தமிழ்ப் புத்தாண்டை மீண்டும் சித்திரை முதல் தேதி மாற்ற முதல்வர் கருணாநிதி உத்தரவு
தைத் திங்கள் முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் என்று கடந்த வருடம் அறிவித்த தமிழக அரசு இப்போது மீண்டும் சித்திரை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடலாம் என்று அறிவித்துள்ளது. இது குறித்து முதல்வர் மு.கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில்....'1921 ஆம் ஆண்டு தமிழ்நாடு சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் தமிழர்களுக்கென ஒரு தனித்துவமான “ஆண்டுக் கணக்கு” இருக்கவேண்டும் என எண்ணி, தனித் தமிழ் இயக்கத்தின் திரு. மறைமலை அடிகளார் தலைமையில் தமிழறிவியலாளர்கள், புலவர்கள், சான்றோர்கள் 500 பேர் ஒன்றுகூடி ஆய்வு செய்தனர். அதனடிப்படையில் திருவள்ளுவர் ஆண்டே தமிழர் ஆண்டு எனவும், தை முதலாம் நாளே தமிழரின் புத்தாண்டாக அமைதல் வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது. இம்முடிவை 1971 ஆம் ஆண்டு தமிழுக்கும் தமிழனுக்கும் ஏற்றம் தரும் தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு கணிப்பீட்டு முறைமையை அரசு மற்றும் ஊடகங்களும் பயன்படுத்தத் தொடங்கின. இதனை அரசு 2008 இல் முறையாக அறிவித்தது.
இதன்படி கடந்த தைத் திங்கள் ஒன்றாம் நாள் தமிழ்ப் புத்தாண்டாக உலகமெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான தமிழர்களால் அகம் மகிழ சிறப்புற கொண்டாடப்பட்டது. ஆனாலும் பழைமையை மாற்ற விரும்பாத பலரும், 'தொடர்ந்து சித்திரை முதல் திங்களையே தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட வேண்டும்' என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார்கள்.
பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளையும் கோரிக்கையையும் பரிவுடன் பரிசீலித்த தமிழக அரசு சித்திரை முதல் தேதியையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவது என்று முடிவெடுத்துள்ளது. இது குறித்த முறைப்படியான அரசு அறிவிப்பு பொதுத் தேர்தல் முடிவடைந்தவுடன் வெளியிடப்படும். ஆனால் வருகிற சித்திரைத் திருநாளிலேயே கோயில்களில் வழிபாடுகள் முறைப்படி நடப்பதில் தடை இல்லை என்கிறது அரசு செய்திக் குறிப்பு.
(நன்றி: செய்தி இங்கே)
தேர்தல் மே மாதத்தில் வந்ததால் இந்த மாற்றம் என்று நினைக்கிறேன், மக்களுக்கு ஏதாவது பரிசு கொடுக்க வசதியாக இருக்கும். நடக்கட்டும்
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, March 30, 2009
மீண்டும் சித்திரை மாதம் புத்தாண்டு - கலைஞர்
Posted by IdlyVadai at 3/30/2009 10:31:00 AM
Labels: செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
42 Comments:
There is a basic logic in any cinema. Heard it somewhere.
You take a cat and put it in a tree.Later help it to come back to ground.
I m not saying it clearly, but that's what nakka muka has done.
he creates the problems from thin air and tries to resolve it.
மெஜரிட்டி மக்களுக்கு..,
மைனாரிட்டி ஆட்சியாளரின்
(உபயம்- ஜெயா டி.வி)
தேர்தல் பரிசோ..!!
நடப்பது பகுத்தறிவு ஆட்சியா அல்லது துக்ளக் ஆட்சியா
Then will Karunanidhi give back all awards given to him by Kakka kootam & co. for making Thai 1 as Tamil New Year.....
அட்ரா அட்ரா..நாக்க மு.க..நாக்க மு.க......
முட்டாள் மக்கள்
வெவரமான தலைவர்
வாழ்க தான்தோன்றிதனம்
சும்மா இருந்த யாரோ எதையோ புடிச்சு எதுவோ பண்ணாங்களாம்!
அப்படியே சிதம்பரம் கோயிலையும் திரும்ப தீட்சதர்கள் கிட்ட ஒப்படைக்க சொல்லிடுங்க. சரியாகிடும்.
கோயில் விசிட் அம்மணி அடிக்கும் போதே நெனச்சேன். ஒருவேளை, தமிழ்ப்புத்தாண்டை மாத்தி வெச்சதினால ஜாதகத்திலே தோஷம் இருக்குதுன்னு ஜோசியர் யாராவது சொன்னாங்களோ என்னவோ?
பேசி கெட்டவர்களுக்கு
உதாரணம் கலைஞர்..,
1. ஏதோ ஒரு திருமண விழாவில்
மணமகன் பெயர் சதிஷ்பாபுவாம்..,
தமிழில் பெயர் வேண்டுமென்றார்,
(முரண்பாடு- இவரது மகன் பெயர்
ஸ்டாலின்,
பேரன்களின் டி.வி - சன் டி.வி..,
மக்கள் டி.வி பார்த்து கொஞ்சம்
திருந்த ஆரம்பித்திருக்கிறார்கள்)
2. ஆதிசங்கர் என்ற கழக உடன் பிறப்பின் நெற்றியில் குங்குமம் பார்த்து “நெற்றியில் இரத்தம் வழிகிறதா” என்றார்.
(முரண்பாடு- இவரது மகன்
ஸ்டாலின் நெற்றியில் இரத்தம்
வழிந்தது இட்லிவடையில் கூட
தெரிந்தது)
இப்படி தான் ஒவ்வொரு முறையும்
இவர் போடும் திட்டம் நாலு பேருக்கு
நல்லதாவும் நாற்பது பேருக்கு கெட்டதாவும் இருக்கும்.
சகிக்க முடியாத சொல்லாடல்
கொண்ட அறிக்கைகள்,
பேட்டிகளில் நகைச்சுவையாக
பதில் சொல்வதாய் நினைத்து
இவர் அடிக்கும் நக்கல்கள்.
இன்று ஜெ-வும், விஜயகாந்தும்
பின்பற்றும் நாகரிகமற்ற
அரசியலுக்கு பிள்ளையார் சுழி
போட்டவரே இவர் தானே,
ஜெ ஆட்சியில் இருக்கும் போது
சட்டமன்றத்தை இவர் skip பண்ணினார்,
பிறகு இவர் இருக்கும் போது
ஜெ skip பண்ணினார்.
இப்போது ஒரு சீட் ஜெயிச்ச
விஜயகாந்த் skip பண்றார்.
(விஜயகாந்த் ஜெ பாதி கலைஞர் பாதி
கலந்து செய்த கலவை தான்)
இவனுங்களுக்கு ஓட்டு போட்டு
நமக்கு ..,
இதுவும் வேணும்
இன்னமும் வேணும்
இரட்டை நாக்கு கொண்ட (நாக்க மு.க. நாக்க மு.க.)
பல அர்த்தம் கொண்ட பேச்சு
ஏசுவதில் வல்லவர்
திட்டுவதில் டாக்டர் பட்டம் வாங்கியவர்
கேஸ் போடுவேன் என்று யாராவது சொன்னால், இது வெறும் டமாசுதான் என்று சொல்லுவார்.
நடக்கும் அவரின் ஆட்சியில் ஏதாவது குற்றம் கண்டுபிடித்து கேட்டால், அதற்கு பதில் கூறாமல், கடந்த ஆட்சிகளில் நடந்தவற்றை பட்டியல் இடுவார்
கூட்டணியில் இருக்கும் வரை நல்லவர்கள் என்றும், போய் விட்டால், கெட்டவர்கள் என்றும் ஏசுவார்.
வருட பிறப்பை மாற்றுவார், பின் ஏதாவது காரணம் சொல்லி பழைய நிலைக்கே எடுத்து வருவார்
மொத்தத்தில், இவர் நல்லவர் ஆவாரா (ஒரு நாளாவது) என்று நாம் எதிர்பார்த்தால், "நோ சான்ஸ்" என்பார். ஏனெனில், இவர் நல்லவர் ஆவதற்கு எந்த ஒரு முயற்சியும் எப்போதும் எடுப்பதில்லை.
This Andhar Bulti by Karunanidhi is due to the fact that REAL Tamil New Year is approaching in another two weeks or so. At that time, when neither the Govt. of TN nor the Hindu Temples atrociously administered by that same Govt. will NOT celebrate the New Year and ALL REAL Tamilians will be SEETHING WITH ANGER & all of them will REMEMBER THIS ACT of this "anti-Hindu" Govt. while going to vote on 13th May.
That is what has made this guy to do this Andhar Bulti - Yes. He is afraid about People Remembering (while voting) how this minority DMK Govt. acted un-sensitively by unilaterally changing the new year.
Now, let us all enjoy the CHAPPAI KATTU POSTS from the so-called Tamil(?) bloggers who jumped up & down when MooKa changed the new year to Pongal day.
Vottu Pichikkaara Koothaadi is ruling TN now & if people do not vote him & Sonia Cong. out of Govt. this time, very soon BOTH THESE FAMILIES WILL BECOME SWISS citizens(!) along with their ill-gotten wealth.
அம்மா ஈழத் தமிழருக்கு ஆதரவா பேச ஆரம்பிததுக்கும் காரணம தேர்தல் தான்.
மீண்டும் தமிழ் புத்தாண்டு சித்திரை மாதமே கொண்டாடலாம் என்று முக அறிவித்ததற்கும் காரணம தேர்தல் தான். எதோ நல்லது நடந்தா சரி.
இந்த கூத்துக்கு ஒரு காக்கா கூட்டம் (இணையத்தில் உள்ள சில திராவிட அல்லக்கைகள் உள்பட) தா தை என்று தலை கால் புரியாமல் குதி குதியென்று குதித்ததே, அதுகள் இப்போது எங்கே கொண்டு மூஞ்சியை வைச்சிக்கும்?
கடவுள் இந்த ஆளுக்கு எத்தனை நாக்கு கொடுத்து இருக்கார்????
person with "full of contradictions".......தேவை என்றால் கட்டிப் பிடிப்பார்...வேண்டாம் என்றால் செருப்பால் அடிப்பார்....
இப்போது இவருக்கு "பார்பனர்" மற்றும் "மானம்-சூடு-சொரணை" உள்ள தமிழர்களின் vote தேவைப்படுகிறது!!!!!
தன்மானத் "தலைவரே"! இந்த வயசுல இதெல்லாம் ஒரு பொழப்பா? தூ.தூ. கேவலம்...
//மெஜரிட்டி மக்களுக்கு..,
மைனாரிட்டி ஆட்சியாளரின்//
suma nachunu oru comment.
-bsrikanth19@gmail.com
சும்மா கிடந்த அம்பட்டன், பூனைக்கு சிரைச்சி விட்டானாம்.. யாரு அம்பட்டன், யாரு பூனை??
கடலூர் FLASH
தே.மு.தி.க சார்பில்
கடலூரில் M.C.தாமோதரன்
வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.,
"மாற்றி மாற்றிப் பேசுவான்; சொன்னதையே இல்லை என்பான். தேவையில்லாத பழைய ஞாபகங்களைப் பொருத்தமில்லாத இடங்களில் உளறி சூழ்நிலையை அசிங்கப் படுத்துவான். "எங்கும்" போய் நிற்பான். எனவே, எவர் பேச்சையும் நம்பலாம்; குடிகாரன் பேச்சினை நம்பி ஒன்றும் செய்யக் கூடாது. அவனுடன் சாவகாசமே வைத்துக் கொள்ளக் கூடாது" என்பது குடும்பங்களில் பெரியவர்கள் சொல்லும் பொது அறிவுரை.
இது இப்போது நாக்க மு.க வுக்கு சரியாக பொருந்துமோ??
Is this news true? I dont see it anywhere in the net or is Idlyvadai playing april fool quite early...
Is this news really true?
I do not see this any any news site/newspaper?
Is Idlivadai making fool of its readers ahead of April 1st?
Btw,
IV has learnt the art of giving.
Mu.Ka like statements.
Unmai, SathyaRam உங்கள் கருத்துக்கு நன்றி. பின்னூட்டங்களை பிரசுரிக்க முடியாததற்கு மன்னிக்கவும்.
எல்லாம் காரணமாத்தான்...குடும்ப தொலைக்காட்சியில் அடுத்த மாதம் "விடுமுறை" தினத்தை முன்னிட்டுபோடாம தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சினு போட்டு கூடுதல் காசு(விளம்பர)பார்க்கலாம்னு இருக்கும்.எலி சும்மாவா அம்மணமா ஓடும்.(செய்தி உண்மையாக இருந்தால்..ஏப்ரல் 1 வருதுல்ல)
எல்லாம் காரணமாத்தான்...குடும்ப தொலைக்காட்சியில் அடுத்த மாதம் "விடுமுறை" தினத்தை முன்னிட்டுபோடாம தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சினு போட்டு கூடுதல் காசு(விளம்பர)பார்க்கலாம்னு இருக்கும்.எலி சும்மாவா அம்மணமா ஓடும்.(செய்தி உண்மையாக இருந்தால்..ஏப்ரல் 1 வருதுல்ல)
This is false news and no link to Dinathanthi. No other newspaper has reported this.
April-1 is 2 days away :-)
M.Krishnan
அய்யா .. முத்தமிழ் அறிஞரே தயவு செய்து ரூம் போட்டு முடிவு பண்ணி சொல்லுங்க என்னைக்கு தமிழ் புத்தாண்டு என்று.. நாங்களும் மண்டைய ஆடிட்டு ஒரு பாராட்டு விழ எடுத்து அபடியே ஓட்டை போடுடுறோம் ... இதெல்லாம் ஒரு பொழப்பு ..
இட்லி வடை அவர்களே .. அபடியே பதிவுல ஒரு குப்பை தொட்டி வைங்க காரி துப்பிட்டு போறோம் .. தூ ............................
இதுக்கு அய்யா பேசாம இப்படி அறிவிச்சிருக்கலாம்...
"பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளுக்காக பிப்29 லீப் வருடத்தில் வருவது போல் தேர்தல் வரும் வருடங்களில் மட்டும் ஏப்ரல்14 அன்றும், மற்ற வருடங்களில் தமிழினம் காக்கப்பட தை முதல் நாள் அன்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும்."
தமிழின தலைவர் தேர்தல் ஜுரத்தால் பாதிக்கபட்டார் :-)
///ஆனால் வருகிற சித்திரைத் திருநாளிலேயே கோயில்களில் வழிபாடுகள் முறைப்படி நடப்பதில் தடை இல்லை///
இன்னாதிது அப்ப முன்னாடி சித்திரை திருநாளை கொண்டாட தடை இருந்ததா? இல்ல தடுத்திடலாமுனு முக யோசிச்சாரா?
அய்யா முக, ஆடு வெட்டாத மாடு வெட்டாத, அது இதுனு வழிபாட்டு முறைகளில் கை வெச்சதாலயும்தான் அம்மாக்கு ஆப்பு அடிச்சு 40 உம் நமதாச்சுனு மறந்துடாதீங்க
Hello IV, I cant find this news item in google news nor in DinaThanthi websit...from where did you get this news? cant you put up the original URL also?
GuruPrasad,
I am also searching, I got it in some epaper I will update the link once I find it.
April 1st is nearing IV.. :)
April Fool!
மக்களே லிங்க் கிடைத்துவிட்டது அப்டேட் செய்திருக்கிறேன்.
எல்லோருக்கும் நன்றி.
IV...:-) ayyo pavam, you are! The Fools Day has been postponed this year to May 16 2009...
But then, that was good!
தமிழினத் தலைவனே !
உன்னை வாழ்த்த
வார்த்தைகள் இல்லை - அனைத்தையும்
உனக்காக நீயே
எடுத்துக் கொண்டதால் - என்னிடம்
இருப்பது வசவுகள் மட்டுமே
ஏற்றுக்கொள் !
சங்கம் வைத்து
தமிழ் வளர்த்தது சரித்திரம் - ஆனால்
தமிழ் வைத்து - நீ
குடும்பம் வளர்த்தாயே - அது
எங்கள் தரித்திரம்
Original Kavithai by
வெ தனஞ்செயன்
http://kelvi.net/?p=1806
Mr. Idly vadai.. for a while i thought Mr. Karunanidhi really got some sense and announced 14th as new year............tooooooooooooooooooooo much of cheating ... advance AF day to you too..
Good april Foooooooool..
இட்லி வடை எது சொன்னாலும் நம்ப ஒரு கூட்டம் இருக்கு
அயயயோ இதுக்கு வேற இந்த ஜெகத்ரட்சகன் ஒரு புது பாராட்டு விழ வைப்பாரே.. இந்த பூமி தாங்காது....
கலைஞரும் இந்த அம்மா மாதிரி ஒரு சட்டம் கொண்டு வந்து, அப்பரம் மாத்தறதுன்னு ஆரம்பிச்சுட்டார்.. எல்லாம் திருக்கடையூர் அபிராமி பண்ணிய மாயம்...
வாழ்க பகுத்தறிவு ! வாழ்க ஜனநாயகம் !
தான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, அன்றைய மத்திய மாநில அரசுகளை "துக்ளக் தர்பார்" என்று பலமுறை விம்சித்துள்ள திரு கருணாநிதி, இன்று சாதனைபட்டியலில் இடம்பெற வேண்டும் என்பதற்காக நடைமுறைபடுத்த இயலாத, தமிழ் பாரம்பரியத்தை குலைக்கும் வகையில் ஒரு சட்டம் , பின் ஓட்டுக்காக சட்டமாற்றம் , தன் குடும்ப நலனுக்காக ஒரு அணுகுமுறை, அரசு ஊழியர்களுக்குள் கலவரம், போராட்டம் என்று தானும் குழம்பி தமிழகத்தையே குழப்பி, அன்னைவரையும் முட்டாளாக்கி தானும் கோமாளி யாகும் வகையில், இவர் நடத்துவது என்ன தர்பார் ? ( இது ஆட்சியா ).
-----வருண் குமார்
ஏற சொன்னாக்கா எருது முறைக்குது
இறங்க சொன்னாக்க முடவன் முட்டுறான்
என்னா பண்ணுவாரு அந்தாளு.
ச்சும்மா இரண்டு வாட்டி புது வருசத்த
கொண்டாடிட்டு தான் போவீங்களா
குழந்தைகளாச்சும் குதூகலிக்கடுமே...
சித்திரை புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சின்னத்திரையில் சில்லறை சேர்க்க
சிறிது காலம் தையை கிடப்பில் போட்டு பிறகு தேர்தலுக்கு பிறகு வேதாளம் முருங்கை மரம் ஏற கூடும்.
நாக்க மு.க வை நம்பினால் பட்டை நாமம் தான் என்பதை திராவிட அல்லக்கைகளும் , ஹொக்கெநக்கல் பிரச்னையில் வீர ஆவேச சொற்பொழிவாற்றிய திரை உலகத்தினரும் புரிந்து கொண்டால் சரி.
ஆனால் இதுகள் வெட்கம் மானம் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு நிற்கும் கும்பல் தானே. எவ்வளவு பட்டாலும் அறிவு வராது.
அடங்கொன்னியா.....!! மருவுடியுமா.......!!!
என்ன கொடுமைங்கோ இது........!!!!!!
நா நெனைக்குறேன்......!! ஒவ்வொரு தமிழ் புத்தாண்டுக்குமும் கலைஞர் அய்யா தி.மு.க தோழர்களுக்கும்...... தம்பிகளுக்கும் ... அப்பறம் அவரோட பேமிலிக்கும் ஒரு கெட்-டூ-கெதர் வெப்பாருன்னு......!!! அதுனாலதான் நெனச்சு.... நெனச்சு.... மாதிக்ட்டே இருக்காரு...... !! எப்புடியோ தம்பி ..... கட்சி பேர மாத்தாம இருந்தா ச்சேரி ..........!!!!!!
Post a Comment