பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 02, 2009

யாரையும் திட்டாதீர்கள் - ஏ.ஆர்.ரஹ்மான்

ஒவ்வொரு இசை கலைஞர்களுக்கும் குறிப்பிட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். இணையதளம் மூலம் என்னை வாழ்த்துவதற்காக இன்னொருவரை தூற்ற வேண்டாம். என் ரசிகர்களை நான் கேட்டுக்கொள்வது எல்லாம்... யாரையும் திட்டாதீர்கள்” இது ஏ.ஆர்.ரஹ்மான் நேற்று சொன்னது. இளையராஜா பேச்சு, மற்றும் வீடியோ கீழே...



இளையராஜா

"ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எத்தனை பாராட்டு நிகழ்ச்சிகள் நடந்தாலும், பிரமாண்டமாக இருந்தாலும், தங்க கிரீடமே சூடினாலும் இந்த விழாவிற்கு ஈடாகாது. ஆஸ்கர் விருது கிடைக்காததால் மற்ற இசைக் கலைஞர்கள் வருத்தப்படக்கூடாது. அனைவருக்கும் சேர்த்து தான் ரஹ்மான் விருது வென்றுள்ளார். ஜார்ஜ் வில்லியம்ஸ் நான்கு ஆஸ்கர் வென்றாலும், அவற்றை பெற கால இடைவெளி அதிகம் தேவைப்பட்டது. ரஹ்மான் ஒரே நேரத்தில் இரண்டு விருதுகளை வென்றது பெருமையானது”


எம்.எஸ்.விஸ்வநாதன்
"மாதா, பிதா, குரு, தெய்வத்தை மதிப்பவர்கள் தான் நல்ல நிலைக்கு வர முடியும். அவர்களை மதித்ததால் தான் ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. எனக்கு ஆஸ்கர் போன்ற விருதுகள் எல்லாம் வேண்டாம். இளையராஜா, ரஹ்மான் ஆகிய புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் எனக்கு கீழே வேலை பார்த்தவர்கள் என்பதால், ரஹ்மான் வென்ற விருது எனக்கு கிடைத்த மாதிரி தான்'


ஏ.ஆர்.ரஹ்மான்
"ஜப்பான், இத்தாலியில் உள்ள இசைக்கலைஞர்களுக்கு தான் இதுபோன்ற ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன. இதனால் இங்குள்ளவர்களுக்கு தகுதியில்லை என மற்றவர்கள் நினைத்துவிடக்கூடாது. நம் நாட்டினர் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. திரை இசைக்கலைஞர்கள் சார்பில் இங்கு எனக்கு கொடுக்கும் கவுரவத்தை, நான் வென்ற ஆஸ்கரை விட பெருமையாக கருதுகிறேன். இது எல்லாருடைய உழைப்புக்கும் கிடைத்த விருது. இந்த பெருமையை எனது பெற்றோருக்கு சமர்ப்பிக்கிறேன்,'

10 Comments:

Sure said...

All our music directors are genius and uncomparable

நாரத முனி said...

raaja proved to be the raaja...

Krish said...

ஞானிக்கு ஒரு குட்டு!

ஷண்முகப்ரியன் said...

ஏ.ஆர்.ரஹ்மான் சொன்னதை மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன்.ஒரு மேதையைப் பாராட்ட,இன்னொரு மேதையைத் திட்ட வேண்டுமா என்ன?

கொடும்பாவி-Kodumpavi said...

மேன்மக்கள் மேன்மக்களே.!

கொட்ம்பாவியின் எச்சரிக்கை : இதுக்கப்புறமும் யாராவது அவரு ஒசத்தி இவரு தாழ்த்தினுட்டு சொல்லிகிட்டு திரிஞ்சீங்க.. அவர்கள் வாய்மூலமாக் மலம் போபவராக கருத்தப்படுவர்.

Anonymous said...

இந்த வாரம் குமுதம் ஓ பக்கங்கள் படித்து வேதனையாக இருந்தது.. ரஹ்மான் அவர்க்கு நல்ல பதிலை குடுத்து விட்டார் .. இதற்கு மேலாவது .. பேனா இருப்பதால் கண்டதையும் கிறுக்கும் சிலர் திருந்த வேண்டும் .. ( இது பின்னூட்ம் யாரௌஉயும் குறிப்பிட்டு அல்ல )

Anonymous said...

"வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷிப் பட்டம் "

Gowri Shankar said...

ஞானி போன்ற அறிவிலிகளுக்கு பப்ளிசிட்டி மட்டும் தான் குறி. அதுக்கு என்ன வேணாலும் பண்ணுவாங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, ரஜினியை வம்பிழுத்து எல்லோரிடமும் வாங்கி கட்டிக்கொண்டது நினைவிலிருக்கட்டும். இதெல்லாம் ஒரு பொழப்பு.... தூ......

Anonymous said...

அன்பின் நண்பர்களே


"....The family finally tried the same Pir Qadri, whom they called very late in the case of Sekhar. Dilip’s sister made a miraculous recovery. This was attributed to the Pir and Dilip slowly came under his influence. Gradually, the entire family converted to Islam; Kanchana even accepted divorce as the price of conversion....."


கேள்வி : இந்த பீர்கள் அல்லது சுபீ என்பவர்கள் யார் ? இவர்கள் எந்த மதம் ?

என்னா இப்படிக் கேடுப் போட்டீங்கோஓஒ...ன்னு நீங்க கேக்கலாம்...

எனக்கு எழும் சந்தேகங்கள்
----------------------------------------------------------------

- பீர்கள் (அ) சூபிக்கள் மாந்திரீகம், ஜபம் மூலம் வியாதிகளை குணப்படுத்துவதாயும் இவர்கள் இறைத்தூதர்கள் என்றும் மஹான்கள் என்றும் சொல்லப் படுகின்றனர். ...இது தூய இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு முரணானது ....தூய இஸ்லாமிய கோட்ப்பாடின் படி "...லா இலாஹி இல்லலாஆஹ்.. முஹம்மது ரசூல் ரசூலுல்லாஹ்... " அதாவது அல்லாவுக்கு நிகர் கடவுள் இல்லை, நபிகள் (PBUH)க்கு பின் தூதர் இல்லை (அவரே கடைசீத்தூதர்). ஆகவே தூய இஸ்லாத்தில் சூபிகளுக்கு இடமில்லை. அதனால் தான் சவுதியிலோ மற்ற இஸ்லாமிய நாடுகளிலோ பீர்களையோ சூபிகளை இன்று பார்ப்பதில்லை .

- தர்கா வழிபாடு : பீர்கள் (அ) சூபிக்கள் இறந்தால் அவர்கள் புதைக்கப்படும் இடம் தர்காவாகிறது. அதாவது இந்து மத சமாதி வழைபாடு போல !! இந்த தர்கா வழிபாட்டுக்கும் தூய இஸ்லாமில் இடமில்லை. அதனால் சவுதியிலோ மற்ற இஸ்லாமிய நாடுகளிலோ இன்னார் தர்க்கா என்று தர்க்காக்கள் இல்லை. மசூதிகள் உண்டு ..அவை தொழும் இடங்கள் அவ்வளவே. இன்னாரை அன்னாரை புதைக்கும் இடங்கள் இல்லை...

- உதி, அல்லது சாம்பல் கொடுப்பது :

- மற்றும் ஊதுவது (மந்திரம் ஓதி அதை நோய் வாய்ப்பட்டவர் மீது ஊதுவது..) : இவை இரண்டும் ஹிந்து ஜபம், அல்லது விபூதி கொடுப்பது போல. இதற்கும் தூய இஸ்லாமில் இடமில்லை.

ஆக மொத்தம் இந்த பீர்கள் அல்லது சுபிக்கள் - இந்துக்களா ? இஸ்லாமியர்களா ? அல்லது அல்லாவை தொழுகிறோம் என்று அல்லாவை ஹிந்து வழக்கப்படி (சமாதி வழைபாடு, ஜபம், உதி என்று.. ஹிந்து வழக்கப்படி ) தொழுவதாய் சொல்லி ஹிந்துக்காளை சுலபமாய் ஈர்க்கிறார்களா என்ற கேள்விகள் எல்லாம் வருகின்றன..

இந்திய சுதந்திரம் என்ன என்ன விந்தைகளை செய்கிறது :

எ.கா : ஒரு காஞ்சனா (இந்துப் பெண்) தன் கணவனை சுலபமாய் விவாகரத்து செய்ய முடியும்...ஆனால் ஒரு இஸ்லாமிய பெண் செய்ய முடியுமா ? (ஆண்கள் மட்டுமே இஸ்லாமில் தலாக் கொடுக்க முடியும்..!!!)

அன்புடன்
ஒரு இந்தியன்

puthisuthaan said...

யாரை யார் திட்டினார்கள் ?

யாருக்காக இந்த அறிக்கையை ரஹ்மான் விடுத்தார் என்று விபரமா சொல்லுதவங்களுக்கு ஆயிரம் சலாம்


அன்புடன்
இந்தியன்