பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 19, 2009

தேர்தல் 2009 - தமிழக கூட்டணி குழப்பங்கள்

இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக என்று இரண்டு கூட்டணி இருந்தாலும், ராமதாஸும், விஜயகாந்தும் எந்தக் கூட்டணிக்குப் போவார்கள் என்று மக்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள். எனக்கு இவர்கள் ஏற்படுத்தி வரும் தாமதம் கூட ஒரு வித ஸ்டண்ட் மாதிரிதான் தெரிகிறது.



விஜயகாந்த் தனித்து நின்றால் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை, ஆனால் ராமதாஸ் நிச்சயம் தனித்து நிற்க அவரிடம் தைரியம் கிடையாது. அப்படி நின்றால் டிரவுசர் கிழியும் என்பது அவர்கள்வீட்டு சின்னக் குழந்தைக்குக் கூட தெரியும். கடவுள் என் முன் தோன்றி வரம் ஏதாவது கொடுத்தால் - இந்தக் கட்சியும், திருமாவளவன் கட்சியும் தமிழ்நாட்டில் வளரவே கூடாது என்று கேட்பேன்.

இவர்கள் செய்யும் இந்தத் தாமதத்தால்தான் திமுக, அதிமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகள் தங்கள் தொகுதிகள் பற்றிய விவரங்களை அறிவிக்க முடியாமல் திண்டாடுகிறார்கள்.

திமுக கூட்டணியில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

கே: திமுக, காங்கிரஸ் கூட்டணி இறுதி செய்யப்பட்டு விட்டதா?
ப: இறுதி என்று சொல்லாதீர்கள். உறுதி செய்யப்பட்டு விட்டது. இது கலைஞர் சில நாட்கள் முன்பு அளித்த பேட்டி.



இப்படித்தான் வேடிக்கையாக கலைஞர் பதில் சொல்லி சமாளிக்கிறார். மற்றபடி விஜயகாந்த் ராமதாஸ் செய்யும் தாமதத்தில் கலைஞருக்கு நிறைய நேரக்கெடு கிடைக்கிறது. டைரி எழுதுகிறார், ஜெயலலிதா அறிக்கைக்கு பதில் மேல் பதில் அளிக்கிறார். நிச்சயம் கலைஞர் விஜயகாந்துடன் கூட்டணி வைக்க விரும்ப மாட்டார். விஜயகாந்த் ஜெயலலிதாவை விட இவரைத்தான் நிறைய போட்டு வாங்கியுள்ளார். ஆனால் காங்கிரஸ் மேலிடம் விஜயகாந்தை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்கிறது.

எப்படி திமுகவும் அதிமுகவும் பரம எதிகளாக இருக்கிறார்களோ அதே போலதான் இப்போது பா.ம.கவும் தேமுதிகவும். பா.ம.க இருக்கும் அணியில் தேமுதிக இருக்காது.

இந்த கேள்வி பதிலைப் பாருங்கள்..

கே: பாமகவிடமிருந்து கூட்டணியில் சேர்வது பற்றி ஏதாவது செய்தி வந்ததா?
ப: அவர்கள் இதுவரை என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை.


இதற்கு ராமதாஸ் கூட்டணியில் இருக்கிறாரா இல்லையா என்று பதில் சொல்லுவார் என்று எதிர்ப்பார்த்திருப்பார். ஆனால் ராமதாஸ் இதே மாதிரி ஒரு பதிலை சொல்லி மேலும் குழப்பதை உண்டு பண்ணினார்.

காங்கிரஸ் உடனே பா.ம.க இந்தக் கூட்டணியில்தான் இருக்கிறது என்று ஓர் அறிக்கை விட்டார்கள்.

"சாதி ஒழிப்பு, தீண்டாமை எதிர்ப்பு, சமத்துவக் கொள்கை, பொதுவுடைமை" என்ற காரணங்களுக்காக திருமாவளவன் திமுக கூட்டணியில் இருக்கிறார் என்று அவரைச் சந்தித்த பிறகு திருமாவளவன் அறிக்கை விட்டார். இதை யாரும் எதிர்க்க மாட்டார்கள்.

"விடுதலை சிறுத்தைகள் இருக்கும் அணியில்தான் பா.ம.க. இருக்கும் என்று அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஏற்கனவே அறிவித்து இருக்கிறார்," என்று திருமாவளவன் மேலும் ஒரு போடு போட்டார். திமுகவே திருமாவை அப்படிச் சொல்லச் சொல்லியிருப்பார்கள் என்று தோன்றுகிறது.

இந்த உசுப்பலுக்கும் ராமதாஸிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

காங்கிரஸ் கட்சியில் உப்பு போட்டு சாப்பிடும் ஞானசேகரன், "தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் நீடிப்பதில் எந்தப் பிரச்சினையும் இருக்க வாய்ப்பில்லை என கருணாநிதி அறிவித்து காங்கிரஸ் கட்சியினரை அவமானப்படுத்தி விட்டார். திருமாவளவன் உள்ள கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெறக்கூடாது. 'ராஜீவைக் கொலை செய்ததில் தவறில்லை' எனப் பேசியவர்களுடன் எப்படி கூட்டணி வைத்துக் கொள்ள முடியும்? காங்கிரஸ் கட்சியை ஒழிக்க சூளுரைத்த திருமாவளவனுடன் எவ்வாறு கூட்டணி வைத்துக் கொள்ள முடியும்? திருமாவளவனுடன் கூட்டணி வைப்பதை விட, தமிழகத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும்" என்று இன்று பேசியுள்ளார்.


அதிமுக கூட்டணியில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது. வைகோ உயர்மட்டக் குழு பேச்சுவார்த்தை என்று சொல்வது நல்ல தமாஷ். ஜெயிடம் உயர்மட்டக் குழு போனால் திரும்பி வரும் போது உயர்(உயிர்?) மட்டமான குழுவாகதான் வெளியே வரும்.

கேள்வி: இலங்கைப் பிரச்சினையை மையமாக வைத்து தேர்தலில் ஈடுபடும் அனைத்துக் கட்சிகளும் தோல்வியடையும் என்று தங்கபாலு கூறியுள்ளாரே?
பதில்:- "தங்கபாலு என்று யாராவது அரசியலில் இருக்கிறார்களா? எனக்கு அவரைத் தெரியாது," என்று இன்று வைகோ பேசியுள்ளார்.


விஜயகாந்த் அந்தரத்தில் சுழன்று திவிரவாதிகளை தன் இடது காலால் உதைத்து அவன் கதையை முடிப்பார். ஆனால் அரசியலில் அவரால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. இவர் தனித்துப் போட்டி என்று அடிக்கடி தன் பேட்டியில் சொல்லிவிட்டார், அதை மீற முடியாமல் தவிக்கிறார் என்று தெரிகிறது. முதல் தடவைதான் அப்படி இருக்கும் போகப் போக இந்த மாதிரி மீறுவதுதான் அரசியல் என்று அவர் புரிந்துக்கொள்வார். தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற எண்ணம்தான் விஜயகாந்துக்கும் அவர் தொண்டர்களுக்கும் இருக்கிறது ஆனால் குடும்பமோ கூட்டணி வேண்டும் என்கிறது. குடும்பம் பெரிதா கட்சி பெரிதா கட்சியில் குடும்பத்தின் சொல் பெரிதா என்று இவர் திமுகவிடம் கேட்டுத் தெரிந்துக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது.

சரத்குமாருடன் பேச்சு வார்த்தை என்று செய்தி வரும் அளவிற்கு பா.ஜ.கவின் நிலைமைதான் ரொம்ப மோசம். இந்த அழகில் இல.கணேசன் விஜயகாந்த் பற்றி இப்படிச் சொல்லுகிறார்:

"விஜய்காந்த் ஐந்து வித நிலைப்பாட்டில் குழம்பி இருக்கிறார். காங்கிரடன் கூட்டணியா? அதிமுக கூட்டணியா?, தனித்து போட்டியிடுவதா?, தேர்தலைப் புறக்கணிப்பதா?, பாஜகவுடன் கூட்டணி அமைப்பதா? என்று ஐந்து விதமான குழப்பத்தில் இருக்கிறார்" இவருக்கு இதற்காகவே டாக்டர் பட்டம் கொடுக்கலாம்.

தற்போது பண்ருட்டி ராமச்சந்திரன், சுதீஷ் ஆகியோர் டெல்லிக்குப் புறப்பட்டு சென்றுள்ளனர். கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த எல்லாம் இருக்காது. அநேகமாக டெல்லியில் எவ்வளவு வெயில் என்று பார்க்கப் போயிருப்பார்கள்.

இந்த வாரம் இல்லையென்றால் அடுத்த வாரத்திற்குள் திமுக, அதிமுக தங்கள் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்துவிட வேண்டும். அப்போதுதானே உடனடியாக தொகுதிகளுக்குச் சென்று வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப் படுத்த முடியும். அப்புறம் ஐந்துவருஷங்களுக்கு அந்தப்பக்கம் தலைக்காட்டாமல் இருக்கலாம்; தன்னோடு இல்லாமல் தலைமுறை நான்கும் உட்கார்ந்து சாப்பிடலாம்.

13 Comments:

R.Gopi said...

கடவுள் என் முன் தோன்றி வரம் ஏதாவது கொடுத்தால் - இந்தக் கட்சியும், திருமாவளவன் கட்சியும் தமிழ்நாட்டில் வளரவே கூடாது என்று கேட்பேன்.
-------------------------------
கேக்கறதுதான் கேக்கறீங்க, வளரவே கூடாதுன்னு ஏன் கேக்கறீங்க, இருக்கவே கூடாதுன்னு கேக்க வேண்டியதுதானே?? மக்களுக்கு நல்லது பண்றதுன்னு முடிவு பண்ணின பின்னாடி, அதை முழுசா பண்ணிட வேண்டியதுதானே இட்லிவடை.....

********

கேப்டன் விஜயகாந்த் தேர்தல் கிச்சு கிச்சு என்னன்னு பாருங்க .....

********

கொள்கை பாத்தா, கையில இருக்கற காசுக்கு கால் கிலோ வெங்காயம் கூட வாங்க முடியாது.

அதான் "தல"ய போய் பார்த்து, பேசி, முடிவு பண்ணிடலாம்னு இருக்கேன்..(இதுதான் என்னோட லேட்டஸ்ட் அரசியல் டயலாக்).

என் கணக்கு இப்போ புதுசு. எனக்கு தேவை 4-5 தொகுதி, 40-50 கோடி பணம். இத யாரு குடுத்தாலும், நான் அவிங்கள பாக்க போவேன். கூட்டணி ஓகேதான்.

நான் இப்போவும் சொல்றேன், என் கூட்டணி மக்களோட தான்.

என்னோட இந்த டயலாக், சினிமாவுக்கு தான், அரசியலுக்கு இல்ல. அதனால மக்கள் நான் சொல்றத நல்லா புரிஞ்சுக்கணும்.

நீங்க அவிங்ககிட்ட கேட்டு வாங்குங்க, நானும் அவிங்ககிட்ட கேட்டு வாங்குறேன். எப்படி நம்ம கணக்கு? அஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......

இப்போ எனக்கு இருக்கற ஒரே பயம், இந்த மதுரக்கார பய "குடிவேலு"தான்.

அவன்தான், நான் எங்க நின்னாலும், என்னிய எதுத்து போட்டி போடுவேன்னு சொல்லி இருக்கான்.

என்ன இருந்தாலும் அவனும் ரோசக்காரன் .... அதான் கொஞ்சம் தயக்கமா இருக்கு.

Rajaraman said...

தமிழ்நாடு காங்கிரசாருக்கு ஈனம் மானம் ரோஷம் எதாவது கொஞ்சமேனும் இருந்தால் இந்நேரம் திருமாவளவனை வெளியேற்றியிருக்க சொல்லி கருணாநிதியிடம் நிர்ப்பந்தம் செய்திருக்க வேண்டும். ஏதோ வேலூர் ஞானசேகரன் கொஞ்சம் தேவல. மற்றவர்கள் அவுத்துபோட்டு ஆடும் பொது பாவம் அவர் மட்டும் என்ன செய்து விட முடியும்.

manju said...

All these parties are busy deciding whom to form the coalition with... But do they have any agenda for the elections or for the next 5 years. Do they have any plans. Not just in TN, but even in the centre. There is no leader who has any good agenda or even a good speech. At this time of recession, unemployment, inflation, and hundreds of other issues, does anybody have a solution to progress ?

M Arunachalam said...

As far as alliance decision is concerned both VK & RD are sailing in the same boat. Neither of them can afford to stand alone & be exposed regarding their REAL VOTE-SHARE or SUPPORT. So, they will HAVE TO ENTER INTO ALLIANCE with some one or the other.

Till such time they announce their decision, they can't tell their preference openly for obvious reasons. After all in business, how can you announce the winner of a contract unless & until you open up all the bids & see who is the highest bidder, right?

R.Gopi said...

M Arunachalam said...

.........After all in business, how can you announce the winner of a contract unless & until you open up all the bids & see who is the highest bidder, right?

***************
Super. Well said Arun ji.

Anonymous said...

நீங்க bjp ah. didn't say anythig abt varun speech .

Venkatesan P said...

Captain vijaykanth must stand alone in this lok sabha election.That should be his only thought.

மனிதன் said...

"விஜயகாந்த் தனித்து நின்றால் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை, ஆனால் ராமதாஸ் நிச்சயம் தனித்து நிற்க அவரிடம் தைரியம் கிடையாது. அப்படி நின்றால் டிரவுசர் கிழியும் என்பது அவர்கள்வீட்டு சின்னக் குழந்தைக்குக் கூட தெரியும்."
திமுக,அதிமுக,காங்கிரஸ்,கம்யூனிஸ்ட்ஆகிய இரண்டு பெரிய கட்சிகள் தனித்து நிற்க தைரியம் உண்டா?

"விஜயகாந்த் தனித்து நின்றால் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை,"

அப்படி நின்றால் டிரவுசர் கிழியும் என்பது அவர்கள்வீட்டு சின்னக் குழந்தைக்குக் கூட தெரியும்."

"கடவுள் என் முன் தோன்றி வரம் ஏதாவது கொடுத்தால் - இந்தக் கட்சியும், திருமாவளவன் கட்சியும் தமிழ்நாட்டில் வளரவே கூடாது என்று கேட்பேன்."
அவாள் மட்டும்தான் வளரனும் ,இவர்கள் வளரக்கூடாது .

மனிதன் said...

"ராமதாஸ் நிச்சயம் தனித்து நிற்க அவரிடம் தைரியம் கிடையாது. அப்படி நின்றால் டிரவுசர் கிழியும் என்பது அவர்கள்வீட்டு சின்னக் குழந்தைக்குக் கூட தெரியும். கடவுள் என் முன் தோன்றி வரம் ஏதாவது கொடுத்தால் - இந்தக் கட்சியும், திருமாவளவன் கட்சியும் தமிழ்நாட்டில் வளரவே கூடாது என்று கேட்பேன்."

மனுசாஸ்திரத்தில் எட்டாவது அத்தியாயத்தில், சில சூத்திரங்களை படியுங்கள்!
418 வைசியனையும் சூத்திரனையும் தன் தன் தொழிலை செய்யும்படியாக முயற்சியோடு அரசன் கட்டளையிடுக! இல்லாவிடில் அவர்கள் உலகம் முழுமையும் அழித்துப் போடுவார்கள்.
சூத்திரர்கள் தம் வேலையை செய்துகொண்டு எப்போதும் உழைத்துக்கொண்டே இருக்குமாறு அரசன் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் உலகத்தை அழித்து விடுவார்கள்.
நன்றி:http://rakaveethi.wordpress.com/2009/03/18/brahminism-rules-india/

Anonymous said...

#கடவுள் என் முன் தோன்றி வரம் ஏதாவது கொடுத்தால் - இந்தக் கட்சியும், திருமாவளவன் கட்சியும் தமிழ்நாட்டில் வளரவே கூடாது என்று கேட்பேன்# please add all parties in this list , they nothing did for us.congres for rahul,dmk_stalin, azhakiri.
pmk_small ayya,admk_mannarkudi family.all parties in india are doing same_ corruption

ராகவன் பாண்டியன் said...

டவுசர் கிளியும் ராமதாஸ்!
உப்பு போட்டு சாப்பிடும் ஞானசேகரன்!
உயர்'மட்ட' குழு!
சரத் ஆதரவு நாடும் நிலையில் கனேசன்!
சும்ம நச்சுன்னு சொன்னிங்க!
எல்லாகட்சிக்கும் நெத்தியடி! கலக்கல் பதிவு இட்லிவடை!

Boston Bala said...

---டெல்லியில் எவ்வளவு வெயில் என்று பார்க்கப் போயிருப்பார்கள்---

:))

கலக்கல் + crisp

K SRINIVASAN said...

//All these parties are busy deciding whom to form the coalition with... But do they have any agenda for the elections or for the next 5 years//

Please go through BJP's IT Vision available in lkadvani.in

I was also surprised to see their indepth study about using IT to enhance all fields including agriculture. I will be happy if people are made aware of BJP's ideas.

But the problem with Indians is we give little importance to party manifestos. People need to compare 1999-2004 NDA rule and 2004-09 UPA rule. When did we have real development is the big question which people need to answer through this election