பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, March 18, 2009

பகுத்தறிவாளர்கள் முக்கண்ணை நம்புவது இல்லை - கலைஞர்

`பெரியார், அண்ணா வழிவந்த பகுத்தறிவாளர்கள் முக்கண்ணை நம்புவது இல்லை' என்று ஜெயலலிதாவுக்கு, முதல்-அமைச்சர் கருணாநிதி பதில் அளித்து உள்ளார்.


பாராளுமன்றத் தேர்தல் முறையாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுவிட்டது. மொத்தமுள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் மே 13-ந் தேதிதான் கடைசி கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.


மே 13-ந் தேதிக்கும், நமக்கும் ஒரு பொருத்தம் உண்டு. 1996-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிந்து மே 13-ந் தேதி தான் கவர்னர் மாளிகையில் நான் முதல்-அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டேன். 2004-ம் ஆண்டு மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு நம்முடைய கூட்டணி நாற்பது இடங்களிலும் அமோக வெற்றி பெற்றது 13-ந் தேதியன்றுதான். 2006-ம் ஆண்டும் சட்டமன்றத் தேர்தல் முடிந்து மே 13-ந் தேதி தான் நான் ஐந்தாவது முறையாக முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன். ஏன் தற்போது உடல் நலம் பெற்று 45 நாட்களுக்குப் பிறகு அரசின் தலைமைச் செயலகம் சென்றதுகூட 13-ந் தேதியன்றுதான். பெரியார், அண்ணா வழி பகுத்தறிவுவாதியாகிய எனக்கு நல்ல நாள், கெட்ட நாள் என்றெல்லாம் எழுதுவதிலும், பேசுவதிலும், நம்புவதிலும் ஆர்வமும் இல்லை, அக்கறையும் இல்லை.

இருந்தாலும் ஆங்கிலேயர்களுக்கு 13-ந் தேதி என்பது பிடிக்காத ஒன்று. தீய நாள் என்பதற்காக அந்நாளில் எச்செயல்களிலும் ஈடுபடமாட்டார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், அதே 13-ந் தேதி தான் எப்படியோ நமக்கு பொருந்தி வந்துவிட்டது. இதில் சாஸ்திர சம்பிரதாயம் ஒன்றுமில்லை.


....Amidst chanting of vedic hymns, chief minister M. Karunanidhi ’s son and DMK strongman in the south M.K. Azhagiri launched his family-owned Royal Cable Vision (RCV), touted as an archrival to the Maran-owned Sumangali Cable Vision (SCV), here on Monday......( பழைய நியூஸ் )

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளும் கூட்டணி அமைக்கும் பணியிலே ஈடுபட்டுள்ளன. கழகத்தின் சார்பிலும், தோழமைக் கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசிடுவதற்கான குழு ஒன்று கழக பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், மாவட்ட செயலாளர்கள் வீரபாண்டி ஆறுமுகம், க.பொன்முடி ஆகியோர் நியமிக்கப்பட்டு- அந்தக் குழுவினர் -நம்முடைய பிரதான கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் குழுவான கே.வி.தங்கபாலு, ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், டி.சுதர்சனம் ஆகியோருடன் முதற்கட்ட பேச்சுவார்த்தைகளை பேசியிருக்கின்றார்கள்.

இறுதியாக எந்தெந்த கட்சிகள் நம்முடைய அணியிலே இடம் பெறவுள்ளன, எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை இடங்கள், எந்தெந்த தொகுதிகள் என்பன பற்றியெல்லாம் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.


பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிந்து வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 17-ந் தேதி தொடங்கி -ஏப்ரல் 24-ந் தேதி வரையில் என்று தேர்தல் ஆணையம் தேதி நிர்ணயம் செய்திருக்கின்றது. நமது அணியின் மேல்மட்ட அளவில் இத்தகைய பணிகள் நடைபெறத் தொடங்கிய போதிலும், கழக உடன்பிறப்புக்களாகிய உங்கள் பணிதான் மகத்தான பணி என்பதை நான் நன்றாகவே அறிவேன். கழகத்தின் சார்பில் சுமார் 1,500 பேர் -40 தொகுதிகளிலே போட்டியிட விண்ணப்பம் செய்துள்ளார்கள். 40 இடங்களிலே தி.மு.க. எத்தனை இடங்களிலே போட்டியிடப் போகிறது. அது எந்தெந்த இடங்கள் என்பதெல்லாம் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படவுள்ளன.

தோழமைக் கட்சிகளோடு பகிர்ந்து கொள்ளும் இடங்களுக்கு விண்ணப்பம் செய்துள்ள உடன் பிறப்புகள் செலுத்தியுள்ள கேட்புத் தொகை திரும்ப வழங்கப்பட்டுவிடும். அதன் பிறகு நமக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணி தொடங்க உள்ளது. அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க இயலாது. கூடுமானவரை புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டுமென்ற எண்ணம் பரவலாக உள்ளது. செய்தியாளர்கள் கூட அது பற்றி என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அதற்காக அனைவரையுமே புதியவர்களாக நிறுத்தவும் இயலாது.

கடந்த தேர்தலுக்கும், இந்தத் தேர்தலுக்கும் இடையே தொகுதிகள் பிரிப்பதில் பல மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. அதிலே சில குழப்பங்களும் உள்ளன.

இந்த மாறுதல்களையெல்லாம் புரிந்துகொண்டு தேர்தல் பணியாற்றும் முன்னோடிகளுக்கு, இவற்றை தெளிவுபடுத்தி தேர்தலுக்கான ஆக்கப் பணிகளை ஆற்றுவதற்கு உன் போன்றோர் பயிற்சி முகாம்களை அமைத்து- அவற்றின் மூலம் நமது அணியின் செயல் வீரர்கள் ஓய்வறியா உழைப்பை வழங்கியும் - உறுதியும், நம்பிக்கையும் கொண்ட செயல் புரிந்தும் -ஓங்கு புகழ் வெற்றியினை தமிழகத்தில் எல்லா தொகுதிகளிலும் பெற்று - இந்தியத் திருநாட்டில் மதச் சார்பற்றதும், மனித நேய மிக்கதும், ஒருமைப்பாடு, இறையாண்மை இவற்றைக் கட்டிக் காக்க வல்லதுமான திட்டங்கள் பல தீட்டி - தமிழகம் உள்ளிட்ட தாய்த் திருநாடாம் இந்தியத் திருநாட்டில்- கடந்த ஐந்தாண்டு காலம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியின் மாட்சி மீண்டும் தொடரவும்,

மூட நம்பிக்கைகளை வலியுறுத்தி - முத்தான திட்டங்களை முழுமை பெறவிடாமல் தடுக்கின்ற தருக்கர் தம் சூழ்ச்சி தவிடு பொடியாகவும்- புறப்படுவோம் -பொதுத் தேர்தல் எனும் ஜனநாயக அறப்போர் முனைக்கு என அழைக்கின்றேன் - உன்னையும், உன் போன்ற நமது கூட்டணியின் உடன் பிறப்புகளாம் செயல் வீரர்களையும்.


வாக்காளர்கள் சேர்ப்பு பணிகள் எல்லாம் முறையாக நடைபெற்று - அதிலே உன் போன்றோர் பணிகள் சிறப்பாக நடைபெற்றிருந்த போதிலும் - கடைசி நேரத்தில் விடப்பட்ட வாக்குகளை சரிபார்க்கும் வேலைகளில் நீ அக்கறை செலுத்திடுவாய் என்ற நம்பிக்கை எனக்குண்டு. இருந்தாலும், ஞாபகப்படுத்த வேண்டிய கடமை உணர்வு எனக்குள்ளது அல்லவா? அதற்காகத்தான் இந்தக் கடிதம்.

இந்தத் தொகுதியில் நமது வேட்பாளர்தான் நிற்பார் என்று எதிர்பார்த்திருந்திருக்கலாம், அந்தத் தொகுதி தவிர்க்க முடியாத காரணத்தால் பேச்சுவார்த்தையின்போது தோழமைக் கட்சிக்குச் சென்றிருக்கலாம். எந்த தொகுதியாக இருந்தாலும், அங்கே நமது கூட்டணியின் சார்பில் யார் நின்றாலும் அது நம்முடைய தொகுதி, நம்முடைய வேட்பாளர் என்ற எண்ணத்தோடு நீ பாடுபடுவாய் என்பதும் எனக்குத் தெரியும்.


அதைப் போலவே நமது கட்சிக்குள்ளேயே இவர்தான் வேட்பாளராக வரவேண்டுமென்று சிலருக்கு எண்ணம் இருந்திருக்கலாம். அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல், வேறொருவருக்கு தலைமைக் கழகம் அந்த இடத்தை அளித்திருக்கலாம். நாம் நினைத்தவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லையே என்று நினைக்கும் பழக்கம் எப்போதும் உனக்குக் கிடையாது. வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் வரை விருப்பங்கள் வேறு வேறாக இருந்திருக்கலாம். ஆனால் தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்ட பிறகு, அவரது வெற்றிக்காக உழைத்திடுவதுதான் உன்னுடைய கடமை. அதனை நினைவூட்டுவது என்னுடைய கடமை.

உடன்பிறப்பே, வாக்கு கேட்டு நீ மக்களிடம் செல்லும்போது- கடந்த ஐந்தாண்டு கால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலும்- கடந்த மூன்றாண்டு காலத்தில் தமிழகத்தில் கழக ஆட்சியிலும் என்னென்ன சாதனைகளைச் செய்தோம் என்பதை பலமுறை நான் பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறேன். மத்திய, மாநில அரசுகள் மக்களுக்காக நிறைவேற்றியுள்ள சாதனைகளைச் சொல்லி தைரியத்தோடு நாம் வாக்கு கேட்கலாம்.

கடந்த 2004-ம் ஆண்டு தேர்தலில் நம்முடைய அணியிலே இருந்த ம.தி.மு.கவும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் இப்போது ஜெயலலிதாவின் அணியிலே இடம் பெற்றுள்ளன. அந்த இரண்டு கட்சிகளைப் பற்றி 2004-ம் ஆண்டு தேர்தலின்போது, வாஜ்பாய் முன்னிலையிலே ஜெயலலிதா கூறும்போது - தண்டமாக தமிழகத்தில் ம.தி.மு.க. என்ற பெயரில் கட்சியை நடத்திக் கொண்டிருக்கும் வாய்ச் சவடால் வைகோ என்றும்;- தடம் புரண்டு பேசும் தத்துவ பச்சோந்திகளாகிய கம்யூனிஸ்டுகள் என்றும் விமர்சித்தார். அவர் விமர்சித்ததை அந்தக் கட்சித் தலைவர்கள் மறந்துவிட்டாலும், நாம் மறக்கவில்லை.



"தமிழக அரசியலில் தனி நபர் விமர்சனத்தை ஆரம்பித்து வைத்தவரே கருணாநிதி தான்.
இந்திராகாந்தியை - "கிராப் வெட்டிய காஷ்மீர் பாப்பாத்தி"
"கோமாளி ராஜா" - பெருந்தலைவர் காமராஜர்
மூதறிஞர் ராஜாஜியை "குல்லுகபட்டர்' (சதிகாரர்) என்றார்; கர்மவீரர் காமராஜரை "அண்டங் காக்கா' என்று அர்ச்சித்தார்; கக்கன்ஜியை "கக்கன் என்ன கொக்கா' என்று நஞ்சைக் கக்கினார்... ஜாம்பவான் பக்தவச்சலனாரை குரங்கு போல் கார்ட்டூன் போட்டார்; வாழப்பாடியாரை "வழிப்போக்கன்' என்றார்; மூப்பனாரை "காவேரி, தென்பெண்ணைப் பாலாறு... மூப்பனார் மூளையில் கோளாறு' என்றார்; எம்.ஜி.ஆரை "மலையாளி, கூத்தாடி, கோமாளி' என்றார்; நாவலரை "நெடுமரம்' என்றார்; நாஞ்சிலாரை "மந்திரக் கோல் மைனர்' என்றார்; ஆர்.வி.,யை "கைபர் கணவாய் வழி வந்தவரே' என்றார்; ஹிந்து பத்திரிகையை "மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு' என்றார்...

துக்ளக் சோவை "சொட்டைத் தலையர், பபூன்' என்றார்; குமுதம் எஸ்.ஏ.பி.,யை "குள்ள நரி' என்றார்; ப.சிதம்பரத்தை "செட்டி நாட்டு சின்னப் பையன், சீமான் வீட்டு கன்றுக் குட்டி' மற்றும் "ஈ, எறும்பு, கொசு' என்றார்; பேராசிரியரை "வெறும் உதவி விரிவுரையாளர் தான்' என்றார்; அரசியல் சட்ட அறிஞர் இரா.செழியனை "ஈனப்பிறவி' என்றார்; வைகோவை "கள்ளத் தோணி, கலிங்கப்பட்டி களிமண்' என்றார்; பா.ஜ.,வை "தீண்டத்தகாத கட்சி' என்றார்...

வாஜ்பாய், அத்வானியை "விஷ ஜந்துக்கள்' என்றார்; பா.ஜ., தலைவர்களை "பண்டாரம், பரதேசி, காவி உடை, கமண்டலம், ஆக்டோபஸ்' என்றார்; பா.ஜ., பொதுச் செயலாளர் எச்.ராஜாவை "கூஜா' என்றார்; முதல்வர் ஜெ.,யை "பாப்பாத்தி, பத்ரகாளி, காந்தாரி' என்றார்; ஒட்டு மொத்த இந்துக்களை "திருடன்' என்று திட்டினார்; இரண்டு கோடி தமிழக வாக்காளர்களை "பருத்தி விதை, தவிடு, புண்ணாக்கு தின்னும் மாக்கள், வாழை மட்டைகள், மடச் சாம்பிராணிகள், புத்திகெட்ட ஜென்மங்கள், சோற்றால் அடித்த பிண்டங்கள்' என்றார்.

இப்படி நா கூசாமல் குழாயடிச் சண்டையைப் போல் தனி நபர் அர்ச்சனை செய்து, தமிழக அரசியலை தரங்கெட்டுப் போக வழி அமைத்த கருணாநிதி இன்று புத்தர் போல் "தனி நபர் விமர்சனம் கூடாது' என்று போதிப்பது வேடிக்கையாக உள்ளது.



1999-ம் ஆண்டு மத்தியில் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது- அந்த ஆட்சிக்கு ஜெயலலிதா எந்த அளவிற்கு சிரமங்களைக் கொடுத்தார் என்பதையும், ஆட்சி அமைப்பதற்கான பரிந்துரை கடிதத்தைக் கூட எவ்வளவு தாமதப்படுத்தினார் என்பதையும் நாட்டு மக்கள் நன்றாகவே அறிவார்கள். அதுபோலவே வாஜ்பாய் அரசு, தமிழக தி.மு.க. அரசைக் கலைக்க முன்வரவில்லை என்ற காரணத்தினால், மத்திய அரசுக்கு ஜெயலலிதா கொடுத்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றுக் கொண்டு ஆட்சியையே கலைத்த வரலாற்றையும் தமிழகம் நன்கறியும். கடந்த ஐந்தாண்டு கால ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு தி.மு.க. தோழமைக் கட்சியாக இருந்து துணைபுரிந்து வருவதையும் தமிழகம் நன்கறியும்.

ஜெயலலிதா இன்றைய பேட்டியில் மூன்றாவது அணி பற்றி என்னிடம் செய்தியாளர் கேட்டதற்கு, அதை மூன்றாவது கண் என்று நான் கூறியதற்குப் பதில் கூறியிருக்கிறார். மூன்றாவது கண் என்பது பொதுவாக மனிதர்களுக்கு இல்லாத ஒன்றாகும். என்றாலும்கூட, மூன்றாவது அணி பற்றி நான் சொன்னதும், சிவபெருமான் நெற்றியிலே உள்ள மூன்றாவது கண் பற்றி ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். சிவபெருமான் நெற்றிக் கண்ணைத் திறந்தால் தவறு செய்பவர்கள் சாம்பலாக்கப்படுவார்கள் என்கிறார் ஜெயலலிதா.

உண்மையிலேயே பெரியார், அண்ணா வழி வந்த பகுத்தறிவுவாதிகள்; "முக்கண்ணை'' நம்புவதில்லை - ஆனால் ஜெயலலிதா; முக்கண்ணை நம்பி; தன்னை அடையாளம் காட்டிக் கொள்கிறார்! பாவம் பகுத்தறிவு!


மஞ்சள் துண்டை வைத்து ; தன்னை அடையாளம் காட்டிக் கொள்கிறார்! பாவம் பகுத்தறிவு! என்றும் படிக்கலாம்.

'மஞ்சள் துண்டு மடாதிபதி' என்று திராவிடர் கழக மேடையில்தான் முன்னாள் அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் பட்டப் பெயர் கொடுத்தார். அதற்கு கருணாநிதி வரிசையாகச் சொன்ன காரணங்கள் நிறைய. எனக்குக் கழுத்து வலி, மெத்தை போன்ற துண்டு அணியச் சொன்னார்கள், கண்ணுக்கு இதமான நிறத்தில்தான் சால்வை அணிய வேண்டும், எனக்கு இந்த நிற சால்வைதான் அழகாக இருக்கும்... இப்படிப் பல காரணங்கள் சொல்லப்பட்டன. கடைசியாக புத்தர் நிறம் மஞ்சள்தான் என்று கருணாநிதி கண்டுபிடித்தார். குரு பலமிழந்து இருந்தால், மஞ்சள் கல் மோதிரமோ, சட்டையோ, துண்டோ அணிவது வழக்கம். அதன்படிதான் அவர் அணிய ஆரம்பித்தார். 96'க்குப் பிறகு அவருக்கு ஏற்றம் ஏற்பட்டது என்பதை தமிழ் நாடு பார்த்தது. ( நாம் பார்த்தோமா என்பது கேட்காதீர்கள் )


இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், வாக்காளப் பெருமக்களைச் சந்தித்து உண்மை நிலவரங்களை எடுத்துக் கூறி -மத்திய, மாநில அரசுகளின் சார்பில் என்னென்ன சாதனைகள் என்பதையெல்லாம் எடுத்து விளக்கிட வேண்டும். குறிப்பாக சேது சமுத்திரத் திட்டத்தினை வரவிடாமல் செய்தவர்கள் யார், அவர்கள் மட்டும் தடுத்திராவிட்டால் 100 ஆண்டுகளுக்கு மேலாக நாம் கனவு கண்டதும், அண்ணாவும், காமராஜரும் வலியுறுத்தியதுமான அத்திட்டம் நிறைவேறியிருக்குமே, அதற்கு இடைஞ்சல் செய்தவர்கள் யார் என்பதையெல்லாம் மக்களுக்கு விளக்கிட வேண்டும்.

இப்படிப் பல -பல- பயனுள்ள திட்டங்களை - பாமரரும் அறியும் வண்ணம் எடுத்துரைக்க வேண்டும் -தொகுத்துரைக்க வேண்டும். நானும் தொடர்ந்து எழுதுவேன்.

நானும் தொடர்ந்து பதிவு போடுவேன்

20 Comments:

Anonymous said...

Dear IV

Excellent write up

Try to publish in some daily papers

Keep it up

Thanks

Anonymous said...

குல்லுக பட்டர் என்பது இந்தியில் உள்ள ஒரு வசை மொழி: உல்லூ கா பட்டா என்பதை செம்மொழியில் மாற்றி விட்டர்கள்.
உல்லூ கா பட்டா என்றால் ஆந்தையின் மவனே என்று பொருள்.
நாய் மவனே என்பது போல் ஒரு வசவு.
ராஜாஜிக்காக கஷ்டப்பட்ட்டு கண்டுபிடித்தவர் தமிழினத்தலைவர்.

Anonymous said...

சரி, போகட்டும். ஒரு சவாலுக்காக ஒரு வாரம் மஞ்சள் துண்டு இல்லாமல் இருப்பாரா?

Anonymous said...

//"பகுத்தறிவாளர்கள் முக்கண்ணை நம்புவது இல்லை - கலைஞர்"//

******************


நாங்க கூட தான் ஒன்னிய மாதிரி பேந்தா கண்ணன நம்பறது இல்ல - தமிழக மக்கள்

Unknown said...

Dear Idlyvadai

Excellent write up.

keep up the good work.

Anbudan.

Rajagopalan,dubai

Baski said...

இட்லி வடை

காலை 13 தேதி மேட்டர் பார்த்த உடன் உங்கள் ஞாபகம் தான். நல்லா இருக்கு . "ஏன் இந்த ரத்தவெறி " யாராவது கேக்க போறாங்க

R.Gopi said...

"தல" திட்டரத பாத்தா?

யப்பா என்னா வில்லத்தனம்!!!!

Anonymous said...

`வசைமாமணி' என்று விருது ஏதாவது...!

நாரத முனி said...

13 என்னும் எண் ஒரு வேளை சனி(யன்)க்கு உகுந்த நம்பரோ என்னமோ??

Krish said...

இப்ப எல்லாம் எந்த கழக கண்மணி இந்த நீண்ட அறிக்கைகலேல்லாம் படிக்கிறான்.

Anonymous said...

அட போங்கப்பா தும்ப விட்டுட்டு வாலை பிடிச்ச மாதிரி!
1967ல் ஆரம்பித்த கொள்ளை இன்னும் முடியல !
தன் குடும்பத்துக்கும் ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்த்தாச்சு
இனிமே அவர் மஞ்ச துண்டு போட்டா என்ன பச்ச துண்டு போட்டா என்ன?
ஒரு ஓட்டிற்கு எவ்வளு தேறும்னு தமிழன் கையை சொறிய ஆரம்பிச்சுட்டான் !
இன்னொரு 5 வருஷம் கெடைச்சா,செலவெல்லாம் போக நிகரமா ஒரு 1000 ரூபா (அட கோடி தான் பின்ன லட்சமா?) காரண்டீ !
நம்ப கார்டூன் போடலாம்
ஜோக் எழுதலாம்
ஏழைங்க இன்னும் கஷ்டப்படட்டும்
வாழ்க இந்திய சனநாயகம்

பெசொவி said...

என்றும் இல்லாமல் இன்றுதான் முரசொலி படித்தேன். படித்ததும் உங்கள் நினைவுதான். எதிர்பார்த்தது போல் அருமையான விமரிசனம். வாழ்த்துக்கள்!

மணிஜி said...

மஞ்சள் துண்டு மரமண்டை "யாவரும் நலமாயிருக்க"(தன் குடும்பத்தில்) "13" ஐ நம்புகிறார்.மூன்று பெண்டாட்டி காரர் முக்கண்ணையா நம்புவார்......

மணிஜி said...

மஞ்சள் துண்டு மரமண்டை "யாவரும் நலமாயிருக்க"(தன் குடும்பத்தில்) "13" ஐ நம்புகிறார்.மூன்று பெண்டாட்டி காரர் முக்கண்ணையா நம்புவார்......

Anonymous said...

//செட்டி நாட்டு சின்னப் பையன், சீமான் வீட்டு கன்றுக் குட்டி'//

It doesn't seems be offensive,indecent or foul language. Rather it looks like decent ,elegant.

கொடும்பாவி-Kodumpavi said...

அப்புறம் ஏன் இந்த ‘நாக்க முக்க' பாடல். அதன் அர்த்தம் என்ன? ‘நான்முகனே முக்கண்ணணே' அதை சுருக்கி ‘நாக்க முக்க' என்று செம்மொழியில் கத்தி இருக்கிறார்கள்..
மதம் இல்லைன்னு சொல்றவங்க ஏன் மதத்தை பற்றி மதம் பிடிச்ச மாதிரி பேசணும்..
மஞ்சள் துண்டு அவர் தோளுக்கு.. தலையில் துண்டு தமிழனுக்கு.. இதக்கூட தெரியாம... எவ்வளவு வெளிப்படையா சொல்றாங்க புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்களே அப்பு..

Anonymous said...

செம சவுக்கடி IV. ஆனால் பகுத்தறிவு பேசும் கழக கண்மணிகளுக்கு பொது அறிவு குறைவாக இருப்பதால் உங்கள் எழுத்தில் இருக்கும் லாஜிக் கட்டாயமாக புரியாமலே போகும்.

Unknown said...

இந்த பதிவை படித்ததில் ரொம்ப பிடித்தது...

தமிழக அரசியலில் தனி நபர் விமர்சனத்தை ஆரம்பித்து வைத்தவரே கருணாநிதி தான்...
--

நானும் தொடர்ந்து எழுதுவேன்.
நானும் தொடர்ந்து பதிவு போடுவேன்
--

நாங்க கூட தான் ஒன்னிய மாதிரி பேந்தா கண்ணன நம்பறது இல்ல - தமிழக மக்கள்
--

இப்ப எல்லாம் எந்த கழக கண்மணி இந்த நீண்ட அறிக்கைகலேல்லாம் படிக்கிறான்.
--

குத்தறிவு பேசும் கழக கண்மணிகளுக்கு பொது அறிவு குறைவாக இருப்பதால் உங்கள் எழுத்தில் இருக்கும் லாஜிக் கட்டாயமாக புரியாமலே போகும்.

1967ல் ஆரம்பித்த கொள்ளை இன்னும் முடியல !

Anonymous said...

For all of you posted here.. wait for "Kari Soru Virunthu" from DMK and vote for them :))

வாழவந்தான் said...

பகுத்தறிவு கண்மணிகள் கலைஞர் டிவியை சுபயோக சுபதினத்தில்(இது தர்செயலானதுனு பிட்ட போட்டுருவாங்க) பக்தி பாடல்களோட ஆரம்பிச்சாங்களாம்?

பிகு: இட்லிவடை, உங்க மஞ்சா பேக்ரவுண்டுக்கும் குரு பலம் தான் காரணமா?