வழக்கம் போல் இந்த தேர்தலுக்கும் ஜோதிடர்கள் தங்கள் கணிப்புகளை சொல்லியுள்ளார்கள்....
இந்த 15வது லோக்சபா தேர்தல் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. வெயில் அதிகமாக இருக்கும் இந்த வேளையில் மக்களுக்கும் தலைவர்களுக்கும் பைத்தியம் பிடிக்கும் அதனால் குழப்பங்களும் வன்முறையும் மூளும்ஜோதிடர் ஜெகன்னாத் மிஸ்ரா கூறுகையில், இந்திய அரசியலமைப்புக்கு இந்த தேர்தல் நல்லதல்ல. அரசியல் கிரிமினல்களின் கூடாரமாகி விட்டது. வரும் காலம் நல்லதாக இருக்காது என்பதே எனது கணிப்பு.
தேர்தல் முடிந்த பின்னர், பூகம்பம், கடல் கொந்தளிப்புகள், புயல்கள் போன்ற இயற்கை சீற்றங்களும் ஏற்படுமாம். ஏன் மினி சுனாமிகள் கூட வரலாமாம். இதனால் உயிருக்கும், பொருளுக்கும் பேரிழப்பு ஏற்படும் எனவும் ஜோதிடர்கள் பயமுறுத்துகிறார்கள்.
அசோக் சனோரியா என்பவர்தான் மிகப் பெரிய கணிப்பை கணித்துள்ளார். அதாவது, மறுபடியும், மத்தியில் கூட்டணி ஆட்சிதான் வருமாம். இவரது கணிப்புகள்தான் படு சுவாரஸ்யமானதாக உள்ளன. காரணம், ஜெயலலிதாதான் அடுத்த பிரதமர் என்கிறார் இவர்.
சனோரியா கூறுகையில், அடுத்த பிரதமர் நிச்சயம் ஒரு பெண்தான். அதிலும் ஜெயலலிதாவின் ஜாதகம் மிகவும் வலுவாக உள்ளது. எனவே அவருக்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
எல்.கே.அத்வானிக்கு இப்போது நேரம் சரியில்லை. அவர் மண்டையின் மீது சனி தாண்டவம் ஆடுகிறது என்கிறார். உ.பி. முதல்வர் மாயாவதிக்கும் பிரதமராகக் கூடிய வாய்ப்புகள் சிறப்பாகவே உள்ளன என்கிறார் சனோரியா.
துர்வாலா என்பவர் நான் எதுவும் வேடிக்கையாக சொல்ல விரும்பவில்லை, ஆனால் இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது. போன முறை இந்தியா ஆஸ்கர் விருது வாங்கும் என்று சொன்னேன் அதே போல் வாங்கிவிட்டது என்கிறார்.
டெல்லியில் இருக்கும் சர்மா (இந்தியா எப்போது சுதந்திரம் அடைய வேண்டும் என்று கணித்த மூன்று ஜோதிடர்களில் ஒருவர்) ஏப்ரல் மாதம் காங்கிரஸுக்கு நல்ல காலம் என்று சொல்லியுள்ளார்.இதை எல்லாம் படித்து பயந்துவிடாதீர்கள், தேர்தல் தேர்தல் வாக்குறுதிகள் போல இவை எல்லாம் வெறும் கப்சா. படிக்க தமாஷா இருக்கும் அவ்வளவு தான்.
இன்று வந்த செய்தி - மூன்றாவது அணி தலைவர்கள் பிரதமர் வேட்பாளராக யாரை அறிவிக்கலாம் என்று குழம்பி போய் இருக்கிறார்கள். இது தொடர்பாக மாயாவதியிடமும், ஜெயலலிதா விடமும் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க 3-வது அணி மூத்த தலைவர்கள் தீர்மானித்துள்ளனர் என்று தெரிகிறது.
கிரகங்களின் ஆதிக்கததால் நிஜமாகவே ஜெயலலிதா பிரதமாராகிவிட்டால், காங்கிரஸ் ஜெய் ஹோ என்ற பாடலை பாடுமா ?
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, March 13, 2009
தேர்தல் எப்படி இருக்கும் - ஜோதிடர்களின் கணிப்பு
Posted by IdlyVadai at 3/13/2009 04:23:00 PM
Labels: தேர்தல்2009, நகைச்சுவை
Subscribe to:
Post Comments (Atom)
10 Comments:
ஜெயலலிதா பிரதமராகி விட்டால்..,
அடுத்த தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராக வேண்டியது தான்.
me the second
-- Reena
As you are aware Tamil Nadu government has changed Tamil New Year to January from April 14th. Hence we are cancelling the holiday on April 14th from our Holiday List 2009. Instead Friday, 16th October (the eve of Diwali) will be a holiday. Please reach your respective BU HR in case of any further clarification.
ENNA KODUMA SIR ITHU???
engaluku leave pochu...yaar vantha enna???
Hello, Mr. Idlyvadai, this is just a translation of the article posted in http://in.news.yahoo.com/43/20090312/818/tnl-poll-timing-not-good-for-nation-s-he.html
Why haven't you mentioned the source?
//வரும் காலம் நல்லதாக இருக்காது என்பதே எனது கணிப்பு//
இதை யாரு வேண்டும் என்றாலும் சொல்லலாமே!
//அடுத்த பிரதமர் நிச்சயம் ஒரு பெண்தான். அதிலும் ஜெயலலிதாவின் ஜாதகம் மிகவும் வலுவாக உள்ளது. எனவே அவருக்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.//
நம்மை வைத்து காமெடி கீமெடி பண்ணலையே
//தேர்தல் தேர்தல் வாக்குறுதிகள் போல இவை எல்லாம் வெறும் கப்சா. படிக்க தமாஷா இருக்கும் அவ்வளவு தான்.//
:-)
//கிரகங்களின் ஆதிக்கததால் நிஜமாகவே ஜெயலலிதா பிரதமாராகிவிட்டால், காங்கிரஸ் ஜெய் ஹோ என்ற பாடலை பாடுமா ?//
ஜெய் ஹோ பாடல் அல்ல ..இந்தியாக்கு சங்கு தான் ஊத வேண்டும்.
Jayalalithaa should come into power.
The cartoon is excellent...who is the cartoonist?
//Hello, Mr. Idlyvadai, this is just a translation of the article posted in http://in.news.yahoo.com/43/20090312/818/tnl-poll-timing-not-good-for-nation-s-he.html
Why haven't you mentioned the source?//
This has come in times of India, thatstamil, msn news, yahoo and many other news site. I dont know the source. I believe it is from Indo-Asian News Service
..இந்தியாக்கு சங்கு தான் ஊத வேண்டும்./////////
இப்ப என்ன மங்கள இசையா கேக்குது நாட்டுல ////////
lalithakrishnan
ஜோதிடர்கள்@கிச்சுகிச்சு.காம் என்ற புதிய பகுதியின் முதல் கட்டுரையா, இது??
பேஷ், பேஷ், ரொம்ப நன்னா இருக்கு......
Post a Comment