பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, March 22, 2009

மயிலாப்பூரும் திருமங்கலமாக மாறும் - எஸ்.வி.சேகர்

மயிலை மாங்கொல்லையில் பொதுக்கூட்டம் நடத்தி மக்கள் முன்னிலையில் எனது ராஜினாமா முடிவை அறிவிப்பேன் என்றும், நான் ராஜினாமா செய்த பிறகு மயிலாப்பூரும் ஒரு திருமங்கலமாக மாறும் என்றும் அதிமுக எம்எல்ஏ எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக அம்பா சங்கர் கமிஷன் அமைக்கப்பட்டது. அருந்ததியர்களுக்காக ஜனார்த்தனன் கமிஷன் அமைக்கப்பட்டது.

அதே போல் பிராமணர்களுக்கும் ஒரு கமிஷன் அமைத்து ஆராய வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதியிடம் இன்னும் சில நாட்களில் மனு கொடுக்க உள்ளோம். பிராமணர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க முதல் அமைச்சர் கருணாநிதியால் தான் முடியும். எங்கள் சமூகத்திற்கு நல்லது செய்பவரை ஆதரியுங்கள் என்று ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்வேன்.

மயிலாப்பூர் தொகுதியில் எனக்கு போட்டியிட சீட் தந்தது ஜெயலலிததான். ஆனால் என்னை வெற்றி பெற செய்தது மயிலாப்பூர் தொகுதி மக்கள். தொகுதி மக்களுக்கு என்னென்ன கடமைகள் செய்யவேண்டுமோ அதை செய்து வருகிறேன். தொகுதி மக்களிடம் எனக்கு நல்ல மரியாதை இருக்கிறது.

அ.தி.மு.க.வில் ஒரு எம்.எல்.ஏ.வை சரியாக நடத்த தெரியவில்லை. எனக்கும் கட்சிக்கும் ஏற்பட்ட விரிசல் பிளவாகி விட்டது. இனி அதை சரி செய்ய முடியாது. போலியாக நடித்து கட்சியில் தொடரவும் எனக்கு விருப்பம் இல்லை.

நான் எந்த முடிவை எடுத்தாலும் என் தொகுதி மக்கள் முன்னிலையில்தான் எடுப்பேன். சித்திரையில் முத்திரை பதிப்போம் என்பார்கள். வருகிற ஏப்ரல் 14 ந்தேதி சித்திரை முதல்நாளில் நான் முத்திரை பதிப்பேன்.

மயிலை மாங்கொல்லையில் பொதுக்கூட்டம் நடத்தி மக்கள் முன்னிலையில் எனது ராஜினாமா முடிவை அறிவிப்பேன். நான் ராஜினாமா செய்கிறேன் என்ற விபரத்தையும் மக்களுக்கு தெரிவிப்பேன். நான் ராஜினாமா செய்த பிறகு மயிலாப்பூரும் ஒரு திருமங்கலமாக மாறும் என்றார்.

சித்திரை மாசம் மைலாப்பூர் வாசிகளுக்கு பிரியாணி உண்டு

13 Comments:

R.Gopi said...

வருகிற ஏப்ரல் 14 ந்தேதி சித்திரை முதல்நாளில் நான் முத்திரை பதிப்பேன்.
------------------------

"THALA" will be upset with the above Date, Mr.S.V.Sekar.....

M Arunachalam said...

Gopi,

S.V.Sekar is very careful. He has NOT mentioned the date as Tamil New Year but only as சித்திரை முதல்நாளில். So, he has taken care NOT to offend MK by citing April 14th as Tamil New Year's day. MK will be very happy & you will see his positive reaction very soon.

முருகன் ஜெயராமன் said...

யாரும் ட்ராமா போட கூப்பிடலனா,இப்படித்தான் காமடி பண்றதா

R.Subramanian@R.S.Mani said...

I feel, it is better he would announce his decision in advance on1ST APRIL 2009, since these politicians are making us fool for their wellfare; But a ggo comedy
Suppamani

Anonymous said...

'வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக அம்பா சங்கர் கமிஷன் அமைக்கப்பட்டது. அருந்ததியர்களுக்காக ஜனார்த்தனன் கமிஷன் அமைக்கப்பட்டது.'

Ambashankar Commssion was a commission on backward classes. Janardhanan is chairman of backward classes. He was asked
to examine the demand for internal
reservation for Arundathiars.

ரிஷபன்Meena said...

அம்மா மறுபடி ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு அண்ணாவுக்கு ஆப்பு இருக்குமோ என்னவோ. இட்லி மஞ்சள் கமெண்ட் தூள்

Anonymous said...

s v சேகரின் மனத்தாங்கல் நியாயமானதே !
என்ன இருந்தாலும் அம்மா அவரை நடத்திய விதம் கண்டிக்க தக்கது.
ஆனால் புலியிடம் கோபப்பட்டு கரடியிடமா போவது ?

Krish said...

////சித்திரை மாசம் மைலாப்பூர் வாசிகளுக்கு பிரியாணி உண்டு/////

பிரியாணி ஆ? தயிர் சாதமா?

R.Subramanian@R.S.Mani said...

AAHHA; Curd Rice, if conbined with VADU MANGA' would be supr one;
n nett if they are not giving a LOLLY POP; OK

Suppamani

Anonymous said...

mayilaporil biriyaniya?? Paavam Adukal.

Mayilaporil biriyankikku enna vaelai?? venumendral Puliyodharaiyum pongalum podalam..

Anonymous said...

நேற்று சேகர் வந்திருந்த ஒரு சிறிய கூட்டத்தில்அவரிடம் : என்ன மஞ்சள் சட்டை போட்டுக்கொண்டு வரவில்லை என்று கேட்டேன்.உதட்டைப் பிதுக்கிவிட்டு “ அதெல்லாம் கிடையாது” என்றார். அத்துடன் அரசியல் தனக்கு ஒத்து வரவில்லை. கட்சிக்காரனுக்கு தன் மூலமாக பணம வருவாய் இல்லை என்றார். ”நான் ராஜினாமா செய்தால், தேர்தல் வரும், அப்போ எல்லாருக்கும் பண்ம் கிடைக்கும்.” என்றார்.---
டில்லி பல்லி

Anonymous said...

நேற்று சேகர் வந்திருந்த ஒரு சிறிய கூட்டத்தில்அவரிடம் : என்ன மஞ்சள் சட்டை போட்டுக்கொண்டு வரவில்லை என்று கேட்டேன்.உதட்டைப் பிதுக்கிவிட்டு “ அதெல்லாம் கிடையாது” என்றார். அத்துடன் அரசியல் தனக்கு ஒத்து வரவில்லை. கட்சிக்காரனுக்கு தன் மூலமாக பணம வருவாய் இல்லை என்றார். ”நான் ராஜினாமா செய்தால், தேர்தல் வரும், அப்போ எல்லாருக்கும் பண்ம் கிடைக்கும்.” என்றார்.---
டில்லி பல்லி

Anonymous said...

S.Ve Sekar is an opportunist..