பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, March 31, 2009

நான் கடவுள் - இட்லிவடை விமர்சனம்

எங்கள் வீட்டு கேபிள் டிவியில் நேற்றுதான் 'நான் கடவுள்' படம் போட்டார்கள். அதன் விமர்சனம் கீழே...

ஹீரோவாக வரும் கலைஞர் நடிக்கவே இல்லை. வாழ்ந்து காட்டியிருக்கிறார். கடவுள் கிடையாது என்று அடிக்கடி பிதற்றும் ஹீரோ, தானே கடவுள் என்றும் முரணாக நினைத்துக்கொள்கிறார். பிணங்களோடு வாழும் அகோரி போல இவர் பணங்களோடு வாழ்கிறார். சொந்த பந்தம் எல்லாவற்றையும் அறுத்துவிட நினைக்கும் இவர், எல்லா சொந்த பந்தந்துக்கும் செட்டில்மெண்ட் செய்துவிடுகிறார். ஆனாலும் எல்லா நேரத்திலும் கண்கள் பனிப்பதில்லை, இதயம் துடிப்பதில்லை. நானே கடவுள் என்பதை நிரூபிக்க நானே கேள்வி நானே பதில் என வாழ்கிறார்.அதை நிரூபிக்கும் விதமாக, 'நானே கேள்வி, நானே பதில்' என்று அடிக்கடி எழுதுவதாகக் காண்பிப்பது இயக்குநரின் புத்திசாலித்தனம்.

இவருக்கு ஜோடி குருட்டுப்பிச்சைக்காரி தங்கம். இவருக்கு கண் இருக்கிறது, ஆனாலும் இத்தாலி தவிர வேறெந்த திசையையும் பார்க்காததால் ஒரே திக்கில் பார்க்கும் குருட்டுப் பெண்போல் தெரிகிறார். இவரின் அறிமுகப் பாடல்...

“வெறும் பாத்திரமோ அது என்னிடத்தில்
அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்”

என்று மு.கவைப் பார்த்து பாடும்போது, தியேட்டரே பரிதாபப்படுகிறது. எப்போதும் அல்பத்துக்குப் பவிஷு வந்ததுபோல் கூலிங்கிளாஸோடு அலையும் பாலு மேம்பாலத்தில் ஒரு முறை நின்றுகொண்டிருக்கும் போது, கீழே தங்கம், ”அம்மாவென்று அழைக்காத உயிர் இல்லையே” என்ற பாடலைப் பாடி பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார். பாலு கீழே யார் என்று எட்டிப் பார்க்க, அவர் கூலிங்கிளாஸ் கீழே விழுகிறது. கீழே கிடந்த அந்த கூலிங்கிளாஸை தங்கம் எடுத்துப் போட்டுக்கொள்ள, அந்த நிமிடத்திலிருந்து அவள் தங்கபாலு ஆகிறார். ஏற்கனவே ஒரே திக்கில் பார்வை இருக்க, இப்போது கூலிங்கிளாஸும் சேர்ந்துகொண்டதில் அவளை குருட்டுப் பிச்சைகாரி என்று எல்லோரும் தீர்மானமே செய்துவிடுகிறார்கள்.

தங்கபாலுவிற்கு வந்த குருட்டு அதிர்ஷ்டத்தில், கொஞ்ச நாளிலேயே கோஷ்டி சேருகிறது, எல்லோரும் சேர்ந்து சட்டசபை முன்பும் கோபாலபுர சிக்னல் முன்பும், “பிச்சை பாத்திரம் ஏந்திவந்தேன் ஐயனே என் ஐயனே” என்று தங்கள் வழக்கமான குடும்பப் பாட்டைப் பாடுகிறார்கள். அந்த இடங்களில் இருக்கும் ஐயன் தன்னிடம்தான் பிச்சை கேட்கிறார்கள் என்று எண்ணி கோஷ்டிக்குத் தலைவராக விளங்கும் தலைவியிடம் முறையிடுகிறார். தலைவியின் பெயர் 'எட்விகே அன்டோனியா அல்பினா மைனோ'. இதைத் தமிழர்கள் எப்படி கூப்பிடுவார்கள் என்று இயக்குநர் கவலைப்பட்டிருக்கலாம். அதனால் தலைவி ’சோனி' டிவியில் 'காந்தி' படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது, ஐயன் தன் வீட்டுக் குழந்தைகளின் தொலைக்காட்சி கேபிள் அறுந்துவிடுமோ, குழந்தைகள் கார்ட்டூன் பார்ப்பது மகிழ்ச்சியாக இருப்பது தடைபடுமே என்று பயத்தில் தலைவியிடம் பறந்துபோய், பம்மி, தன் தமிழ் சித்து விளையாட்டில் "சோனி டிவியில் காந்தி?" என்று கேட்டு மெதுவாகப் பேச்சை ஆரம்பிக்கிறார். பிறகு அதையே தலைவியின் பெயராக்கிவிட்டது இயக்குநரின் சாமர்த்தியம்.

தங்கபாலுவின் பிச்சைப் பாட்டு நாளுக்கு நாள் வளர்ந்து மைக் செட்டெல்லாம் வைத்து அதிரத் தொடங்க, தொந்தரவு தாங்காமல் ஐயன் சோனியா காந்தியிடம் முறையிடுகிறார். உடனே சோனியா தன் அசிஸ்டண்ட் மண் மோகன் சிங்கை(களிமண் மாதிரி தலைவி பிடித்த பிடிக்கெல்லாம் இழுபடுவதாலும், தலைவி எதைச் செய்யச் சொன்னாலும், மறுபேச்சு இல்லாமல் தலையில் துண்டைக் வரிந்துகட்டிக்கொண்டு காரியத்தைச் செய்யக் கிளம்பிவிடுவதாலும் இந்தப் பெயராம்) அழைத்து தங்கபாலு மற்றும் அவர் கோஷ்டியை சும்மா இருக்கச் சொல்லுகிறார். இந்தக் காட்சி மட்டுமே அடிக்கடி வருவதால் நமக்கு போர் அடிக்கிறது.

இந்த குருட்டுப் பிச்சைக்காரியைக் கூட வைத்துக்கொள்ள, காப்பாற்ற பல கேரக்டர்கள் படம் நெடுக வருகின்றன. அதில் முக்கியமான கதாபாத்திரம் ஆறு உருப்படிகளை வைத்துக் காலம் தள்ளும் வானரர் (மரத்துக்கு மரம் தாவுவதால் மட்டும் இந்தப் பெயர் இல்லை. தன் குட்டியையும் எப்போதும் தன் வயிற்றிலேயே சுமந்து செல்வதால் இந்தப் பெயர் இல்லை; ராமனுக்கு தாசாதி தாசனாய் இருந்ததால்தான் இந்தப் பெயர் என்கிறார் இயக்குநர்.). இவருக்கு ஒரு உருப்படி அதிகம் கிடைக்கும் என்பதால் எதிரி கோஷ்டிக்குச் செல்லவேண்டிய நிலை வந்தாலும், தங்கம் கூட இல்லாததால் அவர் மகனுக்கே பிரச்சினை வரக்கூடிய நிலையில் உணர்ச்சிகரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கடைசியில் “உங்கள் கூட்டதையே ஒழிப்பேன்,” என்று பொங்கி நின்ற வானர, ஐயன் உட்கார ஓரமாய் ஒரு சின்ன முக்காலி தருகிறேன் என்று சொன்னதும் தொம்மக்கூத்தாடிக் குரங்காய் மனம் மாறி அடங்குவது லாஜிக்கில் ஓட்டை. நகைச்சுவைக் காட்சிகளில் போலி டாக்டராக இவர் செய்யும் காமெடி சூப்பர். விவேக், வடிவேலு போன்றவர்களுக்கு இவர் இனி கடுமையான போட்டியாக இருப்பார்.

படத்துடன் ஒட்டாத இன்னொரு நகைச்சுவை காட்சியில் L போர்டு மாட்டிக் கொண்டு வரும் L.கணேசனும் கெஞ்சி பிழைப்பு நடத்தும் 'கெஞ்சி ராமச்சந்திரன்' என்பவரும் ஐயன் வீட்டு முன்பு நிற்க. ஐயன் சிம்பு பாடும் “வேர் இஸ் யூவர் பார்ட்டி" என்று பாட அடுத்த லைனான "இனி உங்க ஊட்லே தான் பார்ட்டி” என்று ஐயனை பார்த்து இருவரும் பாடும் பாடல் அருமை.

பழைய படங்களைப் போல் வளவளவென்று சொன்னதையே திரும்பத் திரும்ப வள வள என்று பேசும் ஒருவர் வில்லனாக வருகிறார். இலங்கைத் தமிழர்களை வைத்து நிறைய வியாபாரம் செய்கிறார். இலங்கை தமிழர்களுக்காக இவர் இரண்டு நாள் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் காட்சிகளில் எல்லாம் மனதை உருக்குவதாக இவரது நடிப்பு இருக்கிறது. அங்கே இலங்கை தமிழர்கள் குளிரால் தவிக்கும் போது, இவர் இங்கே எரிக்க எதுவும் கிடைக்காததால் சோனியா காந்தி படத்தையும் ராஜிவ் காந்தி படத்தையும் எரித்து அதில் குளிர்காய்கிறார். அதைப் பார்த்த தங்கபாலு அழுகிறார்.

இவர் திரையில் தோன்றினாலே இவர் பேச்சில் போரடித்து மக்கள் தம் அடிக்க கேண்டீன் பக்கம் ஓடுகிறார்கள். அதனாலேயே இவர் பெயர் திருமாவளவன் என்று ஆகிவிட்டது. இவர் ஐயனுடன் நட்பாக இருந்தாலும், ஐயன் நட்பாக இருக்கும் சோனியா படத்தை அடிக்கடி எரிக்கிறார். இதனால் கோபமான தங்கம் குளிர்கண்ணாடியைக் கழற்றிவிட்டு கோபமாக ஐயனைப் பார்த்து, "நீங்க இவர்களுக்கு சர்ப்போர்டா?" என்று நேரடியாகவே கேட்க ஐயன், "நான் இவர்களுக்கு ஆதரவாகவும் இல்லை, எதிராகவும் இல்லை” என்று பதில் சொல்லும் வார்த்தைச் சித்தில் வசனகர்த்தா தெரிகிறார். அதே போல் சோனியா காந்தியையும் அவர் கூட்டத்தையும் பார்த்து திருமாவளவன், “அவர் மரணத்துக்குப் பிறகு சாப்பிடவே இல்லையா? தூங்கவே இல்லையா?” என்று கிண்டல் பல்டி அடிப்பது ஒரு சேறு பதம்.

குருட்டுப் பிச்சைக்காரியுடன் காதலா, இல்லையா, கடவுள் மேல் கோபமா இல்லையா என்று எதுவும் புரியாத குழப்பமான கதாபாத்திரத்தில் கேப்டன் நடித்திருக்கிறார் என்றாலும் அவர் வரும் காட்சிகளில் எல்லாம் சிரிப்பு மழைதான். கடவுளுடனும், மக்களுடனும் தான் கூட்டணி என்று இவர் பேசுவது நல்ல தமாஷ்.

படம் ஆரம்பிக்கும் முன்பாகவே நன்றி: சென்ஸார் என்று போடுகிறார்கள். இத்தனைக்கும் மற்ற படங்களில் சாதாரண காட்சிகளையும் வெட்டி வீசிவிடும் சென்ஸார் அதிகாரி, எத்தனையோ வன்முறைக்காட்சிகள் அத்துமீறல் காட்சிகள் எல்லாம் இதில் இருந்தாலும் போகட்டும் போடா என்று யூ சர்ட்டிபிகேட் கொடுத்த நவீன் சாவ்லா அதற்கு உரித்தானவர்தான்.

நீண்ட நாளைக்கு பிறகு படத்தின் ஸ்டண்ட்ஸ் எல்லாம் அழகாக செய்துள்ளார் கிரி.


தேர்தலுக்கு அப்புறம் அடிக்கற பல்டி தந்திரம்.. தேர்தலுக்கு முன்னால அடிக்கற பல்டி ராஜதந்திரம்.


Read More...

Monday, March 30, 2009

கடலூர் - வேட்பாளர் அறிமுகம்- 1

கடலூர் - வேட்பாளர் அறிமுகம்- 1 - கலைக்கோவன்

கடலூர் தே.மு.தி.க வேட்பாளர்- M.C.தாமோதரன்

மாஜி அ.தி.மு.க அமைச்சரான இவர் 1991-ல் நெல்லிகுப்பம் சட்டமன்ற தொகுதியில்
வென்று ஜெயலலிதா அமைச்சரவையில் இடம் பெற்றார்.
1998-ல் கடலூர் நாடளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும்,
1999-ல் தோல்வியும் அடைந்தவர்.தொகுதி மக்களுக்கு நன்கு பரிச்சயமான முகம்.
அ.தி.மு.க.வில் மா.செ வாக இருந்த அனுபவமும் இவருக்கு பலம்.

இது குறித்து, தே.மு.தி.க பிரமுகருடன் தொலைபேசி குறுபேட்டி

வேட்பாளர் பற்றி..,

தாமோதரன் தான் வேட்பாளர்ங்கிறது , எதிர்பார்த்த ஒன்னு் தான்.
ஏன்னா அ.தி.மு.க-வில சம்பத் -ஐ நிறுத்தும் பட்சத்தில் அவருக்கு
சரியா ஈடுகொடுக்கணும்.

வெற்றி வாய்ப்பு

கடலூரை பொறுத்தவரை எங்களுக்கும் அ.தி.மு.க -வுக்கும் தான் போட்டி இருக்கும்.
வெற்றி வாய்ப்பு பிரகாசமா இருக்கு.

(பேட்டியளித்தவர் -K.வேணுகோபால், குறிஞ்சிபாடி ஒன்றிய தே.மு.தி.க துணை செயலாளர்)


கொசுறு தகவல்
தற்போதைய அ.தி.மு.க மா.செ வும் ,அ.தி.மு.க களமிறக்கப்பட இருக்கும்
M.C.சம்பத் இவரின் சகோதரர்,

கடலூருக்காக ...., கலைக்கோவன்

Read More...

இரண்டு படங்கள், இரண்டு செய்திகள்

கீழே இரண்டு படங்களும் செய்திகளும் இருக்கு.


பிரபல(?) நடிகை ரம்பா முதல்வர் கருணாநிதியை இன்று அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினார்.

தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் நீதிபதிகளில் ஒருவராக இடம் பெற்றிருக்கிறார் ரம்பா. இன்று காலை நடிகை ரம்பா முதல்வர் கருணாநிதியின் இல்லத்திற்கு சென்று சந்தித்து பேசினார். இச்சந்திப்புக்கான காரணம் குறித்து செய்திகள் வெளியாகவில்லை. எனினும் தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக இச்சந்திப்பு நடந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


பிராமண சமுதாயத்திற்கு 7 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அதிமுக எம்எல்ஏ எஸ்.வி.சேகர் தமிழக முதல்வர் கருணாநிதியிடம் நேரில் வழங்கினார்.

நடிகரும், அதிமுக எம்எல்ஏவுமான எஸ்.வி.சேகர் இன்று காலை கோபாலபுரத்தில் உள்ள முதல்வர் கருணாநிதியின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார். அப்போது பிராமண சமுதாய மக்களுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவரிடம் மனு ஒன்றை கொடுத்தார். பிராமணர்களுக்கு இந்த இடஒதுக்கீடு அவசியம் என்று வலியுறுத்தினார்.

இதனை கனிவுடன் கவனிப்பதாக முதல்வர் கருணாநிதி உறுதியளித்தாக எஸ்.வி.சேகர் தெரிவித்தார். மேலும் பேசிய அவர் இந்த கோரிக்கை ஏற்கப்படும் என்று அரசிடமிருந்து பச்சைக் கொடி கிடைத்தால் போதும், திமுக கூட்டணிû ஆதரித்து பிரச்சாரம் செய்ய தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வது குறித்து ஏப்ரம் மாதம் தமது ஆதரவாளர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இரண்டு படத்திலும் ’ஜெ’யம் காலண்டர் இருக்கிறது. முதல்வரும் இருக்கிறார்.

Read More...

நானே கேள்வி, நானே பதில் - ராமதாஸ்

இன்றைய மாலை பத்திரிக்கையில் வந்த ராமதாஸ் அறிக்கை. ராமதாஸுக்கு அம்மா பக்கம் போனவுடன் ரொம்ப தான் நக்கல் - நானே கேள்வி நானே பதில் என்று கலக்குகிறார்...


கேள்வி : நீங்கள் செல்வி ஜெயலலிதாவை “அன்பு சகோதரி” என அழைப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் உங்களை “டாக்டர் அண்ணன்” என அழைத்துள்ளாரே! அதைப் பற்றி தங்கள் கருத்து?

பதில் : அவர் என்னை “மருத்துவர் அண்ணன்” என்று அழைத்திருந்தால் இன்னும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். ஆனால் அதை விட ஒரு இன்ப அதிர்ச்சியை எனது “அன்பு சகோதரி” இன்று சந்திக்கச் செல்லும் போது அளித்தார். அவர் அமர்ந்திருந்த அறையில் நானும் அமர ஒரு நாற்காலியை அவர் அமைத்திருந்தார். அதைக் கண்டதுடன் எனக்கு ஆனந்தக் கண்ணீரே வந்து விட்டது.

கேள்வி : ஐந்தாண்டு காலம் காங்கிரஸ் அமைச்சரவையில் உங்கள் கட்சியை சேர்ந்த இரண்டு எம்.பிக்கள் அமைச்சர்களாக இருந்து விட்டு, இப்போது திடீரென தேர்தல் நெருங்கும்போது ராஜினாமா செய்திருப்பதை சிலர் கிண்டல் செய்கிறார்களே!

பதில் : எப்படியும் அடுத்த ஆட்சி இன்னும் இரண்டு மாதங்களுக்குள் அமைந்து விடும். அப்போது எந்த ஆட்சி அமைந்தாலும் எங்கள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்படியும் அமைச்சர்களாக பதவி ஏற்பார்கள். ஆதலால் இவ்வாறு கிண்டல் செய்வதில் எந்தப் பயனும் இல்லை என அந்தச் சிலருக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

கேள்வி : உங்களுடன் திருமாவளவனும் வர வேண்டும் என ஜெயலலிதா எதிர்பார்த்தாராமே? ஏன் உங்களால் அவரை இழுக்க முடியவில்லை.

பதில் : நானும் இழுக்க பல முயற்சிகளை செய்தேன். ஆனால் அவரோ.. “உங்களுக்காவது சென்னையில் உங்களோட வாரிசுகள் இருக்காங்க. அந்த அம்மாவை சந்திக்க அப்பாயின்மெண்ட் கிடைக்கிற வரைக்கும் அவங்க வீட்டிலேயே தங்கிக்கிட்டு காத்திருக்கலாம். ஆனால், என் நிலைமை அப்படியில்லை. அது மட்டும் இல்லை. அந்தக் கூட்டணிக்கு வந்து விட்டு, நான் அ.தி.மு.க. காரன்களை திட்டக் கூட முடியாது. ஆனால், இந்தக் கூட்டணியில், நாங்க காங்கிரஸ்காரங்களை அடிச்சாலும் தாங்கிக்கிட்டே திருப்பி அடிக்கிற முடிவை சோனியா காந்திகிட்ட கொடுத்துடுவாங்க . அவ்ளோ நல்லவங்க அவங்க!” என ‘கை’யை விரித்து விட்டார்.

கேள்வி : உங்களுக்கு 7 + 1 தொகுதிகள் வழங்கப் பட்டதால் வைகோ தனக்கும் அதே அளவு தொகுதிகள் வழங்கப் படவேண்டும் எனக் கொடி தூக்கியுள்ளாராமே?

பதில் : சில பத்திரிக்கைகள் இவ்வாறு செய்தியைத் திரித்து வெளியிட்டுருக்கிறார்கள். ஆனால், உண்மை என்னவென நீங்கள் அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். “அன்பு சகோதரி” அவர்கள், வைகோவிற்கு எவ்வளவு தொகுதி வேண்டுமானாலும் தரத் தயாராக இருக்கிறார். நானும் அதற்கு குறுக்கே நிற்க மாட்டேன். ஆனால், தம்பி வைகோவோ இனி எந்தத் தேர்தல் ஆனாலும் தனது கட்சிக்கு ஒரு தொகுதி தந்தால் போதும் என்று பிடிவாதம் பிடிக்கிறார். அவ்வாறு தரப்படும் அந்த ஒரு தொகுதியிலும் அவர்தான் நிற்பாராம். அப்போதுதான் இனி தனது கட்சியைச் சேர்ந்த எந்த ஒரு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினரும் தி.மு.க.விற்கு ஓடிப் போக முடியாது என்று இறுமாப்புடன் பதில் சொல்கிறார்.


கேள்வி : மார்ச் 28’ல் வெளியிடப்பட்ட “நானே கேள்வி, நானே பதில்” அறிக்கையில் கலைஞர் கருணாநிதி, “ஓட்டுப் பெட்டியில் விழுந்த வாக்குகளின் எண்ணிக்கையை எண்ணி அறிவித்த ஒரு சில நிமிடங்களில்; பா.ம.க., அ.தி.மு.க. அணியிலே சேருவதாக எடுத்த நீண்ட தீர்மானத்தை பொதுக் குழுவிலே படித்ததாகவும் - வாக்குகளின் எண்ணிக்கை தெரியாத நிலையில் அவ்வளவு நீளமான தீர்மானத்தை எப்படி முன்கூட்டியே தயாரித்தார்கள் என்றும் செய்தியாளர்களே கிண்டலாகப் பேசிக் கொண்டார்களாம்.” என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து, உங்கள் கருத்து?

பதில் : டாஸ்மாக் சரக்குகளை விற்று பொழைப்பு நடத்தும் மைனாரிட்டி தி.மு.க அரசின் முதல்வருக்கு நான் பதில் சொல்ல கடமைப் பட்டுள்ளேன், ஒரு கட்டுப்பாடுடன். அந்தக் கட்டுப்பாடு என்னவென யாருக்கு சொல்ல வேண்டுமோ அவருக்கு சொல்லி விட்டேன்.
அன்று, பொதுக்குழுவில் வாக்கெடுப்பு மிகவும் நேர்மையுடன் நடத்தப் பட்டது. ஆனால், பொதுக்குழுவின் முடிவு எவ்வாறு இருக்கும் என நான் முன்பே கணித்திருந்தேன். அதனால் தான் அந்த நீளமான தீர்மானத்தை முன்பே தயாரித்திருந்தேன். இதில் இருந்து ஒன்றை நீங்கள் தெளிவாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். ஒற்றுமை நிறைந்த, சனநாயகம் கூடிய ஒரு கட்சியில், தலைவனின் விருப்பம் என்னவென தொண்டர்களும், தொண்டர்களின் விருப்பம் எவ்வாறு இருக்கும் என தலைவனும் முன்கூட்டியே அறிந்திருப்பார்கள்.
ஆனால், சில கட்சிகளில் நிலைமை அவ்வாறு இல்லை. தங்களின் குடும்பத் தகறாறுகளுக்காக தங்களுக்கு சொந்தமான நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்கள், தொண்டர்கள், ஏன்.. தங்கள் கட்சியில் அமைச்சராக இருந்தவரைக் கூட கொலை செய்யும் கலாச்சாரம் தான் நிலவி வருகிறது என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ராமதாஸ் ஐயாவின் “நானே கேள்வி.. நானே பதில்” அறிக்கை அமைந்திருந்து. ஆனால், இந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ள அந்தக் கட்டுப்பாடு என்ன, யாரைக் கட்டுப்படுத்துவதற்கு அந்தக் கட்டுப்பாடு என அறிந்துக் கொள்வதில் தீவிரம் காட்டினோம். ஆதலால் தைலாபுர பட்சியைத் தொடர்பு கொண்டோம். அந்த பட்சி சொன்னது இதுதான். “ஒண்ணுமில்லைங்க.. அந்தக் கண்டிஷன் வேற யாருக்கும் இல்ல.. ஜெயலலிதா அம்மாவுக்குதான். அய்யா வெளியிட்ட இந்த அறிக்கையை மறந்துடனும் என்பதும், இவர் அடுத்து தி.மு.க வோட கூட்டணி அமைக்கும்போது இந்த அறிக்கையைப் பத்தி சொல்லிக் காட்டக் கூடாதுங்கறதும் தாங்க அந்தக் கண்டிஷன்” என்று கூறி லைனைத் துண்டித்தார்.


பிகு: ஒரு மனிதன் முன்னேற தனக்குத்தானே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும். இந்த தாரக மந்திரத்தை தவறாகப் புரிந்துக்கொண்டு தனக்குத் தானே (சாதகமாக பதில் சொல்லக் கூடிய) கேள்வியைக் கேட்டுக் கொண்டு, பதிலுடன் “நானே கேள்வி, நானே பதில்” என படிப்பவர்களை துன்பத்தில் ஆழ்த்தும் கலைஞர் கருணாநிதியின் பாணியை, தானும் பின்பற்றுவதென முடிவுக்கு ராமதாஸ் ஐயாவும் வந்து விட்டார் என தைலாபுர தோட்டத்தில் உள்ள ஒரு பல்லி.. மன்னிக்கவும்.. ஒரு பட்சி தகவல் சொன்னது.

உண்மையிலேயே தாவதாஸ்.. மீண்டும் மன்னிக்கவும்.. ராமதாஸ் அப்படி ஒரு முடிவுக்கு வந்துவிட்டால், அவருடைய “நானே கேள்வி.. நானே பதில்” எவ்வாறு இருக்கும் என ஒரு கற்பனை! தான் இது.

- மிளகாய் பொடி

இது உண்மையாக நடந்தால் நான் பொறுப்பாக முடியாது.

Read More...

மீண்டும் சித்திரை மாதம் புத்தாண்டு - கலைஞர்

தமிழ்ப் புத்தாண்டை மீண்டும் சித்திரை முதல் தேதி மாற்ற முதல்வர் கருணாநிதி உத்தரவு

தைத் திங்கள் முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் என்று கடந்த வருடம் அறிவித்த தமிழக அரசு இப்போது மீண்டும் சித்திரை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடலாம் என்று அறிவித்துள்ளது. இது குறித்து முதல்வர் மு.கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில்....

'1921 ஆம் ஆண்டு தமிழ்நாடு சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் தமிழர்களுக்கென ஒரு தனித்துவமான “ஆண்டுக் கணக்கு” இருக்கவேண்டும் என எண்ணி, தனித் தமிழ் இயக்கத்தின் திரு. மறைமலை அடிகளார் தலைமையில் தமிழறிவியலாளர்கள், புலவர்கள், சான்றோர்கள் 500 பேர் ஒன்றுகூடி ஆய்வு செய்தனர். அதனடிப்படையில் திருவள்ளுவர் ஆண்டே தமிழர் ஆண்டு எனவும், தை முதலாம் நாளே தமிழரின் புத்தாண்டாக அமைதல் வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது. இம்முடிவை 1971 ஆம் ஆண்டு தமிழுக்கும் தமிழனுக்கும் ஏற்றம் தரும் தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு கணிப்பீட்டு முறைமையை அரசு மற்றும் ஊடகங்களும் பயன்படுத்தத் தொடங்கின. இதனை அரசு 2008 இல் முறையாக அறிவித்தது.

இதன்படி கடந்த தைத் திங்கள் ஒன்றாம் நாள் தமிழ்ப் புத்தாண்டாக உலகமெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான தமிழர்களால் அகம் மகிழ சிறப்புற கொண்டாடப்பட்டது. ஆனாலும் பழைமையை மாற்ற விரும்பாத பலரும், 'தொடர்ந்து சித்திரை முதல் திங்களையே தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட வேண்டும்' என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார்கள்.

பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளையும் கோரிக்கையையும் பரிவுடன் பரிசீலித்த தமிழக அரசு சித்திரை முதல் தேதியையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவது என்று முடிவெடுத்துள்ளது. இது குறித்த முறைப்படியான அரசு அறிவிப்பு பொதுத் தேர்தல் முடிவடைந்தவுடன் வெளியிடப்படும். ஆனால் வருகிற சித்திரைத் திருநாளிலேயே கோயில்களில் வழிபாடுகள் முறைப்படி நடப்பதில் தடை இல்லை என்கிறது அரசு செய்திக் குறிப்பு.(நன்றி: செய்தி இங்கே)


தேர்தல் மே மாதத்தில் வந்ததால் இந்த மாற்றம் என்று நினைக்கிறேன், மக்களுக்கு ஏதாவது பரிசு கொடுக்க வசதியாக இருக்கும். நடக்கட்டும்Read More...

Sunday, March 29, 2009

Advani's day out at the press conference

Advani's speech at the press conference today...
At a press conference in New Delhi on Sunday, Senior Bharatiya Janata Party leader and the National Democratic Alliance's prime ministerial candidate L K Advani questioned the United Progressive Alliance's 'deafening silence about Indian wealth', estimated at between Rs. 25 lakh and Rs 70 lakh crore, hoarded in secret Swiss bank accounts.
Advani claimed that the money was a mix of 'political bribes, crime money and venal business'....


Prime Minister Dr. Manmohan Singh is going to attend the G-20 summit in London on April 2. Ahead of this meeting, I wish to bring a highly important matter to the attention of the people of India.

It is well known that Swiss banks provide secrecy and safety for tax evaders, corrupt individuals and criminals of various nationalities to hoard their monies. Several offshore tax havens are also used for murky financial dealings. The extent of illicit money lodged in Swiss banks is mind-boggling. Estimates vary.

According to Wikipedia, they totaled $ 2.6 trillions (Rs. 130 lakh crores in today's exchange rate) in 2001. In 2007, they were believed to be about $5.7 trillions (Rs. 285 lakh crore), a staggering 80% increase in six years.

It is equally well known that many wealthy Indians have deposited their illicit monies in secret Swiss bank accounts and tax havens elsewhere around the world. As per credible estimates, these amounts range between $500 billion (Rs. 25,00,000 crore) and $1400 billion (Rs. 70,00,000 crore).

So long as the West-dominated world economy was doing well for the western countries, their governments winked at the secretive functioning of Swiss banks and tax havens. However, the current global economic crisis, which put several of their important financial institutions on the verge of collapse, has forced them to take many unconventional steps to revive their ailing economies.

The leaders of France [Images], Germany [Images], UK and other countries have joined forces with the US President Barack Obama [Images] in the battle against tax havens. They are mounting pressure on Switzerland [Images] and offshore tax havens to put an end to banking secrecy to bring back their tax-evading citizens' hidden wealth.

This is likely to be an important point on the agenda of the G-20 Summit in London. In February, UBS, the largest Swiss bank, was forced by the US tax authorities to reveal the names of some 300 presumed tax evaders. The US threatened to sue the UBS. Fearing that this could lead to the demise of the bank, the Swiss authorities invoked an emergency clause in their banking law and gave the data to the US. Soon thereafter the Obama administration announced a law to uncover illicit American money in all secretive tax havens, including the Switzerland.

UPA government's evasive reply to my earlier demand

It is baffling that, in the face of this growing governmental activism in the West, the UPA Government has adopted a policy of deafening silence and inaction. It has taken no steps whatsoever to get information about illicit money kept abroad by Indian nationals and to strive to get it back.

Last year, I had written a letter to Prime Minister Dr. Manmohan Singh about the need to get the names of Indians, presumed to have secret accounts in LGT Bank in Liechtenstein in Germany. I was disappointed to see that the reply I received from the then Union Finance Minister was evasive. (Copies of both letters attached.)

Commenting on India's ambivalence, Transparency International (TI) said that India has maintained "a stoic silence over the issue and has not approached the German government for this data'' (The Economic Times, 25.5.2008). Some ministers in the UPA Government are reported to have made several trips to Switzerland as the personal leg of their official tours abroad.

Considering the size of the Indian wealth hoarded abroad, the government is duty-bound to take proactive steps to bring it back. The amount involved constitutes 3-10 times India's overseas debt, and 50-120% of India's GDP. Even if we take the lower limit of the estimated amount of Rs. 25 lakh crore, the money is sufficient to:

- Relieve the debts of all farmers and landless
- Build world-class roads all over the country from national and state highways to district and rural roads;
- Completely eliminate the acute power shortage in the country and also to bring electricity to every unlit rural home;
- Provide safe and adequate drinking water in all villages and towns in India
- Construct good-quality houses, each worth Rs. 2.5 lakh, for 10 crore families;
- Provide Rs. 4 crore to each of the nearly 6 lakh villages; the money can be used to build, in every single village, a school with internet-enabled education, a primary health centre with telemedicine facility, a veterinary clinic, a playground with gymnasium, and much more.

What a transformation it can make to the ordinary and poor Indian lives!

Financial RDX with terror links

The need to put an end to hoarding of Indian wealth abroad, and to bring back the wealth already hoarded, is all the greater since the illicit money seems to be a mix of political bribes, crime money and venal business. The money trail in the Bofors scam in the 1980s had revealed the involvement of secret Swiss bank accounts. Last year, when the stock market was booming, National Security Advisor Shri M.K. Narayanan publicly stated that terror money might be operating through fund flows. What he had in mind was the Participatory Note [PN] mechanism for investment of undisclosed funds from abroad in Indian stock markets. The PN mechanism was introduced when India was desperately in need of forex inflow. The UPA government has permitted this mode of investment even after it had grown to alarming proportions. More recently, a hawala operator from Pune was found by the Income Tax department to have unaccounted wealth valued at Rs 35,000 crore. He is also suspected to have secret bank accounts abroad.

The BJP sees in secret banking the RDX that has the potential not only to blow up national financial systems but also to support and fund global terror networks whose attacks on India increased during the UPA regime. We do not expect any action from the UPA Government, which has shown total disinclination to act in this matter. In any case, its days are numbered.

If the people of India elect a BJP-led NDA Government in May 2009, we assure the nation that India will join the global effort to put an end to banking secrecy and intensify it by every means diplomatic, political and economic to get back the real Sovereign Wealth of our country. The BJP will intensely and actively educate the public opinion on this issue and take it to the masses and create intense public pressure on the system to uncover this nexus between secret foreign money, terror, and politics.

BJP's promise and plan of action

1. The Bharatiya Janata Party will conduct mass public opinion polls on April 6, 2009, Foundation Day of the BJP, on Indian money in secret accounts abroad.

2. The Chief Ministers of the BJP-ruled States will write to the Prime Minister urging him to write to the Swiss and other authorities to disclose the names of hoarders of Indian monies abroad, since it is a huge loss to the state exchequer.

3. The BJP will form a Task Force comprising experts in law, accounting, management and intelligence to prepare a strategic document for India to recommend ways to get back the national wealth stashed away illegally by the corrupt politicians, venal businessmen and criminal overlords. Shri S. Gurumurthy, well-known chartered accountant and writer specializing in investigative journalism; Dr. R. Vaidyanathan, Professor of Finance at the Indian Institute of Management, Bangalore; Shri Mahesh Jethmalani, a renowned lawyer; and Shri Ajit Doval, an acclaimed national security expert, have agreed to work voluntarily on this Task Force

Read More...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்

மக்களே இந்த நியூஸை பாருங்க

ஜனநாயக முன்னேற்றக்கழக நிறுவனர் ஜெகத்ரட்சகன் திமுகவில் இணைந்தார்.
சென்னையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் இணைத்துக்கொண்டார். இவர் 1999ல் எம்.பி. தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர்
இவ்வளவு நாள் இவர் திமுக என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். அடுத்தது யார் ஸ்டாலினா ?

Read More...

Friday, March 27, 2009

தே.மு.தி.க. கட்சிக்கு முரசு சின்னம் - சுப்ரீம் கோர்ட்

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருப்பதால் தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் கமிஷன் போன வாரம் தெரிவித்த்தது.

இன்று விசாரனைக்கு வந்த இந்த வழக்கில் தேமுதிகவுக்கு முரசு சின்ன ஒதுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

சற்று முன் கிடைத்த தகவல்: கூட்டணி குறித்து 29ஆம் தேதி அறிவிக்க போவதாக டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

Read More...

Thursday, March 26, 2009

தெலுங்கு புத்தாண்டு - வாழ்த்து + போட்டி

தெலுங்கு புத்தாண்டு வாழ்த்து சொன்னவர் கீழே...

முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள தெலுங்கு புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

தெலுங்கு மொழி பேசும் மக்கள் உகாதித் திருநாள் என்னும் தெலுங்குப் புத்தாண்டுத் திருநாளை இன்று எழுச்சியுடன் கொண்டாடுகிறார்கள். யாதும் ஊரே, யாவரும் கேளிர் என பழந்தமிழ்ப் பெரும்புலவர் கணியன் பூங்குன்றனார் உரைத்த நெறியில், தமிழ் மக்கள், தமிழகத்தில் வாழும் பிற மொழி பேசும் மக்களுடன் நல்லுறவு கொண்டு கூடி வாழ்வது போலவே, தெலுங்கு மொழி பேசும் மக்கள் அனைவரை யும் அன்பு உறவினர்களாக ஏற்று பல்லாண்டு கால மாக இணக்கமுடன் அரவ ணைத்து வாழ்கின்றனர்.

தமிழ்நாடு அரசு, அவர் களது வாழ்க்கை மேம்பாடுகளுக்கும், அவர்கள் இல்லக் குழந்தைகளின் கல்வி, அறிவியல், சமூக முன்னேற்றத்திற்கும் தேவையான வாய்ப்பு வசதிகள் அனைத்தும் தங்கு தடையின்றிக் கிடைத்திடத் தொடர்ந்து வழிவகை செய்து வருகிறது.

அந்த வகையில், தெலுங்கு மொழி பேசும் மக்களின் சமூக, பண்பாட்டு உணர்வுகளை மதிக்கும் நோக்குடன் தெலுங்குப் புத்தாண்டு பிறக்கும் உகாதித்திருநாளுக்கு அரசு விடுமுறை வழங்கி தெலுங்கு மொழியையும், அம்மொழி பேசும் மக்களையும் பெருமைப்படுத்தியது.

முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் 2004 ம் ஆண்டில் அந்த விடுமுறை ரத்து செய்யப்பட்ட நிலையில் 2006 ல் இந்த அரசு அமைந்த பின் உகாதித் திருநாளுக்கு மீண்டும் விடுமுறை வழங்கி தெலுங்கு சமுதாய மக்கள் மகிழ்ச்சியுடன் இந்நன்னா ளைக் கொண்டாடிட ஆவன செய்யப்பட்டுள்ளது என்பதனைச் சுட்டிக்காட்டிட விரும்புகிறேன்.

இவ்வாறு, தெலுங்கு மொழி பேசும் மக்களைத் தமிழ்நாடு அரசும், தமிழக மக்களும் போற்றிவரும் இனிய சூழலில் இந்த ஆண்டின் உகாதித் திருநாளைக் கொண்டாடி மகிழும் அருமைத் தெலுங்கு சமுதாய உடன்பிறப்புகள் அனைவர் வாழ்விலும் வளமும் நலமும் நிறையட்டும்! வலிவும், பொலிவும் சேரட்டும்! என உளமார வாழ்த்துகிறேன்

இதற்கு கமெண்டில் நல்ல பழமொழி சொல்பவருக்கு பரிசு உண்டு.

Read More...

செல்லாத ஓட்டு போட்ட புத்திசாலி

சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் பா.ம.க. பொதுக்குழு டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் யாருடன் கூட்டணி தொடர்பான ஓட்டெடுப்பு நடந்தது.

யாருடன் கூட்டணி வேண்டும் என்று விரும்புபவர்கள் அந்த கட்சியின் பெயரை “டிக்” செய்து பெட்டியில் போட்டனர். பாமக தேர்தலில் 2581 பேர் ஓட்டு போட்டிருந்தனர்.

இதில் அ.திமு.க. கூட்டணியில் சேர 2453 பேரும்,
தி.மு.க கூட்டணியில் சேர 117 பேரும் வாக்களித்தனர்.
ஒரு ஓட்டு செல்லதா ஓட்டு. அவர் அதிமுக-திமுக இரண்டையுமே டிக் செய்திருந்தார்.

ஓட்டெடுப்பு முடிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பா.ம.க. பொதுக்குழுவில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர தீர்மானிக்கப்பட்டது.

அந்த செல்லாத ஓட்டு போட்டவருக்கு நிச்சயம் மந்திரி பதவி உண்டு

Read More...

பொட்டுக்கு பதில் புத்தகம்

இலங்கை ராணுவம் பொட்டு அம்மான் மறைவு இடத்தை கண்டுபிடித்து சில படங்களை வெளியிட்டுள்ளார்கள்.

பொட்டு அம்மன் இருப்பிடத்தில் கிழக்கு பதிப்பகத்தின் விடுதலைப்புலிகள் புத்தகம் கிடைத்துள்ளது. கிழக்கு பதிப்பகம் விடுதலைப்புலிகள் இருப்பிடத்தில் கூட புத்தக கண்காட்சி நடத்துகிறார்களா என்று தெரியவில்லை.


( கையில் புத்தகம் )

( புத்தகம் போஸ் தருமா ? )

( source: http://www.defence.lk/ )

Read More...

Wednesday, March 25, 2009

ஜெயலலிதாவுடன் டாக்டர் ராமதாஸ் சந்திப்பு

சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற்ற பா.ம.க. பொதுக்குழுவில் அ.தி.மு.க. கூட்டணியில் சேருவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைதொடர்ந்து பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் போயஸ் காடனுக்கு வந்தார். அவருடன் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, டாக்டர் அன்புமணி ராமதாஸ், வேலு, காடுவெட்டி குரு ஆகியோர் உடன் வந்தனர். டாக்டர் ராமதாசுக்கு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா பொன்னாடை போர்த்தி வரவேற்றார். இதன் பின்பு ஜெயலலிதாவும், டாக்டர் ராமதாசும் தனியாக சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து சுமார் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்கள்.


அவசரத்துக்கு இந்த படம் தான் கிடைத்தது. கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள் ;-)


இந்த செய்தி தினத்தந்தியில் கொஞ்சம் நேரம் முன்பு வந்தது. இப்ப இந்த செய்தி இல்லை ஏன் என்று தெரியவில்லை.

Read More...

நோ கமெண்ட்ஸ்சென்னை அசோக் நகரில் பார்த்த போஸ்டர்

Read More...

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 25-03-2009

முனிக்கு நம்ப(ர்) கடிதம்.

அன்புள்ள முனி,

சௌக்கியமா? எங்கயாவது பிரசாரம் செய்யப் போயிட்டீங்களா? ஏன் கடிதமே இல்லை?

இப்ப எலக்‌ஷன் டைம் அதனால எல்லாரும் நம்பர் பத்தி தான் பேசறாங்க. எல்லாக் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் இப்ப தெரிஞ்ச ஒரே நம்பர் 40.

கூட்டணியில இருக்கறவங்களும் தங்களுக்கு எவ்வளவு 8 சீட்டா, 10 சீட்டா, 2 சீட்டான்னுதான் யோசிச்சிண்டிருக்கா.

இன்னிக்கி விஜயகாந்த்தோட 15 தொகுதிகளுக்கு 947 பேர் நேர்காணல்ல கலந்துண்டாங்களாம்.

விஜயகாந்த் ஆரம்பிச்சு காங்கிரஸ் வரைக்கும் எல்லாரும் வர 26-ந் தேதி நெறைஞ்ச அமாவாசைங்கறதால அன்னிக்கே தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி, வேட்பாளர் பட்டியல் மாதிரி முக்கிய முடிவுகளை அறிவிக்கப் போறாளாம். 26-ந் தேதி வியாழக்கிழமையாப் போச்சு. பொதுவா, வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாளாச்சே. அதோட சித்த யோகமாவும் இருக்கு. அதுக்கு அப்றம் வளர்பிறை ஆரம்பிக்கறதால அன்னிக்கி ஆரம்பிக்கற எந்தக் காரியமும் நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்னு ஒரு நம்பிக்கை இருக்கு.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அன்னிக்கிதான் கன்னியாகுமரில கட்சியோட நிலைப்பாடைப் பத்தி அறிவிக்கப் போறார்.

பா.ம.க.வோட பொதுக்குழுக் கூட்டம் அன்னிக்கிதான் கூட்றாங்க.

பா.ஜ.க., அ.தி.மு.க. கட்சிகளும் அன்னிக்கிதான் தங்களோட வேட்பாளர் பட்டியலை அறிவிக்கப் போறாங்களாம்.

வாய்விட்டு சிரிச்சா உடம்புல நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாறதாம். மனுஷன் கொழந்தையா இருக்கற 6 வயசுவரைக்கும் ஒருநாளைக்கு 300 தடவை கூட சிரிக்கறானாம். 18 வயசைக் கடந்தாச்சுன்னா ஒருநாளைக்கு அதிகபட்சமா 100 தடவைதான் சிரிக்கறானாம். ஆமா, இப்ப நாடும் வீடும் இருக்கற நிலைமைல ஒருநாளைக்கு 100 தடவை சிரிக்கறவனே ஒன்னு பைத்தியமா இருக்கணும்; இல்லைன்னா வசூல்ராஜா பிரகாஷ்ராஜ் மாதிரி வில்லனா இருக்கணும்.

வசூலராஜாவுக்கப்றம் ஃபீலிங்ஸ்னா அர்த்தமே தமிழ்ல மாறிகிட்டு வரும்போது தாளிக்கற மாமி அக்கா சொல்லத் தெரியாத ஃபீலிங்ஸ் விட்டிருக்காங்க. இவங்க சொன்னாங்கன்னு கமல் ஆஸ்கர் பதிவைக் கூட அடுத்த அரை நிமிஷத்துல தூக்கினேன். ஆனாலும் 'என்பேச்சை யாருமே கேட்கமாட்டேங்கறாங்க'ன்னு பொலம்பறாங்க. நாம அங்க ஏதாவது சொல்லலாம். மதிக்காம, கொழுப்பைக் குறைடான்னு கோவிச்சுப்பாங்க. காசு இருந்தா நாமளும் கொறைச்சுட மாட்டோமா?

பிந்துகோஷ் மாதிரி இருந்த ஓபரா இப்ப சில்மா ஆனதுக்கு செலவழிச்ச தொகை மட்டுமே 2 கோடி 50 லட்சம் ரூபாயாம். அடிவயிறு, குடல்னு கொழுப்பு சேர்ந்த இடங்கள்ல எல்லாம் அறுவை சிகிச்சை செஞ்சிண்டிருக்காங்களாம்.

இவ்வளவு பணத்துக்கு கொள்ளை தான் அடிக்கணும். ஆனா ஜெயில்லை நினைத்தால் பயமா இருக்கு. கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள ஓட்டல் அதிபர் ராஜகோபால் கைதி எண் 2432, நமக்கு அது பக்கத்துல கொடுத்துட போறாங்க. எதுக்கு வீண் வம்பு

பெர்னாட்ஷாகிட்ட ஒரு பொண்ணு, “என் வயசு என்ன இருக்கும்”னு யதார்த்தமா கேட்டிருக்கா. அதுக்கு அவர் உன் பல்லைப் பாத்தா 18. கூந்தலைப் பார்த்தா 19, தோற்றத்தைப் பார்த்தா 16"ன்னு சொல்லியிருக்கார்.

பொண்ணும் மகிழ்ந்துபோயி, “என் அழகைப் புகழ்ந்ததுக்கு நன்றி. என் வயசு என்ன?“ன்னு விடாம கேட்டிருக்கா.

18+19+16 மூணையும் கூட்டினா 53 வரது. அதுதான் உன் வயசுன்னு சொன்னாராம். அறிவுசீவிகள்கிட்ட கருத்து கேட்டா இப்படித்தான் இருக்கும். சரி, நாம அரசியலைப் பார்ப்போம்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் தே.மு.தி.க.வோட ஒரு ரகசிய உடன்பாடு செஞ்சுண்டிருக்கறதா சொல்லிக்கறாங்க. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணியில் இந்த தடவை காங்கிரஸ் 10 லேருந்து 15 தொகுதிகள்ள போட்டியிட வாய்ப்பிருக்குன்னு தெரியுது. அப்படி காங்கிரஸ் போட்டியிடற தொகுதிகள்ல தே.மு.தி.க. தன்னோட வேட்பாளர்களை நிறுத்தக் கூடாதுன்னு உடன்பாடு செஞ்சுகிட்டதா டில்லி வட்டாரம் சொல்றாங்க.

வடமாநிலங்கள்ல கூட்டணி சரியா அமையாத காரணத்தால தென் மாநிலங்கள்லயாவது முழுமையான வெற்றியை அடையணும்னு காங்கிரஸ் தலைவருங்க எதிர்ப்பார்க்கறாங்க. குறிப்பா தமிழ்நாட்டிலேருந்து 15 எம்.பி.க்கள் கிடைச்சா அது ரொம்பவே கைகொடுக்கும்னு நினைக்கறாங்க. இதுக்கு விஜயகாந்த் பேசியிருக்கற தொகை 150 கோடி. அதாவது காங்கிரஸோட கூட்டணின்னா 300 கோடி, வேட்பாளர்களை நிறுத்தாம இருக்க 150 கோடி. அப்ப விஜய்காந்தோட 'யாரோடயும் கூட்டணி இல்லை'ங்கற கொள்கையோட விலை 300 - 150 = 150 கோடி. எந்தக் கட்சியாவது இவ்ளோ காஸ்ட்லியான கொள்கைகள் வெச்சிருக்கா?

இந்தியாவுல இருக்கற 21 உயர்நீதிமன்றங்கள்ல மட்டும் 39 லட்சத்து 56 ஆயிரம் வழக்குகளும், உச்ச நீதிமன்றத்துல 47 ஆயிரம் வழக்குகளும் நிலுவையில் இருக்கு. இது 2007 செப்டம்பர் வரையிலான கணக்கெடுப்புதான். நீதிமன்றங்கள் ஆண்டுக்கு 213 நாள் வரைக்கும் இயங்கும். இதுல சராசரியா 5 மணி நேரம் வரைக்கும் வழக்கு விசாரனை நடக்குது. 5 நிமிஷத்துக்கொரு வழக்கு பைசல் ஆனாலும் ஒட்டுமொத்த வழக்குகளும் முடிவடைய 297 ஆண்டுகள் ஆகும்னு மத்திய சட்ட அமைச்சகம் சொல்லுது.........

ஓக்கே.. ஓக்கே விஜய்காந்த் பத்தி பேசினதும் புள்ளிவிபரம் ஒரு ப்ளோல வந்திடுத்து. மன்னிச்சுக்கோ. அடிக்கடி கடிதம் போடு.

அன்புடன்
இட்லிவடை.

Read More...

Tuesday, March 24, 2009

படத்தில் என்ன தெரிகிறது ?இன்று அமைச்சர்கள் அன்புமணி, வேலு ராஜினாமா செய்தார்கள் என்று நியூஸ் வந்தது பிறகு அப்படி செய்யவில்லை என்று மறுப்பு. இன்று சோனியா தமிழ்நாட்டில் கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை என்கிறார் ஆனால் கலைஞர் கூட்டணி பட்டியலில் பா.ம.க பற்றி எதுவும் சொல்லவில்லை. அதற்குள் திருமா பா.ம.க திமுக கூட்டணிக்கு வர வேண்டும் என்கிறார். தங்கபாலு எங்கள் அணியில் தான் பா.ம.க இருக்கிறது என்கிறார்.

எனக்கு எதுவும் புரியவில்லை, ஆனால் மேலே உள்ள படத்தை பார்த்தால் எனக்கு ஒன்று புரிகிறது உங்களுக்கு ?

புரிந்தவர்கள் கமெண்டில் சொல்லலாம். பரிசு நிச்சயம் உண்டு ;-)

Read More...

வக்கீல் போலீஸ் கதைகள்

துக்ளக் வாசகர் கடிதத்தில் வந்த ஒரு பகுதி மற்றும் பி.ஏ.கிருஷ்ணன் Daily Pioneerல் எழுதிய கட்டுரையின் கடைசி பகுதி இந்த பதிவில்..


நான் 1979-ஆம் ஆண்டு "மஞ்சரி' இதழில் படித்ததை "துக்ளக்' வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டு, மனதைத் தேற்றிக்கொள்கிறேன்.

காரைக்குடி முதல் வகுப்பு பெஞ்ச் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் நடந்த சம்பவம் இது: போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சாந்தப்பிள்ளை என்பவர், தனது வீட்டிலிருந்து வேலைக்குப் புறப்படும் சமயம், அவரது வீட்டுத் திண்ணையில், அவருடைய மனைவிக்கும் தயிர்க்காரிக்கும் சுவரில் தயிர்க் கணக்கு கோடுகள் போட்டிருந்ததில் பிரச்சனை. சுமார் 20 கோடுகளைக் காணவில்லை, அவை அழிக்கப்பட்டது என்று
தயிர்க்காரி சொல்ல, அதற்கு இன்ஸ்பெக்டரின் மனைவி, தான் யார் என்பதைத்
தெரிந்து பேசு என்று மிரட்டிக்கொண்டிருந்தாள்.

அந்த சமயத்தில் இன்ஸ்பெக்டர் வெளியே வருவதைப் பார்த்த தயிர்க்காரி, பயத்தில் பேசாமல் சென்றுவிட்டாள். போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்ற இன்ஸ்பெக்டர், ஒரு கான்ஸ்டபிளை அனுப்பி, அந்த தயிர்க்காரியை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தார். தயிர்க்காரி, நடுக்கத்துடன் நடந்த விஷயத்தை இன்ஸ்பெக்டரிடம் முறையிட்டாள்.

உடனே அந்த தயிர்க்காரியிடம் ஒரு வாக்குமூலம் வாங்கி, நேராக கோர்ட்டிற்குத் தானே சென்று, தனது மனைவியின் பேரில், தயிர்க்காரி கொடுத்த வாக்குமூலத்தைக் கொண்டு வழக்கு தாக்கல் செய்தார். மறுநாளே வாய்தா போடச் சொன்னார். மறுநாள் தனது மனைவியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்தார். கோர்ட் விதித்த அபராதக் கட்டணமான பத்து ரூபாயை, தன் மனைவியிடம் கொடுத்துக் கட்டவும் செய்தார்.

இச்சம்பவம் நம் தமிழ் கூறும் நல்லுலகில்தான் நடந்தது. சுமார் 112 வழக்குகளில் தொடர்புடைய வக்கீல்கள், சுப்ரமணியம் ஸ்வாமி மீது முட்டை வீசியதும் இந்தத் தமிழகத்தில்தான் நடந்துள்ளது.
( நன்றி: துக்ளக் 12.3.09 )


During the late ’40s of the last century, at the height of the Telengana movement, one of the junior practitioners of my father’s bar was arrested for supporting the Communists. My father was a sworn enemy of the Communists. However, the Junior was the son of his closest friend and my father had no option except to defend him. His first task was to bring him out on bail. The judge who heard the bail plea was sympathetic and he asked my father to get an undertaking from the junior that he did not subscribe to the Communist ideology. My father went back to the junior and asked him if he was prepared to give such an undertaking. The junior refused and said he would rather remain in jail than give a patently false undertaking. My father went back to the Judge and his argument was this: The Junior would have chosen the easy option of giving a false undertaking to get out of the prison. He chose not to do so because he wanted to be truthful. Would it be fair to keep in prison a person who wanted to adhere to truth? Was not our National Motto ‘Truth Alone Triumphs’?

The judge was impressed and the junior was released on bail. The junior went on to become one of the greatest criminal lawyers of the Madras bar.

My father and the junior were lawyers of a different era.
( Source: Daily Pioneer )

Read More...

Monday, March 23, 2009

பிற்போக்கில் ஐக்கியமான முற்போக்கு கூட்டணி


ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்பது காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல. இதை காங்கிரஸ் புரிந்து கொள்ள வேண்டும் - லாலு.

படம்: பிற்போக்கில் ஐக்கியமான முற்போக்கு கூட்டணி ;-)

Read More...

பா.ம.க எந்த கூட்டணி ?சில செய்திகள் அதிமுக என்கிறது, சில செய்திகள் திமுக என்கிறது. எது எப்படியோ இந்த படம் சரியாக பொருந்துகிறது.

Read More...

அரசியல் சினிமா

சில சினிமா செய்திகள்
எச்சரிக்கை: அரசியல் கலந்திருக்கலாம்


1. சரத்குமார் இன்று மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதாக அறிவித்துள்ளார். நெல்லை தொகுதியில் தான் போட்டியிடப்போவதாகவும், சிவகங்கை தொகுதியில் ராதிகாசரத்குமார் போட்டியிடப்போவதாகவு தெரிவித்துள்ளார்.

2. நான் போட்டியிடுவதை யாரும் தடுக்க முடியாது. நான் போட்டியிட தேர்ந்தெடுத்துள்ள 2,3 தொகுதிகளில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியும் ஒன்றாகும். நான் இன்னும் கூட்டணி பற்றி முடிவு செய்யவில்லை. ஆனால் முடிவு செய்தால் மக்களுக்கு நலன் பயக்கும் கட்சியுடன்தான் கூட்டணியை ஏற்படுத்துவேன். எந்த கட்சியும் இந்த கார்த்திக்கை விலை கொடுத்து வாங்க முடியாது. நமக்கு சுய மரியாதை முக்கியம். தன் மானம் முக்கியம். இங்கு வாய்ச்சொல் பேசும் வீரர்கள் டெல்லிக்கு சென்று கூட்டணி பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். நான் மக்களுக்கு நலன் பயக்கும் கூட்டணியைத்தான் ஏற்படுத்துவேன்.

இங்கு இலங்கை தமிழர் பிரச்சினைக்காக உண்ணா விரதம் இருக்கிறார்கள். ஆனால் நான் அப்படிப் பட்டவன் அல்ல. இலங்கை தமிழருக்கு பிரச்சினை என்றால் எல்லையில் ராணுவத்தினருடனும், போலீசாருடனும் துப்பாக்கி ஏந்தி நிற்க கூடியவன் நான். நான் தமிழக மக்களுக் காக தமிழக மக்களின் வாழ்வுக்காக பாடுபடுவேன். - நடிகர் கார்த்திக்

3. ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி தலைமையில் ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது. அவர் தீட்டும் திட்டங்கள் அனைத்தும் மக்களை உடனடியாக சென்றடைகின்றன.
ஆந்திர மக்களுக்காக அவர் கொண்டு வந்த ஆரோக்கியஸ்ரீ திட்டம் மகத்தானது. இதன்மூலம் ஏழை-நடுத்தர மக்கள் அனைவரும் பயன்பெறுகிறார்கள். அவர்களுக்கு ஒரு லட்சத்திற்கு மேல் சிகிச்சைக்கு பணம் செலவானாலும் அதை மாநில அரசு கொடுத்து வருகிறது.

இதனால் மக்கள் அனைவரும் காங்கிரசுக்கு ஆதரவாக உள்ளனர். இந்த தேர்தலில் நான் காங்கிரசுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்வேன். விரைவில் இதற்கான தேதியை அறிவிப்பேன். - நடிகை ஜீவிதா


Read More...

அடையாளம் காட்டுவேன் - வாக்களியுங்கள்விஜயகாந்த்: நான் அடையாளம் காட்டுவேன். அவர்களுக்கு (மக்களவை பொதுத் தேர்தலில்) வாக்களியுங்கள், இதில் நிறைய அர்த்தங்கள் பொதிந்துள்ளன.

நாய்: ஐயம் தி எஸ்கேப்!

( படம் தெரியாதவர்கள் கீழே பார்க்கவும் )
Read More...

ஒரு புதன்கிழமை – இயலாமையும் இந்திய அரசியலும்

ஒரு புதன்கிழமை – இயலாமையும் இந்திய அரசியலும் --ஹரன் பிரசன்னா

மதுரையில் புத்தகக் கண்காட்சிக்காக சென்றுகொண்டிருந்தபோதுதான் மும்பைத் தீவிரவாதத் தாக்குதல் நிகழ்ந்தது. என்னை அழைத்து அந்த தீவிரவாதத் தாக்குதல் பற்றிச் சொன்ன நண்பரும் நானும் பகிர்ந்துகொண்ட முக்கியமான விஷயம், நமது அடுத்த தலைமுறை சந்திக்கப்போகும் பிரச்சினைகளைப் பற்றி. காலையில் பள்ளிக்குச் செல்லும் குழந்தை பாதுகாப்பாக மீண்டும் வீட்டுக்கு வருவதும், வேலைக்குச் செல்லும் ஒருவர் மீண்டு வீடு திரும்புவதும், ஒரு மாநாட்டுக்குச் செல்லும் அரசியல் தலைவரோ தொண்டரோ உயிரோடு திரும்ப வருவதும் பெரும் சாகசங்களில் ஒன்றாக அமையும் நாளாக இந்தியா சென்று கொண்டிருக்கிறது. BAD ஆபரேஷன் (Bombay – Ahmedabad – Delhi) என்று பெயர் வைத்து, தொடர்ந்து குண்டு வெடிப்புகளை நிகழ்த்திக்கொண்டிருக்கும் தீவிரவாதிகளின் செயல்கள் மக்கள் மனத்தில் பெரும் பதற்றத்தையும் பாதுகாப்பின்மையையும் உருவாக்கியிருக்கிறன. அதில் ஒருவன் அடையும் கோபத்தின் உச்சத்தை, யதார்த்தமாக சாத்தியமில்லாதது என்றாலும், மனக்குமுறலோடு முன் வைக்கிறது A Wednesday (ஒரு புதன்கிழமை) திரைப்படம்.

இப்படத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் தீர்வல்ல. மாறாக, அது கோபத்தின் வெளிப்பாடு. இயலாமையின் உச்சி. நான்கு தீவிரவாதிகள் கொல்லப்படும்போது, ஒரு ஹீரோ வொர்ஷிப் உள்ள ரசிகன் தன் ஹீரோவின் படத்தில் அடையும் மனநிலையைப் பார்வையாளர்களும் அடைகிறார்கள். தங்களால் சாதிக்கமுடியாததை தங்கள் ஹீரோக்கள் செய்வதைப் பார்த்துப் புளகாங்கிதப் படும் மனோபாகம் இங்கேயும் எழுவதைப் பார்க்கவேண்டும். இதுவே படத்தின் ஆதாரமும் கூட. எல்லா மக்களுக்குள்ளும் ஒரு தீவிரவாதி உறங்கிக்கொண்டே இருக்கிறான். அத்தீவிரவாதம், மக்களை அழித்துக்கொண்டிருக்கும் தீவிரவாதத்துக்கு எதிரானதாகவும் இருக்கலாம். தன் பெயரைச் சொல்லாத ஒருவன், தீவிரவாதிகளுக்கு எதிராக ஒரு தீவிரவாதியாக மாறுகிறான். அவன் செய்யும் கொலைகளுக்கு எதிராக அவன் சொல்லும் காரணங்கள் மிக எளிமையானவை. நான் வேலைக்குச் சென்றால் திரும்பவும் உயிரோடு வருவேன் என்று என் மனைவிக்கு எவ்வித உத்திரவாதமுமில்லை. தினமும் புன்முறுவல் புரியும் ரயில் சிநேகிதரை மறுநாள் காணவில்லை. முதல்நாள் குண்டுவெடிப்பில் இறந்து போயிருக்கிறார். இந்த குண்டுவெடிப்புக்குகளுக்குக் காரணமாணவர்கள் உயிரோடு திரிகிறார்கள். மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அது சரியல்ல. இதுவே அவன் சொல்லும் காரணம்.

எளிமையான ஓர் அதிகாரியைப் போல அறிமுகமாகும் நஸ்ருதீன் ஷா, கடைசி காட்சியில் அடையும் கொந்தளிப்பு அசர வைக்கிறது. எந்த ஒரு காட்சியிலும் தன் எல்லையைத் தாண்டாமல், மிக இயல்பாக அவர் நடித்திருப்பது படத்தின் முக்கிய விஷயம். அவரது உடல்மொழி அசாத்தியமானது. குண்டுவெடிக்கப்போகும் முன்பு அவர் கை நரம்புகள் முறுக்கித் தெரியும் காட்சி அதில் ஒன்று. காவல்துறை அதிகாரியாக வரும் அனுபம் கேரும் சிறப்பாக நடித்திருக்கிறார் என்றாலும், ஒரு சில காட்சிகளில் தேவையற்ற பதற்றமும் முகபாவமும் காட்டுகிறார். ஒருவகையில் இது இயக்குநரின் தவறும் கூட. அனுபம்கேருக்கு வரும் சில காட்சிகள் மசாலாத்தனம் கொண்டவை. என்றாலும், இவர்கள் இருவருமே இப்படத்தை சுமந்து செல்கிறார்கள்.

இப்படத்தின் முக்கியமான விஷயம், இப்படத்தின் கதை. இன்றைய நிலையில், இஸ்லாமிய அடிப்படைத் தீவிரவாதத்தைப் பற்றிப் பேசுவது கூட, இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று ஊடகங்கள் நிறுவிவிட்ட நிலையில், வெகுஜனங்களான ஊடகமாக மாறிக் கிடக்கும் ஒரு திரைப்படத்தில் இத்தகைய கதை ஒன்றை நினைத்துப் பார்ப்பது கூட அசாரதாரணமான விஷயம். அதை செயல்படுத்தியும் காட்டியிருக்கிறார்கள் இயக்குநரும் தயாரிப்பாளரும். நான்கு தீவிரவாதிகளில் மூன்று பேர் இஸ்லாமியர்கள்; ஒருவர் ஹிந்து. நான்கு தீவிரவாதிகளும் தாங்கள் எந்த குண்டுவெடிப்பில் பங்கு பெற்றவர்கள் என்று கூறி, அதற்காகப் பெருமைப்படுகிறோம் என்று சொல்கிறார்கள். இத்தகைய தீவிரவாதிகளுக்கு சட்டம் சொல்லும் பதில் என்ன? சட்டத்தின் பதில் கிடைக்க ஆகும் தாமதத்தில் இவர்கள் என்ன ஆகிறார்கள்? பிணையில் வெளிவரும் இத்தகைய தீவிரவாதிகளின் செயல்களை யார் கண்காணிக்கிறார்கள்? இதில் இவர்கள் விடுதலையும் ஆகிவிட்டால், ஏதேனும் ஒரு முற்போக்குக் கட்சியிலோ அல்லது மதக் கட்சியிலோ தலைவராகவும் ஆகிவிடமுடியும். இதை இன்று நாம் நிஜத்தில் கண்டுகொண்டிருக்கிறோம். மதானிக்காக குரல் எழுப்பாத முற்போக்கு கட்சிகளே இல்லை எனலாம். கடமை தவறாத ஒரு காவல்துறை அதிகாரியின் பெயர் ஆரிஃப் என்றதும், நஸ்ருதீன் ஷா ஒரு நிமிடம் அர்த்தத்தோடு சிரிக்கிறார். தீவிரவாதத்துக்குத் துணைபோகும் சில இஸ்லாமியர்களுக்கு எதிராக இத்தகைய அர்த்தம் உள்ள சிரிப்பை உண்டாக்க, பெரும்பாலான இஸ்லாமியர்கள் முயலவேண்டும். தங்கள் மதம் தீவிரவாதத்துக்கு எதிரானதல்ல என்கிற நம்பிக்கையை அவர்கள் எல்லோர் மனத்திலும் கொண்டுவரவேண்டும். இதுவே இந்தியத் தேவை, யதார்த்தமான அணுகுமுறையும் கூட. உண்மையில் நான் இந்த விமர்சனத்தைக் கூட, பெயரில்லாமலே எழுதியிருக்கவேண்டும். ஏனென்றால், பெயரைச் சொன்னாலே அதை வைத்துப் பின்னணி தேடி, ஒரு முன்முடிவு கொள்ளும் சமூக நிலையையும் இப்படம் சுட்டிக் காண்பிக்கிறது. கடைசிவரை நஸ்ருதீன் ஷா தன் பெயரைச் சொல்வதே இல்லை. காரணம், தன் பெயர் தன் மதம் எதுவெனச் சொல்லிவிடும். பின்பு, தீவிரவாததுக்கு எதிரான முனை மழுங்கி அது அரசியலாகிவிடும். இயக்குநர் முக்கிய கதாபாத்திரத்தின் பெயரைச் சொல்லாமல் விட்டிருப்பது மிகச்சிறந்த உத்தி மட்டுமல்ல, ஊடகங்களின் மீதான கடுமையான விமர்சனம்.

இப்படம் முன்வைக்கும் செய்திதான் தீர்வா என்றால், நிச்சயம் இது தீர்வாக இருக்கமுடியாது. இப்படம் தரும் செய்தியை அடிப்படையாக வைத்து நாம் தீர்வை அடையவேண்டும் என்றால், அது தீவிரவாதத்துக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளிலும், தீவிரவாதிகளுக்கு எதிரான கடுமையான தண்டனைகளிலும் இருக்கிறது. சட்டம் என்பது ஒரு கோமாளி அல்ல, ஒரு சர்வாதிகாரி என்கிற பயத்தை அது குறைந்தபட்சம் தீவிரவாதிகளுக்காகவது உண்டாக்கவேண்டும். ஆனால் வெற்று ஜனநாயகம் பேசித் திரியும் போலிகள் மலிந்த நம் நாட்டில் இது எப்போது சாத்தியமாகும் எனத் தெரியவில்லை. இந்தக் கோபத்தைச் சொல்கிறது ‘ஒரு புதன்கிழமை.’ முதல்வன், ஜெண்டில்மேன் வகையறாக்கள் போல இதுவும் ஒரு fantasy வகைத் திரைப்படமே. அந்த fantasyயை அடிப்படையாக வைத்துக்கொண்டு, இன்றைய தீவிரவாதத்துக்கு எதிரான மனநிலையைக் கொண்டுவந்திருக்கிறார்கள்; முதல்வன், ஜெண்டில்மேன் போன்ற ரசிகத் தன்மையுள்ள படங்களாக அல்லாமல், ஒரு விவாதத்துக்குரிய படைப்பாக.

இதை ஒரு திரைபப்டம் என்று அணுகுவோமானால், தொழில்நுட்ப ரீதியாக இது ஒரு கொண்டாடப்படவேண்டிய படமில்லை என்றே சொல்லுவேன். படத்தோடு எந்த விதத்திலும் தொடர்பற்ற, எரிச்சலூட்டும் பின்னணி இசை. ஒரு நல்ல படத்துக்கு வேண்டிய அமைதி இப்படத்தில் இல்லவே இல்லை. வேகமான திரைக்கதை என்பது குறுகிய நொடிகள் கொண்ட எடிட்டிங் என்று நினைத்துவிட்டார் எடிட்டர். ஒரு வெகுஜன திரைப்படத்துக்குரிய வேகத்தோடு நகர்கின்றன காட்சிகள். முக்கியக் கதையை விட்டுவிட்டுப் பார்த்தால், எரிச்சலூட்டும் பல காட்சிகள் படமெங்கும் குவிந்துகிடக்கின்றன. குறிப்பாக அனுபம்கேர் வரும் பல காட்சிகள். இவையெல்லாம் சாதாரண ரசிகனை சிரிக்க வைக்கும், அல்லது உசுப்பேற்ற வைக்கும் காட்சிகள்.

முதல் காட்சியில் ஒருவர் தன் மனைவியை அடித்துவிட்டதாகக் குற்றம் சொல்லும் காட்சியிலிருந்து, வெடி குண்டை கண்டுபிடிக்கச் செல்லும் அதிரிகாரியிடம், ‘உனக்கு குழந்தை இருக்கிறதா, இருந்தாலும் குண்டு கண்டுபிடிக்கச் செல்வாயா, இறந்தாலும் பரவாயில்லையா’ என்றெல்லாம் கேட்பது, ஒரு இளைஞன் தொலைபேசி அழைப்பை கண்டுபிடிக்க வரும்போது வரும் தேவையற்ற தொலைபேசி அழைப்பு, அனுபம்பேர் ‘கடைசியில் ஆரிஃபை .... வேறு வழியில்லை’ என்பதும், அதைத் தொடர்ந்து பார்வையாளர்கள் ஆரிஃபை சந்தேகப் படத் துவங்குவதுமான காட்சிகள், நஸ்ருதீன் ஷா நல்லவர் என்று தெரிந்ததும் பொதுமக்கள் அடிக்கும் பல்டி வரை பல்வேறு க்ளிஷேக்கள் படம் நெடுகிலும் காணப்படுகின்றன. இவற்றையெல்லாம் அடியோடு இயக்குநர் தவிர்த்திருந்திருக்கலாம். அதேபோல் படம் நெடுக நஸ்ருதீன் ஷாவும், அனுபம்கேரும் பேசிக்கொண்டிருந்தாலும், மனதை அள்ளும் காட்சிகள் எவை என்றால் யோசிக்கவேண்டியிருக்கிறது.

நான்கு தீவிரவாதிகளை காவல்துறை அதிகாரிகள் இரண்டு பேர் ஒரு பேருந்தில் அழைத்துக்கொண்டு செல்லும் காட்சி முக்கியமானது. ஆரிஃப் இஸ்லாமியர் என்பதைக் கண்டுகொள்ளும் திவிரவாதி அவனிடம் பேசத்துவங்குகிறான். ஆனால் ஆரிஃப் அவனிடம் சிக்குவதில்லை. கடைசியில் தான் இறப்பதற்கு முன்பும் ஆரிஃபிடம் இஸ்லாமியப் பாசத்தை முன்வைத்துப் பேசத் துவங்குகிறான். ஆரிஃப் ‘அதற்கு நீ இந்தியாவிற்கு வந்திருக்கக்கூடாது’ என்று சொல்லி சுட்டுத் தள்ளுகிறான். இதுபோன்ற, மனதில் ஊடுருவும் காட்சிகள் குறைவுதான். படத்தின் ஒட்டுமொத்த எண்ணமும், வேகமான காட்சிகளில் மட்டுமே குவிந்துவிட்டதால் ஏற்பட்ட பிரச்சினை இது.

ஒரு வெள்ளிக்கிழமை குண்டு வெடிக்கிறது, அடுத்த வியாழக் கிழமை குண்டு வெடிக்கிறது, அதற்கு ஒரு புதன்கிழமையில் ஒரு சாதாரண குடிமகன் தரும் பதிலை சுவாரஸ்யமாகச் சொல்கிறது ‘ஒரு புதன்கிழமை.’ கதையின் தைரியத்துக்ககவே நிச்சயம் இத்திரைப்படத்தைப் பார்க்கலாம். இத்திரைப்படத்தை தமிழில் கமல் எடுக்கப்போகிறார் என்பது சோகமான செய்தி. ’உங்கள் கதாபாத்திரத்தில் கமல் நடிக்கிறாராமே’ என்று நஸ்ருதீன் ஷாவிடம் கேட்டபோது, ‘எல்லா கதாபாத்திரங்களிலும் அவரே நடித்திருக்கலாமே’ என்றாராம். நல்ல பதில்தான். கமல் இத்திரைப்படத்தை தொழில்நுட்ப ரீதியாக சிறப்பாக எடுப்பார் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. கூடவே, மூன்று இஸ்லாமிய அடிப்படைத் தீவிரவாதிகளுக்கு பதிலாக மூன்று இந்து அடிப்படைத் தீவிரவாதிகளைக் காண்பிப்பார். இஸ்லாமிய மக்களின் மனத்தில் இருக்கும் அச்சத்தைப் பற்றிப் பேசுவார். இதில் தவறில்லை, ஆனால், இந்துத் தீவிரவாதம் பற்றி மட்டுமே பேசுவார். இந்து நம்பிக்கைகளைக் கிண்டல் செய்யும் வசனங்கள் இல்லாவிட்டால் கமலுக்குத் தூக்கம் வராது. அதேசமயம், இஸ்லாமிய கிறித்துவ நம்பிக்கைகளின் மீதான கிண்டல் சிறிதும் இராது. தேவைப்பட்டால் அதைப் பாராட்டவும் செய்வார். இத்தகைய ஆபத்துகளோடு தயாராகும் ‘தலைவன் இருக்கிறான்’ படத்தைப் பார்த்து எந்தவொரு சாதாண குடிமகனும், நஸ்ருதீன் ஷா அளவு இல்லாவிட்டாலும், கொஞ்சம்கூட கொதித்தெழ மாட்டான் என்பதே கமல் போன்றவர்களின் பலம்.

சுரேஷ் கண்ணன் எழுதிய பதிவு

விஸ்வாமித்திரா எழுதிய பதிவு

பின்குறிப்பு: திநகர் புத்தகக் கண்காட்சியில் இருந்தபோது திடீரென ஒருவர் வந்தார். கருப்பாக, சாதாரண உயரத்துடன், தலையில் லேசாக எட்டிப் பார்க்கும் வழுக்கையுடன். ‘இங்க ஹரன் பிரசன்னா யாரு’ என்றார். நாந்தான் என்றதும் ஒரு சிடியைக் கொடுத்துவிட்டுச் சென்றார். அந்த சிடி இட்லிவடை அனுப்பியது! ஏற்கெனவே அரட்டையில் இட்லிவடை தான் சிடி அனுப்புவதாகச் சொல்லியிருந்தார். நான் வந்தவரிடம் யாரென்று கேட்கவில்லை. நான் அவர் யார் எனக் கேட்டு, அவர் ‘நான் தான் இட்லிவடை’ என்று சொன்னாலும், ‘நான் இட்லிவடை இல்லை’ என்று சொன்னாலும் என்னால் நம்பமுடியப்போவதில்லை. அரட்டையில் இட்லிவடை வழக்கம்போல ‘வேற எதாவது படம் வேணும்னாலும் சொல்லுங்க’ என்கிறார். அந்த சிடியில் :) நகைப்புக் குறி வேறு! நஸ்ருதீன் ஷாவைவிடக் கடுமையான இயலாமையில் இருக்கிறேன். பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்கிற பழமொழி பொய்க்காது.

( நன்றி: ஹரன் பிரசன்னா(இட்லிவடையின் சிறப்பு சினிமா விமர்சகர்))

Read More...

Sunday, March 22, 2009

FLASH: பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி: விஜயகாந்த் அறிவிப்பு

பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காஞ்சிபுரத்தில் தொடங்கினார். தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர்

26ஆம் தேதி கன்னியாக்குமரியில் பிரசாரத்தை தொடங்கி தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய உள்ளதாவும், இந்த தேர்தலில் யாருடன் கூட்டணி இல்லை. மக்களுடன் மட்டுமே கூட்டணி வைப்பேன் என்றும் கூறியுள்ளார். ஆட்சிக்கு வந்தால் படிக்காத இளைஞர்களுக்கும் வேலை கொடுக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.

Read More...

பா.ம.க. உறவு முறிந்தது ஏன்? கருணாநிதி விளக்கம்

காஞ்சிபுரத்தில் இன்று மாலை தனது பிரசாரத்தை அவர் தொடங்குகிறார். அப்போது தேர்தலில் தனது நிலையை அவர் விளக்குவார் எனத் தெரிகிறது.

கலைஞர் ஏன் பாமக திமுக கூட்டணியில் இல்லை என்பதை இன்று விளக்கியுள்ளார்.


மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தமிழ்நாடு மட்டுமே அதிக பலன் அடைந்துள்ளது. துறைமுகம் தொடங்கி விமான நிலையம் வரை தமிழ்நாட்டில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நமது ஜனநாயகத்தின் முழுமையான மதசார்பற்ற அரசு இங்குதான் செயல்படுகிறது. இவற்றையெல்லாம் மக்களிடம் எடுத்துச்சொல்வோம். 2004-ல் வெற்றி பெற்றது போல் இந்த தேர்தலிலும் தமிழகம், புதுவை ஆகிய 40 தொகுதியிலும் வெற்றி பெறுவோம். மக்கள் மத்தியில் எந்த எதிர்ப்பு அலையும் இல்லை.

பா.ம.க. எங்களால் நிறைவேற்ற முடியாத அளவுக்கு நிறைய எதிர்பார்த்தார்கள். அதை நிறைவேற்ற முடியவில்லை. இதனால் உறவு முறிந்தது. இலங்கை பிரச்சினையில் தமிழக அரசால் எத்தகைய நடவடிக்கை எடுக்க முடியும் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். எனவே இலங்கை பிரச்சினை தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தாது.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய எங்களால் முடிந்தவற்றை செய்தோம். மத்திய அரசும் இதில் ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காணமுடியாது பேச்சு வார்த்தையால் மட்டுமே தீர்க்க முடியும் என்று எடுத்துக்கூறியது அதுவே பாதிக்கப்பட்ட மக்களை இயல்பு நிலைக்கு திரும்ப உதவும் என்றும் தெரிவித்தது.

பண வீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கை நல்ல பலனை கொடுத்துள்ளது. தற்போது பண வீக்கம் குறைந்து மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தில் ரூ.1க்கு ஒரு கிலோ அரிசி, பருப்பு, பாமாயில், மற்றும் மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கி ஏழைகள் பயன் அடைய செய்து இருக்கிறோம். ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கையால் நல்ல பலன் அடைந்துள்ளனர்.

நான் அன்றாடம் கடிதங்கள் வாயிலாகவும் அறிக்கைகள் மூலமாகவும் தொண்டர்களை சந்தித்துக்கொண்டு இருக்கிறேன் தொண்டர்கள் மனதிலும் இதயத்திலும் நிறைந்து இருக்கிறேன். தேர்தலை சந்திக்க தொண்டர்கள் தயார் படுத்தப்பட்டு உள்ளனர். டாக்டர்கள் என் உடல் நிலை பற்றி என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பது தொண்டர்களுக்கு தெரியும். கண்டிப்பாக தேர்தல் பிரசாரம் செய்வேன். பொறுத்து இருந்து பாருங்கள்.

நாட்டு மக்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு கொடுத்து பெரும் பான்மை பலம் அளிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

திருவிழா தேதி முடிவாகிவிட்டது. தேரும் ஓடத்தயாராகிவிட்டது. ஆனால் யார் எல்லாம் சேர்ந்து இழுப்பது என்பதில் இழுபறி... திருமணத்துக்கு நாள் குறித்து விட்டார்கள். பெண்ணும் தயார். ஆனால்... பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை... பாராளு மன்ற தேர்தலுக்கு கூட்டணி கட்சிகளை சேர்ப்பதிலும் இதே நிலமை நீடிக்கிறது.

திருவிழா என்றால் ஊர் மக்களுக்கு கொண்டாட்டம். தேர்தல் என்றால் கட்சி தொண்டர்களுக்கு உற்சாகம்.. அந்த உற்சாகத்தை கூட்டணி குழுப்பம், ஒரேயடியாக முட்டுக்கட்டை போட்டு நிறுத்தி விட்டதே... என்பதுதான் கட்சித் தொண்டர்களின் ஆதங்கம்.

பாராளுமன்ற தேர்தல் அறிவிப்புவந்ததும், கட்சி பிரமுகர்கள் நீண்ட நாட்களாக பீரோவில் இருந்த வேட்டி - சட்டைகளுக்கும் கட்சி துண்டுகளுக்கும் முழுவேலை கொடுக்கத்தொடங்கி விட்டார்கள். கட்சி அலுவலகத்துக்கும், தலைவர்களின் வீடுகளுக்கும் தினமும் படையெடுக்கும் பணி “ஜரூராக” நடந்து கொண்டிருக்கிறது. தலைவரின் கடைக்கண் பார்வை படாதா... “சீட்” வாசல் திறக்காதா என்பது அவர்களின் கவலை.

நேற்று வரை தூங்கிக்கொண்டிருந்த தொண்டர்களும் உற்சாகமாக எழுந்து விட்டார்கள். எம்.எல்.ஏ., எம்.பி., மாவட்டம், வட்டம் கண்களில் பட்டால் “தேர்தல் பொறுப்பு” கிடைக்கும் பணம் தாராளமாக புரளும். 3மாதங்களை உற்சாகமாக கொண்டாடி விடலாம் என்பது அவர்கள் கணிப்பு. கட்சி அலுவலகத்துக்கும் முக்கிய புள்ளிகளின் கட்டளைக்கும் காத்துக்கிடக்கிறார்கள்.

போட்டியிட வேட்பாளர்கள் தயார். அனுமதி கொடுக்க தலைமை தயார். வேலைபார்க்க தொண்டர்கள் தயார். ஆனால் யாருடன் கூட்டணி என்ற கேள்விக்குறி எழுத்து எல்லோரையும் இழுத்துப்பிடித்துக் கொண்டிருக்கிறது.

தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. நீடிக்குமா? அல்லது அ.தி.மு.க. பக்கம் தாவுமா? தே.மு.தி.க காங்கிரசுடன் கூட்டணி சேருமா? தனித்து போட்டியிடுமா? திருமாவளவன் தி.மு.க.வில் நீடிப்பரா? ராமதாஸ் அழைப்பை ஏற்று அணி மாறுவரா? கூட்டணி பற்றிய கேள்விகள் இப்படி நீண்டு கொண்டே போகின்றன.

பாராளுமன்ற தேர்தல் அறிவித்ததும் கட்சி தொண்டர்களில் வழக்கம் போல சுவர்களில் இடம் பிடித்தார்கள். தலைவர்களின் படங்களையும் வரைந்தார்கள். ஆனால் யார் ஆசியுடன் வேட்பாளர் போட்டியிடுகிறார் என்பது முடி வாகாமல் வரைந்த ஓவியமும் எழுதிய வாசகங்களும் அரை குறையாகவே நிற்கின்றன.

வாசகத்தை முடித்தால்... அதைக்காட்டி கட்சி பிரமுகரிடமும் முடிந்தால்.. கட்சியிடமும் இருந்து வரவு வரும் தாராளமாக செலவு செய்யலாம். இந்த எண்ணத்தில் சுவரில் இடம் பிடித்த பல தொண்டர்கள்... கூட்டணி குழப்பத்தால் பெயிண்ட்... பிரஷ்... ஓவியருக்கு முதலீடு செய்த பணம் திரும்பி வருமா என்ற சிந்தனையில் செயல் இழந்து நிற்கிறார்கள்.

தேர்தல் வேலை தொடங்கி விட்டால் பணம், பிரியாணி, உற்சாக பானம் என்ற கனவில் இருந்த அடிமட்ட தொண்டர்கள் கூட்டணி இழுபறியால், அடி வயிற்றில் ஈரத்துணியை கட்டிக் கொண்டு அங்காய்க்கிறார்கள்.

தேர்தல் தேதி அறிவித்து 20 நாட்கள் ஆனபிறகும் “சிங்கிள் டீ”க்கு சிங்கி அடிக்க வேண்டியதிருக்கிறது என்று புலம்பும் தொண்டர்களை எல்லா கட்சி அலுவலகங்களிலும் காண முடிகிறது. இன்று மாலை கூட்டணி அறிவிப்பு வராதா? நாளை முதல் விடிவுகாலம் பிறக்காதா? என்று ஏங்கும் தொண்டர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

காலையில் கூட்டணி முடிவாகிவிடும் என்று நம்பிக்கையுடன் எழும் கட்சி தொண்டனும், முக்கிய பிரமுகர்களும், மாலைவரை எந்த முடிவும் வராமல் கூட்டணி இழுபறி ஆவதைக்கண்டு கண்ணீர் விடாத குறையாக வேதனைப் பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

கூட்டணி விஷயத்தில் தலைவர்களின் செயல்பாடு கட்சி தொண்டர்களை மட்டு மல்ல பொதுமக்களையும் சிந்திக்க வைத்திருக்கிறது. கட்சி, கொள்கை, அரசியல் நாகரீகம், பண்பாடு என்று பேசும் சில கட்சிகள் கூட்டணிக்காக அடிக்கடி நிறத்தை மாற்றிக்கொள்வது முன்னொரு காலத்தில் கடுமையாக சிந்திக்க வைத்தது.

இப்போது.. அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்று சாதாரண மக்கள் கூட கிண்டல் செய்யும் நிலமை ஏற்பட்டிருக்கிறது. வியாபாரத்தில் முதல் போட்டு லாபம் சம்பாதிக்கும் அதே பாலிசி அரசியலுக்கும் வந்து விட்டது. இதனால் கட்சியை முழுமையாக நம்பி இருக்கும் தொண்டர்கள் நிலை பரிதாபமாகி இருக்கிறது.

இன்று கூட்டணி அமைந்து விட்டால் நானை முதல்... தேர்தல் கொண்டாட்டம் களை கட்டிவிடும். தொடர் கதையாகும் கூட்டணி குழப்பத்தால் தொண்டர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி நிற்கிறார்கள்.

இது வரை நமது கூட்டணியில் இருந்து அந்த கட்சி தொண்டருடன் பேசலாமா? பேசக்கூடாதா... நேற்று வரை எதிர் அணியில் இருந்த கட்சி இங்கு வருவதாக சொல்கிறார்கள்... அதை நம்பி அந்த தொண்டருடன் சேர்ந்தால் நாளை நமது நிலமை என்ன ஆகும்? என்று விதம் விதமாக புலம்பும் தொண்டர்கள் நிலமை பரிதாபமாக உள்ளது.

கூட்டணி முடிவாகாததால் 20 நாட்கள் வீணாகி விட்டன. இன்னும் எத்தனை நாட்கள் ஏக்கத்துடன் காத்துக்கொண்டிருப்பது... இதுபோல் அடுக்கடுக்காக தொண்டர்கள் கேட்கும் கேள்விக்கு எப்போது பதில் கிடைக்கும்? தலைவர்கள் தான் சொல்ல வேண்டும்.
தேர்தல் முடிவுக்கு வந்த பின் நடக்கும் கூத்து இன்னும் பிரமாதமாக இருக்கும் என்று நம்புவோம்.Read More...

மயிலாப்பூரும் திருமங்கலமாக மாறும் - எஸ்.வி.சேகர்

மயிலை மாங்கொல்லையில் பொதுக்கூட்டம் நடத்தி மக்கள் முன்னிலையில் எனது ராஜினாமா முடிவை அறிவிப்பேன் என்றும், நான் ராஜினாமா செய்த பிறகு மயிலாப்பூரும் ஒரு திருமங்கலமாக மாறும் என்றும் அதிமுக எம்எல்ஏ எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக அம்பா சங்கர் கமிஷன் அமைக்கப்பட்டது. அருந்ததியர்களுக்காக ஜனார்த்தனன் கமிஷன் அமைக்கப்பட்டது.

அதே போல் பிராமணர்களுக்கும் ஒரு கமிஷன் அமைத்து ஆராய வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதியிடம் இன்னும் சில நாட்களில் மனு கொடுக்க உள்ளோம். பிராமணர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க முதல் அமைச்சர் கருணாநிதியால் தான் முடியும். எங்கள் சமூகத்திற்கு நல்லது செய்பவரை ஆதரியுங்கள் என்று ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்வேன்.

மயிலாப்பூர் தொகுதியில் எனக்கு போட்டியிட சீட் தந்தது ஜெயலலிததான். ஆனால் என்னை வெற்றி பெற செய்தது மயிலாப்பூர் தொகுதி மக்கள். தொகுதி மக்களுக்கு என்னென்ன கடமைகள் செய்யவேண்டுமோ அதை செய்து வருகிறேன். தொகுதி மக்களிடம் எனக்கு நல்ல மரியாதை இருக்கிறது.

அ.தி.மு.க.வில் ஒரு எம்.எல்.ஏ.வை சரியாக நடத்த தெரியவில்லை. எனக்கும் கட்சிக்கும் ஏற்பட்ட விரிசல் பிளவாகி விட்டது. இனி அதை சரி செய்ய முடியாது. போலியாக நடித்து கட்சியில் தொடரவும் எனக்கு விருப்பம் இல்லை.

நான் எந்த முடிவை எடுத்தாலும் என் தொகுதி மக்கள் முன்னிலையில்தான் எடுப்பேன். சித்திரையில் முத்திரை பதிப்போம் என்பார்கள். வருகிற ஏப்ரல் 14 ந்தேதி சித்திரை முதல்நாளில் நான் முத்திரை பதிப்பேன்.

மயிலை மாங்கொல்லையில் பொதுக்கூட்டம் நடத்தி மக்கள் முன்னிலையில் எனது ராஜினாமா முடிவை அறிவிப்பேன். நான் ராஜினாமா செய்கிறேன் என்ற விபரத்தையும் மக்களுக்கு தெரிவிப்பேன். நான் ராஜினாமா செய்த பிறகு மயிலாப்பூரும் ஒரு திருமங்கலமாக மாறும் என்றார்.

சித்திரை மாசம் மைலாப்பூர் வாசிகளுக்கு பிரியாணி உண்டு

Read More...

Saturday, March 21, 2009

பூனைகளான சிறுத்தைகள்

தேர்தலின் திசைகள் வலைப்பதிவில் வந்த பதிவு ...

முத்துக்குமாரின் மரணத்திற்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசுதான் காரணம் எனக் கடந்த மாதம் கொந்தளித்த திருமாவளன், அந்தக் காங்கிரஸ் கட்சியே மீண்டும் ஆட்சியில் அமர உதவி செய்ய முன்வந்.திருக்கிறார்.திமுக கூட்டணியில், (அதாவது காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்கக் கோரும் கூட்டணியில்) விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்கும் என அறிவித்திருக்கிறார்.

"பத்து கோடி தமிழர்களின் உணர்வுகளை அவமதித்து விட்டு சிங்களர்களுக்கு முட்டுக்கொடுக்கும் இந்திய அரசின் துரோகப்போக்கை எந்தக்காலத்திலும் தமிழ்ச் சமூகத்தால் மன்னிக்க முடியாது." என ஜவரி 3ம் தேதி முழங்கியவர் திருமாவளவன். இலங்கைப் பிரசினைக்காகத் தீக்குளித்த முத்துக்குமாரின் இறுதிச் சடங்கில் ' வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசை வீழ்த்துவதே இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவையின் பொது வேலைத் திட்டமாக இருக்கும் என அறிவித்த திருமாவளவன் அதற்கு நேர் எதிரான முடிவினை எடுத்திருப்பது ஆச்சரியம் தரவில்லை ஆனால் கேள்விகளை எழுப்புகிறது.

அவரது இந்த முடிவு அவரது கட்சியினருக்கே மகிழ்ச்சி தருவதாக இல்லை.நேற்று நடந்த கட்சியின் செயற்குழு கூட்டத்தில் காங்கிரசிற்கு எதிரான உணர்வு மேலோங்கியிருந்ததாக திருமாவளவன் தனது செய்தியாளரிடம் தெரிவித்ததை இன்றைய இந்து நாளிதழ் வெளியிட்டுள்ளது.
அப்படி இருந்தும் திருமாவளவன் காங்கிரசிற்கு ஆதரவான கூட்டணியை நாடுவதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?

அவருக்கு வேறு வழியில்லை எனச் சொல்ல முடியாது. அவரோடு நெருக்கமாக இருந்து வரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரை தன்னொடு அதிமுக அணிக்கு வருமாறு அழைத்ததாகவும், ஆனால் அந்த யோசனையை திருமாவளவன் ஏற்க மறுத்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. (காண்க தினத்தந்தி அல்லது: http://tinyurl.com/dlshad).

அதிமுக அணியில் ஏற்கனவே இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவையில் உள்ள மதிமுக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன. பாமகவும் அந்த அணிக்குப் போவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அந்தச் சூழ்நிலையில் விடுத்லைச் சிறுத்தைகளும் அந்த அணியில் இடம் பெற்றால், 'வரும் நடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசை வீழ்த்துவது என்ற பொது வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும். குறைந்த பட்சம் இலங்கைத் தமிழர் பிரசினையை முன்னிறுத்தி தாது அரசியல் எதிரியான காங்கிரசை விமர்சிக்க ஒரு வாய்ப்புக் கிட்டியிருக்கும். இப்போது அவர் காங்கிரசை விமர்சிக்க முடியாது மெளனம்தான் காக்க வேண்டும்.

இலங்கைப் பிரசினை குறித்து ஒரு பொதுக் கருத்தை உருவாக்கக் கிடைத்த வாய்ப்பைக் கை கழுவி விட்டு மெளனம் காக்கும் நிர்பந்தத்தை ஏன் திருமாவளவன் மேற்கொண்டார்?

ஒருவேளை இலங்கை பிரசினையில் அவரது நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதோ? ஈழத்தமிழர் விவகாரத்தில் ‘மத்திய அரசின் கொள்கையும் மாநில அரசின் கொள்கையும் ஒன்றுதான்’ என்று கருணாநிதி விளக்கமளித்த பின், 'ஈழத் தமிழர் விடுதலை ஆகிய கொள்கைத்தளங்களில் திமுகவுடன் உடன்பட்டு ஒன்றுபட்டு விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து குரல் கொடுப்போம்” என்கிறார் திருமாவளவன். அதாவது மத்திய அரசின் நிலைதான் தனது நிலை என மறைமுகமான வார்த்தைகளில் தெரிவிக்கிறாரோ?

தேர்தலில் இலங்கை பிரசினை பேசப்படாமல் இருப்பது திமுகவிற்கு சாதகமானது என்பதால் கருணாநிதி திருமாவளவனை இந்த முடிவுக்கு நிர்பந்தப்படுத்தி இருக்கலாம். ஆனால் இதே கருணாநிதி அரசால், இலங்கைப் பிரசினை தொடர்பான போராட்டத்தால் 26 விடுதலைச் சிறுத்தைகள் தேசியப் பாதுகாப்புச் சட்டம், குண்டர்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தனது தொண்டர்களைக் கைது செய்த அரசின் தலைவரையே ஆதரிக்க வேண்டிய கட்டாயம் என்ன?

விடுதலைச் சிறுத்தைகள், பாமக ஆகிய இரு கட்சிகளும் பிரிய நேர்ந்தால் அது இருகட்சிகளின் தொண்டர்களிடைய ஏற்பட்டுள்ள நல்லிணக்கத்தைப் பாதிக்கும் என செயற்குழுவில் கருத்துத் தெரிவிக்கப்பட்டதாக அந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்திருக்கிறார். நல்லிணக்கம் பலவீனப்பட்டு அதன் விளைவாக வன்முறையாக வெடிக்காமல் இருந்தால் நல்லது.

இரண்டு நாடாளுமன்ற இடங்களுக்காக 'எந்தக் காலத்திலும் மன்னிக்க முடியாத துரோகத்தை இரண்டு மாதங்களுக்குள் மன்னித்துப்பதற்கும், முத்துக்குமார் போன்ற இளைஞர்களின் தீக்குளிப்பை புறந்தள்ளவும், இலங்கைப் பிரசினையை ஓரங்கட்டவும் தயாராகிவிட்டார் திருமாவளவன். அந்த இரண்டு இடங்களில் அவர் ஒன்றில் போட்டியிடவும் போகிறார்.

""பத்து கோடி தமிழர்களின் உணர்வுகளை அவமதித்து விட்டு சிங்களர்களுக்கு முட்டுக்கொடுக்கும் இந்திய அரசின் துரோகப்போக்கை எந்தக்காலத்திலும் தமிழ்ச் சமூகத்தால் மன்னிக்க முடியாது" என்றெல்லாம் திருமாவளவன் முழங்கிய ஜனவரி மாதத்தில், இன்னும் சில மாதங்களில் நாடளுமன்றத் தேர்தல் வரப்போகிறது.என்பது திருமாவளவனுக்குத் தெரியாமல் இருந்திருக்காது. அன்று திமுக காங்கிரசை விட்டு விலகிவரும் சூழ்நிலை இல்லை. எனவே அன்று அப்படிப் பேசும் போதே இன்னும் சில நாள்களில் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டி வரும் என அவருக்குத் தெரிந்திருக்கும். தெரியவில்லை என்றால அவருக்குத் தொலைநோக்குப் பார்வையோடு சிந்திக்கும் திறமில்லை எனப் பொருள். தெரிந்தே பேசியிருந்தால் அது சந்தர்ப்பவாதம். குறைந்த பட்சம் மேடைக்கான நடிப்பு.

இவர் சினிமா நட்சத்திரங்கள் அரசியலுக்கு வருவதைப் பற்றி விமர்சிக்கிறார். இவர் சார்ந்திருக்கும் பேரவை கருணாநிதி இரட்டை வேடம் போடுகிறார் என விமர்சிக்கிறது!

'அடங்க மறு! அத்து மீறு! திமிறி எழு! திருப்பி அடி! என்றெல்லாம் இளைஞர்களை உசுப்பேற்றிவிட்டு தேர்தல் நேரத்தில் சிறுத்தைகள் பூனைகளாக மாறிப் போவதைக் கண்டு காலம் சிரிக்கிறது

( நன்றி: மாலன், தேர்தலின் திசைகள் )

Read More...

Friday, March 20, 2009

ஏன் கூட்டணி - விஜயகாந்த அறிக்கை

பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதில் எல்லா கட்சிகளும் மிகத் தீவிரமாக உள்ளது.
கொள்கை எல்லாம் அப்பறம் பார்த்துக்கொள்ளலாம் கூட்டணியை முதலில் முடிவு செய்யலாம் என்று களம் இறங்கிவிட்டார்கள்.

விஜயகாந்த் அறிக்கை கீழே...


பாமக, தேமுதிகவின் கண்ணாமூச்சி எல்லோருக்கும் தெரிந்தது. திமுக, அதிமுக இரண்டும் இவர்களை சேர்க்க சேர்க்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

பா.ம.க., தே.மு.தி.க. இரு கட்சிகளுக்கும் சரி சமமாக தலா 6 தொகுதிகளை கொடுக்க காங்கிரஸ் முன் வந்தது. பா.ம.க., தே.மு.தி.க. இரு கட்சிகளுக்கும் கொள்கை ரீதியாக உரசல் நிலவுவதால்(அப்படியா?), இரு கட்சிகளும் ஓரணியில் நிற்க தயங்குகிறது.

பா.ம.க.வை சேர்த்தால் கூட்டணிக்கு வர மாட்டோம் என்று தே.மு.தி.க. தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. அது போல பா.ம.க. தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிபந்தனையால் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கூட்டணி அமைப்பதில் இழுபறி நீடித்துவருகிறது. இந்த இழுபறி இந்த வாரத்துடன் முடிந்துவிடும் என்று நினைக்கிறேன்.


இந்த நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் சேர பா.ம.க. முடிவு செய்து இருப்பது தெரிய வந்தது. பா.ம.க. வுக்கு 7 தொகுதிகளை கொடுக்க அ.தி.மு.க. சம்மதித்துள்ளதாக தெரிகிறது. இன்னும் சில தினங்களில் இது பற்றி அதிகாரப்பூர்வமாக தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பா.ம.க. திடீரென தன் நிலையில் இருந்து மாறியதால், காங்கிரஸ் மேலிடத்தலைவர்கள் நேற்று தே.மு.தி.க.வை அதிகாரப்பூர்வ கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த அழைத்தனர். இதை ஏற்று தே.மு.தி.க. மூத்த தலைவர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், சுதீஷ் இருவரும் நேற்று டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றனர். அதற்கு முன்பு நேற்று மாலை அவர்கள் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவை சந்தித்துப்பேசினார்கள்.

இன்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் அகமதுபடேல் மற்றும் குலாம் நபி ஆசாத்தை பண்ருட்டி ராமச்சந்திரன், சுதீஷ் இருவரும் சந்தித்து தொகுதிப்பங்கீடு பேச்சு நடத்துகிறார்கள். தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய காங்கிரஸ் கட்சி தயாராக இருப்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தே.மு.தி.க. வினர் 8 முதல் 10 தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறார்கள். ஓரிரு தொகுதிகள் குறைந்தாலும் காங்கிரசுடன் அனுசரித்து செல்ல தே.மு.தி.க. விரும்புவதாக கூறப்படுகிறது. எனவே காங்கிரஸ்-தே.மு.தி.க. தலைவர்கள் இன்று ஒரு முடிவுக்கு வந்து விடுவார்கள் என்று தெரிகிறது. தே.மு.தி.க. வினர் கோவை, வேலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளை காங்கிரசிடம் விடாப்பிடியாக கேட்பதாக தெரிய வந்துள்ளது. இந்த தொகுதிகள் அனைத்தும் தி.மு.க., மற்றும் காங்கிரசுக்கு சாதகமான தொகுதிகளாகும். தே.மு.தி.க.வின் இந்த தொகுதி வேட்டை தி.மு.க. தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. என்றாலும் சில தொகுதிகளை விட்டுக்கொடுப்பதன் மூலம் பிரச்சினை தீர்க்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. காங்கிரஸ் - தே.மு.தி.க. இடையில் நாளை (சனி) உடன்பாடு வரும் என்று தெரிகிறது.

காய்கறி வியாபாரம் நடத்திய பின் இவர்கள் சென்னை வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறார்கள்.


டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்துப்பேசி தொகுதி உடன்பாட்டில் விஜயகாந்த் கையெழுத்திடுவார் என்று செய்திகள் வருகிறது.

அதற்கு பின் விஜயகாந்த் இந்த அறிக்கையை வாசிப்பார்:( சும்மா ஒரு கற்பனை தாங்க )

கட்சியின் கொள்கை அளவில் நாங்கள் வித்தியாசமானவர்கள் என்பதை ஏற்கனவே நிருபித்து விட்டோம். மக்கள் தொண்டில் நாங்கள் வித்தியாசமானவர்கள் என்பதை நிரூபிக்கும் பொருட்டு இந்த பாராளுமன்ற தேர்தலை ஒரு வாய்ப்பாக கொண்டு, சில தொகுதிகளையாவது வெற்றி பெற்று மக்கள் தொண்டாற்ற வேண்டும் என்கின்றக் காரணத்தால் இம்முறை கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளோம். ஏற்கனவே நாம் அறிவித்தது போல் நமக்கு நாடாளுமன்ற தேர்தல் முக்கியமல்ல சட்ட மன்ற தேர்தல்தான் இலக்கு, என்பதை உணந்து இந்த கூட்டணியில் போட்டியிடுகிறோம். மற்றபடி எங்கள் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. மத்திய அரசு ஆட்சி அமைத்த பின்பு இலங்கை தமிழர்களுக்கு பாராளுமன்றத்தில் நாங்கள் குரல் கொடுப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டின் சார்பில் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களே முதலமைச்சராக இருக்கிறார். இந்திய அரசையும் அவர் வழிநடத்துகிறார். அவருக்குத் துணையாக இப்போது நானும் இருப்பேன்


சைடுல ஓட்டு பெட்டி இருக்கு மறக்காம போடுங்க

Read More...

விகடன் மெகா சர்வே முடிவுகள்!


என்ற தலைப்புடன் வந்த கட்டுரை கீழே...

இது தேர்தல் சீஸன்!

அதிகாரம் யாருக்கு என்பதுதான் எல்லாத் தேர்தல்களும் தீர்மானிப்பது. மக்களின் விருப் பங்கள் என்ன என்று தெளிவு பெற விகடன் எடுத்தது மெகா சர்வே.

அதுவும் வாக்குச் சாவடிக்கு வலது காலை முதல் தடவையாக எடுத்துவைக்கும் இளம் தலைமுறை என்ன நினைக்கிறது என்பதை அறிந்துகொள்ள விரும்பினோம்.

'இளைஞர் ஓட்டு யாருக்கு?' என்ற கேள்வியே ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். அதுதான் முதல் மெகா சர்வேயின் அடித்தளம். அரசியல் மேடைக்கு இந்தத் தலைமுறை முதல் முத்தம் வைப்பதற்கு முன்னால் அவர்களின் ஆசைகள், கோபங்கள், விருப்பங்கள் பற்றித் தெரிந்துகொள்வதற்கு ஏற்ற மாதிரியான கேள்வி கள் தயாரிக்கப்பட்டன. வாக்களிக்கும் வயது 18 என்பதால் கேள்விகளும் 18.

'உங்களிடம் வாக்கு கேட்டு நிற்கும் மனிதரிடம் முதல் தகுதியாக என்ன எதிர்பார்ப்பீர்கள்?' என்பதில் ஆரம்பித்து, 'அடுத்த பிரதமராக வரப் போவது யார்?' என்பதில் முடிகின்றனகேள்வி கள். தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்ற நமது டீம், 18 வயதைத் தாண்டிய கல்லூரி மாணவ-மாணவியர், வேலை பார்க்கும் இளைஞர்கள், வேலைக்குக் காத்திருப்போர், விவசாயி கள், தொழிலாளர்கள் என இளவட்டங்களாகப் பார்த்து கேள்வித் தாள்களை நீட்டினோம்.

'இன்றைய இளைஞர்களுக்கு அரசியலில் அக்கறை இல்லை. நாட்டில் என்ன நடக்கிறது என்ற கவலையே இல்லை. காலேஜ், சினிமா... இரண்டைத் தாண்டி எதுவுமே தெரியாது' என்று பெருசுகள் உதிர்க்கும் அவச் சொற்கள் அத்தனையும் பொய். ஐந்தாவது கேள்விக்கான பதில்களில் 'ஓட்டுக்குத் துட்டு கொடுக்கும் அரசியல் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்கிற பதிலை ஏன் சேர்க்கலை?' என்று மதுரை கல்லூரி மாணவி ஒருவர் கேட்டார். நம் இளைஞர்களுக்கு அரசியல் ஆர்வம் மட்டுமல்ல, அக்கறையும் அதைத் தாண்டிய தீர்க்கமான முடிவுகளும் இருக்கின்றன என்பதுதான் விகடன் கண்டுபிடித்த முதல் ரிசல்ட். தமிழ் இளைஞர்களுக்கு ஒரு சபாஷ்!

''இளைஞர்களுக்கு அரசியல் அறிவு இல்லாததால்தான் நல்ல தலைவர்கள் உருவாவது தடைப்பட்டது'' என்று பெரியகுளம் ஜெயராஜ் கலைக் கல்லூரி மாணவர் முருகன் காரணம் சொன்னார். கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவி உமா கௌரி அடித்த காமென்ட்டுகள் விறுவிறுப்பானவை. ''ஓட்டுப் போடவே எரிச்சலா இருக்கு. ஆனா, ஓட்டுதான் அரசியல் மாற்றத்துக்கான ஒரே ஆயுதம் என்பதால் நிச்சயம் வாக்களிப்பேன். அரசியல் இன்று வியாபாரமாக ஆகிவிட்டது. அதை மாற்றக்கூடியவர்கள் இளைஞர் படைதான்'' என்று கொட்டித் தீர்த்தார்.

அரசியல்வாதிகள் மீது இளைஞர்களுக்கு இருக்கும் கோபங்களை அதிகமாகப் பார்க்க முடிந்தது. 'தேர்தலுக்குச் செலவழிப்பதற்குப் பதில், தங்களுக்குள் பேசி முடிவெடுத்து ஆறு மாதங்களுக்கு ஒருவர் என்று சுரண்டித் தின்ன வேண்டியதுதானே?'' என்று கொதித்தார் திருவாரூர் ராஜா என்ற மாணவர்.

ஊழல் அரசியலுக்கு எதிராகவும், லஞ்சம் வாங்கிச் சொத்து குவிப்பதை அருவருப்பாகவும் இன்றைய இளைஞர்கள் நினைப்பது நம்பிக்கை தருவதாக இருந்தது.

இன்று தமிழ்நாட்டில் சூடான பிரச்னையாக விவாதிக்கப்பட்டு வருவது இலங்கை விவகாரம். இது குறித்துஇளைஞர் களுக்குக் கவலைகள் அதிகம் இருக்கின்றன. 'எந்தக் கட்சியும் இலங்கைத் தமிழர்களுக்குச் சரியான நம்பிக்கையைத் தர வில்லை' என்கிறார்கள். 'நிச்சயமாக இலங்கைப் பிரச்னை, காங்கிரஸையும் அதோடு ஒட்டி உறவாடும் கட்சிகளையும் பாதிக்கும்'' என்று ஆவேசப்பட்டவர் திருவாரூரைச் சேர்ந்த சதீஷ்குமார். 'இலங்கைத் தமிழருக்காக இதுவரை எதுவும் செய்யாம, இப்ப திடீர்னு உண்ணாவிரதம் உட்கார்றாங்களே. ஏன் இந்த திடீர் கரிசனம்?' என்று கிண்டலடித்தார் அதே ஊரைச் சேர்ந்த உதயா என்ற மாணவி. ஓட்டுக்காக அரசியல்வாதிகள் இந்தப் பிரச்னையை உருட்டிக்கொண்டு இருப்பதை இளைஞர்கள் உணர்ந்துள்ளார்கள்.

எந்தக் கூட்டணியிலும் சேர மாட்டேன் என்று விஜயகாந்த் சொல்லி வந்தாலும், அவர் எதாவது ஒரு கூட்டணியில் நிச்சயம் சேருவார் என்ற சந்தேகம் பலரிடமும் இருக்கிறது. ''தனியாப் போட்டியிட்டால்தான் அவருக்கான உண்மையான செல்வாக்கு என்ன என்பது அவருக்கே தெரியும்'' என்று ராமநாதபுரத்தில் ஒரு மாணவி சொல்ல, அவருடன் இருந்த தோழி, ''அப்படி அவரு போட்டியிட்டா நிச்சயம் எல்லாத் தொகுதியிலயும் டெபாசிட் போகும். அதைப் பார்த்தாவது புதுசா யாரும் கட்சி ஆரம்பிக்க மாட்டாங்க'' என்று அதிர்ச்சி ஊட்டினார்.

யார் பிரதமராக வர வேண்டும் என்ற கேள்விக்கு மன்மோகனும் அத்வானியும்தான் இளைஞர்களின் சாய்ஸாக இருந்தது. மாயாவதியில் ஆரம்பித்து ஜே.கே.ரித்தீஷ் வரை தங்களுக்குப் பிடித்த ஆட்கள் பெயரைச் சொல்லி காமெடி பண்ணவும் தவறவில்லை. அக்கறையுள்ள இந்தியன், நேர்மை யானவர், நாட்டுப்பற்றுள்ளவர் பிரதமராக வர வேண்டும் என்பது பலரது ஆசை.

விகடன் டீம் சந்தித்தது மொத்தம் 2,301 இளைஞர்களை. அவர்களிடம் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள் மகத்தான செய்திகளை நாட்டுக்கு அறிவிப்பதாக அமைந்துள்ளன. யாரு டைய தாக்கமும் இல்லாமல் சுய முடிவுப்படிதான் நாங்கள் வாக்களிப்போம் என்று இளைஞர்கள் சொன்னது நம்பிக்கை யாக இருந்தது. தனது பிரதிநிதியாக சட்டமன்ற, நாடாளு மன்றத்தில் இருப்பவர் படித்தவரா, உள்ளூர்க்காரராஎன்பதை விட, ஊழலற்ற மனிதரா என்பதே முக்கியம் என்கிறார்கள். சாதி அரசியலை வெறுக்கும் இளைஞர்கள், ஓட்டைத் துட்டுக்கு விற்கும் செயலைக் கொடும் குற்றமாகக் கருது கிறார்கள். ஓர் அரசியல் தலைவரின் வாரிசு தகுதியானவராக இருந்தால், அவரை அரசியலுக்குக் கொண்டுவருவது தவறல்ல என்றும் கருதுகிறார்கள் இளைஞர்கள். அரசியல்வாதிகள் மீது எல்லாக் கோபங்களும் வைத்திருக்கும் இளைஞர்கள் வாக்களிப்பது அவரவர் விருப்பம் என்று சொல்லி அதிர்ச்சி ஊட்டுகிறார்கள். ஓட்டுப் போடு என்று கட்டாயப்படுத்துவதை விரும்பவில்லை. அரசாங்கம் வழங்கும் சலுகைகளை ரத்து செய்யலாம் என்றும் பலர் வாக்களித்துள்ளார்கள்.

கல்லூரிகளுக்குள் அரசியல் புகுவதை இவர்கள் விரும்பவில்லை. தேர்தல் ஆணையத்துக்குள் அரசியல் புகுந்து, நடுநிலையான அமைப்பைச் சிதைத்து வருவதை வேதனையுடன் பார்க்கிறார்கள். ஈழப் பிரச்னையில் கருணாநிதியின் அணுகுமுறை தமிழினத் துரோகம் என்று முகத்தில் அடிப்பது மாதிரி தீர்ப்பளித்துள்ள இளைஞர்கள், ஜெயலலிதாவின் உண்ணாவிரதத்தையும் பச்சையான சந்தர்ப்பவாதம் என்று கண்டிக்கிறார்கள்.

மதத் தீவிரவாதத்தை எதிர்த்துப் பேசுவதில் இளைஞர்கள் ஓட்டை இடதுசாரிகளால் மட்டுமே பெற முடிந்திருக்கிறது. பெண்களுக்கு அ.தி.மு.க-தான் அதிக முக்கியத்துவம் தருவதாக இவர்கள் சொல்கிறார்கள்.

'வாய்ப்புக் கிடைத்தால் அரசியலில் ஈடுபட விருப்பமா?' என்ற கேள்விக்கு, 'எதிர்பார்க்கும் மாற்றம் நிகழ்ந்தால் நிச்சயமாக வருவேன்' என்று 2,301 பேரில் 1,141 பேர் சொன்னார்கள்.

எல்லா இரவும் விடியும் என்பதே நம்பிக்கை!


Read More...

ஐ.பி.எல். கிரிக்கெட் 'விஷப்பரீட்சை’ - கலைஞர்

கருணாநிதி ஐ.பி.எல். கிரிக்கெட் 'விஷப்பரீட்சை' வேண்டாம் என்று ஏன் சொன்னார் ?

கலைஞர் : என்ன அன்பு (தயாநிதி மாறன்), இந்த IPL அப்படின்னு ஒரு கலை நிகழ்ச்சி நடத்துறாங்களாமே! அதைத் தன்னால பார்க்க வர முடியாதுன்னு சிதம்பரம் சொல்லியிருக்கானேப்பா! அவ்வளவு ரசனை இல்லாத ஆளா இந்தச் சிதம்பரம்?

தயாநிதி மாறன் : அய்யோ தாத்தா! அது நமீதா ஆடி, நீங்க பார்க்குற கலை நிகழ்ச்சி இல்லை. நம்ம நாட்டு கிரிக்கெட் வீரர்கள், கூடவே வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களும் சேர்ந்து ஆடுற ஒரு கிரிக்கெட் டோர்னமெண்ட். வேணும்னா நீங்க பார்க்குற மாதிரி ஒரே ஒரு விஷயம்தான் இருக்கு. Cheerleader என்கிற நடனப் பெண்கள். அவ்ளோதான்.

கலைஞர் : ஓ.. கபில்தேவ் நடத்துறாரே, அந்தப் போட்டியா?

தயாநிதி மாறன் : அய்யோ இல்லை. இதையெல்லாம் இப்போ என்னால தெளிவா விளக்க முடியாது தாத்தா. நீங்க ஆரம்பத்தில கேட்ட கேள்விக்கு பதில் சொல்றேன். சிதம்பரம் அதை பார்க்க வர மாட்டேன்னு சொல்லல. தேர்தல் நேரத்துல இதை நடத்துறதுனால இதுக்குப் பாதுகாப்பு தர முடியாதுன்னு மட்டும்தான் சொல்லியிருக்காரு.

கலைஞர் : சென்னையிலும் இது நடக்குதா?

தயாநிதி மாறன் : ஆமாம் தாத்தா.

கலைஞர் : அப்போ பரிசு குடுக்க நம்மளையும் கூப்பிடுவாங்க இல்ல?

தயாநிதி மாறன் : அய்யய்யோ தாத்தா.. ஏன் இப்படி புரியாம பேசுறீங்க? அண்ணன் மட்டும் இதைக் கேட்டா இன்னொரு கருத்துக் கணிப்புக்கு ஏற்பாடு பண்ணிடுவாரு. பேசாம நான் சொல்ற மாதிரி அறிக்கை விடுங்க.

கலைஞர் : என்ன சொல்லணும்னு சொல்லு. ஸ்டாலின்கிட்டயும் அழகிரிகிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுட்டு அறிக்கை விட்டுடறேன். கனிமொழி தன்னைக் கண்டுக்கறதில்லைன்னு அழுவுது. அதுகிட்டயும்கூட ஒரு வார்த்தை கேட்டுட்டே அறிக்கையை விடறேன்.

தயாநிதி மாறன் : இந்தப் போட்டி கிட்டத்தட்ட ஒரு மாசம் நடக்கும். சம்மர் ஹாலிடேய்ஸ்ல.. அதுவும் ப்ரைம் டைம்ல. யோசிச்சிப் பாருங்க. எவனாவது நம்மோட சேனல்களைப் பார்ப்பானா? டி.ஆர்.பி என்னாறது? வருமானம் கண்டிப்பா அடி வாங்கிடும்.

கலைஞர் : அச்சச்சோ.. தம்பி சண்முகநாதா.. இந்தா எழுதிக்கோ.. “உடன் பிறப்பே! சிந்தித்துப்பார். ஏதோ cheers சொல்லும் leaders நமது குழந்தைகளின் மனதைக் கெடுக்கப் போகிறார்களாம். அதுவும் நமது சொந்தங்கள் இலங்கையில் உயிருக்காகவும் உரிமைக்காகவும் போராடும்போது இந்தக் களியாட்டங்கள் நமக்குத் தேவைதானா?”. இப்படி ஒரு அறிக்கை விட்டுடட்டா..

தயாநிதி மாறன் : கிழிஞ்சது. வேற வினையே வேணாம். உங்க சேனல்கள்ல மட்டும் என்னத்தைக் காட்டுறீங்க? அதை மூடுங்கடா மொதல்லன்னு அவனவன் பதில் அறிக்கை விட ஆரம்பிச்சிடுவான். பேசாம அண்ணன் எழுதிக் கொடுத்ததை அப்படியே அறிக்கையா விட்டுடுங்க.

கலைஞர் : புகழ்(கலாநிதி) என்ன எழுதிக் கொடுத்திருக்கான்?

தயாநிதி மாறன் : படிக்கிறேன். கேளுங்க.

"உலகப் புகழ் பெற்ற விளையாட்டு வீரர்களின் உயிர்கள் மட்டுமல்ல, அதைக் காணவரும் லட்சக்கணக்கான பொதுமக்களின் உயிர்களும் பாதுகாக்கப்பட வேண்டியவையே. இதற்கிடையே பாராளுமன்றத்துக்கான பொதுத்தேர்தலும் நடைபெறுகிறது. அகில இந்திய அளவில் அந்த கிரிக்கெட் போட்டியை ஒரு மாதத்துக்குத் தள்ளி வைத்து நடத்துவதால் எந்த நட்டமும் யாருக்கும் ஏற்பட்டுவிடாது. அந்தந்த மாநில காவல்துறை தலைவரிடமிருந்து பாதுகாப்புக்கான ஒப்புதலைப் பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய உள்துறை அமை‌ச்ச‌ர் தெரிவித்திருந்தாலும், என்னைப் பொருத்தவரையில் அச்சுறுத்தல் இருக்கும்போது மாநிலங்கள் மாத்திரமல்ல, இந்திய நாட்டளவிலேயே இதுபோன்ற விஷப் ப‌‌ரீட்சைகளில் ஈடுபடக்கூடாது என்பதே என் கருத்தாகும். 'ஒன்று நடைபெற்ற பிறகு வருந்துவதைவிட, அது நடைபெறாமல் தடுப்பதே சாலச் சிறந்ததாகும்,' இதுதான் அண்ணா எனக்குச் சொல்லிக்கொடுத்த மந்திரம் ஆகும்."

- மிளகாய் பொடி

Read More...

பாமக அதிமுகவுடன் கூட்டணி, திருமா மறுப்பு

ராமதாஸ் அம்மா பக்கம் வந்துவிட்டார் என்று தெரிகிறது. ”வாங்க நாம இரண்டு பேரும் சேந்து பழகலாம்” என்று திருமாவிற்கு விடுத்த அழைப்பை அவர் ஏற்க்கவில்லை என்று செய்திகள் வருகிறது.

அதே போல் தேமுதிக காங்கிரஸ் பக்கம் செல்லும் என்று தெரிகிறது.


பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று இரவு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுடன் டெலிபோன் மூலம் பேசியதாக கூறப்படுகிறது.
அப்போது ``நாங்கள் அ.தி.மு.க. கூட்டணிக்கு செல்கிறோம். நீங்களும் எங்களோடு வாருங்கள். நாம் இருவரும் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து விடுவோம்'' என்று டாக்டர் ராமதாஸ், திருமாவளவனை அழைத்ததாக தெரிகிறது. ஆனால் திருமாவளவனோ, இந்த அழைப்பை முழுமையாக மறுத்துவிட்டார். ``நான் அ.தி.மு.க. கூட்டணிக்கு வர முடியாது. உறுதியாக தி.மு.க. கூட்டணியில் தான் இருப்பேன். முதல்-அமைச்சர் கருணாநிதியுடன் தான் இரு�பேன்'' என்று கூறி மறுத்துவிட்டார்.``இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் நாம் இருவரும் எப்படி ஒன்றாக இருக்கிறோமோ, அதேபோல அ.தி.மு.க. கூட்டணியிலும் நாம் ஒன்று சேர்ந்துவிட்டால் நன்றாக இருக்குமே'' என்று டாக்டர் ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தியள்ளதாக தெரிகிறது.

பா.ம.க.வைப் பொறுத்தவரை, எந்த அணியில் சேருவது என்ற விஷயத்தில்,
மூத்த டாக்டர் (ராமதாஸ்) அ.தி.மு.க. அணியில் சேருவதற்கும், இளைய டாக்டர் (அன்புமணி) தி.மு.க. அணியில் சேருவதற்கும் ஆதரவான கருத்துடையவர்களாக இருப்பதால், முடிவெடுப்பதில் தடுமாற்றமும், தாமதமும் ஏற்பட்டு வந்தது. தற்போது அந்த குழப்பம் தீர்ந்துவிட்டது என்று தெரிகிறது.வைகோ பேட்டி
கேள்வி- பா.ம.க. உங்கள் அணிக்கு (அ.தி.மு.க. கூட்டணி) வர வாய்ப்பு உள்ளதா? பதில்- வாய்ப்பு உள்ளது. வரக்கூடிய செய்திகள், வாய்ப்பு உள்ளதாகத்தான் தெரிகின்றன.

கேள்வி - தே.மு.தி.க.வும் உங்கள் கூட்டணியில் இடம்பெறுமா? பதில்- அதற்கான முயற்சிகள் எந்த அளவில் உள்ளன என்று தெரியவில்லை.


"காங்கிரஸ் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் கூட்டணி பற்றி பேசி வருவதால், வரும் 21-ந் தேதி அன்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவார்'' - பண்ருட்டி ராமச்சந்திரன்( டெல்லியிலிருந்து)

கோவை, கள்ளக்குறிச்சி, வேலூர், கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளை ஒதுக்கும்படி கேட்டதாக தெரிகிறது.

இந்த தொகுதிகள் காங்கிரசுக்கு சாதகமான தொகுதிகள் என்பதால் அவற்றை விட்டுக்கொடுக்க காங்கிரஸ் தயாராக இல்லை. இதன் காரணமாக கூட்டணி இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டு இருப்பதாக சொல்லுகிறார்கள்

Ever Green Cartoon - Mathy

Read More...

Thursday, March 19, 2009

தேர்தல் 2009 - தமிழக கூட்டணி குழப்பங்கள்

இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக என்று இரண்டு கூட்டணி இருந்தாலும், ராமதாஸும், விஜயகாந்தும் எந்தக் கூட்டணிக்குப் போவார்கள் என்று மக்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள். எனக்கு இவர்கள் ஏற்படுத்தி வரும் தாமதம் கூட ஒரு வித ஸ்டண்ட் மாதிரிதான் தெரிகிறது.விஜயகாந்த் தனித்து நின்றால் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை, ஆனால் ராமதாஸ் நிச்சயம் தனித்து நிற்க அவரிடம் தைரியம் கிடையாது. அப்படி நின்றால் டிரவுசர் கிழியும் என்பது அவர்கள்வீட்டு சின்னக் குழந்தைக்குக் கூட தெரியும். கடவுள் என் முன் தோன்றி வரம் ஏதாவது கொடுத்தால் - இந்தக் கட்சியும், திருமாவளவன் கட்சியும் தமிழ்நாட்டில் வளரவே கூடாது என்று கேட்பேன்.

இவர்கள் செய்யும் இந்தத் தாமதத்தால்தான் திமுக, அதிமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகள் தங்கள் தொகுதிகள் பற்றிய விவரங்களை அறிவிக்க முடியாமல் திண்டாடுகிறார்கள்.

திமுக கூட்டணியில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

கே: திமுக, காங்கிரஸ் கூட்டணி இறுதி செய்யப்பட்டு விட்டதா?
ப: இறுதி என்று சொல்லாதீர்கள். உறுதி செய்யப்பட்டு விட்டது. இது கலைஞர் சில நாட்கள் முன்பு அளித்த பேட்டி.இப்படித்தான் வேடிக்கையாக கலைஞர் பதில் சொல்லி சமாளிக்கிறார். மற்றபடி விஜயகாந்த் ராமதாஸ் செய்யும் தாமதத்தில் கலைஞருக்கு நிறைய நேரக்கெடு கிடைக்கிறது. டைரி எழுதுகிறார், ஜெயலலிதா அறிக்கைக்கு பதில் மேல் பதில் அளிக்கிறார். நிச்சயம் கலைஞர் விஜயகாந்துடன் கூட்டணி வைக்க விரும்ப மாட்டார். விஜயகாந்த் ஜெயலலிதாவை விட இவரைத்தான் நிறைய போட்டு வாங்கியுள்ளார். ஆனால் காங்கிரஸ் மேலிடம் விஜயகாந்தை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்கிறது.

எப்படி திமுகவும் அதிமுகவும் பரம எதிகளாக இருக்கிறார்களோ அதே போலதான் இப்போது பா.ம.கவும் தேமுதிகவும். பா.ம.க இருக்கும் அணியில் தேமுதிக இருக்காது.

இந்த கேள்வி பதிலைப் பாருங்கள்..

கே: பாமகவிடமிருந்து கூட்டணியில் சேர்வது பற்றி ஏதாவது செய்தி வந்ததா?
ப: அவர்கள் இதுவரை என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை.


இதற்கு ராமதாஸ் கூட்டணியில் இருக்கிறாரா இல்லையா என்று பதில் சொல்லுவார் என்று எதிர்ப்பார்த்திருப்பார். ஆனால் ராமதாஸ் இதே மாதிரி ஒரு பதிலை சொல்லி மேலும் குழப்பதை உண்டு பண்ணினார்.

காங்கிரஸ் உடனே பா.ம.க இந்தக் கூட்டணியில்தான் இருக்கிறது என்று ஓர் அறிக்கை விட்டார்கள்.

"சாதி ஒழிப்பு, தீண்டாமை எதிர்ப்பு, சமத்துவக் கொள்கை, பொதுவுடைமை" என்ற காரணங்களுக்காக திருமாவளவன் திமுக கூட்டணியில் இருக்கிறார் என்று அவரைச் சந்தித்த பிறகு திருமாவளவன் அறிக்கை விட்டார். இதை யாரும் எதிர்க்க மாட்டார்கள்.

"விடுதலை சிறுத்தைகள் இருக்கும் அணியில்தான் பா.ம.க. இருக்கும் என்று அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஏற்கனவே அறிவித்து இருக்கிறார்," என்று திருமாவளவன் மேலும் ஒரு போடு போட்டார். திமுகவே திருமாவை அப்படிச் சொல்லச் சொல்லியிருப்பார்கள் என்று தோன்றுகிறது.

இந்த உசுப்பலுக்கும் ராமதாஸிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

காங்கிரஸ் கட்சியில் உப்பு போட்டு சாப்பிடும் ஞானசேகரன், "தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் நீடிப்பதில் எந்தப் பிரச்சினையும் இருக்க வாய்ப்பில்லை என கருணாநிதி அறிவித்து காங்கிரஸ் கட்சியினரை அவமானப்படுத்தி விட்டார். திருமாவளவன் உள்ள கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெறக்கூடாது. 'ராஜீவைக் கொலை செய்ததில் தவறில்லை' எனப் பேசியவர்களுடன் எப்படி கூட்டணி வைத்துக் கொள்ள முடியும்? காங்கிரஸ் கட்சியை ஒழிக்க சூளுரைத்த திருமாவளவனுடன் எவ்வாறு கூட்டணி வைத்துக் கொள்ள முடியும்? திருமாவளவனுடன் கூட்டணி வைப்பதை விட, தமிழகத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும்" என்று இன்று பேசியுள்ளார்.


அதிமுக கூட்டணியில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது. வைகோ உயர்மட்டக் குழு பேச்சுவார்த்தை என்று சொல்வது நல்ல தமாஷ். ஜெயிடம் உயர்மட்டக் குழு போனால் திரும்பி வரும் போது உயர்(உயிர்?) மட்டமான குழுவாகதான் வெளியே வரும்.

கேள்வி: இலங்கைப் பிரச்சினையை மையமாக வைத்து தேர்தலில் ஈடுபடும் அனைத்துக் கட்சிகளும் தோல்வியடையும் என்று தங்கபாலு கூறியுள்ளாரே?
பதில்:- "தங்கபாலு என்று யாராவது அரசியலில் இருக்கிறார்களா? எனக்கு அவரைத் தெரியாது," என்று இன்று வைகோ பேசியுள்ளார்.


விஜயகாந்த் அந்தரத்தில் சுழன்று திவிரவாதிகளை தன் இடது காலால் உதைத்து அவன் கதையை முடிப்பார். ஆனால் அரசியலில் அவரால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. இவர் தனித்துப் போட்டி என்று அடிக்கடி தன் பேட்டியில் சொல்லிவிட்டார், அதை மீற முடியாமல் தவிக்கிறார் என்று தெரிகிறது. முதல் தடவைதான் அப்படி இருக்கும் போகப் போக இந்த மாதிரி மீறுவதுதான் அரசியல் என்று அவர் புரிந்துக்கொள்வார். தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற எண்ணம்தான் விஜயகாந்துக்கும் அவர் தொண்டர்களுக்கும் இருக்கிறது ஆனால் குடும்பமோ கூட்டணி வேண்டும் என்கிறது. குடும்பம் பெரிதா கட்சி பெரிதா கட்சியில் குடும்பத்தின் சொல் பெரிதா என்று இவர் திமுகவிடம் கேட்டுத் தெரிந்துக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது.

சரத்குமாருடன் பேச்சு வார்த்தை என்று செய்தி வரும் அளவிற்கு பா.ஜ.கவின் நிலைமைதான் ரொம்ப மோசம். இந்த அழகில் இல.கணேசன் விஜயகாந்த் பற்றி இப்படிச் சொல்லுகிறார்:

"விஜய்காந்த் ஐந்து வித நிலைப்பாட்டில் குழம்பி இருக்கிறார். காங்கிரடன் கூட்டணியா? அதிமுக கூட்டணியா?, தனித்து போட்டியிடுவதா?, தேர்தலைப் புறக்கணிப்பதா?, பாஜகவுடன் கூட்டணி அமைப்பதா? என்று ஐந்து விதமான குழப்பத்தில் இருக்கிறார்" இவருக்கு இதற்காகவே டாக்டர் பட்டம் கொடுக்கலாம்.

தற்போது பண்ருட்டி ராமச்சந்திரன், சுதீஷ் ஆகியோர் டெல்லிக்குப் புறப்பட்டு சென்றுள்ளனர். கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த எல்லாம் இருக்காது. அநேகமாக டெல்லியில் எவ்வளவு வெயில் என்று பார்க்கப் போயிருப்பார்கள்.

இந்த வாரம் இல்லையென்றால் அடுத்த வாரத்திற்குள் திமுக, அதிமுக தங்கள் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்துவிட வேண்டும். அப்போதுதானே உடனடியாக தொகுதிகளுக்குச் சென்று வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப் படுத்த முடியும். அப்புறம் ஐந்துவருஷங்களுக்கு அந்தப்பக்கம் தலைக்காட்டாமல் இருக்கலாம்; தன்னோடு இல்லாமல் தலைமுறை நான்கும் உட்கார்ந்து சாப்பிடலாம்.

Read More...

Wednesday, March 18, 2009

தமிழ் நாட்டில் இருக்கும் ஒரே ஆம்பளை

உயர்நீதிமன்ற வக்கீல்கள் அனுமதி இல்லாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்த பொது நல சேவகர் டிராபிக் ராமசாமியை வக்கீல்கள் அடித்து உதைத்தனர். இதையடுத்து அவர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.....

சென்னை உயர்நீதிமன்றம் அருகே பெரிய பந்தலைப் போட்டு கடந்த 20 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள் வக்கீல்கள்.

இந்த நிலையில் டிராபிக் ராமசாமி ஒரு பொது நலன் மனுவைத் தாக்கல் செய்தார். அதில், போராட்டம் நடத்துவதற்கு அனுமதிக்கப்படாத இடத்தில் அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்து வரும் வக்கீல்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பதற்கு போலீசார் பதில் அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் ஆஜரவாதற்காக ராமசாமி கோர்ட்டுக்கு வந்தார்.

அப்போது வக்கீல்கள் சிலர் அவரைச் சூழ்ந்து கொண்டனர். ஒருவர் ராமசாமியைத் தாக்கினார். அவர்களிடமிருந்து ஒரு வழியாக மீண்ட ராமசாமி, நேராக போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணனுக்கு ஒரு புகார் தந்தி அனுப்பினார்.

அதன் பேரில் விசாரணை நடத்த ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

தான் தாக்கப்பட்டது குறித்து டிராபிக் ராமசாமி கூறுகையில்,

வழக்கு விசாரணைக்காக உயர்நீதிமன்றத்திற்கு வந்தேன். ஒரு பத்து பேர் என்னை சூழ்ந்து கொண்டனர். ஒருவர் எனது முதுகில் அடித்தார். பின்னர் ஒரு வக்கீல் பைக்கைக் கொண்டு என் மீது மோத வந்தார்.

இதுகுறித்து தலைமை நீதிபதி, போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கும் புகார் தந்தி அனுப்பியுள்ளேன். என்னைத் தாக்கிய பத்து வக்கீல்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் டிராபிக் ராமசாமி.

பொது நல சேவகரான டிராபிக் ராமசாமி பல்வேறு பொது நலன் மனுக்களைப் போட்டு பல முக்கிய உத்தரவுகளை உயர்நீதிமன்றத்தின் மூலம் வாங்கியவர்.

கட்டாய ஹெல்மட் உள்பட பல முக்கிய வழக்குகளைத் தொடர்ந்தவர் இவரே. இவர் வக்கீல் வைத்து வாதாட மாட்டார். தானே வாதாடுவார். கை நிறைய பேப்பரும், பை நிறைய பேனாக்களுமாக காணப்படுவார்.

பலமுறை இவர் பலரால் தாக்கப்பட்டுள்ளார். உச்சகட்டமாக சமீபத்தில் வீடு புகுந்து இவரை சிலர் அடித்து உதைத்தனர். சமீபத்தில் போலீஸாரும் இவரை திடீரெனக் கைது செய்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

இந்த நிலையில் உயர்நீதிமன்ற வக்கீல்கள் இவரைத் தாக்கியுள்ளனர்.

( தட்ஸ் தமிழ் )
டிராபிக் ராமசாமிக்கு ஒரு பெரிய நன்றி.
மற்றவர்களுக்கு வழக்கம் போல் குப்பைத் தொட்டி3-வது நாளாக கோர்ட்டுகளில் பொதுமக்களே ஆஜரானார்கள், வாதாடினார்

வக்கீல்கள் போராட்டம் காரணமாக கோர்ட்டு நட வடிக்கைகள் முடங்கின. லட்சக்கணக்கான வழக்கு கள் தேங்கின. இதனால் வழக்குத் தொடுத்த பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து தகுதி அடிப்படையில் வழக்குகள் விசாரிக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு பதிவுத் துறை அறிவித்தது. அதன்படி நேற்று முன்தினம் முதல் கோர்ட்டுகளில் வழக்கு விசாரணை தொடங்கியது. வக்கீல்கள் வராத காரணத்தால் தங்கள் வழக்குகளுக்கு பொது மக்களே நேரில் ஆஜரானார்கள்.

நேற்று 2-வது நாளாக பொதுமக்கள் கோர்ட்டு களில் ஆஜராகி தமிழிலும் ஆங்கிலத்திலும் பேசி வாதா டினார்கள். கணவனை மீட்க மனைவியும், மனைவியை மீட்க கணவனும் நேரில் ஆஜராகி வாதாடியது வித்தியாசமாக இருந்தது. அவர்களிடம் நீதிபதிகள் தமிழில் கேள்விகள் கேட்டு பதிலை பெற்றனர்.

நீதிபதி சிவகுமார் முன்பு நேற்று நடந்த ஒரு வழக்கு வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது. வரதட்சணை வழக்கில் கணவன்-மனைவி முன் ஜாமீன் கேட்டிருந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அவர்களது மருமகள் ஆஜராகி முன் ஜாமீன் கொடுக்கக் கூடாது என்று வாதிட்டார். இதையடுத்து அந்த வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.
எல்லா கோர்ட்டுகளிலும் நேற்று இப்படி பல ருசிகர சம்பவங்கள் நடந்ததைக் காண முடிந்தது.

இன்று (புதன்) 3-வது நாளாக கோர்ட்டுகளில் பொதுமக்களே ஆஜரா னார்கள். கடந்த 2 நாட்களை விட இன்று ஐகோர்ட் வளாகத்தில் மக்கள் அதிக அளவில் திரண்டிருந்தனர். ஐகோர்ட் வளாகம் முழுக்க முன்பு போல மக்கள் வெள்ளம் காணப்பட்டது.

நீதிபதிகள் முன்பு நேரில் ஆஜராகுவதற்கு தயாராக பலர் வந்திருந்தனர். அவர்கள் கோர்ட்டில் எப்படி வாதாடுகிறார்கள் என்பதை பார்ப்பதற்காக உறவினர்கள் வந்திருந்தனர். சில பெண்கள், நீதிபதி முன்பு எப்படி ஆஜராக வேண்டும் என்று டிப்ஸ் கேட்டுக் கொண்டிருந்தனர்.

சிங்காரவேலரின் மரு மகள் பத்மா இன்று கோர்ட் டுக்கு வந்து தன் வழக்குக்காக தானே வாதாடினார். இவ ருக்கு திருவான்மியூரில் குடும்பச் சொத்து உள்ளது. அந்த சொத்தை பெற 1996ம் ஆண்டு அவர் வழக்குத் தொடர்ந்தார்.

அவரது வக்கீல் கோர்ட்டு புறக்கணிப்பு போராட் டத்தில் ஈடுபட்டுள்ளதால் பத்மா இன்று தன் மகள் ஜெயலட்சுமியுடன் வந்து வாதாடினார். இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 1-ந்தேதி தள்ளி வைக்கப்பட்டது.

புளியந்தோப்பை சேர்ந்த பாத்திமா (21) என்ற பெண் தன் 5 மாத கைக்குழந்தையுடன் இன்று கோர்ட்டுக்கு வந்திருந்தார். தன் கணவர் ஜாவித்தை விடுவிக்கக் கோரி அவர் இன்று கோர்ட்டில் ஆஜராகி வாதாடினார்.

ஜாமீன் பெறும் பிரிவில் தான் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அந்த கோர்ட்டுகள் நிரம்பி வழிந் தன. மாணவ- மாணவி கள் சிலர் வந்து வயதான வர்களுக்கு உதவி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

குடும்ப நலக் கோர்ட்டில் நடந்த வழக்குகளில் பெண் கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்களுக்கு பெண் வக்கீல்கள் தேவை யான உதவிகளை செய்தனர்.

நீதிபதி முன்பு ஆஜராகி வாதாடி நிவாரணம் பெற்று திரும்பிய பெண்கள் முகத்தில் புன்னகை தவழ்ந் தது. வக்கீல் போல கோர்ட் டுகளில் பேசிய அனுபவத்தை அவர்கள், தங்களுடன் வந்த வர்களிடம் சிரித்து பேசிய படி சென்றனர்.

இதற்கிடையே கோர்ட்டு களில் பொது மக்களே ஆஜராவதை வேடிக்கை பார்க்கவும் பலர் திரண்டனர். பொதுமக்களில் பலர் திக்கி, திணறி பேசுவதையும், நீதிபதிகள் அவர்களிடம் மிக, மிக பொறுமையாக கேள்விகள் கேட்டு கேட்டு தகவல்கள் பெற்றதையும் கண்டனர். சென்னை ஐகோர்ட்டு வரலாற்றில் பலருக்கும் இது ஒரு புது அனுபவமாக இருந்தது.

இந்த நிலையில் கோர்ட்டுக்கு வெளியில் வக்கீல் களின் தொடர் போராட்டமும் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.
( மாலை மலர் )

(பொதுமக்களூக்கு சபாஷ், நாளைக்கு டாக்டர்கள் ஸ்ரைக் செய்தால் இது மாதிரி செய்திடாதீங்க ;-)


Read More...