பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 26, 2009

பொட்டுக்கு பதில் புத்தகம்

இலங்கை ராணுவம் பொட்டு அம்மான் மறைவு இடத்தை கண்டுபிடித்து சில படங்களை வெளியிட்டுள்ளார்கள்.

பொட்டு அம்மன் இருப்பிடத்தில் கிழக்கு பதிப்பகத்தின் விடுதலைப்புலிகள் புத்தகம் கிடைத்துள்ளது. கிழக்கு பதிப்பகம் விடுதலைப்புலிகள் இருப்பிடத்தில் கூட புத்தக கண்காட்சி நடத்துகிறார்களா என்று தெரியவில்லை.


( கையில் புத்தகம் )

( புத்தகம் போஸ் தருமா ? )

( source: http://www.defence.lk/ )

13 Comments:

கொடும்பாவி-Kodumpavi said...

நீங்க புலி ஆதரவா? எதிர்ப்பா?

R.Gopi said...

//கொடும்பாவி-Kodumpavi said...
நீங்க புலி ஆதரவா? எதிர்ப்பா?//

*********

சீயக்காய் கூட "மீரா ஹெர்பல்"தான். புலி மார்க் அல்ல .........

கிருஷ்ண மூர்த்தி S said...

காசுகிடைத்தால், பரபரப்பாக ஏதோ ஒரு தலைப்பை வைத்து அவர்கள் நரகத்தில் கூட கடைவிரிப்பார்கள், எங்களுக்கு இந்த சொர்க்கம்-நரகம், இந்தியத் தத்துவ மரபு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை என்று பட்டை அடித்துக் கொண்டே...சாரி தம்பட்டம் அடித்துக் கொண்டே!

Anonymous said...

பொட்டு அம்மான் மறைவு இடத்தில் இலங்கை தமிழர்களின் ரத்தகறை இருக்கும்.

மாயவரத்தான் said...

கிருஷ்ணமூர்த்தி யாரைச் சொல்கிறார்? கிழக்கையா? அப்படியெனில் அவரது வார்த்தைகள் கண்டிக்கத்தக்கது. அவர்கள் என்ன சமூக சேவை என்று ஜல்லியடித்துக் கோண்டு மக்கள் சொத்தையா அபகரித்துக் கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் வியாபாரம் செய்யத்தான் கடை திறந்திருக்கிறார்கள். அவர்கள் அப்படி செய்வதை கண்டபடி பேசுபவர்களை 'ஜெலூசில்' பார்ட்டி என்பேன்.

பி.கு. :- கிழக்குக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!

பரத் said...

//அவர்கள் அப்படி செய்வதை கண்டபடி பேசுபவர்களை 'ஜெலூசில்' பார்ட்டி என்பேன்.//
Repeattu!!

கிருஷ்ண மூர்த்தி S said...

மாயவரத்தண்ணா!
அங்கேயும் கடை போட்டாங்களான்னு பதிவுக்கு அவங்க இங்கேயும் போடுவாங்கன்னு பின்னூட்டத்துக்கு ஜெலுசில் பார்டி பட்டம் கொஞ்சம் அதிகமுங்கன்னா..ஏன்னா, இவங்க வியாபாரம் செய்யுரதிலேயோ, ஜல்லி அடிக்கிரதுலேயோ எனக்கு எந்த அக்கறையும், அல்லது வயித்தெரிச்சலும் இல்லீங்கண்ணா..ஆனா, சுண்டைக்காய் சரக்குக்கு புல்டப்புக்கு மேலே புல்டப்புக் கொடுக்கிறாங்க பாருங்க..அங்கே தான் கொஞ்சம் விஜய் படத்துல சும்மா பன்ச் டயலாக் மேலே பன்ச் டிக் விடறா மாதிரி கொஞ்சம் எரிச்சல் வருதுங்கண்ணா....அதான் மாட்டரு.

பாவம்,இதுக்கெல்லாம் போயி கிழக்குக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாதுன்னேல்லாம் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டிருக்கீங்க....தேவைங்களா அண்ணா?

கிழக்குக்கும் எனக்கும் கூடத் தான், சம்பந்தமோ, தொழில் போட்டியோ கிடையாது.

அப்புறம் பரத், இந்த ரிப்பீட்டேய்ய் கொஞ்சம் நல்ல இருந்துச்சு. ந்ல்லா ப்ராக்டிஸ் பண்ணுவீங்க போல!

மாயவரத்தான் said...

தம்பீ, பில்டப்புக்கு மேல பில்டப்பு கொடுக்கிறது தான் பிசினசு தம்பீ.

சரக்கு இருந்தா மக்கள் வாங்கப் போறாங்க.

Anonymous said...

மருதனின் காஸ்டிரோ புத்தகத்தை க்யூபாவில் கண்டுபிடித்திருக்கிறார்களாமே? விஷயம் தெரியுமோ?

கிருஷ்ண மூர்த்தி S said...

//தம்பீ, பில்டப்புக்கு மேல பில்டப்பு கொடுக்கிறது தான் பிசினசு தம்பீ.//

சரக்கே இல்லாம சன் டி வீ தன்னுடைய சொந்தத் தயாரிப்புகளுக்குக் கொடுக்கிற புல்டப்ப இவங்க மிஞ்சிட்டாங்கிறது தான் விஷயமே அண்ணா!

நீங்க அவங்களையும் மிஞ்சிடுவீங்க போலிருக்கே!

மாயவரத்தான் said...

சரக்கே இல்லாமல் யாரும் நீண்ட நாட்களுக்கு காலம் தள்ள முடியாது தம்பீ. கொஞ்ச நாளைக்கு தான் ஜல்லி அடிக்க முடியும். அப்படி சரக்கு இல்லாம தான் காலம் ஓட்டுறாங்கன்னு நீங்க நெனச்சா, மக்களை முட்டாளுன்னு நினைக்கிறீங்கன்னு அர்த்தம்.

அப்படி சரக்கு இல்லைன்னு நீங்க நெனைச்சா அதை வாங்காம போயிட்டே இருங்க. முடிஞ்சா, திறமை இருந்தா 'சரக்கு' இருக்கிற மாதிரி நீங்க புதுசா வியாபாரம் ஆரம்பிங்க. அப்புறம் பேசலாம்.

இதை விட்டுட்டு மத்தவங்களை பில்டப்புன்னு சொல்றது எந்தவிதத்திலயும் சரியில்லை. இதுக்கு எங்க ஊருப்பக்கம் எல்லாம் ஒரு பழமொழி சொல்லுவாய்ங்க. அதை சபையில சொல்றது அவ்வளவு நாகரீகமில்லை தம்பீ. வேணாம், விட்டுருவோம்.

ஆத்தூரான் said...

Kena pasanga mathiri comment eluthathinga da , ivanuga ellam IT company la picha edukkira methavigal.US la recession endral ingu pichai eduppargal, US la Market peak endral flight pidichu pot thalai vanangi nirkum adimaigal.

மாயவரத்தான் said...

அடடே, யாருப்பா இந்த ஒலக மகா புத்திசாலி?