பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 12, 2009

தேசியவாதி விஜயகாந்த் ?

மக்களவைத் தேர்தலில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தி.மு.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இன்று மாலை தொடங்குகின்றன. இன்று 01.30 - 03.00 ராகு காலம் அதற்கு பின் பேச்சு வார்த்தை ஆரம்பிப்பார்கள் என்று நினைக்கிறேன்.

காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் விஜயகாந்தின் தே.மு.தி.க.வை இணைப்பதில் காங்கிரஸ் தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர் என்று கடந்த ஒரு வார செய்தியை பார்த்தால் தெரிகிறது.

இது எவ்வளவு உண்மை என்று தெரியாது ஆனால் தே.மு.தி.க.வை கூட்டணிக்கு இழுத்து வருபவர்களுக்கு காங்கிரஸ் தலைமை சிறப்பான பொறுப்பை தருவதாக அறிவித்துள்ளது என்ற செய்தி வருகிறது.

சம்பவம் 1

காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, நேரடியாகவே இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ் வீட்டிற்கு சென்று பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து பேசினார்.
( தங்கபாலுவின் மனைவியும், விஜயகாந்தின் மனைவியும் தூரத்து உறவினர்கள் )

சம்பவம் - 2

மத்திய மந்திரி ஜி.கே.வாசன் “விஜயகாந்திடம் இருந்து நல்ல அறிவிப்பு வரும்” என்று கூறிகிறார்.



சம்பவம் - 3
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ”விஜயகாந்த் தேசிய எண்ணம் கொண்டவர்” என திடீர் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார். இன்று “தேமுதிக காங்கிரஸ் கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம்” என்று ஓப்பனாக சொல்லியுள்ளார்.

விஜயகாந்த் எவ்வளவு தொகுதியும், பணமும் எதிர்ப்பார்க்கிறார் என்று தெரியாது. ஆனால் அவர் கோரிக்கை
ஏற்க்கப்ட்டால் நிச்சயம் கூட்டணிக்கு வருவார் என்று தெரிகிறது. கொஞ்ச நாளாக மக்களுடன் கூட்டணி என்று ஜல்லி அடிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கூட்டணிக்கு வந்தால் இந்த வார நக்கீரன் அட்டை படம் போல் தொகுதி உடன்பாடு ஏற்படலாம்.

தொப்புளில் ஆம்லெட் போடப் பட்டவரும், பம்பரம் விட்டவரும் இப்ப காங்கிரஸ் கூட்டணில். எல்லாம் வயிற்றுப்பிழைப்பு

19 Comments:

Anonymous said...

1.Its seems congress getting fear about election.
2.If DMDK joins with them, they may get 30 or more MP seats, but DMDK loose its believe from TN people.

ANYTHING MAY HAPPEN IN POLITICS..

வெ.காளிமுத்து said...

Yaa....
nice prediction by - IdlyVadai
I think another Five years They will make politics in Tamilnadu!!!

Rajaraman said...

விஜயகாந்த் மட்டும் தி.மு.க. அங்கம் வகிக்கும் கூட்டணிக்கு வந்தால் அதை விட கேவலமான பிழைப்பு வேறொன்றுமில்லை. அதோடு அவரை சிவாஜி, பாக்கியராஜ், ராஜேந்தர் வரிசையில் தாராளமாக சேர்த்து விடலாம்.

K SRINIVASAN said...

Its not too late for AIADMK.
Rather than having alliance with CPI and CPI(M) who have very negligible vote share,its better to go with BJP and make her presence felt.BJP's vote share is better than communists.

Looking the way the UPA alliance is taking shape,it might be a cake walk for them inspite of anti incumbency factor.The vote share of each party is good enough to win seats for the alliance.

In addition to this AIADMK will again commit the mistake of fielding candidates whom the people of TN would have never seen anywhere against TR Balu, Dayanidhi maran, P Chidambaram, G K Vasan, EVKS etc. All famous in their own league.

It's time to wake up for AIADMK

Anonymous said...

விஜயகாந்தால் தனியே நின்றால் ஒரு இடத்திலும் வெல்ல முடியாது.கூட்டணி அமைத்தால் ஏதாவது தேறும். யாருடன்
கூட்டணி என்பதுதான் கேள்வி. இது எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் நேற்று வரை கருணாநிதியை,ஜெயலலிதாவைப்
பற்றி அப்படியெல்லாம் பேசிவிட்டு,
வீர வசனம் முழங்கிவிட்டு இன்று கூட்டணியில் சங்கமித்தால் அது உடனடி லாபம், நீண்டகாலத்தில் நட்டம் என்றாகும்.இப்படியே போனால்
விஜயகாந்த்=இன்னொரு வைகோ
என்று மக்கள் நினைப்பார்கள்.

Anonymous said...

விஜயகாந்துக்கு ஒரு யோசனை இப்போது அடிக்கும் சரக்குக்கு பதில் பிராண்டை மாற்றி அடித்துவிட்டு யோசித்தால் புதிதாக ஏதாவது உருப்படியாக ஐடியா வரும்.

முயற்சி செய்து பார்க்கலாமே.

R.Gopi said...

மக்களவைத் தேர்தலில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தி.மு.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இன்று மாலை தொடங்குகின்றன. இன்று 01.30 - 03.00 ராகு காலம் அதற்கு பின் பேச்சு வார்த்தை ஆரம்பிப்பார்கள் என்று நினைக்கிறேன்.
-------------------------------
IV

Report startinglaye SARAVEDI.

Adhaan, andha Raagu Kaala matter thaan.

Anonymous said...

பிரேமலதாவிடம் உங்கள் தம்பி சுதீஷுக்கு மத்திய காபினெட் மந்திரி பதவி நிச்சயம் என்று காங்கிரஸ் ஆசை காட்டி அவர் மூலம் விஜயகாந்தை இழுக்க தி.மு.க. தூண்டுதல்களுடன் தீவிர வேலை நடப்பதாக லேட்டஸ்ட் தகவல்.

M Arunachalam said...

First of all, Vijaya Kanth's "popularity" itself is a mirage. He himself has been deluded into believing his support by his unexpected & one-off success (literally) in the TN Assembly elections. The vote-share he got is also more to do with his "novelty" factor or "new-kid-on-the-block" syndrome rather than any "popularity".

Of course, Vijaya Kanth himself, thru his actions and speeches, quickly erased any such clean or different image, which any common man might have had about him or his party. His Tasmac Conference in Chennai confirmed to one & all that Vijaya Kanth is out & out a Kazhaga Kunju & nothing clean or different can be expected of him.

As VK's "kick" slowly but surely is wearing thin from his lone MLA seat win, now he has started to understand reality & his real status. So, he will definitely decide to join some alliance rather than contest alone & be a laughing stock - similar to what these caste parties like PMK are doing.

While aligning he will rather go with DMK-Cong because he has the cushion of Cong which can help him against MK, if at all, he gets any rebuke from MK for his earlier utterences against him.

But, VK is unlikely to go with AIADMK alliance because, even though commies are there to cushion-up against Jaya's outbursts, nobody will be able to bear the "heat" of Jaya's anger & rubuke as also her cadre's ire.

Anyway, once you are in politics, you have to forget the meaning of the word "self-respect" & forget about whatever one has spoken against anybody in the past.

Koundamani's famous dialogue should come to VK's rescue here - ARASIYALIL IDHELLAAM SADARANAMAPPA.

Anonymous said...

http://mohankandasami.blogspot.com/2009/03/blog-post_10.html

Anonymous said...

this was posted by "hearta" in orkut 'THUGLAK' community

எங்கள் " இசை ஞானி" இளையராஜா அவர்களிடம் முதலில் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

தேர்தல் 2009 - சிறப்பு பாடல் !

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்

மக்களே என் மக்களே!

யாம் ஒரு பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்

மக்களே எம் மக்களே!

தேர்தல் என்னும்

பணத்தோடு பெரும் புகழ் பதவியும் அடங்கிய

ஓட்டு எனும்

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்

மக்களே எம் மக்களே!

அன்னையும் அம்மாவும் தந்ததா

இல்லை ஜாதியின் வல்லமை சூழ்ந்ததா

கூட்டணி நான் அறியாததா

புது டெல்லியில் எம்நிலை எம்.பி.யாய் உயர்ந்திட

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்

மக்களே எம் மக்களே!

அத்தனை ஓட்டுகள் உம் இடத்தில்

யாம் பிச்சைக்குச் செல்வது எவ்விடத்தில்

வெறும் சின்னம்தான் உள்ளது எம் இடத்தில்

அதை அழுத்திடும் விரலோ உம்மிடத்தில்

ஒரு முறையா இரு முறையா

பலமுறை தேர்தலில் ஜெயிக்க வைத்தாய்

பல பதவி பல லகரம்

ருசி கண்ட நாக்கினை அரிக்க வைத்தாய்

பொருளுக்கு அலைந்திடும்

அரசியல் வாழ்க்கையும் துரத்துதே

உன் அருள் அருள் அருள்

என்று அரிக்கின்ற மனம் கரம் கூப்புதே!

வாக்குறுதி தருகிறேன்

வாழ்வளிக்க வருகிறேன்

உன் ஒருவிரல் பெரும் வரமளித்து ஜெயம் பெற

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்

மக்களே என் மக்களே!

யாம் ஒரு பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்

மக்களே எம் மக்களே!

தேர்தல் என்னும்

பணத்தோடு பெரும் புகழ் பதவியும் அடங்கிய

ஓட்டு எனும்

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்

மக்களே எம் மக்களே!

- கவிஞர் ஓட்டாண்டி

Anonymous said...

vijaya kanth should join bjp front . This front should not contest all the 40 seats. But should contest from seats where aiadmk is not contesting. ( seats contested by MDMK, PMK CPI CPM and others ) This will be best for vijay kanth who can get some seats in the process and also retain his CM aspirations. If he joins openly either DMK or AIADMK front that will be the end of vijayakanth politically. Next hope will be only super star

கலைக்கோவன் said...

பா.ம.க,ம.தி.மு.க வரிசையில்
தே.மு.தி.க-வும் வந்துவிடும் போலிருக்கே...,
வாழ்க பிரேமலதா..
(அவங்க தானே கட்சி தலைவி)

கிரி said...

என்னமோ போங்க!

ஹரன்பிரசன்னா said...

கேப்டன் கேப்டன் என்று சொன்னவர்கள் தங்கள் கருத்தைச் சொல்லாமல்விட்டது ஏன் என்று மக்கள் உங்களைக் கேட்டாலும் கேட்கலாம்! :-)

4 இடங்கள்? இதுக்கு இவ்ளோ ரவுசா? காங்கிரஸுக்கு இணையான சீட்டுகளாவது வேண்டாமா? இதெல்லாம் ஒரு பொழைப்பா? சேர்ந்தது கேவலம். சரி விடுங்க, இந்த கேவலத்தை எல்லாருமே பண்றாங்க. சீட்டாவது மானம் பொழைக்கிற மாதிரி வாங்க வேண்டாமா? கேப்டனை தலையில் தூக்கி வைத்த உங்கள் கருத்தென்ன?

Krish said...

திமுக , அதிமுக விற்கு அடுத்தபடியாக ஓட்டு வங்கியை வைத்திருப்பவர் விஜயகாந்த். காங்கரஸ், பாமக வை விட கம்மியான தொகுதிகளை வங்கிக் கொண்டு கூட்டணியில் சேருவது அசிங்கம். மறுபடி மாநிலத்திற்கு தேர்தல் வந்தால் அவரின் நிலை மோசம்!
பேசாம பிஜெபி மற்றும் உதிரிக் கட்சிகளோடு சேர்த்து புதியக் கூட்டணியை அமைக்கலாம்! ஒன்னு ரெண்டாவது தேறும்!

Viji Sundararajan said...

இட்லிவடை,

நீங்க விஜயகாந்த் க்கு சப்போர்ட் பண்ணி blog எழுதினப்போ மட்டும் அவர் என்ன தொப்புள் ள்ள research ஆ பண்ணிட்டு இருந்தார் ;) ?

கொடும்பாவி-Kodumpavi said...

கவிஞர் ஓட்டாண்டியின் கவிதை(பாடல்) சரியா பொருந்துகிறது நம்ப அரசியல் (வியாதி)களுக்கு.
தன்மானத் தமிழன் விசயகாந்தை பற்றி எழுதி உங்க விசயகாந்த் துதியை துடைக்க பாக்குறீங்க..
விசயம் இல்லாமலும், விசயம் தெரியாமலும் அண்ணன் ‘விசய'காந்த எந்த காரியத்திலும் எறங்க மாட்டாரு..
ஆள்வச்சு அதிமுக 6000 கள்ள ஓட்டு போட்டாங்க..
உடன் பிறப்பை வச்சு 9000 கள்ள ஓட்டு போட்டாங்க..
மருத்துவர்ன்னு சொல்லிகிட்டு மத்தவங்க் ஓட்டெல்லாம் கள்ள வோட்டா போட்டாங்க..
அத்தன கட்சிகளும் ஆளாளாக்கு கள்ள ஓட்டு போட்டாங்க..
ஆனா நாமட்டுமே.. எங்க குடும்பத்தினர் மட்டுமே தான் இந்த ஒத்த விரல்ல 7000 ஓட்டு போட்டம்ல..
மொதல்ல அவிங்கள நிறுத்த சொல்லு.. பிறகு நான் நிறுத்தறேன்..

R.Gopi said...

ஒண்டியா நின்னா நானு போண்டி.

இவிங்கள ஒண்டி நின்னா, கல்லா ரொம்புண்டி.

(கேப்டனின் புது கணக்கு).