பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 12, 2009

நகைச்சுவை நடிகர் ஓமகுச்சி நரசிம்மன் காலமானார்.செய்தி மற்றும் “நாயாரணா இந்த கொசு தொல்ல தாங்க முடியலப்பா” வீடியோவும் கீழே...


பிரபல காமெடி நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன். முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல், சரத்குமார், அர்ஜுன் போன்ற பலருடன் நடித்துள்ளார். கவுண்டமணியுடன் இணைந்து நிறைய படங்களில் காமெடி செய்துள்ளார்.

நேற்று இரவு 9.30 மணிக்கு உடல் நலக்குறைவால் காலமானார்.. அவருக்கு வயது 73.

மரணம் அடைந்த ஓமக்குச்சி நரசிம்மன் 1500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 150-க்கும் மேல் நாடகங்களில் நடித்துள்ளார். “நாரதரும் 4 திருடர்களும்” என்ற நாடகத்தில் ஓமக்குச்சி என்ற பெயரில் நடித்தார். அதுவே பின்னாளில் அவர் பெயரோடு இணைந்தது.

“அவ்வையார்” என்ற படத்தில் அறிமுகமானார். 1969-ல் “திருக்கல்யாணம்” என்ற படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.

“குடும்பம் ஒரு கதம்பம்”, “சம்சாரம் அது மின்சாரம்”, “மீண்டும் கோகிலா”, “இந்தியன்”, “ஜென்டில்மேன்”, “முதல்வன்”, “சூரியன்” போன்ற “ஹிட்” படங்களில் நடித்துள்ளார்.

“சூரியன்” படத்தில் ஓமக்குச்சி நரசிம்மன் மேல் எரிச்சலாகும் கவுண்டமணி “நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலப்பா” என்று பேசும் வசனம் பிரபலம்.


“இந்தியன்” படத்தில் கவுண்டமணியிடம் கைகள் நடுங்கி டிரைவிங் லைசென்ஸ் வாங்குவது..((இந்தியன் படத்தில் இவர் நடித்த காமெடி காட்சி எனக்கு ரொம்ப பிடிக்கும்)). “முதல்வன்” படத்தில் வடிவேலுவின் இடுப்பில் குத்தி ““போடா பண்ணி”” என திட்டவைத்து மேலதிகாரியிடம் மாட்டி விடுவது... போன்றவையும் வயிறுநோக சிரிக்க வைக்கும் காமெடிகள்.

இவர் குடும்பத்தாருக்கு இட்லிவடையின் அனுதாபங்கள்.


32 Comments:

butterfly Surya said...

ஆழ்ந்த வருத்தங்கள்.

கிருஷ்ணா அவரது படம் (pic) கிடைக்கவில்லையா..???

கலைக்கோவன் said...

முதல்வன் படத்தில் வரும் வடிவெலுவுடனான...,
“போடா .....” காமெடி
நினைவுக்கு வருகிறது..,

அன்னாரது ஆத்மா அமைதி கொள்ளட்டும்

R.Gopi said...

ஓமகுச்சி நரசிம்மன் பல படங்களில் நடித்திருந்தும், பெரிய அளவில் பெயரோ, பொருளோ அவர் சம்பாதித்திருக்க வாய்ப்பில்லை.

ஓமகுச்சி நரசிம்மன், கவுண்டமணியுடன் நடித்த படங்களில், கவுண்டமணி அவரை மிகவும் தரக்குறைவாக திட்டியும், நடத்தியும் இருப்பார் (எல்லோரையும் அவர் அப்படித்தான் பேசுவார் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்).

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

IdlyVadai said...

//கிருஷ்ணா அவரது படம் (pic) கிடைக்கவில்லையா..???//

ஆமாம். கிடைக்கவில்லை. தற்போது ஒரு வீடியோ காட்சியை இணைத்திருக்கிறேன்.

VIKNESHWARAN ADAKKALAM said...

:(

Unknown said...

mappu ur right he ia excellent artist...

Ganesan said...

தமிழ் சினிமாவின் கடைகோடி நடிகராக வாழ்ந்து, இறந்து போனவர் பற்றி பதிவு போட்ட இட்லி வடையாரை வாழ்த்துகிறேன்.


அன்னாரின் ஆத்ம சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.பெரும் நடிகருகெல்லாம் பெரிய ஆளூங்கெல்லாம் போவாங்க.இந்த நடிகருக்கு இந்த இட்லி வடை தளத்தின் மூலம் அந்த குடும்பத்தாருக்கு
இரங்கலை தெரிவியுங்கள் பதிவர்களே, வாசகர்களே.

Rajaraman said...

"நகைச்சுவை நடிகர் ஓமகுச்சி நரசிம்மன் குடும்பத்தாருக்கு நம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அவர் ஆத்மா சாந்தியடையவும் எல்லாம் வல்ல இறைவனின் பொற்பாதங்களில் அடைக்கலம் ஆகவும் பிரார்த்திப்போம்.

முரளிகண்ணன் said...

அவருடைய குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

Anonymous said...

May His Soul rest in peace.

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-(((((

Anonymous said...

is ur name Krishna?
Atleast say s or no...

IdlyVadai said...

//is ur name Krishna?
Atleast say s or no...//

இது கூட தெரியலையா ? கிருஷ்ண கிருஷ்ணா !

மாயவரத்தான் said...

யாருப்பா அது கிருஷ்ணா?

**

கூகுலில் Omakuchchi Narasimhan என்று தேடிப்பார்த்தேன். கிடைத்தது கவுண்டமணியின் புகைப்படம். ஹிஹி

மாயவரத்தான் said...

//இது கூட தெரியலையா ? கிருஷ்ண கிருஷ்ணா !//

நாராயணா... இந்த இட்லித் தொல்ல தாங்க முடியலப்பா

R.Gopi said...

//மாயவரத்தான்.... said...
யாருப்பா அது கிருஷ்ணா?

**

கூகுலில் Omakuchchi Narasimhan என்று தேடிப்பார்த்தேன். கிடைத்தது கவுண்டமணியின் புகைப்படம். ஹிஹி//

***************

Thala,

Inga poi paarunga. Oru super picture irukku.

http://www.indiaglitz.com/channels/
tamil/article/45553.html

R.Gopi said...

//மாயவரத்தான்.... said...
//இது கூட தெரியலையா ? கிருஷ்ண கிருஷ்ணா !//

நாராயணா... இந்த இட்லித் தொல்ல தாங்க முடியலப்பா//

Thala

Enna verum IDLY-nnu solreenga. Ah haa, VADA pochey!!!!!

வாழவந்தான் said...

அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்

மேவி... said...

let his soul rest in peace....
lets pray for his family

Indian Voter said...

Mr. Omakuchi Narasimhan's son Kameshwaran is a very good friend of mine. Mr. Narasimhan had 3 daughters and 1 son and they lived in Triplicane for a long time. I have been to his house numerous times, though I have lost touch with my friend in the last 10 years or so.

He is a nice person to move with. Very sad to know his loss.

M Arunachalam said...

I first noticed Omakuchi Narasimhan in "Thambikku Endha Ooru" movie, in which he will act as the touring talkies manager. His dialogue delivery in that movie was what made people to take notice of him. All his sentences will end with "..huhkuumm...", which even Janakaraj will imitate in one scene.

A different type of actor who made use of his unique body(?).

May his soul rest in peace.

Anonymous said...

//KaveriGanesh - தமிழ் சினிமாவின் கடைகோடி நடிகராக வாழ்ந்து, இறந்து போனவர் பற்றி பதிவு போட்ட இட்லி வடையாரை வாழ்த்துகிறேன்.//
நானும் சேர்ந்து இட்லி வடையாரை வாழ்த்துகிறேன். ஓமகுச்சி நரசிம்மனின் குடும்பத்தாருக்கு எனது இரங்கலை தெரிவிக்கிறேன்.
-சந்திரன்

Sure said...

Let is soul rest in peace. I pray for the wellBeing of his family members

கிரி said...

நரசிம்மன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

மணிஜி said...

விண் டிவி க்காக அவருடன் வேலை பார்த்து இருக்கிறேன்...ஏ அப்பா இந்த பேட்டாவை சீக்கிரம் கொடுங்க...சரக்கு வாங்கனும் என்பார்...பசங்களை எல்லாம் நல்ல படியா செட்டில் ஆயிட்டாங்கா..என் பாட்டை நான் பாத்துக்கணும் ,,அவ்வளுதான் என்பார்...மறக்க முடியாத மனிதர்.

மணிஜி said...

விண் டிவி க்காக அவருடன் வேலை பார்த்து இருக்கிறேன்...ஏ அப்பா இந்த பேட்டாவை சீக்கிரம் கொடுங்க...சரக்கு வாங்கனும் என்பார்...பசங்களை எல்லாம் நல்ல படியா செட்டில் ஆயிட்டாங்கா..என் பாட்டை நான் பாத்துக்கணும் ,,அவ்வளுதான் என்பார்...மறக்க முடியாத மனிதர்.

மணிஜி said...

நகைசுவையை சரக்காக வைத்து ஓட்டிக் கொண்டிருக்கும் சானல்கள் கூட இந்த செய்தியை சொல்லவில்லை என்பது கேவலம்

IdlyVadai said...

//நகைசுவையை சரக்காக வைத்து ஓட்டிக் கொண்டிருக்கும் சானல்கள் கூட இந்த செய்தியை சொல்லவில்லை என்பது கேவலம்//

நானும் பார்த்தேன். மதன் பாப் அவர் வீட்டுக்கு எதிர் வீடு தான் ஆனால் அவரை பற்றி ஒரு வரி கூட இதுவரை சொல்லவில்லை. ( அல்லது நான் பார்க்கவில்லை )

Anonymous said...

இட்லி வடை யானைகளுக்கு (நாகேஷ்) மட்டும் அல்ல, பூனைகளுக்கும் அஞ்சலி செலுத்தும் என்று நிரூபித்தமைக்கு மிக நன்றி.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்!

பெசொவி said...

என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்!

தங்க முகுந்தன் said...

திரையுலக நகைச்சுவையில் தனக்கென ஒரு தனியான இடத்தை தக்கவைத்த நகைச்சுவை நடிகர் அமரர் ஓமக்குச்சி நரசிம்மன் அர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

மடல்காரன்_MadalKaran said...

அவர் உடம்பை அப்படியே மெயிண்டெயின் செஞ்சிக்கினு வந்தாரு ஓம'குச்சி' நரசிம்மன். பெரிய நகைச்சுவை நடிகர்கள் பிரகாசிக்க இவர்கள் போன்றவர்களின் நடிப்பு எவ்வளவு முக்கியம் என்பது ஏனோ ‘பெரிய' நடிகர்களுக்கு தெரிவதில்லை. அண்ணாரின் ஆன்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன்.