பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 16, 2009

பிரபல நடிகர் திமுகவில் இணைகிறார்

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அமைப்பது பற்றி, தி.மு.க.வும், பா.ம.க.வும் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்த பேச்சுவார்த்தையில், தங்களுக்கு இந்த முறை 8 பாராளுமன்ற தொகுதிகளை ஒதுக்குவதுடன், டெல்லி மேல் சபை (ராஜ்ய சபை) உறுப்பினர் பதவி ஒன்றும் பின்னர் வழங்கப்பட வேண்டும் என்று பா.ம.க. தரப்பில் கோரிக்கை விடுத்து இருப்பதாக தெரிகிறது.

கூடிய விரைவில் பிரபல நடிகர் திமுகவில் இணைய போகிறார் விவரம் கீழே...


நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராதாரவி இன்று மாலை 5 மணியளவில் முதல்-அமைச்சர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 1/2 மணி நேரம் நீடித்தது. சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த நடிகர் ராதாரவி அ.தி.மு.க.வில் தனக்கு உரிய மரியாதை தரப்படவில்லை என்றும், தி.மு.க.வில் விரைவில் இணைய இரு�பதாகவும், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அளித்தார்.

முன்னாள் பிரபல நடிகர் என்று படிக்கவும் ;-)

7 Comments:

யாத்ரீகன் said...

இந்த முன்னாள்கள் தொல்லை தாங்கமுடியல கிருஷ்ணா.. கொசுமருந்தடிச்சு கொல்லுங்க.. (எத்தன நாள்தான் நாரயணனை மருந்தடிக்க சொல்றது.. ;-)

கொடும்பாவி-Kodumpavi said...

மரியாதையா.. அல்லது பங்கா..? இந்த ஒரே காரணத்த சொல்லிகிட்டு எத்தன பேரு எத்தன முறை தாவி இருக்காங்க.. ? எப்படிதான் இந்த கட்சிகளும் ‘மானம்.. ரோஷம்.. சூடு.. சொரனை' என்ற எதுவுமே கடகளவும் இல்லாம இவுங்கள மானவாரிய சேர்த்துக்கறாங்களோ..

தேவுடா தேவுடா ஏழுமல தேவுடா.. சூடுடா சூடுடா எங்க பக்கம் ச்சூடுடா.. அவனவன் கொதிச்சு போயிருக்கான் .. ரொம்ப சூடாதானிருக்கு...

Anonymous said...

Prabala Manam ketta Nadigar nnu sollungs Mr. Idly Vadai.

Anonymous said...

Ada paavi , atleast there you got MLA seat , now kalainar will give place only in heart.anyway allakai valkai engu valthaal enna.. valga jananayagam ..... valaga makkal...

R.Gopi said...

தம்பி ராதாரவி இப்போது நம் பக்கம். அவருக்கு எப்போதும் என் இதயத்தில் இடம் உண்டு.

அவருக்கு இந்த தேர்தலில் நிற்க இடம் தர முடியாததை நினைத்தால் :

என் கண்கள் பனிக்கிறது
காது பஞ்சடைக்கிறது
மூக்கு வாசமறியும் திறன் இழக்கிறது
நெஞ்சு கனக்கிறது ........

ஐயகோ .. தமிழகமே, இங்கு நாற்பதுடன் சேர்த்து இன்னும் ஒரு தொகுதி இருந்திருந்தால் கூட அதை இந்த தம்பிக்கு கொடுத்திருப்பேனே??

Anonymous said...

Super comment by R.Gopi!!!

பெசொவி said...

//தம்பி ராதாரவி இப்போது நம் பக்கம். அவருக்கு எப்போதும் என் இதயத்தில் இடம் உண்டு.

அவருக்கு இந்த தேர்தலில் நிற்க இடம் தர முடியாததை நினைத்தால் :

என் கண்கள் பனிக்கிறது
காது பஞ்சடைக்கிறது
மூக்கு வாசமறியும் திறன் இழக்கிறது
நெஞ்சு கனக்கிறது ........

ஐயகோ .. தமிழகமே, இங்கு நாற்பதுடன் சேர்த்து இன்னும் ஒரு தொகுதி இருந்திருந்தால் கூட அதை இந்த தம்பிக்கு கொடுத்திருப்பேனே??//

Super comment, Mr. Gopi!