பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, March 31, 2009

நான் கடவுள் - இட்லிவடை விமர்சனம்

எங்கள் வீட்டு கேபிள் டிவியில் நேற்றுதான் 'நான் கடவுள்' படம் போட்டார்கள். அதன் விமர்சனம் கீழே...

ஹீரோவாக வரும் கலைஞர் நடிக்கவே இல்லை. வாழ்ந்து காட்டியிருக்கிறார். கடவுள் கிடையாது என்று அடிக்கடி பிதற்றும் ஹீரோ, தானே கடவுள் என்றும் முரணாக நினைத்துக்கொள்கிறார். பிணங்களோடு வாழும் அகோரி போல இவர் பணங்களோடு வாழ்கிறார். சொந்த பந்தம் எல்லாவற்றையும் அறுத்துவிட நினைக்கும் இவர், எல்லா சொந்த பந்தந்துக்கும் செட்டில்மெண்ட் செய்துவிடுகிறார். ஆனாலும் எல்லா நேரத்திலும் கண்கள் பனிப்பதில்லை, இதயம் துடிப்பதில்லை. நானே கடவுள் என்பதை நிரூபிக்க நானே கேள்வி நானே பதில் என வாழ்கிறார்.அதை நிரூபிக்கும் விதமாக, 'நானே கேள்வி, நானே பதில்' என்று அடிக்கடி எழுதுவதாகக் காண்பிப்பது இயக்குநரின் புத்திசாலித்தனம்.

இவருக்கு ஜோடி குருட்டுப்பிச்சைக்காரி தங்கம். இவருக்கு கண் இருக்கிறது, ஆனாலும் இத்தாலி தவிர வேறெந்த திசையையும் பார்க்காததால் ஒரே திக்கில் பார்க்கும் குருட்டுப் பெண்போல் தெரிகிறார். இவரின் அறிமுகப் பாடல்...

“வெறும் பாத்திரமோ அது என்னிடத்தில்
அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்”

என்று மு.கவைப் பார்த்து பாடும்போது, தியேட்டரே பரிதாபப்படுகிறது. எப்போதும் அல்பத்துக்குப் பவிஷு வந்ததுபோல் கூலிங்கிளாஸோடு அலையும் பாலு மேம்பாலத்தில் ஒரு முறை நின்றுகொண்டிருக்கும் போது, கீழே தங்கம், ”அம்மாவென்று அழைக்காத உயிர் இல்லையே” என்ற பாடலைப் பாடி பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார். பாலு கீழே யார் என்று எட்டிப் பார்க்க, அவர் கூலிங்கிளாஸ் கீழே விழுகிறது. கீழே கிடந்த அந்த கூலிங்கிளாஸை தங்கம் எடுத்துப் போட்டுக்கொள்ள, அந்த நிமிடத்திலிருந்து அவள் தங்கபாலு ஆகிறார். ஏற்கனவே ஒரே திக்கில் பார்வை இருக்க, இப்போது கூலிங்கிளாஸும் சேர்ந்துகொண்டதில் அவளை குருட்டுப் பிச்சைகாரி என்று எல்லோரும் தீர்மானமே செய்துவிடுகிறார்கள்.

தங்கபாலுவிற்கு வந்த குருட்டு அதிர்ஷ்டத்தில், கொஞ்ச நாளிலேயே கோஷ்டி சேருகிறது, எல்லோரும் சேர்ந்து சட்டசபை முன்பும் கோபாலபுர சிக்னல் முன்பும், “பிச்சை பாத்திரம் ஏந்திவந்தேன் ஐயனே என் ஐயனே” என்று தங்கள் வழக்கமான குடும்பப் பாட்டைப் பாடுகிறார்கள். அந்த இடங்களில் இருக்கும் ஐயன் தன்னிடம்தான் பிச்சை கேட்கிறார்கள் என்று எண்ணி கோஷ்டிக்குத் தலைவராக விளங்கும் தலைவியிடம் முறையிடுகிறார். தலைவியின் பெயர் 'எட்விகே அன்டோனியா அல்பினா மைனோ'. இதைத் தமிழர்கள் எப்படி கூப்பிடுவார்கள் என்று இயக்குநர் கவலைப்பட்டிருக்கலாம். அதனால் தலைவி ’சோனி' டிவியில் 'காந்தி' படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது, ஐயன் தன் வீட்டுக் குழந்தைகளின் தொலைக்காட்சி கேபிள் அறுந்துவிடுமோ, குழந்தைகள் கார்ட்டூன் பார்ப்பது மகிழ்ச்சியாக இருப்பது தடைபடுமே என்று பயத்தில் தலைவியிடம் பறந்துபோய், பம்மி, தன் தமிழ் சித்து விளையாட்டில் "சோனி டிவியில் காந்தி?" என்று கேட்டு மெதுவாகப் பேச்சை ஆரம்பிக்கிறார். பிறகு அதையே தலைவியின் பெயராக்கிவிட்டது இயக்குநரின் சாமர்த்தியம்.

தங்கபாலுவின் பிச்சைப் பாட்டு நாளுக்கு நாள் வளர்ந்து மைக் செட்டெல்லாம் வைத்து அதிரத் தொடங்க, தொந்தரவு தாங்காமல் ஐயன் சோனியா காந்தியிடம் முறையிடுகிறார். உடனே சோனியா தன் அசிஸ்டண்ட் மண் மோகன் சிங்கை(களிமண் மாதிரி தலைவி பிடித்த பிடிக்கெல்லாம் இழுபடுவதாலும், தலைவி எதைச் செய்யச் சொன்னாலும், மறுபேச்சு இல்லாமல் தலையில் துண்டைக் வரிந்துகட்டிக்கொண்டு காரியத்தைச் செய்யக் கிளம்பிவிடுவதாலும் இந்தப் பெயராம்) அழைத்து தங்கபாலு மற்றும் அவர் கோஷ்டியை சும்மா இருக்கச் சொல்லுகிறார். இந்தக் காட்சி மட்டுமே அடிக்கடி வருவதால் நமக்கு போர் அடிக்கிறது.

இந்த குருட்டுப் பிச்சைக்காரியைக் கூட வைத்துக்கொள்ள, காப்பாற்ற பல கேரக்டர்கள் படம் நெடுக வருகின்றன. அதில் முக்கியமான கதாபாத்திரம் ஆறு உருப்படிகளை வைத்துக் காலம் தள்ளும் வானரர் (மரத்துக்கு மரம் தாவுவதால் மட்டும் இந்தப் பெயர் இல்லை. தன் குட்டியையும் எப்போதும் தன் வயிற்றிலேயே சுமந்து செல்வதால் இந்தப் பெயர் இல்லை; ராமனுக்கு தாசாதி தாசனாய் இருந்ததால்தான் இந்தப் பெயர் என்கிறார் இயக்குநர்.). இவருக்கு ஒரு உருப்படி அதிகம் கிடைக்கும் என்பதால் எதிரி கோஷ்டிக்குச் செல்லவேண்டிய நிலை வந்தாலும், தங்கம் கூட இல்லாததால் அவர் மகனுக்கே பிரச்சினை வரக்கூடிய நிலையில் உணர்ச்சிகரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கடைசியில் “உங்கள் கூட்டதையே ஒழிப்பேன்,” என்று பொங்கி நின்ற வானர, ஐயன் உட்கார ஓரமாய் ஒரு சின்ன முக்காலி தருகிறேன் என்று சொன்னதும் தொம்மக்கூத்தாடிக் குரங்காய் மனம் மாறி அடங்குவது லாஜிக்கில் ஓட்டை. நகைச்சுவைக் காட்சிகளில் போலி டாக்டராக இவர் செய்யும் காமெடி சூப்பர். விவேக், வடிவேலு போன்றவர்களுக்கு இவர் இனி கடுமையான போட்டியாக இருப்பார்.

படத்துடன் ஒட்டாத இன்னொரு நகைச்சுவை காட்சியில் L போர்டு மாட்டிக் கொண்டு வரும் L.கணேசனும் கெஞ்சி பிழைப்பு நடத்தும் 'கெஞ்சி ராமச்சந்திரன்' என்பவரும் ஐயன் வீட்டு முன்பு நிற்க. ஐயன் சிம்பு பாடும் “வேர் இஸ் யூவர் பார்ட்டி" என்று பாட அடுத்த லைனான "இனி உங்க ஊட்லே தான் பார்ட்டி” என்று ஐயனை பார்த்து இருவரும் பாடும் பாடல் அருமை.

பழைய படங்களைப் போல் வளவளவென்று சொன்னதையே திரும்பத் திரும்ப வள வள என்று பேசும் ஒருவர் வில்லனாக வருகிறார். இலங்கைத் தமிழர்களை வைத்து நிறைய வியாபாரம் செய்கிறார். இலங்கை தமிழர்களுக்காக இவர் இரண்டு நாள் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் காட்சிகளில் எல்லாம் மனதை உருக்குவதாக இவரது நடிப்பு இருக்கிறது. அங்கே இலங்கை தமிழர்கள் குளிரால் தவிக்கும் போது, இவர் இங்கே எரிக்க எதுவும் கிடைக்காததால் சோனியா காந்தி படத்தையும் ராஜிவ் காந்தி படத்தையும் எரித்து அதில் குளிர்காய்கிறார். அதைப் பார்த்த தங்கபாலு அழுகிறார்.

இவர் திரையில் தோன்றினாலே இவர் பேச்சில் போரடித்து மக்கள் தம் அடிக்க கேண்டீன் பக்கம் ஓடுகிறார்கள். அதனாலேயே இவர் பெயர் திருமாவளவன் என்று ஆகிவிட்டது. இவர் ஐயனுடன் நட்பாக இருந்தாலும், ஐயன் நட்பாக இருக்கும் சோனியா படத்தை அடிக்கடி எரிக்கிறார். இதனால் கோபமான தங்கம் குளிர்கண்ணாடியைக் கழற்றிவிட்டு கோபமாக ஐயனைப் பார்த்து, "நீங்க இவர்களுக்கு சர்ப்போர்டா?" என்று நேரடியாகவே கேட்க ஐயன், "நான் இவர்களுக்கு ஆதரவாகவும் இல்லை, எதிராகவும் இல்லை” என்று பதில் சொல்லும் வார்த்தைச் சித்தில் வசனகர்த்தா தெரிகிறார். அதே போல் சோனியா காந்தியையும் அவர் கூட்டத்தையும் பார்த்து திருமாவளவன், “அவர் மரணத்துக்குப் பிறகு சாப்பிடவே இல்லையா? தூங்கவே இல்லையா?” என்று கிண்டல் பல்டி அடிப்பது ஒரு சேறு பதம்.

குருட்டுப் பிச்சைக்காரியுடன் காதலா, இல்லையா, கடவுள் மேல் கோபமா இல்லையா என்று எதுவும் புரியாத குழப்பமான கதாபாத்திரத்தில் கேப்டன் நடித்திருக்கிறார் என்றாலும் அவர் வரும் காட்சிகளில் எல்லாம் சிரிப்பு மழைதான். கடவுளுடனும், மக்களுடனும் தான் கூட்டணி என்று இவர் பேசுவது நல்ல தமாஷ்.

படம் ஆரம்பிக்கும் முன்பாகவே நன்றி: சென்ஸார் என்று போடுகிறார்கள். இத்தனைக்கும் மற்ற படங்களில் சாதாரண காட்சிகளையும் வெட்டி வீசிவிடும் சென்ஸார் அதிகாரி, எத்தனையோ வன்முறைக்காட்சிகள் அத்துமீறல் காட்சிகள் எல்லாம் இதில் இருந்தாலும் போகட்டும் போடா என்று யூ சர்ட்டிபிகேட் கொடுத்த நவீன் சாவ்லா அதற்கு உரித்தானவர்தான்.

நீண்ட நாளைக்கு பிறகு படத்தின் ஸ்டண்ட்ஸ் எல்லாம் அழகாக செய்துள்ளார் கிரி.


தேர்தலுக்கு அப்புறம் அடிக்கற பல்டி தந்திரம்.. தேர்தலுக்கு முன்னால அடிக்கற பல்டி ராஜதந்திரம்.


33 Comments:

Rajaraman said...

துக்ளக் வார இதழிலிருந்து எப்போது இட்லி வடை வடிவத்தில் தினசரி வெளியாக ஆரம்பித்தது. அடிச்சு பின்னரிங்க.. IV

மஞ்சள் ஜட்டி said...

ஓம் திராவிட நாமம் \|/
ஓம் திராவிட நாமம்
நாக்க மு.க பஜே ஹம்....பஜே ஹம்...
அஹம் பிரம்மாஸ்மி ஓம்..புறம் பிரம்மாஸ்மி ஓம்..
நாக்க மு.க பஜே ஹம்...
----------------------
எச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் மக்களே ! என் மக்களே !
----------------------


இசை: பழய ராசா ..
பாடல்: ஜெகத் "பிச்சை" ரட்சகர்ர்

Unknown said...

//நீண்ட நாளைக்கு பிடகு படத்தின் ஸ்டண்ட்ஸ் எல்லாம் அழகாக செய்துள்ளார் கிரி.//

அழகிரியா..,
அப்ப ஸ்டாலின்,கனிமொழியெல்லாம்
இல்லயா..,

ஆற்காட்டார் இல்லாம கலைஞர் படமா
(நான் செய்திதாள் பத்தி சொல்லலீங்கோ)

Anonymous said...

Auto ready. Address than theriyala.

Anonymous said...

கடைசியில் “உங்கள் கூட்டதையே ஒழிப்பேன்,” என்று பொங்கி நின்ற வானர, ஐயன் உட்கார ஓரமாய் ஒரு சின்ன முக்காலி தருகிறேன் என்று சொன்னதும் தொம்மக்கூத்தாடிக் குரங்காய் மனம் மாறி அடங்குவது லாஜிக்கில் ஓட்டை.

இட்லி வடை! இது புலி வால் பிடிக்கும் "வள வள" தலைவருக்குதான் சரியா வரும்! கொஞ்சம் "செக்" பண்ணுங்கோ! :D

Anonymous said...

btw, இட்லி வடை, அப்பிடியே இந்த படத்த ஆஸ்கர்-கு அனுப்பிசுடுங்கோ....மொத்தம்மா எல்லா "awards"-அயும் கொத்தா அள்ளிண்டு வந்துடும்!!!

Ashok said...

He....intha padathoda thiruttu VCD kidaikkuma.....

intha thadavai enna kaara idly, Kaara vadai..ya?!

யோசிப்பவர் said...

இ.வ.வின் இன்னொரு முகம் துக்ளக் சத்யா!!!

erbalaji said...

ஒருத்தரை விடாம தோலுரிச்சிருக்கீங்க, எங்கே அந்த அழுகை மன்னன் எங்கள் கருப்பு துண்டு போர்த்திய புலி?

Anonymous said...

ga

R.Gopi said...

இட்லிவடை

"நான் கடவுள்" விமர்சனம் நச்.

அதைவிட நான் மிகவும் ரசித்தது, அந்த இரண்டு போட்டோக்கள். பலே பலே

பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்குடா அம்பி ........

"சாதாரணமாவே பின்றது இட்லிவடை..
இப்போ, மிளகாய்பொடி வேற கூட்டணியா, தூள் பரத்துகிறது" (பன்ச் லைனும், விமர்சனமும்)

ட்ரிபிள் வாழ்த்துக்கள்.

Unknown said...

Dear IV

I thoroughly enjoyed reading this article.

Hats off to you and your sense of humour.

S.Rajagopalan,dubai

Anonymous said...

no critisis for the below comedy characters..

raja maharishi(?) veramani,
King maker Karthick,
4 vote vijay T.Rajender,
Varungala US president Su.Samy,

R.Gopi said...

இதுதான் லேட்டஸ்ட் "தேர்தல் கிச்சு கிச்சு"

என்னை கூட்டணிக்குள் இழுக்க பேரம் பேசினார்கள். ஆனால் சீட் தர மாட்டோம். ஆதரவு தாருங்கள் என்றார்கள். ஒரு சீட் கூட தராவிட்டால் எப்படி அது கூட்டணியாகும் என்று கோபமாக கேட்டுள்ளார் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக்.

வலைஞன said...

இந்த கோமாளித்தனத்தைதான் சோ 40 ஆண்டுகளாக செய்து வருகிறாரே! நீர் வேறு எதற்கு?
நான் 3 நாட்களுக்கு முன்னம் ஒரு வினா (உங்களுக்கு)எழுப்பியிருந்தேன்.அதை நீங்கள் acknowledge செய்யக்கூட இல்லை.
மு.க வோ ஜெயா வோ நாம் கேலி செய்வதை பற்றி சிறிதும் கவலை பட மாட்டார்கள்.நம் நாடு வாக்காளர்களில் 95 % இன்டர்நெட் என்றால் என்ன வென்று தெரியாதவர்கள். உண்மையில் மாற்றம் விரும்புவர்கள் எளிய மக்களை அணுகி அவர்களுக்கு போதிக்க வேண்டும்.
மேலும் தமிழ்நாடு என்றாலே மு.க (அ) ஜெயா என்ற நிலை மாறினால்தான் நமக்கு விமோசனம்.
Kindly take it in the right spirit

மணிஜி said...

இட்லி வடை.. வடைகறிக்கு மாறினதுக்கு....நன்றி..கீழே ஒரு ஜீவன் சில்லறையை எடை போட்டதே..அரக்கோணம் ரயில் நிலையத்தில்....

கிரி said...

விமர்சனம்...... ;-)

// R.Gopi said...
இதுதான் லேட்டஸ்ட் "தேர்தல் கிச்சு கிச்சு"

என்னை கூட்டணிக்குள் இழுக்க பேரம் பேசினார்கள். ஆனால் சீட் தர மாட்டோம். ஆதரவு தாருங்கள் என்றார்கள். ஒரு சீட் கூட தராவிட்டால் எப்படி அது கூட்டணியாகும் என்று கோபமாக கேட்டுள்ளார் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்தி//

பெயரிலேயே ரிசல்ட் வைத்து இருக்கும் கட்சி இவரோடது தான்..

அட! அது தாங்க "நாம" கட்சி :-))))))))

ரிஷபன்Meena said...

//யோசிப்பவர் said...
இ.வ.வின் இன்னொரு முகம் துக்ளக் சத்யா!!!//

ஒரு சில மாதங்களுக்கு முன் நான் கூட இது மாதிரி பின்னூட்டம் இட்டிருந்தேன்.கண்டிப்பாக துக்ளக் சத்யாவின் கைவண்ணமாகத் தான் இருக்கும் என்றே நினைக்கிறேன். நீங்கள் சத்யா -வாக இல்லாத பட்சத்தில் இதைப் பாராட்டாக எடுத்துக் கொள்ளலாம்.

ramachandranusha(உஷா) said...

super :-)))))))))))))

Anonymous said...

பின்னி பெடலெடுக்கிறீங்க ...துக்லக் இன் வாரிசு என்று அறிவித்துவிடலாம் ...

Anonymous said...

super matter :)

Thomas said...

தல பிரிச்சிமேஞ்சிடீங்க

என்னமா எழுதுரருபா

Anonymous said...

படித்துப் படித்து வயிறு எல்லாம் புண்ணாகிவிட்டது.
பாராட்டுக்கள்.
சோகநாதன்

நித்யன் said...

மகா கலக்கலான காமெடிக் கதம்பம்.

விழுந்து விழுந்து சிரித்தேன்.

அன்பு நித்யன்

Litmuszine said...

A high quality political satire.. Excellent :-) :-)

cho visiri said...

//யோசிப்பவர் said...
இ.வ.வின் இன்னொரு முகம் துக்ளக் சத்யா!!!//

//ஒரு சில மாதங்களுக்கு முன் நான் கூட இது மாதிரி பின்னூட்டம் இட்டிருந்தேன்.கண்டிப்பாக துக்ளக் சத்யாவின் கைவண்ணமாகத் தான் இருக்கும் என்றே நினைக்கிறேன். நீங்கள் சத்யா -வாக இல்லாத பட்சத்தில் இதைப் பாராட்டாக எடுத்துக் கொள்ளலாம்.//

YEn?Sathyaavaga iruntal YEn paaraattu kidadatho? Tuglakkil vandaal mattume paarrataa? Niyaayamillai, sahodarare!
Adu sari....
JauntiRhodes like catch pidithavarukkuththaan paaarattu. JauntiRhodesaaga irunthal, adhu sarvasaadaarannappa -engireergala?

mazhai said...

The Next Oscar Goes To.....Idly Vadai

Anonymous said...

Idly vadai is in hospital today because of this post

Anonymous said...

கலக்கிடீங்க இட்லிவடை. ரொம்ப நல்லா இருந்தது. பாராட்டுக்கள்.

கலைக்கோவன் said...

//Anonymous said...

Idly vadai is in hospital today because of this post//

ஹாஸ்பிட்டல்ல..,

treatment-க்கு
இட்லிவடை கொடுக்கலாம்..,
ஆனா
இட்லிவடைக்கே treatment கொடுக்கலாமா

thillai said...

where is idly vadai today no new posts,wait panni wait panni kangal poothiduchu,chikiram vaanga:(

Anonymous said...

seeing naan kadavul in cable tv is a crime against the art of cinema and is an insult to a writer like me. well jeyamohan may write like this if he reads your post.

Unknown said...

நான் கடவுள் - கலைஞர் கருணாநிதி ........


" இஸ்தலக்கடி .. லாலாசுந்தரி....... கோலாகொப்புற..... கொய்யா......"

ஜெய் ஜக்காம்மா ....!!! எங்க கூட்டணிய பத்தி குமுயிடுத்து கும்மியடுச்ச்ச இந்த இட்லி -வடைய ஊசிபோக வெச்சுபோடு..........!!!!!