பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, March 10, 2009

விஜய் டிவியில் புதிய சீரியல்

விஜய் டிவியில் புதிய சீரியல் முழுவிவரம்...


விஜய் டிவியில் நடக்கும் சூப்பர் சிங்கர்ஸ் 2008 சில வாரங்களுக்கு முன்பு எலிமினேட் செய்தவர்களை, எலிமினேட் செய்த நடுவர்களை கொண்டு திரும்பவும் அழைத்தார்கள். இதனால் 5 பேராக இருந்த குழு தற்போது 9 பேராக மாறிவிட்டது.

சீரியல் என்றால் அழுகை இல்லாமலா ?

ராகினிஸ்ரீ பாடி முடித்துவிட்டு, எப்படா அழலாம் கண்ணீரை கண்களில் தேக்கிவைத்துக் கொண்டு காத்துக்கொண்டிருக்கிறார். கொஞ்சம் கேப் கிடைத்தாலும் வீடியோ எடுப்பவர் ராகினிஸ்ரீயை அடிக்கடி ஒரு ஃபிரேமுக்குள் வேண்டுதல் போல் காமித்துவிடுகிறார். எனக்கென்னமோ ராகினிஸ்ரீக்காகவே ஐந்து ஒன்பதானதுபோல் இருக்கிறது.

இது போறாது என்று இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் பிரசன்னா அழப்போகிறார்.
( இவர் அழுவதை கிட்டத்தட்ட ஒரு வாரம் விளம்பரம் செய்துவிட்டார்கள், அதனால் இன்று பார்க்காமல் இருந்திட முடியுமா ? ).

காமெடி இல்லையே என்ற குறையை தீர்க்க பிளாக் & வைட் ரவுண்ட் என்று ஒன்றை வைத்து சாவித்திரி மாதிரியும், துப்பாக்கியை வைத்துக்கொண்டு உண்ணி ஐயோ எழுதவே முடியலை அவ்வளவு காமெடி. இதை தவிர மாலினி உன்னி ஜி உன்னிஜி என்று கூப்பிடுவது ...

நிச்சயம் இந்த வருட இறுதிக்குள் இந்த போட்டி முடிந்துவிடும். ஏன் என்றால் இது சூப்பர் சிங்கர் 2008!

விஜய் டிவியில் சீரியல் இல்லாத குறையை இந்த நிகழ்ச்சி ஈடு செய்கிறது.

தேர்தல் முடிந்து யார் அடுத்த பிரதமர் என்று கூட தெரிந்துவிடும், ஆனால் சூப்பர் சிங்கர்ஸ் எப்போ முடியும் என்று யாருக்கும் தெரியாது. Until next post it is Idlyvadai singing off Tschüss

5 Comments:

மணிகண்டன் said...

Auf Wiedersehen IV.

அறிவிலி said...

சின்மயி நன்றாக நடத்திக் கொண்டிருந்தார்.

மாலினி சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி... பயங்கர கொடுமை.

உண்மையில் நன்றாக இருந்த நிகழ்ச்சி, இழுவையின் காரணமாக தரம் கெட்டுவிட்டது நிஜம்.

Anbezhilan said...

பிரசன்னா எவ்வளவு தப்புத்தப்பாக பாடினாலும் நடுவர்களுக்கு அவர் தான் செல்லப் பிள்ளை. "நிறைய எடத்துல சுருதி போச்சு .இருந்தால் என்ன over all very good performance " என்று சொல்லி அடுத்த ரௌண்டுக்கு அனுப்பிவிடுவார்கள். ராகினிஸ்ரீ எவ்வளவு சொதப்பினாலும் அவரை உள்ளே கொண்டு வந்துவிடுவார்கள் . ஒருவேளை select செய்ய முடியாத அளவுக்கு அவர்கள் சொதப்பி விட்டால் அன்று யாருக்குமே elimination இருக்காது. நடுவர்கள் ஒருதலை பட்சமாக இருப்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது. ராகினிஸ்ரீ இந்த சீரியலில் அழலாம். ஆனால் ப்ரசன்னா ? ஒரு ஆண் அப்படி அழுது வடிந்து நாடகம் போடுவது அசிங்கம்.

SK said...

ஐயோ............. ஐயோ.............என்னத்த சொல்றது. இந்த மாலினி அடிக்கிற கூத்து தான் தங்க முடியல........................

வாழவந்தான் said...

இதில் பாடுவதை விட அழுவதற்கு பரிசுகள் அதிகமோ? ஒரு எபிசொடிற்கு மூன்று விளம்பர இடைவேளை என்பதுபோல் இருவர் கட்டாயம் அழவேண்டும்.

நம்ம மக்கள் அறிவிக்கப்பட்ட அறிவிக்கப்படாத மின் துண்டிப்பு எல்லாம் தாண்டி நெடுந்தொடரு பார்த்து வாழ்கை முழுக்க அழ பழகியதால் பாடல், நடன நிகழ்ச்சிக்கும் அழுகை தேவையோ? இப்படியே போனா காமெடி நிகழ்ச்சில கூட கண் கலங்கும் சோக காட்சிகள் தேவை படலாம்.