பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 30, 2009

நானே கேள்வி, நானே பதில் - ராமதாஸ்

இன்றைய மாலை பத்திரிக்கையில் வந்த ராமதாஸ் அறிக்கை. ராமதாஸுக்கு அம்மா பக்கம் போனவுடன் ரொம்ப தான் நக்கல் - நானே கேள்வி நானே பதில் என்று கலக்குகிறார்...


கேள்வி : நீங்கள் செல்வி ஜெயலலிதாவை “அன்பு சகோதரி” என அழைப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் உங்களை “டாக்டர் அண்ணன்” என அழைத்துள்ளாரே! அதைப் பற்றி தங்கள் கருத்து?

பதில் : அவர் என்னை “மருத்துவர் அண்ணன்” என்று அழைத்திருந்தால் இன்னும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். ஆனால் அதை விட ஒரு இன்ப அதிர்ச்சியை எனது “அன்பு சகோதரி” இன்று சந்திக்கச் செல்லும் போது அளித்தார். அவர் அமர்ந்திருந்த அறையில் நானும் அமர ஒரு நாற்காலியை அவர் அமைத்திருந்தார். அதைக் கண்டதுடன் எனக்கு ஆனந்தக் கண்ணீரே வந்து விட்டது.

கேள்வி : ஐந்தாண்டு காலம் காங்கிரஸ் அமைச்சரவையில் உங்கள் கட்சியை சேர்ந்த இரண்டு எம்.பிக்கள் அமைச்சர்களாக இருந்து விட்டு, இப்போது திடீரென தேர்தல் நெருங்கும்போது ராஜினாமா செய்திருப்பதை சிலர் கிண்டல் செய்கிறார்களே!

பதில் : எப்படியும் அடுத்த ஆட்சி இன்னும் இரண்டு மாதங்களுக்குள் அமைந்து விடும். அப்போது எந்த ஆட்சி அமைந்தாலும் எங்கள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்படியும் அமைச்சர்களாக பதவி ஏற்பார்கள். ஆதலால் இவ்வாறு கிண்டல் செய்வதில் எந்தப் பயனும் இல்லை என அந்தச் சிலருக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

கேள்வி : உங்களுடன் திருமாவளவனும் வர வேண்டும் என ஜெயலலிதா எதிர்பார்த்தாராமே? ஏன் உங்களால் அவரை இழுக்க முடியவில்லை.

பதில் : நானும் இழுக்க பல முயற்சிகளை செய்தேன். ஆனால் அவரோ.. “உங்களுக்காவது சென்னையில் உங்களோட வாரிசுகள் இருக்காங்க. அந்த அம்மாவை சந்திக்க அப்பாயின்மெண்ட் கிடைக்கிற வரைக்கும் அவங்க வீட்டிலேயே தங்கிக்கிட்டு காத்திருக்கலாம். ஆனால், என் நிலைமை அப்படியில்லை. அது மட்டும் இல்லை. அந்தக் கூட்டணிக்கு வந்து விட்டு, நான் அ.தி.மு.க. காரன்களை திட்டக் கூட முடியாது. ஆனால், இந்தக் கூட்டணியில், நாங்க காங்கிரஸ்காரங்களை அடிச்சாலும் தாங்கிக்கிட்டே திருப்பி அடிக்கிற முடிவை சோனியா காந்திகிட்ட கொடுத்துடுவாங்க . அவ்ளோ நல்லவங்க அவங்க!” என ‘கை’யை விரித்து விட்டார்.

கேள்வி : உங்களுக்கு 7 + 1 தொகுதிகள் வழங்கப் பட்டதால் வைகோ தனக்கும் அதே அளவு தொகுதிகள் வழங்கப் படவேண்டும் எனக் கொடி தூக்கியுள்ளாராமே?

பதில் : சில பத்திரிக்கைகள் இவ்வாறு செய்தியைத் திரித்து வெளியிட்டுருக்கிறார்கள். ஆனால், உண்மை என்னவென நீங்கள் அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். “அன்பு சகோதரி” அவர்கள், வைகோவிற்கு எவ்வளவு தொகுதி வேண்டுமானாலும் தரத் தயாராக இருக்கிறார். நானும் அதற்கு குறுக்கே நிற்க மாட்டேன். ஆனால், தம்பி வைகோவோ இனி எந்தத் தேர்தல் ஆனாலும் தனது கட்சிக்கு ஒரு தொகுதி தந்தால் போதும் என்று பிடிவாதம் பிடிக்கிறார். அவ்வாறு தரப்படும் அந்த ஒரு தொகுதியிலும் அவர்தான் நிற்பாராம். அப்போதுதான் இனி தனது கட்சியைச் சேர்ந்த எந்த ஒரு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினரும் தி.மு.க.விற்கு ஓடிப் போக முடியாது என்று இறுமாப்புடன் பதில் சொல்கிறார்.


கேள்வி : மார்ச் 28’ல் வெளியிடப்பட்ட “நானே கேள்வி, நானே பதில்” அறிக்கையில் கலைஞர் கருணாநிதி, “ஓட்டுப் பெட்டியில் விழுந்த வாக்குகளின் எண்ணிக்கையை எண்ணி அறிவித்த ஒரு சில நிமிடங்களில்; பா.ம.க., அ.தி.மு.க. அணியிலே சேருவதாக எடுத்த நீண்ட தீர்மானத்தை பொதுக் குழுவிலே படித்ததாகவும் - வாக்குகளின் எண்ணிக்கை தெரியாத நிலையில் அவ்வளவு நீளமான தீர்மானத்தை எப்படி முன்கூட்டியே தயாரித்தார்கள் என்றும் செய்தியாளர்களே கிண்டலாகப் பேசிக் கொண்டார்களாம்.” என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து, உங்கள் கருத்து?

பதில் : டாஸ்மாக் சரக்குகளை விற்று பொழைப்பு நடத்தும் மைனாரிட்டி தி.மு.க அரசின் முதல்வருக்கு நான் பதில் சொல்ல கடமைப் பட்டுள்ளேன், ஒரு கட்டுப்பாடுடன். அந்தக் கட்டுப்பாடு என்னவென யாருக்கு சொல்ல வேண்டுமோ அவருக்கு சொல்லி விட்டேன்.
அன்று, பொதுக்குழுவில் வாக்கெடுப்பு மிகவும் நேர்மையுடன் நடத்தப் பட்டது. ஆனால், பொதுக்குழுவின் முடிவு எவ்வாறு இருக்கும் என நான் முன்பே கணித்திருந்தேன். அதனால் தான் அந்த நீளமான தீர்மானத்தை முன்பே தயாரித்திருந்தேன். இதில் இருந்து ஒன்றை நீங்கள் தெளிவாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். ஒற்றுமை நிறைந்த, சனநாயகம் கூடிய ஒரு கட்சியில், தலைவனின் விருப்பம் என்னவென தொண்டர்களும், தொண்டர்களின் விருப்பம் எவ்வாறு இருக்கும் என தலைவனும் முன்கூட்டியே அறிந்திருப்பார்கள்.
ஆனால், சில கட்சிகளில் நிலைமை அவ்வாறு இல்லை. தங்களின் குடும்பத் தகறாறுகளுக்காக தங்களுக்கு சொந்தமான நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்கள், தொண்டர்கள், ஏன்.. தங்கள் கட்சியில் அமைச்சராக இருந்தவரைக் கூட கொலை செய்யும் கலாச்சாரம் தான் நிலவி வருகிறது என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ராமதாஸ் ஐயாவின் “நானே கேள்வி.. நானே பதில்” அறிக்கை அமைந்திருந்து. ஆனால், இந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ள அந்தக் கட்டுப்பாடு என்ன, யாரைக் கட்டுப்படுத்துவதற்கு அந்தக் கட்டுப்பாடு என அறிந்துக் கொள்வதில் தீவிரம் காட்டினோம். ஆதலால் தைலாபுர பட்சியைத் தொடர்பு கொண்டோம். அந்த பட்சி சொன்னது இதுதான். “ஒண்ணுமில்லைங்க.. அந்தக் கண்டிஷன் வேற யாருக்கும் இல்ல.. ஜெயலலிதா அம்மாவுக்குதான். அய்யா வெளியிட்ட இந்த அறிக்கையை மறந்துடனும் என்பதும், இவர் அடுத்து தி.மு.க வோட கூட்டணி அமைக்கும்போது இந்த அறிக்கையைப் பத்தி சொல்லிக் காட்டக் கூடாதுங்கறதும் தாங்க அந்தக் கண்டிஷன்” என்று கூறி லைனைத் துண்டித்தார்.


பிகு: ஒரு மனிதன் முன்னேற தனக்குத்தானே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும். இந்த தாரக மந்திரத்தை தவறாகப் புரிந்துக்கொண்டு தனக்குத் தானே (சாதகமாக பதில் சொல்லக் கூடிய) கேள்வியைக் கேட்டுக் கொண்டு, பதிலுடன் “நானே கேள்வி, நானே பதில்” என படிப்பவர்களை துன்பத்தில் ஆழ்த்தும் கலைஞர் கருணாநிதியின் பாணியை, தானும் பின்பற்றுவதென முடிவுக்கு ராமதாஸ் ஐயாவும் வந்து விட்டார் என தைலாபுர தோட்டத்தில் உள்ள ஒரு பல்லி.. மன்னிக்கவும்.. ஒரு பட்சி தகவல் சொன்னது.

உண்மையிலேயே தாவதாஸ்.. மீண்டும் மன்னிக்கவும்.. ராமதாஸ் அப்படி ஒரு முடிவுக்கு வந்துவிட்டால், அவருடைய “நானே கேள்வி.. நானே பதில்” எவ்வாறு இருக்கும் என ஒரு கற்பனை! தான் இது.

- மிளகாய் பொடி

இது உண்மையாக நடந்தால் நான் பொறுப்பாக முடியாது.

10 Comments:

தூத்துக்குடி தமிழன் said...

//அன்று, பொதுக்குழுவில் வாக்கெடுப்பு மிகவும் நேர்மையுடன் நடத்தப் பட்டது. ஆனால், பொதுக்குழுவின் முடிவு எவ்வாறு இருக்கும் என நான் முன்பே கணித்திருந்தேன். அதனால் தான் அந்த நீளமான தீர்மானத்தை முன்பே தயாரித்திருந்தேன். இதில் இருந்து ஒன்றை நீங்கள் தெளிவாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். ஒற்றுமை நிறைந்த, சனநாயகம் கூடிய ஒரு கட்சியில், தலைவனின் விருப்பம் என்னவென தொண்டர்களும், தொண்டர்களின் விருப்பம் எவ்வாறு இருக்கும் என தலைவனும் முன்கூட்டியே அறிந்திருப்பார்கள்.
//

ஷப்பா, எப்ப்டில்லா சமாளிக்க வேண்டியிருக்கு..................

R.Gopi said...

வாக்காள பெருமக்களே

இப்போது நாட்டில் நடக்கும் அனைத்து வகையான நிகழ்வுகளுக்கும் "இட்லிவடை" மற்றும் "மிளகாய்பொடி" யே காரணம், காரணம், காரணம் .........

வெங்க்கி said...

யாருயா இந்த மிளகாய் பொடி??

இந்த அளவுக்கு காரமா எழுதுது..??

இத்த மருத்துவர் படிச்சாருன்னா, அந்த (ஒரிஜினல்) மிளகாய் பொடியை பின்புறம் தடவிக்கிட்டு ஐஸ் மேல உக்கார்ந்திடுவாரு போல..

கலைக்கோவன் said...

தத்தி தாவுது மனசு....

தே.மு.தி.க.வில் இருந்து விலகி கு.ப.கிருஷ்ணன் மீண்டும் அ.தி.மு.க.வில் சேருகிறார்

Rajaraman said...

தேர்தல் முடியும் வரை எங்களுக்கு ஒரே ஜாலியோ ஜாலி தான். IV அடிச்சு வெளுத்து கட்டுகிறீர்கள்.

Anonymous said...

ஐயா இட்லி வடை/மொளகாப் பொடி!

காரம் ரொம்ப தூக்கலா இருக்குபா!

பாவம் வைகோ...ஏற்கனவே ரொம்ப நொந்து போயி இருக்கார்.. இதவேற படிச்சா அவருக்கு தாங்காதுப்பா! விட்டுடுங்க! பாவம்!

Boston Bala said...

:))

Krish said...

ராமதாஸ் பிழைக்க தெரிந்த மனிதர்! கடைசியா கூட்டணிக்கு வந்து முதல்ல பங்கு போட்டுக்கிட்டு போய்ட்டார்! பவம் இந்த வைக்கோவும், கதர் சட்டைகளும்!

Unknown said...

ஆஆஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......!!


ராமதாஸ் அய்யா ... நெம்ப நல்லவருங்கோ.........!!!! உட்டா அம்மாவும் நானே ..... ஐயாவும் நானேன்னு சொன்னாளுமும் சொல்லிபுடுவாருங்கோ......!!!! மக்களெல்லாம் நெம்ப சாக்கரதையா இருக்கொனுமும்கோவ்.......!!!!!!

Anonymous said...

இது (ராம தாசன் ) என்ன மாதிரி ஜென்மம் ஆனா அல்லது பெண்ணா அல்லது ?
இது ஒரு பொழைப்ப