பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, March 14, 2009

ராமதாஸ் என்ன செய்ய போகிறார் ?

வழக்கம் போல் ராமதாஸ் என்ன செய்ய போகிறார் என்று மக்களை குழப்ப ஆரம்பித்திருக்கிறார். நேற்றைய பேட்டியிலிரிந்து சில கேள்வி பதில்கள்....


கலைஞர் பேட்டி:


கேள்வி:- தே.மு.தி.க. வரும் என்ற நல்ல செய்தியை விரைவில் அறிவிப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படி வந்தால் வரவேற்பீர்களா?

பதில்:- நல்ல செய்தி எங்கிருந்து எப்போது வந்தாலும் வரவேற்போம்.

கேள்வி:- பா.ம.க.விடமிருந்து கூட்டணியில் சேருவது பற்றி ஏதாவது செய்தி வந்ததா?

பதில்:- அவர்கள் இதுவரை என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை.


காங்கிரஸ்(ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் )பேட்டி:


கேள்வி:- விஜயகாந்த் உங்கள் அணியில் சேருவாரா?

பதில்:- மதச்சார்பற்ற இயக்கங்களை எங்கள் கூட்டணியில் சேர்க்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பா.ம.க.வை சேர்ந்த அன்புமணி மத்திய மந்திரியாக உள்ள நிலையில் அவர்களது கட்சி எங்கள் அணியில் தான் உள்ளது.

கேள்வி:- கூட்டணி தொடர்பாக விஜயகாந்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா?

பதில்:- இதுவரை அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்றாலும், நல்லெண்ணத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது. விஜயகாந்த் காங்கிரஸ் கூட்டணியில் சேர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி முழுமையாக விரும்புகிறது. தேசிய உள்ளம் கொண்ட விஜயகாந்த் எங்கள் அணிக்கு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது.


ராமதாஸ் பேட்டி:

கேள்வி:- கூட்டணி சேருவது குறித்து பா.ம.க. இதுவரை என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியிருக்கிறார். இது பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

பதில்:- அவர்கள் தரப்பில் இருந்தும் என்னிடம் யாரும் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை.

கேள்வி:- விஜயகாந்தின் தே.மு.தி.க. தங்கள் கூட்டணிக்கு வரும் என்று காங்கிரசார் கூறியிருப்பது பற்றி, கருத்து தெரிவித்த கருணாநிதி, நல்ல செய்தி எங்கிருந்து வந்தாலும் வரவேற்போம் என்று கூறியுள்ளாரே?

பதில்:- சில கேள்விகளுக்கு- சிலரை பற்றிய கேள்விகளுக்கு நான் எப்போதும் பதில் சொல்வதில்லை. அதே நிலை தான் இப்போதும்.


ஜெக்கு உண்ணாவிரத வாழ்த்து ஏன் சொன்னார் என்று இப்ப புரிகிறது

8 Comments:

கலைக்கோவன் said...

தே.மு.தி.க தெளிவடைந்தால் மட்டுமே.,இந்த குழப்பங்களுக்கு ஒரு முடிவு வரும்

தேர்தல் வந்தா எல்லாரும் எவ்வளவோ..,
நல்லவங்களாயிடுராங்க

Desikadasan said...

Regarding this, you can also refer to the first question-answer in this week's (dated 18.03.09) Thuglak.
கேள்வி: வன்னிய சமுதாயத்தைச சேர்ந்தவர்களால் எழுதி வைக்கப்பட்ட சொத்துக்களை ஒருங்கிணைத்து அதற்கென தனியாக வன்னியர் பொதுச் சொத்து நல வாரியத்தை மிண்டும் அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது பற்றி?

பதில்: ராமதாஸ் கூட்டணியில் இருக்க மாட்டார் என்றோ, அவர் விருப்பப்பட்டால் கூட, அவர் கட்சியின் கூட்டணி தேவை இல்லை என்றோ, தி.மு.க. முடிவு செய்து விட்டது போலிருக்கிறது. அதனால்தான், 'வன்னியர்களுக்கு ராமதாசை விட நான்தான் பெரிய நண்பன்' என்று காட்டிக் கொள்வது போல, கலைஞர் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

I have no words to appreciate Mr. Cho's foresight.

R.Gopi said...

தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில், தே.மு.தி.க.விற்கு 4 சீட் மற்றும் ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Kots said...

ராமதாஸ் அ . தி. மு. க அணிக்கே செல்வார் என்று கருதுகிறேன்.
அன்பு மணி மட்டும் தான் அதற்கு முட்டுக் கட்டையாக இருந்து வருகிறார்.

Anonymous said...

ராமதாசின் கடைசிக் கேள்விக்கான பதிலில் தெரிய வருவது, தெரிந்துகொள்ள வேண்டியது..
அவர் எப்போதுமே விஜயகாந்த்தை பொருட்படுத்தி பதில் அளிப்பதில்லை. அந்த அளவுக்குத்தான் அவரை வைத்திருக்கிறார்.

சரி.அடுத்த முதல்வர், ஆ ஊ என்றெல்லாம் பேசின நடிகர், இப்போது இப்படி நடப்பதும், விலைபோவதும்..
சீச்சீ..

R.Gopi said...

காடுவெட்டி குரு, செடி வெட்டி சிஷ்யன் எல்லாரையும் அரவணைத்து செல்வது என் பண்பல்லவா??

எல்லோருக்கும் கையில் இருக்கும் 40அப்பத்தை சிறு சிறு பங்குகளாக கொடுத்து விட்டு, நான் என் பங்காக வைத்து கொள்ள இருப்பது வெறும் 35தான்.

(வாழ்க அண்ணா நாமம், நானும் உங்களுக்கு போடுவேன் பெரிய நாமம்)

Anonymous said...

//வாழ்க அண்ணா நாமம், நானும் உங்களுக்கு போடுவேன் பெரிய நாமம்//

suitable comment gopi.

Anonymous said...

கலைஞரைத் திட்டியது விஜயகாந்த். கலைஞரே அதைப் பற்றி கவலைப் படாத போது விஜயகாந்த் எதற்காக கவலைப்பட வேண்டும்.

வை.கோ கூட்டணியில் இருக்கும் போதும் ஜெயலலிதா ltte பற்றிய தன்னுடைய கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை. ஏன் அந்த அணியில் இருக்கிறீர்கள் என்று வைகோவைத் தான் கேட்க வேண்டுமே தவிர, ஜெயலலிதாவை நீங்கள் என் வை.கோ வை கூட்டணியில் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்பது எப்படி சரியாகும். வை. கோ இருந்தும் தனது கருத்தில் உறுதியாக இருக்கும் ஜெயலலிதாவை பாராட்டுவது தானே சரியாக இருக்கும்.

காடு வெட்டி குரு கண்டபடி திட்டியதையே 3 மாதம் வரை பொறுத்துக் கொண்டு விட்டு பிறகு திடீர் என்று ரோஷம் வந்து கைது செய்தவர்கள், அதையும் இரெண்டே மாதத்தில் ரத்து செய்யும் அளவுக்கு கூட்டணி தர்மங்கள் விவஸ்தை கேட்டு இருக்கும் போது, விஜயகாந்தை குற்றம் சொல்லி எந்த பிரயோஜனமும் இல்லை.

அவரும் அரசியல் தானே செய்கிறார். ஆண்டி மடமா நடத்துகிறார். தன் குடும்பத்தோடு அரசியல் செய்யும் அவர் சரியான இடத்துக்கு தான் சென்றிருக்கிறார்.