பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 20, 2009

ஏன் கூட்டணி - விஜயகாந்த அறிக்கை

பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதில் எல்லா கட்சிகளும் மிகத் தீவிரமாக உள்ளது.
கொள்கை எல்லாம் அப்பறம் பார்த்துக்கொள்ளலாம் கூட்டணியை முதலில் முடிவு செய்யலாம் என்று களம் இறங்கிவிட்டார்கள்.

விஜயகாந்த் அறிக்கை கீழே...


பாமக, தேமுதிகவின் கண்ணாமூச்சி எல்லோருக்கும் தெரிந்தது. திமுக, அதிமுக இரண்டும் இவர்களை சேர்க்க சேர்க்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

பா.ம.க., தே.மு.தி.க. இரு கட்சிகளுக்கும் சரி சமமாக தலா 6 தொகுதிகளை கொடுக்க காங்கிரஸ் முன் வந்தது. பா.ம.க., தே.மு.தி.க. இரு கட்சிகளுக்கும் கொள்கை ரீதியாக உரசல் நிலவுவதால்(அப்படியா?), இரு கட்சிகளும் ஓரணியில் நிற்க தயங்குகிறது.

பா.ம.க.வை சேர்த்தால் கூட்டணிக்கு வர மாட்டோம் என்று தே.மு.தி.க. தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. அது போல பா.ம.க. தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிபந்தனையால் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கூட்டணி அமைப்பதில் இழுபறி நீடித்துவருகிறது. இந்த இழுபறி இந்த வாரத்துடன் முடிந்துவிடும் என்று நினைக்கிறேன்.


இந்த நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் சேர பா.ம.க. முடிவு செய்து இருப்பது தெரிய வந்தது. பா.ம.க. வுக்கு 7 தொகுதிகளை கொடுக்க அ.தி.மு.க. சம்மதித்துள்ளதாக தெரிகிறது. இன்னும் சில தினங்களில் இது பற்றி அதிகாரப்பூர்வமாக தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பா.ம.க. திடீரென தன் நிலையில் இருந்து மாறியதால், காங்கிரஸ் மேலிடத்தலைவர்கள் நேற்று தே.மு.தி.க.வை அதிகாரப்பூர்வ கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த அழைத்தனர். இதை ஏற்று தே.மு.தி.க. மூத்த தலைவர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், சுதீஷ் இருவரும் நேற்று டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றனர். அதற்கு முன்பு நேற்று மாலை அவர்கள் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவை சந்தித்துப்பேசினார்கள்.

இன்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் அகமதுபடேல் மற்றும் குலாம் நபி ஆசாத்தை பண்ருட்டி ராமச்சந்திரன், சுதீஷ் இருவரும் சந்தித்து தொகுதிப்பங்கீடு பேச்சு நடத்துகிறார்கள். தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய காங்கிரஸ் கட்சி தயாராக இருப்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தே.மு.தி.க. வினர் 8 முதல் 10 தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறார்கள். ஓரிரு தொகுதிகள் குறைந்தாலும் காங்கிரசுடன் அனுசரித்து செல்ல தே.மு.தி.க. விரும்புவதாக கூறப்படுகிறது. எனவே காங்கிரஸ்-தே.மு.தி.க. தலைவர்கள் இன்று ஒரு முடிவுக்கு வந்து விடுவார்கள் என்று தெரிகிறது. தே.மு.தி.க. வினர் கோவை, வேலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளை காங்கிரசிடம் விடாப்பிடியாக கேட்பதாக தெரிய வந்துள்ளது. இந்த தொகுதிகள் அனைத்தும் தி.மு.க., மற்றும் காங்கிரசுக்கு சாதகமான தொகுதிகளாகும். தே.மு.தி.க.வின் இந்த தொகுதி வேட்டை தி.மு.க. தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. என்றாலும் சில தொகுதிகளை விட்டுக்கொடுப்பதன் மூலம் பிரச்சினை தீர்க்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. காங்கிரஸ் - தே.மு.தி.க. இடையில் நாளை (சனி) உடன்பாடு வரும் என்று தெரிகிறது.

காய்கறி வியாபாரம் நடத்திய பின் இவர்கள் சென்னை வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறார்கள்.


டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்துப்பேசி தொகுதி உடன்பாட்டில் விஜயகாந்த் கையெழுத்திடுவார் என்று செய்திகள் வருகிறது.

அதற்கு பின் விஜயகாந்த் இந்த அறிக்கையை வாசிப்பார்:( சும்மா ஒரு கற்பனை தாங்க )

கட்சியின் கொள்கை அளவில் நாங்கள் வித்தியாசமானவர்கள் என்பதை ஏற்கனவே நிருபித்து விட்டோம். மக்கள் தொண்டில் நாங்கள் வித்தியாசமானவர்கள் என்பதை நிரூபிக்கும் பொருட்டு இந்த பாராளுமன்ற தேர்தலை ஒரு வாய்ப்பாக கொண்டு, சில தொகுதிகளையாவது வெற்றி பெற்று மக்கள் தொண்டாற்ற வேண்டும் என்கின்றக் காரணத்தால் இம்முறை கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளோம். ஏற்கனவே நாம் அறிவித்தது போல் நமக்கு நாடாளுமன்ற தேர்தல் முக்கியமல்ல சட்ட மன்ற தேர்தல்தான் இலக்கு, என்பதை உணந்து இந்த கூட்டணியில் போட்டியிடுகிறோம். மற்றபடி எங்கள் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. மத்திய அரசு ஆட்சி அமைத்த பின்பு இலங்கை தமிழர்களுக்கு பாராளுமன்றத்தில் நாங்கள் குரல் கொடுப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டின் சார்பில் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களே முதலமைச்சராக இருக்கிறார். இந்திய அரசையும் அவர் வழிநடத்துகிறார். அவருக்குத் துணையாக இப்போது நானும் இருப்பேன்


சைடுல ஓட்டு பெட்டி இருக்கு மறக்காம போடுங்க

18 Comments:

Loganathan - Web developer said...

அப்ப பா.ம.க... அ.தி.மு.க பக்கம் தானா?

Anonymous said...

If vijayakath joins with DMK,
definitely he will loose in 2011 MLA election.

YARUKKUM VETKAM ILLAI

Venkatesan P said...

Vijaykanth should stand alone in this lok sabha election

Rajaraman said...

s.s.ராஜேந்திரன், சிவாஜி கணேசன், T.ராஜேந்தர், பாக்கியராஜ், மன்சூர் அலி கான், விஜயகாந்த்.

Anonymous said...

விசியகோந்து பதவி கிடைக்கிறது முன்னாடிய இப்படி கொள்கைகளை காத்துல பறக்க விடுறான்..இவனையெல்லாம் நம்பி ஓட்டு போட்டா விளங்கிடும்

ப்ரியா கதிரவன் said...

கேப்டன் காங்கிரஸ் கூட்டணிக்கு சென்றால்...
திமுகவிற்கு சாதகமாக அமையும்
அதிமுகவிற்கு சாதகமாக அமையும்
பாமகவிற்கு சாதகமாக அமையும்

Keep a fourth option also.
4.Does not matter to anyone.
:-)

Krish said...

காங்கிரசஸ் உடன் கூட்டணி சேர்த்து படு தோல்வி அடைந்தால் அப்பறம் கஷ்டந்தான். ஆனால், இரண்டு மூன்று தொகுதிகளில் வென்று விடுவாரேயானால், பிழைத்துக் கொள்வார். ராமதாஸ், வைக்கோ அடிக்காத பல்டியா?

Anonymous said...

Can Idlyvadai/anybody help me to get Tamil Typing software for Linux(SUSE Linux) ? am asking for software like e-kalappai ?

Anonymous said...

periya zero + chinna zero enna aachu?

JesusJoseph said...

//நாளை (சனி) உடன்பாடு

Change it to
நாளை (சனியன் பிடித்த) உடன்பாடு

R.Gopi said...

எனக்கு நடிகர் சங்க பதவிய தந்த நீங்க, இந்த நாட்ட ஆளுற பதவியும் தந்து பாருங்க. அப்புறம் நம்ம நாட்ட தேடி, அமெரிக்கா காரன் வருவான். எதுக்காக வருவானா?? என்னிய கேட்டா?? எனக்கு என்னடா தெரியும்?!!


கடைசியா ஒண்ணு சொல்றேன், எனக்கு ஓட்டு போடுங்க, வீட்டுக்கு ஒரு ரேசன் கடை தொரப்பேன். சீம எண்ணை, அஸ்கா சக்கரை, வருசா வருசம் பொங்கலுக்கு இலவசமா கரும்பு, தீபாவளிக்கு வெடி எல்லாம் இலவசமா குடுத்து பட்டைய கெளப்ப போறேன்.


இன்னும் பேசறதுக்கு நெறைய இருக்கு, பேசிட்டே இருந்தா, அடுத்தவன் வந்து ஆட்சிய புடிச்சி, 5 வருசம் ஆட்சி பண்ணிட்டு போய்டுவான், எல்லாரும் எனக்கே ஓட்டு போடுங்க. நான் இன்னும் 5-10 காலேஜ் கட்டணும், 10-15 கல்யாண மண்டபம் கட்டணும், அதுக்கு உங்க எல்லாரோட ஆச்சியும் தேவை.


யோவ், அது ஆச்சி இல்லைய்யா, ஆசி,

ஆட்சி வேற, ஆச்சி வேற......ஆசி வேற....


(ஐயோ, நமக்கு தமிழே தள்ளாடுதே. நாம மொதல்ல, இந்த தமிழ ஒழுங்கா பேச கத்துக்கணும், நமக்கு தமிழே தகராறு, இதுல அடுத்த மீட்டிங்-ல இங்கலிஷ் வேறயா?? ஐயோ நெனச்சாவே தல சுத்துதே... இவனுங்க வேற நம்ம டங்குவார அறுத்துருவானுங்க. எல்லாத்தையும் போட்டோ புடிக்கறானுங்க ..... அங்க இங்க போட்டு நம்ம மானத்த வாங்கிட போறாங்க .......

(பின்னால் திரும்பி)

தம்பி ஒரு கிளாஸ் சர்பத் போட்டு குடுப்பா ....

டேய் ........... ஏண்டா, சர்பத் கேட்டா அதையே தரணுமா?? சர்பத் குடுக்கற மாதிரி சல்பேட்டா குடுடா பரதேசி)

யப்பா, 4 தொகுதியும் 40 கோடியும் வாங்கறதுக்குள்ள, நாக்குல நொரை தள்ளுதுய்யா அய்யனாரே!!!

எட்வின் said...

வெட்கம் கெட்ட அரசியல்வாதிகள்

முருகன் ஜெயராமன் said...

எல்லா நண்பர்களுக்கும், விஜயகாந்த் தனியா நின்னு ஜெயிக்க இன்னும் பத்து வருஷம் ஆகும்.அதுவரைக்கும் கட்சி இருக்கனும் இல்ல.அரசியலில,கொள்கை முக்கியம் அதை விட வெற்றி ரொம்ப முக்கியம்.{தேர்தல் செலவுக்கு] பணம் ரொம்ப ரொம்ப முக்கியம்.

Rajaraman said...

IV Latest News தெரியுமா: நெல்லை கருப்பசாமி பாண்டியன் AIADMK வருகிராமே?

முருகன் ஜெயராமன் said...

அப்படியா கருப்பசாமி வந்தா,kkssrrபோய்விடுவாரோ

Anonymous said...

This is the best news (vijayakanth joining dmk front) for aiadmk chief and M K stalin in the long run. He will cease to be a competitor for her and to M K stalin. Even if dmk loses this election MK wil feel happy because one potential threat has been effectively neutralised. ravi chennai

SANKAR said...

DMDK'S SPECIALITY IS THAT IT WILL BE A ALTERNATIVE TO THE "KALAGAMS".IF DMDK DISSOLVES WITH ANY ONE OF THE KALAGAM,THEN IT SHOULD BE PUNISHED BY THE PEOPLE.

Ganesan said...

யப்பா, 4 தொகுதியும் 40 கோடியும் வாங்கறதுக்குள்ள, நாக்குல நொரை தள்ளுதுய்யா அய்யனாரே!!!


good comment