தினமலரில் வந்த கட்டுரை மற்றும் டைம்ஸில் வந்த சில புள்ளிவிவரம்.
இந்தியாவில், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1920 மற்றும் 1935ம் ஆண்டுகளில் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது அனைவருக்கும் ஓட்டுரிமை அளிக்கப்படவில்லை. படித்தவர்கள், நிலச்சுவான்தார்கள் தான் ஓட்டுப் போட முடியும்.இந்தியா 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி குடியரசானது. 1952ம் ஆண்டே லோக்சபாவுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது, ஓட்டுப் போட குறைந்தபட்ச தகுதி 21 வயது. 1991ல் தான் 18 வயதுடையவர்கள் ஓட்டுப் போடலாம் என திருத்தப் பட்டது.முதல் தேர்தலில், லோக்சபாவுக் கும், அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டது. ஆரம்பத்தில், கட்சிகளுக்கு சின்னம் ஏதும் ஒதுக்கப்படவில்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிறம் ஒதுக்கப்பட்டது. அந்த நிறத்தில் உள்ள பெட்டிகளில் தங்களுக்கு விருப்பப்படும் கட்சிக்கு ஓட்டுப் போட வேண்டும். பின்னர் தான் சின்னங்கள் அறிமுகப்படுத்தப் பட்டு, வேட்பாளரின் பெயர்களும் இடம்பெற்றன.
காங்கிரஸ் பிளவு: கடந்த 1967ம் ஆண்டு காங்கிரஸ் பிளவுபட்டது. இந்திரா தலைமையில் காங்கிரஸ் (ஐ) உருவானது. காமராஜர், நிஜலிங்கப்பா போன்றவர்கள் சேர்ந்து ஸ்தாபன காங்கிரசை உருவாக்கினர். 1971ம் ஆண்டு நடந்த தேர்தலில், தி.மு.க.,வுடன் தமிழகத் தில் கூட்டணி வைத்த காங்கிரஸ் (ஐ) பெரும் வெற்றியை பெற்று, மீண்டும் ஆட்சியை பிடித்தது.இந்திரா போட்டியிட்ட தொகுதியில் முறைகேடு நடந்ததாகக் கூறி, அவர் வெற்றி பெற்றதை ரத்து செய்து அலகாபாத் கோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, முன்தேதியிட்டு ஒரு சட்டத்தை பார்லிமென்ட்டில் இந்திரா நிறைவேற்றினார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையில் தலைவர்கள் பிரிந்து ஜனதா கட்சியைத் துவக்கினர். ஜனசங்கம், கம்யூனிஸ்ட்கள் இக்கட்சியுடன் இணைந்து செயல்பட்டன. இதனால், எமர்ஜென்சியை 1975ம் ஆண்டு, இந்திரா அமல்படுத்தினார். லோக்சபா ஆயுட்காலம் முடிந்த பின்னரும், ஓராண்டு பதவிக் காலத்தை நீட்டித்து, எமர்ஜென்சி காலத்தில் இந்திரா சட்டம் கொண்டு வந்தார்.
கருத்து வேறுபாடு : இவை அனைத்தும் காங்கிரசுக்கு தேசிய அளவில் சரிவை ஏற்படுத் தின. வேறு வழியின்றி 1977ல் லோக்சபாவுக்கும், தமிழக சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. மத்தியில் காங்கிரஸ் பெரும் தோல்வியைச் சந்தித்தது. தமிழகத்தில், புதிதாக துவக்கப்பட்டிருந்த அ.தி.மு.க., ஆட்சியைப் பிடித்தது.மத்தியில் ஜனதா ஆட்சி நீண்டகாலம் நீடிக்கவில்லை. ஜனசங்கத்துக் கும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ஜனதா கட்சி உடைந்து, கடைசியில் ஆட்சியே கவிழ்ந்தது. மீண்டும் 1980ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடந்தது. தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியை கலைத்த இந்திராவோடு கருணாநிதி கூட்டு சேர்ந்தார்.
அந்தத் தேர்தலில், காங்கிரசும், தி.மு.க.,வும் பெரும் வெற்றியை பெற்றன. இதையடுத்து, தமிழகத் தில் அ.தி.மு.க., ஆட்சியைக் கலைக்க தி.மு.க., வற்புறுத்தியது. அதன்படி, ஆட்சியும் கலைக்கப் பட்டது. ஆனால், தி.மு.க.,வும் காங்கிரசும் சேர்ந்து சட்டசபை தேர்தலைச் சந்தித்தும், அ.தி.மு.க.,வே பெரும் வெற்றியைப் பெற்றது.கடந்த 1984ல், இந்திரா படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, லோக்சபாவுக்கும், தமிழக சட்டசபைக்கும் தேர்தல் நடந் தது. அந்த சமயத்தில், எம்.ஜி.ஆர்., அமெரிக்க மருத்துவமனையில் இருந்தபோதும், காங்கிரசுடன் கூட்டணி வைத்து அ.தி.மு.க., களமிறங்கியது. அதில், மத்தியில் காங்கிரசும், தமிழகத்தில் அ.தி.மு.க.,வும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டன.மத்தியில் ராஜிவ் பிரதமரான நிலையில், அவர் மீது ஊழல் குற்றச் சாட்டை 1987ல் வி.பி.சிங் சுமத்தினார்.
அ.தி.மு.க., பிளவு: 1988ல், எம்.ஜி.ஆர்., இறந்ததால், அ.தி.மு.க., பிளவுபட்டு, "ஜா', "ஜெ' என இரண்டு அணிகளாயின. 1989ல் நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்தது.ஆனால், அதே ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரசால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், பாரதிய ஜனதா ஆதரவுடன் வி.பி.சிங் தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சியை பிடித்தது. அந்த தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க., பெரும் தோல்வியை தழுவியது.
லோக்சபா தேர்தலில் புதிய திருப்பம்... ; வி.பி.சிங், மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்தியதால், பாரதிய ஜனதா ஆதரவை விலக்கிக் கொண்டது. இதனால், மத்திய அரசு கவிழ்ந்தது. காங்கிரஸ் ஆதரவுடன் சந்திரசேகர் ஆட்சி அமைத்தார். காங்கிரஸ் வற்புறுத்தலால், தி.மு.க.,வின் ஆட்சியை சந்திரசேகர் கலைத்தார். சில மாதங்களிலேயே, ஆதரவை காங்கிரஸ் வாபஸ் பெற்றதால், சந்திரசேகர் அரசும் கவிழ்ந்தது.இதையடுத்து, 1991ல் லோக்சபாவுக்கும், தமிழக சட்டசபைக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க., ஜெ., அணியுடன் காங் கிரஸ் கூட்டணி வைத்தது. தேசிய அளவில் சில கட்டங்களாக தேர்தல் நடந்திருந்த நிலையில், தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக வந்த ராஜிவ் படுகொலை செய்யப்பட்டார்.இதனால், அதற்கு அடுத்தகட்ட தேர்தல்களில் காங்கிரஸ் மீது அனுதாப அலை வீசியது.
தமிழகத்தில் பெரும் வெற்றியை அ.தி.மு.க., பெற்றது. தேசிய அளவில் காங்கிரசுக்கு 223 எம்.பி.,க்களே இருந்ததால், தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க முடியவில்லை. சிறிய கட்சிகளில் ஆதரவை பெற்று, நரசிம்மராவ் பிரதமரானார்.கடந்த 1996ல் தமிழக சட்டசபைக் கும், லோக்சபாவுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் காங்கிரஸ் கூட்டணி வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மூப்பனார் தலைமையில் தமிழகத்தில் த.மா.கா., உருவானது. தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க., அணி வெற்றி பெற்றது.
மத்தியில் காங்கிரஸ் 140 எம்.பி.,க்களையும், பா.ஜ., 165 எம்.பி.,க்களையும், தி.மு.க., த.மா.கா., உட்பட ஐக்கிய முன்னணியைச் சேர்ந்த கட்சிகள் 205 எம்.பி.,க்களையும் பெற்றன. பெரிய கட்சி என்ற காரணத் துக் காக ஆட்சி அமைக்கும் உரிமையை பா.ஜ., கோரியது. வாஜ்பாய் பிரதமராக பதவியேற்றபோதிலும், பெரும் பான்மையை நிரூபிக்க முடியாததால், 13 நாட்களில் அந்த அரசு விலகியது.இதனால், காங்கிரஸ் ஆதரவுடன் மத்தியில் ஐக்கிய முன்னணி ஆட்சி அமைத்தது. தேவகவுடா பிரதமரானார். ஆனால், காங்கிரசுக்கு எதிராக தேவகவுடா செயல்படுவதாகக் கூறி, தனது ஆதரவை அக்கட்சி விலக்கியது.பின்னர், ஐ.கே.குஜ்ராலை பிரதமராக்க காங்கிரஸ் சம்மதித்தது. அவரும் சில மாதங்களே நீடித்த நிலையில், ஜெயின் கமிஷன் அறிக்கையை சுட்டிக்காட்டி, தி.மு.க.,வை அமைச் சரவையில் இருந்து விலக்க காங்கிரஸ் நிபந்தனை விதித்தது.
அதற்கு ஐக்கிய முன்னணி கட்சிகள் சம்மதிக்காததால், மீண்டும் அரசு கவிழ்ந்தது.இதனால், 1998ல் லோக்சபாவுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதிலும், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அ.தி.முக., - பா.ம.க., - ம.தி.மு.க., உட்பட மாநில கட்சிகளின் ஆதரவுடன் பாரதிய ஜனதா ஆட்சியை அமைத்தது. 13 மாதங்களில் அ.தி.மு.க., தனது ஆதரவை வாபஸ் பெற்றதால், ஒரு ஓட்டில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது.அ.தி.மு.க., மற்றும் மாநிலக் கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சோனியா முயற்சித்தார். முலாயம் சிங் சம்மதிக்காததால், அந்தத் திட்டம் கதைக்கு ஆகவில்லை. மீண்டும் 1999ல் லோக்சபா தேர்தல் அறிவிக்கப் பட்டது. இதில், பா.ஜ.,வுடன் தி.மு.க., கூட்டணி சேர்ந்தது.
அந்தத் தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்று, தி.மு.க., சமதா, பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. ஐந்து ஆண்டுகள் முழுமையாக பா.ஜ., தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்தது.கடந்த 2004 லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ், தி.மு.க., கூட்டணி மலர்ந்தது. இந்த அணியில் கம்யூனிஸ்ட்கள், ம.தி.மு.க., - பா.ம.க., ஆகிய கட்சிகளும் சேர்ந்ததால், மெகா கூட்டணியாக களமிறங்கின. இதில், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளையும் தி.மு.க., அணி கைப்பற்றியது.
தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காதபோதும், இடதுசாரிகள், பகுஜன் சமாஜ் போன்றவற்றின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. இடையில் பகுஜன் சமாஜ், கம்யூனிஸ்ட்கள் ஆதரவை விலக்கிக்கொண்ட போதும், சமாஜ்வாடி போன்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி பிழைத்தது.முழுமையாக ஐந்து ஆண்டுகள் முடிவடையும் நிலையில், தற்போது 15வது லோக்சபாவுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
( நன்றி: தினமலர் )
சுயேட்சை வேட்பாளர்கள்
எவ்வளவு மகளிர் உள்ளே போகிறார்கள் ?
ஓட்டுவித்தியாசம் ...
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Saturday, March 07, 2009
இந்தியாவில் இதுவரை லோக்சபா தேர்தல்
Posted by IdlyVadai at 3/07/2009 07:45:00 AM
Labels: தேர்தல்2009
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DN020090306124207&Title=Editorial+Articles&lTitle=%A3%5Cl%D7d+Lh%D3%FBWLs&Topic=0&ndate=3/7/2009&dName=No+Title&Dist=
இன்று உலக மகளிர் தினம். வெ.இன்சுவை அவர்களின் இந்த கட்டுரையை படியுங்கள்.
அன்புடன், கி.பாலு.
ஹலோ மடல்காரரே நாளைக்குதான் உலக மகளிர் தினம். ரொம்ப இட்லி வடையை படிக்கறீங்க போல ச்சும்மா cut and paste பண்ணக் கூடாது.
- கொடும்பாவி
அடேங்கப்பா எவ்வளவு தகவல்கள்!!
கிழக்குப் பதிப்பகத்தில் ஒரு புத்தகமே
போடலாம்.
தொடர்புகொள்ளவும் :
Badri Seshadri - பத்ரி சேஷாத்ரி
கிழக்குப் பதிப்பகம்.
(ஒரு வேளை பத்ரி சேஷாத்ரி தான் "இட்லிவடை"யோ?)
சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லையே!
Post a Comment