"தல" சிறப்பு கேள்வி பதில்கள் - தேர்தல் 2009.
படிக்க, சிரிக்க :-)
கேள்வி : ஜெ.உண்ணாவிரதம் ?
பதில் : உண்டு கொழுத்தவர்கள், உடல் இளைக்க இது ஒரு வழி. தேர்தலின் புதுமொழி.
கேள்வி : ஒல்லியான பெண்கள் ?
பதில் : உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு
கேள்வி : வை.கோ?
பதில் : அவர் பொய்க்கோ ஆகி வெகு நாட்கள் ஆகிவிட்டது. அவரை நம் மக்கள் போய்க்கோ என்று சொல்லும் நாள் வெகுதூரம் இல்லை.
கேள்வி : பகுத்தறிவு என்பது??
பதில் : அறிவுரைகளின் முதன்மை வார்த்தை. நாம் அடுத்தவரை பின்பற்ற சொல்வது. சொல்பவர்கள் பின்பற்றாதது.
கேள்வி : சமீபத்தில் கிடைத்ததில் பிடித்தது?
பதில் : "பகுத்தறிவு பகலவன்" என்ற பட்டம்.
கேள்வி : பிடித்த நிறம்
பதில் : மஞ்சள் மட்டும் அல்ல
கேள்வி : அடிக்கடி நினைவில் வந்து இம்சிக்கும் ஒரு வார்த்தை?
பதில் : ஐயோ, கொல்ராங்கோ, அய்யய்யோ கொல பண்றாங்கோ.........
கேள்வி : பிடிக்காத ஒரே நபர்
பதில் : ஜெ.ஜெயலலிதா.....
கேள்வி : எரிச்சலூட்டும் வார்த்தை
பதில் : மைனாரிட்டி அரசு.
கேள்வி : ஆற்காடு வீராசாமி?
பதில் : தொட்டால் ஷாக் அடிக்கமாட்டார். இடது புறம் சென்று பேசினால், பதிலளிக்க மாட்டார். மொத்தத்தில் நல்லவர். கழகத்தில் ஒரு மூத்தவர்.
கேள்வி : டி.ஆர்.பாலு?
பதில் : வழிப்போக்கர்களுக்கு வழிகாட்டி, பாலங்களின் நாயகன். பல கப்பல்களுக்கு சொந்தக்காரர் (எனக்கு கப்பம் கட்டியவர்களில் முதலிடம் இவருக்கு).
கேள்வி : அன்பழகன்?
பதில் : எங்கு இடம் இல்லை என்றாலும், என் இதயத்தில் அவருக்கு நிச்சயம் இடம் உண்டு (இல்லை என்றால், என் இடத்தையே கேட்டு விடுவார்).
கேள்வி : டி.ராஜேந்தர்??
பதில் : ஓயாமல் அடுக்குமொழி பேசி அடுத்தவரை இம்சிப்பவர். பெரிய உடம்புக்காரர். இன்னமும் நாயகனாக நடித்து எல்லோரையும் பயமுறுத்துபவர்.ஓட்டை பாத்திரத்தில் ஓராயிரம் லிட்டர் தண்ணீர் சேமிக்க நினைப்பவர்.
கேள்வி : கேப்டன் விஜயகாந்த்??
பதில் : அவர் எந்த டீமுக்கு கேப்டன்? அவரை பழுப்பு எம்.ஜி.ஆர் என்றே அழையுங்கள். அரசியலில் அரிச்சுவடி படிக்க வந்துள்ள குழந்தை. இருக்கு அதனிடம் நிறைய அகந்தை.
கேள்வி : பிடித்த நடிகர்
பதில் : ஜெ.கே.ரித்தீஷ் (அல்ல)
கேள்வி : பிடித்த நடிகை??
பதில் : பரவை முனியம்மா (அல்ல)
கேள்வி : நினைவில் நின்றது / நின்றவர்??
பதில் : மானாட மயிலாட...கவர்ச்சி கட்டழகி நமீதா.
கேள்வி : கையூட்டு பெற்றதுண்டா??
பதில் : கையூட்டு என்றால் என்ன?? சிறு வயதில் என் தாய் என் கையில் வைத்து ஊட்டிய சோறுதானே??
கேள்வி : தமிழ்??
பதில் : தாய்மொழியாம் தமிழ் என் மூச்சு, தமிழ் என் பேச்சு, தமிழ் என் வாட்சு.......
கேள்வி ; ஆங்கிலம்??
பதில் : வாணிபம் செய்ய புகுந்த அன்னியரின் பகட்டு மொழி.
கேள்வி : கருப்பு கண்ணாடி??
பதில் : அழகிற்கு அழகு சேர்ப்பதற்கு மட்டும் அல்ல.
கேள்வி : பிடித்த சுவை?
பதில் : கருப்பட்டியும் தேனும்........
கேள்வி : பிடித்த உணவு?
பதில் : கேப்ப களி மற்றும் குறு மிளகாய். நிறைய தின்றாகி விட்டது. இப்போது தின்று சிறிது நாளாகி விட்டது. விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
கேள்வி : சன் டி.வி??
பதில் : உலக தொலைக்காட்சி வரிசையில் முதலிடம், மக்கள் மனதிலும் நின்றிடும். உலக தமிழர்களின் தேவை, அதற்கு நாங்கள் செய்யும் சேவை.
கேள்வி : கலைஞர் டி.வி??
பதில் : ஆஹா, இந்த சேனலை பார்க்கத்தான் உலகில் பலர் உயிருடன் உள்ளனர். இன்று உலகின் பல கோடி பேர்களை இலவசமாக மகிழ்விக்கும் ஒரு அற்புத சேனல் தான் கலைஞர் டி.வி. சேனல் யாருடையதாக இருந்தாலும், நல்லவற்றை போற்றுவதும், வாழ்த்துவதும் தானே பச்சை தமிழனின் குணம்??
கேள்வி : ஜெயா டி.வி??
பதில் : அப்படி என்றால் என்ன?? புதியதாக வந்துள்ள ஒரு டி.வி.மாடலா??
கேள்வி : கடவுள் பக்தி என்பது??
பதில் : நான் இதுவரை கேள்விப்படாதது. என் மனைவி எனக்காக எப்போதும் வேண்டுவது. என் மஞ்சள் துண்டுக்கும் கடவுள் பக்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
கேள்வி : பிரச்சனை??
பதில் : கோயில்களில் என் வீட்டார் எனக்காக, என் பெயரில் செய்த அர்ச்சனை (வெளியில் தெரிந்தால் பிரச்சனை).
கேள்வி : பிடித்த பாடல்??
பதில் : சர்க்கர இனிக்கிற சக்கர, இதில் எறும்புக்கு என்ன அக்கறை??
கேள்வி : பிடித்த வேலை?
பதில் : டபுள் ட்ராக் டகால்டி.......
கேள்வி : ஆசைப்படுவது?
பதில் : ஆல் டைம் டகால்டி.
கேள்வி : பிடித்த பட்டப்பெயர்?
பதில் : வாழும் வள்ளுவன், கம்பனின் இளைய பேரன்.
கேள்வி : இன்பம் என்பது?
பதில் : நமீதாவை அருகில் வைத்து சொல்ல வேண்டிய பதில்.
கேள்வி : உங்கள் குரு??
பதில் : என்னை போல பல மாணவர்களையும், சிஷ்யர்களையும் கொண்ட பரமார்த்த குருதான் என் குரு.
கேள்வி : பிடித்த ஐந்து சிஷ்யர்கள், மாணவர்கள்?
பதில் : நான், மூடன், மட்டி, பேதை, மிலேச்சன்.
கேள்வி : தேர்தல் கூட்டணி.
பதில் : இதயத்தில் இடமளித்தவர்களுக்கு தொகுதிகளிலும் இடமளிக்கும் ஒரு விளையாட்டு.
கேள்வி : இலவச கலர் டி.வி??
பதில் : சேனல் பார்க்க சேர்த்து பணம் வாங்கி விடுவோம்.
கேள்வி : ஒரு ரூபாய் அரிசி??
பதில் : ஒரு வேளை சாப்பிட்டவர்கள், இனி மூணு வேளையும் வயிறு முட்ட சாப்பிட நான் செய்த யோசனை.... (இல்லை என்றால் நான் உண்ணாவிரதம் இருப்பேன்).
கேள்வி : ஜல்லிக்கட்டு??
பதில் : வீர இளைஞர்கள் கட்டழகு கன்னியரை தன் வீரதீர செயல்கள் மூலம் கவர ஒரு வாய்ப்பு....
கேள்வி : தொகுதி பங்கீடு??
பதில் : அதிகம் ஆசைப்படுபவர்களிடம், அதிக ஆசை ஆபத்து என்பதை வலியுறுத்தி, சொற்பமாக கொடுக்கப்படும்.
கேள்வி : உங்கள் உண்ணாவிரதம் ஒரு ஸ்டண்ட் என்று சொல்லும் எதிர்கட்சியினருக்கு நீங்கள் சொல்லிக்கொள்வது??
பதில் : நான் உண்ணாவிரதம் இருந்தால் நாடு தாங்காது, நான் உண்ண ஆரம்பித்தால், உங்களுக்கு உணவு தந்து மாளாது......
கேள்வி : உங்கள் தேர்தல் வாக்குறுதிகள்??
பதில் : தேன் தடவிய கசப்பு மருந்து. மருந்து வேலை செய்வதற்குள் நாங்கள் ஆட்சி கட்டிலில் அமர்ந்து விடுவோம்.
கேள்வி : தமிழக மக்கள்??
பதில் : குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
கேள்வி : இதை எதற்கு சொன்னீர்கள்??
பதில் : ஏதாவது சொல்லவேண்டுமே என்று சொன்னேன். மற்றபடி, அவர்கள் போடட்டும் எனக்கு ஒட்டு. இல்லை என்றால், அவர்களுக்கு நான் வைப்பேன் வேட்டு.
கேள்வி : மக்களிடம் பிடித்தது?
பதில் : அவர்களின் ஞாபக மறதி.
கேள்வி : பிடித்த வார்த்தை??
பதில் : நாளை நமதே, நாற்பதும் நமதே.........
( நன்றி: ஜோக்கிரி பதிவு )
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, March 18, 2009
"தல" சிறப்பு கேள்வி பதில்கள் - தேர்தல் 2009
Posted by IdlyVadai at 3/18/2009 12:26:00 PM
Labels: நகைச்சுவை
Subscribe to:
Post Comments (Atom)
8 Comments:
மாப்பூ
வைச்சிட்டாய்யா
ஆப்பு
தன்மான தமிழனின்
துண்டை உருவலாம்
அட வேஸ்டியை கூட உருவலாம்
ஆனா
கோவணத்தை உருவிவிட்டார்
சும்மா டைபாஸ் மச்சி..... sorry... soryy...பழக்க...தோஸத்துலா வந்துடுச்சி
செம்ம Hot மச்சி
இதைதான்
'தல' தீபாவாளி சொல்லுவாங்களா?
நீங்கதான் எழுதிட்டீங்களோன்னு பயந்துட்டேன் ;)
" தல " போல வருமா .. சும்மாவா சொன்னாங்க .. முத்தமிழ் வித்தகர் , தமிழ் நாட்டை வித்தவர்னு ... " தல நீங்க போட்டு தாக்குங்க " மஞ்சள் துண்டிருக்க பயமேன் ! நீங்க என்ன சொன்னாலும் நாங்க எல்லாம் கேட்டுட்டு .. வாழும் வள்ளுவர் , அய்யன் ( அய்யர் இல்லைங்க ) தமிழை காக்க வந்த சின்ன கம்பன் .. பகுத்தறிவு சிங்கம்னு பட்டம் குடுதுடே இருப்போம் .. நீங்க வழக்கம் போல சங்க தமிழை மிஞ்சும் தமிழில் கவிதை எழுதிதே இருங்க .. அதோடு வருசத்துக்கு ஒரு திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதினால் கலை சேவை புரிஞ்ச மாதிரியும் இருக்கும் .. தமிழ்நாட்டில் மக்கள் தொகை குறைஞ்சமதிரியும் இருக்கும் .. வலைபதிபளர்கள் உங்களை கிண்டல் பண்ணிட்டு தான் இருபாங்க .. நீங்க கவலை படாதிங்க .. அப்பாவி தமிழர்கள் உங்களை கை விடார் .. உங்கள் சேவை தமிழ் நாட்டிற்கும் .. தமிழுக்கும் மிக்க தேவை ... வாழ்க உங்கள் சேவை மனப்பான்மை .. வளர்க உம் கவி புகழ்
கேள்வி : எப்படி இந்த பதிவு
பதில் : செப்படி வித்தையில் ஒரு செருப்படி .... சாரி சிறப்படி
கேள்வி : யார் இந்த ஜோக்கிரி
பதில் : விவர கவி விவகார கவி விரசல் கவி . (மஞ்சள் துண்டு போட்டுருப்பாரோ இல்லை கவி காவி துண்டா)
கேள்வி : நன்றி யாருக்கு
பதில் : இட்லி வடைக்கு - படித்ததில் பிடித்ததை படை ததற்கு
//Boston Bala said...
நீங்கதான் எழுதிட்டீங்களோன்னு பயந்துட்டேன் ;)//
Boston Bala....... bayandhu, bayam thelindha Boston Bala avargale!!!?
Idhil bayappada enna ulladhu?? IV-yum indha maadhi neraiya ezhudhi irukkarey?
பயந்து !!! பயம் தெளிந்த !!! பாஸ்டன் பாலா (தேங்க்ஸ் அனானிமஸ் )
பட்டியலிட்ட பதிவின் பதில்களை பார்த்து பக்குவமாய் பகிர்ந்த பாலா பங்காளியை பாடா படுத்தாமல் பட்டும் படாமலும் பாலை பருக பணிகிறேன். படுக்காளி படுத்துக்கெடகேன் பரிதாபமாய் பாயிலே (எல்லாமே பா தான் )
பயந்து !!! பயம் தெளிந்த !!! பாஸ்டன் பாலா (தேங்க்ஸ் அனானிமஸ் )
பட்டியலிட்ட பதிவின் பதில்களை பார்த்து பக்குவமாய் பகிர்ந்த பாலா பங்காளியை பாடா படுத்தாமல் பட்டும் படாமலும் பாலை பருக பணிகிறேன். படுக்காளி படுத்து க்கெடகேன் பரிதாபமாய் பாயிலே (எல்லாமே பா தான் )
Sema Mokkai..!!
Post a Comment