பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 20, 2009

பாமக அதிமுகவுடன் கூட்டணி, திருமா மறுப்பு

ராமதாஸ் அம்மா பக்கம் வந்துவிட்டார் என்று தெரிகிறது. ”வாங்க நாம இரண்டு பேரும் சேந்து பழகலாம்” என்று திருமாவிற்கு விடுத்த அழைப்பை அவர் ஏற்க்கவில்லை என்று செய்திகள் வருகிறது.

அதே போல் தேமுதிக காங்கிரஸ் பக்கம் செல்லும் என்று தெரிகிறது.


பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று இரவு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுடன் டெலிபோன் மூலம் பேசியதாக கூறப்படுகிறது.
அப்போது ``நாங்கள் அ.தி.மு.க. கூட்டணிக்கு செல்கிறோம். நீங்களும் எங்களோடு வாருங்கள். நாம் இருவரும் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து விடுவோம்'' என்று டாக்டர் ராமதாஸ், திருமாவளவனை அழைத்ததாக தெரிகிறது. ஆனால் திருமாவளவனோ, இந்த அழைப்பை முழுமையாக மறுத்துவிட்டார். ``நான் அ.தி.மு.க. கூட்டணிக்கு வர முடியாது. உறுதியாக தி.மு.க. கூட்டணியில் தான் இருப்பேன். முதல்-அமைச்சர் கருணாநிதியுடன் தான் இரு�பேன்'' என்று கூறி மறுத்துவிட்டார்.``இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் நாம் இருவரும் எப்படி ஒன்றாக இருக்கிறோமோ, அதேபோல அ.தி.மு.க. கூட்டணியிலும் நாம் ஒன்று சேர்ந்துவிட்டால் நன்றாக இருக்குமே'' என்று டாக்டர் ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தியள்ளதாக தெரிகிறது.

பா.ம.க.வைப் பொறுத்தவரை, எந்த அணியில் சேருவது என்ற விஷயத்தில்,
மூத்த டாக்டர் (ராமதாஸ்) அ.தி.மு.க. அணியில் சேருவதற்கும், இளைய டாக்டர் (அன்புமணி) தி.மு.க. அணியில் சேருவதற்கும் ஆதரவான கருத்துடையவர்களாக இருப்பதால், முடிவெடுப்பதில் தடுமாற்றமும், தாமதமும் ஏற்பட்டு வந்தது. தற்போது அந்த குழப்பம் தீர்ந்துவிட்டது என்று தெரிகிறது.



வைகோ பேட்டி
கேள்வி- பா.ம.க. உங்கள் அணிக்கு (அ.தி.மு.க. கூட்டணி) வர வாய்ப்பு உள்ளதா? பதில்- வாய்ப்பு உள்ளது. வரக்கூடிய செய்திகள், வாய்ப்பு உள்ளதாகத்தான் தெரிகின்றன.

கேள்வி - தே.மு.தி.க.வும் உங்கள் கூட்டணியில் இடம்பெறுமா? பதில்- அதற்கான முயற்சிகள் எந்த அளவில் உள்ளன என்று தெரியவில்லை.


"காங்கிரஸ் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் கூட்டணி பற்றி பேசி வருவதால், வரும் 21-ந் தேதி அன்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவார்'' - பண்ருட்டி ராமச்சந்திரன்( டெல்லியிலிருந்து)

கோவை, கள்ளக்குறிச்சி, வேலூர், கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளை ஒதுக்கும்படி கேட்டதாக தெரிகிறது.

இந்த தொகுதிகள் காங்கிரசுக்கு சாதகமான தொகுதிகள் என்பதால் அவற்றை விட்டுக்கொடுக்க காங்கிரஸ் தயாராக இல்லை. இதன் காரணமாக கூட்டணி இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டு இருப்பதாக சொல்லுகிறார்கள்

Ever Green Cartoon - Mathy

5 Comments:

K SRINIVASAN said...

There is no need for a exit poll in Tamil Nadu.

Just see which side Dr ramdoss is there. That alliance is sure shot will win maximum seats.

Krish said...

All these alliance are bullshit. ADMK, DMK,MDMK,PMK...all these "MK" are totally bullshit.

பெசொவி said...

//There is no need for a exit poll in Tamil Nadu.

Just see which side Dr ramdoss is there. That alliance is sure shot will win maximum seats.//

Mr. Chutneysambhar, i just want to know one thing. I agree with your findings. But tell me, is it because PMK is strong or is it a fact that PMK will join the alliance which is likely to win?

K SRINIVASAN said...

//Mr. Chutneysambhar, i just want to know one thing. I agree with your findings. But tell me, is it because PMK is strong or is it a fact that PMK will join the alliance which is likely to win?//

PMK's vote bank is approximately 10-15% only in north tamil nadu.Both DMK and ADMK enjoy vote share abour 30%. So whichever side PMK tilts,that side gets close to 45-50% and emerges victorious.

But the day DMK and ADMK disown PMK, then the party is i deep trouble. But who will leave PMK. DMK and ADMK are happy to take him at any cost. The people who vote for PMK are very strong loyalists that they are also now used to switching sides.

R.Gopi said...

திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்) - கலைஞரின் முழு ஆதரவு உண்டு. ஆனால், கலைஞர் கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டை விட்டு விரட்டுவதுதான் தன் முக்கிய குறிக்கோள் என்று சொல்லிவருவதால், இந்த கூட்டணியில் இருக்க முடியுமா என்று தெரியவில்லை.

இந்த மடம் இல்லை என்றால், ஜெ.ஜெ.மேடத்தின் அந்த மடம் என்று உறுதியாக ஒரு முடிவு எடுத்து விடுவார். 6-8 சீட்கள் எதிர்பார்ப்பார், கூடவே சில கோடிகளும்.