பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, March 07, 2009

மு.கண்ணப்பன் ம.தி.மு.க.வில் இருந்து விலகல் ?

மு.கண்ணப்பன் ம.தி.மு.க.வில் இருந்து விலகல் ?

ம.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வு மான மு.கண்ணப்பன் அவைத்தலைவராக உள்ளார். சென்னையில் கடந்த மாதம் அறுவை சிகிச்சை செய்து கொண்ட முதல்-அமைச்சர் கருணாநிதியை மு.கண்ணப்பன் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். மு.கண்ணப்பன் முதல்-அமைச்சரை சந்திக்க செல்வது பற்றி வைகோவிடம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது வைகோவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து வைகோவால் மு.கண்ணப்பன் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் மு.கண்ணப்பன் ம.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் சேரப்போவதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து பொள்ளாச்சி அருகே ஆலாம்பாளையம் பண்ணை வீட்டில் இருந்த மு.கண்ணப்பனிடம் கேட்டபோது, அது பற்றி பதில் கூற மறுத்துவிட்டார். இந்த நிலையில், அவர் தனது பண்ணை வீட்டில் ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தினார்
இவர் ஒரு லட்சம் பேரை திமுகவிற்கு கொண்டு போவார் போல

2 Comments:

K SRINIVASAN said...

M Kannapan joining DMK..

Neither is it going to be DMK's gain nor MDMK's loss..

its just a 3rd page news for a day

nothing more than that

R.Gopi said...

இந்த மாதிரி கட்சி மாறிட்டு இருந்தார்னா, நாளைக்கு அவர் யாருக்கு ஒட்டு போடுவாரோ??