வேலூர் அருகே நடந்த கார் விபத்தில் திமுக மகளிர் அணி செயலாளரும், பேச்சாளருமான கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் படுகாயம் அடைந்துள்ளார்.வேலூர் வள்ளலார் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி, அங்கிருந்த தடுப்பு இரும்பு கம்பிகளை உடைத்துக்கொண்டு மறுபக்க சாலையில் தலை குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் தமிழச்சி தங்கபாண்டியன், பாதுகாவலர் ஒருவர், கார் டிரைவர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் டிரைவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரத்தில் போட்டியிட, தமிழச்சி தங்கபாண்டியன் விருப்ப மனு வழங்கியுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவர்களுக்கு ஓய்வு வேண்டாமா?: என்று தினமலர் செய்தி கீழே...
தமிழச்சி தங்கபாண்டியன் கார் விபத்தில் சிக்கிய சம்பவத்தில், அந்த கார் டிரைவர் ஓய்வு இல்லாமல் பணியாற்றியதே காரணம் என்பது தெரியவந்துள்ளது. கடந்த சில தினங்களாக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் நடந்த தேர்தல் நிகழ்ச்சிகளுக்கு அவர் கார் ஓட்டிச் சென்றுள்ளார். தேர்தல் பணிகள் துவங்கி விட்டதால், இனி அரசியல் கட்சி தலைவர்கள் ஓய்வின்றி சூறாவளிச் சுற்றுப்பயணங்களில் ஈடுபடுவர். ஆனால், அவர்களுக்குக் கார் ஓட்டும் டிரைவர்களைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. தலைவர்கள் பயண நேரத்தில் தூங்கி ஓய்வு எடுக்கலாம். ஆனால், டிரைவர்கள் ஓய்வு எடுக்க வாய்ப்பு கிடைப்பதில்லை. அரசியல் தலைவர்கள் தங்கள் கார் டிரைவர்களையும் மனிதர்களாக மதித்து, அவர்கள் நிம்மதியாக ஓய்வெடுக்கும் வகையில் தனி "ரூம்' ஒதுக்கித் தர வேண்டியது கடமை. இல்லாவிட்டால், தலைவர்களுக்குத் தங்கள் பிரசாரம் கடைசி பிரசாரமாக அமைய வாய்ப்புள்ளது என்பதை உணர வேண்டும்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Sunday, March 15, 2009
கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் விபத்தில் படுகாயம்
Posted by IdlyVadai at 3/15/2009 05:02:00 PM
Labels: செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
11 Comments:
இருவரும் விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக!!
மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
கவிஞரின் நிலைமை குறித்து அப்டேட் செய்யவும்.
அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. இருவரின் உடல்நிலை நலம்பெற ஆண்டவன் அருளட்டும்.
யார் இந்த கவிஞர் தமிழச்சி ??
இருவரும் விரைவில் நலம் பெற்று திரும்ப வேண்டும் என ஆண்டவனை ப்ராத்தனை செய்கிறேன்
யார் இந்த கவிஞர் தமிழச்சி ?
Iraivan Migaperiyavan!
Nanchil sampathukku NSA;
....
God Bless her!
God Bless MK - too.
துரதிருஷ்டமான சம்பவம். விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்
தமிழச்சி நலம்பெற வேண்டுகிறேன். மிகவும் தைரியமானவர். பெரியாரியவாதி தீவிரமான செயல்பாடுகளை இணையத்தில் வெளிப்படுத்தியவர்.
அவரின் இணைய பக்கம்
http://tamizachi.com/
//Anonymous said...
தமிழச்சி நலம்பெற வேண்டுகிறேன். மிகவும் தைரியமானவர். பெரியாரியவாதி தீவிரமான செயல்பாடுகளை இணையத்தில் வெளிப்படுத்தியவர்.
அவரின் இணைய பக்கம்
http://tamizachi.com///
இவர் வேறு தமிழச்சி. இவருக்கும் தி மு க விற்கும் சம்பந்தம் இல்லை.
Her blog is http://thamizhachchi.wordpress.com/
Post a Comment