பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 06, 2009

தி.மு.க கூட்டணியில் பா.ம.க

கூட்டணி பேச்சுவார்த்தை: கலைஞரை இன்று சந்திக்கிறார் ராமதாஸ்!

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்காக பேச்சுவார்த்தை நடத்த திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதியை, பாமக நிறுவனர் ராமதாஸ் வெள்ளிக்கிழமை காலை சந்திக்கிறார் என்று பாமக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பா.ம.க.வை காங்கிரஸ் அணியில் நீடிக்கச் செய்ய வேண்டும் என்றே காங்கிரஸ் தலைமை விரும்புகிறது. அதே சமயம் காங்கிரஸ் அணியில் நீடிக்க வேண்டும் என்ற கருத்தை மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்துவதாகச் சொல்லப்படுகிறது.

எந்த அணிக்குச் சாதகமான சூழ்நிலை தென்படுகிறது அந்த அணியில் ராமதாஸ் இருப்பார். ஆக தமிழ்நாட்டில் திமுக்-காங்கிரஸ் கூட்டணிக்கு தான் வாய்ப்பு அதிகம் என்று நினைக்கிறேன்.

7 Comments:

கொடும்பாவி-Kodumpavi said...

குஜராத் சட்டமன்ற தேர்தல் போல ஆயிடுச்சுன்னா இதே கூட்டணி குடுமிச் சண்டை போட்டுக் கொள்ளவதையும் பார்க்க நேரிடும். பாமக - ஆதரவு இலங்கை தமிழர் பிரச்சனை.
காங்கிரஸ் - வாய்மூடி
திமுக - தொண்டை குழி அடைப்பு

நல்ல கூட்டணி..!

Kots said...

இன்றைய தினத்தந்தி மற்றும் தாட்ஸ் தமிழ் இணைய தளத்தில் நான் படித்த செய்தி
என்னவென்றால் பா . ம. க , அ . தி. மு. க உடன் கூட்டணி வைத்து கொள்ள போவதாகவும்
பா . ம. க விற்கு 6 லோக் சபா தொகுதிகளும் 1 ராஜ்ய சபா தொகுதியும் கொடுப்பதாக
அ. தி. மு. க கூறி இருப்பதாகவும் படித்தேன்.

ஜீவா said...

எந்த அணிக்குச் சாதகமான சூழ்நிலை தென்படுகிறது அந்த அணியில் ராமதாஸ் இருப்பார். ///

மிகச்சரியானது :)

Anonymous said...

அஇஅதிமுகவுடன் செல்ல முடிவெடுத்து விட்டதாகத் தெரிகிறதே!!!!!

Loganathan - Web developer said...

கண்டிப்பாக தி.மு.க அணியில் தான் பா.ம.க இருக்கும்.. - அன்புமணி

kankaatchi.blogspot.com said...

மாறன் பிரதர்ஸ், ஸ்டாலின்,அழகிரி பிரதர்ஸ் ஒன்று சேர்ந்து விட்டார்கள். எனவே இதில் ஒன்றும் வியப்பு இல்லை.

அறிவிலி said...

இந்தக் "கோடி"யிலிருந்து அந்தக் "கோடி"க்கு போவதெல்லாம் எப்பவும் நடக்கறதுதானே?