தெலுங்கு புத்தாண்டு வாழ்த்து சொன்னவர் கீழே...
முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள தெலுங்கு புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
தெலுங்கு மொழி பேசும் மக்கள் உகாதித் திருநாள் என்னும் தெலுங்குப் புத்தாண்டுத் திருநாளை இன்று எழுச்சியுடன் கொண்டாடுகிறார்கள். யாதும் ஊரே, யாவரும் கேளிர் என பழந்தமிழ்ப் பெரும்புலவர் கணியன் பூங்குன்றனார் உரைத்த நெறியில், தமிழ் மக்கள், தமிழகத்தில் வாழும் பிற மொழி பேசும் மக்களுடன் நல்லுறவு கொண்டு கூடி வாழ்வது போலவே, தெலுங்கு மொழி பேசும் மக்கள் அனைவரை யும் அன்பு உறவினர்களாக ஏற்று பல்லாண்டு கால மாக இணக்கமுடன் அரவ ணைத்து வாழ்கின்றனர்.
தமிழ்நாடு அரசு, அவர் களது வாழ்க்கை மேம்பாடுகளுக்கும், அவர்கள் இல்லக் குழந்தைகளின் கல்வி, அறிவியல், சமூக முன்னேற்றத்திற்கும் தேவையான வாய்ப்பு வசதிகள் அனைத்தும் தங்கு தடையின்றிக் கிடைத்திடத் தொடர்ந்து வழிவகை செய்து வருகிறது.
அந்த வகையில், தெலுங்கு மொழி பேசும் மக்களின் சமூக, பண்பாட்டு உணர்வுகளை மதிக்கும் நோக்குடன் தெலுங்குப் புத்தாண்டு பிறக்கும் உகாதித்திருநாளுக்கு அரசு விடுமுறை வழங்கி தெலுங்கு மொழியையும், அம்மொழி பேசும் மக்களையும் பெருமைப்படுத்தியது.
முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் 2004 ம் ஆண்டில் அந்த விடுமுறை ரத்து செய்யப்பட்ட நிலையில் 2006 ல் இந்த அரசு அமைந்த பின் உகாதித் திருநாளுக்கு மீண்டும் விடுமுறை வழங்கி தெலுங்கு சமுதாய மக்கள் மகிழ்ச்சியுடன் இந்நன்னா ளைக் கொண்டாடிட ஆவன செய்யப்பட்டுள்ளது என்பதனைச் சுட்டிக்காட்டிட விரும்புகிறேன்.
இவ்வாறு, தெலுங்கு மொழி பேசும் மக்களைத் தமிழ்நாடு அரசும், தமிழக மக்களும் போற்றிவரும் இனிய சூழலில் இந்த ஆண்டின் உகாதித் திருநாளைக் கொண்டாடி மகிழும் அருமைத் தெலுங்கு சமுதாய உடன்பிறப்புகள் அனைவர் வாழ்விலும் வளமும் நலமும் நிறையட்டும்! வலிவும், பொலிவும் சேரட்டும்! என உளமார வாழ்த்துகிறேன்
இதற்கு கமெண்டில் நல்ல பழமொழி சொல்பவருக்கு பரிசு உண்டு.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Thursday, March 26, 2009
தெலுங்கு புத்தாண்டு - வாழ்த்து + போட்டி
Posted by IdlyVadai at 3/26/2009 06:20:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
56 Comments:
தானிக்கு தீனி ( தருமபுரி வழக்கம், மாங்காய் வாசனையுடன் )
ஊரோடு ஒத்துப்போன உலகிற்கே வெளிச்சம்...(உதயசூரியன்)
Be a Roman in Rome.
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும். ( அந்த கட்சி தாங்க )
எலி ஏன் அம்மணமா ஓடுது!
தமிழ் வருட பிறப்பு என்றால் விடுமுறை கிட்டாது
உகாதி,ஓணம் என்றால் விடுமுறை கிட்டும்
தலைவன், தொண்டன் என்றால் பதவி கிட்டாது
குடும்பம் என்றால் பதவி கிட்டும்
kidakkurathellam kidakka, kizhaviya thooki manai yila vaichanam!
இட்லிவடை அவர்களே,
உடனடியாக நினைவுக்கு வருபவை ஐந்து , ஆறு!
1.எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்?!
2.சோழியன் குடுமி சும்மா ஆடுமா?!
3.ஆதாயம் இல்லாமல் பெரியவர் ஆற்றோடு போக மாட்டார்!
4.எதிரிக்கு எதிரி நண்பன்!
5. ஆனைக்கு ஒரு காலம் என்றால் பூனைக்கு ஒரு காலம் !
6.எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்! (இது பழமொழியில் சேருமா?!)
நன்றி!
சினிமா விரும்பி
என்னைக்கும் பட்டாடையோட ஓடுற எலி இன்னைக்கு அம்மணமா ஓடுதுன்னா அதுக்கு ஆயிரம் அர்த்தம் இருக்குடோய்.
ஓநாய்கள் வாழும் இடத்தில் பறவைகள் பட்டினி கிடப்பதில்லை
தான் ஆடவிட்டாலும்
தன் தசை ஆடும்
(or)
தெலுங்கன் என்று சொல்டா
தமிழன் கோவணத்தையும் உருவுடா
"Cholian Kudumi Summava Aadum"
Thanks
Senthil
in the point of election,
it is called
Balti for gulte..
முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் 2004 ம் ஆண்டில் அந்த விடுமுறை ரத்து செய்யப்பட்ட நிலையில் 2006 ல் இந்த அரசு அமைந்த பின் உகாதித் திருநாளுக்கு மீண்டும் விடுமுறை வழங்கி தெலுங்கு சமுதாய மக்கள் மகிழ்ச்சியுடன் இந்நன்னா ளைக் கொண்டாடிட ஆவன செய்யப்பட்டுள்ளது என்பதனைச் சுட்டிக்காட்டிட விரும்புகிறேன்.//
இதுக்கு ஏன் இவ்ளோ பில்டப்
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்.
இது பழமொழியான்னு கேக்க கூடாது.அப்படி இல்லாட்டி இது எப்படி இருக்கு
ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரிய விரட்டிச்சாம். (இத எப்படியாவது இந்த வாழ்த்தோட சேர்த்து பாத்துக்கோங்க. )
எனக்கு தெரிஞ்ச பழமொழி எல்லாம் சொல்லிட்டேன். பரிசு கொடுங்க.
mechanics by resnik & halliday புக் தேவைப்படுது. அனுப்பி வைங்க.
Oyyara Kondaiyan Thaazhampoovaam
Ulla irukkumaam eerum penum
ithu eppidi irukku :)
ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில் கை வையடா
நக்குற நாய்க்கு
செக்கு என்ன? சிவலிங்கம் என்ன?
(ஓணமா இருந்தா என்ன?
யுகாதியா இருந்தா என்ன?
டயலாக் ஒண்ணு தானே)
ஆரிய கூத்தாடினாலும் தாண்டவக்கோனே ...,
காசு காரியத்தில் கண் வைய்யடா
தாண்டவக்கோனே ...,
வாழ்த்தே நீ சொன்னாலும்
தாண்டவக்கோனே ...,
வழக்கம் போல பாலிடிக்ஸ் பண்ணு தாண்டவக்கோனே ...,
ஆரிய கூத்தாடினாலும் தாண்டவக்கோனே ...,
காசு காரியத்தில் கண் வைய்யடா
தாண்டவக்கோனே ...,
வாழ்த்தே நீ சொன்னாலும்
தாண்டவக்கோனே ...,
வழக்கம் போல பாலிடிக்ஸ் பண்ணு தாண்டவக்கோனே ...,
தனக்கு தனக்குன்னா ........ ஆடுமாம்!
மேலும் பழமொழிகளை எதிர்பார்த்து!
//இந்த அரசு அமைந்த பின் உகாதித் திருநாளுக்கு மீண்டும் விடுமுறை//
வாயில அசிங்கமான வார்த்தை வருது, பரவாஇல்லையா ?
தெலுங்கு பழமொழியே சொல்றேன்.
" நா இன்டிக்கி ஒஸ்தே ஏமி தேஸ்தாவு..
மீ இன்டிக்கி ஒஸ்தே ஏமி இஸ்தாவு."
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
- Romba Paasama telugu people ha wish panrare nu patha, nice ha holiday, admk nu puguthitare..
and May be this one also...
உட்சுவர் இருக்க, புறச்சுவர் பூசலாமா ?
Vandhaarai Vaazhaveikkum Naadu nam Thamizhnaadu.
Oru Thelugungu paesum Thamizhan.
-Mahesh
aadu nanayudhaenu oonai azhudhucham....
குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு ...
1. வேளை அறிந்து பேசு, நாளை அறிந்து பயணம் பண்ணு ;
2. சூத்திரதாரிக்கு வீரியம் பெரியதா, காரியம் பெரியதா? ;
3. ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே, காரியத்தில் கண்ணாயிரு தாண்டவக்கோனே..;
4. புதிய வண்ணான் ஆயினும், பழைய அம்பட்டனை தான் தேடணும்..;
5. ஆண்டி மகன் அரசனானாலும், நேரம் அறிந்து சங்கு ஊதுவான். ;
சட்டென்று இது தான் ஞயாபகத்துக்கு வந்தது...
ஆஹா என்ன அருமை .. தமிழின தலைவர் கருணாநிதியின் ( தெலுங்கு ) மொழி பற்று ....
தேசிய விடுமுறை நாளில் கூட அரசியலை புகுத்தும் தனித்தன்மை கலைஞரை தவிர வேறு யாரிடம் உண்டு? வாழ்க அவரது மொழி பற்று !வளர்க அவரது குடும்பம்!!
"santhula sinthu" paduthal.
how is it?
கருணாநிதி தனது தேர்தல் அரசியல் பிரசாரத்தை யுகாதி திருநாளான இன்று தொடங்கினார் ..........
ha ha ha ha...
andai veettu neyyE(ghee) em pondatti kaiyE
pakkathu ilaikku payaasamam baa :D
"இத்தகைய தன்மை வாய்ந்த பசுவை தென்னை மரத்தில் கட்டி வளர்ப்பார்கள் ........"
அடுத்தவன் வீட்டு நேய்யே
என் பொண்டாட்டி கையே!!
அடுத்தவன் வீட்டு நேய்யே
என் பொண்டாட்டி கையே!!
அகங்கையிர் போட்டுப் புறங்கையை நக்கலாமா !!!!!!!!!!
அகங்கையிர் போட்டுப் புறங்கையை நக்கலாமா !!!!!
பழமொழிலாம் தெரியாது… புதுமொழிகள் வேனா வச்சுகுங்க.
சொந்த வீடு ஓட்ட ஒடசலா இருக்காம்,
பக்கத்து வீட்டுக்கு போய் பெயிண்ட் அடிச்சானாம்.
காரியம் ஆகனும்னா, கருங்கொரங்குக்கு கூட வக்காலத்து வாங்கலாம்.
இட்லிவடை அவர்களே,
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பது தமிழர்கள் ஆந்திராவில் செட்டில் ஆகும் போது சொல்ல வேண்டிய முதுமொழி அல்லவா?! தெலுங்கு பேசுபவர்கள் இங்கு வந்து செட்டில் ஆவதற்குத் தெலுங்கில் ஒரு கணியன் பூங்குன்றனாரை அல்லவா தேட வேண்டும் ?!
நன்றி!
சினிமா விரும்பி
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு
சோழியன் குடுமி சும்மா ஆடுமா?
தமிழ்ப் புத்தாண்டுக்கு ஆப்பு, தெலுங்கு (மக்களுக்கு) புத்தாண்டுக்கு சோப்பு
Be a roman when you are in Rome.. but dont be a tamilian when you are in tamilnadu
"ஊருக்கு கொத்துகாரன் .........
நோம்பிக்கு பிச்சைகாரன்......."
போட்டியில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி. முடிவுகள் விரைவில் இங்கே அறிவிக்கப்படும்.
Unmai - எலி ஏன் அம்மணமா ஓடுது!
நண்பரே உங்க முகவரியை எனக்கு மின்ஞ்சலில் அனுப்புங்க.
சிவாஜி கணேசன் நடித்த ‘மகாகவி காளிதாஸ்’ ஒரிஜினல் டிவிடியை உங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்கிறேன்.
யோவ், இட்லி வடை. என்ன வெளயாட்டா? அதையே தானே நானும் சொல்லிருக்கேன். எனக்கு ஒரு 'எந்திரன்' ஒரிஜினல் சி.டியாவது அனுப்பி வைக்கக்கூடாதா? போன போட்டியிலயும் என்ன கவுத்தீரு. உம்மோட உண்மையான பேரு கருணாநிதியா?
//யோவ், இட்லி வடை. என்ன வெளயாட்டா? அதையே தானே நானும் சொல்லிருக்கேன். எனக்கு ஒரு 'எந்திரன்' ஒரிஜினல் சி.டியாவது அனுப்பி வைக்கக்கூடாதா? போன போட்டியிலயும் என்ன கவுத்தீரு. உம்மோட உண்மையான பேரு கருணாநிதியா?//
உண்மை தான் ஆனால் அவர் உங்களுக்கு முன்னாடி சொல்லிட்டாரே :-) எந்திரன் சிடி அனுப்பறேன் கவலை படாதீங்க.
அப்பறம் இன்னொரு விஷயம், இட்லிவடை குருப்பில் இருப்பவருக்கு பரிசு கிடையாது ;-)
அது ரைட்டு இட்லிவடை. எதுக்கு நீங்களே மாயவரத்தான் பேருல ஒரு கமெண்ட், இட்லிவடை பேருல இன்னொரு கமெண்ட் போடறீங்க ?
எனக்கு புக் கொடுக்க மாட்டீங்களா ? எதாவது ஈசியா போட்டி வச்சிட்டு எனக்கு மட்டும் சொல்லுங்க.
சரியான போங்கு இது. பின்னூட்டத்தை வெளியிட்டிருந்தால் அவர் எனக்கு முன்னாடி சொல்லிட்டாருங்கிற ரூல்ஸ் ஒத்துக்கலாம்.
***
என்னது, இட்லி வடை குரூப்பா. நாசமாப் போச்சு. நீங்க ரெண்டு பேருமே போதுமே, எங்கப்பன் குதிருக்குள்ள இல்லன்னு சொல்ல ;)
மணிகண்டன், ஒண்ணும் ஒண்ணும் எவ்வளவு? சரியா கண்டு பிடிச்சா உங்களுக்கு 'குலேபகாவலி' திருட்டு வி.சி.டி. அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுறேன்.
ஐயையோ, போன பின்னூட்டத்தை மாயவரத்தான் ஐ.டி.யிலே போட்டுட்டேனா? அது இட்லி வடை கமெண்ட்.
திரு மாயவரத்தான் அவர்களே!
அது எப்டி ரெண்டு பேர்? இட்லி ஒருத்தர் வடை ஒருத்தரா?
என்னபா இது உள்குத்து? நாடு எங்க போயிட்டு இருக்கு?
//திரு மாயவரத்தான் அவர்களே!
அது எப்டி ரெண்டு பேர்? இட்லி ஒருத்தர் வடை ஒருத்தரா//
ஆமாம்... அப்புறம் சட்னி, சாம்பார், மிளகாய்ப் பொடி, நல்லெண்ணை அப்படீன்னு ஏகப்பட்ட அல்லக்கைகள் வேற இருக்காங்க. தெரியாதா?A
பகுத்தறிவு பன்னாடையின் பகல்வேஷம்
**********
கும்பகோணம்: முதல்வர் கருணாநிதி நலமுடன் இருக்க வேண்டும் என்பதற்காக, அவரது துணைவியார் ராஜாத்தி அம்மாள் திருக்கடையூர் கோவிலில் ஆயில்ய ஹோம் செய்தார்.
கருணாநிதி மதம், சாதி, ஆன்மீகம் போன்ற நம்பிக்கையில் மாறுபட்ட கருத்து கொண்டவர். பெரியார் வழியில் நடப்பதாக அடிக்கடி பெருமையாக கூறிக் கொள்வார்.
இந்துக் கடவுள்கள் குறித்து அவர் முன்பு பேசியவை இன்றும் கூட விமர்சிக்கப்பட்டு வருகின்றன. அவரும் தனது விமர்சனங்களை நிறுத்தியதில்லை.
இந்த நிலையில் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் கும்பகோணம் அருகில் உள்ள திருக்கடையூர் அமிர்தகேடஸ்வர் கோயிலுக்கு திடீரன வந்தார்.
அங்கு முதல்வர் கருணாநிதிக்கு நீண்ட ஆயுள் வேண்டி ஆயில்ய ஹோமம் கோவில் நந்தி மண்டபத்தில் விஸ்வநாத குருக்கள் தலைமையில் நடத்தப்பட்டது.
துணைவியார் ராஜாத்தி பெயரில் ஹோமம் நடந்தது. இரவு 7.30 மணியளவில் திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்து ஆயில்ய ஹோம பிரசாதத்தை ராஜாத்தி பெற்றுக் கொண்டார்.
நீங்க எழுதி இருக்கிற மேட்டர், பரிசு குடுத்திருக்கிற மேட்டர், ரெண்டுக்கும் சம்பந்தமே இல்ல..இது ஓரவஞ்சனை, கருணாநிதி கட்சி நடத்துற மாதிரி இருக்கு..Bad decisiion & attitude..
"படிக்கிறது ராமாயணம், இடிக்கிறது ராமர் கோயில்" (தமிழ், தமிழ் என்று சொல்ல வேண்டியது, தெலுங்கு மக்களுக்கு வாழ்த்து சொல்ல வேண்டியது). Highly idiotic.
ithu eppidi theriyuma irukku....
summa pora aasaariya kooppittu enakku oru aappu veiyunu soldra maadhiri irukku
ஈசியா கேளுங்க மாயவரத்தான். இந்த மாதிரி கேட்டா நீங்க இட்லிவடை இல்லையோன்னு ஒரு சந்தேகம் வந்துடும்.
”குண்டிய வித்துல்லடே கோவணத்த வேங்குதான் ஈ சீண்ட்ரம் புடிச்ச பய”
தமிழ் வருஷப் பொறப்ப மிஷனரிமார்கிட்ட வித்துப் போட்டு இப்பம் தெலுங்கு வருஷத்துக்கு வாழ்த்துத் தெரிவிக்காம் செவத்து மூதி
ஏ மக்கா, பரிசு கிரிசு எல்லாம் எனக்கு வேண்டாம் வேய், ஒரு பார்சல் பீ ய அந்த மூதிக்கு அனுப்பி வையும்வே என் பரிசா
Post a Comment