பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, February 26, 2009

நிலவரம் கலவரம்

இன்றைய தமிழக நிலவரம் பற்றி தெரிந்துக்கொள்ள...


( கிளிக் செய்து படித்தால் நிலவரத்தின் கலவரம் தெரியும் )

Read More...

பூங்கோதை - நேற்று - இன்று

நேற்று:
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியுடன் அமைச்சர் பூங்கோதை தொலைபேசியில் பேசிய விவரங்களும் பத்திரிகைகளில் வெளியாகின. அதை தொடர்ந்து அவர் ராஜினாமா செய்தார்.
என்ன என்று தெரியாதவர்களுக்கு முன் கதை :
மின்சார வாரியத்தில் உதவிப் பொறியாளராக பணியாற்றிய ஜவஹர் என்ற தனது உறவினரை, லஞ்ச வழக்கு தொடர்பாக கடினமாக நடத்தாமல் மென்மையாக விசாரிக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குனர் உபாத்யாயாவிடம் வற்புறுத்தினார்.
ராஜினாமா கடிதத்தில்
"எனது உறவினர் ஜவஹர் விவகாரத்தில் நான் அதிகாரியை தொடர்பு கொண்டு பேசியதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. என் செல்வாக்கை பயன்படுத்தும் எண்ணமும் கிஞ்சித்தும் கிடையாது. ஒரு கோரிக்கை என்ற முறையில்தான் அதை நான் எடுத்துச் சொன்னேன். ஆனாலும் இது தவறு என்று உணருகிறேன். இதற்கு பரிகாரமாக நான் ராஜினாமா செய்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்
( தொடர்புடைய பழைய பதிவு - 1, பதிவு - 2 பதிவு - 3)

இன்று
டாக்டர் பூங்கோதை, தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறை அமைச்சராகிறார். ராஜ்பவனில் நாளை பதவி ஏற்கிறார்.

நாளை ?

Read More...

Wednesday, February 25, 2009

இப்ப போலீசாரும் உண்ணாவிரதம்

நடப்பவை எதுவும் நல்லா இல்லை. இந்த நியுஸை பாருங்க
ஐகோர்ட்டு சம்பவம்: குடும்பத்தோடு போலீசார் உண்ணாவிரதம்....

போலீசாரை கண்டித்து கடந்த 3 நாட்களாக ஐகோர்ட்டு முன்பு வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அரசின் சமரச பேச்சுவார்த்தையை புறக்கணித்து விட்டு வக்கீல்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் முன்னாள் காவலர் சங்க மாநில தலைவரும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியுமான அந்தோணிசாமி போலீசாரும் குடுபத்தோடு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை ஐகோர்ட்டில் நடந்த சம்பவத்தின்போது காவல் துறையினரால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் இந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்க போவதாக முதலமைச்சர் அறிவித்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. வக்கீல்களை நாங்கள் சகோதரர்களாகதான் நினைக்கிறோம்.

காவல்துறையும் நீதி துறையும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்வது நல்லது அல்ல. எனவே அரசும் இந்த பிரச்சினையில் தகுந்த முறையில் பேச்சு வார்த்தை நடத்தி நல்ல முடிவு எடுக்க வேண்டும். வக்கீல்கள் கசப்புணர்வை மறக்க வேண்டும்.

சி.பி.ஐ.விசாரணை முடியும் வரை போலீசார் மீது அரசு நடவடிக்கை எடுக்கக் கூடாது. போலீசாருக்கு நலவாரியம் அமைக்க வேண்டும். எனவே வரும் திங்கட்கிழமை கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் இருக்க முடிவு செய்துள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், உண்ணாவிரத போராட்டம் எப்போது எங்கு? நடைபெறுகிறது என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர், சேப்பாக்கத்தில் போலீசார் குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம் என்று கூறினார்.

இதற்கு அனுமதி வாங்கப்பட்டதா? என கேட்ட போது ஐகோர்ட்டு முன்பு வக்கீல்கள் அனுமதி பெற்றா உண்ணாவிரதம் இருக்கிறார்கள். தேவைப்பட்டால் அவர்கள் உண்ணாவிரதம் இருக்கும் இடத்திற்கு எதிரேயும் போலீசார் உண்ணாவிரதம் இருப்பார்கள் என கூறினார்.


பிகு1: சென்னை உயர்நீதிமன்ற வன்முறைச் சம்பவத்தில் காயமடைந்த வக்கீல்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதற்கான செலவை அரசே ஏற்றுக் கொள்ளும் - செய்தி

பிகு2: காயமடைந்த போலீசார் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள். இவர்கள் அவரவர் விருப்பம்போல் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றும், இதற்கான செலவு தொகையையும் அரசே ஏற்றுக் கொள்ளும் - செய்தி

பிகு3: இதற்கு நாம் தான் உண்ணாவிரதம் இருக்கணும். இது நம்ம பணம்.


Read More...

கலைமாமணி 2009



அடுத்த வருடம் விருது பெறும் கலைஞர்கள் பட்டியல் கீழே....

சிறந்த தெருக்கூத்துக் கலைஞர் - கவிஞர் கனிமொழி கருணாநிதி ( தெருக்கூத்தை நகரத்துக்கு கொண்டுவந்ததற்காக )
சிறந்த தொகுப்புரை(அரசியல்) : கயல்விழி அழகிரி
சிறந்த தொகுப்புரை(சின்னத்திரை) : சின்மையீ ( கடைசியில் புரியாமல் ’பை’ சொல்லுவதற்காக )
சிறந்த புது’பெரும்’நடிகை : நமிதா
சிறந்த பழம்’பெரும்’ திரைப்பட நடிகை: - ஷகிலா
சிறந்த நடிகர் : குறளரசன் ( சிம்புவின் தம்பி, இவரை எப்படி பாப்புலர் ஆக்குவது ? )
சிறந்த நீச்சல் திறன் கலைஞர் : கலைஞரின் டாக்டர் ( கண்ணீரில் நீந்தி வந்து ஆப்பரேஷன் செய்ததற்காக )
சிறந்த குழந்தை நட்சத்திரம் - யாத்ரா ( இவர் மட்டும் தான் பாக்கி )
சிறந்த (ஏடாகூட பேச்சுத்திறன்) இயக்குனர் : சீமான்
சிறந்த குதலைக் கவிஞர் - ஹரன் பிரசன்னா ( ’வேண்டாம்’ என்று 575758 க்கு SMS அனுப்பினால் கவிதை வரும் )
சிறந்த டப்பிங் கலைஞர் - கீ.வீரமணி ( முரசொலியில் வருவதை விடுதலையில் டப் செய்வதற்காக )
சிறந்த ஜால்ரா கலைஞர்கள் - தமிழ் படத்துக்கு வசனம் எழுதும் தமிழ் எழுத்தாளர்கள்.
சிறந்த திரைப்பட வசனகர்த்தா - சாரு நிவேதிதா ( ஏன் தமிழ் படத்துக்கு எழுதுவதில்லை என்று சொந்த வசனம் எழுதுவதால் )
சிறந்த ’புகைப்படக் கலைஞர்’ - தயாநிதி மாறன் ( எல்லா புகைப்படத்திலும் கலைஞர் பக்கத்தில் இருப்பதால் )
சிறந்த சினிமா பி.ஆர்.ஓ - ஜெயமோகன் ( படத்தை விட கேள்வி பதிலில் அதிகம் படம் காட்டுவதற்கு )

பொற்கிழி பெறுவோர் பட்டியல்
சிறந்த கலை குழு - மானாட மையிலாட குழுவினர் ( கலா இருக்கும் குழு கலைக்குழு )
சிறந்த நாடகக் குழு - வைகோ, ராமதாஸ், திருமா.

மேலும் சிபாரிசுகள் இருந்தால் வாசகர்கள் ’தாராளமாக’ சொல்லலாம். சிறந்த சிபாரிசுக்கு பரிசு உண்டு :-)

Read More...

Tuesday, February 24, 2009

ம்ஹும் பேசாதே!

”இலங்கை‌த் த‌மிழ‌ர் பிரச்சினைக்காகப் போராடுவதாக கூறி ஆட்சியைக் கவிழ்க்க சதி நடக்கிறது” என்று கருணாநிதி சில வாரம் முன்பு புலம்பினார்.

சரியாக சட்டக்கல்லூரி மாணவர்களின் ரவுடியிஸம் முடிந்து 100-வது நாளில் உயர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் போலீஸ் அடிதடி, கல்வீச்சு, தடியடி, போலீஸ் நிலையத்துக்கு தீவைப்பு என்று அரங்கேறியிருக்கிறது. சினிமாவுக்கு மட்டும்தான் 100வது நாள் விழாக் கொண்டாட்டம் நடத்த வேண்டுமா ?

சட்டத்தைப் படித்தவர்கள் சட்டதை மதிக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறதா என்ன? (வரலாறு படித்தவர்கள் எல்லாம் வரலாறு படைக்கிறார்களா? கணக்குப் படித்தவர்கள் எல்லாம் கணக்கு சரியாகக் காட்டுகிறார்களா?) அதனால் இவர்கள் சட்டத்தை குப்பையில் போட்டுவிட்டு, ரவுடிகளும் மூக்கில் விரலைவைக்கும் அளவிற்கு ரவுடியிஸத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

பஸ்ஸைக் கடத்துகிறார்கள், கோர்ட்டைப் புறக்கணிக்கிறார்கள், பந்த் அன்று கடையை திறந்தவரை போட்டு அடிக்கிறார்கள், சு.சாமி மீது நீதிபதி முன்னாலேயே அழுகிய முட்டையை வீசுகிறார்கள், விடுதலை புலிகளுக்கு ஆதரவாக கோஷம் போடுகிறார்கள், ரயிலை நிறுத்துகிறார்கள், இவர்கள் எல்லாம் Professionals; ரவுடியிஸத்தில் Professionals.

ஜனவரி முதல் தேதியிலிருந்து இன்றுவரை ஒன்பதே நாட்கள் தான் கோர்ட் நடந்திருக்கிறது. இத்தனைக்கும் 2003 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வக்கீல்கள் ஸ்டரைக் செய்ய கூடாது என்று சொல்லியுள்ளது. வாயில் விரலை வைத்துக்கொண்டு அரசு கையாலாகாமல் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருக்கிறது.

வக்கீல் இனத்துக்கே இழுக்கைச் சேர்க்குமாறு போராட்டம் நடத்தும் இந்த வக்கீல்கள் எல்லாம் விடுதலைப் புலிகளின் கைக்கூலிகள். சட்டத்தைக் காப்பாற்ற வேண்டியவர்களே அசிங்கமான மொழியில் திட்டுவதும், ராஜீவ் காந்தி கொலையை நியாயப்படுத்துவதும், தேசியக் கொடியை அகற்றிவிட்டு கருப்பு கொடியை வைப்பதும்..., இவர்கள் செய்யும் அக்கிரமங்கள் கொஞ்சநஞ்சம் இல்லை.

தமிழ் நாட்டில் அமைதியாக மின்வெட்டை அனுபவித்துக் கொண்டிருந்தவர்களை, மனிதச் சங்கலி, ராஜினாமா, உண்ணா விரதம், சட்டசபையில் இறுதித் தீர்மாணம் என்று பல காமெடிகளை நிகழ்த்திய கருணாநிதியும், தீக்குளிப்பு, பஸ் எரிப்பு போன்ற ரவுடித்தனத்தை ஊக்குவித்து தமிழக மக்களின் அமைதியைக் குலைக்க நினைக்கும் திருமா, வைகோ, ராமதாஸ், சீமான் போன்ற தேச துரோகிகளும், கொட்டாவி விடக் கூட சோனியாவின் பர்மிஷனை கேட்கும் காங்கிரஸ் கட்சிக்கார்களும், தமிழுணர்வைத் தூண்டுவதான போர்வையில் அனைத்து வன்முறைகளையும் தூண்டும் தமிழ் பத்திரிகைத் துறையும் தான் இதற்குக் காரணம்.

யாழ்ப்பாணத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஊர்வலமாகச் சென்று, தமிழ் மக்களை விடுவிக்குமாறு விடுதலைப் புலிகளை வற்புறுத்தியிருக்கின்றனர் என்ற செய்தி எந்த தமிழ் பத்திரிக்கையிலும் வரவில்லை.

இந்தச் சமயத்தில் பிரணாப் மற்றும் பா.சிதம்பரம் போன்றவர்கள் விடுதலை புலிகள் ஆயுதத்தை கீழே போடுவதானால் மட்டுமே போரை நிறுத்துமாறு இலங்கை அரசை இந்தியா வற்புறுத்தலாம் என்று மத்திய அரசின் நிலையை தைரியமாகச் சொன்னதற்காகவே பாராட்ட வேண்டும்.

கலவரத்தில் ஈடுபடுவோரைக் கண்டதும் சுட உத்தரவு என்று போலீஸ் சொல்லியிருக்கிறது. இவர்களைக் கண்டபடி சுட வேண்டும். பொதுஜனத்துக்கு சராசரி வாழ்க்கையில் அமைதியான வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுத்த நினைக்கும் அரசு, ரவுடியிஸத்தை கடுமையான நடவடிக்கையிம் மூலமே கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

போலீஸ் எப்படி திருப்பி கல் எறியலாம் ? அவர்கள் எப்படி ரவுடி போல செயல்படலாம் ? என்று பலர் விமர்சனம் செய்கிறார்கள். ஜெயா டிவி இந்த காட்சியையே தங்களின் செய்திகளில் ஏதோ போலீஸ் பெரிய தப்பு செய்துவிட்டது மாதிரி ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

சாமி படத்தில் ரவுடிகள் ஆயுதங்களுடன் கலவரம் செய்ய வரும் காட்சியில் விக்ரம் போலீஸ் ஜீப்பிலிருந்து அவர்களை போலவே ஆயுதங்களை எடுத்து அடிக்க தயாராகி ”நான் போலீஸ் இல்லை பொறுக்கி” என்று சொல்லுவார். அப்போது எல்லாம் நாம் கைகொட்டி ரசித்துவிட்டு நிஜவாழ்க்கையில் நடக்கும் போது ஏதோ பெரிய குற்றம் போல அதை விமர்சனம் செய்வது தவறு. போலீஸை அசிங்கமாக பேசிவிட்டு, அவர்கள் மீது கல்லெரிந்தால் பதிலுக்கு அவர்களும் அதை செய்தார்கள். ஷாக் டிரிட்மெண்ட் சில சமயம் தேவைப்படுகிறது என்ன செய்ய ?


ஆஸ்பத்திரியில் கருணாநிதி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக சொல்லியிருக்கிறார். போலீஸை தங்கள் கடமையை செய்யச் சொல்லிவிட்டு, இவர் தற்பொழுது இருக்க வேண்டியது ஒரே விரதம் -- மௌன விரதம்.



Read More...

Monday, February 23, 2009

ஏ.ஆர்.ரகுமானு‌க்கு கருணா‌நி‌தி மத வா‌‌ழ்‌த்து

ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர்.ரகுமானுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இசை என்றாலே தமிழில் புகழ் என்றுதான் பொருள். அந்தப் பொருளுக்கு ஏற்ப பூத்து, மலர்ந்து, புகழ் பெருக்கி இன்று சிகரத்துக்கே சென்று, சிரித்த முகத்தோடு நம்முடைய வாழ்த்தக்களைப் பெறுகிற, சென்னையில் பிறந்த செல்வன் ஏ.ஆர்.ரகுமான். இவருக்குக் கிடைத்துள்ள ஆஸ்கார் விருதுகள் கண்டு முத்தமிழே முறுவலிக்கிறது.


சிறுபான்மை சமுதயாத்தைச் சேர்ந்த இந்தச் செல்வம் இன்று ஆஸ்கர் விருதுகளைப் பெற்றதன் மூலம் தரணி வாழ் கலைஞர்கள் உள்ளத்தில் எல்லாம் இடம் பெற்றுவிட்டார்.


குறிப்பாகவும் சிறப்பாகவும் உரிமையோடு சொல்ல வேண்டுமானால் இது நம் வீட்டுப் பிள்ளைக்குக் கிடைத்த மிகப்பெரிய கீர்த்தி, சிறப்பு, பெருமை. ரகுமான் புகழ் மகுடத்தில் இந்த ஆஸ்கார் பதிந்துள்ள மாணிக்க, மரகதக் கற்களாக இந்த விருதுகளை நான் கருதுகிறேன்.

தமிழ்நாடும், தமிழ்நாடு அரசும், அதற்குத் தலைமைப் பொறுப்பேற்றிருக்கிற நானும், தமிழ்நாட்டின் ஆறு கோடி மக்களும், ஏன் இந்தியத் திருநாட்டின் நூறு கோடி மக்களும், உலகத் கலைஞர்களும் மலர் தூவி, வரவேற்று, மகிழ்ச்சியைத் தெரிவித்து, மாசற்ற மனதோடு சேயாகப் பாவித்து, தாயாக நின்று வாழ்த்துகிற போது,அந்த வாழ்த்துக்களில் என் வாழ்த்துக்களும் இணைகிறது.

ஆஸ்கார் விருதுகள் பெற்ற அருமைத் தம்பி இன்னும் ஆயிரம் ஆயிரம் விருதுகள் பெற வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.



கருணாநிதி கட்டுப்பாட்டில் காவல் துறையும் அவர் நாக்கும் இல்லை என்று தெரிகிறது.

Read More...

எப்போது அடி உதை ?


சென்னையில் நேற்று நடைபெற்ற சாக்லேட் கிருஷ்ணாவின் 150வது நிகழ்ச்சி.
(படத்தை கிளிக் செய்தால் பெரிதாக தெரியும்)

அறிவிப்பு:
மேலே உள்ள படத்தில் கொஞ்சம் நகைச்சுவை செய்திருந்தோம். அதற்கு எந்த உள்நோக்கமும் கிடையாது என்பதை இட்லிவடை வாசகர்கள் நன்கு அறிவார்கள். ஆனால் எங்களுடைய இந்த செயல் கமல் ரசிகர்களை( குறிப்பாக ஒரு மாமியை சங்கடப்படுத்தியுள்ளது) என்பது தெரிகிறது.

யாருடைய மனமும் புண்பட கூடாது என்று யோசித்து தான் பதிவு இடுகிறோம் ஆனால் சில சமயம் இப்படி ஆகிவிடுகிறது. அதற்கு வருத்தம் தெரிவித்து வழக்கம் போல் பதிவை எடுக்காமல் மாற்றம் செய்துள்ளோம்.

’மரியாதையாக’ எடுக்க சொன்ன மாமிக்கு ஸ்பெஷல் நன்றி

Read More...

Jai Ho - Mozart of Madras !


ஆஸ்கர்2
- ஏ.ஆர்.ரஹ்மான்! - இட்லிவடையின் வாழ்த்துகள்!!

Read More...

ஆஸ்கர் அப்டேட்

- Supporting actress - Penelope Cruz in Vicky Cristina Barcelona
- Orginal Screen play - Dustin Lance Black- Milk
- Adapted screenplay - Simon Beaufoy-Slumdog Millionaire
- Animated Film - Wall-E
- Animated Short Film - La Maison en Petits Cubes
- Live action Short Film - Spielzeugland (Toyland)
- Art Direction - Curious case of Benjamin button
- Costume Designer - The Duchess
- Makeup - Curious case of Benjamin button
- Best Supporting Actor - Heath Ledger in The Dark Knight
- Documentary Feature - Man on Wire
- Documentary (short subject) - Smile Pinki
- Visual Effects - The Curious Case of Benjamin Button
- Sound Editing - The Dark Knight
- Sound Mixing - Slumdog Millionaire
- Film Editing - Slumdog Millionaire
- Best Orginal Score - AR Rahman
- Original Song - Jai Ho from Slumdog Millionaire- AR Rahman and Gulzar
- Best Director- Danny Boyle - Slumdog Millionaire
- Best Actress - Kate Winslet
- Best Actor - Sean Penn
- Best Film - Slumdog Millionaire

Every (Slum)Dog has its day!

Read More...

Sunday, February 22, 2009

!!


அட்வான்ஸ் வாழ்த்துகள்

Read More...

Friday, February 20, 2009

நேற்றைய மோதல் நடந்து முடிந்த சம்பவம். - கலைஞர்


( படத்தை கிளிக் செய்தால் பெரிதாக தெரியலாம் )

நேற்றைய மோதல் நடந்து முடிந்த சம்பவம். தொடர்ந்து நல்லாட்சி புரிய எல்லோரும் ஆதரவு தாங்க - கலைஞர் ( இன்றைய 7:30 மணி சன் டிவி )

(துக்ளக் கார்ட்டூன் மேக்கப்: மிளகாய் பொடி )

Read More...

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 20-02-2009

முனிக்கு இட்லிவடை கடிதம்

ஹலோ முனி,

எப்படி இருக்க ? ஏன் அடிக்கடி லெட்டர் போடுவதில்லை ? நீ என்ன பெரிய கடவுளா ? இப்ப தமிழ் வலைப்பதிவில் 'நான் கடவுள்' பைத்தியம் அதிகமாக இருக்கு தெரியுமா ?

"நான் கடவுள் கிடையாது. ரசிகர்கள் எனது காலில் விழுவது எனக்கு பிடிக்காது" இதை நான் சொல்லவில்லை சொன்னவர் என்று இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சொல்லியிருக்கார். அப்பா "நான் கடவுள்" பற்றி ஒரு வரி எழுதிவிட்டேன்.

கடவுளே வந்தாலும் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது போலிருக்கு. நேற்று வக்கீல்களும், போலீஸும் அடித்துக்கொண்டதை பார்த்தால் பிஹார், ஜார்கண்ட் எல்லாம் தேவலை என்று ஆகிவிட்டது. கிட்டத்தட்ட ஒரு தெலுங்கு படம் பார்த்த எஃபெக்ட். பவர் கட் பிரச்சனையை பின்னுக்கு தள்ளியது இலங்கை பிரச்சனை, இப்ப இலங்கை பிரச்சனை பின்னுக்கு தள்ளியது இந்த அடிதடி பிரச்சனை. எனக்கு என்னவோ இது ஏதோ Planned மாதிரி தான் தெரிகிறது.






கலைஞர் ரொம்ப வருத்தப்பட்டு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் "நான் மருத்துவமனையில் இருந்தாலும், தாங்கள் என்னை பார்க்க விரும்பினால் ஆம்புலன்சில் வந்து உங்களை சந்திப்பேன்" என்று சொல்லியுள்ளார். இப்ப இருக்கும் நிலமைக்கு இந்த தேர்தலில் வீட்டுக்கு ஒரு ஆம்புலன்ஸ் இலவசமா கொடுக்கணும் என்று நினைக்கிறேன்.

வரவர எலஷன் செய்திகள் கூட மக்கள் இலவசமா இட்லிவடைக்கு தருவதை கவனிச்சையா ? அதை கவனிக்கலைனா பரவாயில்லை ஆனால் இந்த செய்தியை கொஞ்சம் கவனி - கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டலுக்கு விதிகளை மீறி அனுமதி வழங்கிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவை விடுதலை செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை திமுக திடீரென வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளது. உலக வரலாற்றில் முதல்முறையாக இப்படி நடக்க காரணம், இந்த வழக்கில் ஜெயலலிதாவோடு சேர்த்து குற்றம் சாட்டப்பட்ட அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சர் செல்வகணபதி இப்போது திமுகவில் இணைந்துவிட்ட நிலையில், அவரைக் காப்பாற்றவே இந்த நடவடிக்கை. அப்ப இது வரை இந்த வழக்கில் அரசு செலவு செய்த பணம் எந்த கணக்கில் போகும் ? காந்தி கணக்கு என்று சொல்லாதே அப்பறம் எனக்கு கோவம் வரும்

காந்தி என்றவுடன் நினைவுக்கு வருது அறுதப் பழசான செய்திகளுக்கு 'என்னது காந்தியைச் சுட்டுட்டாய்ங்களா?!" என்று குறிப்பிடுவது உண்டு. ஆனால் உண்மையில் 1948ல் காந்தியைச் சுட்டதை 1980ல் மாலன் எழுதியதை 1988ல் வந்த முதல்பதிப்பை அல்லது கிழக்கு வெளியிட்ட நான்காம் பதிப்பிலிருந்து எடுத்து 2009ல் விரிவாக விவாதித்திருக்கிறார் வலைப்பதிவில் சந்திரமௌலி. படித்துப் பார்க்கவும். வரலாறு புரட்டப் புரட்ட சுவாரசியமாகவே இருக்கிறது. வரலாறு சம்பந்தமா எழுதும் போது கொஞ்சம் ஜாக்கிரதையா எழுதனும் இல்லை, டேன்ஜர் தான். இன்றைய செய்தி நாளைய வரலாறு மாதிரி ஜோக் இல்லை.

இன்னொரு காந்தி மேட்டர் இருக்கு. இது காந்தி கண்ணதாசனுக்கு கலைஞர் கடிதம் எழுதியிருக்கிறார்

"காந்தியின் பெயரையும் வைத்துக் கொண்டு என்னுடைய அருமை நண் பன் கண்ணதாசன் பெயரை யும் வைத்துக் கொண்டு ஏடுகளில் இப்படியொரு அறிக்கை விடுவாய் என்று நான் கருதவில்லை" என்று சொல்லிவிட்டு
"எழுத்தாளர்களுக்கும், பதிப்பகத்தாருக்கும் என் சொந்தப் பொறுப்பில் ஒரு கோடி ரூபாய் அளித்த போது, அந்தச் சங்கத்திற்கு நீ தலைவராக இருக்கிறாய், அந்தச் செயல் முறையாக நடைபெறும் என்ற நம்பிக்கையில் பேரிலே தான் செய்தேன்." என்று கடித்த்தின் கடைசியில் சொல்லியுள்ளார். கலைஞர் ஏதோ சொல்ல வருகிறார் என்ன என்று தான் புரியவில்லை. எல்லாம் மர்மயோகி படம் மாதிரி மர்மமா இருக்கு.

மர்மயோகி படம் ட்ராப் தெரியுமா ?. அட ராமா என்று தலையில் அடித்துக்கொள்ளாதே 'அட இராமு' என்று அடித்துக்கொள். உன் மாதிரி ரசிகர்களுக்காக 'தலைவன் இருக்கிறான்','A Wednesday' படத்தின் ரிமேக்கில் நடிக்கிறார். 4 தீவிரவாதிகளை மீட்க குண்டுவைக்கும் நஸ்ருதீன் ஷா நடித்த பாத்திரத்தில் கமல். இணைந்து மலையாள நட்சத்திரம் மோகன்லால். தொழில்நுட்பங்களுக்கும் மேக்கப்புக்கும் மேலை நாட்டவர்களை நாடிய கமலுக்கு இதில் இயக்குநரும் அமெரிக்காவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. இசை அவர் மகள், தன்னை ஒரு நவீன கவிஞர் என்று சொல்லிக்கொள்ளும் ஒருவர் இதற்கு பாடல் கூட எழுதியிருக்கிறார் என்று காற்றில் வந்த செய்தி. சினிமாவில் சிக்கிகொள்பவர்கள் புதைமணலில் சிக்கிக்கொண்டவர்கள் மாதிரி மீளவே முடியாது. அதுவும் கமல் படம் என்றால் கேட்கவே வேண்டாம்.

அப்படி சிக்கிக் கொண்டவர்கள் மீட்க நினைத்து கைநீட்டுபவர்களையும் உள்ளிழுத்துக் கொள்ளும். அப்படிப்பட்ட புதைகுழியில் சிக்கிகொண்டிருக்கிறது திமுக. எதிர்காலத்தின் மீது காங்கிரசுக்கு அக்கறை இருந்தால் திமுகவுடனான உறவை அக்கட்சி துண்டிக்க வேண்டும். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி காலங்களில் அதிமுகவும், காங்கிரசும் நல்ல உறவு கொண்டிருந்தன. இந்திராவை நான் அன்னையாகவே மதித்தேன். அதன் பின் ராஜீவ் காலத்திலும் காங்கிர சுடன் எங்களுக்கு நல்ல மரியாதையும் நட்புணர்வும் இருந்தது. எனவே தான் பழைய நண்பர் என்ற முறையில் இந்த ஆலோசனையை காங்கிரஸ் கட்சிக்கு கூறுகிறேன் என்று நேற்று ஜெயலலிதா திருமண விழாவில் பேசியிருக்கிறார். ஒரு பேச்சுக்கு காங்கிரஸ் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்தால், ஜெயலலிதாவை நம்பி அவரது கூட்டணிக்கு வந்த இடதுசாரிகள் நிலமை என்ன ஆகும் ? தீக்குளிக்க வேண்டியது தான்.

தீக்குளிப்பு கலாசாரம் இன்னும் எத்தனை பேரை பலிவாங்கும் என்று தெரியவில்லை. கடலூரில் வண்டிப்பாளையத்தைச் சேர்ந்த தமிழ்வேந்தன் என்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர், இலங்கைத் தமிழர்களுக்காக வருந்தி, ஜான்சி என்ற மனைவியையும், சந்தோஷ் என்ற ஒன்றரை வயது மகனையும் நிர்க்கதியாக விட்டுவிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே மண்ணெண்ணையை தனது உடல் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். காப்பாற்ற முடியாமல் 30 வயதிலேயே இறந்துபோனார். அவரைப் பார்க்கவந்த வைகோ கண்ணிலிருந்து பெருகிய கண்ணீரைத் துடைத்துக்கொண்டே, 'ப்ரணாப் துரோகத்துக்கு மன்னிப்பே கிடையாது' என்று அறிக்கையிட்டார். தீக்குளிக்க காரணம் வைகோ, ராமதாஸ், திருமா தான். இவர்களுக்கு மன்னிப்பே கிடையாது.

நேற்று சட்ட சபையில் சீமானை ஏன் கைது செய்யவில்லை என்று காங்கிரஸ் கேட்ட கேள்விக்கு ஆற்காடு வீராசாமி "இதற்காக 5 தனி போலீஸ்படை அமைக்கப்பட்டுள்ளது. டைரக்டர் சீமானை போலீசார் தேடி வருகிறார்கள்" என்ற பதிலை கேட்டு மயக்கமே வந்துவிட்டது.

சீமானுக்கெல்லாம் 5 தனி போலீஸ்படை ரொம்ப ரொம்ப ஓவர்தான். நம்பணம் எப்படி எல்லாம் விரயமாகிறது. சீமான் எப்படியும் கோக்குமாக்காகத்தான் பேசப்போகிறார் என்பது குழந்தைக்குக் கூட தெரியும். பேசும்போதே ஒரேயொரு கான்ஸ்டபிளை பக்கத்தில் தயாராக நிறுத்தி பேசிமுடித்ததுமே கோழி அமுக்குவதுபோல் அமுக்கியிருக்கலாம்.

திமுக விடுதலைப்புலிகளை எதிர்க்கவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை என்று அன்பழகன் கூறியிருக்கிறார். இது தான் உண்மையான நடுநிலமை. திமுகவை பார்த்தால் கொஞ்சம் பரிதாபமாக தான் இருக்கு என்ன செய்ய. இவர்கள் விரைவில் குணமடைய நீ தான் அருள் செய்ய வேண்டும்.

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு பாடிகாட் கோயில் தவிர்த்து சென்னையில் 31 கோயில்களில் ஆங்காங்கே அமைச்சர்கள் தலைமையில் சிறப்பு வழிபாடும், பொது விருந்தும் அமர்க்களப்பட்டிருக்கிறது. அது மட்டும் இல்லை முதல்வர் கருணாநிதி வெகு விரைவாக உடல்நலம் பூரணமாக குணமடைய வேண்டி, அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயிலில் கோயிலின் பணியாளர் சங்கத்தின் சார்பாக வடபழனி முருகனுக்கு பால் அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அப்படியும் ஏன் தான் ஆத்திகர்கள் இந்தப் பகுத்தறிவுக் கட்சியை வெறுக்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஒரு கன்யா ஸ்திரியோட ஆத்ம கதா அப்படினு ஒரு பொஸ்தகம் கேரளாவிலே விற்பனையிலே சக்கை போடு போடுதாமே பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுவதைப் பற்றி ஜேஸ்மி என்ற கன்யா ஸ்திரி எழுதிய இந்த புத்தகம் பெரும் பரபரப்பை உண்டாக்கிய்ள்ளது எனச் சொல்கிறார்கள் பாவமன்னிப்பு கோரி வந்த பெண்களிடம் முத்தம் கேட்ட பாதிரியார் அதை தெய்வீக கிஸ் என அவர் சொல்லி வற்புறுத்திக் கேட்டது என பல சமாச்சாரங்களை (பலான எனவும் படிக்கலாம்)
அந்தப் Book லே சொல்லிருக்காங்களாம். பிரேமனந்தாக்களுக்கு மதம் கிடையாது. ஒரிசாவில் கன்னியாஸ்திரி கற்பழிப்பின்போது கதறிய பலர் இதை பற்றி பேசுவதில்லை என்று முடிவு செய்திருக்கிறார்கள் போல. நல்லது.

முத்தம் பற்றி என் நண்பர் சொன்ன ஜோக் இது.

பஸ் ஸ்டாப்பிலே ஒரு இளைஞன் அவனருகிலே அம்சமாக நமீதா கணக்காக ஒரு பெண் அவனையே பார்க்கிறாள் அவனுக்கு BP கன்னா பின்னா என்று ஏறுகிறது அல்லது தடுமாறுகிறது. அவள் அவனைப் பார்த்து சிரிக்கிறாள் இப்ப ரத்தம் சூடாகிறது.. பஸ் ஸ்டாப்பில் மற்றவர்களை எல்லாம் விட்டுவிட்டு இவன் பக்கதில் வந்தவுடன் இதயம் படபடக்கிறது, நாக்கு உலர்கிறது. அந்த உதடுகளை குவித்துக் கொண்டு இவனை அவள் நெருங்குகிறாள். இவனுக்கு உடம்பெல்லாம் பூச்சி பறக்கிறது இதோ உதட்டைப் பக்கத்திலே கொண்டு வந்தாள் இவன் ஒரு ஈர மயக்கத்துக்குத் தயாரான போது

“அண்ணே இங்கேயிருந்து அசோக் நகருக்கு எந்த பஸ் போகும்” என்று கேட்கிறாள்.

"டமால்!"

அந்த 'டமால்' சத்தம் தான் ஹார்ட் அட்டாக் என டாக்டர் சொல்லி அவனுக்குத் தெரியவந்தது.


கீழே உள்ள படங்கள் எல்லாம் நம்ம மக்கள் பிறந்த நாள் போஸ்டர். (நல்ல வேளை இப்ப இவர்கள் யாரும் உயிருடன் இல்லை)







இதை எல்லாம் பார்த்தால் கூட உனக்கு ஹார்ட் அட்டாக் வரலாம்.

சமீபத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு மெக்சிகோ நகரில் 39,897 இளஞ்ஜோடிகள் ஒன்றாக கூடி முத்தமிடுவதில் ஈடுபட்டதாம். வேற எதற்கு கின்னஸ் சாதனை தான். இதற்கு முன்னர் 35,000 பேர் முத்தமிட்டது சாதனையாக இருந்து வருகிறதாம்.

பிரிட்டனில் உள்ள ரெயில் நிலையம் ஒன்றில் ஜோடி மற்றும் தம்பதிகள் முத்தமிட தடை விதிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் "இங்கே முத்தமிடக் கூடாது" என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. ராமசேனைக்கு பயந்து இல்லை பயணிகள் மத்தியில் தம்பதிகள் மற்றும் இளம்ஜோடிகள் பிரியாவிடை பெறும்வகையில் முத்தமிட்டு கொள்வதால் சக பயணிகளுக்கு இடைஞ்சல் ஏற்பட்டு, தாமதமும் ஏற்படுவதாக புகார்கள் கூறப் பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம். எனினும் முத்தப்பிரியர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அவர்களுக்காகவென்று முத்தமிடுவதற்காக தனி இடம் ஒதுக்கித் தரப்பட்டுள்ளதாம். கழிப்பறை கட்டுவதுபோல் இதையும் கட்ட ஆரம்பித்துவிட்டார்கள் போலிருக்கிறது.

இராமசேனை இல்லாத ஊரில் இதுவும் செய்யலாம், இதுக்கு மேலயும் செய்யலாம்.

உனக்கு பிங்க் ஜட்டி பார்சல் ஏதாவது வந்ததா ? வந்தால் பதில் போடவும்
இப்படிக்கு அன்புடன்
இட்லிவடை


Read More...

Thursday, February 19, 2009

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கிறது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக உள்ளது. நீதிமன்றங்களில் தான் சரியில்லை

சு.சாமி மீது முட்டைவீச்சு....ஐகோர்ட்டில் கலவரம்

# ஐகோர்ட் கலவர எதிரொலி:தமிழகம் முழுவதும் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
# ஐகோர்ட் கலவரம்: பலத்த காயத்துடன் தப்பினார் நீதிபதி
# ஐகோர்ட் கலவரம்: பத்திரிக்கையாளரின் கார் எரிப்பு
# வழக்கறிஞர்கள் ஆவேசம்:ஐகோர்ட் வளாக போலீஸ் நிலையம் தீயிட்டு எரிப்பு
# சு.சாமி வழக்கு எதிரொலி:போலீசாருடன் வழக்கறிஞர்கள் நேருக்கு நேர் மோதல்:போர்க்களமான ஐகோர்ட் வளாகம்

விரிவான செய்திகள் கீழே...

சு.சாமி மீது முட்டைவீச்சு : 2 வக்கீல்கள் கைது

ஐகோர்ட் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த ஏ.சி. காதர் மொய்தீன், தன்னை பணிசெய்ய விடாமல் தடுத்ததாக போலீசில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அவரின் புகாரைத் தொடர்ந்து 19 வக்கீல்கள் மீது வழக்கு தொடர்ந்தது சென்னை காவல்துறை. குற்றம் சாட்டப்பட்ட 19 பேரில் வக்கீல் சங்க முன்னாள் செயலாளர் கினி இம்மானுவேல் உள்ளிட்ட இருவரை சென்னை போலீஸ் கைது செய்துள்ளது.

கலைஞர் வேதனை

நீதிமன்றத்துக்கு உள்ளேயே வழக்கறிஞர்களில் சிலர் சுப்பிரமணிய சாமி போன்றவர்களிடம் நடந்து கொண்ட விதமும் (இது தொடர்பாக காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.) பொதுக் கூட்டங் களில் இந்தியாவின் இறையாண்மைக்கு விரோதமாக சிலர் பேசியதும் முதல்வருக்கு மனச்சங்கடத்தை கொடுத்துள்ளன. - கலைஞர்

சு.சாமி ஆவேசம்

என் மீது முட்டை வீசுவதால் இலங்கையில் விடுதலைப்புலிகளை காப்பாற்றலாம் என இங்குள்ள கைக்கூலிகள் நினைப்பது பைத்தியக்காரத்தனம் - சுப்பிரமணியசாமி


செய்தி-1:

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் போலீசாருடன் வழக்கறிஞர்கள் நேருக்கு நேர் மோதலில் ஈடுபட்டனர். இதனால் ஐகோர்ட் வளாகம் போர்க்களம் போல் காட்சியளித்தது.

செய்தி-2
சுப்பிரமணிய சாமி முட்டை வீச்சு சம்பவத்தால் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்து வழக்கறிஞர்களை கைது செய்ய முற்பட்டனர் காவல்துறையினர்.

அப்போது காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்தது.

நேருக்கு நேர் மோதலில் வழக்கறிஞர்கள் கற்கள்,செருப்புகளை வீசினர். காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

இச்சம்பவத்தால் ஒட்டுமொத்த காவல்துறையினரும் தடியடி கவனத்தில் இருந்ததால் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள்

இருந்த காவல்நிலையத்தில் எந்த காவலரும் இல்லை.

இதை புரிந்து கொண்ட வழக்கறிஞர்கள் சிலர் அந்த காவல்நிலையத்திற்குள் நுழைந்து அடித்து நொருக்கினர். அங்கிருந்த முக்கிய ஆவனங்களை கிழித்து எரிந்தனர்.

அப்படியும் ஆத்திரம் தாங்காமல் முக்கிய ஆவணங்களை தீயிட்டு கொளுத்தினர்.

பின்னர் ஓடிவந்த காவல்துறையினர் தீயணைப்பு துறையினருடன் வெகு நேரமாய் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.

இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பத்திரிக்கையாளர் ஒருவரின் கார் எரிக்கப்பட்டது.

செய்தி-3
ஐகோர்ட் கலவரம்: பலத்த காயத்துடன் தப்பினார் நீதிபதி
மோதல் சம்பவத்தில் இரு தரப்பினருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் சொட்டச் சொட்ட வழக்கறிஞர்கள் அங்கும் இங்கும் ஓடினர்.

நீதிபதி ஆறுமுகப்பெருமாள் ஆதித்தனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.பின்னர் அவரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர் வழக்கறிஞர்கள் சிலர்.

செய்தி - 4
வழக்கறிஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை, கோவை, மதுரை பகுதிகளில் வழக்கறிஞர்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வக்கீல் படிப்பில் ரவுடியிஸத்தை ஒரு பாடமாக வைக்க பரிந்துரை செய்கிறேன்.

Read More...

எந்திரன் புதிய படங்கள்

சில புதிய படங்கள்








தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத அய்யரின் 155வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. தமிழக நிதியமைச்சர் அன்பழகன்னுடன் இருப்பவர் மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ எஸ்.வி.சேகர்.

தமிழுக்கு ஒரு சூப்பர் தாத்தா - உ.வே.சாமிநாத அய்யர். தமிழனுக்கு ஒரு சூப்பர் ஸ்டார் தாத்தா - ரஜினி

Read More...

தேர்தல் 2009 - தென்காசி தொகுதி

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.


தொகுதி மறுசீரமைப்பிற்கு முன்

சங்கரன்கோவில்
தென்காசி
வாசுதேவநல்லூர்
கடையநல்லூர்
ஆலங்குளம்
அம்பாசமுத்திரம்

தொகுதி மறுசீரமைப்பிற்கு பின்
சங்கரன்கோவில் (தனி)
தென்காசி
வாசுதேவநல்லூர் (தனி)
கடையநல்லூர்
ராஜபாளையம்
ஸ்ரீவில்லிப்புத்தூர் (தனி)

ஸ்ரீவில்லிப்புத்தூர் (தனி), ராஜபாளையம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் விருதுநகர் தொகுதியில் இருந்து இத்தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ராதாபுரம் சட்டமன்ற தொகுதி திருச்செந்தூர் தொகுதியில் இருந்தும், அம்பாசமுத்திரம், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிகள் தென்காசி தொகுதியில் இருந்தும் மாற்றப்பட்டுள்ளது.

தற்போது ஸ்ரீவில்லிப்புத்தூர் சிபிஐ வசம் இருக்கிறது, ராஜபாளையம் அதிமுக வசம் இருக்கிறது. இந்த இடங்கள் அதிமுக அனுதாபிகள் அதிகம் உள்ள இடம் என்று சொல்லலாம்.

1957-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரை நடந்த 9 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

1996-ம் ஆண்டு நடந்த தேர்தலில் த.மா.கா. வெற்றி பெற்றது.

1998, 1999 ஆகிய 2 பாராளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

General Election, 2004: Tenkasi
Party Candidate Votes % ±%

CPI M. Appadurai 348,000 48.85 n/a

AIADMK S. Murugesan 225,824 31.70 -3.62

JD(U) Dr. K. Krishnasamy 101,122 14.19 n/a

Independent M. Vadivel Kumar 14,441 2.03 n/a
Majority 122,176 17.15 +17.02
Turnout 712,409 65.68 +0.80

CPI gain from AIADMK Swing +48.85


மற்ற விவரங்கள் விரைவில்...

- தகவல் காரன்

Read More...

Wednesday, February 18, 2009

தேர்தல் 2009 - முதல் கருத்து கணிப்பு

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திமுகவும் அதிமுகவும் தலா 28 சதவீத மக்களின் ஆதரவோடு சம நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் அதிமுகவின் செல்வாக்கு பெருமளவு அதிகரித்துள்ளதும் தெரிய வருகிறது.











வீடியோ - 1


வீடியோ - 2


இலங்கை பிரச்சனையை பெரிய பிரச்சனையாக திருமா, ராமதாஸ் கூட்டம் தேர்தலுக்காக உருவாக்கிறார்கள். இலங்கை பிரச்சனை இந்த தேர்தலில் ஒரு பெரிய பிரச்சனையாக இருக்காது.

இவர்கள் எவ்வளவு பேசினாலும் காங்கிரஸ் கட்சி இருக்கும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருந்திருக்கிறது என்பது முந்தைய தேர்தல்களின் வரலாறாக உள்ளது. அதே போல் தான் இப்பவும் நடக்கும் என்பது என் எண்ணம்.


கழுத விட்டைல எந்த விட்டை பெருசு?

Source: IBNLive

Read More...

நூல்கள் நாட்டுடமை - எதிர்ப்பு, பதில்

தமிழக பட்ஜெட்டில் 28 தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன என்று நிதி அமைச்சர் க.அன்பழகன் அறிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்ணதாசன் பதிப்பக நிர்வாகி காந்தி கண்ணதாசன் மற்றும், காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாளர் கண்ணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அப்டேட்: அரசு பதில்

காந்தி கண்ணதாசன் அறிக்கை

"தமிழக அரசின் பட்ஜெட் அறிக்கையில் 28 தமிழ்அறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்குவது தொடர்பான பட்டியலில் கவிஞர் கண்ணதாசன் பெயரும் இடம் பெற்றிருக்கிறது. கண்ணதாசன் நூல்களை எக்காலத்திற்கும் நாட்டுடைமையாக்குவதற்கு அவரதுடும்பத்தினர் ஒப்புக்கொண்டது இல்லை; ஒப்புக்கொள்ளப் போவதும் இல்லை.

இந்த பட்டியலில் கண்ணதாசன் பெயர் சேர்ப்பது குறித்து தமிழ் வளர்ச்சித்துறை எங்கள் குடும்பத்தினரை கலந்து ஆலோசிக்காமல், குறைந்தபட்சம் அவரது குடும்பத்தினருக்கு கூட தெரிவிக்காமல் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

கண்ணதாசன் நூல்களை கண்ணதாசன் பதிப்பகமும், வானதி பதிப்பகமும் மிகக் குறைந்த விலையில் வெளியிட்டு மிகப் பரவலாக மக்களிடையே எடுத்துச் சென்றுகொண்டிருக்கிறது.

கண்ணதாசனின் குடும்பத்தினர் நூல்களை நாட்டுடைமையாக்க வேண்டிய நிலையிலும் இல்லை. தமிழ் வளர்ச்சித் துறையின் இந்த தன்னிச்சையான போக்கு தமிழக அரசிற்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.கண்ணதாசன் புத்தகங்களை எங்களது சொத்தாக வைத்துப் பாதுகாத்து வருகிறோம்.

இதை தேசியமயமாக்கும் எண்ணம் துளியும் இல்லை. கண்ணதாசன் குடும்பத்தினருக்கு அவரது எழுத்துகளை பாதுகாப்பது எப்படி என்பது தெரியும்; காப்பற்றவும் எங்களால் முடியும்.

இது தொடர்பாக முதல்வரிடம் மனு அளிக்கவுள்ளோம்"




காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாளர் கண்ணன்

"எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் படைப்புகளை நாட்டுடைமையாக்குவதாக தமிழக அரசு இன்று பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. சுந்தர ராமசாமியின் படைப்புகளின் காப்புரிமையை அரசு பெறுவது பற்றி அவரது குடும்பத்தினரிடம் அனுமதி பெறாமல் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அனுமதி பெறாமல் அரசு அறிவிப்பது சட்ட விரோதமானது.சுந்தர ராமசாமியின் படைப்பு வெளியிடும் உரிமை தற்போது காலச்சுவடு பதிப்பகத்திற்கு மட்டுமே உள்ளது.

சட்டவிரோதமான அரசு அறிவிப்பின் அடிப்படையில் அவர் படைப்புகள் வெளியிட்டு காப்புரிமை சட்டத்தை மீற வேண்டாமென தமிழ் பதிப்பாளர்களை காலச்சுவடு பதிப்பகம் கேட்டுக்கொள்கிறது.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழுக்கு பங்களித்து வந்த சுந்தர ராமசாமியை எந்த கட்டத்திலும் அங்கீகரிக்காத தமிழக அரசு இப்போது அவர் மறைந்து மூன்று ஆண்டுகளிலேயே அவசரமாக நாட்டுடைமையாக்க அனுமதி பெறாமல் அறிவித்திருப்பது அரசின் உள்நோக்கம் பற்றிய சந்தேகங்களை எழுப்புவதாக உள்ளது.

காலச்சுவடு இதழுக்கு நூலகத்தில் தடை விதித்திருக்கும் தமிழக அரசு சுந்தர ராமசாமியின் காப்புரிமையை அபகரித்து காலச்சுவடு பதிப்பகத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் நோக்கத்துடனேய இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக சந்தேகம் எழுகிறது"





அரசு பதில்:

"இன்றைய தலைமுறையினரும், எதிர்காலத் தலைமுறையினரும் எந்தவித சிரமமுமின்றி எளிய முறையில் பயன்பெற வேண்டும் என்பதற்காகத் தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கும் திட்டம் தமிழக அரசால் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இது அரசின் விருப்புரிமை அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது. எந்தவிதக் கட்டாயமும் கிடையாது. நாட்டுடைமையாக்கப்படுவதற்கு சம்பந்தப்பட்ட மரபுரிமையாளர்கள், அவர்களுக்கு கிடைத்துவரும் ‘ராயல்டி’ தொகை கிடைக்காமல் போய்விடும் என்பதற்காக ஒப்புதல் தரவில்லையெனில், தொடர் நடவடிக்கை எடுக்காமல் கைவிட்டு விடுவதை அரசு வழக்கமாய் பின்பற்றி வருகிறது.

உதாரணமாக மூதறிஞர் ராஜாஜி, உ.வே.சா, அகிலன், கவிஅயாகி சுத்தானந்த பாரதியார், கிருபானந்த வாரியார் ஆகியோரது நூல்களை நாட்டுடைமையாக்கிட கடந்த காலத்தில் அரசினால் அறிவிக்கப்பட்டு, பின்னர் சம்பந்தப்பட்ட மரபுரிமையாளர்கள் நாட்டுடைமையாக்கிட ஒப்புதல் தரவில்லை என்பதால், மேல் நடவடிக்கை கைவிடப்பட்டது.

எனவே தற்போது நிதி நிலை அறிக்கையில் நாட்டுடைமையாக்கப் படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள சில நூலாசிரியர்களின் மரபுரிமையர் அவர்களின் நூல்களை நாட்டுடைமையாக்க ஒப்புதல் தரவில்லை என்பதால் கடந்த காலத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறை இப்போது பொருந்தும்"


அடுத்த வருடம் அரசு சாருவின் புத்தகங்களை நாட்டுடைமையாக்குவதாக அறிவித்து, அவரும் மறுப்பு தெரிவிக்காவிட்டால், மக்கள் நிலைமை என்னாவது?

Read More...

தேர்தல் 2009 - பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி பற்றி நித்தியானந்தம்

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி இப்போதுதான் தனித்தொகுதியில் இருந்து பொது தொகுதியாகி உள்ளது பொள்ளாச்சி ,உடுமலை,கினத்துக்கடவு,வால்பாறை (தனி) பல்லடம் , பொங்களூர்.

இதில் பல்லடம் புதிய தொகுதியன திருப்பூருடனும், பொங்களூர் தொகுதி நீக்கப்பட்டு விட்டது.

தற்போது தென்னை மரங்கள் அதிகம் உள்ள பொள்ளாச்சி,விவசய பகுதியான உடுமலை,வறட்சிப் பகுதியான கினத்துக்கடவு,மலைப் பகுதியான வால்பாறை (தனி), புதிதாக சேர்கப்பட்டுள்ள ஊரக நகர்புறமான தொண்டாமுத்துர் மற்றும் அமராவதி நதி பாசன பகுதியான மடத்துக்குளம் ஆகியன உள்ளன.

இம் மக்களவைத் தொகுதி 1999 முதல் மதிமுக வசம் உள்ளது அந்த கட்சிக்கு என்று தனியான கொஞ்சம் ஆதரவும் உண்டு.

தற்போது உள்ள எம்.எல்.ஏ- க்கள்

பொள்ளாச்சி - அதிமுக
உடுமலை - அதிமுக
கினத்துக்கடவு - அதிமுக
வால்பாறை (தனி) - காங்
தொண்டாமுத்துர் - காங்
மடத்துக்குளம் – புதியது.

மற்ற விவரங்கள் விரைவில்

- நித்தியானந்தம்

Read More...

ரஜினியை மோடியாக்க முயல்கிறேன்-சோ

நரேந்திர மோடியின் பொதுமேடை பிரச்சார தொகுப்பை அலையன்ஸ் நிறுவனம் 'கல்வியே கற்பகத் தரு' என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளது. இதற்கான விழா சென்னை நாரதகான சபாவில் நடந்தது. அதில் சோவின் பேச்சு...



இங்கே பேசியவர் நரேந்திர மோடியை தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் என்றார். அதில் எனக்கு உடன்பாடில்லை. நான் சூப்பர் ஸ்டாரை மோடியாக்க வேண்டும் என்று முயற்சிக்கிறேன். இது தான் பெட்டராக இருக்கும். மோடியின் சாதனைகள் குஜராத்துடன் நின்றுவிடக் கூடாது. தேசிய அளவில் வளர வேண்டும், வளரும்.

இப்போது பாரதீய ஜனதா கட்சிக்கு கூட இலங்கை தமிழர்கள் மீது காதல் வந்திருக்கிறது. விடுதலைப்புலிகள் மீது நடத்தி வரும் போரை, விடுதலை புலிகள் வாழ்ந்தாலும் பரவாயில்லை, போரை நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்திருக்கிறது. இலங்கை அரசு அங்குள்ள தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதை எப்படி நிறுத்தச் சொல்ல முடியும்.

(சோ ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கோஷ்டியினர் தமிழில் பேசுங்கள் என்று தொடர்ந்து கூச்சல் போட்டனர். சோ பேச்சை நிறுத்திவிட்டு, ``என்ன மிரட்டுகிறீர்களா, இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன், இந்த மாதிரியான ஒரு வெறித்தனத்தை கிளப்பிவிடத் தான் இது உதவும்'' என்றார்.)

காஷ்மீரில் இந்திய ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் கூறினால் ஏற்க முடியுமா? எனது இந்த கருத்தை எந்த மேடையிலும் கூற எனக்கு உரிமை இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் என்னை பேசச் சொன்னாலும் இந்த கருத்தை தைரியமாக வலியுறுத்துவேன். இந்த பிரச்சினையில் தெளிவான முடிவை எடுத்திருக்கும் ஒரே அரசியல் தலைவர் ஜெயலலிதா தான்.


போஸ்டரில் ஒபாமாவை ரஜினியாக்க முயற்சி செய்கிறார்கள். சோ ரஜினியை மோடியாக்க முயற்சி செய்கிறார். ரஜினியை ரஜினியாக இருக்க விடுங்கள்

Read More...

Tuesday, February 17, 2009

காதலர் தினம் -வலைப்பதிவு கலாட்டா!

இந்த வாரம் ஜூனியர் விகடனில் வந்த நம்ம பரிசல்காரனின் பதிவு.

கலாசாரத்தைக் காப்பாத்த சில அமைப்புகள் ஜரூராக் கௌம்பீட்டாங்கப்பா. காதலர் தினத்தன்னிக்கு ஜோடியாச் சுத்தற காதலர்களுக்கு இவங்க கல்யாணம் பண்ணி வைக்கப் போறாங்களாம்.

இதுக்கு பதிலா பொதுஇடத்துல சிகரெட் பிடிக்க றவங்க, குப்பை போடறவங்களை தண்டிப்போம்னு கிளம்பினாக்கூட ஒரு அர்த்தம் இருக்கு!

கர்நாடகாவில் ராமசேனா அமைப்பு அறிவித்ததும், கோவையிலும் இந்து அமைப்புகள் சில, காதலர் தினத்தன்று தனிமையில் ஜோடியாகச் சுற்றும் (அதெப் படிடா... தனிமைல, ஜோடியா சுத்த முடியும்னு கேட்கப் படாது!) காதலர்களுக்குக் கட்டாயத்திருமணம் செய்துவைக்கப் போகிறார்களாம்.

இவங்களை எப்படி சமாளிக்க?



வீட்டில் சம்மதமும் வாங்கி எளிமையாகத் திருமணம் நடக்கவேண்டும், அதே சமயம் ஊரில் எல்லாருக்கும் தெரியப்படுத்தவும் வேண்டும் என்று நினைப்பவர்கள்

இந்த அமைப்பினர் சுற்றும் இடங்களுக்கு ஜோடி ஜோடியாகப் போய் நின்றுகொண்டு, தங்கள் திருமணத்துக்கு அழைத்திருக்கும் 25, 30 பேரை அங்கங்கே ஒளிந்திருக்கச் சொல்லலாம். அமைப்பினர் வந்து திருமணத்தை நடத்திக் கொடுத்ததும் எல்லாரும் ஓடி வந்து கைகுலுக்கிப் பரிசளித்துவிட்டுப் போகச் செய்ய லாம்! அவங்க மூஞ்சில ஈ ஆடாது!

இந்த அமைப்பினரின் வீட்டிலிருக்கும், காதலித்து அனுமதி கிடைக்காமல் காத்திருக்கும் இளைஞர், இளைஞிகள் அன்றைக்கு தைரியமாக ஜோடியாகச் சுற்றலாம். அப்ரூவல் வித் இம்மீடியட் ஆக்ஷன்!

'வெறும் மஞ்சச் சரடு தாலியைக் குடுத்தா கட்ட மாட்டேன். ஒரு கிராம் தங்கமாவது இருக்கணும்'னு ரகளை பண்ணணும் பையன். அப்படி, ஒரு கிராமோட குடுத்தா, கட்டீட்டு அதே மாதிரி ஊர்ல எட்டு இடத்துக்கு போய் ஒரு பவுனைத் தேத்திடுங்க...

பொண்ணு பார்த்து ரிஜக்ட் ஆன பசங்களுக்கும், பசங்க வேணாம்னு சொன்ன பொண்ணுங்களுக்கும் இது பம்பர் சான்ஸ். ஓரளவு உங்களுக்கு ஏத்த மாதிரி பொண்ணு/பையன்கிட்ட அவங்க வர்ற நேரம் பார்த்து டபக்னு போய் ஒக்கார்ந்துக்கோங்க. மத்தத அவங்க பார்த்துப்பாங்க!

ஜோடியா உட்கார்ந்து பேசிக்கிட்டிருக்கணும். அவங்க பக்கத்துல வந்ததும் கடுமையா ஜோடிகளுக்குள்ள சண்டை போட்டுக்கணும். மறுபடி அவங்க குழம்பி அந்தப் பக்கம் போனப்பறம் பேசணும்... இப்படியேகடுப்படிக்கணும்...

ஜோடியா இருக்கறப்போ வந்து தாலி கட்டுன்னு சொன்னா 'மாங்கல்ய தாரண மந்திரத்தை யாரு ஓதுவாங்க?'னு கேட்டு முழுசா எல்லா மந்திரத்தையும் சொல்லச் சொல்லணும். சொல்லலேன்னா விடாம 'சொல்லு, சொல்லு'ன்னு ராவடி பண்ணணும்.

என்னை மாதிரி கல்யாணம் ஆகி, புள்ள பெத்தப்பறமும் யூத்தா இருக்கறவங்களுக்கு (நெஜமாங்க...), இது ஒரு நல்ல சான்ஸ். பொது இடத்துல ஜோடியா இருந்துகிட்டு, அவங்க வந்து கல்யாணம் பண்ணி வெச்சதும் ஒளிஞ்சு நிக்கற நம்ம குழந்தைகள் ஓடி வந்து ''ஹை! அப்பா--அம்மா கல்யாணத்தைப் பார்த்துட்டேனே''னு கைதட்டிக் குதிச்சுக் கும்மாளம் அடிக்கணும். அவங்களுக்குப் பாடம் சொன்ன மாதிரியும் ஆச்சு, நம்ம குழந்தைகளோட ஆசையை தீர்த்த மாதிரியும் ஆச்சு! இது எப்படி இருக்கு?
- பரிசல்காரன்
www.parisalkaaran.com

நன்றி: ஜூனியர் விகடன்.
வாழ்த்துகள் பரிசல்காரன்!

Read More...

தொகுதி சீரமைப்புக்கு பின் கடலூர் தொகுதி - சிறு குறிப்பு.

தொகுதி சீரமைப்புக்கு பின் கடலூர் தொகுதி - சிறு குறிப்பு - கலைக்கோவன்


தொகுதி சீரமைப்புக்கு பின் கடலூர் தொகுதி - சிறு குறிப்பு.

முந்தைய கடலூர் தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகள் 1. கடலூர் 2. நெல்லிக்குப்பம் 3. பண்ருட்டி 4. உளுந்தூர்பேட்டை (SC) 5. ரிஷிவந்தியம் 6. சங்கராபுரம் இவற்றில் உளுந்தூர்பேட்டை தற்போது விழுப்புரம் தொகுதியுடனும் , ரிஷிவந்தியம் மற்றும் சங்கராபுரம் கள்ளகுறிச்சி தொகுதியுடனும் இனக்க்கப்பட்டு விட்டன.

ஆக,
இன்றைய கடலூர் தொகுதியுடன், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் இருந்த விருத்தாசலம் ,குறிஞ்சிப்பாடி மற்றும் மங்களூர் (SC) (திட்டக்குடி) தொகுதி இணைந்து, கீழ்கண்ட சட்டமன்ற தொகுதிகளுடன் களம் காண இருக்கின்றன.

1. கடலூர்
2. பண்ருட்டி
3. நெய்வேலி
4. விருத்தாசலம்
5. குறிஞ்சிப்பாடி
6.திட்டக்குடி (SC)

இவற்றில் நெல்லிக்குப்பம் தொகுதியுடன் பண்ருட்டி நகராட்சி சேர்த்து பண்ருட்டி தொகுதியாகவும் , குறிஞ்சிப்பாடி தொகுதியில் இருந்த நெய்வேலி பிரிக்கப்பட்டு , அதனுடன் பண்ருட்டி ஒன்றியமும் சேர்ந்து நெய்வேலி தொகுதியாகவும் , மங்களூர் தொகுதி திட்டக்குடி தொகுதியாகவும் வலம் வரப்போகின்றன.

கடலூரில் வென்றவர்கள் 1977 லிருந்து இன்றுவரை
1977: G. பூவராகன், இ. காங்கிரஸ்
1980: R. முத்துகுமரன் , இ. காங்கிரஸ்
1984: P.R.S. வெங்கடேசன் , இ. காங்கிரஸ்
1989: P.R.S. வெங்கடேசன், இ. காங்கிரஸ்
1991: P.P. கலியபெருமாள் ,இ. காங்கிரஸ்
1996: P.R.S. வெங்கடேசன், தமிழ் மாநில காங்கிரஸ்
1998: M.C. தாமோதரன் , அ.தி.மு.க
1999: ஆதி சங்கர், தி.மு.க
2004: K. வேங்கடபதி , தி.மு.க

அதிக நட்சத்திர மதிப்பு இல்லை என்றாலும் கூட,இன்றைய எம்.பி., K. வேங்கடபதி மத்திய சட்ட இணை அமைச்சராக உள்ளார்.

கொசுறு தகவல் :-
1991-ல் P.R.S. வெங்கடேசன் கடலூர் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார், இல்லையெனில் நேரடி ஹாட்ரிக் அடித்திருப்பார்.

- கலைக்கோவன்


Read More...

சுப்பிரமணியசாமியை வக்கீல்கள் அடித்து உதைத்தனர்

ஐகோர்ட்டில் நீதிபதி முன்பு சுப்பிரமணியசாமியை வக்கீல்கள் அடித்து உதைத்தனர். அவர் மீது அழுகிய முட்டைகள்- தக்காளிகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிதம்பரம் நடராகர் கோயில் வழக்கில் தீட்சிதர்களுக்கு ஆதரவாக மனுத்தாக்கல் செய்ய இன்று சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வந்தார் சுப்பிரமணிய சாமி. அப்போது இலங்கை பிரச்சனையால் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்கள் சுப்பிரமணிய சாமி மீது முட்டைகள் வீசி தாக்கினர்


தக்காளி, முட்டை விலை பட்ஜெட்டில் இறங்கியுள்ளது என்று நினைக்கிறேன்.

Read More...

தேர்தல் 2009 - தூத்துக்குடி!

தூத்துக்குடி கள நிலவரங்களை கொண்டுவருகிறார் அமுதப்ரியன்...


இது புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள தொகுதி.
இதில் 6 சட்டமன்ற தொகுதிகள் அடக்கம்:

[1] விளாத்திகுளம் - அதிமுக.
[2] ஓட்டப்பிடாரம் - அதிமுக.
[3] தூத்துக்குடி - திமுக.
[4] திருவைகுண்டம் - காங்கிரஸ்.
[5] திருச்செந்தூர் - அதிமுக.
[6] கோவில்பட்டி - அதிமுக.

கட்சிகள் பற்றி:-

அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் சம பலத்துடன் உள்ளன.
ஏனைய கட்சிகள் மேற்படி கட்சிகளை நம்பி உள்ளன.
மற்றபடி, திமுகவைப் பொருத்தவரையில், மாவட்ட செயலாளர், பெரியசாமியை யார் "சாமி"யாக நினைக்கிறார்களோ அவர்கள் வெற்றி பெறுவார்கள் . [ இதற்கு 1998 தேர்தலில் சரத்குமார் ஒரு உதாரணம் ]. இதில் பெரியசாமியின் மகள் கீதாஜீவன் தற்போதைய தமிழக சட்டசபையில் அமைச்சராக உள்ளார்.
அதிமுகவைப் பொருத்தவரையில் முன்னாள் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணண், சண்முகநாதன் ஆகிய கோஷ்டிகள் உள்ளன.

ஜாதிகள் பற்றி:

தேவர், நாடார் மற்றும் தலித் இனத்தினர் சம அளவில் உள்ளனர். இந்த தொகுதியில் கட்சிகள் ஜாதி பார்த்துதான் வேட்பாளரை நிறுத்தும்.

தொழில்கள்:

[1] விவசாயம்
[2] மீன் பிடித்தல்
[3] உப்பு எடுத்தல்
[4] 8 தொழிற்சாலைகள் ( in and around Thoothukudi )

எதிர்பார்ப்புகள்:

[1] வாழை நார் தொழிற்சாலை
[2] தூத்துக்குடிக்கு மேலும் இரயில்கள்
[3] அடிப்படை வசதிகள்
[4] IT சம்பந்தப்பட்ட தொழிகள்..

மற்ற விவரங்கள் UPDATE செய்யப்படும்.

- அமுதப்ரியன்.

Read More...

Monday, February 16, 2009

சரவணனுக்கு உடனடியாக உதவி தேவை


மேலே உள்ள படத்தில் இருக்கும் குழந்தை பெயர் சரவணன். சில மணி நேரத்துக்கு முன் வந்த மின்ஞ்சல்...



Hi,

We need to post the following request in your forum -
(http://idlyvadai.blogspot.com/) blogspot. Please do the needful and let's know the status

This is Sureshkumar, Class of 2005, ECE, CEG, Anna University.

We need your help to get the financial support to perform a surgical operation for a 3 month old baby boy,J Saravana.

One of our friend (GD Thirumalavasan) is running a shop at DLF IT park, chennai and his employee, Mr. Jai Kumar was blessed with a male baby 3 months ago. Mr. Jai, is a very hard working employee coming from very modest back grounds. He himself is a physically challenged person with considerable difficulty in his right hand and right leg.

His child, Baby Saravana is found to have a hole in his heart, owing to which the child is suffering from respiratory related problems. The Doctors at "Frontier Lifeline Hospital" have advised a surgical operation within 2 weeks to over come the problem.

Please find the substantiating documents and photos attached with this mail.


The whole process of surgery and the post surgical care would require a sum of Rs. 2,00,000/- (Rupees Two lakhs only). We are in the process of raising this sum thro' contributions from kind hearted donors.


We (CEGians2005 batch) are co-ordinating the Fund Raising Programme with the fellow CEGians and their contacts. But we are able to raise nearly 50,000 till today 16-Feb-2009.


A Google Document is created for the purpose of recording the contributions from all and the same is being updated every day.

http://spreadsheets.google.com/ccc?key=ptW2P7eik3kxVpha5gBGYaA&hl=en

We plan to raise the remaining funds before 25th Feb 2009.


Since, the time duration is very less, we couldn't opt the free medical procedures that are available elsewhere and have decided to do the surgery at FRONTIER LIFELINE PVT.LTD., Mugappair, Chennai under the aegis of Dr. KM Cherian.

If you are interested in helping this child, kindly contribute sums to any of the following Bank accounts,

ICICI BANK LTD.
________________________________
Frontier Commercial Corp.
ICICI Bank A/c # 0077 0500 8722
KK Nagar Branch, Chennai

HDFC BANK LTD.,
________________________________
Vijayakumar R
HDFC Bank A/c # 036 416 1000 1953
Kukatpally Branch, Hyderabad

Alternately, one can send the cheques/ DD/ cash remittance in favor of "The Frontier Lifeline Pvt. Ltd." for Baby J Saravana and mail it to their address at

FRONTIER LIFELINE PVT. LTD.
Dr. KM Cherian Heart Foundation
R 30 C, Ambattur IE Road, Mogappair, Chennai - 600 101.

Please do the needful, Help us in making this surgery a successful one

For any further details, you can contact us or the hospital directly

Regards,

Sureshkumar Karuppuchamy
Moderator - CEGians group


NOTE: The date on the photo is 2007 and that is due to the issue in the camera which was used to take the photos.







இட்லிவடை படிப்பவர்கள் ஆளுக்கு 100 ரூபாய் கொடுத்தால் கூட இவர்களுக்கு ஒரு கணிசமான தொகை போய் சேரும். உதவுங்கள் நண்பர்களே !


Read More...

மென் இன் பிளாக் ?


சென்னையில் எங்கு பார்த்தாலும் இந்த போஸ்டர் தான்
யாருக்காவது இதை பற்றி தெரிந்தால் சொல்லவும்.

Read More...

Sunday, February 15, 2009

தேர்தல் 2009 - சென்னை (தெற்கு) குறிப்புகள்

சென்னை (தெற்கு) நாடாளுமன்றத் தொகுதி குறிப்புகள்

சென்னை சென்னை (தெற்கு) நாடாளுமன்றத் தொகுதி இத்தனை ஆண்டுகால குடியரசு வரலாற்றில் மிக முக்கிய தொகுதி இந்தியாவின் இரண்டாவது நிதியமைச்சர் டி.டி. கிருஷ்ணமாச்சாரி, நாஞ்சில் மனோகரன் , அறிஞர் அண்ணா, முரசொலி மாறன், முன்னாள் ராஷடிரபதி ஆர். வெங்கட்ராமன், வைஜெயந்தி மாலா போன்ற விஐபிகளின் தொகுதி.

இந்த்த் தொகுதியின் இப்போதைய உறுப்பினர் மத்திய அமைச்சர் டி ஆர் பாலு. இவர் 1996 லிருந்து இந்த்த் தொகுதியை தன் கோட்டையாக வைத்திருக்கிறார்
தியாகராய நகர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, ஆலந்தூர்,தாம்பரம் சட்ட மன்றத் தொகுதிகள் இதிலே 2004ல் நடந்த தேர்தலில் டிஆர் பாலு அதிமுகவின் பதர் சையீதை 220740 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்
இதோ தேர்தல் நெருங்குகிறது....விரைவில் மக்களிடம் பேசி அவர்கள் என்ன நினைகிறார்கள் என்று சொல்லுகிறேன்.
- சந்தரசேகர்
கோட்டையாக வைத்திருப்பவர் கோட்டைவிடுவாரா ?

Read More...

தேர்தல் 2009 - மயிலாடுதுறை துபாய் ஆனதா ?

'மயிலாடுதுறையை துபாய் ஆக்குவேன்' என்று சொல்லியே தொடர்ந்து எம்.பி. ஆகி வருகிறார் காங்கிரஸின் மணி சங்கர் ஐயர். முதன் முதலில் 89-ம் ஆண்டின் ஆரம்பத்தில் மயிலாடுதுறைத் தொகுதியின் அப்போதைய எம்.பி. ஈ.எஸ்.எம். பக்கீர் முஹம்மது இறந்த பிறகு மயிலாடுதுறைக்கு விஜயம் செய்தார் மணிசங்கர் ஐயர்.

ஏதோ மக்கள் இயக்கம் என்ற பெயரில், ராஜீவ் காந்தியின் உற்ற நண்பர் என்ற மேல் இடத்து சிபாரிசினால் மயிலாடுதுறையில் ஒரு பெரிய ஊர்வலத்தை விட்ட போது அவருக்கு தமிழில் ஒரு வார்த்தை கூடத் தெரியாது. 'நம்மூரு இடைத் தேர்தலில் இவருதாம்ப்பா நிக்கப் போறாரு' என்று செய்தி வெளியானது. 'அப்படியா?' என்று கேட்ட போது 'அப்படியெல்லாம் இல்லை, கட்சி விரும்பினால் ஓ.கே' என்ற வழக்கமான புதுமுக அரசியல்வாதி டயலாக் விட்டார் அவர்! அப்புறம் இடைத் தேர்தல் நடத்தாமல் அடுத்த பொதுத் தேர்தலில் நிற்க அவருக்கு மயிலாடுதுறையில் சீட் கிடைத்தது. இடைப்பட்ட ஆறேழு மாத காலத்தில் பலமுறை மயிலாடுதுறைக்கு விஜயம் செய்தார். ஓரளவிற்கு தமிழை 'பேஷ' கற்றுக் கொண்டார். 91-ம் வருட பொதுத் தேர்தலில் மயிலாடுதுறையில் தனது நண்பருக்காக பிரசாரம் செய்ய முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி வரச் சம்மதித்தார். ராஜன் தோட்டத்தில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தது. மே மாதம் 22-ம் நாள் காலையில் பொதுக்கூட்டம். ஒட்டுமொத்த மாயுரமே ராஜீவ்காந்திக்காக ஆவலாக காத்திருந்தது. அதற்கு முதல் நாள் இரவு தான் ஸ்ரீபெரும்புதூரில் கூட்டம்.


இரவு முழுவதும் நகர் முழுவது பவர்-கட். (ஆற்காட்டார் அப்போது மின்வெட்டுத்துறை அமைச்சரில்லை!) சுமார் பத்தரை மணியளவில் ரோட்டில் கடும் கூச்சல். கொஞ்ச நேரம் கழித்து தான் அந்த 'துன்பியல் சம்பவம்' தெரிய வந்தது. ஒருவேளை அங்கே தப்பியிருந்தால், மறுநாள் மயிலாடுதுறையின் பெயர் இந்தியா முழுவதும் பரவியிருக்கும் என்று மக்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.


அப்புறம் மணிசங்கர் எம்.பி.யானது, ஜெ. ஆட்சியில் நாகப்பட்டின மாவட்டத் துவக்க விழாவின் போது கூட்ட மேடைக்கு ஒரு கிலோ மீட்டர் முன்னதாகவே அவரை இறக்கி விட்டு நடந்து வரவழைத்தது, வேறொரு முறை கும்பகோணம் அருகில் அவரை ஓட ஓட விரட்டியது என்றெல்லாம் அரசியல் பரபரப்புகள் அதிகம். 'ஒருவேளை ராஜீவ்காந்தி இருந்திருந்தால் நம்மாளு பெரிய அமைச்சரா ஆகியிருப்பாருப்பா' என்று ஒவ்வொரு தடவையும் மக்கள் சமாளிபிகேஷனுக்காக இந்த முறை மத்திய பஞ்சாயத்து அமைச்சர். ஆனால் அமைச்சராகி தொகுதிக்கு என்னத்த கிழித்தார் என்று தான் தெரியவில்லை.
இறால் பண்ணை பரபரப்பு, அது இதுவென்று அடிக்கடி தொகுதியில் அவர் பெயர் அடிபடுகிறது. நடுவில் ஒருமுறை காங்கிரஸில் சீட் கிடைக்காமல் சுயேட்சையாக நின்று ஓரளவு நியாயமான ஓட்டு வாங்கி தோற்றும் போயிருக்கிறார். பாராளுமன்ற தொகுதி சீரமைப்பின் போது மயிலாடுதுறை தொகுதியே காலி என்று அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் இறுதிப் பட்டியலில் மீண்டு(ம்) வந்ததில் அன்னாரது கைங்கரியம் அதிகம் என்பதால் மண்ணின் மைந்தர்களுக்கு அவர் மீது ஒரு ஸாப்ட் கார்னர் ஏற்பட்டிருக்கிறது.

அண்மையில் 'சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்' என்று ஜனாதிபதியிடமிருந்து விருது வாங்கியிருக்கிறார் என்பது உச்சகட்ட தமாஷ். அவர் குறித்து தொகுதி மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்ற விரிவான அலசல் அடுத்த கட்டுரையில்...

- மயிலாடுதுறை- மாயவரத்தான்

கதாநாயகன் படத்தில் வருமே அந்த துபாயை சொல்லியிருக்க போகிறார் எதற்கும் ஒரு முறை அவரை கேட்டு பாருங்க

Read More...

Friday, February 13, 2009

நோ கமெண்ட்ஸ் !

இந்த வாரம் துக்ளக் முன் அட்டை

பின் அட்டை கிழே...


Read More...

நான் கடவுள் - காவியும் காசியும் -ஹரன் பிரசன்னா

நான் கடவுள் - காவியும் காசியும் -ஹரன் பிரசன்னா

'நான் கடவுள்' படம் தமிழ்த் திரையுலகம் இதுவரையில் காணாத காட்சிகளைக் காண்பிக்கிறது. கதையின் நிகழ்களமாக எடுத்துக்கொள்ளப்படும் பிச்சைக்காரர்களின் உலகம் இதுவரை யாரும் திரையில் காணாதது. அதற்காக பாலா மெனக்கெட்டிருக்கும் விதம் அசாத்தியமானது. ஒவ்வொரு பிச்சைக்காரரையும் தேர்வுசெய்து நடிக்க வைத்திருப்பதற்கே நிறைய நாள்கள் தேவைப்பட்டிருக்கும். ஏழாவது உலகம் நாவலை படித்திருக்காத பலருக்கு, இத்திரைப்படம் பெரும் அதிர்ச்சியையும், அருவருப்பையும், பயத்தையும் ஒருங்கே ஏற்படுத்தியிருக்கும் என்பது உறுதி. அதேபோல் தமிழ்த்திரையுலம் காணாத இன்னொரு விஷயம், சன்யாசிகளின் வாழ்க்கை. ஹிந்துமதம் தொடர்பான எந்த ஒரு காட்சியையும் விமர்சனத்தோடும், கேலியோடும், கிண்டலோடும் மட்டுமே எடுக்கும் தைரியம் கொண்ட கமல்ஹாசன், பாலசந்தர் வகையறாக்களுக்கு மத்தியில், இந்து மதச் சார்பான குரல்கள் - அது நியாயமான ஒன்றாக இருந்தாலும் கூட - எங்கேயும் வெளிவந்துவிடக்கூடாது என்ற கருத்தியல்கள் கொண்ட சிற்றிதழ்ச் சூழலில், உள்ளதை உள்ளபடி, அதுவும் அதை ஒரு மாபெரும் மக்கள் ஊடகத்தில் காண்பிக்கும் தைரியம் பாலாவிற்கு இருந்திருக்கிறது. படம் முழுக்க காவி நிறம். இந்த ஒரு காரணத்தினாலும், அகோரி தொடர்ந்து சமிஸ்கிருத வசனங்கள் பேசியபடியே வருவதானாலும் இது ஹிந்துத்துவ படம் என்கிற கருத்து ஒலிக்கிறது. ஆனால் உண்மையில் இத்திரைப்படம் இறை நம்பிக்கைக் கொண்டவர்களின் கருத்தைவிட அதிகமாக, இறையால் கைவிடப்பட்டதாகக் கருதிக்கொள்ளும் விளிம்பு நிலை மக்களின் எதிர்க்குரலைப் பதிவு செய்துள்ளதாகவே நான் காண்கிறேன். இதில் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், எந்த ஒரு மதத்தின் மீதும் கரிசனம் காட்டப்படவில்லை என்பதே. இஸ்லாம், கிறித்துவம் என்று வரும்போது கருணை பொங்கும் பகுத்தறிவும், ஹிந்துமதம் என்று வரும்போது அறிவுபூர்வமான பகுத்தறிவும் கொள்ளும் கலைஞர்களுக்கு இத்திரைப்படத்தை சமர்ப்பிக்கலாம்.

பிதாமகன் திரைப்படம் வந்தபோது, பாலாவிற்கு மனப்பிறழ்ச்சி என்கிற வகையிலெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. (இத்தகைய திரைப்படங்கள் வருவதற்கு ஒரு இயக்குநரின் மனப்பிறழ்ச்சிதான் காரணம் என்றால், அந்த மனப்பிறழ்ச்சி நிறைய இயக்குநர்களுக்கு வரட்டும்.) அதே விமர்சனங்கள் இத்திரைப்படத்திலும் தொடரக்கூடும். பாலாவின் கதாநாயகர்கள் அசாதரணர்களாகவே வருவது, இவ்விமர்சனத்தின் பின்னாலிருக்கும் முக்கியமான காரணம். பிதாமகனில் விக்ரமின் பாத்திரம் ஏன் அப்படி அசாதரணனாக இருக்கவேண்டும் என்பதற்கு எவ்விதக் காரணமும் சரியாகச் சொல்லப்படவில்லை. இப்படத்திலும் அதுவே தொடர்கிறது. ருத்ரன் அகோரியாக வாழ்கிறான். அவனை யாரும் நெருங்கமுடியாது. அவன் யாரையும் அடித்து வீழ்த்தி வெற்றிகொண்டு விடுவான். இவற்றையெல்லாம் நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். அதன் பின்னர்தான் நம்மால் இப்படத்தைப் பார்க்கவே முடியும். தனது முந்தைய படங்களின் வழியே, பாலா இதற்கு நம்மைப் பழக்கிவிட்டார் என்பதால் இதனை அப்படி ஏற்றுக்கொண்டுவிட முடிகிறது. ஆனால், இதே போன்ற பாத்திரங்களின் வழியே தொடர்ந்து படமெடுப்பதைப் பற்றி பாலா யோசிக்கத் தொடங்கவேண்டும். மிக வித்தியாசமான ஒரு திரைப்படம், மசாலா திரைப்படம்தான் என்கிற வட்டத்துக்குள் சிக்குவது இது போன்ற சித்திரிப்புகளாலேயே.

பிதாமகனில் செய்த இன்னொரு தவறை பாலா மீண்டும் செய்திருக்கிறார். காவல்நிலையத்தில் வரும் நகைச்சுவைக் காட்சிகள், படத்திற்குத் தேவையில்லாதவை மட்டுமல்ல. ஒருவித தவம் போலச் செல்லும் படத்தின் அமைதியை வெகுவாகக் குலைக்கின்றன.

இத்திரைப்படத்தில் பாலாவின் வெற்றி, விளிம்பு நிலை மனிதர்களை அவர் காட்சிப்படுத்தியிருப்பதில் இருகிறது. ஒருவகையில் இது ஜெயமோகனின் வெற்றி. பிச்சைக்காரர்கள் சதா அழுதுகொண்டே இருப்பதில்லை. அவர்களின் உலகம் கேலி, கிண்டல், காதல் உள்ளிட்ட எல்லாவற்றினாலும் ஆனது. பிச்சையெடுக்கும் சிறுவன் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் முக்கியமானவை. மிகக் கடுமையான திரைக்கதையை வசனத்தின் மூலம் சமனாக்கியிறார் பாலா. ஜெயமோகனின் நக்கல் வசனங்கள் திரைப்படம் முழுவதும் வியாபித்துக் கிடக்கின்றன. இவையே படம் பார்ப்பவர்களை படத்தோடு ஒன்றச் செய்கின்றன. இல்லையென்றால் இத்திரைப்படம் திரைப்பட விழாவிற்கு மட்டுமான திரைப்படமாகியிருக்கும்.

ருத்ரனாக நடித்திருக்கும் ஆர்யாவிற்கு வேலை அதிகமில்லை. புஜங்களைத் தூக்கியபடி, முடியில் முகத்தை மறைத்துக்கொண்டு, சதா கஞ்சா போதையில் கண்களைச் சுழலபட்டி நடக்கவேண்டும். அவரது வேலையை மிக நன்றாகவே செய்திருக்கிறார். இவ்வேடத்தில் அஜித்தை நினைத்துப் பார்க்கும்போதே குலை நடுங்கியது. பாலாவிற்கு என்னதான் தன்னம்பிக்கை அதிகம் என்றாலும், அஜித்தை முதலில் ஒப்பந்தம் செய்ததெல்லாம் கொஞ்சம் ஓவர். பூஜாவின் நடிப்பு அசத்தல். ஒரு தேசிய விருதுக்கு துண்டு போட்டு வைத்திருக்கிறார். பூஜாவின் உழைப்பிற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கவேண்டும்.

திருநங்கைகள் தொடர்ந்து தமிழ்த்திரைப்படங்களில் காட்டப்பட்டு வரும் விதம் குறித்து குமுறியவர்களுக்கு இதம் தரும் வகையில், இத்திரைப்படத்தில் திருநங்கையின் பாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. திருநங்கையாக வருபவர், மற்ற எந்தக் கதாபாத்திரம் போலவே வடிவமைக்கப்பட்டிருக்கிறார். தமிழில் இது ஒரு சாதனை. அவர்கள் மேல் தேவையற்ற காட்சிரீதியிலான கிண்டல்கள் வைக்கப்படவில்லை. திருநங்கைகளைப் பொதுமைப்படுத்திச் சித்திரிக்கும் அவலம் எல்லாம் இல்லாமல், அப்பாத்திரம் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கும் பாலாவைப் பாராட்டவேண்டும். அதோடு, இதுபோன்ற திரைப்படங்களில் வரும் கதாநாயகி ஒரு பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்படுவார். அது அவரது எஜமானாலேயோ அல்லது ஒரு பொதுஜனத்தாலேயோ அல்லது இருவருமாலேயோ நிகழும். இது போன்ற க்ளிஷே காட்சிகள் இப்படத்தில அறவே தவிர்க்கப்பட்டிருப்பது இன்னொரு முக்கிய விஷயம். அதன் காரணம், பாலா பூஜாவை ஒரு நடிகையாகப் பார்க்காமல், ஒரு பிச்சைக்காரப் பெண்ணாக மட்டும் பார்த்திருப்பதுதான் எனலாம். பெரும்பாலான தமிழ்ப்படங்களில் இது நிகழ்வதே இல்லை என்பதே இத்தகைய அபத்தக் காட்சிகள் இடம்பெறுவதற்கான காரணம்.

ருத்ரனின் அம்மாவாக நடிக்கும் பெண்மணிக்கு பதில் வேறு யாரையாவது நடிக்க வைத்திருக்கலாம். ஒரு சிக்கலான மனநிலையைச் சொல்லவேண்டிய அவருக்கு அழமட்டுமே தெரிகிறது. இதுபோன்ற காட்சிகளில் ஒரு புதுமுகத்தை நடிக்க வைப்பதே நல்லது. கவிஞர் விக்கிரமாதித்யன் ஆச்சரியமான சந்தோஷம்.

எல்லாவற்றையும்விட முக்கியமானது படத்தின் இசை. இத்திரைப்படத்தின் உண்மையான ஹீரோ இளையராஜாதான். குணா, மகாநதி, ஹே ராம், விருமாண்டிக்கு அடுத்து வந்திருக்கும் மிகச்சிறந்த இசைக்கோவை உள்ள திரைப்படம் இதுவே. நெஞ்சை அதிர வைக்கும் இசை, மனதை உருக வைக்கும் இசை, காட்சியின் வீர்யத்தை அப்படியே உள்வாங்கிக்கொள்ளும் இசை என இளையராஜா மாறாத உருவங்களில்லை. இசையில் நெருப்பு எரிகிறது. நதி ஓடுகிறது. சங்கு ஒலி சங்கை அறுக்கிறது. ஹே ராம் திரைப்படத்திற்கே இளையராஜாவிற்கு தேசிய விருது கிடைக்கவில்லை. இத்திரைப்படத்திற்கு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதே தவறு என்றுதான் நினைக்கிறேன். பாடல்களைப் பொருத்தவரை, ஓம் சிவோகம் பாடல் இன்னும் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. மற்ற பாடல்கள் எல்லாமே சுமார் ரகம். மது பாலகிருஷ்ணனின் மயக்கும் குரலில் ஒரு பாடல் வருகிறது. ஆனால் அது மனதில் தங்கவே இல்லை.

ஒளிப்பதிவு வெகு அழகு. காசி நகரக் காட்சிகளிலும், சண்டைக் காட்சிகளிலும் காமராவின் வேகம் அசர வைக்கிறது.

பெரும்பாலும் வித்தியாசம் மற்றும் பிரம்மாண்டம் ஒருங்கே இணைந்த தமிழ்த் திரைப்படங்களை (ஹே ராம், குருதிப்புனல், மகாநதி, குணா போன்றவை) கமல்ஹாசனே தந்திருக்கிறார். அதை இம்முறை பாலா தந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. விருமாண்டிக்குப் பிறகு ஒரு நல்ல திரைப்படம் இல்லாத நிலையில், நான் கடவுள் அக்குறையைத் தீர்க்கிறது. கமல் செய்யும் நுண்ணரசியல் எதுவும் இல்லாமல், பின்னோக்கங்கள் எதுவும் இல்லாத தெளிவான படமாகவும் 'நான் கடவுள்' இருப்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. ஹே ராம் போல, இது தமிழ்த் திரையுலகின் மைல்கல்லா என்றால் கிடையாது. ஆனால் தமிழ்த் திரையுலகின் முக்கியமான படங்களில் இது ஒன்று. நந்தாவைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், சேது, பிதாமகன், நான் கடவுள் என பாலாவின் கிராஃப் உயர்ந்துகொண்டேதான் செல்கிறது. இத்திரைப்படம் இதுவரை வந்திருக்கும் பாலாவின் படங்களில் சிறந்த படம். வரும் படங்களில், இன்னும் அதிக உயரத்தை பாலா தொடுவார் என உறுதியாக நம்பலாம்.

இட்லிவடைக்கு ஸ்பெஷலாக எழுதி கொடுத்த ஹரன் பிரசன்னாவிற்கு நன்றி

மஞ்சள் கமெண்ட் எதுவும் இல்லை ;-)

Read More...

காதலர் தினம் - ப.சிதம்பரம் எச்சரிக்கை

காதலர் தினத்தன்று சட்டம்-ஒழுங்கை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடியூரப்பாவுக்கு, மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் உத்தரவு

கர்நாடகத்தில் ஸ்ரீராம் சேனை அமைப்பும் மற்றும் சங்க்பரிவார் அமைப்புகள் காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். காதலர் தினத்தன்று காதல் ஜோடிகளை இந்த அமை�புகள் தாக்கக்கூடும் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. கர்நாடகத்தில் காதலர் தினத்தன்று காதலர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை கர்நாடக அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவை இன்று தொடர்பு கொண்டு உத்தரவிட்டுள்ளார். மேலும் சட்டம்-ஒழுங்கை சீர்குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்றும் ப.சிதம்பரம் எடியூரப்பாவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
நேற்று பாக்கிஸ்தானுக்கு எச்சரிக்கை, இன்று ராம சேனைக்கு எச்சரிக்கை

Read More...

Wednesday, February 11, 2009

தேர்தலுக்கு முன் பாராளுமன்றம் கூடுகிறது

பாராளுமன்றம் நாளை கூடுகிறது!.

நாளை முதல் 10 நாட்களுக்கு இது நடைபெறும்.

இது கடைசி கூட்டத் தொடர் அதனால் வழக்கத்துக்கு மாறாக பல காமெடி நடைபெறலாம்.

முதலில் ஜனாதிபதி பிரதீபா பட் டீல் அரசின் சாதனைகள் சொல்லி உரையாற்றுவார்.

வழக்கம் போல் பாரதீய ஜனதாவும், இடது சாரிக்கட்சிகளும் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி மக்களின் கவனத்தையும், மீடியாவின் கவனத்தையும் கவர முயற்சி செய்வார்கள்.

- தீவிரவாதம்,
- பொருளாதார பிரச்சினை,
- பணவீக்கம்,
- நவீன் சாவ்லா பதவி நீக்கம்

காங்கிரஸ் வழக்கம் போல் ராமர் கோவில் பிரச்சனை கையில் எடுக்கும்.

இடது சாரி கட்சிகளுக்கு இருக்கவே இருக்கு ரெடிமேட் பிரச்சனைகள்

- விலைவாசி உயர்வு
- வேலை இழப்பு

இந்த முறை இவர்கள் காங்கிரஸ் கூட்டணியில் இல்லாததால் புதுசாக ஈழத்தமிழர்கள் படுகொலை பற்றி பேசுவார்கள் என்று தெரிகிறது. பா.ம.க, மதிமுக கடைசி வரிசையில் உட்கார்ந்து குரல் கொடுப்பார்கள். திமுக, காங்கிரஸ் என்ன செய்கிறது என்று வேடிக்கை பார்க்கும்.

இருதய சிகிச்சை செய்துள்ளதால் இந்த கூட்டத் தொடரில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது.

----------------oOo--------------oOo-----------------oOo-------------------
தேர்தல் பற்றி சிறப்பு பதிவுகள் இட்லிவடையில் போடலாம் என்று இருக்கிறேன். ( நாராயணன், மாலன் போன்ற பெரியவர்கள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் நான் கொஞ்சம் அடக்கியே வாசிக்க விரும்புகிறேன். )

தமிழ்நாட்டில் இருக்கும் பாராளுமன்ற தொகுதிகளில் இருக்கும் வாசகர்களை கொண்டு ஒரு தேர்தல் குழு ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். அந்ததந்த தொகுதியில் நடக்கும் கூத்துக்களை ( செய்திகள், படங்கள் ) எனக்கு அனுப்பினால் நன்றாக இருக்கும்.

என்ன என்ன தொகுதிகள் என்ற விவரம் கீழே

1. திருவள்ளூர் (SC)
2. சென்னை - வடக்கு
3. சென்னை - மத்தி
4. சென்னை - தெற்கு
5. திருபெரும்புதூர்
6. காஞ்சிபுரம் (SC)
7. அரக்கோணம்
8. வேலூர்
9. கிருஷ்ணகிரி
10. தர்மபுரி
11. திருவண்ணாமலை
12. ஆரணி
13. விழுப்புரம் (SC)
14. கள்ளக்குறிச்சி
15. சேலம்
16. நாமக்கல்
17. ஈரோடு
18. திருப்பூர்
19. நீலகிரி (SC)
20. கோயமுத்தூர்
21. பொள்ளாச்சி
22. திண்டுக்கல்
23. கரூர்
24. திருச்சிராப்பள்ளி
25. பெரமலூர்
26. கடலூர்
27. சிதம்பரம்
28. மயிலாடுதுறை
29. நாகப்பட்டினம் (SC)
30. தஞ்சாவூர்
31. சிவகங்கை
32. மதுரை
33. தேனி
34. விருதுநகர்
35. ராமநாதபுரம்
36. தூத்துக்குடி
37. தென்காசி (SC)
38. திருநெல்வேலி
39. கன்னியாகுமரி


இந்த தொகுதியில் நீங்கள் இருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள், ஒரே தொகுதிக்கு பலர் இருந்தாலும் பரவாயில்லை.


பிகு:
இந்த பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில், 13 தொகுதிகள் புதிய பெயர்களுடன் முதல்முறையாக களத்தில் குதிக்கின்றன. அந்த விவரம்

மறுசீராய்வின்படி

செங்கல்பட்டு,
திருப்பத்தூர்,
வந்தவாசி,
திண்டிவனம்,
ராசிபுரம் (தனி),
திருச்செங்கோடு,
கோபிச்செட்டிபாளையம்,
பழனி,
பெரியகுளம்,
புதுக்கோட்டை,
சிவகாசி,
திருச்செந்தூர்
நாகர்கோவில்

ஆகிய 13 தொகுதிகளின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக, 13 புதிய பெயர்களில் தொகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் (தனி),
காஞ்சீபுரம் (தனி),
திருவண்ணாமலை,
ஆரணி,
விழுப்புரம் (தனி),
கள்ளக்குறிச்சி,
நாமக்கல்,
ஈரோடு,
திருப்பூர்,
தேனி,
விருதுநகர்,
தூத்துக்குடி
கன்னியாகுமரி
ஆகியவை புதிய பெயர்களில் உருவாக்கப்பட்டுள்ள தொகுதிகள் ஆகும்.


அத்வானிவலைத்தளத்தின் விளம்பரம் இட்லிவடையில் வருவதற்கு காரணம் கூகிள் ஆட்ஸ். இட்லிவடையின் நடுநிலமை பற்றி சந்தேகம் வேண்டாம் :-)

Read More...

Tuesday, February 10, 2009

ந-வீண் சாவு-Law

நவீன் சாவ்லா பற்றி இந்நேரம் உங்களுக்கு தெரிந்திருக்கும். பலர் பல விதமாக இவரை பற்றி பேசலாம்.

ஆனால் இவர் எவ்வளவு நல்லவர் என்று எடுத்தக்காட்டவே இந்த பதிவு.


பா.ஜ.க அரசியல் காரணங்களுக்காக அவர் மீது குற்றச்சாட்டை கூறியது, அந்த குற்றச்சாட்டுகளை இன்று வரை நவீன் சாவ்லா மறுக்கவில்லை. அடுத்த தேர்தல் கமிஷனராக பொறுப்பேற்க போகிறவருக்கு இந்த நேர்மை போதாதா ?

தலைமைத் தேர்தல் ஆணையரையும், மற்ற தேர்தல் ஆணையர்களையும் நியமிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு தான் இருக்கிறது. நடைமுறையில் பிரதமரும் அவரது அமைச்சரவையும் எடுக்கும் முடிவை நிறைவேற்றுகிறார் குடியரசுத் தலைவர். நம் நாட்டுக்கு யார் பிரதமர் என்று எல்லோருக்கும் தெரியும். அப்படி இருக்க இவர்களால் நியமித்த நவீன் சால்வா எப்படி தப்பு செய்வார் ? தலமைத் தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி "கடைசி காலத்தில் தரப்படும் பரிந்துரை, இது தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டைச் சீர்குலைக்கும் என்று (பா.ஜ.க தவிர) எல்லோரும் சொல்லுகிறார்கள் இதிலிருந்து தெரியவில்லையா சால்வா எவ்வளவு நல்லவர் என்று ?

கோபாலசுவாமி குடியரசுத் தலைவருக்கு சாவ்லா பற்றி 93 பக்க கடிதம், 500 பிற்சேர்க்கை, 150 பக்கம் சாவ்லாவின் பதில் என்று அனுப்பியுள்ளார். கோபாலசாமி ஓய்வு பெறும் 2009 ஏப்ரல் 20-ம் தேதிக்குள் இவ்வளவையும் எப்படி குடியரசு தலைவர் படிப்பார். அதனால் அவர் பிரதமருக்கு அனுப்பிவிட்டார். பிரதமர் ஆஸ்பத்திரியில் இருக்கிறார். மீடியாவிற்கு அந்த கடிதத்தில் என்ன இருக்கிறது என்று முழுமையாக தெரியாது. மீடியாவிற்கே என்ன என்று தெரியாத போது, சாவ்லாவிற்கு எப்படி தெரியும் ?

எமர்ஜென்ஸி காலத்தில் பெயர் எடுத்தவர் சாவ்லா. ”மனித நேயமற்ற, அதிகார மமதையுடன் கூடிய” அவரது நடத்தையை பார்த்த ஷா கமிஷன் இவருக்கு எந்தவித அரசுப் பதவியும் வகிக்கத் தகுதியற்றவர் என்று சான்றிதழ் கொடுத்திருக்கிறது. 1980-ல் ஆட்சிக்கு வந்த இந்திரா காந்தி ஷா கமிஷன் அறிக்கை குப்பையில் போட்டார். இப்படி இருக்க இவரை பற்றி எப்படி அவதூறு சொல்லலாம் ? இவருக்கு ‘பத்ம’ விருது அல்லவா கொடுக்க வேண்டும்!

மத்திய அரசாங்க அதிகாரியாக இருந்தபோது நவீன் சாவ்லா, "லாலா சமன் லால் மாணவர்களுக்கான கல்வி அறக்கட்டளை', "திருமதி பகவான் தேவி மாணவிகளுக்கான அறக்கட்டளை' என்ற இரு அறக்கட்டளைகளை உண்டாக்கி, அவற்றுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஏ.ஏ. கான் (10 லட்சம்), ஆர்.பி. கோயங்கா (15 லட்சம் அவருடைய மனைவியின் பெயருல் "லெப்ரா இந்தியா அறக்கட்டளை' என்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஏ.ஆர். கித்வாய் (45 லட்சம்), அமைச்சர் அம்பிகா சோனி (15 லட்சம்), கரண் சிங் (10 லட்சம்). ஆக, நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களிடமிருந்து 95 லட்சம் ரூபாய் நிதி பெற்றுள்ளார். காங்கிரஸ் எம்பிக்களின் செல்வாக்கு பெற்றவர் எப்படி தப்பு செய்வார். மக்களே கொஞ்சம் சிந்தியுங்கள்.

தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ஓர் அறக்கட்டளைக்கு 25 லட்ச ரூபாய்க்கு மேம்படாமல்தான் நிதி வழங்க வேண்டும் என்று திட்டத்தின் விதிமுறை ௬றுகிறது. இது எம்.பிக்கள் செய்த குற்றமே தவிர எப்படி சாவ்லா செய்த குற்றமாக இதை கருத முடியும் ? எம்.பிக்கள் தங்களது தொகுதிக்கு ஏதாவது செய்தால் தான் குற்றம் என்று நமக்கு தெரியாதா ?

அரசாங்க அதிகாரிகள் அறக்கட்டளைகளில் சம்பந்தப்பட்டிருந்தால் அதற்கு அரசாங்க அனுமதி முன்னதாகப் பெற்றிருக்க வேண்டும். 1994 ஆம் ஆண்டு 14034694 எண்ணுள்ள கோப்பு, 12-4-1994 அன்று அரசாங்கத்துக்கு அனுப்பியுள்ளார். ஆனால் 2006 ஏப்ரல் 8, "டைம்ஸ் ஆப் இந்தியா' நாளேட்டில் "தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா பற்றிய காணாமல் போன முக்கியமான அரசாங்கக் கோப்பு' என்ற தலைப்பில் பின்வரும் செய்தி தரப்பட்டுள்ளது. ""ஐ.ஏ.எஸ். அதிகாரி சாவ்லா கோப்பு இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று 29-3-2006 தேதியிட்ட கடிதத்தில் உள்துறை அமைச்சரகம் ஒப்புக்கொண்டுள்ளது. அந்தக் கோப்பு அனுப்பப்பட்டதற்கான ரசீதின் நகல் இத்துடன் அனுப்பப்படுகிறது. உள்துறை அமைச்சகத்திலிருக்கும் விவரப்படி அந்தக் கோப்பு திரும்பவும் அமைச்சரகத்துக்கு வரவில்லை.

கோப்பை தொலைத்தது அரசாங்கம் செய்த தப்பு, இதற்கு எப்படி சாவ்லா பொறுப்பாக முடியும் ?

மத்திய சட்டத்துறை அமைச்சர் பரத்வாஜ் ”ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பிறகு நவீன் சாவ்லாதான் தலைமைத் தேர்தல் ஆணையராக ஆவார் ” என்று சொல்லிவிட்டார். நமக்கு என்ன சட்டம் தெரியும் ? சட்ட அமைச்சர் சொன்னால் சரியாக தான் இருக்கும். அதனால் கோபாலசாமி சொல்லுவதை எல்லாம் காதில் போட்டுக்கொள்ள வேண்டாம்.

பா.ஜ.க. அளித்த புகாரின் அடிப்படையில், சாவ்லாவிடம் ஜூலை 2008ல் விளக்கம் கேட்டிருக்கிறார் கோபாலசாமி. எட்டுமுறை நினைவூட்டிய பிறகு, மிகத் தாமதமாக, கடந்த டிசம்பர் 10ம் தேதிதான் பதில் அளித்துள்ளார் சாவ்லா( இதில் ஒரு மாதம் லீவும் அடங்கும்). இதிலிருந்து தெரியவில்லையா சாவ்லா எவ்வளாவு பிஸியாக இருக்கிறார் என்று ?

முக்கியமான மீட்டிங் போது சூச்சு போக வெளியே சென்று காங்கிரஸ் காரர்களுக்கு சில விஷயங்களை சொல்லியிருக்கிறார்.. இதில் என்ன தப்பு ? ஆபீஸில் இருக்கும் போது நம் நண்பர்கள் நமக்கு கிரிக்கேட் ஸ்கோர் சொல்லுவதில்லையா ? அது போல் தான் இதுவும் எப்படி இதை தப்பு என்று சொல்ல முடியும் ?

எல்.கே.அத்வானி மத்திய அமைச்சராக இருந்தபோது உள்துறைச் செயலராக இருந்த கோபாலசுவாமியை தேர்தல் ஆணையகப் பணிக்கு மாற்றப்பட்டார். அதனால் நிச்சயம் இவர் நேர்மையாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. தற்போது கோபாலசாமி செய்தது அத்துமீறல் என்று பலர் விமர்சனம் செய்கிறார்கள். தர்மத்தையும், நீதியையும் நிலைநாட்ட இப்படி அத்துமீறல் செய்யலாமா ?
கோபாலசாமி போகும் திருப்பதி பெருமாளுக்கே வெளிச்சம்.


தேவையில்லாத பின்குறிப்பு: சாவ்லாவின் அம்மா ஒரு மகப்பேறு மருத்துவர். பிரியங்கா காந்தி பிரசவத்தின் போது இவர் தான் மேற்பார்வை பார்த்திருக்கிறார்.

கதை, : rediff, dinamani, hindu, times of India
திரைக்கதை, வசனம்: இட்லிவடை
டைட்டில் : நாகராஜன்


Read More...

நான் கடவுள் - ரஜினி கடிதம்

இல்லோரும் இந்த படத்தை விமர்சனம் செய்துவிட்டார்கள். ரஜினி என்ன சொல்லுகிறார் ?


Read More...

Sunday, February 08, 2009

நாகேஷ் - தொகுப்பு

நாகேஷ் - கமல் கட்டுரை, எதிர்நிச்சல், நீர்க்குமிழி சினிமா விமர்சனம்...

" உச்சம் தொட்ட மகா கலைஞன் " - கமல்ஹாசன்

வாலி அவர்கள் நாகேஷின் (கிட்டதட்ட) பால்ய நண்பர். அவர் என் ஆபீஸில் இருக்கும், எனக்கு ரத்த உறவில்லாத, நால்வரின் படங்களில் ஒன்றாய் இருந்த நாகேஷின் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, ஏன்? என்று, பதில் தெரிந்தும் கேட்டார். பதிலும் சொன்னேன். அப்போது வாலி குரல் தழுதழுக்க நாகேஷைப் பற்றி சிலாகித்தார். " அவன் மகா கலைஞன். எதைச் செய்தாலும் உச்சம் தொடுவான். சீட்டாட்டம், டேபிள் சென்னிஸ், கவிதை, நடனம்....." என்று பாதி வாக்கியத்தில் வெறித்துப் பார்த்தபடி நிறுத்திவிட்டார் வாலி. அவர் நினைவில் அவரும், என் நினைவில் நானும் தனித்தனியே மிதந்தோம்.

நாகேஷ் என் வாழ்க்கையில் எப்போது கலந்தார் என்று நினைவு கூட இல்லை. இப்படி என்னைப் போல் பல கோடித் தமிழர்கள் உள்ளனர்.

நாகேஷ் அவர்களின் உடலைப் பார்த்துக் கண்ணீர்விட்ட கலைஞர்கள் பலரும் 10 நிமிடத்திற்கு மேல் தொடர்ந்து அழவில்லை. நடுவில் அழுதபடியே, அவரை, அவர் நடித்த காட்சிகளைச் சிலாகித்துப் பேச ஆரம்பித்து, தமது அழுகைகள் சிரிப்பாக மாற, சங்கோஜப்பட்டு மெளனியாயினர்..... நான் உட்பட.

60, 70-களில் எல்லா கிராமங்களிலும், ஏன் எல்லா தமிழகத் தெருக்களிலும் நாகேஷ் பாணியில் பேசி களிப்பூட்டும் காமெடியன் ஒருவன் இருப்பான். அதேபோல் தோளைக் குலுக்கி, காலை சற்றே வளைத்துப் பின்னால் சாயும் அதீத அட்ரினலின் (Adreneline) பாயும் நாளங்களுடன் பல நூறு நாகேஷ்கள். எம்.ஜி.ஆர். போல் சட்டையை மடித்து விட்டுக் கொண்டவர், தொப்பி போட்டவர், சிவாஜி மாதிரி நடக்க முயல்பவர், நாகேஷ் மாதிரி கோமாளித்தனம் செய்ய முற்படுவர் என மூவர் தமிழகமெங்கும் வீதி தோறும் உலாவருவர், இன்றும்.

Most imited என்ற மும்மூர்த்திகளில் ஒருவர் நாகேஷ்.

நாகேஷின் ரசிகர் மன்றம் ரகசியமாக நடந்து வந்தது. அதன் விஸ்தீரணம் தமிழகத்தை விடப் பெரியது. இந்தியாவை விடக் கூடப் பெரியது. அது தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட நடிகர்களின், ரசிகர்களின் மனங்கள்.

வெளிப்படையாக விழா எடுத்து 'ஜே' போடாவிட்டாலும், மனதளவில் நாகே ஷூக்குக் கிடைத்த பாராட்டுக்கள் எந்த நடிகனையும் பொறாமைப்பட வைக்கும்.

சொந்த வீடு கட்டி வசதியாக வாழும் தமிழ், தெலுங்கு சினிமா காமெடியன்களின் வீட்டு அஸ்திவாரக் கல்லில் ரகசியமாய் நாகேஷின் பெயர் பொறித்து வைக்கப்பட்டிருக்கும்.

நாகேஷ் என் வாழ்வில் நட்சத்திரமாக, மூத்த அண்ணனாக, அறிவுரை சொல்லும் நண்பனாக, அறிவுரை கேட்கும் அப்பாவியாக, சொல்லிக் கொடுத்த ஆசானாக, சொல் பேச்சுக் கேட்கும் மாணவனாகப் பல பொறுப்புக்களை ஏற்றிருக்கிறார்.

திரு. கே.பி.யுடன் என் சினிமா வாழ்க்கையை மறுபடி துவங்கியபோது, என் மாபெரும் மானசீக எதிரியாகவும் இருந்தவர் திரு நாகேஷ்.

திரு. கே.பி.யும் நாகே ஷூம் தற்காலிக மனஸ்தாபம் காரணமாகச் சேர்ந்து பணிபுரியாத இடைவெளியில் புகுந்து குளிர்காய்ந்த காமெடியன்களில் நானும் ஒருவன்.

அப்போதெல்லாம் மூச்சுக்கு மூச்சு திரு. கே.பி., நாகேஷின் புகழ்பாடுவதைக் கேட்டு என் வயிறு பற்றி எரியும். நான் சுமாராகச் செய்தால், "நாகே ஷா இருந்தா இந்த சீனை எப்பிடி பின்னி எடுத்திருப்பான்? சரி ஒ.கே. ஒன்னளவுக்கு நீ செஞ்சிருக்கே" என்பார்.

நான் நன்றாகச் செய்த காட்சிகளைப் பார்த்து, "கிட்டதட்ட நாகேஷ் மாதிரி இருக்கு. ஆனா, நாகேஷ் மாதிரி வராது" என்பார். இதை நாகேஷிடமே சொல்லிக் குமுறியிருக்கிறேன்.

கிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு முன் நாகேஷ் இறந்துவிட்டதாக வந்த சேதி கேட்டு, மலர் வளையத்துடன் சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு அழுதுகொண்டே ஓடினேன். கூட என் உதவியாளர் சே ஷாத்ரி மலர் வளையம் சுமந்தபடி ஓடி வந்தார். நான் சற்று வேகமாக ஓடியதால் நாகேஷ் உடல் இருப்பதாகச் சொன்ன அறையை முதலில் அடைந்தேன். நாகேஷ் குற்றுயிருடன் இருந்தார். மரணச் சேதி வெறும் வதந்திதான் என்பதுணர்ந்து அந்த மலர்வளையத்தை மறைக்க நான் செய்த அசட்டு யுக்திகளை, நானே பிறகு நாகே ஷுக்கு நடித்துக் காட்ட, இருவரும் சிறித்தோம்.

"தசாவதாராம்" ஷூட்டிங்கில் கூட அதுபற்றி பேசிச்சிரித்தோம். சிரிப்போடு சிரிப்பாக நாகேஷ், "அந்த மலர்வளையத்தை என்ன செஞ்சே?" என்றார்.

"சந்தோஷமா தூக்கிப் போட்டுட்டேன் அண்ணா" என்றேன்.

"அய்யய்யோ, வச்சிருந்தா கூடிய விரைவில் பிரயோஜனப்பட்டிருக்குமே " என்றார்.

இருவருமே அந்த நகைச்சுவையை ரசிக்க முற்பட்டுத் தோல்வியடைந்தோம்

"தசாவதாரம்" கடைசி நாள் ஷூட்டிங்கிற்கு ஆஸ்பத்திரியிலிருந்து எழுந்து வந்து நடித்துக் கொடுத்துவிட்டு, " என் கடைசிப் படம் நல்ல படம். I am Honouredடா கமல் " என்று என்னை கெளரவித்த அந்த ஒல்லியான குண்டுராவ் மாதிரி இனி நிழல்தான் ஆடும்.

" Last of the mohicans " என்று ஒரு ஆங்கில நாவல் உண்டு. அந்தத் தலைப்புதான் நினைவு வருகிறது எனக்கு.

இவர் போல் இனி இல்லை.

நன்றி : குங்குமம், 12.02.2009



சினிமா விமர்சனம்: நீர்க்குமிழி ( விகடன் : 14.11.1965 )
நர்ஸிங் ஹோமின் ஒரு வார்டு.அங்கே மூன்று கட்டில்கள். சாவை எதிர்நோக்கி இருக்கும் ஒரு கான்ஸர் நோயாளி; கால் எலும்பு முறிந்து படுத்திருக்கும் ஒரு கால் பந்தாட்ட வீரர்; வயிற்று வலிக்காரர் ஒருவர். இவர்களைத் தவிர பிரதம டாக்டர், அவருடைய உதவியாளரான ஒரு லேடி டாக்டர் (பிரதம டாக்டரின் மகள்), ஒரு நர்ஸ், நோயாளிகளைக் காண வரும் சில விசிட்டர்கள். இவர் கள்தான் கதாபாத்திரங்கள். லேடி டாக்டருக்கு விளையாட்டு வீரர் மீது காதல்; பிரதம டாக்டருக்கோ மகள் பெரிய டாக்டராக மேல்நாடு சென்று படித்து வரவேண்டும்; காதல், திரு மணம் போன்ற பந்தங்களில் சிக்கி விடக்கூடாது என்று ஆசை. இந்த ஆசைகளின் மோதலில் கதை வளர் கிறது. இந்தக் காதல் வளர தனது கோமாளித்தனத்தின் மூலமே உதவும் அந்த கான்ஸர் நோயாளி இறுதியில் சிரித்துக்கொண்டே சாகிறார். அவர் சாவுக்குத் தானே காரணம் என்று எண்ணிக் காதலைத் துறக்கிறாள் லேடி டாக்டர்.

சேகர் - சந்தர்

சேகர்: இது நாடகமாக வந்ததே, பார்த்தாயா சந்தர்?

சந்தர்: இல்லை. ஆனால், என் னைப் போல் அந்த நாடகத்தைப் பார்க்காதவர்களும் ரசிக்கக்கூடியதாக இருக்கிறது படம். நாகேஷின் நடிப்பு மிகப் பிரமாதம். காமெடி ரோல் மட்டும் அல்ல, சீரியஸ் ரோலிலும் தன்னால் மிகச் சிறப்பாக நடிக்க முடியும் என்பதை சர்வர் சுந்தரத் திற்குப் பிறகு, மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டிவிட்டார்.

சேகர்: அவருடைய ஒவ்வொரு டயலாகை யும் ஜனங்கள் எப்படி ரசித்தார்கள் பார்த் தாயா?

சந்தர்: அதிலும் கடைசி காட்சிகளில் அவர் சொன்ன கருத்துக்களுக்கு ரசிகர்களி டம் நல்ல வரவேற்பு இருந்தது. அது வசன கர்த்தாவின் திறமை. இரு பொருள்பட மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார் பாலசந்தர். சரி, சௌகார் ஜானகி எப்படி?

சேகர்: அடக்கமான, சிறப்பான நடிப்பு. அவருக்கு ஈடு கொடுத்து நன்றாக நடித்திருக் கிறார் கோபால கிருஷ்ணன்.

சந்தர்: கடைசியில் டாக்டரின் மகள் தன் காதலைத் துறப்பது குழப்பத்தின் எல்லை. கான்ஸர் நோயாளியின் சாவுக்கும் அவள் காதலுக்கும் சம்பந்தமே இல்லை.

சேகர்: இப்படி ஒரு சில குறைகள் இருந்தாலும், நாகேஷூக்காக ஒரு முறை இந்தப் படத்தைப் பார்க்கலாம்.


சினிமா விமர்சனம்: எதிர் நீச்சல் ( விக்டன் : 29.12.1968)
மாடிப்படி மாது பட்டு மாமி கிட்டு மாமா நாயர்...


இவர்களெல்லாம் தமிழ் மக்களிடம் மிகவும் பிரபல மானவர்கள். 'எதிர் நீச்சல்' நாடகத்தின் மூலம் அறிமுகமான இந்தக் கதாபாத்திரங்கள், ஏதோ நம்முடன் நடமாடும் பாத்திரங்களோ என்ற உணர்வை ஏற்படுத்திவிட் டன.

நாடக உலகில் கொடி கட்டிப் பறந்த இவர்கள், இப்போது திரை உலகில் வீர நடை போடுகின்றனர்.

மத்தியத் தரக் குடும்பத்தின் சூழலில் பின்னப்பட்ட இந்தக் கதையில், நவரசங்களும் இருக்கின்றன. இந்தப் படத்தைப் பார்க்கும்போது, பல இடங்களில் சிரிக்கிறோம்; பல இடங்களில் கண்கலங்குகிறோம்.

மாடிப்படி மாதுவுக்காக, சபாபதி தன் வீட்டு வாசலிலேயே தட்டேந்தி நிற்கும் போதும், நாயர் தன் கடிகாரத்தை மாதுவின் கையில் கட்டி அவனை இறுகத் தழுவிக் கொள்ளும்போதும் கலங்கும் நாம், கால் உடைந்து பரீட்சை எழுத முடியாமல் வீடு திரும்பிய மாதுவை, சபாபதி தோளில் தூக்கிக்கொண்டு போகும்போது, சோகத்தையும் மீறி ஒரு நிறைவைப் பெறுகிறோம்

இந்தப் படத்தில் நடிப்பில் ஒருவரை ஒருவர் மிஞ்சுகின்றனர்.

குறிப்பாக, நாகேஷ் மாதுவாகவே மாறிவிடுகிறார். நகைச் சுவையில் தேர்ந்த நடிகர்கள் எந்தப் பாத்திரத்தையும் சிறப்புற நடிக்கமுடியும் என்பதற்கு, ஒவ்வொரு காட்சியிலும் சான்று கூறிக் கொண்டிருக்கிறார் நாகேஷ்.

சுந்தரராஜன் அதே மிடுக்கு; அதே சிறப்பு!

கிட்டு மாமாவாக ஸ்ரீகாந்தும், பட்டு மாமியாக சௌகார் ஜானகி யும் வெளுத்து வாங்குகின்றனர். ஜானகிக்குத்தான் அந்த மடிசார் என்னமாகப் பொருந்துகிறது!

நாயர் வேஷத்தை முத்துராமன் ஏற்றுக்கொண்டிருக்கிறார். அசல் நாயர்தான். அவர் பேசுவது மலை யாளம்தான்; ஆனால், எவ்வளவு சுலபமாகப் புரிகிறது, தெரியுமா?

பயித்தியக்காரப் பெண்ணாக வரும் ஜெயந்தி, பார்ப்பதற்கு அழ காக இருப்பதுடன், பளிச்சென்றும் பேசி நடித்திருக்கிறார். அசட்டு மாதுவை அவர் பார்க்கும் அந்தப் பார்வை இருக்கிறதே, அது ஒன்று போதும்!

படம் முழுவதும் வசனத்தில் நகைச்சுவையுடன் ஒரு கருத்தாழத் தையும் காண முடிகிறது. இது பால சந்தருக்குக் கை வந்த ஒரு கலை! சிரிக்க வைப்பதுடன், சிந்திக்கவும் வைக்கிறார் இந்த இளம் டைரக் டர்.

நாடகங்கள் மூலம்தான் நல்ல நடிகர்கள் உருவாக முடியும் என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. அதே போல், சிறந்த நாடகங்கள் நல்ல திரைப் படங்களையும் உரு வாக்கும் என்பதற்கு, எதிர் நீச்சல் சிறந்ததோர் உதாரணம்!


இயக்குநர் கே.பாலசந்தர்:

''தமிழில் மட்டுமல்லாது பிறமொழிக் கலைஞர்களுக்கும் ஆதர்ச ஆசானாக விளங்கியவர் நாகேஷ். 'அனுபவி ராஜா அனுபவி' படத்தை இந்தியில் எடுத்தபோது, நாகேஷின் பாத்திரத்தில் நடித்த மகமூத் அவர் காலில் விழுந்து வணங்கினார். கலைவாணருக்கு அடுத்த சிறந்த கலைஞன் சந்தேகமே இல்லாமல் நாகேஷ்தான்! அவருக்காகவே நான் எழுதிய நாடகம் தான் 'சர்வர் சுந்தரம்'. அதற்குள் அவர் மூன்று படங்களில் காமெடியனாக நடித்துப் பிரபலமாகிஇருந்தார். 'சர்வர் சுந்தரம்' முழுக்க மெல்லிய சோகம் இழையோடும் கதாபாத்திரம். காமெடியனாகப் பிரபலமாகிவிட்ட நாகேஷ் இப்படியரு சென்டிமென்ட் கதாபாத்திரத்தில் நடித்தால், மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்கிற தயக்கம் எங்கள் இருவருக்கும். ஆனால், எங்களுக்கு நாங்களே நம்பிக்கை வார்த்தைகள் சொல்லிக்கொள்வோம். நாடகம் பெருவெற்றி பெற்றது. 'நீர்க்குமிழி' படத்தில் தொடர்ச்சியாக சிகரெட் குடிப்பதால் கேன்சரால் பாதிக்கப்படும் கதாபாத்திரம் அவருக்கு. அப்போது நானே செயின் ஸ்மோக்கர். ஆனாலும், புகைப்பழக்கத்துக்கு எதிராகப் பேச வேண் டும் என்று தோன்றியதால் அந்தப் படத்தை இயக்கி னேன். நாகேஷூக்கும் எனக்கும் 'வெள்ளிவிழா'படத்தின் போது பிரிவு ஏற்பட்டது. அவரால் அந்தப் படத்துக்கு கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. கோபத்தில் நான் 'தேங்காய்' சீனிவாசனை வைத்து அந்தப் படத்தை இயக்கினேன். பாதி படத்தின்போதே எனக்கு ஹார்ட் அட்டாக். பைபாஸ் சர்ஜரி முடிந்து மூன்று மாதம் மருத்துவமனையில் இருந்தேன். மனத்தாங்கல் இருந்தபோதும் என்னை மருத்துவமனையில் நாகேஷ் வந்து பார்த்து, என் மனைவிக்கு ஆறுதல் சொல்லி விட்டுப் போனார். அப்போதுதான் நான் சிகரெட் குடிப்பதை நிறுத்தினேன். சிகரெட்டையும் நாகேஷையும் பிரிந்திருந்த காலகட்டம் அது!

நாகேஷின் டைமிங் சென்ஸ் அலாதியானது. 'பூவா தலையா?' படத்தின் ஒரு காட்சியில் ரிக்ஷாக்காரனாக நடிக்கும் நாகேஷ், தன் மாமியாரிடம் கூழைக் கும்பிடு போட்டு வணங்க வேண்டும். கிட்டத்தட்ட தரை வரை கும்பிடு போட்ட நாகேஷ், 'இதுக்கு மேல கும்பிட முடியாது. தரை வந்துடுச்சு' என்றதும் செட்டில் எல் லோரும் வேலையில் கவனம் தொலைத்து விழுந்து விழுந்து சிரித்தோம். அது ஸ்க்ரிப்ட்டில் இல்லாத டயலாக். டைமிங் சென்ஸ் என்ற வார்த்தைக்கு இங்கே அர்த்தம் கற்பித்ததே நாகேஷ்தான். அதற்குப் பின் இன்று வரை அது எவருக்கும் கை வரவில்லை! ஆனால், அரசின் சார்பாக இதுவரை நாகேஷூக்கு விருதுகள் வழங்கிக் கௌரவப்படுத்தாதது, நம் அனைவருக்கும்தான் அவமானம். 'இனி நாகேஷ் இல்லை' என்ற நினைப்பே ஏதோ ஒரு தனிமை உணர்வுக்கு என்னை ஆட்படுத்துகிறது. 'நீர்க்குமிழி' பாடலின் 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா' பாடல்தான் இப்போதைக்கு எனக்கு ஆறுதல் மருந்து!'' பாலசந்தரிடமிருந்து கனத்த பெருமூச்சு!

'ஆச்சி' மனோரமா:

''நாகேஷோடு நான் சேர்ந்து நடிச்ச முதல் படம் 'நாகமலை அழகி'. அப்ப நாகேஷ், ரொம்ப ஒடிசலா இருப்பார். என் கையைப் புடிச்சுக்கிட்டு நாகேஷ் நடிக்கிற காட்சிகளின்போது எங்கம்மாவுக்குப் பயங்கரமா கோபம் வரும். 'அவரைச் சாதாரணமா நினைக்காதீங்க. திறமைசாலி... நிச்சயம் பெரிய ஆளா வருவார்'னு நான் என் அம்மாவைச் சமாதானப்படுத்துவேன். ஆரம்ப நாட்களில் டான்ஸ் காட்சிகள் என்றாலே நாகேஷூக்கு அலர்ஜி. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் டைரக்ஷன்ல 'தெய்வத்தின் தெய்வம்' படப்பிடிப்பு சமயம், நாகேஷ் நடனக் காட்சிகளில் நிறைய டேக்குகள் வாங்கினார். ஒரு கட்டத்தில் டென்ஷன் ஆயிட்ட டைரக்டர், அந்தப் பாட்டையே படத்திலிருந்து தூக்கிட்டார். அந்த சம்பவம் நாகேஷ் மனசுல ஆறாத காயத்தை உண்டாக்கிடுச்சு. அனா, அதையே வைராக்கியமா எடுத்துக்கிட்டு, சுந்தரம் மாஸ்டர்கிட்ட சில மாதங்கள் இரவும் பகலும் நடனத்தைக் கத்துக்கிட்டார். அப்புறம் சினிமாவில் 'நாகேஷ் டான்ஸ்'னு ஒரு புது வகை நடனம் உருவாகிற அளவுக்கு டான்ஸ்ல பிரமாதப்படுத்த ஆரம்பிச்சுட்டார்.

பாலசந்தர் சாரின் 'நவக்கிரகம்' படத்தில் நடிக்கும்போது நாகேஷோடு எனக்கு மனஸ்தாபம் ஆயிருச்சு. அதைச் சரிசெய்து, எங்களை நடிக்கவைக்க பாலசந்தர் சார் ரொம்ப முயற்சி பண்ணினார். ஆனா, அவரால முடியலை. அதுக்கப்புறம் முப்பது வருஷத்துக்கும் மேல நான் நாகேஷோடு சேர்ந்து நடிக்கலை. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு விழாவுல நான், நாகேஷ், பாலசந்தர் சார் மூணு பேரும் கலந்துக்கிட்டோம். அப்போ பாலசந்தர் சார், எங்க ரெண்டு பேரையும் மேடைக்குக் கூப்பிட்டு, பக்கத்து பக்கத்துல நிக்க வெச்சுக்கிட்டு, 'இவங்க ரெண்டு பேரையும் ஒண்ணா சேர்த்துப் பார்க்க, எனக்கு 30 வருஷத்துக்கு மேலாயிடுச்சு'னு சிரிச்சுக்கிட்டே சொன்னார். 'ஹாலிவுட் நடிகர் ஜெரி லூயிஸ்தான் என் குருநாதர்'னு அடிக்கடி என்கிட்டே சொல்வார் நாகேஷ். நான் ஒரு சமயம் அவர்கிட்ட, 'ஆனா நீங்க நடிச்ச 'வைத்தி', 'தருமி' கேரக்டர்களை லூயிஸை நடிக்கச் சொன்னா, அவரால நிச்சயமா முடியாது'ன்னு சொன்னேன். என்னை ஆச்சர்யமா பார்த்தார்.

ஒரு நிமிஷம்கூட சும்மாவே இருக்காம, எப்பவுமே துறுதுறுன்னு சுறுசுறுப்பா இருப்பார். அப்படிப்பட்டவர் இப்போ சலனமே இல்லாம கண்ணாடிப் பெட்டிக் குள்ள படுத்திருக்கிறதைப் பார்க்குறப்போ, 'சாவே உனக்கொரு நாள் சாவு வந்து சேராதோ'ன்னு கண்ணதாசன் பாட்டுதான் ஞாபத்துக்கு வருது!'' கண்ணீரோடு முடிக்கிறார் ஆச்சி.


Read More...