பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 23, 2009

அரசியல் சினிமா

சில சினிமா செய்திகள்
எச்சரிக்கை: அரசியல் கலந்திருக்கலாம்


1. சரத்குமார் இன்று மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதாக அறிவித்துள்ளார். நெல்லை தொகுதியில் தான் போட்டியிடப்போவதாகவும், சிவகங்கை தொகுதியில் ராதிகாசரத்குமார் போட்டியிடப்போவதாகவு தெரிவித்துள்ளார்.

2. நான் போட்டியிடுவதை யாரும் தடுக்க முடியாது. நான் போட்டியிட தேர்ந்தெடுத்துள்ள 2,3 தொகுதிகளில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியும் ஒன்றாகும். நான் இன்னும் கூட்டணி பற்றி முடிவு செய்யவில்லை. ஆனால் முடிவு செய்தால் மக்களுக்கு நலன் பயக்கும் கட்சியுடன்தான் கூட்டணியை ஏற்படுத்துவேன். எந்த கட்சியும் இந்த கார்த்திக்கை விலை கொடுத்து வாங்க முடியாது. நமக்கு சுய மரியாதை முக்கியம். தன் மானம் முக்கியம். இங்கு வாய்ச்சொல் பேசும் வீரர்கள் டெல்லிக்கு சென்று கூட்டணி பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். நான் மக்களுக்கு நலன் பயக்கும் கூட்டணியைத்தான் ஏற்படுத்துவேன்.

இங்கு இலங்கை தமிழர் பிரச்சினைக்காக உண்ணா விரதம் இருக்கிறார்கள். ஆனால் நான் அப்படிப் பட்டவன் அல்ல. இலங்கை தமிழருக்கு பிரச்சினை என்றால் எல்லையில் ராணுவத்தினருடனும், போலீசாருடனும் துப்பாக்கி ஏந்தி நிற்க கூடியவன் நான். நான் தமிழக மக்களுக் காக தமிழக மக்களின் வாழ்வுக்காக பாடுபடுவேன். - நடிகர் கார்த்திக்

3. ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி தலைமையில் ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது. அவர் தீட்டும் திட்டங்கள் அனைத்தும் மக்களை உடனடியாக சென்றடைகின்றன.
ஆந்திர மக்களுக்காக அவர் கொண்டு வந்த ஆரோக்கியஸ்ரீ திட்டம் மகத்தானது. இதன்மூலம் ஏழை-நடுத்தர மக்கள் அனைவரும் பயன்பெறுகிறார்கள். அவர்களுக்கு ஒரு லட்சத்திற்கு மேல் சிகிச்சைக்கு பணம் செலவானாலும் அதை மாநில அரசு கொடுத்து வருகிறது.

இதனால் மக்கள் அனைவரும் காங்கிரசுக்கு ஆதரவாக உள்ளனர். இந்த தேர்தலில் நான் காங்கிரசுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்வேன். விரைவில் இதற்கான தேதியை அறிவிப்பேன். - நடிகை ஜீவிதா


5 Comments:

Anonymous said...

http://thatstamil.oneindia.in/news/2009/03/23/tn-ready-to-contest-ls-polls-murali.html

ஸ்ரீவில்லிப்புத்தூர்: வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமை உத்தரவிட்டால் போட்டியிட தயார் என்று திரைப்பட நடிகர் முரளி அறிவித்துள்ளார்.

நடிகர் முரளி ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ஒரு விழாவில் கலந்து கொள்ள வருகை தந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

தற்போது நான் நடித்துள்ள நீ உன்னையறிந்தால், எங்க ராசி நல்ல ராசி, உள்பட மூன்று படங்களில் நடித்து வருகின்றேன்.

எனது மகன் அதர்வா நடித்துள்ள பானா என்ற திரைப்படம் ஜூலை 15 -ம் தேதி வெளி வருகின்றது.

வரும் பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளேன். அதிமுக கூட்டணிக்கு வெற்றி பிரகாசமாக உள்ளது.

பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமை உத்தரவிட்டால் நான் எந்த தொகுதியில் வேண்டும் என்றாலும் போட்டி தயார் என்றார்.

Anonymous said...

வாடா என் மச்சி வாழகாய் பஜ்ஜி ...என்னை பத்தி ஏன் NEWS போடல ..
கரடி TR

கொடும்பாவி-Kodumpavi said...

இங்க இருக்கறவுங்களே தேவுடா காக்கறாங்க அம்மா எப்ப வாய் திறந்து நம்ப பெயர கூப்பிடுவாங்கன்னு.. முரளி விளம்பரம் மாதிரி.. தேர்தலுக்கு தேர்தல்தான் செய்தில வர்ராரு..

கார்த்திக் இவ்ளோ அழகானத் தமிழ்ல பேசினாரா? என்ன கொடுமடா சாமி?

மசாலா சும்மா தூக்கலாவே இருக்கு..

R.Gopi said...

முரளி என்ன "கஞ்சா கருப்பு"க்கு போட்டியா??

லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா காமெடி பண்றாரே??

Anonymous said...

இந்த சினிமா காரனுங்க தொல்லை தாங்கமுடியலைப்பா