தேர்தலின் திசைகள் வலைப்பதிவில் வந்த பதிவு ...
முத்துக்குமாரின் மரணத்திற்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசுதான் காரணம் எனக் கடந்த மாதம் கொந்தளித்த திருமாவளன், அந்தக் காங்கிரஸ் கட்சியே மீண்டும் ஆட்சியில் அமர உதவி செய்ய முன்வந்.திருக்கிறார்.திமுக கூட்டணியில், (அதாவது காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்கக் கோரும் கூட்டணியில்) விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்கும் என அறிவித்திருக்கிறார்.
"பத்து கோடி தமிழர்களின் உணர்வுகளை அவமதித்து விட்டு சிங்களர்களுக்கு முட்டுக்கொடுக்கும் இந்திய அரசின் துரோகப்போக்கை எந்தக்காலத்திலும் தமிழ்ச் சமூகத்தால் மன்னிக்க முடியாது." என ஜவரி 3ம் தேதி முழங்கியவர் திருமாவளவன். இலங்கைப் பிரசினைக்காகத் தீக்குளித்த முத்துக்குமாரின் இறுதிச் சடங்கில் ' வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசை வீழ்த்துவதே இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவையின் பொது வேலைத் திட்டமாக இருக்கும் என அறிவித்த திருமாவளவன் அதற்கு நேர் எதிரான முடிவினை எடுத்திருப்பது ஆச்சரியம் தரவில்லை ஆனால் கேள்விகளை எழுப்புகிறது.
அவரது இந்த முடிவு அவரது கட்சியினருக்கே மகிழ்ச்சி தருவதாக இல்லை.நேற்று நடந்த கட்சியின் செயற்குழு கூட்டத்தில் காங்கிரசிற்கு எதிரான உணர்வு மேலோங்கியிருந்ததாக திருமாவளவன் தனது செய்தியாளரிடம் தெரிவித்ததை இன்றைய இந்து நாளிதழ் வெளியிட்டுள்ளது.
அப்படி இருந்தும் திருமாவளவன் காங்கிரசிற்கு ஆதரவான கூட்டணியை நாடுவதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?
அவருக்கு வேறு வழியில்லை எனச் சொல்ல முடியாது. அவரோடு நெருக்கமாக இருந்து வரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரை தன்னொடு அதிமுக அணிக்கு வருமாறு அழைத்ததாகவும், ஆனால் அந்த யோசனையை திருமாவளவன் ஏற்க மறுத்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. (காண்க தினத்தந்தி அல்லது: http://tinyurl.com/dlshad).
அதிமுக அணியில் ஏற்கனவே இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவையில் உள்ள மதிமுக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன. பாமகவும் அந்த அணிக்குப் போவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அந்தச் சூழ்நிலையில் விடுத்லைச் சிறுத்தைகளும் அந்த அணியில் இடம் பெற்றால், 'வரும் நடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசை வீழ்த்துவது என்ற பொது வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும். குறைந்த பட்சம் இலங்கைத் தமிழர் பிரசினையை முன்னிறுத்தி தாது அரசியல் எதிரியான காங்கிரசை விமர்சிக்க ஒரு வாய்ப்புக் கிட்டியிருக்கும். இப்போது அவர் காங்கிரசை விமர்சிக்க முடியாது மெளனம்தான் காக்க வேண்டும்.
இலங்கைப் பிரசினை குறித்து ஒரு பொதுக் கருத்தை உருவாக்கக் கிடைத்த வாய்ப்பைக் கை கழுவி விட்டு மெளனம் காக்கும் நிர்பந்தத்தை ஏன் திருமாவளவன் மேற்கொண்டார்?
ஒருவேளை இலங்கை பிரசினையில் அவரது நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதோ? ஈழத்தமிழர் விவகாரத்தில் ‘மத்திய அரசின் கொள்கையும் மாநில அரசின் கொள்கையும் ஒன்றுதான்’ என்று கருணாநிதி விளக்கமளித்த பின், 'ஈழத் தமிழர் விடுதலை ஆகிய கொள்கைத்தளங்களில் திமுகவுடன் உடன்பட்டு ஒன்றுபட்டு விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து குரல் கொடுப்போம்” என்கிறார் திருமாவளவன். அதாவது மத்திய அரசின் நிலைதான் தனது நிலை என மறைமுகமான வார்த்தைகளில் தெரிவிக்கிறாரோ?
தேர்தலில் இலங்கை பிரசினை பேசப்படாமல் இருப்பது திமுகவிற்கு சாதகமானது என்பதால் கருணாநிதி திருமாவளவனை இந்த முடிவுக்கு நிர்பந்தப்படுத்தி இருக்கலாம். ஆனால் இதே கருணாநிதி அரசால், இலங்கைப் பிரசினை தொடர்பான போராட்டத்தால் 26 விடுதலைச் சிறுத்தைகள் தேசியப் பாதுகாப்புச் சட்டம், குண்டர்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தனது தொண்டர்களைக் கைது செய்த அரசின் தலைவரையே ஆதரிக்க வேண்டிய கட்டாயம் என்ன?
விடுதலைச் சிறுத்தைகள், பாமக ஆகிய இரு கட்சிகளும் பிரிய நேர்ந்தால் அது இருகட்சிகளின் தொண்டர்களிடைய ஏற்பட்டுள்ள நல்லிணக்கத்தைப் பாதிக்கும் என செயற்குழுவில் கருத்துத் தெரிவிக்கப்பட்டதாக அந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்திருக்கிறார். நல்லிணக்கம் பலவீனப்பட்டு அதன் விளைவாக வன்முறையாக வெடிக்காமல் இருந்தால் நல்லது.
இரண்டு நாடாளுமன்ற இடங்களுக்காக 'எந்தக் காலத்திலும் மன்னிக்க முடியாத துரோகத்தை இரண்டு மாதங்களுக்குள் மன்னித்துப்பதற்கும், முத்துக்குமார் போன்ற இளைஞர்களின் தீக்குளிப்பை புறந்தள்ளவும், இலங்கைப் பிரசினையை ஓரங்கட்டவும் தயாராகிவிட்டார் திருமாவளவன். அந்த இரண்டு இடங்களில் அவர் ஒன்றில் போட்டியிடவும் போகிறார்.
""பத்து கோடி தமிழர்களின் உணர்வுகளை அவமதித்து விட்டு சிங்களர்களுக்கு முட்டுக்கொடுக்கும் இந்திய அரசின் துரோகப்போக்கை எந்தக்காலத்திலும் தமிழ்ச் சமூகத்தால் மன்னிக்க முடியாது" என்றெல்லாம் திருமாவளவன் முழங்கிய ஜனவரி மாதத்தில், இன்னும் சில மாதங்களில் நாடளுமன்றத் தேர்தல் வரப்போகிறது.என்பது திருமாவளவனுக்குத் தெரியாமல் இருந்திருக்காது. அன்று திமுக காங்கிரசை விட்டு விலகிவரும் சூழ்நிலை இல்லை. எனவே அன்று அப்படிப் பேசும் போதே இன்னும் சில நாள்களில் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டி வரும் என அவருக்குத் தெரிந்திருக்கும். தெரியவில்லை என்றால அவருக்குத் தொலைநோக்குப் பார்வையோடு சிந்திக்கும் திறமில்லை எனப் பொருள். தெரிந்தே பேசியிருந்தால் அது சந்தர்ப்பவாதம். குறைந்த பட்சம் மேடைக்கான நடிப்பு.
இவர் சினிமா நட்சத்திரங்கள் அரசியலுக்கு வருவதைப் பற்றி விமர்சிக்கிறார். இவர் சார்ந்திருக்கும் பேரவை கருணாநிதி இரட்டை வேடம் போடுகிறார் என விமர்சிக்கிறது!
'அடங்க மறு! அத்து மீறு! திமிறி எழு! திருப்பி அடி! என்றெல்லாம் இளைஞர்களை உசுப்பேற்றிவிட்டு தேர்தல் நேரத்தில் சிறுத்தைகள் பூனைகளாக மாறிப் போவதைக் கண்டு காலம் சிரிக்கிறது
( நன்றி: மாலன், தேர்தலின் திசைகள் )
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Saturday, March 21, 2009
பூனைகளான சிறுத்தைகள்
Posted by IdlyVadai at 3/21/2009 10:44:00 PM
Labels: அரசியல், தேர்தல்2009
Subscribe to:
Post Comments (Atom)
11 Comments:
திருமா மட்டும் அல்ல. இலங்கை தமிழர்களுக்காக போராடுகிறோம் என்று ஒற்றை ஏமாற்றிக்கொண்டே, காங்கிரசஸ் கூட்டணியில் இருந்து கொண்டு பதவி சுகத்தை அனுபவித்து வரும் ராமதாசும் கேவலமானவர் தான்.
பதவி, பணம் சம்பாதிப்பதை தவிர எந்த ஒரு கொள்கையும் குறிக்கோளும் இன்று எந்த கட்சியிடமும் இல்லை.
திரு இட்லி வடை அவர்களுக்கு,
இந்த உண்மையான அலசலை "பார்ப்பன" விமர்சனம் என்று அந்த "மானம் கெட்ட - சந்தர்ப்பவாத சிறுத்தை தலைவர் (?)" சொல்லலாம். இந்த கேடு கெட்ட பொழப்ப விட்டுட்டு கருணாநிதியும், இந்த "தலித்-இலங்கை தமிழர் கடவுளும்" முழு நேரம் சினிமாவில் நடிக்கலாம். அதன் மூலம் சினிமா சார்ந்த ஒரு சில குடும்பங்களாவது வாழும்/வாழ்த்தும். போகும் காலத்துக்கு கொஞ்சம் புண்யம் தேடி கொள்ளலாம்.
இப்படி ஒரு "thought provoking-post" (from தேர்தலின் திசைகள் வலை பதிவில் இருந்து) பதிவு செய்ததற்கு பாராட்டுகள்/மிக்க நன்றி.
ஏதோ திருமாவளவன் காந்தி மாதிரியும், சுயநலமற்று மக்களின் நல்வாழ்வுக்குப் போராடற மாதிரியும், இதை எதிர்பாராத திருப்பம் மாதிரி போட்டுஇருக்கீங்க. இவங்க எல்லாரும் தனாக்கு ஆதாயம்னா ”jump" அப்டின்னதும் “ how high " ன்னு கேக்கறா ஆளுங்க.. இவனுங்க எல்லாம் இப்படி ஏறுக்கு மாறா செயல் படலைன்னாத்தான் ஆச்சரியப்படணும்..
காங்கிரஸ் கூட்டணியில் யார்? யார்? இருக்க வேண்டும் என்று முடிவு எடுக்க வேண்டிய உரிமை சோனியாகாந்திக்கும், முதல்-அமைச்சர் கருணாநிதிக்கும் தான் உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சில விரும்பத்தகாத செயல்கள் எங்கள் மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்தினாலும், `மறப்போம்... மன்னிப்போம்...' என்று சோனியாகாந்தி சொன்னால், விடுதலை சிறுத்தைகளை கூட்டணியில் ஏற்றுக்கொள்வோம். - சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனம்
இட்லிவடை
இங்கே யாருக்கும் (அரசியல்வியாதிகள் தான், அரசியல்வாதிகள் அல்ல) வெட்கமில்லை என்றுதான் நம் அனைவருக்கும் தெரியுமே.
இதில் திருமா என்ன, குருமா என்ன ...........
ஒரு ஊரில் ஒரு குட்டை. அதில் ஊறுகிறது பல மட்டை..... ஒருத்தர் இருக்காரு, அவர் இந்த மட்டைங்கள ஊற வைக்கறதுல கில்லாடி.
அவர், "பூனையின் மீசை" என்கிற படத்திற்கு கதை வசனம் எல்லாம் எழுதி இருக்காரு.... தெரிஞ்சா கண்டுபிடிங்க.
இதற்கு முன்
சிறுத்தைகளா இருந்து
இப்போதுதான்
பூனைகளான மாதிரி சொல்வது
மிகப்பெரிய தவறு
அவர்கள் (எல்லா அரசியல்வாதிகளும்)
தங்களின் சுயநலத்திற்காக
சாக்கடை என்று கூறியதை பின்பு
அமுதம் என்று பருகுவார்கள்
இன்றய சுயஇன்ப அரசியலில்
ஒரே ஒரு மிருகம் தான் வாழ்கிறது வாழமுடியும்
அது பன்றிகள்
அரசியல் சாக்கடையில்
அதைதவிர வேறு எந்த மிருகம்?
சுயஇன்பத்துடன் வாழமுடியும் சொல்லுங்கள்
enakku arasiyal theriyathunga...
unga blogyai padithu thaan therinthu kollgiren
VC will be irrelevant in another two years. Thirumavalavan lacks the vision to lead and build a party. He is neither pragmatic as Ramadoss nor cares for ideals. Karunanidhi will ensure VC will split again and with that the fall of Thiruma and VC will be obvious.
Ravikumar is too clever.
யாருங்க யோக்கியம்?
அம்மா அடிக்காத பல்ட்டியா?
ஐயா பேசாத சந்தர்ப்பவாதமா?
ஏன், நாம கூட சந்தர்ப்பவாதிகள் தான்.
யாருடைய நிலைப்பாட்டுக்கு பதிவு எழுதணும், யார் யாருக்கு கண்டுக்காம விட்டுறணும்னு செய்றோமில்ல...
நீளும் சுட்டுவிரல்களின் குறி
எப்போதும்
எதிர்திசையில்தான்
- தமிழ்
என்னமோ போங்க :-(
கதர் கட்சி..இப்ப மதர் கட்சி
..அவங்களுக்கு இப்ப முக்கியம் ஆட்சி..
.உப்பு சத்தியாகிரகம் போனது மட்டும் மிச்சம்.
.சோத்துல இப்ப போட்டுக்கிறது...
திராவிட கட்சிகளோட எச்சம்..
சூடு பேச்சுல இருந்தா போதும்...
சொன்னது மே(லி)டம்...
திரும்ப ஜெயிக்கணும்.. அதுக்கு
திருமாவே இருந்தாலும் அவரையும்
அடிவருடணும்......
தேசிய கட்சியே ...இப்படி...என்றால்
திருமா எல்லாம் துக்கடா....
இலங்கையை தூக்கி போடடா?
சிதம்பரம் நோக்கி நட....
தீக்குளீச்சவன் எல்லாம் கம்முனு கிட..
Post a Comment