லாகூரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் 8 வீரர்கள் காயம்
பாக்கிஸ்தானில் லாகூர் லிபர்டி மார்க்கெட் பகுதியில், உள்ள கடாபி கிரிக்கெட் அரங்கத்தில் பயிற்சிக்காக சென்று கொ1ண்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர்ககளின் பஸ் மீது கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. இந்த துப்பாக்கி சூடு தாகுதலில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சங்ககராரா, மெண்டிஸ், உடபட 8 வீரர்கள் காயமடைந்துள்ளனர். இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு பாதுகாப்புக்காக சென்று கொண்டிருந்த காவலர்கள் மீது துப்பாக்கி அடையாளம் தெரியாத சில நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர் இதில் 5 போலிஸ்காரர்கள் பலியாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தின் ஏதிரெலியாக பாக்கிஸ்தான்-இலங்கை கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யபட்டுள்ளன்
அமெரிக்காவும் இந்தியாவும் திரும்பவும் எச்சரிக்கை செய்வார்கள். உடனே பாக் பயந்துவிடும். நல்ல கூத்து
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, March 03, 2009
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் 8 வீரர்கள் காயம்
Posted by IdlyVadai at 3/03/2009 10:41:00 AM
Labels: செய்தி, தீவிரவாதம், விளையாட்டு
Subscribe to:
Post Comments (Atom)
13 Comments:
ஒரு துறையை பலர் பகிர்ந்து கொள்வது இங்கு (இந்தியாவில்)தான். துறை : எச்சரிக்கை விடும் துறை. செயல் படுத்தபடமாட்டாது. எச்சரிக்கை மட்டுமே விடுவோம் என்ற கொள்கையில் இம்மி அளவும் பிசகாமல் தொடர்ந்து தொண்டாற்றிக் கொண்டிருக்கும் வெளியுறவு துறை அமைச்சர் மற்றும் நம் பிரதமர் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.
இந்த துப்பாக்கி சூடினால் அறியும் நீதி என்ன? தன் வினை தன்னை சுடும்.
பின் குறிப்பு: இதில் எந்த உள் குத்தும் இல்லை
கார்ட்டூன் கந்தசாமியில் மாற்றம் தேவை. தேர்தல் தேதிதான் சொல்லிட்டாங்களே. count down Start....
அமெரிக்காவும் இந்தியாவும் திரும்பவும் எச்சரிக்கை செய்வார்கள். உடனே பாக் பயந்துவிடும். நல்ல கூத்து
--------------------------------
அமெரிக்கா எச்சரிக்கை செய்யும். இந்தியா அமெரிக்காவிடம் மறுபடியும் முறையிடும். தாக்கியவர்கள் யாரென்ற விபரங்கள் பாகிதான் இலங்கையை கேட்கும்.
இந்த கூத்து சில நாட்கள் நடக்கும். பின், இந்தா விஷயம் ஆறியபின், மறுபடியும், அடுத்த துப்பாக்கி சூடுக்கு பாகிஸ்தான் தயாராகும்.
அட போங்கப்பா..........
மெரிக்காவும் இந்தியாவும் திரும்பவும் எச்சரிக்கை செய்வார்கள். உடனே பாக் பயந்துவிடும். நல்ல கூத்து//
-:)
பாக்கிஸ்தான் அரசு.. ஒரு கையாலாகாத ஒன்று என்பது உலகறிந்ததே...10% சர்தாரி இருக்கும்வரை ஒண்ணும் விளங்காது... அவர்கள் தலையிலேயே மண்ணை வாரி போட்டுக்கொள்கிறார்கள்...மு...என்பது சரியாகவே உள்ளது..
மதிமாறன் என்ற மேதை எழுதியிருப்பதையும் படியுங்கள்.
http://mathimaran.wordpress.com
அமெரிக்கா இஸ்லாமிய நாடுகளில்
செய்துவரும் கொடுமைகளே இதற்கு
காரணம் என்று வினவு உட்பட பலர்
நாளை தமிழ் வலைப்பதிவுகளில் எழுதுவார்கள்.ஒரிரு ஆண்டுகளில்
பாகிஸ்தான் சிதறி சின்னாபின்னமாகிப்
போனாலும் ஆச்சரியப்பட வேண்டாம்.
யார் பயங்கரவாதிகள் யார் சுதந்திரத்திற்காக போராடுபவர்கள் என்பதை இப்பொழுதேனும் உலகம் புரிந்து கொள்ள வேண்டும். ஜெயலலிதா முதல் அஸ்தமகாலத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் காங்கிரஸ்வரை பயங்கரவாதிகள் என்று ஊழையிட்டு கொண்டிருப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். தனக்கென தனி இராணுவம் ஏற்படுத்தி போராடும் வேலுபிள்ளை தீவிரவாதி என்றால் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸை என்னவென்று சொல்வீர்கள். கொழும்பு விமான நிலையத்திற்குள் சென்று தாக்க முடிந்தவர்களுக்கு கண்டி, காலே, கொழும்பு கிரிக்கெட் மைதானம் ஒன்றும் இயலாத காரியம் அல்ல. பிற தமிழர்களை கொன்றது ஏன் என்ற வினா அவசியமற்றது. எட்டப்பனை கொன்றிருந்தால் கட்டபொம்மனும் வீழ்ந்திருக்கமாட்டான். கர்ணாவை கொன்றால்தான் தமிழர்களும் எழுச்சி அடைய முடியும். அவர்களின் சுதந்திர போராட்டத்தை கொச்சை படுத்தாதீர்கள்.
Anony,
Why are you unnecessarily giving propaganda to CyberGoons & their vomits?
வினை விதைத்தவன் வினை அறுப்பான்.......
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் தினம் தினம் கொல்லப்படுவதும் குற்றுயிரும் குலயுயிருமாய் அல்லல்படுவது கண்களில் ரத்தம் வடிய செய்கிறது. அதை உலகின் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்களின் துயரை துடைக்க இந்த ஆங்கில மீடியாக்கள் ஒன்றும் செய்ய காணோம் கிரிகெட் போட்டி நடத்த .கோடிகளை கொட்டி ஏலம் எடுத்ததால் பாகிஸ்தானில் ஸ்ரீலங்கா கிரிகெட் வீரர்களின் மீது நடந்த தாக்குதலை விலாவாரியாக ஆராய்ந்து நாட்டு மக்களின் நேரத்தை வீனடிதுகொண்டிருக்கிறார்கள். இவர்களை இந்திய மக்கள் ஒதுக்கி தள்ள வேண்டும். இவர்களுக்கு பணமும் விளம்பரமும்தான் முக்கியம். வேறு எதைபற்றியும் அக்கறையில்லை.சிறிது காலத்திற்கு கிரிகெட் விளையாட்டிற்கு சமாதி கட்டினால் நம் நாட்டிற்கு நல்லது.
வழக்கம் போல எல்லா நாடுகளும், “அறிக்கையில்” மட்டும் பாகிஸ்தானை திட்டுவது போல கெஞ்சுவதும், அவர்களும் பதில் “திமிர்” அறிக்கையில் எல்லாரையும் மிரட்டி கொண்டே இருப்பார்களா?
ஒரு முடிவுக்கு வாங்கப்பா….
http://valibarsangam.wordpress.com
இலங்கை விளையாட்டு வீரர்கள் மீது தாக்குதலில் இந்தியாவிற்கு தொடர்பு உள்ளது-பாகிஸ்தானின் கோயபெல்ல்ஸ் சர்தாரி.குற்றச்சாட்டு -இப்போதைய செய்தி.
இதிலிருந்து என்ன தெரிகிறது?
மும்பை தாக்குதலில் முழு பூசணிக்காயையும் சோற்றில் மறைக்கவும் அதை முழுமையாக திசை திருப்பவும் இலங்கை வீரர்கள் மீது திட்டமிட்டு பாகிஸ்தான் அரசு நடத்திய நாடகம் இன்று வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
இன்னும் அவர்களோடு நம்முடைய வாய்ச் சொல் வீரர்கள் எத்தனை நாட்கள் வார்த்தை போர் நடத்துவார்களோ தெரியவில்லை?
இந்த அழகில் இந்த கூட்டம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அடுத்து எங்கு தாக்குதல் நடத்தலாம் என்று ஏற்க்கெனவே கால அட்டவணை தயாரித்து வைத்திருக்கும் வேடதாரி சர்தாரி.
இதை தவிர கார்கில் புகழ் முஸாருப்ப் இந்தியா வருகிறாராம்
வாஜ்பாயியை பார்க்க .எதற்கு?
அவருக்கு இங்கிருக்கும் ஜன்மங்கள் சிவப்பு கம்பள வரவேற்ப்பு கொடுத்து மீடியாக்கள் பிழைப்பு நடத்தும்.
தீவிரவாதிகள் நம் பாரளுமன்றம் மீது நடத்திய தாக்குதலை மறந்துவிட்டதை போல், மும்பை தாக்குதலையும் மறந்து விடுவோம்
இனிமேல் தேர்தல் கொள்ளையர்களின் வாக்குறுதிகளை கவனமாக கவனித்தால் ஏதாவது காசு ,ஓசி அயிட்டங்கள் தேத்தலாம்
Post a Comment