பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, March 03, 2009

’இயேசு அழைக்கிறார்’ மையம் முன்பு இராம. கோபாலன் அழைக்கிறார்

அடையாறு கிரீன்வேஸ் சாலைக்கு டி.ஜி.எஸ். தினகரன் பெயர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்து முன்னணி அமைப்பாளர் இராம. கோபாலன் அறிவித்திருக்கிறார்.

”பழமையான கிரீன்வேஸ் ரோடு என்பதை மாற்றி, இந்துக்களை ஆசைகாட்டி, பயமுறுத்தி, பொய்யான வாக்குறுதிகளை அளித்து மதமாற்றம் செய்த கிறிஸ்தவ டி.ஜி.எஸ். தினகரன் பெயர் வைத்திருப்பது தமிழ் பண்பாட்டிற்கும், பெரும்பான்மை இந்து சமுதாயத்திற்கும் இழைக்கப்படுகிற மிகப்பெரிய அநீதி, இதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

தினகரன் - தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் கல்விப்பணியாற்றிய தமிழர் என்று சில தமிழ்சமயத்தை சாராதவர்கள் கூறுகிறார்கள். தினகரன் கோவையில் காருன்யா பல்கலை அமைத்து முற்றிலும் மதமாற்ற பணியே நடைபெற்று வருகிறது. இதுதான் தமிழ்நாட்டுக்கு செய்த தொண்டா?

அப்படியானால், மேல்மருவத்தூர் அடிகளார், மாதா அமிர்தானந்த மயிதேவி, சின்மயா மிஷன், ரவிசங்கர் சுவாமி போன்ற பல ஆன்மீகப் பெரியவர்கள் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் போன்ற பல தொண்டுகள் செய்து வருகிறார்கள். இவர்களில் யாராவது மதமாற்றம் செய்ததாக வரலாறு உண்டா?

தமிழக மக்களின் தாகம் தீர்க்க கிருஷ்ணா நதிநீர் கிடைத்திட சுமார் 250 கோடி ரூபாய் கொடுத்த ஸ்ரீ சத்திய சாயிபாபா கட்டாய மதமாற்றம் செய்தாரா? இவர்களின் பெயர்களை தமிழ்நாட்டில் எந்த ஒரு சாலைக்கோ பெயர் வைக்காமல் தினகரன் பெயர் வைத்திருப்பது முழுக்க முழுக்க அரசியல். தேர்தல் கால கூத்து, ஓட்டு வாங்கும் மலிவானயுக்தி.

கிரீன்வேஸ் சாலையில் தேவர் திருமகன், பி.எஸ். குமாரசாமி ராஜா போன்ற தேசபக்தர்கள் பெயர்கள் இருக்கும் போது தற்போது தினகரன் பெயரை வைத்திருப்பது தேசபக்தர்களை அவமானப்படுத்தும் செயல். டி.ஜி.எஸ். தினகரன் பெயரை அரசு வைத்துள்ளதால் திமுக அரசு மதமாற்றத்திற்கு சிவப்பு கம்பளம் விரிக்கிறது என்று பொதுமக்கள் உள்ளம் கொதிக்கிறார்கள்.

ஆழ்வார்பேட்டை கத்தீட்ரல் சாலைக்கு டி.டி. கிருஷ்ணமாச்சாரி சாலை (டி.டி.கே. ரோடு) என்று பெயர் சூட்டியபோது கிறிஸ்தவர்கள் அதை எதிர்த்த காரணத்திற்காக எம்.ஜி.ஆர். அம்முயற்சியை கைவிட்டார். திருவல்லிக்கேணி வாலாஜா சாலை என்ற பெயரை மாற்ற முயற்சித்த போது முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த பெயர் மாற்றமும் கைவிடப்பட்டது.

ஆகவே தமிழ்நாடு அரசு இந்த பெயர் மாற்ற உத்தரவை திரும்பப் பெறவேண்டும். இதை வலியுறுத்தி இந்து முன்னணி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

சென்னையில் 4-03-09 மாலை 4.30 மணிக்கு கிரீன்வேஸ் சாலையில் உள்ள ‘இயேசு அழைக்கிறார்’ மையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்’’

’இயேசு அழைக்கிறார்’ மையம் முன்பு இராம. கோபாலன் அழைக்கிறார்!

36 Comments:

R.Gopi said...

’இயேசு அழைக்கிறார்’ மையம் முன்பு இராம. கோபாலன் அழைக்கிறார்!
-----------------------
போராட்டத்திற்கு எல்லோரும் அலைகடலென திரண்டு வாரீர். போராட்டத்தில் பங்கு கொள்வீர். ஆதரவு தாரீர்.

(எல்லா போராட்டத்தின் முடிவிலும் கண்டிப்பாக டாஸ்மாக் சப்ளை உண்டு. ஆனால், கண்டிப்பாக இந்த போராட்டத்தின் முடிவில் டாஸ்மாக் சப்ளை எதுவும் கிடையாது ..... சரக்கு கிடைக்காது ...... )

ஜோ/Joe said...

//தமிழ்சமயத்தை சாராதவர்கள் //

தமிழ் சமயமா ? நல்ல காமெடிப்பா .

இராம.கோபாலன் -லாம் ஒரு ஆளுண்ணு.

Anonymous said...

////தமிழ்சமயத்தை சாராதவர்கள் //

தமிழ் சமயமா ? நல்ல காமெடிப்பா .

இராம.கோபாலன் -லாம் ஒரு ஆளுண்ணு.
//

TTV Thinakaran nellam oru allunu oru rottuku pear vaikkum pothu IVARU ORU PERIYA AALLUTHAN!!!

Intha TTV Thinakaran enna thozhil seiyarar...108 Koodi ruubba koduthu paris corner building ye vanginar / vaanga try pannar...

-Subbu

Anonymous said...

ராமகோபாலன் சொல்வது ரொம்ப சரி. எங்க ஊர்லேயும் பாரதியார் தெரு, நேதாஜி தெரு, திலகர் தெருனு தியாகிகள் பெயர்களுக்கு மத்தியில் அம்மன் கோவில், இராமசாமி கோவில்தெரு, அந்தோணியார்கோவில் தெருனு வச்சிருக்காங்க. இதனால் யாருக்கு மரியாதை யாருக்கு அவமரியாதைனு எங்களுக்கு தெரியல. அதனால் போக்குவரத்துகழகங்களின் பெயரை மாற்றியது போல் எல்லா பெயரையும் மாற்றிவிட்டால் நல்லது என நினைக்கின்றோம்.

Anonymous said...

மத சார்பற்ற கழக அரசின் நடவடிக்கை இது.. தேர்தல் வேற வரபோகுது.. அதான் கெளம்பிட்டாங்க.. இனிமே டெய்லி பேபர்ல வருமே சாதனைப்பட்டியலில் கண்டிப்பா இடம் பெறும்..

அதே காருன்யாவில என்னோட மதம் மாற்றப்பட்ட நண்பன் வாத்தியானா வேலை பாக்குறது கொசுறு செய்தி.. கொய்யால இதெல்லாம் ஒரு பொழப்புன்னு அவன தான் கேட்டேன்..

Anonymous said...

நிச்யமாக இந்த கமெண்டு வெளிவராது என எனக்கு தெரியும்.மத ஒற்றுமையைச் கெடுத்து மதவெறியைத்தூண்டும் ராமகோபாலன் போன்ற ஈன இழி பிறவிகளுக்கு காலம் தான் பதில் சொல்லவேண்டும். மனிதன் மனிதனாக வாழ்ந்தாலே போதும். மதமாற்றம் அவனவன் தனிப்பட்ட உரிமை. வறுமையைப் போக்கி மதமாற்றுகிறானா? அந்த வேலையை நீ செய்து அவனைத் தடு. அதைவிடுத்து அதை அரசியலாக்கி இரத்த ஆறுகள் ஓடச்செய்வது அயோக்கியன் அத்வானி தொடங்கி வெறியன் மோடி முதல் காவி வெறியன் ராமகோபாலன் வரை தொடர்கிறது. ஆனால் ஏழைகள் இன்னும் ஏழைகளே!

Anonymous said...

Rama. Gopalan has the guts to oppose such questionable acts of a "Minority" Govt. in TN.

Why should a religious person's name be chosen by a so-called Secular Govt? If Karunanidhi is really gutsy, let him openly say that his Govt is not secular but a pro-minority one & thats why he does all such anti-Hindu acts. And then let him face the elections along with Antonio Maino, the foreign broker & people will give him a fitting reply.

Anonymous said...

Idu DMK Arasin malivana araseiyal vilayattu. Ramagopalanum antha vilayatil kaalanthu kollum matrumoru team member than

Anonymous said...

In tamilnadu, there is no security for Hindus & their religion. Sothat, the Political Dogs are doing like this.

If somebody stats to talk hindu religious, the others have stated to talk to opposition for Hindu.

WHAT IS THIS ?

I want to ask only one Question to everbody who are talking about anti Hindu.

can you tell that There NO hindu & hindu religious?

Then why Govt is undertaking all Hindu temples ? Leave it to Hindu peoples. they can maintain it more than Bullshit Govt .

They need Hindus vote and tax. But they never mind hindus.

Anonymous said...

//வறுமையைப் போக்கி மதமாற்றுகிறானா? அந்த வேலையை நீ செய்து அவனைத் தடு.//

காசு?

ஆப்பிரிக்காவின் பழங்குடிகளை அடிமைகளாக்கி, வைரச் சுரங்கங்கள் போன்ற அவர்களது இயற்கைச் செல்வங்களைக் கைக்குள் போட்டுக்கொண்டவர்களும், யூரோப்பிய மேலாண்மைக்கு ஆதரவு தந்து மற்றவர்களை நசுக்கி, அவர்களது கோயில் சொத்துக்களை கொள்ளையடிக்கும் இந்த கிருத்துவர்களிடமும், முஸ்லீம்களிடமும் அதீத செல்வம் சேருவதில் வியப்பென்ன? அடிமைகளை உருவாக்க இந்தக் கொள்ளைப் பணத்திலிருந்து சில துளிகளை அவர்களால்தான் எறியமுடியும்.

உழைப்பவன் குருவி போலக் கொஞ்சம் கொஞ்சமாக, வியர்வையும் ரத்தமும் சிந்தி, பல ஆண்டுகள் வேலை செய்துதான் சொத்து சேர்க்க வேண்டும். ஆனால், கொள்ளையடிக்கும் வல்லூறுகளுக்கு அந்தச் சொத்துக்களைப் பெறுவது ஒரு நாள் வேலை. கொடூரமான வல்லூறுகள் நல்லவராவதும், வலிமையற்ற குருவிகள் ஏளனத்திற்கு உள்ளாவதும் நடைமுறையாகிவிட்டன.

தாங்கள் கொள்ளையடித்த அடுத்தவர் சொத்துக்களில் இருந்து இந்த வல்லூறுகள் சில எலும்புத் துண்டுகளை எறிவதை கருணை என்று சொல்லும் போதனைகள் எங்கும் நடக்கின்றன. எலும்புத் துண்டுகளுக்காகப் போதனை செய்ய காத்திருக்கும் ஆட்கள் பல பேர். அந்தப் போதனைகளைப் புனிதமாகக் காட்ட வேலை செய்யவும் பல பேர்.

எறியும் ரத்தக்கறை படிந்த காசுகளுக்காக இன்று மதம் மாறுபவர்கள் தங்களுடைய மற்றும் தங்களுடைய சந்ததியினரின் உழைப்பையும், விடுதலையையும், மனித உரிமையையும், மானத்தையும் விற்றுப் பிழைக்கிறார்கள். இவற்றை இவர்கள் இழந்து அடிமையாக மாறுவதைத் தடுக்க வல்லூறுகளோடு குருவிகள் போட்டிபோட முடியுமா?

பிக்பாக்கெட் அடித்தவன் வள்ளலாகலாம். பர்ஸைப் பறிகொடுத்தவனால் எப்படிப் பணம் தர முடியும்?

மேலும், இங்கே ஒரு ஹிந்துவை ஒரு மதம்மாற்றி கிருத்துவனாகவோ, முஸ்லீமாகவோ விற்றால் அதற்கு அவனுக்குக் கமிஷன் உண்டு. இது ஒரு பிஸினஸ். விபச்சாரியாகிவிட்ட ஒரு பெண், வயதான காலத்தில் கடத்திவரப்பட்ட இளம்பெண்களை விபச்சாரத்தில் தள்ளிச் சம்பாதிப்பது போலச் சம்பாதிப்பதுதான் மதம்மாற்றும் பிஸினஸும். ஒரு விபச்சாரி மற்ற பெண்களை விபச்சாரத்தில் தள்ளி சம்பாதிப்பதுபோல, மதம் மாறிய ஒருவன் மற்றவர்களை மதம் மாற்றிப் பிழைக்கிறான். இது லாபம் தரும் தொழிலாக இருப்பதால்தான் மிகப் பிரமாதமாக நடக்கிறது.

வறுமையை சுய உழைப்பால் அழிக்க முடியும் என்று நம்புபவர்கள் ஹிந்துக்களாகவே இன்றும் இருக்கிறார்கள். தன் சுய உழைப்பின்மேல் நம்பிக்கை இல்லாமல் தோசை சாப்பிடக் காசு கிடைக்கிறது என நினைத்து ஓடும் நாய்கள், சுதந்திரத்தை விற்று வறுமையை போக்கிக்கொள்ளுகின்றன.

இதில் கொடுமையான விசயம் என்னவென்றால், இந்த மதமாற்றிகளின் ஆக்கிரமிப்பு வேலைகள்தான் தங்களது முந்தைய வறுமை நிலைக்குக் காரணம் என்பது மதம் மாறிய அப்பாவிகளுக்குத் தெரியாது. பாவம்.

கிருத்துவர்களை நம்பி ஆப்பிரிக்கர்கள் ஏமாந்ததை கிருத்துவப் பாதிரியாரும், ஆப்பிரிக்கருமான டெஸ்மாண்ட் டுடு தெளிவாகச் சொல்லுகிறார்:

“கிருத்துவ மிஷனரிகள் ஆப்பிரிக்காவிற்கு வந்தபோது அவர்களிடம் பைபிளும், எங்களிடம் நிலங்களும் இருந்தன. ”ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்வோம்” என்றார்கள். நாங்கள் கண்களை மூடிக்கொண்டோம். கண்களைத் திறந்தபோது எங்களிடம் பைபிளும், அவர்களிடம் நிலங்களும் இருந்தன.”

இதுநாள் வரை புராதானமான ஆப்பிரிக்கக் கலாச்சாரம் கிருத்துவக் காட்டுமிராண்டிகளிடம் இருந்தும், இஸ்லாமியக் கொடூரர்களிடம் இருந்தும் விடுபடவில்லை. ஹுடு-டுட்ஸி இன ஒழிப்பை கிருத்துவம் உருவாக்கியது. சோமாலியாவை இஸ்லாம் உருவாக்கியது.

அதுபோல இந்தியாவையும் இந்தியர்களையும் மாற்ற இந்தியர்களை “இயேசு அழைக்கிறார்”.

பொறுக்கிப் பிழைக்கப் போகிறவர்கள் போகட்டும். நாங்கள் மானத்தோடு இறக்கப் போகிறவர்கள். எங்கள் சந்ததிகள் சுதந்திரமாக வாழ்வார்கள்.

Anonymous said...

பிதாவே ராம கோபாலனை மன்னித்துவிடுங்கள் இவருக்கு செக்கும் தெரியாது சிவலிங்கமும் தெரியாது

Anonymous said...

\\“கிருத்துவ மிஷனரிகள் ஆப்பிரிக்காவிற்கு வந்தபோது அவர்களிடம் பைபிளும், எங்களிடம் நிலங்களும் இருந்தன. ”ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்வோம்” என்றார்கள். நாங்கள் கண்களை மூடிக்கொண்டோம். கண்களைத் திறந்தபோது எங்களிடம் பைபிளும், அவர்களிடம் நிலங்களும் இருந்தன.\\..
சுழியம்..
சாட்டையடி..

Anonymous said...

//பிதாவே ராம கோபாலனை மன்னித்துவிடுங்கள் இவருக்கு செக்கும் தெரியாது சிவலிங்கமும் தெரியாது//

தப்பு. சிவலிங்கம் தெரியும். அதனால் ராமகோபாலனுக்கு “செக்” தெரிவதில்லை.

எட்வின் said...

இது ஆளுங்கட்சியின் அரசியல் உள்நோக்கம் கொண்ட முடிவு... காலஞ்சென்றவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டுமானால் கல்லறையில் சென்று செய்யுங்கள் இல்லை அவர்கள் பெயரில் இல்லாதோருக்கு உதவுங்கள்... பெயர் சூட்டல் எல்லாம் தமிழகத்திற்கு தேவை இல்லாத ஒன்று.

பேருந்துகளில் இருந்து பெயர்களை மாற்றியது போல் தெருக்கள் சாலைகளில் இருக்கும் பிரபலங்களின் பெயர்களை மாற்றுதலே சிறந்தது.

Anonymous said...

பிதாவே கருணாநிதியை மன்னித்துவிடுங்கள். அவருக்கு ஜஸ்கிரீம்முக்கும், மலத்துக்கும் வித்தியாசம் தெரியாது.

Anonymous said...

Yenna ithai poi perisa sollikitu. KK enna avar kudumba nabar peyaraya veichar.

Thiru. Dinakaran evalavu mahathana aalu, avaru oru mahathma & Evalavu oru selvanthan. Avaru naatu-kagavum especially tamil natukagavum odaa uzhaichu thurumba elaichavaru. In fact avaru oru thiyagi - foreign funds ellathaium padiparivilla paamara makalai ellam padika veithu - indhu kalaga irupathu evalavu muttal thanam-nu puriya veithu - christiana maattri avar galai mempada veichavaru. Avar perule road veicha podadhu - chennai perai matranum - avar sillai ovu-oru theruvillum veikanum. Ellarum avar photo-vil than muthalil kalaiyil parkanum.

India-vil (athuvum tamil natil) Indhu-kkal irundhe suvvade theriyama poga veika ennavellam panna vendumo athai athanaiyum sevanne seiyum namma tamil-aga KK arasu.

Hindus are Second Citizens in their own country especially in TN. I failed to understand with the reservations KK Govt. has provided for Christians and Muslims - does it mean that they get through their caste quota as well as Christian/Muslim minority quota? Never mind who cares - TN will be controlled by LTTE soon.

மாயவரத்தான் said...

Whoz that guy Dinakaran?!

மாயவரத்தான் said...

Ada, thamizh samaya authority 'Joe' vanthittaruppa inga!

Joevellam oru aalunnu comment-a allow panreengalae IV?!

Anonymous said...

பாப்பானைத் திட்டிக்கிட்டே சைடில என்னல்லாம் வேலை பாத்திருக்கானுங்கன்னு யோசிங்க மக்களே. ஒத்தனுக்கும் கோமணம் கூட மிஞ்சாது. தமிழ் நாட்டில சுப்ரீம் கோர்ட் நினைச்சாக்கூட கோர்ட்டத் திறக்க முடியாது. நீங்க நல்லா பேரு வைங்க.

Anonymous said...

Thiru mayavarathan avargale -

Thiru T. J. S Thinakaran yesuvin seedar. Krithuva mathathathin mahathuvathai pamara makaluku eduthu uraithu (marina kadarkarai pondra edangalil) koodave porul uthaviyum siethu thondatrupavar.

Avar pal-aayirakanakile acre-galai valaithu pottukondu kalloori nadathi athu vayilagavum matha mattrangalai naduthupavar.

Avar kudil pala acregalil amainthu ullathu. Avar kudumbam pala kalangalaga melai nattu karil bavani varum.

Hope it helps.

கொடும்பாவி-Kodumpavi said...

//சிவலிங்கம் தெரியும். அதனால் ராமகோபாலனுக்கு “செக்” தெரிவதில்லை.//

//
ஜஸ்கிரீம்முக்கும், மலத்துக்கும் வித்தியாசம் தெரியாது.
//

//Whoz that guy Dinakaran?! //

இதெல்லாம் தேவையா?

என்ன இட்லி வடை பத்த வச்சிட்டு பார்த்துகிட்டு இருக்கீங்களா? தினகரன் அமரர் ஆகிட்டார். அவரு என்ன செஞ்சாரு என்ன செய்யலன்னு ஆராய்வது இந்த பதிவின் நோக்கமல்ல என்று நான் நெனக்கேன். அவரு ஒன்னும் சர்வாதிகாரி கிடையாது. அவரை பற்றி பேசுவதற்கு பதில் குறிப்பிட்ட மத மக்களின் ஆதரவைப் பெற இது போன்ற கீழ்த்தரமான செயல் செய்யும் அரசை விமர்சிப்பதுதான் சரி. தன் மதத்தின் மீது நம்பிக்கையில்லாதவர்கள்தான் பிரச்சாரம் செய்ய வேண்டும். கூட்டம் சேர்க்க வேண்டும். இது இரண்டும் இந்து மதத்திற்கு தேவை இல்லாதது. அதை (இந்து மதத்தை) யாருடைய பிரச்சாரமும், மன மத மாற்றமும் ஒன்றும் செய்து விட முடியாது. இந்தியப் பண்பாட்டை வழக்கத்தில் கொண்டுள்ளது இந்து மதம்.

ꢦ꣄ꢬꢨꢸ பிரபு.. said...

இப்படியாகத் தான் இந்தியாவிலே, தமிழ் நாட்டிலே பெயரை மட்டும் மாற்றி நாசமாய்ப் போகிறார்கள்!

எத்தன தடவ பெயர் மாற்றினாலும் இருக்கிறவன் இன்னும் இழிச்சவாயனாத் தான் இருக்கான். மத்த ஒண்ணும் மாறக் காணாம்.

Anonymous said...

YOU FOOL SHUTUP - It is not true. It can not be. Show me if you find somebody like that.

Kindly help yourself by reading his life history. In spite of all his problems he served to the humanity.

I also studied in Karunya. They conduct prayer meetings but no one can tell there is conversion happening. If I am happy about something I have all rights to choose that.

1000s of people was blessed through his ministries.

----------------------------

மேலும், இங்கே ஒரு ஹிந்துவை ஒரு மதம்மாற்றி கிருத்துவனாகவோ, முஸ்லீமாகவோ விற்றால் அதற்கு அவனுக்குக் கமிஷன் உண்டு. இது ஒரு பிஸினஸ். விபச்சாரியாகிவிட்ட ஒரு பெண், வயதான காலத்தில் கடத்திவரப்பட்ட இளம்பெண்களை விபச்சாரத்தில் தள்ளிச் சம்பாதிப்பது போலச் சம்பாதிப்பதுதான் மதம்மாற்றும் பிஸினஸும். ஒரு விபச்சாரி மற்ற பெண்களை விபச்சாரத்தில் தள்ளி சம்பாதிப்பதுபோல, மதம் மாறிய ஒருவன் மற்றவர்களை மதம் மாற்றிப் பிழைக்கிறான். இது லாபம் தரும் தொழிலாக இருப்பதால்தான் மிகப் பிரமாதமாக நடக்கிறது.

YOU FOOL SHUTUP - It is not true. It can not be. Show me if you find somebody like that.
----------------------------------

Anonymous said...

//1000s of people was blessed through his ministries.//

was போடக்கூடாது, were போடவேண்டும்.

காருண்யாவில் அல்லேலூயா நடத்தியிருக்கிறார்கள், ஆங்கிலம் நடத்தவில்லை என்பது தெரிகிறது.

//YOU FOOL SHUTUP - It is not true. It can not be. Show me if you find somebody like that.//

இருந்தாலும் உங்களுக்குத் தன்னடக்கம் ஜாஸ்தி. உங்களை வேறு ஒருத்தர் வந்து அறிமுகப்படுத்தவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்.

Anonymous said...

//In spite of all his problems he served to the humanity.//

சும்மாவா? சென்னையில் 280 கோடி கொடுத்து ஒரு கட்டிடத்தை விலைக்கு வாங்கும் அளவுக்கு சமூக சேவை செய்திருக்கிறார்.

என்னய்யா அது, மக்களுக்குச் சேவை செய்யப்போகிறேன் என்று சொல்லுகிற பஞ்சப் பரதேசிகள் எல்லாம் பல கோடிகளுக்கு அதிபதிகளாகி விடுகிறார்களே. எப்படி அது?

இப்படி பல கோடிகளுக்கு அதிபதியாகிவிட்ட அயோக்கியன்கள் ஒரு காலத்தில் பஞ்சப் பரதேசியாக இருந்ததால் கேள்வியே கேட்கக்கூடாது, வாயை மூடு என்கிறார்களே. ஏன் அது?

சுவனத்திற்குள் அனுமதி தர பரலோகத்தில் உள்ள பிதா இப்படி எல்லாம் செய்யச் சொல்லுகிறான் போலும்.

Guruprasad said...

இதற்கு ஏன் ராமகோபாலன் tension ஆகிறர்? If he can guarantee some good votes to DMK combine in the elections, Shriman NaakkaMUKA can rename the Chennai-600086 as
இராமகோபாலபுரம்

priyamudanprabu said...

மத ஒற்றுமையைச் கெடுத்து மதவெறியைத்தூண்டும் ராமகோபாலன் போன்ற ஈன இழி பிறவிகளுக்கு காலம் தான் பதில் சொல்லவேண்டும். மனிதன் மனிதனாக வாழ்ந்தாலே போதும். மதமாற்றம் அவனவன் தனிப்பட்ட உரிமை. வறுமையைப் போக்கி மதமாற்றுகிறானா? அந்த வேலையை நீ செய்து அவனைத் தடு. அதைவிடுத்து அதை அரசியலாக்கி இரத்த ஆறுகள் ஓடச்செய்வது அயோக்கியன் அத்வானி தொடங்கி வெறியன் மோடி முதல் காவி வெறியன் ராமகோபாலன் வரை தொடர்கிறது. ஆனால் ஏழைகள் இன்னும் ஏழைகளே!

priyamudanprabu said...

////
“கிருத்துவ மிஷனரிகள் ஆப்பிரிக்காவிற்கு வந்தபோது அவர்களிடம் பைபிளும், எங்களிடம் நிலங்களும் இருந்தன. ”ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்வோம்” என்றார்கள். நாங்கள் கண்களை மூடிக்கொண்டோம். கண்களைத் திறந்தபோது எங்களிடம் பைபிளும், அவர்களிடம் நிலங்களும் இருந்தன.”
////

எல்லா மதமும் திருட்டு மதம்கள்

priyamudanprabu said...

சுழியம் - இந்து மதம் ரொம்ப யோக்கியமா????
எல்லாம் மோசம்
மதம் ஒரு போதைமருந்து
பிராண்டுதான் வேருவேரு

priyamudanprabu said...

இந்தியப் பண்பாட்டை வழக்கத்தில் கொண்டுள்ளது இந்து மதம்.
///

இந்தியர்களுக்க்கென்று தனி மதம் உண்டா????
இந்து மதம் உட்பட எல்ல மதமும் வெளியிலிருந்து வந்தவை என்று நினைக்கிறேன்
நீங்க என்ன சொல்லுறீங்க???

Anonymous said...

பிரபு, நீங்க உளர்றீங்கன்னு சொல்லறேன்....

Aravindhan G said...

urpidiyaana visayatha ramagopalan mattum taan seiyaanuma,Entha oru mediyaavum yen eppadi oru qustion naa raise pannala... Now a day's media's are doing irresponsible activity,

Aravindhan.G

Anonymous said...

////காசு?

ஆப்பிரிக்காவின் பழங்குடிகளை அடிமைகளாக்கி, வைரச் சுரங்கங்கள் போன்ற அவர்களது இயற்கைச் செல்வங்களைக் கைக்குள் போட்டுக்கொண்டவர்களும், யூரோப்பிய மேலாண்மைக்கு ஆதரவு தந்து மற்றவர்களை நசுக்கி, அவர்களது கோயில் சொத்துக்களை கொள்ளையடிக்கும் இந்த கிருத்துவர்களிடமும், முஸ்லீம்களிடமும் அதீத செல்வம் சேருவதில் வியப்பென்ன? அடிமைகளை உருவாக்க இந்தக் கொள்ளைப் பணத்திலிருந்து சில துளிகளை அவர்களால்தான் எறியமுடியும்.

உழைப்பவன் குருவி போலக் கொஞ்சம் கொஞ்சமாக, வியர்வையும் ரத்தமும் சிந்தி, பல ஆண்டுகள் வேலை செய்துதான் சொத்து சேர்க்க வேண்டும். ஆனால், கொள்ளையடிக்கும் வல்லூறுகளுக்கு அந்தச் சொத்துக்களைப் பெறுவது ஒரு நாள் வேலை. கொடூரமான வல்லூறுகள் நல்லவராவதும், வலிமையற்ற குருவிகள் ஏளனத்திற்கு உள்ளாவதும் நடைமுறையாகிவிட்டன.

தாங்கள் கொள்ளையடித்த அடுத்தவர் சொத்துக்களில் இருந்து இந்த வல்லூறுகள் சில எலும்புத் துண்டுகளை எறிவதை கருணை என்று சொல்லும் போதனைகள் எங்கும் நடக்கின்றன. எலும்புத் துண்டுகளுக்காகப் போதனை செய்ய காத்திருக்கும் ஆட்கள் பல பேர். அந்தப் போதனைகளைப் புனிதமாகக் காட்ட வேலை செய்யவும் பல பேர்.

எறியும் ரத்தக்கறை படிந்த காசுகளுக்காக இன்று மதம் மாறுபவர்கள் தங்களுடைய மற்றும் தங்களுடைய சந்ததியினரின் உழைப்பையும், விடுதலையையும், மனித உரிமையையும், மானத்தையும் விற்றுப் பிழைக்கிறார்கள். இவற்றை இவர்கள் இழந்து அடிமையாக மாறுவதைத் தடுக்க வல்லூறுகளோடு குருவிகள் போட்டிபோட முடியுமா?

பிக்பாக்கெட் அடித்தவன் வள்ளலாகலாம். பர்ஸைப் பறிகொடுத்தவனால் எப்படிப் பணம் தர முடியும்?

மேலும், இங்கே ஒரு ஹிந்துவை ஒரு மதம்மாற்றி கிருத்துவனாகவோ, முஸ்லீமாகவோ விற்றால் அதற்கு அவனுக்குக் கமிஷன் உண்டு. இது ஒரு பிஸினஸ். விபச்சாரியாகிவிட்ட ஒரு பெண், வயதான காலத்தில் கடத்திவரப்பட்ட இளம்பெண்களை விபச்சாரத்தில் தள்ளிச் சம்பாதிப்பது போலச் சம்பாதிப்பதுதான் மதம்மாற்றும் பிஸினஸும். ஒரு விபச்சாரி மற்ற பெண்களை விபச்சாரத்தில் தள்ளி சம்பாதிப்பதுபோல, மதம் மாறிய ஒருவன் மற்றவர்களை மதம் மாற்றிப் பிழைக்கிறான். இது லாபம் தரும் தொழிலாக இருப்பதால்தான் மிகப் பிரமாதமாக நடக்கிறது.

வறுமையை சுய உழைப்பால் அழிக்க முடியும் என்று நம்புபவர்கள் ஹிந்துக்களாகவே இன்றும் இருக்கிறார்கள். தன் சுய உழைப்பின்மேல் நம்பிக்கை இல்லாமல் தோசை சாப்பிடக் காசு கிடைக்கிறது என நினைத்து ஓடும் நாய்கள், சுதந்திரத்தை விற்று வறுமையை போக்கிக்கொள்ளுகின்றன.

இதில் கொடுமையான விசயம் என்னவென்றால், இந்த மதமாற்றிகளின் ஆக்கிரமிப்பு வேலைகள்தான் தங்களது முந்தைய வறுமை நிலைக்குக் காரணம் என்பது மதம் மாறிய அப்பாவிகளுக்குத் தெரியாது. பாவம்.

கிருத்துவர்களை நம்பி ஆப்பிரிக்கர்கள் ஏமாந்ததை கிருத்துவப் பாதிரியாரும், ஆப்பிரிக்கருமான டெஸ்மாண்ட் டுடு தெளிவாகச் சொல்லுகிறார்:

“கிருத்துவ மிஷனரிகள் ஆப்பிரிக்காவிற்கு வந்தபோது அவர்களிடம் பைபிளும், எங்களிடம் நிலங்களும் இருந்தன. ”ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்வோம்” என்றார்கள். நாங்கள் கண்களை மூடிக்கொண்டோம். கண்களைத் திறந்தபோது எங்களிடம் பைபிளும், அவர்களிடம் நிலங்களும் இருந்தன.”

இதுநாள் வரை புராதானமான ஆப்பிரிக்கக் கலாச்சாரம் கிருத்துவக் காட்டுமிராண்டிகளிடம் இருந்தும், இஸ்லாமியக் கொடூரர்களிடம் இருந்தும் விடுபடவில்லை. ஹுடு-டுட்ஸி இன ஒழிப்பை கிருத்துவம் உருவாக்கியது. சோமாலியாவை இஸ்லாம் உருவாக்கியது.

அதுபோல இந்தியாவையும் இந்தியர்களையும் மாற்ற இந்தியர்களை “இயேசு அழைக்கிறார்”.

பொறுக்கிப் பிழைக்கப் போகிறவர்கள் போகட்டும். நாங்கள் மானத்தோடு இறக்கப் போகிறவர்கள். எங்கள் சந்ததிகள் சுதந்திரமாக வாழ்வார்கள்.////

அப்போ உங்ககிட்ட காசு இல்லைனு சொல்றீங்க. நீங்க கொடுக்கவும் மாட்டீங்க. மக்கள் கிட்ட காசு வாங்க வேணாம்னு சொல்லுங்க. கொடுக்கிறவண நோண்டாதீங்க. உங்ககிட்ட காசு இல்லைனா பொத்திகிட்டு வேடிக்கை பாருங்க

kankaatchi.blogspot.com said...

திரு ராமகோபாலன் அவர்களே இதற்க்கெல்லாம் என் உணர்ச்சிவசப்பட்டு நேரத்தை வீணடிக்காதீர்கள். பெயரை வைத்தால் வைத்துக்கொண்டு போகட்டும்
இந்தியாவை ஆண்ட எந்தனையோ வயித்தெரிச்சல் கொட்டி கொண்ட வயிசிராய்கள் சிலைகள் எல்லாம் போன இடம் தெரியவில்லை.
செட்டியார், முதலியார் பிராமணர் ,என்றெல்லாம் இருந்த தெரு பெயர்கள் நம் கண் முன்னாலாலேயே காணாமல் போயின
எத்தனையோ ஆங்கிலேயர்களின் தெருபெயர்கள் தமிழ் பெயர்களாக மாறிவிட்டன
அது போல்தான் இதுவும்
இதுவும் கடந்து போகும் சிவகுமார் சொல்வதைப்போல் போல்
நாட்டில் எத்தனையோ நல்ல விழயங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன .அதற்க்கு ஆக்கமும் ஊக்கமும் தாருங்கள்.
வெளி நாட்டு கவர்சிகளோடு உன்னாலோ என்னாலோ போராட முடியாது
இந்நாட்டில் ஹிந்து என்று எல்லோரும் சொல்லிகொள்வார்கள்
ஆனால் போராட்டம் அது இது என்றால் உங்களை முன்னே தள்ளிவிட்டுவிட்டு ஒதுங்கிவிடுவார்கள்.அவர்களின் சுயநலம்தான் முதலில் நிற்கும்
எத்தனையோ போராட்டங்களையும்,இந்து ஆலயங்களின் நூற்றாண்டுகால சூறையாடலையும் தாண்டி இந்து மதம் இன்று உலகம் முழுவதும் பரவி விட்டது. அதை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.
உலகம் முழுவதும் கணக்கற்ற ஆலயங்கள்,சமய பணிகள், சமய விழிப்புணர்வுகள் என
உள்ளம் பொங்குகிறது.
சனாதன தர்மத்தை தானம் கொடுத்தெல்லாம்,(ஏ)மாற்றமுடியாது.
இது போன்ற போராட்டங்களை விடுத்து அவர்கள் செய்வதுபோல் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தால் மக்களுக்கு தெளிவு பிறக்கும்
அவர்களிடம் எவ்வளவு காசு இருந்தால் என்ன? அனைத்து மதத்தினரும் வாழும் சென்னை மக்களின் தாகத்திற்கு கோடி கோடியாக கொடுத்தது புட்டபர்த்தி சாய் பாபாதான்
கழக அரசோ கட்டாய மத மாற்றம் செய்யும் காருண்யம் என்று பெயர் கொண்ட கொட்டு சூட்டு போட்டு ஜெப கோபுரம் கட்ட காசு கேட்டு தொலைகாட்சியில் விளம்பரம் செய்யும் இவர்கள் இல்லை என்பது அனைவருக்கும் தெரயுயும்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி

Anonymous said...

kasukkaha maruravanlam mathathula
irukaratha vida veliya porathe nallathu?

athuvum illama thazhntha jaathinu onu illama poidum illaya (idhu eppadi)?

kankaatchi.blogspot.com said...

மதம் மாறுபவர்கள் எங்கு போனாலும் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதைதான் கிடைக்கும்.ஏனென்றால் எங்கு சில சமூகத்தினரை இழிவு செய்யும் மனிதர்கள் இருப்பதை போல் அங்கும் இருக்கிறார்கள் என்பதை போக போக அவர்கள் தெரிந்துகொள்வார்கள்.
ஒன்று சமுதாயத்தில் மதிக்கப்படவேண்டுமேன்றால் கல்வியினாலோ அல்லது, செல்வத்தினாலோ, பதவியினாலோ அல்லது அன்பினாலோ அல்லது உயர்ந்த பண்பினாலோ தன்னை உயர்த்திகொண்டால்தான் .
நாட்டில் மத மாற்றத்தை விட மன மாற்றம்தான் இப்போது தேவை.