை விட்டுப் போய்விடக் கூடாது."//////

நன்றி : தினமலர்

கங்க்ரசின் மத்திய அரசில் ப.ம.க வும்தான் உள்ளது. கருணாநிதியை சகட்டு மேனிக்கு திட்டும் இவர் என்ன கிழித்தார்? பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் இந்த ரமதாஸ் கருணாநிதியை விட மோசமானவர்!

Anonymous said...

ரொம்ப குசும்புயா உமக்கு :)

மாயவரத்தான் said...

நக்கீரனிலும் இந்த செய்தி அப்படியே ஈயடிச்சான் காப்பியாக வந்திருந்தது.

மேட்டர் இது தான்.

செய்திகளை முந்தித் தருகிறோம் பேர்வழி என்று இது தான் நடக்கும் என்று இப்படி செய்தி எழுதி ரெடியாக வைத்திருந்திருக்கிறார்கள். அவசரக்குடுக்கை உ.ஆ. அதனை தெரியாமல் வெளியிட்டிருப்பார். அவசரக்குடுக்கை இ.வ.வும் அப்படியே வெளியிட்டு விட்டார். அம்புட்டு தான் மேட்டரு.

R.Gopi said...

"தேர்தல் தண்டோரா"

கடைசியில் நாம் எல்லோரும் எதிர்பார்த்தபடி "தல" கட்டுமரம், கள்ளத்தோணி கஜா மேட்டர நேத்து "தைலாபுரம்" அய்யாவிடம் எடுத்து விட்டார் என்று தெரிவித்து கொள்கிறோம்.

ஆகவே, வாக்காள பெருமக்களே,

நாம் சொல்வதைதான் "தல" செய்வார்.

"தல" செய்வதைத்தான் நாம் சொல்வோம்.

Anonymous said...

இல்லாத மேடையொன்றில்*** * எழுதாத நாடகத்தில்*** * எல்லோரும் நடிக்கின்றார் - நாம் *** * எல்லோரும் பார்க்கின்றோம்

முருகன் ஜெயராமன் said...

இதுக்கு பேசாம இட்லிவடை விக்கபோலாம்,ராமதாஸ்