கன்னியாகுமரி யாருக்கு ? நாகர்கோவிலிலிருந்து லெனின்.எஸ்
ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்த நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதி. காமராஜரே தேர்ந்தெடுத்து போட்டியிட்ட காங்கிரஸ் பாரம்பரியம் மிக்க தொகுதி பின்னர் பாரதிய ஜனதாவின் கோட்டையாக மாறிய வரலாறும் கொண்டது.
இதற்கு காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களின் அஜாக்கிரதையும் பாரதிய ஜனதாவின் தன்னம்பிக்கை நிறைந்த பணிகளையும் காரணமாக சொல்லலாம். பழைய டென்னிஸ் எம்பி விவாதத்தின் போது பாராளுமன்றத்தில் தூங்கிய வரலாறும் காங்கிரசுக்கு உண்டு. தற்போதைய கம்யூனிஸ்ட் எம்பி பெல்லார்மின் காங்கிரஸ், திமுக பலமான கூட்டணியோடு கடந்த முறை வெற்றிவாகை சுடியவர் . ஆனால் இந்த முறை நிலைமை முற்றிலும் மாறித்தான் உள்ளது.
தொகுதி மறு சீரமைப்பிற்கு பின் புதிய கன்னியாகுமரி தொகுதி பாரதிய ஜனதாவிற்கே கூடுதல் பலம் என்றே கருத முடிகிறது. காரணம். திருச்செந்தூ பாராளுமன்ற தொகுதியில் இருந்த கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி கற்போது நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதியோடு இணைந்து கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியாயிருக்கிறது. கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பாராளுமன்ற தேர்தல்களில் பாரதிய ஜனதாவிற்கு சற்று ஆதரவாளர்கள் உள்ள தொகுதியாகும். பாரதிய ஜனதா வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ள பொன் ராதாகிருஷ்ணன் மீது மக்களுக்குள்ள நம்பிக்கையும் பாஜகவிற்கு கூடுதல் பலமாக கருதப்படுகிறது;. கடந்த முறை காங்கிரஸ் கம்யூனிஸட் திமுக என பலமான ஜாம்பவான் கூட்டணி இந்த முறை பிரிந்து போய் கம்யூனிஸட் அதிமுக தனியாகவும் காங்கிரஸ் திமுக தனியாகவும் போட்டியிடுவது.
பாஜக விற்கே சாதகமாக அமையும் என்று தற்போதுள்ள நிலையில் கருதினாலும் பிரச்சார யுக்தி மக்களின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படுத்தலாம் என்பதும் மறுக்கமுடியாத உண்மை.
நாகர்கோவிலிலிருந்து
லெனின்.எஸ்
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Thursday, March 12, 2009
கன்னியாகுமரி யாருக்கு ?
Posted by IdlyVadai at 3/12/2009 05:08:00 PM
Labels: தேர்தல்2009
Subscribe to:
Post Comments (Atom)
17 Comments:
கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் வெல்வது உறுதி செய்யப்பட்ட ஒன்று.
IV,
This week's Thuglak Cover page cartoon is THE BEST one to have come from them in recent times. A truely ASATHAL CARTOON & DIALOGUES.
Why don't you prominently display it as a separate post?
கடந்த தேர்தலிலேயே தனக்கு இருந்த நல்ல பெயர் மற்றும் சான்றோர் (நாடார்)சமூகத்தவர் வோட்டுகள் காரணமாகக் குறைந்த வித்தியாசத்திலேனும் வெற்றிபெற்றிருக்க வேண்டியவர் பொன். ராதாகிருஷ்ணன். ஆனால், சரியாகத் தேர்தல் வேலை செய்யாததால் கோட்டைவிட்டார்.
பலமுனைப் போட்டியில் அவர் வெற்றிபெறும் வாய்ப்பு அதிகம் என்றாலும், தேர்தல் வேலையை நன்கு செய்தால் மட்டுமே அவரால் வெற்றிபெற முடியும்.
பா.ஜ.கவுக்காகத் தீவிரமாகக் களப் பணியாற்றக்கூடிய பலரும் சிவசேனை போன்ற பிற இந்து அமைப்புகளுக்குச் சென்றுவிட்டது இவருடைய வெற்றியைப் பாதிக்கலாம்.
BJP எப்படி ஜெயிக்கும்? எந்த ஜாதி ஓட்டு வரப்போகிறது bjp-க்கு? இந்தப் பகுதியில் இருக்கும் மைனாரி்ட்டி ஓட்டை வைத்து காங்கிரஸ் கூட்டணிதான் ஜெயிக்கும்.
Ben: In Kannya Kumari DMK will win this time.
//திருச்செந்தூ பாராளுமன்ற தொகுதியில் இருந்த கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி கற்போது நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதியோடு இணைந்து கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியாயிருக்கிறது. கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பாராளுமன்ற தேர்தல்களில் பாரதிய ஜனதாவிற்கு சற்று ஆதரவாளர்கள் உள்ள தொகுதியாகும்.//
எந்த அளவுக்கு சரியென்று தெரியவில்லை .கன்னியாகுமரி இதுவரை திருச்செந்தூர் தொகுதியில் இருந்த போது அதிலுள்ள மற்ற சட்டமன்ற தொகுதிகளை விட கன்னியாகுமரியில் பா.ஜ.க அதிக ஓட்டு வாங்கியிருக்கலாம் .அதில் வியப்பில்லை .ஆனால் அவை கண்டிப்பாக நாகர் கோவில் பாராளுமன்ற தொகுதியிலுள்ள சட்ட மன்ற தொகுதி ஒவ்வொன்றிலும் பா.ஜ.க பெற்ற ஓட்டை விட குறைவு தான் என்பது என் கணிப்பு ..கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர் கோவில் பாராளுமன்ற தொகுதிகுட்பட்ட சட்டமன்ற தொகுதிகள் எப்போதுமே தேசிய கட்சிகளுக்கு சாதகமாக இருந்த போது கன்னியாகுமரி சட்ட மன்ற தொகுதி மட்டும் தமிழக பெரும்பான்மை நீரோட்டத்தில் கலந்து எப்போதும் திமுக அல்லது அதிமுக-வே வெல்வது வழக்கம் ..இது பாராளுமன்ற தேர்தல் என்றாலும் கன்னியாகுமரி இணைவது பா.ஜ.க -வுக்கு சாதகம் என்பதை ஏற்பதற்கில்லை .
//கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் வெல்வது உறுதி செய்யப்பட்ட ஒன்று.//
அந்த பத்திரத்த ஸ்கேன் பண்ணி அனுப்பினா இட்லிவடை வெளியிடுவாரே :)
//சான்றோர் (நாடார்)சமூகத்தவர் வோட்டுகள் காரணமாகக் குறைந்த வித்தியாசத்திலேனும் வெற்றிபெற்றிருக்க வேண்டியவர் பொன். ராதாகிருஷ்ணன்//
ஓ!நாடாரெல்லாம் ராதாகிருஷ்ணனுக்கு தான் ஓட்டு போட்டாங்களா ? ஹி..ஹி.. அப்போ பெலார்மினுக்கு ஓட்டு போட்டது யாருங்க?
Its wonderful to see an election team being formed.
I would request, not just status reporting from these folks.
Please list the issues in that constituency. What has been done in the recent past, what is pending, what is top on people's mind. SOmetime people do not know what they want, so such writings could make them think and vote.
Keep up the good work, I would expect the bloggers to make some difference in this election.
//பொன் ராதாகிருஷ்ணன் மீது மக்களுக்குள்ள நம்பிக்கையும்//
நீங்க காமெடி கீமெடி எதுவும் பண்ணல்லியே?
I agree with the view that issues that require to be addressed to by the would be Member of parliament of Kanyakumari.
Issues are of two three types. National, state of Tamil Nadue and last, the Constituency (MP Seat).
Again in National issues, (i) Rooting out Terrorism, (ii) Economic Development and (iii) Social Development should be the preferential arenas.
(ii) Needless to say, in the State's issues (i) Kaveri water dispute (ii) The menace of the possibilities of LTTE invasion into Tamil Nadu should be the targetted area.
(iii) As for the constituency specific, I have no idea, since I am sitting far away (Gujarat - Neibour (states')'s Envy - Residentss pride).
BJP should atleast win 3 seats in TN.
S.Chennai
Kanniyakumari
Coimbatore
//ஜோ / Joe said...
IVARU YEN SHURITHI SERAMA COMMENT/COMMEDY PODRARU/PANDRARU...?
Ellam Oru Vaitherichal thaano??
-Subbu
ஜோ,
நான் அனானியாக பின்னூட்டம் போடுவதில்லை. மேலும் சந்தேகம் இருந்தால் என்னுடம் சாட்டில் பேசலாம்.
அன்புடன்,
இட்லிவடை
ஜோ உங்களின் கருத்து சரிதான். ஆனால் நீங்கள் சரியாக வாசிக்கவும். பாராளுமன்ற தேர்தல்களில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பாஜக விற்கு ஆதரவாளர்கள் கூடுதல். காரணம் கன்னியாகுமரி சட்ட மன்ற தொகுதியில் நாடார் மற்றும் வெள்ளாளர் ஓட்டுக்கள் சம அளவில் உள்ளது. இது பாஜகவிற்கு குறிப்பாக பொன் ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பலம் என்பதே என் கணிப்பு.
கன்னியாகுமரியில்
பொன்.ராதாகிருஷ்ணன் - 40% chance
Post a Comment