பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 27, 2009

தே.மு.தி.க. கட்சிக்கு முரசு சின்னம் - சுப்ரீம் கோர்ட்

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருப்பதால் தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் கமிஷன் போன வாரம் தெரிவித்த்தது.

இன்று விசாரனைக்கு வந்த இந்த வழக்கில் தேமுதிகவுக்கு முரசு சின்ன ஒதுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

சற்று முன் கிடைத்த தகவல்: கூட்டணி குறித்து 29ஆம் தேதி அறிவிக்க போவதாக டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

24 Comments:

Anonymous said...

Please put up this news from dinamani in Idlyvadai
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNH20090325130225&Title=Headlines&lTitle=%D8d%A1V+%F9Nn%A7Ls&Topic=0&ndate=3/27/2009&dName=No+Title&Dist=

மஞ்சள் ஜட்டி said...

டெல்லி தலைகள் மீதுலவுவோம்
மதுரை டு டெல்லி வரை ப்ளைட் விடுவோம்
கூட்டணி இல்லாமலே சூட்கேஸ் வாங்குவோம்
நாங்கள் தே.மு.தி.க என்று முரசு கொட்டுவோம்

(பாரதியின் "வெள்ளி பனி மலை" பாடல் மேட்டில் பாடி பார்க்கவும்)

மாயவரத்தான் said...

Not T.Rajendar, it must be Vijaya T.Rajendar

Anonymous said...

\\ சற்று முன் கிடைத்த தகவல்: கூட்டணி குறித்து 29ஆம் தேதி அறிவிக்க போவதாக டி.ராஜேந்தர் கூறியுள்ளார் \\

தலைவா! விளையாட்டு செய்திகளை எல்லாம் தேர்தல் செய்திகளோடு போடாதீங்க.. தனியா போடுங்க :)

Anonymous said...

Kumudam News
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து, மாநில கட்சிகளைச் சேர்ந்த 70 எம்.பிக்கள் விலகியுள்ளதால், அக்கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது. இதனால், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு இடது சாரி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டது. இதனையடுத்து, 36 எம்.பிக்களைக் கொண்ட சமாஜ்வாடி கட்சிதான், மத்திய அரசுக்கு ஆதரவு அளித்ததது. இதனையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் அரசு வெற்றிபெற்றது. இதனிடையே, தற்போது, பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் அணியில் இருந்த லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம், லோக் ஜனசக்தி கூட்டணி சேர்ந்து, பீகாரில் 37 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால், அங்கு காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் ஆட்சிக்கு, நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஆதரவு அளித்த சமாஜ்வாடி கட்சியும், லாலு மற்றும் பாஸ்வான் அணிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளது. பீகார், உத்தரபிரதேச மாநிலங்களில், மொத்தமுள்ள 120 தொகுதிகளில், இந்த 3 கட்சிகளும் கைகோர்த்துள்ளன. இதனால், காங்கிரஸ் கட்சி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, காங்கிரஸ் அணியில் இருந்த, பா.ம.க.வும், அ.தி.மு.க. அணியில் இணைந்துள்ளது. இதன்மூலம், லாலு, பாஸ்வான், முலாயாம்சிங், பா.ம.க. கட்சிகளைச் சேர்ந்த 70 எம்பிக்கள் விலகியுள்ளனர். மேலும், மேகாலயா, ஜார்கண்ட் மாநிலங்களில், உடன்பாடு வைத்துள்ள மாநில கட்சிகளுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Malaimalar News
கேள்வி:- தேர்தலுக்குப் பிறகு பா.ம.க. காங்கிரசை ஆதரிக்கும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறி உள்ளார்களே?

பதில்:- அவர்களுடைய விருப்பத்தை சொல்லி உள்ளார்கள். இப்போது நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோம். தேர்தலுக்கு பிறகு தலைவர்கள் என்ன முடிவு எடுப்பார்களோ அதற்கு கட்டுப்படுவோம். அது அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா எடுக்கும் முடிவைப் பொறுத்தது.


Astrologer Prediction - Malaimalar

சோனியாகாந்திக்கு தற்போது மிக, மிக அருமையான நேரம் நடந்து கொண்டிருக்கிறது. இத்தாலி நாட்டில் 1946-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9-ந்தேதி இரவு 9.30 மணிக்கு சோனியா பிறந்தார். அவரது பிறந்த நட்சத்திரம் திருவாதிரை.

அவரது ஜாதகத்தில் புதனும், குருவும் மிக நல்ல திசையில் உள்ளனர். 2010 வரை இந்த நல்ல திசை நீடிக்கிறது. இதனால் சோனியா அதிக வெற்றிகளை குவிப்பார். அவரது தலைமையில் காங்கிரஸ் வெற்றிகளை குவிக்கும்.

இவ்வாறு உன்னிகிருஷ்ண பணிக்கர் கூறினார்.

How is it possible?

Reality
மக்களுக்கு நேரம் எப்படி உள்ளது என்று பார்த்து சொன்னால் நல்லாருக்கும் . மக்கள் ஒட்டு போட்டு ஒரு சுகத்தையும் காணவில்லை இதுவரை (Comment by reader)

Anonymous said...

விஜயகாந்த் சார் , நீங்க என்ன சின்னத்தில் நின்னாலும் இந்த லோக்சபா எலேச்டின் யில் நீங்க தேபோசிட் இழக்க போவது உறுதி !

ரொம்ப சீன் போடதீங்க ! காங்கிரஸ் கூட நீங்க பேரம் பண்ணது எடுபடம்மா போச்சு.. அதுநாள் இப்போ தனியா நிக்குறீங்க.

நீங்களும் ஒண்ணுதான் ! தீமூக அதிமுக வும் ஒண்ணுதான் !

ஓவர் சீன் உடம்புக்கு ஆகாது

- நெல்லை பார்த்திபன்

Anonymous said...

விஜயகாந்த் சார் , நீங்க என்ன சின்னத்தில் நின்னாலும் இந்த லோக்சபா எலேச்டின் யில் நீங்க தேபோசிட் இழக்க போவது உறுதி !

ரொம்ப சீன் போடதீங்க ! காங்கிரஸ் கூட நீங்க பேரம் பண்ணது எடுபடம்மா போச்சு.. அதுநாள் இப்போ தனியா நிக்குறீங்க.

நீங்களும் ஒண்ணுதான் ! தீமூக அதிமுக வும் ஒண்ணுதான் !

ஓவர் சீன் உடம்புக்கு ஆகாது

- நெல்லை பார்த்திபன்

Anonymous said...

முதல்வர் கருணாநிதி நலமுடன் இருக்க வேண்டும் என்பதற்காக, அவரது துணைவியார் ராஜாத்தி அம்மாள் திருக்கடையூர் கோவிலில் ஆயில்ய ஹோம் செய்தார்.

அடுத்து எதிரிகளை வீழ்த்தும் வகையில் கும்பகோணம் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற அய்யாவாடி பத்ரகாளிஅம்மன் கோயிலிலும் விசேஷ பூசைகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றதாம்.

இதுக்கு பேரு தான் 'பகுத்தறிவு பூஜை'-ஒ என்னவோ

Anonymous said...

""காஞ்சி ஜெயேந்திரரை உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி சந்திக்கப் போறார் ஓய்...'' என அடுத்த விஷயத்தைச் சொன்னார் குப்பண்ணா.


""என்ன விஷயமா சந்திக்கப் போறார் பா... சந்திப்பு தமிழகத்திலா, உத்தர பிரதேசத்திலா...?'' எனக் கேட்டார் அன்வர்பாய்.


""மாயாவதி உத்தர பிரதேசத்துல பிராமணாளையும் அரவணைச்சு அரசியல் நடத்திண்டிருக்கார்... கட்சியிலும் பல முக்கிய பொறுப்புகளை கொடுத்திருக்கார்... அவரது ஆலோசனைக் குழுவுலயும்
பிராமணாள் இருக்கா... அவா மாயாவதியின் அணுகுமுறையை ஜெயேந்திரர்கிட்ட சொல்லிருக்கா... ஜெயேந்திரரைப் பத்தி மாயாவதிகிட்ட எடுத்துச் சொல்லிருக்கா...


""ஜெயேந்திரர், உத்தர பிரதேசத்துல நடக்கும் ஆன்மிக மாநாட்டுல கலந்துக்க அடுத்த வாரம் போறார்... அப்ப மாயாவதியை சந்திக்க ஏற்பாடு செஞ்சுட்டா... இந்த சந்திப்பு, பகுஜன் கட்சிக்கு பெரிய "இமேஜை' உருவாக்கும்னு சொல்றா...'' என்றார் குப்பண்ணா

Krish said...

இட்லி வடையின் கணிப்பை பொய்யாக்கி விட்டார் விஜயகாந்த்! பாமக கூட கட்சி ஆரம்பித்த முதல் பத்து வருடங்கள் தனித்து நின்று தோல்வியை தழுவியது. அப்பறம் ஆரமித்தது ஜம்பிங்!! விஜயகாந்தும் தொடர்ந்து தோல்வியை சந்தித்தால், அவரின் நிலையும் இதுவாகத்தான் இருக்கும்.
ஒன்னு ரெண்டாவது கிடைக்கட்டும்!

Anonymous said...

உ.பி. மாநிலம் பதேபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜக்லால் என்ற 80 வயது ரிக்ஷாக்காரர், 23வது தடவையாக லோக்சபா தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

ஜக்லால் தாத்தாவின் பிரசார உத்தியே தனி. ஆள், அம்பு, பரிவாரம் எதுவும் இல்லாமல் தனது ரிக்ஷாவில் ஏறும் வாடிக்கையாளர்களிடம் ஐயா, கண்டிப்பாக எனக்கே ஓட்டுப் போடுங்க என்று கேட்டுக் கொள்வாராம்.

இவரிடம் மட்டும் தேர்தல் அதிகாரிகள் தேர்தல் செலவுக் கணக்கே கேட்பதில்லையாம்.

ஜக்லாலிடம் அருமையான திட்டமும் உள்ளதாம். அதாவது பள்ளித் தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்காகவே ஒரு பள்ளிக்கூடம் கட்டுவதுதான் அது. பள்ளித் தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களை யாரும் பள்ளியில் சேர்ப்பதில்லை. அப்படிப்பட்ட மாணவர்களுக்காக இந்த பள்ளியை கட்ட விரும்புகிறேன் என்கிறார் ஜக்லால்.

கடந்த லோக்சபா தேர்தலில் ஜக்லால் 3949 வாக்குகளைப் பெற்றாராம்.

mazhai said...

நகைச்சுவை சேனல்கள் வரிசையில் நகைச்சுவை மனிதர்களையும் சேர்த்துக்கொள்ளலாம் போலிருக்கிறதே.

Anonymous said...

அண்ணே. யாரு டி. ராஜேந்தர்?
பொது அறிவு போட்டி
வெக்கறீஙகளா?

R.Gopi said...

தமிழ்நாட்டில் கரடிகளை விரட்டி அடிப்போம் என்று கொட்டு "முரசே"

*********

விஜய டி.ராஜேந்தர் (லட்சிய தி.மு.க) - குடுங்க, ஏதாவது குடுங்க, குடுத்துட்டு அப்புறம் பாருங்க, எதுகை, மோனை விளையாடும், எதிராளிகள் பந்தாடப்படுவர். அவர்களை சரமாரியாக வசைபாடும் படலம் தொடங்கும். ஏற்கனவே விஜயகாந்தை ஒரு பொதுக்கூட்டத்தில் வசைபாடியதில், செம மாத்து கிடைத்தது. ஆனால், இவர் ஒரு விஷயத்தில் கெட்டி. யார், நிறைய கொடுக்கிறார்களோ, அவர்கள் பக்கம் தன் ஓட்டை தமிழ்குழாயை திருப்பி விடுவார். அங்கு கும்பி நாற்றத்துடன் தமிழ் அருவி பெருக்கெடுத்து ஓடும். ஒரு சீட் இல்லையென்றால் கூட பரவாயில்லை. சில கோடிகள், குறைந்தபட்சம் சில லட்சம், இவரின் லட்சியம்.

R.Gopi said...

அரசியல் ஆடுகளம்
ஆனதிங்கு போர்க்களம்

கடலென ஓடும் கள்ளப்பணம்
அவை அனைத்தும் நம் வரிப்பணம்

ஏழைகளின் வயிற்றில் அடித்து சேர்த்தது
மொத்தமும் டாஸ்மாக் கடைக்கு போய் சேர்ந்தது.

எங்கெங்கு காணினும், பார்க்கும் இடமெங்கும் வண்ண வண்ண போஸ்டர்கள்
இருக்கும் ஏழை பாழைகளுக்கு என்ன செய்தார்கள் இந்த போஸ்டர் மாஸ்டர்கள்?

களவாணி கயவர்கள், பல கரைவேட்டிகளில்
பட்டி தொட்டியெங்கும், பலபல தட்டிகளில்

நேற்றுவரை வசைபாடிய எல்லோரின் வாய்கள்
நம்மை பார்த்து, கூசாமல் கூப்புது கைகள்

எதிரே நின்றவனை ஏசி ரூமில் இருந்து ஏசியவர்கள்
இன்று அதே ஏசி ரூமில் கூட்டணிக்கு பேசுவார்கள்

கையில் உருப்படியாய் இருக்கும் நம் ஓட்டை
துருப்பாய் வைத்து ஆடுவோம் வேட்டை

நம் கைகளில் இருக்கும் அந்த துருப்பு சீட்டை
வைத்து, பிடிப்போம் கள்ளர்களின் கழுத்தை

சிறிது அசந்தாலும், நம் ஓட்டு நம்மிடம் இல்லை
தெளிவாய் இல்லையேல், நாமே நம்மிடம் இல்லை.

பிடிப்பார்கள் கள்ளர்கள் நம்ம ஊரு கோட்டை
பிடித்ததும் போடுவார்கள் நாட்டை - ஆட்டை!!

மக்களே பாருங்கள் களவாணிகளின் கூட்டணி
பார்த்ததும் சொல்லுங்கள், மவனே மாட்டுனடா நீ ............

மக்கள் said...

கடவுளே உங்களையும் எங்களையும் கூட்டணிக்கு சேர்த்திருக்கிற கேப்டன்கிட்டேருந்து தமிழகத்தையும் இந்தியாவையும் எப்படியாவது நீங்கதான் காப்பாத்தணும்.

Unknown said...

அடங்கொன்னியா.......!!!! நெம்ப சவுரியமா போச்சு ....!!!" ஏ ... டமுக்கு டப்பா டியாலோ.....

ஏ ... டமுக்கு டப்பா ஆயாலோ ....." ன்னு பிரச்சாரத்துக்கு முரசு கொட்டீட்டே பேசலாமுங்கோவ்........------------------------------------------------------------ஏனுங்கோ விசியகாந்து தம்பி .....!!! கச்சி தேர்தல் செலவுக்கே பிச்சுக்கோ .... புடிங்கிக்கோ ன்னு இருக்குது ....... !!! இதுல கச்சி முத்தரைக்கெல்லாம் போய் இவ்வளவு செலவு பண்ணி .. ஏனுங்கோ தம்பி காச கரியாகுரீங்கோ......????இதெல்லாம் நெம்ப தப்புங்கோ தம்பி......!! சொந்த பணத்துல கச்சி நடத்துரீங்கோ.... பாத்து.. சூதானமா.. செலவு பண்ணுங்கோ தம்பி.....!!! ஏதோ எங்கோட்டு புள்ள மாதிரி நெனச்சு சொல்லுற தம்பி....!!------------------------------------------------------------------அட நம்ம " டண்டனக்க..... டணுக்குனக்கா............ " பார்டி.....!! ஏனுங்கோ கரடி தம்பி..... யாரோட கூட்டணி வெச்ச்சளுமும் உங்குளுது ஒரு சீட்டுதான தம்பி.......????!!!!??
அப்பறம் ஏனுங்கோ தம்பி இத்தன பில்ட் அப்பு .....!!!!

Anonymous said...

IV,

Just hv a look on this URL...
after confirming the news, pl. publish in your blog...

http://thatstamil. oneindia. in/news/2009/ 03/27/tn- dmk-to-held- special-pooja- for-election- win.html


Hv a nice day,

Krishnan

SAN said...

Hi IV,
Here is an excellent article by Tarun Vijay for the Psec media and Psecs.

Family legacy and the Varun effect

Those who opposed the Ayodhya temple movement, wore silence over the plight of Kashmiri Hindus, damaged the Ram Sethu [Images] and denied Lord Rama [Images] ever existed, denied the violence at the Godhra railway station, and embraced the butchers of 1984, are collectively gunning at Varun Gandhi's [Images] political life.
Column after column by Padma Shris in the media have created an atmosphere where supporting Varun has become a sin. Why? The simple reason is that the farmhouse of Gandhi-Nehru politics has been broken and a scion of the family chose to speak out as his conscience directed.
More than what Varun said or didn't say, it is the hurt and bewilderment over the loss of a Gandhi to the saffron brigade that has made the media and anti-Hindutva politicos react with such venom and acid. He was not heard, not given a chance to present his case, nor did forensic experts examine the so-called proof in the form of a CD containing his speech.

Varun has suddenly dwarfed the media-supported Rahul.
Nobody has ever heard a dynasty member to say with understandable assertion that he or she is a Hindu. Rather, they have always tried to look differently at things. They banned Hindu organisations, imposed the Emergency, removed basic human rights, never willingly facilitated the Sikh massacre probe, rewarded hardened criminals, made alliance with those who were convicted for murder or were facing scandalous charges, had the Muslim League join the government after Partition. Yet, they are nice, decent, peace-loving, patriotic democrats who love to tell others: 'Go read the Gita.'

When Indian soldiers were fighting Pakistani marauders in 1947, we didn't have enough jeeps. So orders were placed with the British company and supply demanded immediately. Our high commissioner in London [Images] V K Krishna Menon, Pandit Nehru's [Images] blue-eyed boy, messed it up. The jeeps reached a year late.

That was the first scandal in independent India.

We lost Gilgit, Baltistan and Skardu. We lost Aksai Chin because the government in New Delhi [Images] didn't know the exact boundaries and so no patrolling was being done there.

In all we have lost 125,000 square km to the Pakistanis and Chinese during Congress rule.

Plus we had a bad dream called 1962.

At that time our ordnance factories were making coffee machines as Pandit Nehru openly argued against having a well-equipped large army for defence. 'Who is going to attack us?' he would ask.

And people still remember the mysterious death of Dr Syama Prasad Mookerjee, who simply wanted Kashmir to be a part of India like Bihar or Bengal and the permit system to enter the valley be abolished. Kashmir had two rulers then, its ruler was called Sadr e Riyasat or 'head of state', and it had a prime minister. Mookerjee's martyrdom compelled the Nehru government to remove the permit system and the two heads of state.

Then we had the Mundhra scandal, the Nagarwala case, the L N Mishra murder. The Jana Sangh's fast-emerging leader Deendayal Upadhyaya was murdered. A Congress leader canvassed openly against the official Presidential candidate and supported her own choice as independent nominee. The original Congress symbol was a pair of oxen. After the official Congress broke up, they got the hand as a temporary symbol till the case is finally settled. It would never be.

Opposing Sonia Gandhi's [Images] sudden rise in politics only on the grounds of her foreign origin were leaders like Sharad Pawar [Images] and P A Sangma. Old Congressmen still feel sad that they lost dynamic and promising leaders of substance like Rajesh Pilot, Madhavrao Scindia and Jitendra Prasada, who could have steered the Congress on an entirely different and strong nationalist course. And a veteran like Sitaram Kesri was humiliated no end.

The only non-dynasty prime minister to run a Congress government for full five years successfully was insulted even in his death and his body-in-state was not allowed to enter the Congress headquarters in New Delhi. An airport in his home state to be named after him was opposed to by Congressmen although the proposal was put forth by an Opposition leader.

This is how they treat their party leaders not belonging to the family. They amended, abused and twisted the Constitution, put the entire Opposition behind bars for an undisclosed period and were harsh on the unyielding masses.

Yet, they are the democrats and secular lighthouse of freedom of expression and liberty.

They kept India backward in such a planned manner that even after 62 years of independence we are yet to have a spacious functional airport in the national capital, 70,000 farmers committed suicide in one year, decorated soldiers returned their medals in protest and a movie on our poverty-stricken 'slum dogs' fetches the Oscar. And they loved illegal infiltrators for the sake of their votes -- and still they say they are the inheritors of a freedom struggle that demanded the ouster of aliens.

No electoral reforms, no police reforms or strengthening their morale and weapons, the administration is still run the way it functioned during the Sahebs; and despite having won a well-fought war in 1971 we couldn't settle the Kashmir issue or control the jihadi tail-wagger in the neighbourhood.

Minorities were so well supported in Congress regimes that in the sixth decade after independence they felt a need to provide special crutches for them. Show the 'M' card and get the privilege, became the new secular psalm, further shrinking the space and opportunities for the condemned majority.

More than anything else they tried to wreck the morale of the assertive Hindus who faced the onslaught of invaders for 12 centuries with unparalleled bravery and with invincible spirit to protect their culture and the fragrance of the land. They deserved to be comforted most after a fractured independence and a massacre that was thrust upon them by a weak Congress leadership. Yet, a large section of Hindus today feel cheated and anguished.

They form governments in 12 states, prove they can run the country beautifully with a coalition of 25 parties with diametrically opposed ideologies. And one of their Swayamsewaks unfurled the tricolour six times from the ramparts of the Red Fort [Images] as the prime minister, impressed world leaders and the international media with a record of infrastructure-building, communication revolution and women's empowerment, chose a Muslim to be the President and conducted Pokhran II by fooling the CIA's 'eyes', and resisted extraordinary world pressure and sanctions.

Yet, they are called anti-development, anti-women, even anti-social. In not a single so-called mainstream media outlet are their views published, but every news item is scanned to hurl stones on them through editorialising on the front-page.

Still, they are the very objective face of our independent media.

The choicest abuses used by 'decent guarantors of the freedom of expression' columnists and editorial-writers can be collected as a bouquet of India's uncivilised lexicon, yet their films against the very spirit of Hindu nature get widely supported by a regime that survives on Hindu money and votes.

Their love for development and secularism is so deep that they can send dredgers to destroy a million years of faith and marine life because that was Ram Sethu, but won't dare to touch a six feet by six feet dargah in the middle of the road blocking the highway and causing accidents, for fear of annoying a vote-bank.

And then they say, they are the future of India.

Tarun Vijay is Director, Dr Syama Prasad Mookerjee Research Foundation, New Delhi

மாயவரத்தான் said...

கூட்டணி குறித்து அனைவரும் அறிவித்து வரும் நிலையில், ஏப்ரல் 1-ம் தேதி கூட்டணி குறித்து தி.மு.க. அறிவிக்க இருக்கிறதாம். 'சரியான தேதி தான்' என்று தொண்டரடிப்பொடிகள் புலம்பி வருகிறார்கள்.

Anonymous said...

//
விஜயகாந்த்துக்கு ஆற்காடு வீராசாமி கேள்வி

சென்னை, மார்ச்.29: மனைவிக்கும், மைத்துனருக்கும் பதவி கொடுத்துவிட்டு, குடும்ப அரசியல் பற்றி விஜயகாந்த் பேசுவதா? என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் நவீன புத்தன் ஒருவர் தோன்றியிருக்கிறார். அவர் தான் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். ஆமாம், அவருக்கு அப்படித் தான் நினைப்பு. கட்சி ஆரம்பித்து, சட்டமன்றத்தில் ஒரு இடத்திற்கு மேல் இன்னும் இரண்டாவது இடத்தைப் பிடிக்கவில்லை. மதுரையே என் கோட்டை என்று கூறிய திருமங்கலம் தொகுதியிலே `டெபாசிட்'டுக்கே வழியில்லை. ஆனால், அதற்குள்ளாகவே அடுத்த முதல்-அமைச்சர் தான் தான் என்பதைப்போல ஒரு நினைப்பு.

ஜெயலலிதா பேசுவதைப் போலவே தன்னை விட்டால் வேறு கதியில்லை என்று `மைக்'கைப் பிடித்துவிட்டால் போதும், எதை வேண்டுமானாலும் பேசுகிறார். கிராமப்புறங்களில் நடிகரைப் பார்க்க, அதுவும் சில படங்களிலே கதாநாயகராக வேறு நடித்துவிட்டால் போதும், மக்கள் கூட்டம் கூட்டமாக வருவதில்லையா, அப்படி வரும் கூட்டங்களையெல்லாம் தனக்கு வாக்களிக்கப் போகும் கூட்டம் என்று நினைத்துக்கொண்டு-அவருக்கு ஏதோ 15 பாராளுமன்ற தொகுதிகளையும், பல கோடிகளையும் கொட்டித் தர அழைத்ததாகவும், தான் விலை போகவில்லை என்றும் ஊருக்கு ஊர் பேசிக் கொண்டிருக்கிறார்.

தனியாருக்கு கல்வியை விற்றுவிட்டதாக நேற்று பேசியிருக்கிறார். இவரே ஒரு தனியார் பொறியியல் கல்லூரியை நடத்திக் கொண்டு, கொள்ளை வசூல் செய்து கொண்டு ஏதோ உத்தமரைப் போல தனியாருக்கு கல்வியை விற்றுவிட்டதாகப் பேசுகிறார்.

இவர் திருமணத்திற்கு தாலி எடுத்துக் கொடுத்து, இவரைப் பாராட்டி பேசியதே முதல்-அமைச்சர் கருணாநிதியும், மூப்பனாரும் தான். பெற்ற வயிற்றையே கிழிப்பது போல அவர்கள் இருவரின் கட்சிகளைத் தான் அன்றாடம் வாய் கிழிய திட்டிக் கொண்டிருக்கிறார். மூத்த தலைவர்களையெல்லாம் சகட்டுமேனிக்கு வசை பாடுகின்ற வழக்கம் இதுவரை ஜெயலலிதாவுக்குத்தான் இருந்தது. இப்போது தானும் அதற்கு எந்த விதத்திலும் குறைச்சல் இல்லை என்று புகழ் பெறுகின்ற அளவிற்கு விஜயகாந்த் பேசுகிறார்.

இலங்கை பிரச்சினைக்காக தேர்தலையே புறக்கணிப்போம் என்று அறிவித்தவரும் இவர்தான். எல்லோருக்கும் முன்பாக தற்போது வேட்பாளர்களை அறிவித்திருப்பதும் அவர் தான். காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்து போட்டியில்லை என்று சொன்னவரும் இவர்தான்.

காங்கிரஸ் கட்சி எந்தெந்த தொகுதிகளிலே நிற்கப்போகிறது என்று தெரிவதற்குள் வேட்பாளர்களை அறிவிப்பதும் இவர்தான். அதே காங்கிரஸ் கட்சியின் மத்திய ஆட்சியை கண்ணை மூடிக்கொண்டு சாடுவதும் இவர்தான். தி.மு.க.விலே குடும்ப அரசியல் என்கிறார். ஆனால், அவரது கட்சி ஆரம்பித்து ஒருசில ஆண்டுக்குள்ளாகவே அவரது மனைவியும், மைத்துனரும் தான் அவரது கட்சியிலே எல்லாமாகவே இருக்கிறார்கள் என்பது ஊருக்கே தெரிகிறது. அவர் கட்சியின் சார்பில் தனித்துப் போட்டியிடுவது பற்றியோ-அதற்காக தேர்தல் பிரசாரம் செய்வது பற்றியோ நமக்கு எந்த விதமான ஆட்சேபணையும் கிடையாது.

இந்திய நாட்டில், ஜனநாயகத்தில் அது அவருக்கு உள்ள உரிமை. ஆனால், தேவையில்லாமல் தி.மு.க.வை வம்புக்கு இழுப்பதும்- ஒரு குடும்பத்திற்காக ஆட்சி நடைபெறுகிறது என்றும் சொல்லும் விஜயகாந்துக்கு ஒன்று சொல்வேன். முதலில் `உன் கண்ணில் உள்ள உத்திரத்தை எடுத்துவிட்டு, பிறகு மற்றவர்கள் கண்ணில் உள்ள தூசியை அகற்றுவதற்கு முயற்சி செய்'.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

//

நன்றி : விகடன்

ராமதாஸ், விஜயகாந் போன்றவர்கள் பிழைப்பெல்லாம் ஒரு பிழைப்பு..

த்தூ!!!

Anonymous said...

//
'சரியாக ஐந்து வருடமும் ஒரு மாதமும் ஆகிறது... அப்போதைய நாடாளுமன்றத் தேர்தலுக்காக பா.ம.க-வின் தேர்தல் அறிக்கையை சென்னையில் வெளியிட்டுப் பேசினார் நிறுவனர் ராமதாஸ்... 'அ.தி.மு.க-வுடன் இனி எந்தக் காலத்திலும் பா.ம.க. கூட்டு வைத்துக்கொள்ளாது. இதை பத்திரத்தில் வேண்டுமானாலும் எழுதித் தருகிறேன்!' என்று அவர் சொன்னார். ஆனால், பத்திரமாக அவர் எழுதித் தரவில்லை!'' என்று சொல்லிக் கொண்டே என்ட்ரி கொடுத்தார் கழுகார்...
//

நன்றி: ஜூனியர் விகடன்.

பா.மா.க வுக்கு பதவி வெறி!!! குடிகாரன் பேச்சு.. பொழுது விடிஞ்சா போச்சு...

butterfly Surya said...

டெல்லி தலைகள் மீதுலவுவோம்
மதுரை டு டெல்லி வரை ப்ளைட் விடுவோம்
கூட்டணி இல்லாமலே சூட்கேஸ் வாங்குவோம்
நாங்கள் தே.மு.தி.க என்று முரசு கொட்டுவோம்

(பாரதியின் "வெள்ளி பனி மலை" பாடல் மேட்டில் பாடி பார்க்கவும்)

SUPER. SUPER.. SUPER..

வலைஞன் said...

இட்லி வடை அவர்களுக்கு,

ஒரு வேண்டுகோள்.கடந்த 3 ஆண்டுகளாக விருத்தாசலம் தொகுதி MLA திரு விஜயகாந்த் தன் தொகுதிக்கும் மக்களுக்கும் எதாவது விசேஷமாக செய்துள்ளாரா? மிக முக்கியமான இந்த விவரத்தை அனைவரும் இருட்டடிப்பு செய்கின்றனர்.நீங்கள் அந்த தொகுதியில் ஒரு சர்வே எடுத்து முடிவை இங்கு அறிவித்தால் நான் மிகவும் நன்றி உள்ளவனாக இருப்பேன்

நன்றி வணக்கம்