பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, March 14, 2009

சோ ஷோ


படத்தின் விளக்கம் கீழே ( நன்றி: விகடன் )


மு.க.தமிழரசுவின் மகள் பூங்குழலி திருமணம், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. கருணாநிதியின் மொத்த குடும்பமும் இந்தத் திருமண விழாவில் ஆஜர்.

கண்ணைப் பறிக்கும் மஞ்சள் சட்டையில் அழகிரி பார்க்க அழகாக வந்திருந்தார். அவருக்குக் கை கொடுத்த சோ, ''அழகிரி, எல்லாத்தையும் விட்டுடணும்'' என்று பொடிவைத்துப் புன்னகைத்தார். ''இதை நீங்க சொல்றீங்களா?'' எனச் சிரித்த அழகிரி, ''சரி, நான் எல்லாத்தையும் விட்டுர்றேன். ஆனா, ஒரே கண்டிஷன், டி.வி. பேட்டியில அதைச் சொல்வீங்களா?'' என்று அழகிரி பஞ்ச் வைத்தார். ''அது எப்படி, முதல்ல நீ விடு, அப்புறம் நான் சொல்றேன்!'' என்று சோ கலகலக்கவைத்தார்.

கையை விடு என்று சொல்லியிருப்பார் ஹி ஹி


பகுத்தறிவு கொசுறு செய்திகள்:

1. இந்தத் திருமணத்தைப் பார்க்கும்போது 'பூ முடித்தாள் அந்தப் பூங்குழலி' என்ற பாட்டுதான் ஞாபகம் வருகிறது'' என்று கண்ணதாசன் பாட்டை வைரமுத்து ஞாபகப்படுத்த, 'திருக்குவளையில் இருக்கும் அம்மன் பெயர் வண்டமரும் பூங்குழலி. அதைத்தான் நாங்கள் பெயராக வைத்தோம்' என்று நினைவாற்றலை மீண்டும் ஒரு தடவை அழுத்தமாக நிரூபித்தார் கருணாநிதி. ( அம்மையார் தான் எனக்கு அலர்ஜி, அம்மன் இல்லை என்கிறார்)

2. தாலிக் கயிற்றுக்கு மஞ்சள் தடவுவதில் இருந்து குரூப் போட்டோ எடுத்துக்கொள்பவர்களை ஒழுங்குபடுத்துவது வரை மேடையைச் சுறுசுறுவென சுற்றி வந்தார் திருமதி ஸ்டாலின். ( தாலி பெண்ணுக்கு அடிமைச் சின்னம் - பெரியார் சொன்னதா ஞாபகம் )


காமெடி கொசுறு: மணமக்களை வாழ்த்திப் பேசியவர்களில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி.சேகரும் அடக்கம்.

24 Comments:

Rajaraman said...

\\( தாலி பெண்ணுக்கு அடிமைச் சின்னம் - பெரியார் சொன்னதா ஞாபகம் )//

இந்த குசும்பு தானே வானான்கிறது. அதெல்லாம் மற்ற உடன்பிறப்பு குடும்பங்களுக்கு. தலைவர் குடும்பத்துக்கு விதிவிலக்கு.

Anonymous said...

http://dubakoormannan.blogspot.com/2009/03/37.html

K SRINIVASAN said...

what is happening...
It would be better if idlyvadai can give more details about their interaction

Viji Sundararajan said...

//
'திருக்குவளையில் இருக்கும் அம்மன் பெயர் வண்டமரும் பூங்குழலி.
//
கடவுள் இல்லை , ராமர் engineer ஆ ? ஆனாலும் நாங்க எங்க family ள்ள, அம்மன் பெயர்தான் வைப்போம்..

//அதை அழுத்தமாக நிரூபித்தார் கருணாநிதி.//

Anonymous said...

interesting picture that.

A classic caricature of Good against EvilSSSSS.

R.Gopi said...

"தல"யின் முரண்பாடு நாத்திகவாதம்


நாத்திக தலைவன் - ஆஸ்பத்திரியில்
அவன் நன்கு குணமாக
அனைத்து வழிபாட்டு தலங்களிலும் அர்ச்சனை.

IdlyVadai said...

//what is happening...
It would be better if idlyvadai can give more details about their interaction//

இன்னும் கொஞ்சம் அப்டேட் செய்திருக்கிறேன். பாருங்க

பெசொவி said...

Only in respect of Shri. "Cho"ji, all leaders give much regard to him when they meet him. This shows how judicious is Cho's comments.
Hats off to you, "Cho"ji.

பெசொவி said...

Only in respect of Shri. "Cho"ji, all leaders give much regard to him when they meet him. This shows how judicious is Cho's comments.
Hats off to you, "Cho"ji.

கிரி said...

:-)

Anonymous said...

One thing you have to appreciate, even after writing against MK ruling and family issues etc. still he got invitation and able to converse with them freely. That is absolutely impossible with Jayalalitha. This one thing you have to appreciate with MK

Anonymous said...

DMK never insisted that Thali is a symbol of slavery.Karunanidhi has presided over many weddings where he would take the thali from the plate and give it to the groom.
Idly Vadai should check for facts.

IdlyVadai said...

//DMK never insisted that Thali is a symbol of slavery.Karunanidhi has presided over many weddings where he would take the thali from the plate and give it to the groom.
Idly Vadai should check for facts.//

அனானி,

உங்க கருத்துக்கு மிக்க நன்றி. பெரியார் தாலி பற்றி என்ன சொல்லியிருக்கார் என்று படித்துப்பாருங்கள். பெரியாரின் மாணவன், பெரியார் என் கனவில் வந்தார் என்று அடிக்கடி சொல்லும் கலைஞர் ஏன் தன் வீட்டு திருமண விழாவில் அதை கடைப்பிடிக்கவில்லை ?

குங்குமத்தை பார்த்து, ‘ரத்தம் வழிகிறதா?’ என்று கிண்டல் செய்யும் கலைஞர் தன் மனைவி/துணவியர் குங்குமத்தை பார்த்தால் மட்டும் கிண்டல் செய்ய மாட்டார்.

சாய்பாபா வந்த போது என்ன நடந்தது என்று உங்களுக்கே தெரியும்.

வேற திருமணங்களில் பரவாயில்லை, இது தன் இல்லத் திருமணம் அதில் ஏன் இவ்வாறு செய்கிறார் ?

நல்ல வேளை எல்லோரும் வந்தார்கள், ஏன் நரேஷ் குப்தா வாரவில்லை என்று அறிக்கை விட்டாலும் விடுவார்.

Anyway thanks for reminding about the facts

Krish said...

திராவிடர் கழக தொண்டர்கள் யாருமே இல்லையா? எதாவது ஒன்னுனா வரிஞ்சு கட்டிக்கிட்டு வந்துவான்களே!

Anonymous said...

Idlyvadai ,
99% of your posts are against DMK and MK family...? You never missed a chance to highlight the conversy in MK's speeches and Deeds. Is this because they are the ruling party/family?... If it is Jayalalitha's rule...Will you do the same...?...I have been reading your blog only for past couple of months. I have never seen such big posts against(/for) Jaya Lalitha....May be I missed it.. Just curious to know , why you always write about MK and not so much about JayaLalitha..? thats it..

ப.கந்தசாமி said...

நன்றாக எழுதுகிறீர்கள். நான் அனுபவித்து படிக்கிறேன்.
ப.கந்தசாமி

Anonymous said...

குறித்து வைத்து கொள்ளுங்கள்
பெயரில் மு.க என்று முடியும் எந்த கட்சியாலும்
தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது!

Anonymous said...

Maatrar Manaivasal Midhiyaamai Kodi Perum.

That Mr.Cho honours invitation from Antisocial elements is unfortunate.

I differ from the view of Vedandadesikan, in that the visit by Cho remainds me of the proverb, "Paalukkum Kaaval; Poonaikkum Thozhan.

VIKNESHWARAN ADAKKALAM said...

:) நல்லா கொசுறுறிங்க பாஸ்...

Anonymous said...

//Maatrar Manaivasal Midhiyaamai Kodi Perum.

That Mr.Cho honours invitation from Antisocial elements is unfortunate.

I differ from the view of Vedandadesikan, in that the visit by Cho remainds me of the proverb, "Paalukkum Kaaval; Poonaikkum Thozhan.//

The world has only two groups,Mr.Chovisiri!They are Rich and poor.
Rest(caste,Religion,Principle based) are all humbug

Vijayashankar said...

Though Cho is non partisan (!) his mag makes life appear as right wing. But he does visit all the functions of rulers.

Anonymous said...

There are certain elementary principles of behaviour, attitude and etiquette. One can be a political opponent but at social
gatherings civilized behaviour is
a sign of maturity and shedding of all personal animosities and predilections at such times is a
virtue. Chovisiri's reaction to Vedanta Desika Dasan
lacks an understanding of this
basic principle. Political opposition need not mean lack of
sagacity and decorum. Grace and
dignity are to be shown on such
occasions as these. One can of course jokingly speculate like Idlyvadai.

Anonymous said...

பச்சோந்தி...

Anonymous said...

//One thing you have to appreciate, even after writing against MK ruling and family issues etc. still he got invitation and able to converse with them freely. That is absolutely impossible with Jayalalitha. This one thing you have to appreciate with MK//

இதைத் தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்தியது பாஜாகவினர். முஸ்லீம் லீக்கின் மறைந்த முன்னாள் தலைவர் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார் இல.கணேசன். கருநாநிதியின் வீட்டு விசேசங்களிலும் அவர் கலந்துகொண்டார்.

தேசிய கட்சியான காங்கிரஸ்காரர்களில் திமுக ஆதரவு குழுவினர் மட்டும் திமுக வீட்டுப் பிரமுகர்களின் விசேசத்தில் கலந்துகொள்வார்கள். அதிமுக ஆதரவு குழுவினர் அதிமுக வீட்டுப் பிரமுகர்களின் விசேசத்தில் கலந்துகொள்வார்கள். மற்றவர்கள் அப்போதைய கூட்டணி நிலவரத்தையொட்டி நடந்துகொள்வார்கள்.

ஏனெனில், திராவிட பாரம்பரியத்தில் வந்தவர்கள் அரசியல்தாண்டி நட்புப் பாராட்டுவதை கட்சிமாறுவதற்கான வேலையாக மட்டுமே செய்துவந்தார்கள். செய்துவருகிறார்கள். செய்துவருவார்கள்.

இந்தப் பாரம்பரியத்தை மீறினால் கல்தா கிடைக்கும். தனது வீட்டுத் திருமணத்திற்கு கருநாநிதியை அழைத்துத் திராவிட பாரம்பரியத்திற்கு எதிராக நடந்துகொண்ட எஸ்.வி. சேகரை அவரது திராவிட பாரம்பரிய கட்சி ஒதுக்கியது. இங்கனம் அதிமுக தலைமையால் ஒதுக்கப்படும் எஸ்.வி. சேகருக்குத் திருமண அழைப்புப் போனதில் வியப்பில்லை. பல்வேறு கட்சிகளுக்குப் பல்வேறு காலங்களில் ஆதரவளித்த சோ ஒரு பத்திரிக்கையாளர். எந்தக் கட்சியிலும் அவர் உறுப்பினர் இல்லை. கருநாநிதியை “கலைஞர்” என்று எப்போதும் குறிப்பிடுபவர். எனவே அவர் அழைக்கப்பட்டிருப்பது ஆச்சரியப்படக்கூடிய ஒன்றாக இருந்திருக்கக் கூடாது. ஆனால், கட்சி சார்பற்ற ஒரு விமரிசகருக்கு அழைப்பு வந்ததை நினைத்துப் புளங்காகிதம் அடையும் நிலையில்தான் தமிழ்நாட்டு சனங்கள் இருக்கிறார்கள்.

முன்பெல்லாம் தெருச்சுவர்களில் தமிழில் எழுதிப் புளங்காகிதம் அடைவார்கள். இப்போது ஆங்கிலத்தில் எழுதிப் புளங்காகிதம் அடைகிறார்கள்.

யாருக்கும் சுரணையில்லை.