பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 20, 2009

ஐ.பி.எல். கிரிக்கெட் 'விஷப்பரீட்சை’ - கலைஞர்

கருணாநிதி ஐ.பி.எல். கிரிக்கெட் 'விஷப்பரீட்சை' வேண்டாம் என்று ஏன் சொன்னார் ?

கலைஞர் : என்ன அன்பு (தயாநிதி மாறன்), இந்த IPL அப்படின்னு ஒரு கலை நிகழ்ச்சி நடத்துறாங்களாமே! அதைத் தன்னால பார்க்க வர முடியாதுன்னு சிதம்பரம் சொல்லியிருக்கானேப்பா! அவ்வளவு ரசனை இல்லாத ஆளா இந்தச் சிதம்பரம்?

தயாநிதி மாறன் : அய்யோ தாத்தா! அது நமீதா ஆடி, நீங்க பார்க்குற கலை நிகழ்ச்சி இல்லை. நம்ம நாட்டு கிரிக்கெட் வீரர்கள், கூடவே வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களும் சேர்ந்து ஆடுற ஒரு கிரிக்கெட் டோர்னமெண்ட். வேணும்னா நீங்க பார்க்குற மாதிரி ஒரே ஒரு விஷயம்தான் இருக்கு. Cheerleader என்கிற நடனப் பெண்கள். அவ்ளோதான்.

கலைஞர் : ஓ.. கபில்தேவ் நடத்துறாரே, அந்தப் போட்டியா?

தயாநிதி மாறன் : அய்யோ இல்லை. இதையெல்லாம் இப்போ என்னால தெளிவா விளக்க முடியாது தாத்தா. நீங்க ஆரம்பத்தில கேட்ட கேள்விக்கு பதில் சொல்றேன். சிதம்பரம் அதை பார்க்க வர மாட்டேன்னு சொல்லல. தேர்தல் நேரத்துல இதை நடத்துறதுனால இதுக்குப் பாதுகாப்பு தர முடியாதுன்னு மட்டும்தான் சொல்லியிருக்காரு.

கலைஞர் : சென்னையிலும் இது நடக்குதா?

தயாநிதி மாறன் : ஆமாம் தாத்தா.

கலைஞர் : அப்போ பரிசு குடுக்க நம்மளையும் கூப்பிடுவாங்க இல்ல?

தயாநிதி மாறன் : அய்யய்யோ தாத்தா.. ஏன் இப்படி புரியாம பேசுறீங்க? அண்ணன் மட்டும் இதைக் கேட்டா இன்னொரு கருத்துக் கணிப்புக்கு ஏற்பாடு பண்ணிடுவாரு. பேசாம நான் சொல்ற மாதிரி அறிக்கை விடுங்க.

கலைஞர் : என்ன சொல்லணும்னு சொல்லு. ஸ்டாலின்கிட்டயும் அழகிரிகிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுட்டு அறிக்கை விட்டுடறேன். கனிமொழி தன்னைக் கண்டுக்கறதில்லைன்னு அழுவுது. அதுகிட்டயும்கூட ஒரு வார்த்தை கேட்டுட்டே அறிக்கையை விடறேன்.

தயாநிதி மாறன் : இந்தப் போட்டி கிட்டத்தட்ட ஒரு மாசம் நடக்கும். சம்மர் ஹாலிடேய்ஸ்ல.. அதுவும் ப்ரைம் டைம்ல. யோசிச்சிப் பாருங்க. எவனாவது நம்மோட சேனல்களைப் பார்ப்பானா? டி.ஆர்.பி என்னாறது? வருமானம் கண்டிப்பா அடி வாங்கிடும்.

கலைஞர் : அச்சச்சோ.. தம்பி சண்முகநாதா.. இந்தா எழுதிக்கோ.. “உடன் பிறப்பே! சிந்தித்துப்பார். ஏதோ cheers சொல்லும் leaders நமது குழந்தைகளின் மனதைக் கெடுக்கப் போகிறார்களாம். அதுவும் நமது சொந்தங்கள் இலங்கையில் உயிருக்காகவும் உரிமைக்காகவும் போராடும்போது இந்தக் களியாட்டங்கள் நமக்குத் தேவைதானா?”. இப்படி ஒரு அறிக்கை விட்டுடட்டா..

தயாநிதி மாறன் : கிழிஞ்சது. வேற வினையே வேணாம். உங்க சேனல்கள்ல மட்டும் என்னத்தைக் காட்டுறீங்க? அதை மூடுங்கடா மொதல்லன்னு அவனவன் பதில் அறிக்கை விட ஆரம்பிச்சிடுவான். பேசாம அண்ணன் எழுதிக் கொடுத்ததை அப்படியே அறிக்கையா விட்டுடுங்க.

கலைஞர் : புகழ்(கலாநிதி) என்ன எழுதிக் கொடுத்திருக்கான்?

தயாநிதி மாறன் : படிக்கிறேன். கேளுங்க.

"உலகப் புகழ் பெற்ற விளையாட்டு வீரர்களின் உயிர்கள் மட்டுமல்ல, அதைக் காணவரும் லட்சக்கணக்கான பொதுமக்களின் உயிர்களும் பாதுகாக்கப்பட வேண்டியவையே. இதற்கிடையே பாராளுமன்றத்துக்கான பொதுத்தேர்தலும் நடைபெறுகிறது. அகில இந்திய அளவில் அந்த கிரிக்கெட் போட்டியை ஒரு மாதத்துக்குத் தள்ளி வைத்து நடத்துவதால் எந்த நட்டமும் யாருக்கும் ஏற்பட்டுவிடாது. அந்தந்த மாநில காவல்துறை தலைவரிடமிருந்து பாதுகாப்புக்கான ஒப்புதலைப் பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய உள்துறை அமை‌ச்ச‌ர் தெரிவித்திருந்தாலும், என்னைப் பொருத்தவரையில் அச்சுறுத்தல் இருக்கும்போது மாநிலங்கள் மாத்திரமல்ல, இந்திய நாட்டளவிலேயே இதுபோன்ற விஷப் ப‌‌ரீட்சைகளில் ஈடுபடக்கூடாது என்பதே என் கருத்தாகும். 'ஒன்று நடைபெற்ற பிறகு வருந்துவதைவிட, அது நடைபெறாமல் தடுப்பதே சாலச் சிறந்ததாகும்,' இதுதான் அண்ணா எனக்குச் சொல்லிக்கொடுத்த மந்திரம் ஆகும்."

- மிளகாய் பொடி

13 Comments:

Rajaraman said...

ஒரு வார்த்தையில் சொல்வதென்றால் `நச்'

paarvai said...

தாத்தாவிற்கு அறிக்கை விட்டு விட்டு , அடுத்து என்ன அறிக்கை விடுவது என்று யோசனை சொன்ன இட்லி வடையை வன்மையாக கண்டிக்கிறேன். ஏதோ அவர் பாட்டுக்கு, அம்மையாரைத் தாக்கி தனக்குத்தானே கேள்வி பதில் அறிக்கை விட்டுகிட்டிருந்தார்....இப்ப இப்படி வேற ஐடியா கொடுத்திருக்கீர்...

மஞ்சள் ஜட்டி said...

அப்படி போடு அருவாளை...புகழ் அறிக்கை சூப்பர்...விரைவில் நிஜத்தில் எதிர்பாருங்கள்..

இ.வ கிருஷ்ணசாமி..?? எப்படி உங்களுக்கு இந்த மாதிரி மொக்கை எழுத தோணுது?

Anonymous said...

"இதுதான் அண்ணா எனக்குச் சொல்லிக்கொடுத்த மந்திரம் ஆகும்." lol Vaazhga anna naamam

Krish said...

//// நீங்க பார்க்குற மாதிரி ஒரே ஒரு விஷயம்தான் இருக்கு. Cheerleader என்கிற நடனப் பெண்கள். அவ்ளோதான்./////

Super!!!! அந்த நடனத்தை முதுகுவலியோட மூணுமணிநேரம் உட்கார்ந்து பார்ப்பாரே!

IdlyVadai said...

எல்லா புகழும் ’மிளகாய் பொடி’க்கு ;-)

எங்கே நீங்க எழுதிட்டீங்களோ என்று பார்த்தேன் ( நன்றி: பாபா )

பெசொவி said...

கலக்கல், அற்புதம், இது போன்று மேலும் எதிர்பார்கிறேன்.

Anonymous said...

You can easily become the next editor of "Thuglaq"

Arun said...

சும்மா பிளிரிட்டீங்க போங்க..

ஷங்கர் Shankar said...

ஒ! இதுல இவ்வளவு விஷயம் இருக்கா!

Anonymous said...

இன்னா நையின்னா....

சும்மா கலாசிடியே....சுபெராகீதுபா.....

கொடும்பாவி-Kodumpavi said...

குவாட்டர் அடிச்சு.. ஊருகா பொட்டலம் வச்சுகிட்டு.. ஆம்லெட்டு தொட்டுகிட்டு.. சிப்ஸ் கொரிச்சுகிட்டு.. ச்சும்மா காரசாரமா ஜிவ்வுன்னு ஏத்திடீங்க இட்லி வடை.. அவரு இன்னொன்னு சொன்னாரே .. கூட்டம் எல்லாம் ஆட்டத்த பாக்க வரும்போது நாமும் பிட் நோட்டீஸ் கொடுக்க ஏதுவா இருக்கும்ன்னு பேராண்டிகிட்ட சொன்னதை ஏன் போடவில்லை?

R.Gopi said...

"தல" ய பின்னி பெடலேடுத்துடீங்க பாஸ்.

செக்ஸ் மூட்ல இருக்கற "தல" ய குசி படுத்த, cheerleadersaa??

கெளப்புங்க பட்டைய !!!!