நரேஷ்குப்தா பற்றி கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கை இந்த வருடத்தின் கேவலமான அறிக்கை.
ஒரு முதலமைச்சர் தேர்தல் ஆணையத்தின் மீது என்ன மதிப்பு வைத்திருக்கிறார் என்று இந்த அறிக்கை சொல்லுகிறது. இவரே இப்படி என்றால் கழக குஞ்சுகள்என்னவெல்லாம் பேசப்போகிறதோ ?
தமிழ்நாட்டு தேர்தலுக்கு துணை ராணுவதிற்கு பதிலாக ராணூவமே வரவேண்டும்
நரேஷ் குப்தா பற்றி கலைஞர்"தேர்தல் ஆணையம் என்பது தன்னாட்சி பெற்ற அமைப்பு. ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து கேள்வி கேட்க யாருக்கும் உரிமை கிடையாது.
தேர்தல் நேரத்தில் அவர்கள் எந்த அலுவலரை வேண்டுமானாலும் மாற்றலாம். அதைப் பற்றி மாநில அரசோ, மத்திய அரசோ கேள்வி கேட்க முடியாது. ஏனென்றால் தேர்தல் ஆணையம் என்பது சர்வ வல்லமை பொருந்தியது.
நாடாளுமன்றத்துக்கோ, சட்டப் பேரவைக்கோ காலியிடம் ஏற்பட்டு, அதற்கு இடைத் தேர்தல் அந்த இடம் காலியான ஆறு மாதங்களுக்குள் நடத்தப்பட வேண்டும்.அப்படி இடைத் தேர்தல் தேதியை நிர்ணயிக்கும்போது, பொதுத்தேர்தல் நாடாளுமன்றத்துக்கோ, சட்டப் பேரவைக்கோ ஒரு சில மாதங்களில் நடைபெறுகிறது என்றால், அதனுடன் இடைத் தேர்தலையும் சேர்த்து நடத்துவது தான் வழக்கம். ஆனால், திருமங்கலம் தொகுதியில் அவசர அவசரமாக இடைத் தேர்தலை நடத்தினார்கள்.
நரேஷுக்கு தமிழக அரசு சம்பளம்: மத்திய தேர்தல் ஆணையம் இப்படி என்றால், மாநிலத்தில் ஒரு தலைமைத் தேர்தல் அதிகாரி இருக்கிறார். அவரது அதிகாரம் குறித்து யாரும் கேட்கக் கூடாது.
தமிழகத்திலே உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் அவரும் ஒருவர். அவர் இந்தப் பதவியில் இத்தனை ஆண்டுகளுக்கென நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்தக் காலக் கெடு முடிந்ததும் அரசுப் பணியிலே இணைந்து பணியாற்ற வேண்டியவர்தான். அந்த அதிகாரிக்கு மாதந்தோறும் அளிக்கப்படும் ஊதியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
மரியாதை நிமித்தமாக... தமிழகத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 2006-ம் ஆண்டு மே மாதத்தில் இருந்து இன்று வரை முதல்வரை ஒரு முறையேனும் "மரியாதைச் சந்திப்பு' என்ற பெயரிலே கூட சந்திக்கவில்லை.
ஏனென்றால், அவர் தேர்தல் அதிகாரி. அவர் மரியாதைக்காக முதல்வர் என்ற முறையில் என்னைச் சந்தித்தால் கூட, நேர்மை கெட்டு விடுமாம். ஆனால், மத்திய தேர்தல் ஆணையத் தலைவரோ, உறுப்பினர்களோ அவர்களை நியமிக்கும்போது பிரதமரையும், குடியரசுத் தலைவரையும் மரியாதை நிமித்தம் சந்திப்பதில்லையா என்று கேட்டால் அவர்கள் சந்திக்கத்தான் செய்கிறார்கள்.
அது மாத்திரமல்ல. தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரிகளாக இருந்த ஓசா, சந்திரசூடன், சாரங்கி, மாத்யூ ஆகியோர் அவ்வப்போது ஆட்சிப் பொறுப்பிலே இருந்த முதல்வர்களை மரியாதைக்காக மட்டுமல்ல பலமுறை சந்தித்து இருக்கிறார்கள்.
நடுநிலையோடு (?) செயல்படுகிறது: திருமங்கலம் தொகுதியில் பணியாற்றிக் கொண்டு வரும் மூன்று காவல் துறை அதிகாரிகளை உடனடியாக மாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியது.
மேலும், அந்த மூன்று இடங்களில் யார் யாரை நியமிக்கலாம் என்பது குறித்து ஒரு பட்டியலை தமிழக அரசு அனுப்ப வேண்டும் என்றும், அந்தப் பட்டியலில் தாங்கள் குறிப்பிட்ட அதிகாரிகளின் பெயர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இப்படி குறிப்பிட்டு இருக்கிறது என்றால், தேர்தல் ஆணையம் எந்த அளவுக்கு நடுநிலையோடு (?) செயல்படுகிறது என்பதற்கு இதைவிட வேறு ஒரு எடுத்துக்காட்டினையா கூற முடியும்?
தமிழகத்தில் உள்ள காவல் துறை அதிகாரிகளைப் பற்றியும், அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் எப்படி தெரிந்து கொண்டு மூன்று அதிகாரிகளை அவர்களே குறிப்பிட்டு பட்டியலில் சேர்க்க வேண்டுமென்று கடிதம் எழுகிறார்கள்?
மத்திய தேர்தல் ஆணையத்துக்கு அங்கே நியமனம் செய்யப்பட வேண்டிய மூன்று அதிகாரிகளின் பெயர்களை இங்கிருந்து எழுதிக் கொடுத்தது யார்? அவர்களுக்கே வெளிச்சம்.
ஏன் இப்படிப்பட்ட அக்கறை? நாடாளுமன்ற பொதுத் தேர்தல் தேதி, மார்ச் 2-ம் தேதி பிற்பகல் 3.30 மணியளவில் அறிவிக்கப்படுகிறது. அதற்குப் பிறகே, தேர்தல் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றன.
ஆனால், மார்ச் 2-ம் தேதிக்கு முன்பு பிப்ரவரி 28-ம் தேதியோ, மார்ச் முதல் தேதியோ ஏன் 2-ம் தேதி காலையிலோ தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட சில திட்டங்கள் ஏடுகளில் வெளியே வரலாமா கூடாதா?
உதாரணத்துக்கு, வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம் என்ற ஓர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, அதற்கான அதிகாரி நியமனம் செய்யப்பட்டதற்கான அறிவிப்பு மார்ச் 2-ம் தேதி வெளியிடப்பட்டது.
ஆனால், "இந்தச் செய்தியை பத்திரிகைகளில் வெளியிடக் கூடாது' என்று பத்திரிகையாளர்களுக்கு தொலைபேசியில் பேசி தடுத்து இருக்கிறார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி. அவருக்கு இதிலே ஏன் இப்படிப்பட்ட அக்கறை?'
நரேஷ்குப்தா விளக்கம்நான் யாரையும் சென்று சந்தித்து எனக்கு பழக்க மில்லை. இதற்கு முன்பு முதல்-அமைச்சராக இருந்த வரைக்கூட நான் சந்திக்க வில்லை. தேர்தல் ஆணையம் தன்னிச்சையான அமைப்பு என்பதால் எந்தத்தலைவர்களையும் சந்திப்பதில்லை என்ற கொள்கை நடைமுறையில் உள்ளது.
அதனால்தான் நான் எந்த தலைவரையும் சந்திப்பதில்லை. இதற்கு முன் ஆட்சியில் இருந்த முதல்- அமைச்சரையும் நான் சந்திக்கவில்லை. இப்போதுள்ள முதல்- அமைச்சரையும் நான் சந்திக்கவில்லை. முதல்- அமைச்சரை சந்திக்காததற்கு இதைத்தவிர வேறு காரணம் எதுவும் இல்லை.
வன்னியர் பொது சொத்து நலவாரியம் குறித்த செய்திகளை வெளியிடக்கூடாது என்று யாரையும் நான் தடுக்கவில்லை. அரசு தரும் செய்திகளை வெளியிடக்கூடாது என்று நான் எப்படி சொல்ல முடியும். அப்படியே நான் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்வார்களா? முதல்-அமைச்சர் குறிப்பிடும் அந்த செய்தி பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
முதல்-அமைச்சர் கருணாநிதியின் இந்த குற்றச்சாட்டுக்கள் புதியவை அல்ல. மதுரை மேற்குத்தொகுதி இடைத்தேர்தலின் போதே என் மீது இத்தகைய குற்றச்சாட்டுகளை கூறி இருக்கிறார்.
முதல்வரை சந்திக்க நரேஷ்குப்தா என்ன சினிமா நடிகரா ? அல்லது அவருடன் கூட்டணி பேசும் கட்சி தலைவரா ? அவர் என்ன டாக்டரா முதுகுவலி எப்படி இருக்கிறது என்று விசாரிக்க ? நரேஷ்குப்தா போன்றவர்கள் தமிழ்நாட்டில் இருப்பது நாம் போன ஜென்மத்தில் செய்த புண்ணியம்
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, March 06, 2009
கலைஞர் வாங்கிய ’நோஸ் கட்’
Posted by IdlyVadai at 3/06/2009 09:00:00 PM
Labels: செய்திவிமர்சனம், தேர்தல்2009
Subscribe to:
Post Comments (Atom)
27 Comments:
//தமிழ்நாட்டில் இருப்பது ஜென்மத்தில் நாம் போன செய்த புண்ணியம்
//
இப்படி இருக்கணும்..
தமிழ்நாட்டில் இருப்பது போன ஜென்மத்தில் நாம் செய்த புண்ணியம்
ரொம்ப கோவப்படாதீங்க வார்த்தை தடுமாறுது..?!
அன்புடன், கி.பாலு
மடல்காரன் நானும் இப்ப தான் பார்த்தேன். மாற்றிவிட்டேன் ;-)
//நரேஷ்குப்தா போன்றவர்கள் தமிழ்நாட்டில் இருப்பது நாம் போன ஜென்மத்தில் செய்த புண்ணியம்//
நீங்க சொல்வது சரிதான்..தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்தும் சென்ற தேர்தலில் இந்த நரேஷ் குப்தா தனது ஜனநாயக கடமையாகிய வாக்கினை அளிக்கவில்லை.
தேர்தல் நடத்தும் பொறுப்பிலிருந்து குறைந்தபட்சம் தனது வாக்கினைகுட அளிக்கவில்லை இந்த பெரிய மனிதர் (?)
//நீங்க சொல்வது சரிதான்..தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்தும் சென்ற தேர்தலில் இந்த நரேஷ் குப்தா தனது ஜனநாயக கடமையாகிய வாக்கினை அளிக்கவில்லை.
தேர்தல் நடத்தும் பொறுப்பிலிருந்து குறைந்தபட்சம் தனது வாக்கினைகுட அளிக்கவில்லை இந்த பெரிய மனிதர் (?)//
ஏன் போடவில்லை என்றும் சொன்னார். அதை நீங்க கவனிக்கவில்லை போலும்.
கடுகை கண் முன் வைத்து பார்த்தால் உலகமே இருட்டாக தான் தெரியும்.
இவர் ஓட்டு போடாமல் தன் கடமையை செய்தார், இல்லை என்றால் எவ்வளவு கள்ள ஓட்டுகள் விழுதிருக்குமோ ? நரேஷ்குப்தா பற்றி தெரிந்த உங்களுக்கு திராவிட பன்னாடைகள் பற்றியும் தெரிந்திருக்கும் என்றி நினைக்கிறேன்.
//திராவிட பன்னாடைகள்// தவிர்த்திருக்கலாம்.
உங்க கோவம் புரியுது.
நீங்க தப்பா எடுத்தாலும் பரவாயில்லை.
சொல்றது எங்க கடமை.
அன்புடன், கி.பாலு
// திராவிட பன்னாடைகள் பற்றியும் தெரிந்திருக்கும் .....
\\
அப்ப நீங்க காங்கரஸா? கம்யூனிஸ்டா?
இட்லிவடை தமிழ்நாட்டில் திரும்பவும் கொசு தொல்லை அதிகமாமே? அப்படியா ?
என்ன இட்லி வடை அவர்களே ... ரொம்ப கோவமா இருக்கீங்க போல .. பார்த்துங்க உங்களுக்கு பூணுல் போடுடா போறாங்க நம்ம பெருந்தகைகள் ..
kadai nerathula enna enna kodukka ilavasama kodukka porangalo?
andhara vu la naidu-vum seranjevium potti podu free announcement pannuratha partha pesama velaiya vittutu andharavla poi settle aadilam pola...
free Tv masam 2000 rubai hmm
கடைசி நேரத்தில என்ன என்ன இலவசமா கிடைக்க போகுதோ?
ரொம்ப ஆவலா த்ரில்லிங்கா இருக்கு .....
ஆந்த்ராவுல சந்திரபாபுவும் தமிழ்நாடு மாதிரி இலவச கலர் டிவி அப்படின்னு ஆரம்பிச்சுடாங்கையா ஆரம்பிச்சுடாங்க !!!!!!!!!!!!
இப்போ எல்லாம் பேசாம இருக்கிற வேலைய விட்டுவிட்டு ஆந்த்ரவுல செட்டில் ஆகலாம்னு தோனுது இத பார்த்த பிறகு ,
http://www.dailythanthi.com/article.asp?NewsID=473076&disdate=3/6/2009
/இவர் ஓட்டு போடாமல் தன் கடமையை செய்தார்/
அப்ப ”ஓட்டு போடுவது ஜனநாயக கடமை இல்லையா”
ஓட்டு போடாமல் இருந்தற்கு அவர் சொன்ன காரணங்கள் யாரும் ஏற்றுகொள்ளமாட்டார்கள்.
உதாரணமா வருமானவரி துறையில ஒரு அதிகாரி இருக்கார் அவர் எல்லோர்கிட்டேயும் ஒழுங்கா வருமானவரி வாங்குவார் ஆனா அவர் ஒழுங்கா கட்ட மாட்டார்.கேட்டா எல்லோர்கிட்டேயும் ஒழுங்கா வாங்குறனா இல்லையா அதுதான் முக்கியம் என்று சொன்னால் இட்லி வடை ஏற்றுகொள்வாரா...
I don't know why nobody (election commission, political leaders or media) is supporting Naresh Gupta.
We have to back him up agaist the 'useless, selfish' dravidian leaders.
We all know what happened in Thirumangalam. I think Naresh was little bit soft on that election.
WE NEED ANOTHER "T.N.SHESHAN"
" தேர்தல் ஜூரம் " உங்களையும் தொற்றிக்கொண்டுவிட்டது.
க்ளோஸ் ஆக அனைத்து செய்திகளையும் பாலோ செய்வதால் உணர்ச்சிவசப்படுவது இயற்கை.
புல் செல்ப்-கண்ட்ரோலோடு "பட்டையக் கிளப்புங்க" ஜி !
நரேஸ் குப்தா போன்ற "கர்மயோகிகள்" இருப்பதால்தான் கொஞ்சமாவது "மழை" பெய்யுது. அவர் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.
இந்த 'கூட்டணி கும்மாங்குத்தில்" அடுத்து ஆட்சி அமைக்கவிருக்கும் பி.ஜே.பியை "அம்போ"னு கழட்டி விட்டாய்ங்களே இந்த "2 கழ(ல)கங்களும்." பி.ஜே.பிக்கு தமிழ்நாட்டில் அட்லீஸ்ட்ஒரு சீட்டாவது கிடைக்குமா?
//உதாரணமா வருமானவரி துறையில ஒரு அதிகாரி இருக்கார் அவர் எல்லோர்கிட்டேயும் ஒழுங்கா வருமானவரி வாங்குவார் ஆனா அவர் ஒழுங்கா கட்ட மாட்டார்.கேட்டா எல்லோர்கிட்டேயும் ஒழுங்கா வாங்குறனா இல்லையா அதுதான் முக்கியம் என்று சொன்னால் இட்லி வடை ஏற்றுகொள்வாரா...//
தேர்தலில் ஓட்டு போடுவது கடமை, வருவானவரி காட்டாமல் இருப்பது குற்றம்.
தினமும் மு.க கடிதம் எழுதுவது அவரது கடமை. போலீஸ், வக்கீல் சண்டை போது அதை கவனிக்காமல் காந்தி கண்ணதாசனுக்கு கடிதம் எழுதுவது குற்றம். புரியுதா ?
தேர்தலின்போது அரசியல்வாதிகள் பேசும் பேச்சை கணக்கில் எடுத்து கொள்ளக்கூடாது
அவர்கள் அரசு அதிகாரிகளை என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள். ஏனென்றால் அரசு அதிகாரிகளுக்கு வாய்ப்பூட்டு போட்டிருப்பதால் அவர்களும் வாயை திறக்க மாட்டார்கள்.
அரசியல்வாதிகள் அறிவிக்கும் இலவசங்களை மட்டும் நினைவில் வைத்து வாக்களிக்க வேண்டும்
ezhavadhu padichavan ellam CM aana IAS ku madhipu ipdi dhan irukum. Indha mathiri pichaikara suyanala naaigal ellam thalaivar. AVangala support panna tamizh unarvalargal! Ipdi nadandhukaradhe sila padicha Bloggers dhan. Vilangidum!
மஞ்சள் என்றாலே அதுக்கு தனி மகிமை தான். நம் வாழ்வில் மஞ்சள் ஒன்றோடு ஒன்றாகி விட்ட மங்கலப் பொருள். அரசியல் தலைவர் (?!) அனிவதும் ”மஞ்சள்”துண்டு, இட்லி யூஸ் பன்னுவதும் மஞ்சள் ஹைலைட்டர். மஞ்சள் கமெண்ட்-ல இட்லி நீ வெளுத்துக் கட்டுற !
அவ்வளுவுதான்
என்ன தைரியம் இருந்தா தலைவர் அறிக்கைக்கு பதில் கொடுப்பார் இந்த நரேஷ் குப்தா
உடன்பிறப்பே எடு ப்ரஹ்மாஸ்திரதை
தமிழ்நாட்டில் நம்மாளாக மாற மறுக்கிற எவனும்
அவா(ள்)
"தேர்தலில் ஓட்டு போடுவது கடமை, வருவானவரி காட்டாமல் இருப்பது குற்றம்.
தினமும் மு.க கடிதம் எழுதுவது அவரது கடமை. போலீஸ், வக்கீல் சண்டை போது அதை கவனிக்காமல் காந்தி கண்ணதாசனுக்கு கடிதம் எழுதுவது குற்றம். புரியுதா ?"
ஆஆஆப்ப்புடியோ ஆப்பு.
Manjal Kavi's crookedness is astnoshing, even after the whole world knows what happened in Thirumangalam.
Ignoring and cornering good people like Gopalswami or Guptha is finally marking the end of our DEMOCRACY.
தினமும் மு.க கடிதம் எழுதுவது அவரது கடமை. போலீஸ், வக்கீல் சண்டை போது அதை கவனிக்காமல் காந்தி கண்ணதாசனுக்கு கடிதம் எழுதுவது குற்றம். புரியுதா ?
------
என்னையா நீங்களும் கேப்டன் போல பேச ஆரம்பிச்சிட்டீங்க ‘அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்தறேன்'ன்ற ரேஞ்சுல...
அவரு ஓட்டு போடாதது தப்புதான். வெள்ளன போய் ஓட்டு போட்டுட்டு போயிருக்கலாமே.. இல்ல அவருதான் மாநில தேர்தல் அதிகாரி ஆச்சே வரிசைல நிக்காம நேர போய் போட்டிருக்கலாமே.. வரிசைல நிக்காம போனா யாரும் குத்தம் சொல்ல மாட்டாங்க அவரு அவசரமும் நேர்மையும் யாரும் சந்தேகிக்கல. அப்புறமா ‘நான் என் கடமையை செஞ்சேன்னு' ஒரு அறிக்கை வுட்டுருந்தா முடிஞ்சிருக்கும்.
\\தினமும் மு.க கடிதம் எழுதுவது அவரது கடமை. போலீஸ், வக்கீல் சண்டை போது அதை கவனிக்காமல் காந்தி கண்ணதாசனுக்கு கடிதம் எழுதுவது குற்றம். புரியுதா ?//
இதுதான் இட்லிவடையின் Speciality Punch. இத இதத்தான் உங்ககிட்டேயிருந்து நாங்க எதிர்பார்ப்பது.
தேர்தல் முடிந்து ரிசல்ட் வருகிற வரை அடிச்சு தூள் கிளப்புங்க.
சில திராவிட பன்னாடைகளுக்கு கொஞ்சம் இப்படி ஸ்ட்ராங்கா உறிச்சாத்தான் உரைக்கும்.
\\தினமும் மு.க கடிதம் எழுதுவது அவரது கடமை. போலீஸ், வக்கீல் சண்டை போது அதை கவனிக்காமல் காந்தி கண்ணதாசனுக்கு கடிதம் எழுதுவது குற்றம். புரியுதா ?//
இதுதான் இட்லிவடையின் Speciality Punch. இத இதத்தான் உங்ககிட்டேயிருந்து நாங்க எதிர்பார்ப்பது.
தேர்தல் முடிந்து ரிசல்ட் வருகிற வரை அடிச்சு தூள் கிளப்புங்க.
சில திராவிட பன்னாடைகளுக்கு கொஞ்சம் இப்படி ஸ்ட்ராங்கா உறிச்சாத்தான் உரைக்கும்.
Idukku yennaya artham?
"சைவப் பெருமாட்டி உப்பு கண்டத்தை பறி கொடுத்தது போல'' ம.தி.மு.க.வின் தொண்டர்களும், முன்னணியினரும் கட்சி கட்டுப்பாட்டுக்கு அஞ்சி வாயை மூடிக்கொண்டார்கள்.
Idukku yennayya artham?
"சைவப் பெருமாட்டி உப்பு கண்டத்தை பறி கொடுத்தது போல''
வன்னியர் பொது சொத்து நல வாரியம் அமைப்பு
அரசு அறிவிப்பை வெளியிடக்கூடாது என்று தடுத்தது ஏன்?
தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு கருணாநிதி கேள்வி?
தமிழக தேர்தல் அதிகாரி
அந்த இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும், அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா; அந்த தொகுதியின் மறைந்த உறுப்பினர், ம.தி.மு.க.வைச் சேர்ந்தவர் என்ற போதிலும், அந்த கட்சியின் தலைவரை நேரில் அழைத்து, அந்த தொகுதியை தனக்கு விட்டு கொடுக்க வேண்டுமென்று ஆணையிட்டு, அங்கே தோழமை உணர்வுகளுக்கே இடம் இல்லாமல் நடந்து கொண்டார். "சைவப் பெருமாட்டி உப்பு கண்டத்தை பறி கொடுத்தது போல'' ம.தி.மு.க.வின் தொண்டர்களும், முன்னணியினரும் கட்சி கட்டுப்பாட்டுக்கு அஞ்சி வாயை மூடிக்கொண்டார்கள்.
"தல" இன்னும் நரேஷ் குப்தாவை திட்டி மஞ்சள் கவிதை எதுவும் எழுதலியா??
All people deserve respect, but not all ideas do.
Post a Comment