பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 09, 2009

உண்ணாவிரதம் = டீ பார்ட்டி ?

தற்போது தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்களுக்காக ஏதாவது செய்வது ஃபேஷன் ஆகிவிட்டது. தலைவர்கள் மனிதசங்கலி, வேலை நிறுத்தம், உண்ணாவிரதம் என்று ஈசியான வழிகளை கடைப்பிடிக்க, தொண்டர்கள் தலைவர்களை மீது வைத்திருக்கும் மூடநம்பிக்கை காரணமாக தீக்குளிப்பு ஈடுபடுகிறார்கள்....

இன்று 24 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைத் தமிழர்களுக்காக ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கிறார். (இதற்கு முன்பு கடந்த 1985-ம் ஆண்டு உண்ணாவிரதம் இருந்தார். )

ஜெயலலிதா உண்ணாவிரதம் முழுக்க முழுக்க அரசியல். ஒரு பேச்சுக்கு தேர்தல் அடுத்த வருடம் தான் இந்த வருடம் இல்லை என்று அறிவிப்பு வந்தால் எல்லோரும் அவர்கள் வேலையை பார்க்க போய்விடுவார்கள்.

முன்பு டீ பார்ட்டி வைத்து கூட்டணியை முடிவு செய்தார்கள், ஆனால் தற்போது வெய்யக்காலம் ஆச்சே, அதனால் உண்ணாவிரதம் வைத்து கூட்டணியை முடிவு செய்கிறார்கள்.

இலங்கை தமிழர்கள் மீது எங்கள் கூட்டணி தலைவிக்கு அக்கறை இருக்கிறது. இனிமேல் யாரும் முரண்பட்ட கூட்டணி என்று எங்களை கேலி செய்ய முடியாது என்று வைகோவிற்கு ஒரு ஆறுதல்.

வேற வழியில்லாமல் காலம் கடந்த அறிவிப்பு என்று சொல்லி டாக்டர் ராமதாஸ், முதல்வர் கருணாநிதி, சரத்குமார், திருமாவளவன் ஆகியோர் போராட்டத்தை வரவேற்பதாக கூறியுள்ளனளர்.

ராமதாஸ், திருமாவளவன் அதிமுக பக்கம் போவதற்கு இனிமேல் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. திருமாவளவனை திமுக கூட்டணியில் சேர்ப்பதில் காங்கிரஸ் கொஞ்சம் அப்ஜெக்ட் பண்ணும் என்று நினைக்கிறேன். திருமா திமுக கூட்டணியில் இல்லை என்றால் அது ராமதாஸுக்கு தான் நல்லது, கூடுதலாக ஒரு சீட் கிடைத்தாலும் கிடைக்கும்.

ஆனால் ராமதாஸ் கூட்டணி பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்பதையே காட்டுகிறது. 'காலம்கடந்த அறிவிப்பு' என்று இரண்டு நாட்கள் முன்பு கருத்து சொன்னவர், "இலங்கைத் தமிழர்களுக்காக ஜெயலலிதா உண்ணாவிரதம் இருப்பது ஈழத்தமிழர்களுக்கு மிகப்பெரும் ஆறுதலாக இருக்கும்" என்று சில மணி நேரத்துக்கு முன்பு சொல்லுகிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் பற்றி சொல்லவே வேண்டாம். இவர்களின் சகவாசத்தால் இப்ப ஜெயலலிதாவே உண்டியல் குலுக்க ஆரம்பித்துவிட்டார். ஜாலி தான்.

காங்கிரஸ் பாடு தான் கொஞ்சம் திண்டாட்டமாக இருக்கிறது. ஜெயலலிதாவின் உண்ணாவிரததை எதிர்ப்பதா இல்லை ஆதரிப்பதா என்று குழம்பிபோயிருக்கிறார்கள்.

இலங்கை தமிழர் பிரச்சினைக்காக ஜெயலலிதா திடீர் உண்ணாவிரதம் இருக்கின்றாரே? இது பற்றி உங்கள் கருத்து என்ன? என்று தங்கபாலுவிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில்

"இன்னும் இரண்டு நாளில் நிருபர்களை சந்திக்கிறேன். அப்போது அனைத்து கேள்விகளுக்கும் விளக்கமாக பதில் அளிக்கிறேன்"

அதே கேள்விக்கு ஜி.கே. வாசன் அளித்த பதில்

"இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ள அரசியல் நாடகம்"

காங்கிரஸில் கோஷ்டி இல்லை என்றால் எப்படி ? அடித்துக் கொள்ளட்டும்.

கடைசியாக இலங்கைத் தமிழர்கள் குறித்து அக்கறை காட்டுவது போல நடித்து தமிழர்களை ஜெயலலிதாவால் ஏமாற்ற முடியாது என்று கனிமொழி கூறியிருக்கிறார்.

அப்பாவிற்கு போட்டியாக யாராவது வந்தால் மகளுக்கு கோவம் வரத்தான் செய்யும். என்ன செய்ய !

பிகு: விஜயகாந்த் பற்றி ஏன் எதுவும் சொல்லவில்லை என்று தயவு செய்து கேட்காதீர்கள். கூட்டணி வைக்கலாமா வேண்டாமா என்று குழம்பி போயிருக்கிறார். தற்போது விஜயகாந்த் கட்சியில் அதிர வைக்கும் “பஞ்ச்” டயலாக் இது
“கூட்டணி வைத்தால் தலைவன் காலி”
“தனித்து போட்டியிட்டால் தொண்டன் காலி”

இன்று உண்ணாவிரத்தில் ஜெயலலிதாவின் பேச்சு

அதிமுக சார்பில் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டு வரும் இலங்கை தமிழர்களுக்காக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இலங்கையில் நடைபெற்றுவரும் இனபடுகொலையை தடுத்து நிறுத்தவும், போரை நிறுத்தவும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தரும் வகையில் இந்த போராட்டம் நடைபெறுகிறது.

கடந்த ஆண்டு 2008ல் இந்திய அரசு இலங்கைக்கு ஆயுதங்களை அளித்துக்கொண்டு இருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இந்த செய்திகளை மறுக்கவில்லை. இந்திய ராணுவ அதிகாரிகள் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டதாக செய்திகள் வந்தன. இதற்கு மத்திய அரசு பதில் அளிக்கவில்லை. மாநில அரசும் கேள்வி எழுப்பவில்லை.

இலங்கை ராணுவ வீரர்கள் இந்தியாவில் பயிற்சி மேற்கொண்டார்கள். இதை ஜெயா டிவில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதுகுறித்து நான் எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால் கருணாநிதி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இலங்கையில் நடக்கும் இனப்படுகொலை இந்திய அரசின் ஒப்புதலோடு நடந்துகொண்டிருக்கிறது. இதில் திமுக அரசுக்கும் தொடர்பு உண்டு. ஒரு நாடு மற்றொரு நாட்டுக்கு ராணுவ பயிற்சி அளிப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இலங்கைக்கு அளிக்கப்படும் பயிற்சி யாருக்காக அளிக்கப்படுகிறது. தமிழர்களுக்கு எதிராக பயிற்சி அளிக்கப்படுகிறது.

இலங்கை அரசுக்கு இந்திய அரசு ஆயுதங்களை அளித்திருக்கிறது. அதிநவீன ஆயுதங்களை அளித்துள்ளது. பயிற்சிகளையும் அளித்துள்ளது. தமிழர்களின் காவலர் என்று சொல்லும் கருணாநிதி, காங்கிரஸ் கட்சிக்கு ஏன் ஆதரவு தருகிறார்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சம உரிமை ஆகிய இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைகளை நாங்கள் ஆதரிக்கிறோம். இலங்கைத் தமிழர்களின் சுய நிர்ணய போராட்டத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம். இலங்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட, சுய நிர்ணய அதிகாரம் பெற்ற தமிழர் நாடு வேண்டும் என்ற அவர்களின் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆயுதம் ஏந்திய போராட்டத்தை எதிர்க்கிறோம்.




இன்று யார் யார் எல்லாம் வந்து ஜெக்கு பொன்னாடை போர்த்துகிறார்களோ அவர்கள் எல்லாம் ஜெ கூட்டணிக்கு வர வாய்ப்பு இருக்கிறது. போர்த்திய பொன்னாடைகளை இலங்கை தமிழர்கள் (மற்றும் தமிழ்நாட்டு தமிழர்கள்) தங்கள் வசதிக்கேற்ப தலையில் போட்டுக்கொள்ளலாம்

22 Comments:

Anonymous said...

இட்லிவடை அவர்களே,

/////// இலங்கையில் நடைபெற்றுவரும் இனபடுகொலையை தடுத்து நிறுத்தவும், போரை நிறுத்தவும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், இலங்கையில் படுகொலை செய்யப்பட்டு வரும் இலங்கை தமிழர்களுக்காக,அதிமுக சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் , இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தரும் வகையில் இந்த போராட்டம் நடைபெறுகிறது.////

ஒரு லேசான மாற்றம்தான் செய்தேன்! இப்போ படிச்சுப் பாருங்க! தமாஷா இருக்கும் !

நன்றி!

சினிமா விரும்பி

கலைக்கோவன் said...

//தமிழர்களுக்காக தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கிறோம். ஆயுதம் ஏந்திய போராட்டத்தை எதிர்க்கிறோம்//

ஹே...ஹே...ஹெஹ்ஹே..,
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

Anonymous said...

brilliant

Anonymous said...

Hi,

Rendu moonu nalaiku munnala, Kalaignaroda arikaiyil Jayavai kevalamaaga thitti irundhar ("meivadharku kathirikirar" endru soli irundhar). Avar enna solla varrar endru ellarukkum theriyam. Jaya oru pen enbadhinalaye, avar oru kalathil nadigai enbadhu nalaye avar edho dhinam dhinam soram poi kondu iruppavar pola pesikondirikkirar. Kanimozhi pondra poli penniya vadhigal enna seidhu kondirikkirar. Avar en than thandhaiyin 'marriage relay' race patri vai thirapadhillai. Rasathi ammal, Kalaignar iruvarukkulle nadakkum thanipatta vizhayam endru solli jaga vanguvara. Idhe logic ella edathirkum porundhadha. Kanimozhi pondra atkal moolam ondru thelivaga therigiradhu: Thandhaiyo, kanavano kasullavanaga irundhal podhum. Avan kayavan anaalum seri. Adhu patri kavalai illai. Appadi irundhal dhan ivar endha periya sambathiyime illai endralum ivar Honda City-il poi ilayyika pani seiya mudiyum, CIT Nagar-il maada maaligai katta mudiyum, Tata, Birla vamsathil vandha perum thozhil adhibar ivar thai periya furniture showroom nadatha mudiyum.
Vazhga jananayagam. Vazhga penniyim.

Anonymous said...

பின்னால் சிவப்புத்துண்டு; சரி.

முன்னால் என்ன நடக்கிறது?

Rajaraman said...

\\“கூட்டணி வைத்தால் தலைவன் காலி”
“தனித்து போட்டியிட்டால் தொண்டன் காலி”//

ஏற்கனவே தானும் குழம்பி, தனது மனைவி மற்றும் மச்சானையும் குழப்பி தொண்டர்களை ஒரு மர்ம சஸ்பென்சில் தவிக்கவிட்டு வேட்பாளர்களாக நிற்க விரும்புவர்களை ஒரு அதீத பயத்தில் நிறுத்தி நிதானமில்லாமல் இருக்கும் விஜயகாந்தை, IV நீங்களுமா இப்படி போகிற போக்கில் ஒரு இடி இடிப்பது. பாவம் விட்டு விடுங்கள். (Anyway Punch supero super)

SathyaRam said...

Pls. dont report wrong content. She had clearly mentioned 'Tamilnadu under SriLankan Laws'. You have carefully ignored it and just mentioned it as TamilCountry.....

You have become like Hindu Ram

IdlyVadai said...

SathyaRam உங்கள் பெயருக்கு ஏற்றார் போல் சத்தியத்தை பேசியுள்ளீர். நன்றி. திருத்திவிட்டேன், முதலில் வந்த செய்தி இப்படி தான் இருந்தது. பிறகு மாற்றியுள்ளார்கள்.

நானும் திருத்திவிட்டேன். நன்றி.

Anonymous said...

IV சார் எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. ஒரு விளம்பரம் வெளியிடமுடியுமா.

விளம்பர மேட்டர்:

காணவில்லை:

கண்ட கண்ட சம்பந்தா சம்பந்தமில்லாத விஷயங்களில் கூட தலைய விட்டு பதிவு எழுதிகிறேன் பேர்வழி என்று அதிமேதாவித்தனம் காட்டும் சில திம்மிகளை சமீப காலமாக காணவில்லை. கண்டுபிடித்து தருபவர்களுக்கோ அல்லது தகவல் தருபவர்களுக்கோ ஒரு குவாரட்டாரும் கோழி பிரியாணியும் சன்மானம் அளிக்கப்படும்.

Anonymous said...

இந்த நாடகம் அந்த மேடையில் எததனை நாளம்மா?

இலவசக்கொத்தனார் said...

மின்கலன் தீரவும் மின்சாரம் தேடிடும்
என்னன்பு ஐரோபாட் இப்போது சார்ஜின்றி!
இன்றைய ஈழத்தை எண்ணியி ருக்குதோ
உண்ணாமல் சாகின்ற நோன்பு?


நாங்களும் பங்கெடுத்துக்கிட்டதை சரித்திரம் சொல்லணுமுல்ல!!

Anonymous said...

// கூட்டணி வைத்தால்
தலைவன் காலி

தனித்து போட்டியிட்டால்
தொண்டன் காலி //

சூப்பர் பஞ்ச்
வயிறுவலிக்க சிரிக்கவைத்தது

ஆனா விஜயகாந்தின்
தீவிர ஆதரவாளரான
(இ.வ.) உங்களிடமிருந்து
இதை எதிர்பார்க்கவில்லை

ஆதரவாளரே
ஆப்பு வைத்தா
ஆசான் தாங்குவாரா?

Anonymous said...

we ve 2 appriciate her...
wt happened alliance with PMK?

ராகவன் பாண்டியன் said...

// கூட்டணி வைத்தால்
தலைவன் காலி

தனித்து போட்டியிட்டால்
தொண்டன் காலி //

பக்கத்துலயே விஜயகாந்த் நாக்க கடிச்சுட்டு பன்ச் சொல்ற போட்டோவ போட்டிருக்கலாம்!
இருந்தாலும் சூப்பர்!

Krish said...

இது அந்தர் பல்டி!

Krish said...

"15-10-2008 அன்று ஜெயலலிதா இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக ஒரு அறிக்கை விடுத்தார். அந்த அறிக்கையில் இலங்கையில் தற்போது நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம், இந்திய அரசிடம் இல்லை என்றும், இலங்கை உள்நாட்டு விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டால் பின்னர் நம் நாட்டு உள் விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அது இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பதாக அமையும், அடுத்த நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடுவதை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளாது என்று முழங்கினார். "

டவுசர் பாண்டி said...

இப்ப தாம்ப்பா மொத தபா வந்து கீறேன்.
நம்பல ஆசீர்வாதம் குடு நைனா!

அப்பாலே இன்னிக்கி அந்த அம்மா வோட டாக்டரு சாப்புடாத இருன்னு சொன்னாரு, போல அதான்.
ஐயே! இன்னா கோரமப்பா இது ?
நம்ப ஏரியா பக்கம்
வா கண்ணு .

Rama Karthikeyan said...

I needed to post this somewhere on your blog..Hope you don't moderate this -

http://bale-blog-ia.blogspot.com/2009/03/m-k-gandhi-gone-oncetwice.html

chovisiri said...

http://bale-blog-ia.blogspot.com/2009/03/m-k-gandhi-gone-oncetwice.html

MY browsers states that such blog does not exist.

Anonymous said...

Sundaresan Writes,
I Do Not Understand Why You Are So Against And Vehement On Sri Vijajkanth. You Must Understand That He Secured Not Less Than 8.39% Votes In Tamilnadu Even Without Having Strong Foundation, Organisation and Capabilities . I Will Be Glad If He Fights The Election All Alone , Or If At All Joining Alliance To Join AIADMK Group and Wins All Seats (7!) He Is Given.

Rama Karthikeyan said...

"http://bale-blog-ia.blogspot.com/2009/03/m-k-gandhi-gone-oncetwice.html

MY browsers states that such blog does not exist."\

@chovisiri--

Just try going to -
http://bale-blog-ia.blogspot.com/

Idlyvadai-
Is there anyway that you can publish my latest blog post on your site? Its in English tho..

IdlyVadai said...

//Idlyvadai-
Is there anyway that you can publish my latest blog post on your site? Its in English //

You can send the post to my mail id
idlyvadai2007 at gmail dot com. I will have a look and post it