முனிக்கு நம்ப(ர்) கடிதம்.
அன்புள்ள முனி,
சௌக்கியமா? எங்கயாவது பிரசாரம் செய்யப் போயிட்டீங்களா? ஏன் கடிதமே இல்லை?
இப்ப எலக்ஷன் டைம் அதனால எல்லாரும் நம்பர் பத்தி தான் பேசறாங்க. எல்லாக் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் இப்ப தெரிஞ்ச ஒரே நம்பர் 40.
கூட்டணியில இருக்கறவங்களும் தங்களுக்கு எவ்வளவு 8 சீட்டா, 10 சீட்டா, 2 சீட்டான்னுதான் யோசிச்சிண்டிருக்கா.
இன்னிக்கி விஜயகாந்த்தோட 15 தொகுதிகளுக்கு 947 பேர் நேர்காணல்ல கலந்துண்டாங்களாம்.
விஜயகாந்த் ஆரம்பிச்சு காங்கிரஸ் வரைக்கும் எல்லாரும் வர 26-ந் தேதி நெறைஞ்ச அமாவாசைங்கறதால அன்னிக்கே தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி, வேட்பாளர் பட்டியல் மாதிரி முக்கிய முடிவுகளை அறிவிக்கப் போறாளாம். 26-ந் தேதி வியாழக்கிழமையாப் போச்சு. பொதுவா, வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாளாச்சே. அதோட சித்த யோகமாவும் இருக்கு. அதுக்கு அப்றம் வளர்பிறை ஆரம்பிக்கறதால அன்னிக்கி ஆரம்பிக்கற எந்தக் காரியமும் நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்னு ஒரு நம்பிக்கை இருக்கு.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அன்னிக்கிதான் கன்னியாகுமரில கட்சியோட நிலைப்பாடைப் பத்தி அறிவிக்கப் போறார்.
பா.ம.க.வோட பொதுக்குழுக் கூட்டம் அன்னிக்கிதான் கூட்றாங்க.
பா.ஜ.க., அ.தி.மு.க. கட்சிகளும் அன்னிக்கிதான் தங்களோட வேட்பாளர் பட்டியலை அறிவிக்கப் போறாங்களாம். வாய்விட்டு சிரிச்சா உடம்புல நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாறதாம். மனுஷன் கொழந்தையா இருக்கற 6 வயசுவரைக்கும் ஒருநாளைக்கு 300 தடவை கூட சிரிக்கறானாம். 18 வயசைக் கடந்தாச்சுன்னா ஒருநாளைக்கு அதிகபட்சமா 100 தடவைதான் சிரிக்கறானாம். ஆமா, இப்ப நாடும் வீடும் இருக்கற நிலைமைல ஒருநாளைக்கு 100 தடவை சிரிக்கறவனே ஒன்னு பைத்தியமா இருக்கணும்; இல்லைன்னா வசூல்ராஜா பிரகாஷ்ராஜ் மாதிரி வில்லனா இருக்கணும்.
வசூலராஜாவுக்கப்றம் ஃபீலிங்ஸ்னா அர்த்தமே தமிழ்ல மாறிகிட்டு வரும்போது தாளிக்கற மாமி அக்கா சொல்லத் தெரியாத ஃபீலிங்ஸ் விட்டிருக்காங்க. இவங்க சொன்னாங்கன்னு கமல் ஆஸ்கர் பதிவைக் கூட அடுத்த அரை நிமிஷத்துல தூக்கினேன். ஆனாலும் 'என்பேச்சை யாருமே கேட்கமாட்டேங்கறாங்க'ன்னு பொலம்பறாங்க. நாம அங்க ஏதாவது சொல்லலாம். மதிக்காம, கொழுப்பைக் குறைடான்னு கோவிச்சுப்பாங்க. காசு இருந்தா நாமளும் கொறைச்சுட மாட்டோமா?
பிந்துகோஷ் மாதிரி இருந்த ஓபரா இப்ப சில்மா ஆனதுக்கு செலவழிச்ச தொகை மட்டுமே 2 கோடி 50 லட்சம் ரூபாயாம். அடிவயிறு, குடல்னு கொழுப்பு சேர்ந்த இடங்கள்ல எல்லாம் அறுவை சிகிச்சை செஞ்சிண்டிருக்காங்களாம்.
இவ்வளவு பணத்துக்கு கொள்ளை தான் அடிக்கணும். ஆனா ஜெயில்லை நினைத்தால் பயமா இருக்கு. கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள ஓட்டல் அதிபர் ராஜகோபால் கைதி எண் 2432, நமக்கு அது பக்கத்துல கொடுத்துட போறாங்க. எதுக்கு வீண் வம்பு
பெர்னாட்ஷாகிட்ட ஒரு பொண்ணு, “என் வயசு என்ன இருக்கும்”னு யதார்த்தமா கேட்டிருக்கா. அதுக்கு அவர் உன் பல்லைப் பாத்தா 18. கூந்தலைப் பார்த்தா 19, தோற்றத்தைப் பார்த்தா 16"ன்னு சொல்லியிருக்கார்.
பொண்ணும் மகிழ்ந்துபோயி, “என் அழகைப் புகழ்ந்ததுக்கு நன்றி. என் வயசு என்ன?“ன்னு விடாம கேட்டிருக்கா.
“18+19+16 மூணையும் கூட்டினா 53 வரது. அதுதான் உன் வயசுன்னு சொன்னாராம். அறிவுசீவிகள்கிட்ட கருத்து கேட்டா இப்படித்தான் இருக்கும். சரி, நாம அரசியலைப் பார்ப்போம்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் தே.மு.தி.க.வோட ஒரு ரகசிய உடன்பாடு செஞ்சுண்டிருக்கறதா சொல்லிக்கறாங்க. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணியில் இந்த தடவை காங்கிரஸ் 10 லேருந்து 15 தொகுதிகள்ள போட்டியிட வாய்ப்பிருக்குன்னு தெரியுது. அப்படி காங்கிரஸ் போட்டியிடற தொகுதிகள்ல தே.மு.தி.க. தன்னோட வேட்பாளர்களை நிறுத்தக் கூடாதுன்னு உடன்பாடு செஞ்சுகிட்டதா டில்லி வட்டாரம் சொல்றாங்க. வடமாநிலங்கள்ல கூட்டணி சரியா அமையாத காரணத்தால தென் மாநிலங்கள்லயாவது முழுமையான வெற்றியை அடையணும்னு காங்கிரஸ் தலைவருங்க எதிர்ப்பார்க்கறாங்க. குறிப்பா தமிழ்நாட்டிலேருந்து 15 எம்.பி.க்கள் கிடைச்சா அது ரொம்பவே கைகொடுக்கும்னு நினைக்கறாங்க. இதுக்கு விஜயகாந்த் பேசியிருக்கற தொகை 150 கோடி. அதாவது காங்கிரஸோட கூட்டணின்னா 300 கோடி, வேட்பாளர்களை நிறுத்தாம இருக்க 150 கோடி. அப்ப விஜய்காந்தோட 'யாரோடயும் கூட்டணி இல்லை'ங்கற கொள்கையோட விலை 300 - 150 = 150 கோடி. எந்தக் கட்சியாவது இவ்ளோ காஸ்ட்லியான கொள்கைகள் வெச்சிருக்கா?
இந்தியாவுல இருக்கற 21 உயர்நீதிமன்றங்கள்ல மட்டும் 39 லட்சத்து 56 ஆயிரம் வழக்குகளும், உச்ச நீதிமன்றத்துல 47 ஆயிரம் வழக்குகளும் நிலுவையில் இருக்கு. இது 2007 செப்டம்பர் வரையிலான கணக்கெடுப்புதான். நீதிமன்றங்கள் ஆண்டுக்கு 213 நாள் வரைக்கும் இயங்கும். இதுல சராசரியா 5 மணி நேரம் வரைக்கும் வழக்கு விசாரனை நடக்குது. 5 நிமிஷத்துக்கொரு வழக்கு பைசல் ஆனாலும் ஒட்டுமொத்த வழக்குகளும் முடிவடைய 297 ஆண்டுகள் ஆகும்னு மத்திய சட்ட அமைச்சகம் சொல்லுது.........
ஓக்கே.. ஓக்கே விஜய்காந்த் பத்தி பேசினதும் புள்ளிவிபரம் ஒரு ப்ளோல வந்திடுத்து. மன்னிச்சுக்கோ. அடிக்கடி கடிதம் போடு.
அன்புடன்
இட்லிவடை.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, March 25, 2009
மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 25-03-2009
Posted by IdlyVadai at 3/25/2009 11:00:00 AM
Labels: பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம்
Subscribe to:
Post Comments (Atom)
11 Comments:
ப.சிதம்பரத்தை எதிர்த்து ராதிகா போட்டியிடுவார் என்று சரத்குமார் அறிவித்தார். இப்போது அவருக்கு முதுகுவலியாம்!! அதனால, போட்டில இருந்து வாபஸ்!!??
இதுதான் இப்போ லேட்டஸ்ட் நியூஸ்..
விஜயகாந்த் இந்த தேர்தலில் காங்கிரஸ் தவிர மற்றவர்களுக்கு Spoiler வேலையை தான் செய்யப்போகிறார். ஒரு தொகுதியிலும் வெற்றி பெற போவதில்லை.
விஜயகாந்தை ஒரு அரசியல் மாற்று என்று நினைத்து அவருக்கு ஒற்று போட்ட இளைஞர்கள் இந்த தேர்தலில் சரியான பாடம் கற்பிப்பார்கள்.
"ப.சிதம்பரத்தை எதிர்த்து ராதிகா போட்டியிடுவார் என்று சரத்குமார் அறிவித்தார். இப்போது அவருக்கு முதுகுவலியாம்!! அதனால, போட்டில இருந்து வாபஸ்!!??"
Adhu sari......
Pavanna Seeyannavukku Eppo Mudugu Vali varm?
ஒண்ணுமே புரியலை ..... இந்த ஒலகத்திலை...!!!!
என்னமோ நடக்குது...... மர்மமா இருக்குது.....!!!
now DMDK also came under PMK,MDMK,VC,CPM,CPI list.
300 crore is too much to believe. May be this is a rumour.
அதெல்லாம் சரி.
சைடு பாரை கண்டுக்கவேயில்லை போல இருக்கே..
பயாஸ்கோப் பலராமனும் தேர்தல் பிராசாரத்துக்கு போயிட்டாரா..??
வடிவேலு என்ன ஆனார்? யாரும் சீட் தரலையா? அண்ணன் "வாய்ஸ்" கொடுப்பேன் சொன்னாரே?
நம்பர் விளையாட்டுக்கு இட்லி வடையும் தப்ப வில்லை போலிருக்கு ...
அது சரி எங்கே உங்க அந்தாதி ஸ்டைல் ?
மக்களோட கூட்டணி கட்சியோட கூட்டணி-னு ஆளாளுக்கு கணக்கு போடட்டும்
ஆனா நம்ம மக்கள் போடுற கணக்கு ஒரு கட்சிக்கும் தெரிய போறதில்ல
தெரியும்போது ஒரு கட்சியும் இருக்க போறதில்ல...
நம்பர் விளையாட்டுக்கு இட்லி வடையும் தப்ப வில்லை போலிருக்கு ...
அது சரி எங்கே உங்க அந்தாதி ஸ்டைல் ?
மக்களோட கூட்டணி கட்சியோட கூட்டணி-னு ஆளாளுக்கு கணக்கு போடட்டும்
ஆனா நம்ம மக்கள் போடுற கணக்கு ஒரு கட்சிக்கும் தெரிய போறதில்ல
தெரியும்போது ஒரு கட்சியும் இருக்க போறதில்ல...
உங்களுக்கு கொஞ்சம் ஓவர்(?!) கொழுப்புதான்.. கட்சிகளை பத்தி மட்டும் சொல்லிகிட்டு இருக்கீங்க.. திருவாளர் பொதுஜனத்தின் கண்ணோட்டமும்.. அவர்கள் விழி பிதுங்கி.. நாவரண்டு.. கட்சிகள் ஆடற காட்சிகளை பாத்து கதிகலங்கி போயிருக்காங்களே அவுங்கள பத்தி ஒன்னுமே சொல்ல..
Post a Comment