முதல்வர் கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்ட நாட்கள் பற்றி எழுதிவருகிறார். இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளார்.
‘நலிவும் நானும்’ என்ற தலைப்பில், தான் மருத்துவமனையில் இருந்தது தனக்கு நடந்த அறுவை சிகிச்சை,அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்பட்ட முன்னேற்றம் ஆகியவை குறித்து திமுக அரசின் முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டு வரும் அறிக்கைகள் உண்மையிலேயே நெஞ்சைப் பிளக்கின்றன.
கல்நெஞ்சங்கள் கூட உருகும் அளவுக்கு தான் சகித்துக் கொண்ட வலியை தன்னுடைய அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் கருணாநிதி.
கருணாநிதி ஆரோக்கியமடைந்து வரும் சமயம், அவருடைய பல மனைவிமார்கள், எண்ணிலடங்கா குழந்தைகள், பேரன்கள், பேத்திகள், கொள்ளுப் பேரன்கள், கொள்ளுப் பேத்திகள் ஆகியோர் அவர் மீது அதிக அக்கறை எடுத்துக் கொண்டு அவரை கவனித்தது கருணாநிதிக்கு மட்டுமல்ல, நமக்கும் ஆறுதலாக இருந்தது.
கருணாநிதியின் குடும்பத்தில் மிகவும் நன்றி கெட்டவர்களாக யாராவது இருந்தால் தான் அவரை உதவாத குடும்பத் தலைவர் என்று குற்றம் சாட்ட முடியும்.
தன்னுடைய கட்சியையும், அரசாங்கத்தையும் குடும்பத்தினருக்கு பரிசாக கொடுத்திருக்கிறார் கருணாநிதி. ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கணக்குகளில் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் மற்றும் டாலர்கள் இருப்பதை உறுதி செய்திருக்கிறார் கருணாநிதி.
இந்த அளவுக்கு குடும்ப உறுப்பினர்களுக்கு உதவிய கருணாநிதிக்கு, குறைந்தபட்சம் அவர்களால் செய்ய முடிந்தது அவர் உடல்நலம் குன்றி இருக்கும் சமயத்தில் அவர்மேல் அக்கறை காட்டுவதுதான்.
அவருடைய பற்பல உறவினர்கள், அறிக்கைகள் என்ற போர்வையில் என் மீது விஷம் கக்கி குற்றம் சுமத்துவதற்கும், என்னை வசைமாரி திட்டுவதற்கும் ஏதுவான வசதியையும் சுற்றுப்புறச் சூழ்நிலையையும் கருணாநிதிக்கு உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Saturday, March 14, 2009
கலைஞர் டைரி குறிப்பு - ஜெ கருத்து
Posted by IdlyVadai at 3/14/2009 02:24:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
9 Comments:
ஜெவின் Timely Punch இந்த அறிக்கை. இதற்க்கு பதிலாக அவரை முடிந்த மட்டும் அசிங்கப்படுத்தி எதாவது பழைய சம்பவங்களை எல்லாம் பட்டியலிட்டு ஒரு புலம்பல் அறிக்கை தாத்தாவிடமிருது வரும். படிக்கவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும்.
இந்த லாவணிக்கச்சேரி எப்போதுதான் முடிவுக்கு வருமோ. தாங்க முடியல சாமி.
சின்னத்தம்பி படத்தில் ஒரு காட்சியில் கவுண்டமணி காலமான தன் அப்பாவை கன்னாபின்னா வென்று திட்டிவிட்டு ஒரு வசனம் பேசுவார். `டேய் அப்பா உன்னால எனக்கு ஒன்னு மட்டும் மிச்சண்டா. கரண்ட் செலவு மிச்சம்' என்று. (படத்தில் அவருக்கு மாலைக்கண் நோய்)
அது போல் கருணாநிதியும் மனதிற்குள் இவ்வாறு நினித்துக்கொல்வாரோ என்னவோ!
அம்மையார் உம்மால எனக்கு எவ்வளவோ தொந்தரவு என்றாலும் ஒரு பிரயோஜனம் உண்டு. உம்மால் தான் நான் இந்த முடியாத வயதிலும் சுறுசுறுப்பாகவும் மனதை Sharp ஆகவும் வைத்துக்கொண்டு ஆக்டிவாக இருக்க முடிகிறது.
இல்லையென்றால் என் வழித்தோன்றல்களே என்னை எப்போதே ஓரம் கட்டியிருப்பார்கள்.
:)) Its high time to J to start a blog!!!
The dairy when published as book it will fetch from lakhs to the author and publisher. He know how to make money .
கருணாநிதி ஆரோக்கியமடைந்து வரும் சமயம், அவருடைய பல மனைவிமார்கள், எண்ணிலடங்கா குழந்தைகள், பேரன்கள், பேத்திகள், கொள்ளுப் பேரன்கள், கொள்ளுப் பேத்திகள் ஆகியோர் அவர் மீது அதிக அக்கறை எடுத்துக் கொண்டு அவரை கவனித்தது கருணாநிதிக்கு மட்டுமல்ல, நமக்கும் ஆறுதலாக இருந்தது.
-------------------------------
"Thala" will be busy in preparing a counter-attack reply / Kavidhai for JJ, for this.
//அவருடைய பற்பல உறவினர்கள், அறிக்கைகள் என்ற போர்வையில் என் மீது விஷம் கக்கி குற்றம் சுமத்துவதற்கும், என்னை வசைமாரி திட்டுவதற்கும் ஏதுவான வசதியையும் சுற்றுப்புறச் சூழ்நிலையையும் கருணாநிதிக்கு உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.//
Can anybody please explain the above sentence?
//:)) Its high time to J to start a blog!!!//
ஏற்கனவே அரம்பித்து பீடு நடை போடுகிறதே ‘இட்லி வடை' என்ற பெயரில்.
ஹரின்பிரசன்னா உங்க டையரில குறிச்சு வச்சுக்கோங்க அடுத்த தேர்தலில் இட்லி வடை பினாமி பெயரில் தேர்தலில் நின்னு சட்ட மன்றத்திலோ அல்லது பாராளுமன்றத்திலோ ‘கமகமக்க' போகிறார்.
ஜெயலலிதாவிடம் இருந்து இது போன்ற கீழ்த்தரமான அறிக்கைகளைத் தான் எதிர்பார்க்க முடியும். கருணாநிதியின் அறிக்கைகளும் சமீப காலமாகத் தரமிழந்து வருகின்றன. இவர்களின் பிடியிலிருந்து என்றுதான் தமிழ்நாடு விடுபடப் போகிறதோ!
//ஜெயலலிதாவிடம் இருந்து இது போன்ற கீழ்த்தரமான அறிக்கைகளைத் தான் எதிர்பார்க்க முடியும். கருணாநிதியின் அறிக்கைகளும் சமீப காலமாகத் தரமிழந்து வருகின்றன.//
அது சரி. சமீப காலமாதான் கருணாநிதி அறிக்கைகள் தரம் தாழ்ந்து வருகிறதா? ஓ, இது 'டோண்டு' ஸ்டைல் சமீப காலமோ?!
Post a Comment