இட்லிவடையில் ஏன் காமெடி பதிவுகள் வருவதில்லை என்று கேட்ட நண்பருக்கு..
வழக்கறிஞர்களுக்கு வீரமணி கண்டனம்
சென்னை ஐகோர்ட்டில் கடந்த 19ஆம் தேதி நடந்த சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் சோனியா, கலைஞர் படங்களை தீயிட்டு கொளுத்துவதற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, வழக்கறிஞர்கள் போராட்டத்தில் அரசியல் நுழைந்து விட்டது. சோனியா காந்தி, கலைஞர் படங்களை எரிப்பதை பார்த்து எப்படி காங்கிரஸ், திமுக வழக்கறிஞர்கள் எப்படி பொறுத்துக்கொண்டிருக்கலாம் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இதுகுறித்து நாளை திராவிடர் கழக வழக்கறிஞர்களின் அவசரக் கூட்டத்தை கூட்டி சில முடிவுகளை எடுக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.
ஓ-பக்கங்கள்...
பெரியார் திராவிடர் கழகத்தலைவரும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளருமான கொளத்தூர் மணி ”ராஜீவ் காந்தி கொலை செய்யப்படவில்லை. அவருக்குத் தரப்ட்டது மரன தண்டனை. உண்மையில் நாட்டுப்பற்று உள்ள இந்தியன், சமூக நீதி கோரும் பிற்படுத்தப்பட்டவன் எவனாவது ராஜீவ் காந்திக்கு மரண தண்டனை கொடுத்திருக்க வேன்டும். நாம் செய்யத்தவறியதை ஈழத்தமிழன் ஒருவன் செய்தபோது நாம் உண்மையில் மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும். ஏனென்றால் 6000 பேரைக் கொன்ற, 1000 பெண்களை பாலியல் வல்லாங்கு செய்த இந்திய அமைதிப்படையை ஈழத்துகு அனுப்பியவன் ராஜீவ் காந்தி. துடிக்காதா நெஞ்சம் ? ஒரு ஈழத்தமிழன் செய்திருந்தால் அது நியாயம். விடுதலைப்புலிகள் செய்திருக்காவிட்டால் அது குற்றம் செய்து இருந்தால் பாராட்டுகிறோம். இல்லையென்றால் கண்டிக்கிறோம் என்று நாம் பேசியிருக்க வேண்டும்’’ என்று பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார்.
ராஜீவ் செய்த ‘குற்ற’த்துக்காக விடுதலைப் புலிகள் மரண தண்டனை வழங்கலாம் என்றால், அந்த ‘குற்ற’த்துக்கு தொடர்பே இல்லாத இன்னும் இருபது பேரையும் ஸ்ரீபெரும்புதூரில் கொன்றதற்காக விடுதலைப்புலிகளுக்கு மரண தண்டனை வழங்கலாமா? அந்த ‘அப்பாவிகள்’ தற்செயலாக செத்தது தவிர்க்க முடியாதது என்று சொல்வீர்களா? புலிகளுக்கும் ராஜபக்ஷே அரசுக்கும் நடக்கும் போரில் இடையில் சில அப்பாவித் தமிழர்கள் சாவது தவிர்க்கமுடியாதது என்று ஜெயலலிதா சொன்னதைப் போன்றதுதானே அது ?
குற்றத்துக்கு மரண தண்டனை வழங்குவது சரியென்றால் இந்திய சட்டபடி குற்றவாளிகளான ராஜீவ் கொலையாளிகளுக்கு விதித்த மரண தண்டனைக்கு எதிராக ஏன் கையெழுத்து இயக்கம் நடத்தினீர்கள் ? ஏன் கருணை மனுக்களை ஆதரிக்கிறீர்கள் ? சில மரண தண்டனைகள் மட்டும் அநியாயமானவை; மற்றவை இருக்கலாம் என்பதுதான் மனித நேயக் கையெழுத்து இயக்கமா?
( நன்றி: ஓ-பக்கங்கள், குமுதம் 25-2-2009 )
கைவசம் குப்பைத்தொட்டி ஸ்டாக் இல்லை
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, March 10, 2009
கண்டனங்கள் பல வகை
Posted by IdlyVadai at 3/10/2009 03:19:00 PM
Labels: செய்தி, நகைச்சுவை, பத்திரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
//வழக்கறிஞர்கள் போராட்டத்தில் அரசியல் நுழைந்து விட்டது.//
//சோனியா காந்தி, கலைஞர் படங்களை எரிப்பதை பார்த்து எப்படி காங்கிரஸ், திமுக வழக்கறிஞர்கள் எப்படி பொறுத்துக்கொண்டிருக்கலாம்//
ஒரு பக்கம்
அரசியல் நுழைந்து விட்டது என்கிறார்.
மறு பக்கம்
தூண்டி விடுகிறார்..,
இவர் மட்டும் என்ன..,
அரிசி வியாபாரமா செய்கிறார்,
அரசியல் தானே செய்கிறார்.
//கைவசம் குப்பைத்தொட்டி ஸ்டாக் இல்லை//
மீ.கி.வீ. படத்தை போட்டிருக்க வேண்டியது தானே?
தயவு செய்து .. ஒரு குப்பை தொட்டி வைக்கவும் .. இந்த வெட்கம் கெட்ட அரசியல்வாதிகள் அனைவர்க்கும் ஒரு பெரிய தூ ஊஊஊஊஊஊஊஉ
பெரியார் முழக்கம் , கீற்று தளத்தில் இருக்கிறது.கொளத்தூர் மணியின் பேச்சையும் தோழர்பெரியார் வலைப்பதிவில் படித்தால் ஞாநி
கேட்டிருப்பதன் நியாயம் புரியும்.
இட ஒதுக்கீட்டிற்கு எதிராக ராஜீவ்
காந்தி பேசியதால் கொல்ல வேண்டும்
என்று பேசுபவர்களுக்கும், சிங்கள பேரினவாதம் பேசுவோருக்கும்
அடிப்படையில் வேறுபாடு இல்லை.
கொளத்தூர் மணி போல் முட்டாள்த்தனமாக வீரமணியால்
பேச முடியாது.பெரியார் விட்டுச் சென்ற சொத்துக்களை யார்
அப்புறம் ஆள்வது என்ற ‘பொறுப்புணர்வு'தான் காரணம்.
Post a Comment