மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதலில் எதிரொலியாக மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ராஜினாமா செய்துள்ளார்.
அடுத்தது மராட்டிய முதல்-மந்திரி விலாஸ் ராவ் தேஷ் முக் - இன்றோ, நாளையோ பதவி விலகுவார் என்று தெரிகிறது.
மும்பை தாக்குதல் தொடர்பாக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் அவசரமாக நேற்று இரவு டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தியது. அப்போது பேசிய சில தலைவர்கள் உள்துறையின் செயல்பாடுகள், சரியாக இல்லை என்று சிவராஜ் பட்டீல் மீது புகார்களை அள்ளி வீசினார்கள். மராட்டிய முதல்-மந்திரி விலாஸ் ராவ் தேஷ் முக்கும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். அவர் மீதும் சரமாரி புகார் கூறப்பட்டது. ப. சிதம்பரம், கமல்நாத், கபில்சிபல், பரத்வாஜ் ஆகியோர் உள்நாட்டு பாதுகாப்பு குறைபாடு குறித்து கடுமை யாக விமர்சனம் செய்தனர். அப்போது சிவராஜ் பட்டீல் எழுந்து, "மும்பையில் நடந்த சம்பவத்துக்கு நான் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன். இதற்காக நான் பதவி விலக தயாராக இருக்கிறேன்'' என்று தலைகுனிந்தபடி தெரிவித்தார். காரிய கமிட்டி எடுக்கும் எந்த முடிவுக்கும் நான் கட்டுப்படுகிறேன் என்றார். கூட்டம் முடிந்த பிறகு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜனார்த்தன் திவேதியிடம் நிருபர்கள் சிவராஜ் பட்டீல் ராஜினாமா செய்வாரா? என்று கேட்டபோது, "காலம் பதில் சொல்லும்'' என்று மட்டும் தெரிவித்தார். இந்த நிலையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
Sunday, November 30, 2008
சிவராஜ் பாட்டீல் ராஜினாமா
Posted by IdlyVadai at 11/30/2008 12:15:00 PM 18 comments
Labels: செய்தி
Saturday, November 29, 2008
மும்பைக்கு பிறகு ?
கடந்த 59 மணி நேரம், இணையத்திலும், டி வி யிலும் தீவிரவாதிகளின் அட்டகாசங்களை உள்ளம் எரிமலையாய்க் கும்ற பார்த்துக் கொண்டிருந்தோம். தாஜ் ஹோட்டல் மாதிரியே. நம் வயிறும் எரிந்தது. மும்பாய் பயங்கரவாதம் குறித்தும் இந்தியாவின் எதிர்காலம் குறித்த கடுமையான கேள்விகளும் அச்சமும் எழுகின்றன.
இஸ்லாமியத் தீவீரவாதம்:இஸ்லாமியத் தீவீர்வாதம்(உடனே இஸ்லாமியர்களுக்கு எதிரான பதிவு என்று முடிவு கட்டிவிட்டாதீர்கள், எல்லா தீவிரவாத செயல்களும் கண்டிக்கத்தக்கது தான்) என்பது உலகத்தின் எந்த மூலையிலும், எந்த நேரத்திலும், யாரையும், எந்த நாட்டையும், கொடூரமாகத் தாக்கிப் படுகொலை செய்ய வல்லது என்பது மீண்டும் மீண்டும் மீண்டும் நிரூபிக்கப் பட்டு வருகிறது. இதில் இருந்து கடவுள் கூட தப்ப முடியாது என்பதுதான் இன்றைய நிலை. அமெரிக்கா போன்ற நாடுகளில் அவர்கள் சிறிது சிரமப்பட்டு ஊடுருவ வேண்டியிருக்கும் இந்தியாவில் அந்தப் பிரச்சினை கிடையாது. இந்தியாவின் பிரதமரில் ஆரம்பித்து பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் வரை இஸ்லாமியத் தீவீர்வாதிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கக் காத்திருக்கிறார்கள். இஸ்லாமியத் தீவீர்வாதிகளை கண்டித்தாலோ தண்டித்தாலோ தன் ஓட்டு வங்கிக்குப் பங்கம் வந்து விடுமே என்று ஒவ்வொரு அரசியல் கட்சியும் தொடர்ந்து இஸ்லாமிய ஓட்டுப் பொறுக்கும் அரசியலில் இறங்கி வருகிறது. இந்தியாவுக்கு அழிவு இந்தக் கட்சிகள் மூலமாக மட்டுமே வர முடியும்.
சிமி என்ற இஸ்லாமியத் தீவீரவாத அமைப்பை முதன் முதலில் பா ஜ க தடை செய்ய வேண்டும் என்று கோரிய பொழுது அவர்களை ஆதரித்து பாராளுமன்றத்தில் பேசியவர் காங்கிரஸ் கட்சியில் தனைவரான இத்தாலிய சோனியா மொய்னோ. அவருக்கு இந்தியர்களைப் பற்றி என்ன அக்கறை இருக்க முடியும்., நம் பிள்ளைகள் உடல் சிதறிச் செத்தால் சோனியாவுக்கு என்ன வந்தது?
அதன் பிறகு சி மி அமைப்பின் தீவீர்வாதச் செயல் வெளியில் தெரிய வந்த பிறகும் கூட காங்கிரஸ் கட்சி அவர்களுக்காக கோர்ட்டில் வாதாடி அவர்களுக்கு ஆதர்வாகச் செயல் பட்டது. இபப்டியாக இந்தத் தீவீரவாதிகளுக்கு முழுக்க முழுக்க ஆதரவு அளித்ததில் முன்ணணியில் நிற்கும் கட்சி நாட்டை ஆளும் காங்கிரஸ் கட்சிகளும் அதன் கூட்டாளிகளுமே,. இத்தனை மரணங்களுக்கும் யாருக்கேனும் தண்டனை அளிக்க வேண்டுமானால் அது இந்த ஆளும் கட்சியினருக்குத்தான் முதலில் அளிக்க வேண்டும் ஆளும் கட்சியின் முக்கிய கூட்டாளியும் ரயில்வே மந்திரியுமான லாலுபிரசாத் யாதவ் தீவீர்வாதிகளுக்கு ஆதரவாக பாராளுமன்றத்திலும் வெளியிலும் கடுமையாகப் போராடினார் போராடிக் கொண்டிருக்கிறார். முலயம் யாதவ் இது வரை குண்டு வைத்த அனைத்து தீவீரவாதிகளுக்கும் சட்ட உதவியும் நிதியுதவியும் அளித்து வருகிறார். கருணாநிதி அரசோ கோவையில் குண்டு வைத்த தீவீரவாதிகளின் வழக்கை முறையாக நடத்தாமல் அவர்களை விடுதலை செய்ய உதவியது. கோர்ட் உத்தரவை எதிர்த்து இன்று வரை அப்பீல் செய்யப் படவில்லை. இவர்கள் அனைவரையும் மிஞ்சும் விதமாக நாட்டை ஆளும் பிரதமர் மன்மோகன் சொல்லுகிறார் ஒரு தீவீரவாதியின் கைதுக்காக நான் தூக்கத்தை இழக்கிறேன் என்று. இப்படி ஆளும் கட்சி இருந்தால் ஏன் மும்பையிலும் பாராளுமன்றத்திலும் தாக்குதல் நடத்த மாட்டார்கள். நம் எதிரி உண்மையில் யார்?இஸ்லாமியத் தீவீர்வாதிகள் எங்கு கைது செய்யப் பட்டாலும் தனக்கு உறக்கம் வராமல் துக்கம் தொண்டையை அடைக்கிறது என்று ஒரு நாட்டின் பிரதமரே சொன்னால் அதை விடக் கேவலமான ஒரு பிரதமரும் அப்படி ஒரு ஒரு ஆளை பிரதமராக வைத்திருக்கும் ஒரு நாடும், அந்த நாட்டின் மக்களும் உலகத்தில் எந்த மூலையிலும் நாம் காண முடியாது. முதலில் இப்படிப் பட்ட ஒரு மஹாக் கேவலமான ஒரு பிறவிக்கு ஓட்டுப் போட்ட மக்களும் குற்றவாளியாகிறார்கள். பிரதம மந்திரி மட்டும் அல்லாமல் அவரது கட்சித் தலைவர், மந்திரிகள் என்று அனைவருமே இஸ்லாமியத் தீவீர்வாதிகளுக்கு எந்த விதத்திலாவது ஆதரவு தெரிவிப்பவர்களாகவும், தீவீரவாதிகளுக்காகப் பரிந்து பேசுபவர்களாகவுமே இருக்கிறார்கள். இப்படி பிரதமர், மந்திரிகள், கட்சித் தலைவர்கள், அரசு அதிகாரிகள், பத்திரிகைகள், டி வி க்கள், அறிவு ஜீவிக்கள், எழுத்தாளர்கள் என்று ஒட்டு மொத்த இந்தியாவின் ஒரு பகுதியே தீவீரவாத ஆதரவு நிலைப்பாடு எடுக்கும் பொழுது பாக்கிஸ்தானையோ, முஸ்லீம்களையோ நாம் குறை சொல்வதில் அர்த்தமே இல்லை. முதலில் அழுகிப் புரையோடியுள்ள இந்தியாவின் அரசியல் கட்சிகள், ஊழல் அதிகாரிகள். போலி அறிவு ஜீவிக்கள் என்று அனைத்து விதமான தீவீரவாதிகளும் ஒழிக்கப் பட வேண்டும். வெடிகுண்டுகளுடன் வரும் பயங்கரவாதிகளை விட அவர்களுக்காகக் கண்ணீர் விடும் உறக்கத்தை இழக்கும் மிருகங்கள் பயங்கரமானவர்கள்.
முஸ்லீம் மக்கள் என்ன செய்ய வேண்டும்
முஸ்லீம் மக்கள், சகமனிதர்களை அழிக்கும் எந்த அமைப்புக்கும் உள்ளும் புறமும் எந்த ஆதரவும் இல்லை என்பதை சக இந்தியர்களுக்கு உணர்த்த வேண்டும். சிவப்புக்கயிறு தென்பட்டது, ஏடிஎஸ் தலைவரைக் குறிவைத்த தாக்குதல் எனவே இதுவும் இந்துக்கள்தான் போன்ற அரைவேக்காட்டுப் பேச்சில் இருந்து விடுபட்டு, இஸ்லாமிய அடிப்படைவாதம் தீவிரவாதத்தை வளர்ப்பதை உணர்ந்து, தங்கள் இளைஞர்களை இந்தப்பக்கம் ஒதுங்கவிடாமல் கடுமையான எச்சரிக்கைகளையும் நடவடிக்கைகளையும் வெளிப்படையாக எடுக்கவேண்டும். தேசிய நீரோட்டத்தில் தாங்களும் ஒரு பங்குதான் என்பதை உணர்ந்து, தீவிரவாத ஆதரவளிக்கும் ஓட்டுப்பொறுக்கி கட்சிகளுக்கு தங்கள் ஓட்டு விழாது என்பதைத் தெரியப்படுத்தவேண்டும்.
அமெரிக்க மீடியா:
அமெரிக்க மீடியாக்கள் ஒட்டு மொத்தமாக இந்தியா பாக்கிஸ்தானைக் குற்றம் சொல்வதை ஏற்க மறுக்கின்றன. பாக்கிஸ்தானை இந்தியா தொந்தரவு செய்வதாக அனைத்து அமெரிக்க நிறுவனங்களும் நினைக்கின்றன. இந்தியா பாக்கிஸ்தானுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுப்பதினால்தான் பாக்கிஸ்தானால் பின் லாடானைப் பிடிக்க முடியவில்லை என்று இந்த நிர்மூடர்கள் நினைக்கிறார்கள். இந்தியா உடனடியாகப் பாக்கிஸ்தானைக் குறை சொல்வதை நிறுத்த வேண்டும் என்றும் காஷ்மீரைப் பாக்கிஸ்தானுக்குக் கொடுத்து விட்டல் உடனடியாக பாக்கிஸ்தான் பின்லாடனைப் பிடித்து விடுவார்கள் என்று இன்னும் இந்த முட்டாள் அமெரிக்கர்கள் அனைவரும் தீவீர்மாக நம்புகிறார்கள். எத்தனை செப்டம்பர் 11 நடந்தாலும் இவர்களுக்குப் புத்தி வரப் போவதில்லை. ஒட்டு மொத்தமாக அனைத்து அமெரிக்க டி விக்களும், ரேடியோ, பேப்பர்களும் தீவிர பாக்கிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கின்றன. அப்பாவி பாக்கிஸ்தானை அநியாயமாக இந்தியா குற்றம் சொல்வதாக நினைக்கிறார்கள். ஆதாரம் கேட்க்கிறார்கள். புஷ் ஈராக்கின் மீது படையெடுத்த பொழுது ஆதரவு கேட்க்காத அமெரிக்க மீடியா இந்தியா பாக்கிஸ்தான் மீது கை காட்டினால் அதற்கு ஆதாரம் வேண்டும் அது வரை அபாண்டமாக பாக்கிஸ்தானைக் குற்றம் சொல்லக் கூடாது என்று இந்தியாவுக்கு அறிவுரை சொல்கிறார்கள்.
பாக்கிஸ்தான் தரப்பு:
நிமிடத்துக்கு ஒரு பாக்கிஸ்தான் டிப்ளமாட் அல்லது பத்திரிகையாளர் வந்து தொடர்ந்து டி விக்களில் தோன்றி அலங்காரமான அழகான ஆங்கிலத்தில் தங்கள் நாட்டை இந்தியா எப்படி எப்படி எல்லாம் கொடுமைப் படுத்துகிறது அதனால் அவர்களால் எப்படி அமெரிக்காவுக்கு ஒத்துழைப்புக் கொடுத்து பின்லாடனைப் பிடிக்க முடியவில்லை என்று கோட்டு சூட்டுப் போட்டுக் கொண்டு நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேட்டி கொடுத்த வண்ணமாக இருக்கிறார்கள். இந்தியத் தரப்பில் இருந்து கேவலம் ஒரு புழு பூச்சி கூட பேசுவதில்லை. அப்படியே எப்பொழுதாவது பேசினாலும் கொடுமையான ஆங்கிலத்திலும், மோசமான தோற்றத்திலும் அவர்கள் மீது வெறுப்பு வரும் அளவுக்கு முட்டாள்தனமாகப் பேசுகிறார்கள். இந்தியாவில் நன்கு பேசக் கூடிய நல்ல தோரணை உடைய ஒருவர் கூடவா இல்லாமல் போய் விட்டார்கள். உலக அரங்கில் இந்தியாவின் தரப்பை அழுத்திச் சொல்ல ஒருவர் கூட இல்லை என்பதுதான் கேவலமான நிலை. மீண்டும் மீண்டும் பாக்கிஸ்தான் ஒரு அப்பாவி நாடு என்றும் நல்லவர்கள் என்றும் இந்தியா தேவையில்லாமல் வம்புக்கு இழுப்பதாகவும் அனைத்து டி விக்களும் பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்தியா அப்படி ஏதாவது நடவடிக்கை எடுத்தாலும் அடுத்த நொடியே அமெரிக்கா இந்தியாவைத் தாக்கத் தயங்காது என்பதுதான் இப்பொழுதைய நிலை. இந்தியாவின் தரப்பை எடுத்து வைக்க ஒரு நாதியும் இல்லை என்பதுதான் பரிதாபகரமான உண்மை. மன்மோகன் வீட்டுப் ப்யூன் கூட அவர் பேச்சைப் பொருட்படுத்த மாட்டான் என்னும் பொழுது பாக்கிஸ்தான்காரன் எப்படிக் கேட்ப்பான்?
இந்திய மீடியாக்கள்கடந்த மூன்று நாட்களாகத்தான் இந்தியாவின் பிரபல டி விக்களில் சிலவான சி என் என் ஐ பி என்னையும், டைம்ஸ், என் டி டி வியையும் பார்த்தால். ஐந்து நிமிடம் கூட சர்தேசாயையும், பரக்காத் தத்தையும் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவர்களை நேரில் கண்டிருந்தால் காறி உமிழ்ந்திருப்பேன். அப்படி ஒரு கொடூரமான வக்கிரம் பிடித்த மிருகங்கள் இந்தியா மக்களை மூளைச் சலவை செய்து வருகிறார்கள் என்பது தெரிகிறது. சர்தேசாய் மீண்டும் மீண்டும் அளவு கடந்த காழ்ப்புடன் அத்வானியையும் மோடியையும் மிகவும் ஆங்காரத்துடன் தாக்கியே பேசுகிறான். அவனது எடுபிடிகளான சில பெண் நிருபிகள் கடும் விஷத்தை டி வி யில் உமிழ்ந்த வண்ணம் இருக்கிறார்கள். அவனைப் போலவே அளவு கடந்த ஆங்காரத்துடன் பேசுகிறார்கள். கூசாமல் வதந்தியைப் பரப்புகிறார்கள். காட்டுக் கூச்சல் போடுகிறார்கள். எந்தவித இங்கிதமும் கண்ணியமும் இல்லாமல் டி வி சானல் நடத்துகிறார்கள். மிகவும் கேவலமான முறையில் இந்திய டி விக்கள் இந்த சமயத்தில் நடந்து கொண்டன. அதிலும் சிஎன் என்னின் சர்தேசாய் மிகக் கேனத்தனமாகப் பேசிக் கொண்டு போனான். ஹோட்டல்களுக்குள் டி வி இல்லாதபடியால் தாங்கள் ஒளி பரப்புவது தீவீரவாதிகள் பார்க்க முடியாது என்று முட்டாள்த்தனமாகச் சொல்லிக் கொண்டே இருந்தான். டி வி இல்லா விட்டால் என்ன செல் ஃபோன் இயங்கியதே? தீவீரவாதிகளுக்கு வெளியில் இருந்து ஒவ்வொரு மூவ்மெண்ட்டும் அளிக்கப் பட்டிருக்குமே. தீவிரவாதிகள் எல்லாம் பிளாக் பெரியில் மீடியாவை கவணித்துக்கொண்டிருந்தார்கள் என்று செய்திகள் வருகிறது. இவன் எல்லாம் என்ன படித்திருக்கிறான் ? மனிதப் பிறவிதானா இவன் எல்லாம்? செய்தி சொல்லும் போது முகத்தில் ஒரு சிரிப்பு வேற. இவன் தான் இந்திய அறிவு ஜீவிகளின் முகம் என்றால் இதை விட ஒரு அபத்தமான கேவலமான முகம் இருக்க முடியாது. வதந்தியைப் பரப்புவதிலும், மோடி போன்ற தலைவர்களைக் கேவலமாகத் திட்டுவதிலுமே இவன் முனைப்பாக இருக்கிறான். இந்தியாவின் அசிங்கம் இந்த டி வி. இந்தியாவின் கேவலம் இந்த டி வியை நடத்தி வரும் தேசத் துரோகக் கும்பல். டி விக்களின் செயல்பாடு கமாண்டோக்களின் செயல்பாட்டிற்குப் பெரிதும் குந்தகம் விளைவிப்பவையாக இருந்தன. சர்தேசாயையும், பிற நிருபர்களையும் முதலில் சுட்டு விட்டு அடுத்து தீவீர்வாதிகள் பக்கம் கமாண்டோக்கள் சென்றிருந்தால் அது முற்றிலும் நியாயமான காரியமாக இருந்திருக்கும்.
முதலில் மீடியாக்களை அங்கிருந்து துரத்தி விட்டிருக்க வேண்டும். மீடியாக்களின் தொடர்ந்த அழுத்தத்தினால் கமாண்டோக்கள் தங்கள் வழக்கமான ஆப்பரேஷனை சற்று அவசரப் படுத்தி விட்டார்களோ என்று தோன்றுகிறது. உலகமே அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அவர்கள் சற்று தடுமாறவே செய்திருப்பார்கள். மீடியாக்களை ஆரம்பத்தில் இருந்தே துரத்தி விட்டிருக்க வேண்டும். இஸ்ரேல் அரசின் கோபம் புரிந்து கொள்ளக் கூடியதே. இஸ்ரேலின் உதவியை நாடியிருக்க வேண்டும்.
இந்திய அரசியல்வாதிகள்:மன்மோகனின் பேச்சு மிகவும் பலவீனமானதாகவும், கேவலமானதாகவும் இருந்தது. சோனியாவின் முன்னால் வாய் பொத்திப் பேசிப் பேசிப் பழகியே தேசத்திற்கு உரையாற்றும் பொழுதும் அதே உணர்ச்சியற்ற செத்த பிணம் பேசுவது போல தோரணையுடன் இருந்தது. வழக்கமாகப் பாடும் அதே கண்டனம், அதே அனுதாபம் அதே உணர்ச்சியற்ற உதட்டுப் பேச்சு. எங்கே தீவீர்வாதிகளைக் கண்டித்தால் முஸ்லீம் ஓட்டுப் போய் விடுமோ என்ற ஓட்டுப் போய்விடுமோ என்ற அச்சம் தெளிவாகத் தெரிந்தது. இதே பேச்சை தூர்தர்ஷன் ரிக்கார்ட் செய்து அடுத்து முறையும் உபயோகிக்கலாம். மக்களிடம் கடும் அவநம்பிக்கையை ஏற்படுத்திய பேச்சு. இப்பொழுது பல தீவீரவாதிகள் கொல்லப் பட்டிருப்பதால் இனி வரும் நாட்களில் இவரது உறக்கம் போய் விடும் என்பது மட்டும் உறுதி. அத்வானியின் பேச்சும் மோசமே. இவர் பேசாமல் ரிட்டையர்டாகி ரதயாத்திரை என்று டூர் போகலாம். அவர் மோடியிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்., மிகவும் பலவீனமாகவும் உணர்ச்சியற்றும் பேசினார்.
போலீஸ்காரர்களும் ஏ டி எஸ்சும்இந்தியாவின் ராணுவத்தையும் கமாண்டக்களையும் காணும் பொழுது இந்தியாவின் எதிர்காலம் குறித்து லேசான ஒரு நம்பிக்கையை அளிக்கிறது.நாம் இன்று அனுபவிக்கும் சுதந்திரம் அவர்கள் அளிக்கும் பிச்சை என்பது மீண்டும் ஒரு முறை நிருபணமாகியுள்ளது. இந்த கமாண்டோக்களும் ராணுவத்தினரும் இருப்பதினால்தான் நம் அறிவு ஜீவிக்களால் அவர்கள் மேல் காறி உமிழ முடிகிறது. இவர்கள் இல்லா விட்டால் இன்று இணையத்தில் அறிவுஜீவித்தனமாக எழுதும் பலருக்கு கையும் தலையும் இருக்காது.
மீண்டும் நம்மைக் காக்கும் காவல் தெய்வங்களுக்கு எனது வீர வணங்கங்கள். முகமூடிக் கமாண்டோக்கள் மீடியாவிடம் அவ்வளவு நேரம் பேசியது தேவையற்றது. அவர்களை உடனே அப்புறப் படுத்தியிருக்க வேண்டும்., அவர்களின் சீஃப் மட்டும் வந்து பேசியிருந்திருக்கலாம். அத்தனை பேரையும் வைத்துக் கொண்டு அவர்களைப் பேட்டி கொடுக்க வைத்தது தேவையில்லாதது.
பா ஜ க என்ன செய்ய வேண்டும்?
மக்களிடம் உடனடியாக பெரிய அளவில் செல்ல வேண்டும். தினமும் டி விக்குத் தொடர்ந்து பேட்டி கொடுக்க வேண்டும். மோடியை வைத்துக் கடுமையான ப்ரஷர் கொடுக்க வேண்டும். மன்மோகன் தூக்கத்தை இழப்பேன் என்று சொன்னது, சோனியா சிமிக்கு ஆதரவு தெரிவித்தது எல்லாவற்றையும் தொடர்ந்து கேட்டு மக்களிடம் இவர்கள் மீது காறித் துப்பும் உணர்வை ஏற்படுத்த வேண்டும். பாக்கிஸ்தான் மீது கடுமையான தாக்குதலைத் தொடுக்க வேண்டும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதற்கு பாக்கிஸ்தானைப் பதில் சொல்ல வைப்போம் என்று சொல்ல வேண்டும். நடப்பது எலலம் காங்கிரசின் முஸ்லீம் ஓட்டுப் பொறுக்கும் அரசியலால் மட்டுமே நடக்கிறது என்பதை அனைத்துத் தரப்பு மக்களும் உணரும் வகையில் கூட்டங்கள், போராட்டங்கள் எல்லாம் நடத்த வேண்டும்., பொடாவை உடனடியாகக் கொண்டு வர அழுத்தம் கொடுத்து பந்த் நடத்த வேண்டும். எல்லா வகையிலும் போராட வேண்டும். அரசாங்கத்தை மட்டும் நம்பாமல் இந்தத் தீவீர்வாதத்தை எப்படி எதிர் கொள்வது என்பதில் வேறு வழிகள் கண்டு பிடிக்க வேண்டும். பா ஜ க இந்தத் தருணத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கார்கில் போல இது ஒரு அருமையான வாய்ப்பு. மோடி அடுத்து தன் மாநிலத்தில் பிடிபடும் தீவீரவாதிகளை உடனுக்குடன் என்கவுண்டர் செய்து விட்டு மக்களின் ஆதரவைப் பெற வேண்டும்.
(கோமாளி)ராஜ் தாக்கரே காணவில்லை
ராஜ் தாக்கரே கடந்த 60 மணி நேரமாக காணவில்லை. ராஜ் தாக்கரே மராத்தி கமாண்டோக்கள் மட்டுமே உள்ளே நுழைய வேண்டும் என்று போராட வருவார் என்று அனைவரும் எதிர்ப்பார்த்தனர். நாளைக்கு அவரையே பிணைக் கைதியாகப் பிடித்துச் சென்றால் என்னை மீட்க மண்ணின் மைந்தர் மட்டுமே வரலாம் என்று சொல்வாரா ? சிவசேனை ஒரு சில உருப்படியான விஷயங்களைச் செய்து வருகிறது ஆனால் இது போன்ற கோமாளித்தன்ங்களில் இறங்கிப் பெயரைக் கெடுத்துக் கொள்கிறார்கள் மாமன் மருமகன் இருவருக்கும் இந்த விஷயத்தில் நிறைய ஒற்றுமை.
இன்று மும்பையைப் பிடித்திருக்கும் தீவீரவாத நோயை விரட்டத் தகுதியானவர்கள் சிவசேனை மாதிரி ஆட்கள் தான். அவர்களை உரிய விதத்தில் பயன் படுத்தி மும்பையை மாஃபியா இல்லாத நகரமாக மாற்ற முயற்சி செய்யலாம். மும்பையின் பாதுகாப்பில் கவனம் செலுத்தலாம். தாவூத் இப்ராஹிமின் போன்ற பொறுக்கிகளின் அட்டகாசத்தைக் கட்டுப் படுத்தலாம். இதையெல்லாம் விட்டு விட்டு கோமாளித்தனத்தில் இறங்கி உள்ள பெயரையும் கெடுத்து வைத்திருக்கிறார்கள் இனியாவது சிவசேனா ஒன்றிணைந்து தேச ஒருமைப்பாட்டுக்காக முன் எப்பொழுதும் போல் பாடு பட முன் வர வேண்டும் கோமாளித்தனம் செய்ய லாலுவும் முலயமும் இருக்கிறார்கள்.இந்தியா அடுத்து என்ன செய்ய வேண்டும்?
இந்தியாவில் முதலில் ராணுவ ஆட்சி அமுல் படுத்தப் பட வேண்டும். உடனடியாக பயங்கரவாதத்திற்குத் துணை போகும் காங்கிரஸ், கம்னியுஸ்ட் பிற உதிரிக் கட்சிகள் அனைத்தும் தடை செய்யப் பட்டு மன்மோகன் உட்பட அதன் தலைவர்கள் அனைவரும் உடனடியாகத் தண்டிக்கப் பட வேண்டும். இந்தியாவிற்கு எதிராகச் செயல் படும் அனைத்து மீடியாக்களும் தடை செய்யப் பட்டு அழிக்கப் பட்டு அதைச் செய்தவர்கள் எல்லோருக்கும் ராணுவம் தண்டனை அளிக்க வேண்டும்.
இந்தியாவின் முதல் எதிரிகள் மேற்குறிபிடப் பட்ட அரசியல்வியாதிகள். அடுத்து இந்த தீவிரவாதிகள். பலர் தீவீர்வாதிகளை ஆதரிக்கிறார்கள் தீவீரவாதிகளுக்கு நிதியுதவியும், சட்ட உதவியும், மாரல் சப்போர்ட்டும் அளிக்கிறார்கள். தூக்கு தண்டனையை கிடப்பில் போடுகிறார்கள். தேச ஒற்றுமைக்கு பிறகு தான் மதம்.
இந்தியாவில் உள்ள இஸ்லாமிய ஓட்டுப் பொறுக்கிகளையும், பாக்கிஸ்தானுக்கு இறுதியான உறுதியான எச்சரிக்கை விடப் பட வேண்டும். பாக்கிஸ்தானின் எந்தவொரு தவறான நடவடிக்கையும் பொறுத்துக் கொள்ளப் படாது என்பதைத் தீர்மானமாக அறிவிக்க வேண்டும். அடுத்து எந்தவித தாக்குதலிலும் பாக்கிஸ்தான் தலையிட முயற்சித்தால் உடனடியாக இந்தியா அணுகுண்டு இல்லாவிட்டாலும், அட்லீஸ்ட் சிவகாசி பட்டாசையாவது இந்தியா பயன் படுத்த வேண்டும். இஸ்ரேல் மீது ஒரு குண்டு வந்து விழுந்தால் பதிலுக்கு இஸ்ரேல் பத்து குண்டை அவர்கள் மீது போடுவார்கள். அதே போல் இந்தியா செய்ய வேண்டும். பதில் தாக்குதலில் இந்தியாவின் ஒரு சில பகுதிகள் அழிந்தாலும் பரவாயில்லை என்று இந்த நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் இது நடந்தால் இந்தியா மட்டும் அல்ல உலகம் முழுவதுக்கும் அமைதி கிட்டும்.
இவற்றைச் செய்தால் நம் வாரிசுகள் நிம்மதியாக வாழ முடியும் இல்லா விட்டால் நாம் தினமும் கொத்துக் கொத்தாகச் கொல்லப் பட்டு நாம் மட்டும் அல்ல நம் வாரிசுகளும் கொடூரமான முறையில் இறந்து கொண்டேயிருப்பார்கள். எந்த விதமான இந்தியாவை நம் சந்ததியினருக்கு விட்டு விட்டுப் போகப் போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டிய தருணம் வந்து விட்டது.
சில நாட்களாக போலி செக்யூலர் பதிவர்கள் காணவில்லை, இனிமேல் மனித உரிமை, இவர்களின் அடிப்படை பிரச்சனை என்ன என்று ஆராய வேண்டும் என்று ஜல்லி அடிக்க கிளம்பிவிடுவார்கள், அல்லது பார்ப்பான் என்று திட்ட கிளம்பிவிடுவார்கள். இவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்: ஒரு கையை வாயிலும் மற்றொன்றை பின்பக்கதிலும் பொத்திக்கொண்டு போகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
60 மணி நேரம் டிவியை பார்த்து நொந்து போனவர்களுக்கு சின்ன(ஆறுதல்) படம் கீழே...
ஜெய்ஹிந்த்!!
Posted by IdlyVadai at 11/29/2008 02:50:00 PM 71 comments
Labels: செய்தி விமர்சனம்
துயருண்டோ, துணிவுள்ளோர்க்கே?
துயருண்டோ, துணிவுள்ளோர்க்கே? தினமணி தலையங்கம்.
பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களின் நோக்கமெல்லாம் இருப்பதை நிலைகுலையச் செய்து, பீதியைக் கிளப்பி, அரசின்மீதும் ஆட்சி அமைப்பின் மீதும் மக்களை நம்பிக்கை இழக்க வைத்து, அதன் மூலம் சட்டம், ஒழுங்கு முற்றிலும் தகர்ந்த அராஜக நிலைமையை ஏற்படுத்துவதுதான். அதன் மூலம் அவர்கள் சாதிக்க நினைப்பது என்ன என்று கேட்டால், ஒன்றுமில்லை. இருக்கிற அமைப்பைத் தகர்த்து அதற்குப் பதிலாக ஒரு நல்லாட்சிக்கான திட்டம் எதுவும் அவர்களிடம் உண்டா என்று கேட்டால் கிடையாது.
இதுபோன்ற பயங்கரவாத இயக்கங்கள் அத்தனையுமே அழிவு சக்திகளே தவிர ஆக்கபூர்வமான சிந்தனையோ, மாற்றுத் திட்டமோ இல்லாதவை. அவலை நினைத்து உரலை இடிக்கும் கதையாக யார் மீதோ, ஏதோ ஒரு கொள்கை அல்லது செயல்மீதோ இருக்கும் கோபத்தை, தங்களது எதிரிகளிடம் நேரிடையாகக் கொள்கை ரீதியாக மோதி ஜெயிக்க முடியாத காரணத்தால், அப்பாவிப் பொதுமக்களை ஈவிரக்கம் இல்லாமல் கொன்று குவித்தும், பிணைக் கைதிகளாக்கித் துன்புறுத்தியும் தங்களது துன்பியல் உணர்வைத் தணித்துக் கொள்பவர்கள்தான் இந்த பயங்கரவாதக் கும்பலைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஒருவகை மனநோயாளிகள்.
இதுபோன்ற பயங்கரவாத அமைப்புகளும் அதன் உறுப்பினர்களும் தங்களுக்கு ஒரு லட்சிய முகமூடியை அணிந்துகொள்ள முயற்சிக்கிறார்கள். உதாரணத்திற்கு, இப்போதைய மும்பைத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் "லஷ்கர் - இ - தொய்பா' அமைப்பை எடுத்துக்கொண்டால், தாங்கள் காஷ்மீரை மீட்டெடுக்கப் போராடுவதாகக் கூறிக் கொள்கிறார்கள். மும்பையில் நூற்றுக்கணக்கானவர்களைச் சுட்டுக் கொல்வதால் காஷ்மீர் மீட்கப்படப் போகிறதா என்ன? துன்பியல் சார்ந்த மனநோய் பாதிப்புதான் இது.
உலகெங்கிலும் சமீபகாலமாக இதுபோன்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது என்பது இயலாத ஒன்று என்பதை நாம் உணர்ந்து செயல்பட்டாக வேண்டும். அதை எந்த அளவுக்குத் தடுப்பது, இதுபோன்ற தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து எப்படி ஒடுக்குவது என்பதில் கவனம் செலுத்துவதுதான் புத்திசாலித்தனமே தவிர மனோரீதியான ஆராய்ச்சியில் இறங்கி அவர்களை நல்வழிப்படுத்துவது என்பது கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கும் முயற்சி.
1993-ல் மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பும், அதற்குப் பிறகு நடந்த இரண்டு மூன்று முயற்சிகளும் நமக்குப் பாடமாக இருந்திருக்க வேண்டாமா? உள்துறை அமைச்சகத்தின் தகவல்படி, மும்பையைத் தாக்கிய பயங்கரவாதிகள் ஒரு விசைப்படகில் கடற்படைத் தலைமையகத்தைக் கடந்து விரைந்து, மும்பை கடற்கரையில் இறங்கி நகரத்திற்குள் நுழைந்திருக்கிறார்கள். ஆனால் தேசியப் பாதுகாப்புப் படையினரும், கடற்படை கமாண்டோக்களும் உடனடியாகச் செயலில் இறங்கவில்லையே, ஏன்?
தீவிரவாத எதிர்ப்புப் படைத் தலைவர் ஹேமந்த் கர்கரேயை, பயங்கரவாதிகள் தாங்கள் கடத்திய காவல்துறை வாகனத்தில் இருந்தபடி சுட்டு வீழ்த்திய காட்சி அதிர்ச்சி அளிக்கிறது. கர்கரேயும் சரி, ஏனைய காவல்துறையினரும் சரி, பயங்கரவாதக் கும்பலை எதிர்கொள்வதுபோலச் செயல்படாமல், ஏதோ அரசியல் கட்சிகளின் ஊர்வலத்திற்கோ, போராட்டத்திற்கோ கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டதுபோல இருந்தனர் என்பதுதான் உண்மை.
ஒரு விஷயம் நன்றாகத் தெரிகிறது. நமது காவல்துறை மற்றும் தீவிரவாத எதிர்ப்புப் படையினர், இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இல்லை. அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படவில்லை. தகுந்த ஆயுதங்கள் தரப்படவில்லை. காவல்துறையினர் "கள்ளன்-போலீஸ்' விளையாட்டுகளிலும், "மாமூல்' பொழுதுபோக்கிலும் ஈடுபட்டு வந்த காலம் மலையேறி, பயங்கரவாதக் கும்பல்களையும், முற்றும் கற்றுத் தேர்ந்த, சர்வதேசத் தொடர்புள்ள குற்றவாளிகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. மாறுபட்ட சூழ்நிலைக்கு அவர்களை நாம் தயார்படுத்தாவிட்டால், முதல் பலி அவர்களாக இருக்கக்கூடும்.
மும்பையில், பயங்கரவாதிகள் வெளிநாட்டுப் பயணிகளைக் குறிவைத்து இயங்கினார்களோ என்கிற சந்தேகம் ஏற்படுகிறது. மேலைநாடுகளில் தங்களது கைவரிசையைக் காட்ட முடியாத அளவுக்குப் பாதுகாப்பு இருப்பதால், இந்தியாவை அவர்கள் இலக்காக மாற்றி ரத்தப்பலி வாங்குகிறார்களோ என்றுகூடத் தோன்றுகிறது. நமது பாதுகாப்பு அமைப்புகள் ஒரு தலைமையின் கீழ் இயங்காமல் இருந்தால், இதுபோன்ற தாக்குதல்களை எதிர்கொள்வது கடினம்.
பிரதமர் மன்மோகன் சிங்கும், எதிர்க்கட்சித் தலைவர் லால்கிஷன் அத்வானியும் பயங்கரவாதத்தை ஒடுக்கும் விஷயத்தில் கலந்து பேசியிருப்பதும், ஒன்றுபட்டுச் செயல்பட உறுதி பூண்டிருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. முறையான, முழுமையான பாதுகாப்பு அமைப்பும், அதற்கேற்றபடி சட்டங்களும், பயங்கரவாதத்தை நேர்கொள்ளப் போதிய அதிகாரத்துடன் ஒரு கூட்டுத் தலைமையும் அத்தியாவசியத் தேவை.
இது ஒரு தேசிய சவால். அதை எதிர்கொள்ள நம்மால் முடியும். இன்று நேற்றல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து அன்னியத் தாக்குதல்களை எதிர்கொண்டு, துவளாமல் பீடுநடை போடும் பாரத தேசம், இதுபோன்ற சிறுமதியர் சதியால் துவண்டுவிடுமா என்ன? துயருண்டோ, துணிவுள்ளோர்க்கே?
Yellow
Green
Blue
Light Green
Posted by IdlyVadai at 11/29/2008 04:30:00 AM 2 comments
Labels: கட்டுரை
பொறுப்பற்றதனம்
தினமணி ஆசிரியர் சிறப்பு கட்டுரை
நூற்றுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சுமார் 600-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கிறார்கள். இன்னும் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருப்பவர்கள் எத்தனை பேர், படுகாயம் அடைந்து மயங்கிக் கிடப்பவர்கள் எத்தனை பேர் என்பது போகப்போகத்தான் தெரியும். மும்பையில் நேற்று நடந்திருக்கும் தீவிரவாதத் தாக்குதல்கள் தேசத்தையே நிலைகுலையச் செய்திருக்கின்றன.
கடந்த ஓராண்டில் மட்டும் நடந்திருக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களின் எண்ணிக்கை பதினொன்று. அதிலும், ஜெய்ப்பூர், ஆமதாபாத், புதுதில்லி, இம்பால் மற்றும் அசாமில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் 500-க்கும் அதிகமான அப்பாவி ஜனங்களின் உயிர்களைப் பலி வாங்கி இருக்கின்றன. அத்தனைக்கும் சிகரம் வைத்தாற்போல இப்போது மும்பையில் ஓர் அதிபயங்கரத் தாக்குதல், ஒரு தீவிரவாதக் கும்பலால், துணிந்து அரங்கேற்றப்பட்டிருக்கிறது என்றால், இதுபோன்ற தாக்குதல்களை எதிர்நோக்கும் திறமையும் சாமர்த்தியமும் இந்த அரசுக்குக் கிடையாது என்கிற பயங்கரவாதிகளின் நம்பிக்கைதான் காரணமாக இருக்க முடியும்.
இதற்கு முன்பு இல்லாதவகையில், தீவிரவாதக் கும்பல் கடல் வழியாக நுழைந்திருப்பது அதைவிட அதிர்ச்சி தரும் விஷயம். எம்.வி.ஆல்ஃபா என்கிற கப்பலில் இந்த பயங்கரவாதக் கும்பல் வந்திருக்கக்கூடும் எனக் கடலோரக் காவல் படையினர் கருத்துத் தெரிவிக்கின்றனர். இன்னும் சில தகவல்கள் இந்தப் பயங்கரவாதிகளை ஏற்றிக்கொண்டு வந்தது ஒரு வியத்நாமியக் கப்பல் என்று தெரிவிக்கின்றன. அவர்கள் குஜராத்திலிருந்து வந்தார்கள் என்று சில செய்திகளும், இல்லையில்லை, பாகிஸ்தானிலிருந்து வந்திருப்பதாக இன்னபிற தகவல்களும் தெரிவிக்கின்றன.
எது எப்படி இருந்தாலும், இதுவரை நடந்து வந்த எல்லை தாண்டிய தீவிரவாதம் இப்போது கடல் தாண்டிய தீவிரவாதமாக மாறி இருப்பது ஆபத்தான அறிகுறி. நீண்ட கடற்கரையுடைய இந்திய தீபகற்பத்தில் எல்லா பகுதிகளையும் கண்காணிப்பது என்பது இயலாத விஷயம். கடலோரக் காவல்படையினர் இரவு பகலாக வலம் வருகின்ற மும்பை துறைமுகப் பகுதிக்குள் துணிந்து நுழைந்து, நகரத்திற்குள் பயங்கரவாதிகள் அராஜகம் செய்திருக்கிறார்கள் என்றால், அரசின் புலன்விசாரணைத் துறையைவிட அவர்கள் சாமர்த்தியமானவர்கள் என்றுதானே அர்த்தம்?
தாக்குதல் நடந்த தாஜ் மற்றும் ஒபராய் ஹோட்டல்களுக்கு அருகில் இருக்கும் ஓர் உணவு விடுதியில் சுமார் 8 கிலோ எடையுள்ள ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளால் கொண்டு வரப்பட்டது என்று தெரிகிறது. அவர்களிடம் இன்னும் எத்தனை கிலோ இருக்கிறது என்பது தெரியவில்லை. இந்த அளவுக்கு வெடிபொருள் துணிந்துகொண்டு வரப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்றால் அவர்களது செயல்பாடுகள் அதைவிட அதிர்ச்சியைத் தருகின்றன.
ரயில் நிலையத்தில் நுழைந்து அப்பாவிப் பயணிகளைச் சுட்டு வீழ்த்தி இருக்கிறார்கள். தெருவோரம் போய்க் கொண்டிருப்பவர்கள் மீது கிரானைடுகளை வீசுவதும், துப்பாக்கியால் சுடுவதுமாகத் தங்களது அட்டகாசத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள். தாஜ் மற்றும் ஒபராய் ஹோட்டல்களில் நுழைந்து தங்கி இருந்தவர்களைப் பிணைக் கைதிகளாக்கி இருக்கிறார்கள். இதெல்லாம் எந்த தைரியத்தில்? இதனால் அவர்கள் சாதிக்க இருப்பது என்ன?
பத்து இடங்களில் கடந்த பத்து மாதங்களாகத் தொடர்ந்து குண்டுகள் வெடித்தும், பல உயிர்கள் பலியாக்கப்பட்டும், அறிக்கை கொடுப்பதைத் தவிர வேறு எதுவுமே செய்யாமல் குண்டுக்கல்லாக ஓர் உள்துறை அமைச்சர் இருக்கிறார் என்பதுதான் அவர்களது தைரியம். அவரைப் பார்த்தாலும் சரி, அவருடைய செயல்பாடுகளும் சரி, இந்தியாவில் நாம் எந்தவித பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டாலும் அதைப்பற்றி சற்றும் கவலைப்படாத உள்துறை அமைச்சகம் இருக்கிறது என்பதுதான் அவர்களுக்குத் துணிவைக் கொடுத்திருக்க முடியும். இத்தனைக்குப் பிறகும் உள்துறை அமைச்சரை மாற்ற வேண்டும் என்று பிரதமரும் நினைக்கவில்லை, தனது கையாலாகத்தனத்தை ஒத்துக்கொண்டு ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அமைச்சரும் நினைக்கவில்லை. என்ன பொறுப்பற்றதனம்? கடந்த பத்து ஆண்டுகளாக, சூப்பர் உள்துறை அமைச்சராகவும், நிழல் பிரதமராகவும் செயல்படுபவர் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் என்கிற பதவியை வகிப்பவர். அவர் எதுவுமே பேசக்காணோமே, ஏன்? இப்படித்தான் தொடர்ந்து பயங்கரவாதச் செயல்கள் நடக்கும் என்றால், எம்.கே. நாராயணன் ஏன் தேசியப் பாதுகாப்புச் செயலராகத் தொடர வேண்டும்? அப்படி ஒரு பதவியின் அவசியம்தான் என்ன? இத்தனைக்கும் அவர் முன்னாள் உளவுத்துறைத் தலைவர். அந்தப் பதவிக்கு எந்தவிதப் பொறுப்பும் கிடையாதா?
அது ஒருபுறமிருக்க, நமது தொலைக்காட்சி சேனல்கள் அரங்கேற்றிய பொறுப்பற்ற தனத்துக்கு அளவே இல்லை. ஹோட்டலின் உள்ளேயும், இன்ன பிற மறைவிடங்களிலும் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகள் அனைவரும் தொலைக்காட்சிச் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்பது அரிச்சுவடிப் பத்திரிகை நிருபருக்குக்கூடத் தெரியும். மற்ற சேனல்களைத் தங்களது சேனல் முந்திக்கொள்ள வேண்டும் என்கிற போட்டி மனப்பான்மையில், இந்தியாவின் மூன்று பிரதான ஆங்கிலத் தொலைக்காட்சிச் சேனல்கள் மிகப்பெரிய பாதுகாப்புப் பின்னடைவுக்கு வழிகோலிய விதம் வெட்கித் தலைகுனிய வைக்கிறது.
தேசியப் பாதுகாப்புப் படையினரும், காவல்துறையினரும் பயங்கரவாதிகளைப் பிடிக்க இன்னின்ன வியூகங்களை வகுக்கின்றனர் என்பதில் தொடங்கி, அவர்களது ஒவ்வொரு நடவடிக்கையையும் தங்களது தொலைக்காட்சிச் சேனல்களில் ஒளிபரப்பின இந்த நிறுவனங்கள். அதைப் பார்த்துக் கொண்டிருந்த பயங்கரவாதிகள், அதற்கேற்றாற்போல தங்களது அடுத்தகட்டத் திட்டங்களைத் தீட்ட முடிந்தது. தாங்கள் சூழ்ந்து கொள்ளப்பட்ட நிலையில், இனிமேல் தப்பிக்க முடியாது என்கிற நிலைமை ஏற்பட்டதைத் தொலைக்காட்சி மூலம் தெரிந்துகொண்டு, அந்தக் கட்டடத்தையே தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
நியூயார்க் நகரத்தில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டபோது அங்கிருந்த பத்திரிகையாளர்களுக்கு இருந்த பொறுப்புணர்வு நம்மை மெச்ச வைத்தது. பாதுகாப்புப் படையினருடன் கைகோர்த்து செயல்பட்டனர் பத்திரிகையாளர்கள். தேசிய அளவில் பீதி ஏற்படாமல் காத்தனர். ஆனால் மும்பையில் நமது பத்திரிகையாளர்கள் வெறும் வியாபாரிகளாகச் செயல்பட்டார்களே தவிர, பத்திரிகையாளர்களுக்கு உரித்தான பொறுப்புணர்வுடன் செயல்படவில்லை.
அரசு தவறு செய்யலாம். காவல்துறை தவறு செய்யலாம். நீதித்துறை தவறு செய்யலாம். ஆனால் இவர்களது தவறுகளைத் தட்டிக் கேட்கும் உரிமை பெற்ற பத்திரிகைகள் தவறிழைப்பதா? தங்களுக்கிடையே உள்ள வியாபாரப் போட்டிக்காக தேசநலனை, நாட்டின் பாதுகாப்பை, பொதுமக்களின் உயிரைப் பகடைக்காயாக்குவதா? வெட்கக்கேடு!
உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் கையாலாகாத்தனத்தைவிடக் கொடுமையானது டெலிவிஷன் பத்திரிகையாளர்களின் பொறுப்பற்றதனம்!
- ஆசிரியர்
( நன்றி: தினமணி, 28.11.08)
Posted by IdlyVadai at 11/29/2008 02:33:00 AM 8 comments
Friday, November 28, 2008
மும்பையில் நரேந்தர மோடி
Summary of Modi's press meet in Mumbai 10 minutes back
- Rs 1 crore for security personnels who died during ops
- This is not an attack on Mumbai - it is an attack on India
- we are standing with mumbai
- 1st time Pak attaked from sea.
- PM address to Nation was disappointing
- Nation expects more from PM
- It is an attack on India's sovereignty
- Pak has violated UN convention
Modi, who visited the residence of Anti Terrorism Squad (ATS) Chief Hemant Karkare who was killed in the attack on Wednesday, said that the nation should join hands in the fight against terrorism
Posted by IdlyVadai at 11/28/2008 10:10:00 AM 19 comments
Labels: செய்தி
Thursday, November 27, 2008
வி.பி.சிங் மறைவு
Posted by IdlyVadai at 11/27/2008 04:16:00 PM 4 comments
இந்தியா என்ன செய்ய வேண்டும் ?
=> மும்பை தீவிரவாதிகள் தாக்குதல்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் ரத்து.
=> தீவிரவாதிகள் தாக்குதல்: இந்தியாவில் 20 ஓவர் போட்டியை நடத்த பாண்டிங் எதிர்ப்பு
=> மும்பை கேட்வே கடலோரத்தில் வெடிகு�டு நிர�பிய படகு கண்டுபிடிப்பு
=> உள்துறை மந்திரிசிவராஜ்பாட்டீல், அத்வானி மும்பை விரைந்தனர்.
=> துப்பாக்கி சூட்டில் த�பிய 2 ஐரோப்பிய எம்.பி.க்கள்: பிரான்சு அணு விஞ்ஞானி மீட்பு
=> மும்பை வெடிகுண்டு தாக்குதல்: மன்மோகன்சிங்குக்கு இங்கிலாந்து பிரதமர் கடிதம்
> மும்பையில் தொடர் தாக்குதல்: ஜார்ஜ்புஷ், ஒபாமா கண்டனம்- அவசர ஆலோசனை.
=> மும்பை கேட்வே கடலோரத்தில் வெடிகுண்டு நிரப்பிய படகு கண்டுபிடிப்பு
=> பிரதமரை, தமிழக எம்.பி.க்கள் சந்திக்கும் தேதி மாற்றம்.
இந்தியா என்ன செய்ய வேண்டும் ?
மும்பையில் நடந்து கொண்டிருக்கும் பயங்கரவாதம் முதலும் அல்ல முடிவும் அல்ல. இதை விட பல மடங்கு பயங்கரமான தீவீரவாதத்தை வரும் நாட்களில் காணப் போகிறோம் என்று உடல் நடுங்க விரல் நடுங்கச் சொல்கிறார் இந்தியாவின் மூத்த உளவு அதிகாரியான பி.ராமன். இந்தியாவின் அணு ஆயுதங்களும், அணு உலைகளும் கூட பாதுகாப்பாக இல்லை என்கிறார் ராமன். அவர் இந்தியாவின் தலமை உளவு நிறுவனத்தில் வேலை பார்த்தவர் அவரை விட நமக்கு அதிக தெரிந்திருக்க நியாயம் இல்லை. அவர் சொல்வது உண்மையாகவே இருக்க வேண்டும். இந்தியாவில் என்று முகமதிய படையெடுப்பு ஆரம்பித்ததோ அன்றே இஸ்லாமியத் தீவீரவாதம் தொடங்கி விட்டது. பணம் நிலம் பற்றிய பிரச்சினை என்றால் பேசலாம் ஆனால் ஒரு மத நூலில் சொல்லப் பட்டதைப் படித்து விட்டு("the Jehad" or "Holy War") என்று பிற மதத்தினரைக் கூண்டோடு அழிக்க வேண்டும் என்று கிளம்பியிருக்கும் இஸ்லாமியத் தீவீரவாதிகள் பயங்கரமான அபாயகரமான மன நோய் பிடித்த தீவீர்வாதிகள். முகமது கோரி முதல், அவுரங்க சீப் முதல் இன்று அப்சல் குரு வரை வெறி பிடித்து திரியும் இஸ்லாமியத் தீவீரவாதிகளால் இந்தியாவில் இந்துக்கள் இன்று வரை பல கோடிக்கணக்கில் படு கோரமாகப் படுகொலை செய்யப் பட்டு வருகிறார்கள். நாம் காஷ்மீரைக் கொடுத்தாலும் ஹைதராபாத்தைக் கொடுத்தாலும் இந்த படுகொலைகள் நிற்கப் போவதில்லை. இந்தியர்கள் அனைவரும் இஸ்லாமுக்கு மாறினால் ஒரு வேளை படுகொலைகள் நிற்குமா என்றால் அதுவும் தீர்வு இல்லை என்பதை பாக்கிஸ்தானைப் பார்க்கும் பொழுதும், ஈராக்கைப் பார்க்கும் பொழுதும் தெரிகிறது. ஆக இதற்குத் தீர்வுதான் என்ன?
அமெரிக்காவில் செப்டம்பர் 11 அன்று நடந்த தீவீரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இன்று வரை ஒரு தாக்குதல் கூட அதே இஸ்லாமியத் தீவிரவாதிகளால் நடத்த முடிவதில்லை. காரணம் என்ன? உறுதியான தலமை. உளவுத் துறையின் திறமை. அர்ப்பணிப்பு உணர்வு மிக்க அதிகாரிகள், தலைவர்கள். புஷ் மீது நாம் வேறு என்ன குறை வேண்டுமானாலும் கூறலாம் ஆனால் இன்று வரை அமெரிக்கா தாக்குதலுக்கு உள்ளாகாமல் தப்பித்ததன் காரணம் புஷ்ஷின் உறுதியான தலைமையும், துணிவான சட்டங்களுமேயாகும். அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு முஸ்லீம்களின் ஓட்டுக்களை வாங்கித்தான் ஜெயிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் கிடையாது. அதே நிலமை இந்தியாவிலும் வர வேண்டும். அமைதியை விரும்பும் இந்திய தேசியத்தின் மீதும் சகோதரத்துவம் மீதும் நம்பிக்கை உள்ள ஒவ்வொரு முஸ்லீம்களும் இதை உணர்ந்து அரசின் கடுமையான சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். அப்படி ஒரு உறுதியான தலைமை இன்று இந்தியாவில் நரேந்திர மோடியைத் தவிர வேறு எவருக்கும் இல்லை. ஒன்று நரேந்திர மோடியைப் பிரதமராக்க வேண்டும் அல்லது இந்தியாவை ராணுவத்திடம் ஒப்படைத்து விட வேண்டும். அவர்கள் இந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வு கொடுக்கிறார்களோ அதை செய்து முடித்த பிறகு இந்தியாவுக்கு மீண்டும் ஜனநாயகம் திரும்பினால் போதுமானது. இப்பொழுது தேவை ஓட்டுப் பொறுக்கும் அரசியல்வாதிகள் இல்லாத உறுதியான துணிவான தலமை ஒன்று. அது மோடியிடமும் ராணுவத்திடமும் மட்டுமே உள்ளது. இரண்டு பேர்களில் ஒருவரிடம் இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கா விட்டால் இந்தியாவை முப்பது முக்கோடி தேவர்களாலும் கடவுள்களாலும் கூடக் காப்பாற்ற முடியாது. என்ன செய்யப் போகிறது இந்தியா? என்ன செய்யப் போகிறார்கள் இந்திய வாக்காளர்கள். இந்தியக் குடிமக்களின் உயிர் அவர்கள் கையில் உள்ள வாக்குச் சீட்டுக்களில் மட்டுமே உள்ளது அதை உணர்ந்து உரிய துணிவான திறமையான தலமையைத் தேர்ந்தெடுக்கா விட்டால் இப்படி அனு தினமும் அநாதையாகச் செத்து செத்து மடிய வேண்டியதுதான்.
Posted by IdlyVadai at 11/27/2008 02:02:00 PM 69 comments
Labels: செய்தி விமர்சனம்
மும்பையில் தீவிரவாதிகள் கைவரிசை
மும்பை மாநகரின் பரபரப்பு மிகுந்த மையப்பகுதியில் உள்ள தாஜ் மற்றும் டிரிடன்ட் ஓட்டல் பகுதியில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டு வெடித்தது. இதில் சிக்கி 100 பேர் பலியாயினர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகள் மட்டுமல்லாது கடும் துப்பாக்கிச்சூட்டிலும் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். ராணுவத்தினர் மட்டுமல்லாது தீவிரவாத எதிர்ப்புப் போலீசார், தேசிய ராணுவப் படையினர் ஆகியோர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசாருக்கும் , தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது.
இந்த தாக்குதலுக்கு டெக்கான் முஜாஹீதீன் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
இவர்களை வயிற்றுக்கு கீழே சுடணும்
வழக்கம் போல் மன்மோகன் கூட்டம் கூட்டியுள்ளார். பொடாவை கொண்டு வர மாட்டோம் என்று கடைசியில் சொல்லுவார்கள். கேவலம்.
Updates:
=> NSG commandos enter Taj Hotel
=> RESCUE OPERATION BEGINS AT TAJ HOTEL
=> TAJ HOTEL GUESTS BEING EVACUATED
Posted by IdlyVadai at 11/27/2008 07:48:00 AM 29 comments
Labels: செய்தி
Wednesday, November 26, 2008
திமுக ஆட்சியில் - நீதிமன்ற அவமதிப்பு
1. ஆண்டுதோறும் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை விடுதலைப்புலிகளும், தமிழ் ஈழ மக்களும் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். ஆனால், "சிங்கள அரசின் ஆக்கிரமிப்பு போரினால் தமிழ் ஈழ மக்கள் துயரமடைந்துள்ள இந்த வேளையில், தனது பிறந்தநாள் நிகழ்ச்சிகள் எதையும் நடத்த வேண்டாம் என்று பிரபாகரன் கட்டளையிட்டு இருக்கிறார்.
ஆனால் நம் மக்கள் உயர் நீதி மன்ற வளாகத்தில் பிரபாகரனின் பிறந்த நாளை பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளார்கள். இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பிரபாகரன் தேடப்பட்டு வரும் முதல் குற்றவாளி, அக்கியூஸ்ட் என்று சொன்னது. இந்த மாதிரி புலி ஆதரவு எல்லாம் திமுக ஆட்சியில் தான் நடக்கும். காங்கிரஸ் கட்சி தலைவர்கள் திமுகவிற்கு ஆட்சிக்கு ஆதரவு தந்துவிட்டு வாயில் கட்டை விரலை வைத்து சூப்ப வேண்டியது தான்.
2. போன வாரம், காடுவெட்டி குருவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தற்போது வந்த செய்தி, காடுவெட்டி குரு மீது தமிழக அரசு தொடர்ந்த எல்லா வழக்குகளும் ரத்து செய்துள்ளது.
ஆக காடுவெட்டி குரு மீது போட்ட வழக்கு ராமதாஸ் மீது உள்ள கோபத்தால், பாலு தூது சென்ற பிறகு அவர் உத்தமர் என்று கலைஞருக்கு தெரிந்திருக்கு. “காடுவெட்டி குரு ஒரு பண்புமிக்கவர், அவர் வேட்டுவேன் என்று பேசியது எல்லாம் சும்மா லூலூலாயிக்கு தான் அதை உண்மை என்று நம்பி போலீஸ் அவரை குண்டர் சட்டத்தில் போட்டுவிட்டது” என்று கலைஞர் நாளை சொல்லுவார்.
எனக்கு தெரிந்து இரண்டுமே நீதிமன்ற அவமதிப்பு தான்.
Posted by IdlyVadai at 11/26/2008 07:24:00 PM 17 comments
Labels: செய்திவிமர்சனம்
மலேசிய முஸ்லீம்கள் யோகா செய்ய தடை
மலேசியாவில் முஸ்லீம்கள் யோகாசனம் செய்வதற்கு அங்குள்ள முக்கிய இஸ்லாமிய அமைப்பு தடை விதித்துள்ளது.
காரணங்கள்:
1. யோகாசனத்தில் இந்து மதத்தின் கோட்பாடுகள் உள்ளன. அவற்றை முஸ்லீம்கள் தெரிந்தோ, தெரியாமலோ பின்பற்றும் நிலை உருவாகி விடும். முஸ்லீம்களின் நம்பிக்கையை யோகா அழித்து விடும். எனவே முஸ்லீம்கள் யோகாசனம் செய்யக் கூடாது.
2. யோகா அசுத்தமானது.
மலேசியாவில் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு பேர் முஸ்லீம்கள். அங்கே செக்யூலர் பஜனை எல்லாம் செல்லாது. அது இந்தியாவில் மட்டும் தான்.
இந்திய மக்கள் மூளை தான் அதிக விலை என்று கேள்விப்பட்டிருக்கிறோம், இப்ப மலேசியா மக்கள் மூளை அதற்கு போட்டியாக வந்துள்ளது.
Posted by IdlyVadai at 11/26/2008 04:04:00 PM 24 comments
Labels: செய்தி விமர்சனம்
பாலு, ராசா மீது மன்மோகன் அதிர்ப்தி
CNN-IBN’ல் வந்த செய்தி. மன்மோகன் என்ன செய்வார் பாவம் :-)
Posted by IdlyVadai at 11/26/2008 02:39:00 PM 0 comments
மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 26-11-08
முனியும் நானும் ஜி-டாக்கில் சாட் செய்ததை முனியின் பெர்மிஷன் இல்லாமல் இங்கு பதிவாக இடுகிறேன். முனி மன்னிப்பாராக :-)
This chat is off the record Learn more Cancel
muni: :->
idly: முனி நலமா ?
muni: ஏன் பதிவுகளே இல்லை ? நிறைய மக்கள் பொழுது போகாம சும்மா இருக்காங்க. அவர்களுக்கு வேண்டியாவது நீ பதிவு போடுவதை நிறுத்தக்கூடாது
idly: economic slow down (அதனால ஆபீஸில வேலை அதிகம்) அதனால பதிவுகள் slow down...
muni: குமுதம் ரீப்போட்டரில் பா.ராகவன் எழுதுவதை நிறுத்துகிறாரா ? அதே போல் நீ நிறுத்தாமல் ஏதையாவது எழுதுக்கொண்டே இருக்க வேண்டும்.
idly: முனிக்கு எப்படி அந்த மெகா தொடர் படிக்க எல்லாம் டைம் இருக்கு ?
muni: :-) இப்ப தானே ஆரம்பித்திருக்கிறார். முப்பது வருஷ மேட்டரையும் எழுதி முடிக்கணும். தொடர் எழுதி முடிக்கும் போது அவர் சதாபிஷேகம் கொண்டாடினாலும் கொண்டாடுவார்.
idly: :-). சரி தொடர் எப்படி ?
muni: இப்ப தானே ஆரம்பித்தார். அதுக்குள்ள ரெண்டு தமிழீழ எக்ஸ்பர்ட்கள், பாரா தவறான தகவல்கள் தருகிறார் என்று அவரை கும்மி விட்டார்கள். அவருக்கு ஒரு சின்ன அட்வைஸ் - புலிகள் பற்றி ஏதாவது தாறுமாறாக எழுதிட போறார்(இந்த கும்மிக்குப் பிறகு அவர் எழுத மாட்டார் என்பது வேற விஷயம்). அப்படி எழுதினால் நம்ம காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஞானசேகரனுக்கு நடந்தது தான் நடக்கும்.
idly: என்ன நடந்தது ஞானசேகரனுக்கு ?
muni: விஷயம் தெரியாதா ? 18-ம் தேதி காலையில் `அதிகாலை' என்ற இணைய இதழில், ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதிலிருந்தே மிகுந்த துயரத்தில் இருந்தார் ஞானசேகரன். ஒவ்வொரு நாளும் ராஜீவ் உருவப் படத்தின் முன்நின்று வணங்குவார். சிலநேரங்களில் `நான் உங்களை வந்தடைவேன்' என்று கண்ணீர்கூட விட்டிருக்கிறார். இந்த நிலையில் துக்கத்தால் திடீரென தீக்குளித்த ஞானசேகரன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார்' என்று செய்தி வெளியானது.
idly: அப்படியா ? அப்பறம் என்ன ஆச்சு ?
muni: அன்றைய தினம் மாலையே தவறான செய்தி வெளியிட்டதற்காக வருந்துவதுடன் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்பதாகவும் `அதிகாலை' இணைய இதழ் அறிவிப்பு போட்டுடாங்க
idly: ஆக பா.ரா புலிகள் விஷயத்தில் ஜாக்கிரதையாக எழுத வேண்டும் இல்லை அவரும் இணையத்தில் தினம் தினம் செத்துப் பிழைக்க வேண்டும்.
Sent at 8:31 AM on Wednesday
muni: ஒருவர் இறந்துவிட்டதாக பரபரப்பு செய்தி. அதே போல நீதிபதி தீர்ப்பை படிக்கும் முன்பே அது வெளிவந்து ஒரு பரபரப்பு பார்த்தியா ?
idly: இது என்ன புது கலாட்டா ?
muni: நீ என்ன நியூஸே படிப்பதில்லையா ? சன் டிவி குழுமத்திற்கும், முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியின் ராயல் கேபிள் விஷனுக்கும் இடையே மோதலுக்கு பிறகு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிபதி ஜெயபால் இந்த வழக்கில் மேலும் விவாதம் நடத்த வேண்டும் என வழக்கறிஞர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதால், அதை அனுமதித்த நீதிபதி ஜெயபால், அந்தத் தீர்ப்பை படிக்காமல் நிறுத்தி வைத்தார்.ஆனால், அந்த வெளியிடப்படாத தீர்ப்பு, தற்போது தமிழ்நாடு சட்டக் குறிப்புகள் ஜர்னலில் வெளியாகியுள்ளது
idly: கலி முத்திவிட்டது. நீதிபதிக்கும், நீதியரசருக்கும் என்ன வித்தியாசம் ?
muni: இதற்கு நான் பதில் சொன்னால் என்னையும் ’பாப்பார நாய்’, இல்ல இல்ல 'பாப்பார அடிவருடி' என்று திட்ட 'கணக்கு வா(ந்)த்தி' கிளம்பிவந்துடும். எனக்கு எதற்கு வீண் வம்பு? எனக்கு அடியாள் கூட கிடையாது.
idly: 'அதுக்கு' போய் அடியாளா ? உங்க லெவலுக்கு அதெல்லாம் ஒரு பிள்ளைப்பூச்சி. ஃப்ரீயா விடுங்க. அப்படியே யாராவது அடியாள் இருந்தால் ஹரன் பிரசன்னாவிடம் அனுப்புங்க. புத்தகம் கொடுப்பார், அல்லது அட்லீஸ்ட் அடியாள் பற்றிய விமர்சனம் எழுதுவார்.
muni: பிரசன்னாவின் விமர்சனம் படித்தேன், . ரொம்ப டச்சிங்கா இருந்தது அவர் விமர்சனம்.
idly: ஒரே விமர்சனத்தில உயிர்மை, எனி இந்தியன், கிழக்கு எல்லாம் 'டச்' செய்ததை சொல்றீங்களா ?
muni: விமர்சனத்துக்கே விமர்சனமா :)
idly: போன சனிக்கிழமை சோ, ஜெ சந்திப்பு பற்றி முனிக்கு ஏதாவது தெரியுமா ?muni: ஜெயலலிதாவை கடந்த சில நாட்களுக்கு முன்பு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் பரதன், தா.பாண்டியன் உள் ளிட்டவர்கள் சந்தித்து பேசியது பா.ஜனதாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சரி சோவை அனுப்பி ஏதாவது குழப்பம் ஏற்படுத்தலாம் என்று முடிவு செய்திருப்பார்கள். எது எப்படியோ தற்போதைய கூட்டணி equation - [திமுக, காங்கிரஸ், பா.ம.க] [ அதிமுக, கம்யூனிஸ்ட் ] [ விஜயகாந்த், பா.ஜ.க ]
idly: விஜயகாந்த் தான் கூட்டணி இல்லை என்கிறாரே ?
muni: விஜயகாந்த் தனது கூட்டணி அறிவிப்பை வெளியிட்டு 'திடீர்' திருப்பத்தை ஏற்படுத்துவார் பாரேன்.
Sent at 8:45 AM on Wednesday
idly: அது சரி, பாமக எப்ப திமுக பக்கம் போனது ?
muni: என்ன உனக்கு விசயமே தெரியாதா ? இரு இன்றைய கலைஞர் பேட்டியிலிருந்து எடுத்து போடுகிறேன். பிளீஸ் வெயிட்...
கே: இந்த பிரச்சனை மூலம் பாமக உங்கள் அணிக்கு வரும் வாய்ப்பு இருக்கிறதா?
ப: எங்களுக்குள் எந்த தகராறும் இல்லையே.
கே: நீங்கள் அவர்களை வெளியே அனுப்பினீர்களே?
ப: நாங்கள் யாரையும் வெளியே அனுப்பவில்லை. இதுபோன்ற அவ மரியாதையான சொற்களை பயன்படுத்தும் அளவுக்கு நாங்கள் நாகரீகம் இல்லாதவர்கள் அல்ல. எங்கள் வருத்தத்தைத்தான் அவர்களிடம் தெரிவித்தோம்.
idly: சட்டக்கல்லூரி மாணவர்களை ஜெவும், வைகோவும் தான் தூண்டிவிட்டார்கள் என்று லூலூலாயிக்கு தான் சொன்னேன் என்று ஜோக் அடித்தாரே அதே போல இதுவும் லூலூலாயியாக இருக்க போவுது.
muni: காடுவெட்டி குரு ஒரு சிறந்த குடிமகன், பண்பான பேச்சாளர், திராவிட சிங்கம், போலீஸ் அவரை சிறையில் போட்டது அசிங்கம் என்று நாளை முரசொலியில் கடிதம் வந்தாலும் வரலாம்.
Sent at 8:50 AM on Wednesdaymuni: சரி விஜய் டிவியில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் 2008’ல் சின்மயி நேற்றிலிருந்து காணோமே ஏதாவது பிரச்சனையா ?
idly: எலிமினேஷன் பங்குபெரறுபவர்களுக்கு மட்டும் இல்லை, அதை காம்பியர் செய்பவர்களுக்கும் என்று நினைக்கிறேன்.
muni: இருக்கலாம் ஆனா ஏதோ நடந்திருக்கு. ஏர்டெல் சூப்பர் சிங்கருக்கு அப்பறம் வரும் ‘நடந்தது என்ன?” என்ற பிரோகிராமில் அதை காமித்தால் நல்லா இருக்கும்
idly: முனி, உங்களுக்கு ரொம்ப தான் கொழுப்பு, அடியாள் வேற இல்லன்னு சொல்றீங்க, பார்த்து :)
Sent at 8:54 AM on Wednesday
muni: காற்றிலிருந்து தண்ணீர் வரவழைக்க முடியுமா ?
idly: உங்களால முடியும், அது மாதிரி இங்கே சில வலைப்பதிவர்களாலேயும் முடியும்.
muni is sharing a file (20.2 KB) with you mineral_water.jpgmuni: வம்பு வளர்க்காதே. நான் சொல்றது சில கனடிய விஞ்ஞானிகள் De-humidifier-ன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இதை சாதித்துள்ளார்கள். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 12 லிட்டர் தண்ணீர் தயாரிக்கவல்ல இந்த நீராலை (water mill)3 அடி நீளம் கொண்டது. 3 பல்ப்களுக்கு ஆகும் கரண்ட் செலவு ஆகும், ஒரு லிட்டர் தண்ணீர் தயாரிக்க. அதாவது ஒரு லிட்டர் தண்ணீர் 18லிருந்து 20ரூ. தீவிர தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு இது எதிர்காலத்தில் பயன்படலாம். இக்கருவியின் மெகா வெர்ஷனை சற்று வரண்ட பகுதிகளில் விவசாயத்திற்கு கூட பயன்படுத்தலாம் எங்கின்றனர்.
idly: cutting edge technology பத்தியெல்லாம் பேசறீங்க! எல்லா லேட்டஸ்ட் விசயங்களையும் தெரிஞ்சு வச்சுருக்கீங்க.
muni: அயல்நாட்டில என்னென்னவோ கண்டுபிடிக்கிறாங்க, ஆனா தமிழ்நாட்டுல கடல் நீரிலிருந்து குடி தண்ணீர் தயாரிக்கிறது எப்ப செயல்பாட்டுக்கு வரும்னு தெரியல. ஆனா அந்திரா பரவாயில்ல இந்த விசயத்தில
idly: என்ன சொல்றீங்க?
muni: திருப்பதி வெங்கடேசப் பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட மினரல் குடிநீரை வினியோகம் செய்ய ஆந்திராவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் திருமலைக்கு வருகின்றனர். வெயில், மழை காலங்களில், சுத்தமான குடிநீர் கிடைக்காமல் இவர்கள் அவதிப்படும் நிலை சில நேரங்களில் ஏற்படுகிறது.பக்தர்களின் வசதிக்காக திருமலையில் ஐந்து கோடி ரூபாய் செலவில் 30 இடங்களில் மினரல் வாட்டர் இயந்திரங்களை அமைக்கப்பட உள்ளன. அதன் மூலம் இலவசமாக குடிநீர் வினியோகம் செய்ய மேற்கு கோதாவரி மாவட்டம் கலவரம் ராஜு பவுண்டேஷன் நிறுவனத்தினர் முன் வந்துள்ளனர். தற்போது, அன்னமய்யா பவன், தேவஸ்தான ஊழியர்கள் கேன்டீனில் குடிநீர் யூனிட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு மாதத்தில், அனைத்து இடங்களிலும் யூனிட்டுகள் அமைக்கும் பணி முடிவடையும். இரு, தகவலை நியூஸ் வாசிக்கிற மாதிரி கடகடன்னு சொன்னதுல கொஞ்சம் மூச்சு வாங்குது, ஆசுவாசப்படுத்திக்கறேன்!
Sent at 9:00 AM on Wednesday
idly: இந்தியா-இங்கிலாந்து ஒரு நாள் மேட்ச்களை பாத்தீங்களா?
muni: அதுல பார்க்க என்ன இருக்கு ??? உதை வாங்கறதுக்குனே விசா எடுத்து பிளைட்ல வந்த இங்கிலாந்து வீரர்கள் பத்தி என்னத்த சொல்றது? தோனி பெரிய கேப்டனா வருவாருன்னு தோணுது.
idly: சரி தான். அவரைப் பத்தி பீட்டர் ரோபக் கூட கிரிக் இன்ஃபோல ஒரு அருமையான கட்டுரை எழுதியிருக்காரு. லிங்க் வேணுமுன்னா, எ.அ.பாலா கிட்ட வாங்கிக்குங்க, டே-நைட் மேட்ச் மாதிரி நைட்-நைட் மேட்ச் வச்சாக் கூட ஒரு பந்து உடாம பாப்பாரு, Recorded மேட்சை கூட சுவாரசியமா நகத்தை கடித்துக்கொண்டு பார்ப்பார்.
muni: சோமாலிய கடல் கொள்ளைக்காரர்கள் ஒரு சவுதி எண்ணெய்க் கப்பலை கடத்தி,15 மில்லியன் டாலர் தந்தாத் தான் கப்பலையும், மாலுமிகளையும் ரிலீஸ் பண்ணுவோம்னு மிரட்டினதை பேப்பர்ல பார்த்திருப்ப. அதுல ஒரு திடீர் திருப்பம்
idly: முனி, நீங்க பார்ஸ் கார்னரிலிருந்து சோமாலியா வரைக்கும் சகஜமா பேசறீங்களே, எப்படி அது ?
muni: என்னையே ஓட்டறியா :) விசயத்தைக் கேளு. சோமாலியால அரசுக்கு எதிரான இசுலாமிய militia 'அதெப்படி ஒரு இசுலாமிய நாட்டின் கப்பலை கடத்தலாம்' என்று கப்பலையும் ஆட்களையும் விடுவிக்கும்படி கடல் கொள்ளையர்களை மிரட்ட அவர்களோ 'நாங்க பண்றது 'பிசினஸ்'. ஆனா நாங்க இசுலாமுக்கு எதிரானவங்க கிடையாது' அப்டின்னு 'தெளிவா' வடிவேலு கணக்கா ஸ்டேட்மெண்ட் விட்டுருக்காங்க.
idly: நல்ல கூத்து தான் போ.
Sent at 9:10 AM on Wednesday
muni: நீ நிறைய டிவி பார்ப்பாயா ?
idly: எனக்கு கட்&பேஸ்ட் பண்றதுக்கும், உங்களுக்கு லெட்டர் போடறதுக்குமே நேரம் கிடைக்கல. இதுல எங்க டிவி?
muni: எதுக்கு கேட்டேன்னா,மனமகிழ்ச்சி இல்லாத மக்கள் தான் நிறைய டிவி பார்க்கிறாங்கன்னு ஒரு செய்தி கண்ணுல பட்டுது
idly: நம்ம வலைப்பதிவர்கள் கூட நிறைய டிவி பார்க்கிறார்களோ? அதான் இப்படி ஆயிட்டாங்களோ?
muni: என்ன சொல்றன்னு ஒண்ணும் புரியல
idly: சந்தோஷமா இல்லாததுனால தானே ஒருத்தரை ஒருத்தர் மாறி மாறி திட்டித் தீர்த்துக்கறாங்கன்னு சொல்ல வந்தேன்.
muni: யப்பா சாமி, என்னை எந்த வம்புலயும் மாட்டி விடாதே. நான் பாட்டுக்கு 'முனியே'ன்னு இருக்கேன்
idly: யாமிருக்க பயமேன் :)
muni: போன புதன் 'உலக கழிவறை தினம்'னு உனக்குத் தெரியமா ?
idly: அதெல்லாமா கொண்டாடறாங்க அடக்கடவுளே?
muni: எல்லாத்தையும் மேல்தட்டு மனப்பான்மையோடு பார்க்காதே. உலகத்துல 250 கோடி மக்கள் சரியான கழிப்பிடம் இல்லாம வாழறாங்கன்னு தெரியுமா ? ஆனா ஒரு அமெரிக்கர் ஒரு நாளைக்கு 70 லிட்டர் தண்ணியை flush பண்றதுக்கு செலவழிக்கிறாங்க, என்ன ஒரு முரண்பாடு பாரு.
idly: சந்தடி சாக்கில மேல்தட்டுன்னு என்னை ஒரு தட்டு தட்டிட்டீங்க! பரவாயில்ல நம்ம முனிஸ் தானே :)
muni: கோச்சுக்காதே. பக்தைகள் வெயிட் பண்ணிட்டிருப்பாங்க, கடைசியா ஒண்ணு சொல்லிட்டு நான் கிளம்பறேன். நேத்து(நவ.25) பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தினம். இந்தியன் எக்ஸ்பிரஸும் பிரக்ஞ்யா என்ற அமைப்பும் இந்த நோக்கம் நல்ல முறையில் பொதுமக்களை சென்றடைய நவ.25லிருந்து டிச.10 வரை தொடர்ந்து 16 நாட்கள் பல நிகழ்ச்சிகளையும் பயிலரங்குகளையும் கூட்டாக நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். டிச.10 மனித உரிமை தினம். பெண்ணியம் வாழ்க, மனித உரிமை வாழ்க. பை, Have a Good day.
idly: கட்சித் தொண்டன் மாதிரி 'வாழ்க வாழ்க'ங்கறீங்க. அப்டியே, IT கம்பெனில வேலை பண்ற ஆசாமி கணக்கா Have a good day ங்கறீங்க :) I am confused:) மீண்டும் சந்திப்போம். வணக்கம். அது சரி அதனால் அதான் பெண்கள் படமா இருக்கா ?
muni is offline. You can still send this person messages and he will receive them even if he is offline(or idle), as he is body'god'muni.
Posted by IdlyVadai at 11/26/2008 09:24:00 AM 13 comments
Labels: பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம்
Saturday, November 22, 2008
தாத்தாவுக்கு பேரன் பதில்
நேற்று தயாநிதி மாறன் செய்தியாளர்கள் கூட்டத்தை கூட்டி முதல்வரின் குற்றச்சாட்டுக்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
ஒன்றரை வருடம் அமைதி காத்தோம்
செய்தியாளர்களிடம் தயாநிதி மாறன் பேசுகையில், கடந்த ஒன்றரை வருடங்களாக நாங்கள் அமைதியாக இருந்து வருகிறோம். ஆனால் எங்களது நிலையை விளக்கியே ஆக வேண்டும் என்ற நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளோம்.
முதல்வர் கருணாநிதி சுமத்தியுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுக்களுக்கும், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் உரிய பதிலை, பாயிண்ட் பை பாயிண்ட்டாக அளித்து, 12 பக்க கடிதம் ஒன்றை எனது சகோதரர் கலாநிதி மாறன், முதல்வருக்கு அனுப்பி வைத்துள்ளார் (கடித நகலைக் காட்டினார்).
அன்புள்ள தாத்தா அவர்களுக்கு, வணக்கம்.
நாங்கள் இன்றும் எங்கள் ஆசானாக, எங்களது தந்தை மறைவுக்கு பிறகு தாத்தாவாக மட்டுமின்றி எங்களது தந்தையாகவும் மதித்திருக்கும் தாங்கள் இன்று எழுதியுள்ள கடிதம் எங்கள் இதயத்தை பிளப்பதாக இருப்பதால் இந்த தன் நிலை விளக்கத்தை பணிவன்போடு உங்கள் காலடியில் சமர்ப்பிக்கிறோம்.
எங்கள் மீது அரசியல் ரீதியான குற்றச்சாட்டு என்றால்கூட பொறுத்துக் கொண்டிருப்போம். ஆனால் தனிப்பட்ட முறையில் எங்களது நன்றியுணர்வு, நாணயம், நேர்மை இவைகளுக்கு எதிராக & தங்களை சுற்றியிருக்கும் சில சுயநலமிகள் கொடுத்த தவறான தகவல்களை நம்பி, எங்களை இதுவரை பல திக்குகளிலிருந்து அடித்துக் காயப்படுத்தியது போதாதென்று, இப்போது எங்களது இதயத்தையே வெடிவைத்து தகர்க்கும் அளவுக்கு உண்மைக்கு மாறான தகவல்களை தந்திருப்பதால் இந்த விளக்கத்தை வெளியிட வேண்டி வந்துள்ளது.
இந்தக் கடிதம்கூட தங்களது மனதார எழுதியிருக்க மாட்டீர்கள்; யாரோ சிலரைத் திருப்திப்படுத்த எழுதியிருப்பீர்கள் என்பதை நாங்கள் உணர்கிறோம்.
நீங்கள் அடிக்கடி குறிப்பிடும் வகையில் உங்களது மனசாட்சியாக விளங்கிய எங்கள் தந்தை முரசொலி மாறன் அவர்கள் மறைந்த பிறகு அவர் அடியற்றி இந்த இயக்கத்துக்கும், நம் குடும்பத்துக்கும் நன்றியுள்ளவர்களாக, விசுவாசிகளாக நடந்து வந்துள்ளோம்.
இரு குடும்பங்க ளுக்கும் சேர வேண்டிய தொகை பங்கீடு செய்ய சொன்னதே தாங்கள்தான். அதை தற்போதே பிரிக்க வேண்டாம் என்று நான் கூறியபோது தாங்கள் தயாநிதியை அழைத்து, ‘நான் இவ்வளவு சொல்லியும் இன்னுமா பங்கீடு செய்யவில்லை? இன்னும் 2 நாளில் முடிக்கவேண்டும்’ என்று தாங்கள் கட்டளையிட்டதை மறந்துவிட்டீர்களா? வீட்டில் இருக்கும் பெரியவர்கள் ‘தாத்தா சொல்படி செய்’ என்று சொன்னார்கள். பிறகுதானே தங்கள் விருப்பப்படி பங்கீடு செய்யப்பட்டது.
தங்கள் குடும்ப பங்கிற்கான தொகையை அதிகப்படுத்தி அதனை ‘ரவுண்டாக‘ தரக்கூடாதா என்று கேட்டபோது, ‘நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்‘ என்றுதானே பதிலளித்தோம்.
தற்போது முரசொலி இருக்கும் இடத்தை அப்படியே விட்டுக் கொடுக்க சொன்னீர்கள். அதற்கும் நாங்கள் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.
அதன் பிறகு தாங்களே ‘மனமகிழ்வுடன் பிரித்துக் கொள்ளப்பட்டது’ என்று எல்லோரிடமும் கூறினீர்கள். பல பத்திரிகை சந்திப்பிலும் தாங்களே குறிப்பிட்டுள்ளீர்கள்.
இதற்கு பிறகு ஓராண்டுக்கு மேலாக நமது உறவு சுமுகமாகவே சென்றது. கடந்த பொதுத்தேர்தலுக்கு முன் தமிழ்நாட்டில்உள்ள எல்லா ஏடுகளும் தி.மு.க.வுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டு தி.மு. க.வை இருட்டடிப்பு செய்தபோது, அதனால் மனம் நொந்த நீங்கள் ‘கழகத்துக்காக ஒரு நாளேடு வேண்டும். தினகரனை வாங்கி நடத்து’ என்று கூறியபோது, தங்கள் கட்டளையை ஏற்று அந்த இதழை வாங்கினோம்.
தினகரன் பத்திரிகையை ஆரம்பத்தில் ஒரு ரூபாய்க்கு விற்று அதன் விற்பனையை உயர்த்த வேண்டும்; அதனால் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படும் என்ற நிலையிருந்தும், ஒரு சவாலாக ஏற்று நடத்த முன்வந்தோம். ஆரம்பத்தில் இவ்வளவு நஷ்டம் ஏற்படும் என்று தங்களிடம் தெரிவித்தபோது நீங்கள்கூட ‘‘எனக்காக இதனை தாங்குவியா?‘‘ என்று கேட்டீர்கள். நான் அதற்கு, ‘தாங்கித்தான் ஆக வேண்டும். இன்றைய நிலையில் கழகத்துக்கு ஆதரவாக ஒரு ஏடு வேண்டும், அதனால் நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை’ என்று உங்களிடம் உறுதி கூறி பத்திரிகை ஆரம்பித்தோம்.
இதுபற்றி பேசியபோது ஸ்டாலின் மாமா மற்றும் குட்டியப்பா (செல்வம்) போன்றவர்கள் உடன் இருந்தனர். அப்போதே தங்களிடம் நாங்கள் ஒரு உறுதி கேட்டதையும் மறந்திருக்க மாட்டீர்கள். ‘தினகரனை முரசொலி போல நடத்த முடியாது. எல்லா செய்திகளையும் போடுவோம். தி.மு.க. செய்திக்கு முக்கியத்துவம் தரலாம். அப்போதுதான் விற்பனையை உயர்த்த முடியும்’ என்று கூறினேன். அதற்கு தாங்கள் ஒப்புதல் அளித்த பிறகுதான் தினகரன் துவக்கப்பட்டது. தேர்தல் நேரத்தில் தினகரன் நாளிதழ் தி.மு.க. கூட்டணி வெற்றிக்காக எப்படி பாடுபட்டது என்பது தாங்களும், கழக தோழர்களும் அறியாததல்ல.
அப்படி கழக வெற்றிக்காக பாடுபட்ட தினகரன் ஏட்டில் ஒரு கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது. அந்த கருத்துக் கணிப்பும் திடீரென வெளியாகவில்லை. அரசியல் மட்டுமின்றி நாட்டிலுள்ள பல சூழல்களை ஆய்ந்து கருத்துக் கணிப்பு தொடர்ந்து வெளியானது. கருத்துக் கணிப்பு எடுக்கும் பணியும் உலக அளவில் பெயர் பெற்ற ஒரு நிறுவனத்திடம் தரப்பட்டு அவர்கள் எடுத்துத் தந்த கருத்துக் கணிப்பைதான் வெளியிட்டோம்.
சிறப்பாக பணியாற்றும் மத்திய அமைச்சர் என்று தினகரன் கருத்துக் கணிப்பு மட்டுமல்ல, அகில இந்திய அளவில் வெளிவரும் திவீஸீணீஸீநீவீணீறீ ணிஜ்ஜீக்ஷீமீss மிஸீபீவீணீ ஜிஷீபீணீஹ், பிவீஸீபீustணீஸீ tவீனீமீs, ஜிவீனீமீs ஷீயீ மிஸீபீவீணீ போன்ற ஏடுகளும் தயாநிதி மாறனுக்கு முதல் மற்றும் இரண்டாவது இடத்தை வழங்கியதை மறந்திருக்க மாட்டீர்கள். அப்போது தயாநிதியை நீங்கள் பாராட்டியதை நாங்கள் மறக்கவில்லை.
அதை தமிழாக்கம் செய்து முரசொலியில் முதல்பக்கத்தில் வெளியிட செய்ததும் தாங்கள்தானே. முரசொலியில் வந்த கருத்துக் கணிப்பிலும் தமிழகத்தை சேர்ந்த கூட்டணி கட்சி சார்ந்த மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறனுக்கு பின்னர்தான் இடம் பெற்றிருந்தனர். அதை முரசொலி வெளியிட்டபோது தவறாகவோ, கூட்டணி யை பிளவு படுத்தும் என்றோ தங்களுக்கு தோன்றவில்லை. ஆனால் அதேபோன்ற கருத்துக் கணிப்பை தினகரன் வெளியிட்டபோது அதற்கு சாயங்கள் பூசப்பட்டு, எங்கள் மீது வீண்பழி சுமந்தப்பட்டது.
ஸ்டாலின் மாமாவுக்கு முதலிடம் தந்து அளிக்கப்பட்ட கருத்துக் கணிப்பை தினகரன் வெளியிட்டதும், மதுரையில் சிலர் அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்து & தினகரன் ஏட்டை கொளுத்தினர்.
‘தினகரன் கருத்துக் கணிப்பு வெளியிட்டதற்கு அரசு பஸ் என்ன செய்யும்? அதை ஏன் உடைக்கிறீர்கள். வேண்டுமானால் தினகரன் அலுவலகத்தை அடியுங்கள்‘ என சென்னையிலிருந்து யாரோ தெரிவித்ததாகவும் அதனால் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டதாகவும் நமது குடும்பத்தினரே பலரிடம் பேசியதாக கூறப்படுகிறது. அது எந்த அளவு உண்மை என்பதை நீங்கள் அறிவீர்கள். பின்னர் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டதும் அதனால் மூன்று அப்பாவி உயிர்கள் பலியானதும், லட்சக் கணக்கில் நஷ்டம் உண்டானதும் தாங்கள் அறியாததல்ல!
கருத்துக் கணிப்பில் அதிகமான மதிப்பீட்டை ஸ்டாலின் மாமாதான் பெற்றிருந்தார் என்பதால் அதனை வெளியிட்டோம். பல ஆண்டுகாலமாக கட்சிக்காக தங்களைப் போன்றே தமிழகம் எங்கும் சுற்றிச் சுழன்று பணியாற்றி & கட்சிக்காக பலமுறை சிறைசென்று, மிசாக் கொடுமையை ஏற்ற ஒருவருக்குத்தானே அதிக மதிப்பெண் கிடைத்துள்ளது என்று தாங்களும் மகிழ்வீர்கள் என நினைத்தோம். ஏனோ அதனை பெரிய பாதகச் செயலாக தாங்கள் எடுத்துக் கொண்டது ஏன் என்று எங்களுக்கு தெரியவில்லை.
தினகரன் வெளியிட்ட ஒரு கருத்துக் கணிப்புக்காக தயாநிதிக்கு தண்டனை வழங்கப்பட்டது எந்த வகையில் நியாயம் என்பதை தாங்கள் கோபத்தை துறந்து சிந்தித்திட வேண்டுகிறோம். வேறு யாரையாவது தயாநிதியின் இடத்துக்கு கொண்டு வரும் எண்ணம் தங்கள் மனதில் இருந்திருந்தால் அதை தெரிவித்திருந்தால் தயாநிதி தானே முன்வந்து ராஜினாமா செய்திருப்பார். அதனை சொல்லாமல் அவரை பெரிய குற்றவாளியாக சித்தரித்து நிர்வாகக் குழுவை கூட்டி, அதில் அவரை அழைத்து ஒரு விளக்கம் கூட கேட்காமல் & அவர் மீது நடவடிக்கை எடுத்தீர்கள். தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டதற்கோ அங்கே மூன்று உயிர்கள் பலியானதற்கோ அந்த கூட்டத்தில் ஒரு அனுதாப தீர்மானம் கூட போடப்படவில்லை.
நிர்வாகக் குழு முடிவு குறித்து அறிக்கை வெளியிட்ட தயாநிதி மாறன், ‘‘நான் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கோ, தலைவர் கலைஞர் அவர்களுக்கோ என் மனதறிய எந்த துரோகமும் நினைத்தது இல்லை. உயிர் உள்ள வரை நினைக்கவும் மாட்டேன். என் தாத்தாவும், தந்தையும் என்னை அப்படி வளர்க்கவும் இல்லை. இந்த நிலையில் என்னை பதவி விலக்குவது தலைவருக்கு மகிழ்ச்சி தருவதாக இருந்தால் அதை ஏற்கவும் தயாராக உள்ளேன். ஏனென்றால் நான் தலைவர் கலைஞரின் வளர்ப்பு‘‘ என்றுதான் அறிக்கை கொடுத்தார்.
அங்கும் நாங்கள் கண்ணியம் காத்தோமே தவிர எங்கும் உங்களுக்கு எதிராக & உங்கள் கருத்துக்கு எதிராக ஒரு வாக்கியம் கூட கூறவில்லை. எங்கள் பணியை தொடர்ந்தோம். இந்த நிலையில் எங்களை அழித்தொழிக்க பலமுனை தாக்குதல்கள் தொடங்கப்பட்டன.
எங்கள் தொழிலை நசுக்க பலவித முயற்சிகள் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி எடுக்கப்பட்டன. பல நிகழ்வுகள் உங்கள் கவனத்துக்கு வராமல் தொடர்ந்தன. உங்களுக்கு உண்மையை மறைத்து & பல தகவல்கள் தரப்பட்டன. பல முறை அவற்றை உங்கள் பார்வைக்கு கொண்டு வந்தோம். அதில் சில நிகழ்வுகளை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறோம்.
கலைஞர் டி.வி. தொடங்கப்பட்டதும், சன் டிவியை முடக்கும் நோக்கத்துடன் சன் டிவியில் பணியாற்றிய சுமார் 250 பேர் ஒரே நாளில் இழுக்கப்பட்டனர். அதனை தங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தபோது அவர்களாகவே சன் டி.வி.யை விட்டு விட்டு வருவதாக தெரிவித்தார்கள் என்று உங்களுக்கு கூறப்பட்டதாக நீங்கள் தெரிவித்தீர்கள். அவர்களாகவே வந்திருந்தாலும் சேர்த்துக் கொண்டது எந்தவிதத்தில் நியாயம்? நமது தோழமைக் கட்சியை விட்டு விலகி யாராவது வந்து கழகத்தில் சேர்ந்தால் ஏற்றுக்கொள்வோமா? அதனையும் பொறுத்துக் கொண்டோம்.
பிறகு கலைஞர் டி.வி. ரேட்டிங்கை உயர்த்த வேண்டும் என்பதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் சன் டி.வி. துண்டிக்கப்பட்டது. இதனால் பொது மக்களிடையே கொதிப்பு எழுந்ததும், அது தங்கள் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டு இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு மீண்டும் சன் டி.வி. இணைப்பு கொடுக்கப்பட்டது. சன் டி.வி. தொடர்புடைய எஸ்.சி.வி. இணைப்புகள் சென்னை & மதுரை நகரங்களில் துண்டிக்கப்பட்டு வேறு இணைப்புக்கு மாற்றப்பட்டன. இவற்றை எல்லாம் கடந்து மக்கள் ஆதரவுடன் சன் டி.வி. மேலும் மேலும் முன்னேறி நம்பர் 1 சேனலாக தொடர்ந்து இயங்கி வருகிறது.
மத்திய அமைச்சர் திரு.ராசா மீதும், தமிழக மின்துறை அமைச்சர் திரு.வீராசாமி மீதும் மற்றவர்கள் மீதும் தினகரன் மற்றும் சன் டிவி கடுமையான விமர்சனம் செய்த காரணத்தால்தான் அறிவாலயத்தை விட்டு காலி செய்ய சொன்னதாக குறிப்பிட்டுள்ளீர்கள். அதுவல்ல உண்மை. கலைஞர் டி.வி.க்கு இடம் போதாததால் சன் டி.வி. யை காலி செய்ய சொன்னார்கள் என்பதுதான் நிஜம். மின்வெட்டு பிரச்னை, மத்திய அமைச்சர் ராசாவின் ஸ்பெக்ட்ரம் பிரச்னை, மற்ற பிரச்னைகள் எல்லாம் (நாங்கள் அறிவாலயத்தை காலி செய்த பிறகு) சமீப காலத்தில் தோன்றியவைதான். அந்த பிரச்னைகளை சன் டி.வி.யும் தினகரனும் மட்டும் வெளியிடவில்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து ஊடகங்களும் வெளியிட்டு வருகின்றன என்பதுதான் உண்மை.
அதற்கு பிறகு தமிழக மின்துறை அமைச்சர் வீராசாமி நேரில் வந்து ‘கலைஞர் டிவிக்கு இடம் வேண்டும். உடனே சன் டி.வி. அலுவலகத்தை காலி செய்துவிடுங்கள்’ என்று கூறினார். ‘தாத்தாவே விரும்பினால் நாங்கள் புதிய இடத்திற்கு சன் டிவி அலுவலகத்தை மாற்றுகிறோம்; அதற்கு சில மாத அவகாசகம் கொடுங்கள்’ என்றோம். மின்துறை அமைச்சர் வீராசாமி சரி என்று கூறி சென்று விட்டார். ஓரிரு மாதங்களில் மீண்டும் வீராசாமி என்னை சந்தித்தார். ‘கலைஞர் டிவிக்கு உடனே இடம் வேண்டும்.
இங்கிருக்கும் சன் டி.வி.யின் மேஜைகள், அலமாரிகள், கேபின்கள் அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு ஒரே வாரத்தில் காலி செய்ய வேண்டும் ’என்று நெருக்கடி தந்தார். நாங்களும் இரவு பகலாக வேலை செய்து ஒரே வாரத்தில் அவர் கேட்டுக்கொண்டபடி ‘கிs வீs ஷ்லீமீக்ஷீமீ வீs’ விட்டுவிட்டு சென்றோம்.
சன் டி.வி. அலுவலகம் அறிவாலயத்திற்கு சென்றது எப்படி என்பதை தாங்கள் நினைவில் வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். தி.மு.க. என்ற அரசியல் கட்சிக்கு சொந்தமான இடத்திற்கு சென்றால் ஆட்சி மாறும் போதெல்லாம் தொந்தரவு ஏற்படும் என்ற நிலையில் யாரும் அறிவாலயத்துக்கு வாடகைக்கு வர பயப்பட்ட நிலையில் சன் டி.வி.யை அங்கு கொண்டு வந்தோம்.
அங்கு வந்த பிறகு சன் டி.வி. செலவில் அறிவாலயத்தில் தாங்கள் அமரும் அறை, பத்திரிகையாளர் சந்திப்பு அறை & முரசொலி மாறன் அரங்கு, வெற்றிச் செல்வி கண் மருத்துவமனை போன்றவற்றை சீரமைத்து, அதற்காக நீங்கள் எங்களை அழைத்து பாராட்டியதை நாங்கள் மறக்கவில்லை. தாங்களே எல்லோரிடமும் ‘என் பேரன் கட்சி அலுவலகத்தை ஐந்து நட்சத்திர ஓட்டல் போல் மாற்றி அமைத்து கொடுத்துவிட்டான்’ என்று அங்கு வரும் தலைவர்களிடம் பெருமையாக கூறினீர்கள். அதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். கேட்ட தலைவர்களும் மறந்திருக்க முடியாது.
இப்போது சன் டி.வி. அறிவாலயத்தை விட்டு வெளியேறியபோது, ஏதோ பல இடங்களை இடித்துவிட்டது போன்ற ஒரு பிரமையை உருவாக்கியுள்ளீர்கள். உண்மையில், சன் டி.வி. வெளியேறிய பிறகு, கலைஞர் டி.வி.க்காக அங்கே சில மாற்றங்கள் செய்தபோது அதற்காக இடிக்கப்பட்ட நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தங்களிடம் காட்டி, எங்கள் மீது தந்திரமாக வீண்பழி சுமத்தப்பட்டுள்ளது. வீராசாமி கேட்டுக்கொண்டபடி பல கோடி ரூபாய் மதிப்புள்ள உள் அலங்காரங்களை அப்படியே சன் டி.வி. விட்டுச் சென்ற உண்மை மறைக்கப்பட்டுள்ளது.
அறிவாலயத்தை விட்டு வெளியேறியதும் அமைச்சர் வீராசாமியையும், அமைச்சர் வீரபாண்டியாரையும் தயாநிதி மாறன் அழைத்து சென்று சன் டிவி காலி செய்த இடத்தை சுற்றிக்காட்டி, அவர்கள் திருப்தி அடைந்ததை உடனிருந்த பலரும் அறிவார்கள்.
ஆகஸ்ட் 1, 2008 அன்று அறிவாலயத்தை காலி செய்து சாவி ஒப்படைக்கும்போது ‘நீங்கள் கேட்டபடி ‘கிs வீs ஷ்லீமீக்ஷீமீ வீs’ நிலையில் ஒப்படைக்கிறோம் என்று கூறி, அறிவாலய மேலாளரிடம் சுற்றிக் காட்டி அவரும் ‘நல்ல நிலையில் இடத்தை பெற்றுக்கொண்டோம்’ என்று கையெழுத்திட்டு ஒப்புதல் கடிதம் கொடுத்துள்ளார். ஆனால் அன்றோ, அடுத்த வாரமோ, அடுத்த மாதமோ எதுவும் சொல்லாமல் பல மாதங்கள் கழித்து திடீரென்று எங்கள் மீது வீண்பழி சுமத்துவதன் நோக்கம் புரியவில்லை.
இந்த வீண்பழிக்கு உள்நோக்கம் தயாநிதிமாறனை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்பதாக இருந்தால், அதற்காக எங்கள் மீது அவதூறு பிரசாரம் செய்திருக்க தேவையில்லை.
தயாநிதி மாறன் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது தான் உங்கள் விருப்பம் என்று தெரிவித்திருந்தால், மறுநொடியே தயாநிதி மாறன் தன் ராஜினாமா கடிதத்தை அளித்திருப்பார்.
இப்படி மீண்டும் மீண்டும் எங்கள் மீது வீண்பழி சுமத்தவேண்டாம். ஒன்றரை ஆண்டுகளாக மற்றவர்கள் வீண்பழி சுமத்திய போதும், புழுதி வாரி இறைத்தபோதும் வாய்மூடி மவுனமாக இருந்தோம். இன்று தாங்களே ஒரு வீண்பழியை சுமத்தும்போது அதை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
தாங்கள் விரும்பினால் எங்கு வேண்டுமானாலும் எங்களது விளக்கத்தையும், எல்லா உண்மைகளையும் ஆதாரத்துடன் தெரிவிக்க தயாராக உள்ளோம்.
இப்படிக்கு
அன்பு பேரன்,
கலாநிதி மாறன்
21.11.2008
( கடிதம் தந்த அனானிக்கு, தினகரனுக்கு நன்றி )
எலாஸ்டிக் இல்லாத ஜட்டி ( ஒருவருடம் முன்பு எழுதியது)
Posted by IdlyVadai at 11/22/2008 06:16:00 AM 17 comments
Friday, November 21, 2008
தயாநிதி, கலாநிதி பற்றி கலைஞர்
எதற்கு எழுதினார், ஏன் எழுதினார் என்று தெரியலை, ஆனா எழுதிட்டார். படித்துவிடுங்கள். ஒரு பழைய தமிழ் சினிமா பார்த்த எஃபெக்ட்.
தயாநிதி மாறன், கலாநிதி மாறன் தி.மு.க. மீதும் ஆட்சி மீதும் பழி சுமத்துவதை எப்படி தாங்கிக் கொள்ள முடியும்? - கருணாநிதி அறிக்கை
மாறிவிட்டார்கள்
மடியில் தவழ்ந்தும் மார்பில் விளையாடியும் - தோளில் தொத்தியும் நான் தூக்கி வளர்த்த பிள்ளை - அண்ணாவின் அன்புக்கும் என் உயிருக்கு உயிராகவும் விளங்கி - இன்னும் வாழ வேண்டிய வயது இருப்பினும் என்னை மீளா சோகத்தில் ஆழ்த்தி விட்டு, மறைந்து விட்ட மாறன்; அவர் பெற்ற பையன்கள் கலாநிதி தயாநிதி எனும் புகழ், அன்பு என்ற செல்லப் பெயர் கொண்ட இந்த இருவரும் அவரின் வழித் தோன்றல்களாக என்னிரு கரம் பிடித்துத் துளிர்த்துத் தழைத்த காட்சியை அனைவரும் அறிவீர்கள்.
ஆனால் வயது வந்த பிறகு; மாறன் எனும் பாசமிகு மதிற் சுவர் தாண்டி இருவரும் எனக்கெதிராக கிளம்பிடுவர் என்றோ; பகை பாராட்டுவர் என்றோ நான் கனவிலும் கருதிடவில்லை.
அவர்தம் போக்கும் நோக்கும், அவர்கள் "பூமாலை'' எனும் "கேசட்'' வியாபாரம் நடத்தியபோது இருந்ததை விட; அதன் வளர்ச்சி "சுமங்கலி கேபிள் விஷன்'' ஆக, "சன் டி.வி.''யாக, "சன் நெட்வொர்க்'' ஆக வளர்ந்து மாறியதும் -மாறனின் பிள்ளைகளும் மாறிவிட்டார்கள்.
விரும்பவில்லை
முரசொலி மாறனும் முரசொலி அலுவலக முகப்பில் சிலையாக நின்று விட்டார். அதன் பிறகுதான் "சன் டி.வி.'' பங்குத் தொகை பிரிக்கப்பட்டு எமக்குக் கிடைத்த பங்குத்தொகை 100 கோடி ரூபாயை துணைவியர்க்கும் பிள்ளைகள் பெண்களுக்குமாக பங்கிட்டுக் கொண்டோம்.
சன் தொலைக்காட்சி முறையாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென்று அதனைப் பிரிக்க வேண்டிய கட்டாயம் எதனால் ஏற்பட்டது? எதற்காக அவ்வளவு அவசர அவசரமாகப் பிரிக்க முடிவெடுத்தார்கள்? சன் தொலைக்காட்சியின் இலாபம் எவ்வளவு? அதன் கணக்கு எவ்வளவு? என்று எந்த விவரத்தையும் நான் தெரிந்து கொள்ள விரும்பவில்லை.
அதற்கான பங்கீடு நடைபெற்ற போது கூட அதில் பங்கு பெற்றிருந்தோர், அதிலே கையெழுத்திட முன் வராத நிலையில் நான் தான் அவர்களையெல்லாம் சமாதானம் செய்து, அந்தப் பங்கீடு எந்தவிதமான கசப்புணர்வுகளும் ஏற்படாத வகையில் நடந்தேறிட உதவி செய்தேன் என்பது அனைவருக்கும் தெரியும். பின்னர் "தினகரன்'' இதழையும் இவர்கள் வாங்கி விட்டார்கள்.
கருத்துக் கணிப்பு
அதன் தொடர்பாக 7-5-2007 அன்று "தினகரன்'' நாளேட்டில் கருத்துக் கணிப்பு ஒன்று வெளிவரப் போகிறது என்று என் கவனத்திற்கு வந்தபோது, தேர்தல் இல்லாத நேரத்தில் எதற்காக இந்தக் கருத்துக் கணிப்பு, மெகா சர்வே என்றெல்லாம் தேவையற்ற பிரச்சினையைக் கிளப்ப வேண்டும், அது தேவையில்லை, அந்தக் கருத்துக் கணிப்பை தயார்படுத்திவிட்டாலுங்கூட, அதனை வெளியிட வேண்டாமென்று இரண்டு மூன்று முறை நான் நேரிலேயே தெரிவித்திருந்தேன்.
இது துரைமுருகன், ஆர்க்காடு வீராசாமி இருவருக்கும் கூடத் தெரியும். ஆனால் என் யோசனையை ஏற்றுக் கொள்ளாமல், 2007-ஆம் ஆண்டு மே திங்கள் 7-ஆம் தேதிய "தினகரன்'' நாளேட்டில் அந்தக் கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது.
தேவைதானா?
தமிழகத்தின் சார்பில் தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., ஆகிய கட்சிகளைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கும் நிலையில், "தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களில் சிறப்பாகச் செயல்படுபவர் யார்?'' என்ற தலைப்பிலே கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது. அந்தக் கருத்துக் கணிப்பில் தயாநிதிமாறனுக்கு 64 சதவிகிதம் பேர் ஆதரவு என்றும், நிதி மந்திரி ப.சிதம்பரத்துக்கு 27 சதவிகிதம் பேர் ஆதரவு என்றும், டி.ஆர். பாலுவிற்கு 7 சதவிகிதம் பேர் ஆதரவு என்றும், டாக்டர் அன்புமணிக்கு 1 சதவிகிதம் பேர்தான் ஆதரவு என்றும் மக்கள் ஆதரவு இருப்பதாக தினகரன் ஏட்டில் வெளியிட்டார்கள்.
இரண்டு மூன்று கட்சிகளின் சார்பில் மத்தியிலே கூட்டணியில் மந்திரிகள் இருக்கும்போது, அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கெல்லாம் இல்லாத ஆதரவு தயாநிதி மாறனுக்கு இருப்பதைப் போலக் குறிப்பிடும் இந்தக் கருத்துக் கணிப்பு தேவைதானா?
வரவேற்பார்களா?
குறிப்பாக, தோழமைக் கட்சியிலே இடம் பெற்றுள்ள டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு 1 சதவிகிதம் பேர்தான் ஆதரவு என்று வெளியிடுவது சரியான முறைதானா? அதன் காரணமாக அந்தக் கட்சியிலே உள்ளவர்கள் தி.மு.கவின் பால் எந்த அளவிற்கு கோபம் அடைய நேரிடும்? அதே நேரத்தில் அகில இந்திய அளவில் பாராட்டுப் பெற்று நீண்ட அனுபவம் பெற்றுள்ள நிதி மந்திரி ப.சிதம்பரத்திற்கு 27 சதவிகிதத்தினர் தான் ஆதரவு என்றும், தி.மு.க.வைச் சேர்ந்த தயாநிதி மாறனுக்கு மட்டும் 64 சதவிகிதம் பேர் ஆதரவு என்றும் வெளியிட்டால், காங்கிரஸ் கட்சியிலே உள்ள தோழர்கள் அதனை வரவேற்பார்களா?
எதற்காக வீண் வம்பை வளர்க்க வேண்டும்? தி.மு.க சார்பிலேயே அமைச்சர்களாக உள்ள பாலுவிற்கு 7 சதவிகிதம் பேர் தான் ஆதரவு என்று எழுதுவதால் என்ன பயன்? இந்தக் கருத்துக் கணிப்பினை வெளியிட்டே இருக்கத் தேவையில்லை என்பது என் கருத்தாக மட்டுமல்ல, அப்போது தமிழகத்திலே உள்ள மூத்த அரசியல்வாதிகள் அனைவராலும் அந்தக் கருத்துக் கணிப்பு தவறாகக் கருதப்பட்டது.
குடும்பத்தில் குழப்பம்
இந்தச் செய்தியைப் படித்து விட்டு பெரிதும் வருந்திய நான், நேரடியாக கலாநிதி, தயாநிதி இருவரையும் அழைத்து, முதலில் இந்தக் கருத்துக் கணிப்பு வெளியிடுவதை நிறுத்துங்கள் என்று கோபமாகவே சொன்னேன். என்னுடைய கோபம் அலட்சியப்படுத்தப்பட்டு என் கருத்தும் அப்போது ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
9-5-2007 அன்று "தினகரன்'' இதழில் முதல் பக்கத்தில் தலைப்பிலே கட்டம் கட்டி ஒரு செய்தி - "கருணாநிதியின் அரசியல் வாரிசு யார்? - 11ஆம் பக்கம் பார்க்க'' என்று தலைப்பிட்டு - மீண்டும் ஒரு கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது. அந்தக் கருத்துக் கணிப்புக்கு தலைப்பே "கருணாநிதியின் அரசியல் வாரிசாக யார் வர வேண்டும்?'' என்பதாகும்.
இதில் தமிழக அளவில் மு.க.ஸ்டாலின் தான் கலைஞரின் அரசியல் வாரிசாக வர வேண்டும் என்று 70 சதவிகிதத்தினரும், மு.க.அழகிரிக்கு ஆதரவாக 2 சதவிகிதத்தினரும், கனிமொழிக்கு ஆதரவாக 2 சதவிகிதத்தினரும் ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பதாகச் செய்தி வெளியிட்டார்கள். முதல் கருத்துக் கணிப்பு தோழமைக் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கானது என்றால், இந்தக் கருத்துக் கணிப்பு குடும்பத்தாருக்கு மத்தியிலேயே குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது.
வீண் வம்பு
மு.க.அழகிரி ஆனாலும், கனிமொழி ஆனாலும் எனக்கு அரசியல் வாரிசாக வருவதற்கான முயற்சியோ, அறிவிப்போ எதிலும் ஈடுபடாத நிலையில், தேவையே இல்லாமல் வீண் வம்பினை விலை கொடுத்து வாங்குவதைப் போல அவர்களுக்கு தமிழகத்திலே இரண்டு சதவிகிதம் தான் ஆதரவு என்பதாக செய்தி வெளியிட்டார்கள்.
இதிலே கூட தயாநிதி மாறன், இந்தப் போட்டியில் தன் பெயரைத் தவிர்த்துக் கொண்டு, அவருக்கு எத்தனை சதவிகிதம் ஆதரவு என்பதையே வெளியிடாமல், அழகிரி, ஸ்டாலின், கனிமொழி என்ற என் பிள்ளைகளுக்கு மத்தியிலேயே ஒருவருக்கொருவர் காழ்ப்புணர்வை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் கருத்துக் கணிப்பு வெளியிட்டார்கள். அப்போதெல்லாம் கூட, நான் இந்த ஏற்பாடுகள் எல்லாம் உள்நோக்கத்துடன் திட்டமிட்டுத் தான் செய்யப்படுகிறது என்று நினைத்தது கிடையாது.
வன்முை
மு.க. அழகிரிக்கு இரண்டு சதவிகிதம் பேர் தான் தமிழகத்திலே ஆதரவு என்று கருத்துக் கணிப்பு வெளியிட்டதும், அதற்காக அழகிரி கோபமடையாமல் இருக்கலாம். ஆனால் மற்றவர்கள் பொறுமையாக இருப்பார்களா? அதனால், அழகிரிக்கே தெரியாமல், அந்தக் கருத்துக் கணிப்பை வெளியிட்ட தினகரன் அலுவலகத்திற்குள் புகுந்து வன்முறையிலே ஈடுபட்டார்கள். அந்த வன்முறைச் செயலில் அழகிரிக்கு கொஞ்சம் கூட ஈடுபாடு கிடையாது என்றபோதிலும், அந்த வன்முறைச் சம்பவம் நடைபெறவும், அதனால் மூன்று அப்பாவி அலுவலர்கள் பலியாகவுமான நிலைமை ஏற்பட்டது.
பிரித்தாளும் சூழ்ச்சி
கருத்துக் கணிப்பு வெளியிட வேண்டாமென்று நான் எத்தனை முறை சொன்னேன்? என் வார்த்தை கேட்கப்பட்டதா? அதன் பலன் என்னவாயிற்று? எதற்காக ஸ்டாலினை உயர்த்தி வைத்து, அழகிரியையும், கனிமொழியையும் மட்டம் தட்ட நினைக்க வேண்டும்? ஒரே குடும்பத்திற்குள் இப்படிப்பட்ட பிரித்தாளும் சூழ்ச்சி நல்லது தானா?
மு.க.அழகிரியை அத்துடனாவது விட்டார்களா? 10-5-2007 தேதிய தினகரனில் - "கருத்துக் கணிப்பை சகிக்க முடியாமல் மு.க.அழகிரி வெறியாட்டம் - ரவுடிகளை ஏவித் தாக்குதல்'' என்ற தலைப்பிலே செய்தி வெளியிட்டார்கள்.
மோசமாக விமர்சனம்
குடும்பத்திற்குள்ளே சண்டையை ஏற்படுத்தியது மாத்திரமல்லாமல், அன்று முதல் இன்று வரை தினகரன் நாளேட்டில், என்னுடைய தலைமையிலே உள்ள தி.மு.க. அரசையும், அரசின் காவல் துறையையும் மற்றத் துறைகளையும் எந்த அளவிற்கு மோசமாக - ஏன் எதிர்க்கட்சி ஏடுகளை விட மோசமாக விமர்சனம் செய்து செய்திகளை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்கள்?
மே திங்கள் 11-ஆம் தேதி கொட்டை எழுத்துக்களில் "அழகிரி அட்டூழியத்திற்கு முடிவு கட்டுங்கள்'' என்றும் "நடவடிக்கை எடுக்கும் வரை ஓயமாட்டேன்'' என்றும் கலாநிதி மாறன் கூறியதாக தினகரன் நாளேட்டில் எழுதப்பட்டிருந்தது. அதே கருத்துக் கணிப்பின் தொடர்ச்சியாக "எந்த அரசுத் துறை அதிகாரிகள் அதிக லஞ்சம் வாங்குகிறார்கள்?'' என்ற தலைப்பில் - என் பொறுப்பிலே உள்ள காவல் துறையில்தான் அதிக அளவில் லஞ்சம் வாங்குகிறார்கள் என்று முடிவு வெளியிட்டார்கள்.
கவன ஈர்ப்புத் தீர்மானம்
தினகரன் அலுவலகத்திலே நடைபெற்ற சம்பவம் குறித்து சட்டப் பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 10-5-2007 அன்று கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தபோது, நான் அளித்த பதிலின் இறுதிப் பகுதி வருமாறு:-
09-05-2007 அன்று காலை 9.30 மணிக்கு, மதுரையில் சிலர் கருத்துக்கணிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து தினகரன் நாளிதழ் அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்து, தினகரன் இதழை தீயிட்டுக் கொளுத்திவிட்டு கலைந்து சென்றனர்.
இது சம்பந்தமாக, தலைமைக் காவலர் 830 ரகுநாத கலைமணி என்பவரின் புகாரின் பேரில், ஒத்தக்கடை காவல் நிலைய குற்ற எண்.224/2007 பிரிவு 147, 148, 285 இ.த.ச.படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் கோபிநாதன், குமார், சேகர், பாண்டி, அருணாசலம் ஆகிய ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர், காலை 10.00 மணிக்கு சரவணன் என்பவர் தலைமையில் சிலர் தினகரன் அலுவலக வளாகத்திற்குள்ளேயே அத்துமீறி நுழைந்து, கற்களை வீசி, கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர்.
பாதுகாப்பு
இது சம்பந்தமாக, தலைமைக் காவலர் 1380 மார்டின் வில்லியம் என்பவரின் புகாரின் பேரில், ஒத்தக்கடை காவல் நிலைய குற்ற எண். 225/2007 பிரிவு 147, 148, 332 இ.த.ச.படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் அழகுராஜா, பிரேம்குமார் என்ற இருவர் இதுவரை கைதாகியுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து, தினகரன் அலுவலகத்திற்கு ஊமச்சிக்குளம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர், தலைமையில் நான்கு உதவி ஆய்வாளர்கள் உட்பட 17 காவலர்களை அனுப்பி, பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டது.
சுமார் 11.30 மணிக்கு, சிலர் டாடா சுமோ காரில் வந்து காவல்துறை பாதுகாப்பை மீறி தினகரன் அலுவலகத்திற்குள் நுழைந்து பெட்ரோல் அடைக்கப்பட்ட பாட்டில்களை வீசி, கண்ணாடி மற்றும் அலுவலகப் பொருட்களை தீ வைத்து சேதப்படுத்தி, தப்பி சென்றுவிட்டனர். உடனடியாக, காவல் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயினை அணைத்தார்கள். தீ மற்றும் புகையில் சிக்கி தினகரன் அலுவலக ஊழியர்கள் கோபிநாத், வினோத் மற்றும் முத்துராமலிங்கம் ஆகியோர் மூச்சு திணறி இறந்துள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இது சம்பந்தமாக காவல் உதவி ஆய்வாளர் ஆலடியான் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர், இது சம்பந்தமாக, தினகரன் நாளிதழ் செய்தி ஆசிரியர் முத்துபாண்டியன் கொடுத்த புகாரும், இதனுடன் சேர்த்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வழக்கில் டைகர் பாண்டி, பாட்சா, சரவணன், மாரி மற்றும் பிரபு ஆகிய ஐவர் இதுவரையில் தனிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிரிகள் பயன்படுத்திய டாடா சுமோ வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வழக்கில், மற்ற எதிரிகளை கைது செய்ய ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மதுரை மாநகரில், பேருந்துகள் மீது கற்களை வீசி, கண்ணாடிகளை சேதப்படுத்தியது சம்பந்தமாக, கரிமேடு, ஜெய்ஹிந்த்புரம் சுப்பிரமணியபுரம் ஆகியவற்றில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இவ்வழக்குகளில் 7 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மதுரை நகரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இதுவரை 82 பேர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சி.பி.ஐ. விசாரணை
இச்சம்பவங்களைத் தொடர்ந்து, மாநிலத்தில் உள்ள அனைத்து தினகரன் பத்திரிகை அலுவலகங்கள் மற்றும் சன் தொலைக்காட்சி அலுவலகங்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கி, இது சம்பந்தமாக எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு, அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்களும் அறிவுறுத்தப் பட்டுள்ளனர். நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று காவல் துறை சார்பில் அறிக்கை எனக்குத் தரப்பட்டுள்ளது.
இதனைச் சொல்லும்போது - இந்த நிகழ்வுகளில் இதிலே என்னுடைய குடும்பத்தினரையும் சம்பந்தப்படுத்தியிருக்கிற நிலையில் - இந்த வழக்கினை தமிழகப் போலீசார் விசாரிப்பதற்குப் பதிலாக - மத்திய அரசு புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டுமென்று முடிவெடுத்து, மதுரையில் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டது குறித்தும், மூன்று பேர் இறந்தது குறித்தும் சி.பி.ஐ.யைக் கொண்டு விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கிறேன்.
தமிழக அரசின் சார்பில் சி.பி.ஐ. விசாரணை கோரி உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், மத்திய அரசுக்கும் தலைமைச் செயலாளர் மூலமாகக் கடிதம் எழுதப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.''
தாங்கி கொள்ள முடியுமா?
இவ்வாறு சட்டமன்றத்திலே நான் விரிவாக எடுத்துரைத்த பிறகும், இதனைத் தொடர்ந்து நாள் தவறாமல் அழகிரிக்கு சம்மந்தமே இல்லாத பிரச்சினைகளிலே எல்லாம் கூட அவர் மீது பழியைப் போட்டும் - அதேபோல் மத்தியிலே தயாநிதி மாறன் மந்திரியாக பொறுப்பேற்றிருந்த துறையின் அமைச்சராக தி.மு.க. சார்பில் மந்திரியாக்கப்பட்ட ஆ.ராசாவுக்கு எதிராகவும் - தமிழகத்திலே மின் துறை அமைச்சருக்கும், வேறு குறிப்பிட்ட சில அமைச்சர்களுக்கு எதிராகவும் எந்த அளவிற்கு மோசமாக செய்தி வெளியிட முடியுமோ அந்த அளவிற்கு செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.
அதுபற்றி பல முறை நான் வீட்டிலே உள்ளவர்கள் மூலமாகவும், நண்பர்கள் மூலமாகவும் தெரிவித்தும் கூட அதனைக் கேட்கவில்லை. "தாத்தா - பேரன்'' என்ற முறையில் நான் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் நான் தலைமை வகித்து நடத்திடும் கட்சியையும் ஆட்சியையும் வேண்டுமென்றே தொடர்ந்து பழி சுமத்தினால் அதனை நான் தாங்கிக் கொள்ள முடியுமா?
கால அவகாசம்
அதுவும் கழகத்திற்குச் சொந்தமான அண்ணா அறிவாலயத்திற்குள்ளேயே இருந்து கொண்டு, அந்தக் கழகத்தைப் பற்றி இழித்தும் பழித்தும் செயல்படுவதென்றால் அதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? அதனால்தான் சன் தொலைக்காட்சி அமைந்திருந்த அந்த அலுவலகத்தை உடனடியாக காலி செய்ய வேண்டுமென்று கழகப் பொருளாளர் மூலமாகச் சொல்லி அனுப்பப்பட்டது.
அப்போது கூட 5-2-2008 அன்று சன் தொலைக்காட்சி சார்பில் தி.மு.கழக அறக்கட்டளை தலைவராகிய எனக்கு எழுதிய கடிதத்தில் ஆறு மாத காலம் தொடர்ந்து அங்கேயிருப்பதற்கு அனுமதிக்கக் கேட்டிருந்தார்கள். அதையும் ஏற்றுக் கொண்டு அவ்வாறே கால அவகாசமும் தரப்பட்டது என்பதை அனைவரும் அறிவார்கள்.
கண் கலங்கினர்
இவ்வளவிற்கும் பொறுமையாக இருந்து செயல்பட்ட பிறகும், தி.மு.க. அறக்கட்டளைக்குச் சொந்தமான அந்த இடத்தை 5-7-2008 அன்று காலி செய்து விட்டு செல்லும்போது என்ன செய்தார்கள்? அந்தக் கட்டிடத்தையே புனரமைப்பு செய்ய வேண்டிய அளவிற்கு மின்சார "ஒயர்கள்'' எல்லாம் தாறுமாறாக அறுக்கப்பட்டும், குளியல் அறையிலே உள்ள சாதனங்கள் எல்லாம் உடைக்கப்பட்டும் சுவர்களையும் நாசம் செய்து விட்டுச் சென்றார்கள்.
இந்தக் கொடுமையான காட்சியை போய்ப் பார்த்து விட்டு வருமாறு பொருளாளர் அவர்களையும், வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன் மற்றும் கழக முன்னோடிகள் சிலரையும் அனுப்பிவைத்தேன். அவர்களும் என்னுடன் சேர்ந்து கண் கலங்கினர்!
(நன்றி: தினத்தந்தி)
Posted by IdlyVadai at 11/21/2008 08:01:00 AM 33 comments
Thursday, November 20, 2008
இந்த மாத சிறந்த கட்டுரை - நவம்பர் 2008
தற்போது நிறைய கூரியர் வந்துவிட்டாலும், நமக்கு கூரியர் என்ற வார்த்தையை அறிமுகம் செய்தது ‘புரபஷனல்’ கூரியர் தான். இந்த மாத(13.11.08) குங்குமத்தில் வந்த இந்த கட்டுரை நான் படித்த நல்ல கட்டுரை. உழைத்தால் வெற்றி நிச்சயம்.
( படம் : Japan, hand-coloured albumen print by Felice Beato, between 1863 and 1877. , நன்றி: விக்கி )
( நன்றி: குங்குமம்) கீழே படத்தல் பார்க்கலாம், கிளிக் செய்தால் படிக்கலாம் :-)
நம்ம சாப்ட்வேர் காரர்களுக்கு தெரிந்த கூரியர் ? Courier font :-)
Posted by IdlyVadai at 11/20/2008 08:28:00 AM 9 comments
Labels: சிறந்த கட்டுரை
Wednesday, November 19, 2008
எம்.என்.நம்பியார் 1919 - 2008
Posted by IdlyVadai at 11/19/2008 05:01:00 PM 22 comments
Labels: அஞ்சலி
Tuesday, November 18, 2008
சானிடரி கல்கி - நாப்கின் முரசொலி
"ரேஷன் கடைகளில் பாக்கெட்டில் அடைத்து விற்கும் பொருள்களின் உறையில் முதல்வர் படத்தைப் போட்டு விளம்பரப்படுத்த வேண்டுமா?"
"பள்ளி மாணவிகளுக்குத் தரும் இலவச சானிடரி நாப்கின் உறைகளின் மேல் படம் போடாமல் இருந்தால் சரி; சந்தோஷம்; போட்டால் வியப்பதற்கில்லை என்னும் அளவுக்கு இன்றைய அரசியல் தரம் தாழ்ந்து போயிருக்கிறது"
- தராசு பதில்கள் - 16.11.08, கல்கி
இந்த கேள்வி பதிலை போன வாரம் கல்கியில் படித்த பிறகு, அட்டையை திரும்ப ஒரு முறை பார்த்து 'கல்கி' தானா என்று ஊர்ஜிதம் செய்திக்கொண்டேன்.
கல்கி பத்திரிக்கை மீது ஒரு மதிப்பு இருந்தது, தற்போது அது இல்லை.
இந்த பதிலை படித்துவிட்டு (பார்ப்பான்)இட்லிவடைக்கே கோபம் வருகிறது, என்றால் முரசொலி சும்மா இருக்குமா ?
‘கல்கி’யின் ‘தரமும்’, ‘நிறமும்’, ‘மணமும்’, ‘குணமும்’! - முரசொலி 10.11.08
பார்ப்பனப் பத்திரிகைகளின் ‘தரம்’ நாளுக்கு நாள் அதலபாதாளம் நோக்கிப் போய்க் கொண்டேயிருக்கிறது. இந்த வாரத்துக் ‘கல்கி’ ஏட்டில் ஒரு கேள்வி பதில்.
"ரேஷன் கடைகளில் பாக்கெட்டில் அடைத்து விற்கும் பொருள்களின் உறையில் முதல்வர் படத்தைப் போட்டு விளம்பரப்படுத்த வேண்டுமா?"
- இது கேள்வி.
கல்கி - சீதாரவி என்கிற பார்ப்பனத்தியை ஆசிரியராகக் கொண்ட வார ஏடு - அளித்த தரம், குணம், மணம் மிகுந்த பதில் வருமாறு:-
"பள்ளி மாணவிகளுக்குத் தரும் இலவச சானிடரி நாப்கின் உறைகளின் மேல் படம் போடாமல் இருந்தால் சரி; சந்தோஷம்; போட்டால் வியப்பதற்கில்லை என்னும் அளவுக்கு இன்றைய அரசியல் தரம் தாழ்ந்து போயிருக்கிறது"
- என்று பதிலளித்திருக்கிறது ‘கல்கி’.
‘கல்கி’ வாசகர்கள் - கடைகளில் சென்று ‘கல்கி’ வாங்கும் போது
மகாத்மாகாந்தி படம் பொறித்த பத்து ரூபாய் நோட்டைக் கொடுத்தால் கல்கி விற்பனையாளர்கள் அந்த ரூபாய் நோட்டை வாங்கக் கூடாது; மகாத்மா படம் பொறித்த ரூபாய் நோட்டு - தரம் தாழ்ந்த அரசியலின் அடையாளம். ஆகவே காந்தி உருவம் இல்லாத சில்லறைகளாகப் பத்து ரூபாய் தரும் வாசகர்களுக்கு மட்டுமே ‘கல்கி’யை விற்க வேண்டும் என்று ஒருபோதும் கல்கி - தனது விற்பனையாளர்களுக்கு உத்திரவு போடாது; காரணம் அது அவாளின் வயிறு - வயிற்றுப் பிழைப்பு சம்பந்தமானது!
ரேஷன் கடைகளில் விற்கும் பொருள்களின் உறை மீது முதல்வர் படம் போட்டால் கல்கிக்கு வயிறு எரியும்; அரசியலின் தரம் தாழ்ந்து விட்டதாக அது கூப்பாடு போடும்.
மாணவிகளுக்கு வழங்கும் நாப்கின் உறைகளின் மேல் படம் போடாமலிருந்தால் சரி; சந்தோஷம் என்று கேலி செய்கிறது கல்கி!
ரேஷன் கடைகளில் விற்கப்படும் பொருள்கள் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுகின்றன.
பாக்கெட்டுகளின் மேல் முதல்வர் படம் அச்சிடப்பட்டிருக்கிறது.
அந்தப் பாக்கெட்டுகளை வாங்கும் பொதுமக்கள் பாக்கெட்டுகளுக்குள் உள்ள உணவுப் பண்டங்களைத்தான் சமையலில் உபயோகப்படுத்துவார்களே தவிர, பாக்கெட்டு களை உபயோகப்படுத்துவதில்லை!
நாப்கின் உறைகளின் மீது ‘கல்கி’ கூற்றுப்படி முதல்வர் படத்தை அச்சிட்டுத் தருவார்கள் என்றே வாதத்துக்காக வைத்துக் கொள்வோம்.
நாப்கின் உபயோகிக்கும் பெண்கள் - உறையைப் பிரித்து வீசிவிட்டு உள்ளே உள்ள நாப்கினைத்தான் உபயோகப்படுத்துவார்களே தவிர - உறைகளை அல்ல;
கல்கி குடும்பத்துப் பெண்கள் - ஒருவேளை - அந்த உறையையும் உபயோகப்படுத்திக் கொள்வார்களோ என்னவோ; தெரியவில்லை.
அரசாங்கம் விற்கும் பொருள்களின் பைகள் - உறைகள் மீது தலைவர்கள் படத்தைப் போடுவது என்பது சுதந்திரம் பெற்ற நாளிலிருந்தே நடைமுறையில் இருந்து வருவதுதான்.
அரசாங்கத்தின் - காதி - கதர்க்கடைகளில் வேட்டி - துணிமணிகள் எடுத்தால் ஒரு பையில் ‘பாக்’ செய்து தருவார்கள். அதன்மேல் காந்தியடிகள் படம் எப்போதும் இருக்கும். இப்போதும் இருக்கிறது.
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் அனைத்திலும் அவரது படம் பொறிக்கப்பட்டுதான் இருந்தது. இலவச சைக்கிள் கொடுத்தார்; அதிலும் கூட சைக்கிளின் முகப்பில் உள்ள இரும்புக் கூடையிலும் ஜெயலலிதா படம் போட்டுத்தான் வழங்கப்பட்டது.
அப்போதெல்லாம் அரசியலின் தரம் தாழ்ந்துவிட்டதாக கல்கி - அங்கலாய்க்கவில்லை.
காரணம் ஜெயலலிதா - அவர்களது சொந்த ஜாதியைச் சேர்ந்தவர். சுயசாதி அபிமானம் என்பது மட்டுமல்ல;
இப்போது முதல்வர் கலைஞரை எப்படி வேண்டுமானாலும் இழித்தும் பழித்தும் எழுதலாம். கலைஞர் பொறுப்புணர்வோடு பதில்தான் அளிப்பார்!
ஆனால் ஜெயலலிதாவை இப்படியெல்லாம் எழுதினால் என்ன நடக்கும்? கல்கிக்கு இந்த விஷயத்தில் சொந்த அனுபவம் உண்டு.
4 வழக்குகள் போட்டார் ஜெயலலிதா கல்கி மீது அவ்வளவுதான் - கல்கி - அன்னலட்சுமி ஜெயலலிதா - தைரிய லட்சுமி ஜெயலலிதா என்றெல்லாம் ஜெயலலிதாவின் படங்களைப் போட்டு பாராட்டுக் கட்டுரைகளை வெளியிட ஆரம்பித்துவிட்டது. (கஜலட்சுமி ஜெயலலிதா என்று மட்டும்தான் சிறப்புக் கட்டுரையை வெளியிடவில்லை கல்கி! வெளியிட்டிருந்தால் ஆகா என்ன பொருத்தம் - ஆகா என்ன பொருத்தம் என்று வாசகர்களிடமிருந்து பாராட்டுக் கடிதம் வந்து குவிந்திருக்கும்.)
அது எப்படியோ இருக்கட்டும் - ஆன்மீகக் கட்டுரைகள் வெளியிடுவதில் ‘கல்கி’க்கு என்று ஒரு தனித்திறமை உண்டு. இப்போது கூட "அம்பிகையின் அருள் வடிவங்கள்" என்று ஒரு தொடரை அது வெளியிட்டு வருகிறது.
சோட்டாணிக் கரை பகவதி அம்மன் கோயில் என்று ஒரு திருத்தலமிருக்கிறதாம். அந்த அம்மனுக்கு மாதம் மூன்றுநாள் மாதவிலக்கு உண்டாம். அந்த மூன்று நாட்கள் அங்கே பக்தர்கள் கூட்டம் குவியுமாம்!
கல்கியின் சார்பில் ஸ்வீட்டா ஸ்டைலா ஸ்மார்ட்டா நாப்கின் சிறப்பிதழ் ஒன்றினை வெளியிட்டால் - சோட்டாணிக்கரை மாதவிலக்கு மகாத்மியம் பற்றி சாங்கோ பாங்கமாக - ஒரு தரம் உயர்ந்த கட்டுரையை அதில் பிரசுரிக்கலாம். அது தரம், குணம், மணம், நிறம் ஆகியவற்றில் கல்கியின் தரத்தை எடுத்துக்காட்டுவதாக அமையும்!
உங்கள் பதிலுக்கு பதில் சொல்வதாக நினைத்து முரசொலியில் அநாகரிக சாடலைப் பார்த்தீர்களா ?, வரதராஜன் மாம்பலம்
பதில்: ரூபாய் நோட்டில் காந்திஜி படம் போடுவதையும் ஒப்புநோக்க முடியாது. மக்களின் வரிப்பணத்தைச் செலவழித்து ஆட்சியில் உள்ள தனி நபருக்கோ கட்சிக்கோ விளம்பரம் தேடிக் கொள்வதைத் தான் தராசுவின் பதில் சற்று காரமாகவே இடித்துக் காட்டியது. இது கூட புரியாமல்(வி)காரமாக, ஆனால் சாரமின்றிப் பதில் சொல்லியிருக்கும் முரசொலியின் தரம், நிறம், மணம், குணம் குறித்து நான் எதுவும் சொல்லத்தேவையில்லை.
- தராசு பதில்கள் - கல்கி 23.11.08
( நன்றி: கல்கி, முரசொலி )
இந்த நன்றி இவர்களுக்கு தேவையா என்று கூட தெரியலை, அகழ்வு ஆராய்ச்சிக்கு இருக்கட்டுமே என்று போடுகிறேன் ;-)
கீழே வைத்திருக்கிறேன் எதற்கு என்று சொல்ல தேவையில்லை
கல்கிக்கு:
முரசொலிக்கு:
Posted by IdlyVadai at 11/18/2008 04:55:00 PM 36 comments
Labels: செய்திவிமர்சனம், பத்திரிக்கை
Monday, November 17, 2008
80% என்பதே எங்கள் இலக்கு - பத்ரி
தமிழில் எப்படி தட்டச்சு செய்கிறீர்கள் என்று இட்லிவடை வாசகர்கள் (2007, Feb) சொன்னது கீழே...
விஜயகாந்த் போல் புதிதாக NHM Writer வந்த பிறகு இட்லிவடை வாசகர்கள் தங்கள் முடிவுகளை இப்படி அளித்துள்ளார்கள். ( 2008, Nov )
பத்ரியுடன் ஒரு மினி பேட்டி
57% பற்றி ?
57% என்பது நல்லது. ஆனால் மேற்கொண்டு வளர வாய்ப்பு உள்ளது. 80% என்பதே எங்கள் இலக்கு. NHM Writer-ல் உள்ள பெரிய சௌகரியம், மிக எளிதாக பல எழுத்துக் குறியீடுகள், பல விசைப்பலகை உள்ளீட்டு முறைகள் ஆகியவற்றைக் கையாள்வதுதான். ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மிக வேகமாக மாறும் இந்த வசதி, பிறவற்றில் எளிதாகக் கிடைப்பதில்லை.
மற்றொன்று, இந்த மென்பொருளின் வடிவமைப்பு, மிக அழகானது, எளிமையானது. கவனமாக உருவாக்கப்பட்டது. இதனை இன்று தமிழர்கள்தான் பிரதானமாகப் பயன்படுத்துகிறார்கள் என்றாலும், பிற இந்தியர்கள் கவனிக்கும்போது, மிகவும் சந்தோஷப்படுவார்கள்.
நான் எ-கலப்பை தான் பயன்படுத்துகிறேன். XML யூஸ் செய்வதால் NHM கொஞ்சம் ஸ்லோவாக இருக்கிறதே ? !
XML கோப்புகளைப் பயன்படுத்துவதால் எ-கலப்பையை விட வேகம் சற்றே குறைவு என்றீர்கள். ஆனால் என் பயன்பாட்டில் இந்தக் குறையை நான் உணருவதில்லை. எந்தப் பயனரும் இந்தக் குறையை அறியமாட்டார் என்றே நினைக்கிறேன்.
( இந்த வேகத்துக்கே பாரா பெரிய பெரிய புத்தகங்களாக போட்டுத் தாக்குகிறார், இன்னும் வேகம் என்றால் ? ஐயோ பயமாக இருக்கிறது :-)
பிகு:
NHM பயன்படுத்துபவர்கள் பின்னூட்டதில் தங்கள் விமர்சனங்களை சொல்லலாம். 800 வார்த்தை என்ற கணக்கு எல்லாம் கிடையாது.
பின்னூட்டம் எழுதுபவர்களுக்கு இலவசமாக NHM Writer லிங்க் தரப்படும் :-)
Posted by IdlyVadai at 11/17/2008 02:30:00 PM 14 comments
Labels: வாக்கெடுப்பு
இட்லிவடை ஒரு வரலாறு ஆனால் ஆபத்தான வரலாறு - குழலி
அடிக்கிற கை தான் அணைக்கும் - அரசியலில் ராமதாஸ், வலைப்பதிவில் குழலி :-) அவர் இவ பற்றி சொல்லியது..
இட்லிவடை தமிழ் பதிவுலகின் முக்கியமான ஒரு பதிவு, செய்திகளை பிற தளங்களிலிருந்து காப்பி பேஸ்ட் செய்யப்பட்ட பதிவுகள் தான் இவைகள் என்று அலட்சியம் செய்ய முடியாத அளவிற்கு முக்கியமானதும் ஆபத்தானதும் ஆகும். இன்றைய செய்திகளே நாளைய வரலாறு. அந்த நாளைய வரலாறு எப்படி நாளைய சந்ததிகளுக்கு காண்பிக்கப்படுகிறது என்று பார்த்தோமானால் இட்லிவடைய ஏன் நான் வரலாறு என்று கூறுகிறேன் என்பது புரியும்.
வரலாறு என்பதே நமக்கு இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களை வைத்தே எழுதப்படுவது, நாம் வரலாறு என நினைப்பது வரலாறே இல்லாமல் இருக்கலாம்... ஏதோ ஒரு கட்டுரையில் படித்தேன், முனியாண்டி விலாஸ் கடையின் டம்ளர்களில் "இது முனியாண்டி விலாசில் இருந்து திருடப்பட்டது" என எழுதியிருக்கு என்று வையுங்கள், அகழ்வாராய்ச்சியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் இது கிடைக்கிறதென்றால் அந்த ஆராய்ச்சியாளன் இப்படி எழுதினான் என்றால் இப்படியிருக்கும், "அந்த கால மக்கள் திருடினாலும் நேர்மையாக திருடிய பொருள் எங்கிருந்து திருடப்பட்டது என்பதை அந்த பொருளின் மேல் எழுதிவைப்பார்கள்". கிடைத்த அரைகுறை தகவல்கள் எழுதியவர்களின் சார்பு அதைத்தாண்டி அதை வரலாறாக்கும் ஆராய்ச்சியாளனின் சார்பு அதாவது உதாரணமாக "சாலை" என்றால் துறைமுகத்தைக் குறிக்கும். பல துறை முகத்தைக் கொண்ட பாண்டியன் என்பதற்காகப் "பல்சாலை முதுகுடுமிப் பெருவழுதி" என்று புலவர்கள் குறிப்பிட்டனர். ஆனால் "பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி" என்று "யாக" என்ற இரண்டெழுத்தை உட்செருகி பல யாகசாலைகள் வைத்திருந்தவன் என்று வரலாறாக எழுதப்பட்டது,
பரிமேலழகர் எழுதிய உரையில் ஆரம்பித்து பலவற்றை இன்று மீள் ஆய்வு செய்யும் நிலை.
என்னடா இவன் இட்லிவடையின் 5ம் ஆண்டு பதிவில் தொடர்பில்லாமல் எழுதுகிறேன் என்கிறீர்களா?
இட்லிவடை தொகுத்துக்கொண்டிருப்பது நிகழ்கால சமூகத்தை பற்றி வரும் செய்திகளை, ஆனால் கவனமாக இட்லிவடை தொகுக்காமல் விடுவதும்(சமீபத்திய உதாரணம் மாலேகோன் குண்டுவெடிப்பு தொடர்பான இந்து தீவிரவாத சாமியிரினி கைது), தொகுக்கும் விசயத்தில் செய்யும் திரிபுகள்(இடஒதுக்கீடு தொடர்பாக கனிமொழி பேசியதில் ஒரு பகுதியை மட்டும் வெட்டி போட்டு திரிபு செய்தது) போன்றவை
எதிர்கால தலைமுறைக்கு தவறான வரலாற்றை தொகுத்து தந்துவிடும் என்பதாலேயே இட்லிவடையை
ஆபத்தான வரலாறு என்கிறேன்.
பொதுவாக இட்லிவடையின் சாதனை பற்றி பலரும் சொல்வது
முகம் காட்டாமல் இத்தனை ஆண்டுகள் தள்ளுவது,
நானும் இதை இட்லிவடை தொடர்ந்து செய்ய வேண்டும் என்றே விரும்புகிறேன், காப்பிரைட் பிரச்சினைகளுக்காகவோ, திரில்லுக்காகவோ இல்லை, சட்டக்கல்லூரி பிரச்சினையில் கோட்டாவை இணைத்து எழுதுவது போல செய்யப்படும் பல கிறுத்தரங்களுக்கு யார் கையிலாவது கிடைத்து நாலு அப்பு அப்பாமல்"
, அம்மாதிரியெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு ரசாபாசமாகமல் இருக்கவாவது முகத்தை மூடிக்கொண்டே இருக்கவும்.
செய்திகளின் வேகம்,
மிக நிச்சயமாக தொய்வில்லாமல் தொகுக்க முடிவது ஒரு மகத்தான சாதனை, தனியாகவோ குழுவாகவோ எப்படியோ இந்த ஆவணப்படுத்துதல் முடிகின்றது என்பது நிச்சயம் சாதனை, இந்த ஆவணப்படுத்துதலே இட்லிவடையின் சாதனை.
நான் இட்லிவடையை தேர்தல் முடிவுகள் சமயத்தில் சிலருக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறேன், தினமலர், தட்ஸ்டமில் போன்றவைகள் அதிகமான பார்வையாளர்களினால் தொங்கியபோது இட்லிவடை தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ள உதவியது. (தேர்தல் சமயத்தில் ஏன் இட்லிவடையை அறிமுகப்படுத்தவில்லை என்பது என் அரசியலுக்குட்பட்டது :-) )
இழையோடும் நகைச்சுவை:
இட்லிவடை பதிவுகளில் நகைச்சுவை இழையோடும் என்று சொல்வார்கள், அது நகைச்சுவை என்று சிரிப்பவர்களுக்கும் அது எரிச்சல் ஏற்படுத்தி கோபப்படுபவர்களு அரசியல் கண்டிப்பாக ஒன்றாக இருக்க முடியாது, நகைச்சுவை என்பவர்களின் அரசியல் வேறு... கோபப்படுபவர்களின் அரசியல் வேறு...
இட்லிவடையின் முனிக்கடிதம்:
இட்லிவடை ஸ்ரீமான் ராமச்சந்திர மூர்த்திக்கு எழுதாமல் முனிக்கு கடிதம்
எழுதுவதும் முனி எங்களுக்கெல்லாம்
கடிதம் எழுதாமல் இட்லிவடைக்கு எழுதுவதும் நிச்சயம்
ஆச்சரியப்படுவதற்கில்லை, முருகன், சிவன், ஐயப்பன், பலராமன், காமாட்சி, மீனாட்சி போன்ற கடவுளர்களுக்கு ஏற்பட்ட நிலை முனிக்கு வருங்காலத்தில் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்த குறிப்பு தற்போது படிக்கும் வாசகர்களுக்கு அல்ல
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு ஒரு வேளை இந்த இட்லிவடை தொகுப்பு மட்டுமே கிடைத்து அதை மட்டுமே கொண்டு வரலாற்றை தொகுக்கப்போகும் ஆராச்சியளருக்கு இதன் மூலம் நான் சொல்லவிரும்புவது இந்த இட்லிவடையின் தொகுப்பு சொல்வது மட்டுமே எங்கள் காலத்தில் நடந்த வரலாறு அல்ல...
இட்லிவடையின் இன்னும் 10 ஆம் ஆண்டு 15ம் ஆண்டு தொடக்க விழாக்களுக்கும் என் போன்றுபலரும் வாழ்த்து எழுத இட்லிவடையை வாழ்த்துகிறேன்.
என்றென்றும் அன்புடன்
குழலி
குழலி அவர்கள் பேசுவதை வைத்துப் பார்த்தால், என் வலைப்பதிவு பிற்காலத்தில் சோழர் காலத்து கல்வெட்டுகளுக்கு நிகரான முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுச் சான்றாக ஆகக் கூடிய சாத்தியம் அல்லது அபாயம் இருக்கிறது அதனால், இனிமேல் கட் & பேஸ்ட் பண்ணும்போது, கவனமாக முழு மேட்டரையும் எடுத்துப் போடுகிறேன், வரலாற்றில் இட்லிவடை புரட்டும் திரிபும் செய்து திரிந்த ஒருவராக பதிவு செய்யப்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை, சில அரசியல்வியாதிகளைப் போல ;-)
குழலி என்னை அப்பி விடாமல் இருக்கு, சிங்கப்பூர் செல்லும்போது நிச்சயம் ராமதாஸ் மாஸ்க் போட்டுக் கொண்டு செல்லவே உத்தேசம், எதற்கு வெளியூரில் தகராறு ? :)
எனக்கும் முனிக்கும் இடையே உள்ள நெருக்கமான நட்பை புரிந்து கொண்ட குழலிக்கு என்றென்றும் அன்புடன் நன்றி.
Posted by IdlyVadai at 11/17/2008 11:00:00 AM 11 comments
Labels: இட்லிவடை ஸ்பெஷல்