பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, September 15, 2008

FLASH NEWS : நமீதாவை காணவில்லை...

ஆப்பிரிக்கா, அண்டார்டிகா உள்ளிட்ட பல தேசங்களில் கோடிக்கணக்கான வாசகர்களைக் கொண்டவரும் சரோஜா தேவிக்கு அடுத்தபடி ஹிட்டு ரேட்டு கொண்டவருமான பிரபல எழுத்தாளர் நேற்று நமீதாவைச் சந்தித்துவிட்டுப் புல்லரித்துப் போய் அவரது தளத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.

துரதிருஷ்டவச்மாக இன்று காலை முதல் அந்தக் கட்டுரையை அவரது தளத்தில் காணவில்லை. தமிழகத்தின் தங்க மகள், தானைத்தலைவி, புரட்சிப் பெரும்தீ நமீதாவைக் காணவில்லையென்றால் சும்மா இருக்க முடியுமா?

முயற்சி எடுத்து, கோடி வாசகர் கொண்ட எழுத்தாளர் தொலைத்த நமீதாவை நமது வாசகர்களுக்காக நாம் இங்கே கண்டுபிடித்துத் தந்திருக்கிறோம்.

கூடவே நமீதாவுக்கு வால் போல் ஒட்டிக்கொண்டிருக்கும் ‘கனிமொழிக்கு ஒரு கடிதம்’ அதே பிரபல எழுத்தாளர் போன மாசம் கிட்டதட்ட இதே நாளில் எழுதியதுதான்.

இரண்டையும் ஒப்பிட்டு ஆறு வித்தியாசம் அல்லது நூறு ஒற்றுமை கண்டுபிடிக்க முடியுமானால் அது உங்கள் சாமர்த்தியம்.

தமிழன் ஒரு கேனயன் என்று அரசியல்வாதிகள் மட்டுமா அடிக்கடி நிரூபிப்பார்கள்? ஏகப்பட்ட பெண்வாசகிகளைக் கொண்ட [கோடிக்கணக்கானவர்களால் ஜொள்ளுவிடப்படும்] பிரபல எழுத்தாளர்களாலும் நிரூபிக்க முடியும்!

இனி காணாமல் போன நமீதாவை தரிசியுங்கள்:நமீதா
மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்; இல்லை, இல்லை, வருந்துகிறேன்; வாழ்க்கையில் பெரிய பாடம் கற்றுக் கொண்டேன் ’ என்று ரஜினி பாணியில் சொல்லி விடுகிறேன். நான் நமீதா பற்றிச் சொன்னதை மறந்து விடுங்கள். மன்னித்து விடுங்கள். ஆம்; திரையில் பார்ப்பது போல் அவர் குண்டாக இல்லை. மிக மெலிந்து காணப்படுகிறார், ஒரே ஒரு பிரதேசத்தைத் தவிர.

எனது நீண்ட நாள் நண்பரான ராஜேஷ்வர் தனது படப்பிடிப்புக்கு என்னை அழைத்துக் கொண்டிருந்தார். எனக்கு சினிமாவில் நடிக்க (சீனி கம் மாதிரி படம்!) வாய்ப்பு தராத காரணத்தால் சற்று மனஸ்தாபத்தில் போகாமலே இருந்தேன். ” டப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷனுக்குப் போகும் நிலையில் உள்ளது; சீக்கிரம் வாருங்கள் ” என்று மீண்டும் அழைத்ததால் நேற்று அந்தப் பக்கம் சென்றேன். வரும் போது ஸீரோ டிகிரி (ஆங்கிலப் பதிப்பு) பிரதி ஒன்றும் கொண்டு வரச் சொல்லியிருந்தார்.

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது அங்கே வந்தார் நமீதா. அவரும் அந்தப் படத்தில் நடிக்கிறார் போலும். சுஜாதாவிடம் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. நடிகைகளிடம் போய் இலக்கியம் பேசுவார். அதனாலேயே அவரைக் கண்டால் சற்று ஒதுங்கிப் போய் விடுவார் ஸ்ரேயா.

இவ்விஷயத்தை நான் கேள்விப் பட்டிருந்ததால், நமீதாவிடம் அந்த மாதிரிப் பேச்சே வைத்துக் கொள்ளக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன். ராஜேஷ்வரிடன் ஒரு நல்ல பழக்கம் உண்டு. இலக்கியம் பற்றித் தெரியாதவர்களிடம் என்னை அறிமுகம் செய்து வைக்க மாட்டார். அப்படிப் பட்டவர் நமீதாவிடம் உடனடியாக என்னை அறிமுகப் படுத்தினார். பெயரைச் சொன்னதுமே நமீதாவுக்குத் தெரிந்திருந்தது. அப்போதுதான் ராஜேஷ்வர் ஸீரோ டிகிரி பிரதியைக் கொண்டுவரச் சொன்னதன் காரணம் எனக்குப் புரிந்தது. அதை நமீதாவிடம் கொடுத்தேன். பல ஆங்கில எழுத்தாளர்களின் பெயரைச் சொன்னார் நமீதா. ஜெஃப்ரி ஆர்ச்சரின் பெயர் மட்டும் எனக்குத் தெரிந்திருந்தது. எனக்குப் பிடித்த பெயர்களைக் கேட்டார். அது ஒரு பெரிய பட்டியல் என்று சொல்லி நழுவி விட்டேன். அந்தப் பெயர்களையெல்லாம் சொல்லி முதல் சந்திப்பிலேயே அவரைப் பயமுறுத்த விரும்பவில்லை.

சந்திப்பின் போது ஒரு முக்கியமான தர்ம சங்கடம் என்னவென்றால், அவர் ஆறு அடிக்கு மேல் உயரமாக இருந்தார். நானோ ஐந்தடி ஐந்து அங்குலம். எனவே நான் பேசும் போது அவருடைய அந்த பிரும்மாண்டமான பிரதேசத்தை நோக்கித்தான் பேச வேண்டி வந்தது. இல்லாவிட்டால் தலையை அண்ணாந்து பார்த்துப் பேசுவது ரொம்பவும் செயற்கையாகத் தோன்றும். அவருக்கோ சங்க இலக்கியத்தில் வர்ணித்திருப்பது போல் இருந்ததால் என் முகத்தில் இடித்து விடுமோ என்ற பயத்தில் சற்று distance- இலேயே நிற்க வேண்டியிருந்தது. வாழ்க்கையில் முதல் முறையாக உயரமாகப் பிறக்காததன் கஷ்டத்தை அனுபவித்தேன்.

* * *

14.9.2008.

10.45 a.m.கனிமொழிக்கு ஒரு கடிதம்

அன்புள்ள கனிமொழி,

வணக்கம்.

சமீபத்தில் 2.8.2008 தேதியிட்ட தினமலர் நாளிதழில் தங்களுடைய புகைப்படத்தைப் பார்த்தேன். அதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. இப்போதெல்லாம் தங்கள் புகைப்படங்களை அடிக்கடி பார்க்க முடிகிறது. ஆனால் இந்தப் புகைப்படத்தின் விசேஷம் என்னவென்றால், இதில் நீங்கள் சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டரில் ஆதரவற்ற பள்ளிக் குழந்தைகளுக்காகத் திரையிடப்பட்ட குசேலன் திரைப்படத்தை அந்தக் குழந்தைகளோடு பார்த்து அவர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்திருக்கிறீர்கள்.

இதுதான் என்னுடைய அதிர்ச்சிக்குக் காரணம். இதையே நடிகை த்ரிஷா போன்றவர்கள் செய்திருந்தால் நான் அதிர்ச்சி அடைந்திருக்க மாட்டேன். கண் பார்வையற்ற குழந்தைகள் பள்ளி, அனாதைக் குழந்தைகள் பள்ளி போன்ற இடங்களில் தங்கள் பிறந்த நாள் அன்று சென்று கேக்கும் மிட்டாயும் கொடுப்பது அந்த நடிகைகளின் பொழுதுபோக்குகளில் ஒன்று. அது பற்றியும் எனக்கு எந்தப் புகாரும் இல்லை. ஏனென்றால், லெதர் பாருக்குப் போவது போல் த்ரிஷாவுக்கு மேற்படி இடங்களுக்குச் செல்வதும் ஒரு பொழுதுபோக்குதான் என்றாலும், அந்தக் கண் பார்வையற்ற குழந்தைகளுக்கும், அனாதைக் குழந்தைகளுக்கும் அப்படி ஒரு நடிகை தங்களைப் பார்க்க வருவது அவர்களின் இருள் சூழ்ந்த உலகில் ஒரு மின்னல் தெறிப்பைப் போன்ற தருணமாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

ஆனால், நீங்களோ அந்த அனாதைக் குழந்தைகளோடு சேர்ந்து ‘ குசேலன் ’ படம் பார்த்திருக்கிறீர்கள். குசேலன் படம் ஒரு குப்பை என்பதைத் தாங்கள் அறிவீர்கள். ஏனென்றால் உங்களுக்கு உலக இசை, உலக சினிமா, உலக இலக்கியம் போன்றவற்றில் ஆழ்ந்த அறிவும் ரசனையும் உண்டு என்பது எனக்கு நன்றாகவே தெரியும். உங்களுக்கு ஒரு விஷயத்தை ஞாபகப் படுத்துகிறேன். நீங்கள் ‘இந்து ’ பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம். இப்போது 15 ஆண்டுகள் இருக்கலாம். ஃபில்ம் சேம்பர் தியேட்டரில் தினந்தோறும் ஏதாவது ஒரு ‘ க்ளாஸிக் ’ ஓடிக் கொண்டிருக்கும். எல்லாமே மிக முக்கியமான உலக சினிமாக்கள்.

அங்கே உங்களை அநேகமாக தினமுமே பார்த்திருக்கிறேன். அப்போது நான் என் மகள் ரேஷ்மாவுடன் தனியாக வாழ்ந்து கொண்டிருந்த காலம். அவள் வயது ஆறு. அவளோடுதான் படத்துக்கு வருவேன். ஆனால், அரங்கத்தின் முன் பகுதியில் எனக்காகவும் ரேஷ்மாவுக்காகவும் இரண்டு இருக்கைகள் எப்போதுமே ஒதுக்கப் பட்டிருக்கும். அவை தணிக்கை செய்யாத படங்கள் என்பதால் ஒரு வேளை சிறுவர்கள் பார்க்கக் கூடாத காட்சிகளும் இடம் பெற்றிருந்தால் அம்மாதிரி காட்சிகள் வரும் முன்பே ரேஷ்மாவுடன் வெளியே வந்து விடுவதற்கு ஏதுவாகவே அப்படி முன் இருக்கையில் வாசலுக்கு மிக அருகே இரண்டு இருக்கைகள் எனக்கும் என் மகளுக்கும் காலியாக இருக்கும்.

சரி, குசேலனுக்கு வருகிறேன். அது ஒரு குப்பைப் படம் என்பது பற்றி ஒன்றும் பிரச்சினை இல்லை. தமிழில் எத்தனையோ நல்ல படங்களும் குப்பைப் படங்களும் சேர்ந்தே வருகின்றன. ஆனால் நீங்கள் அனாதைக் குழந்தைகளோடு இந்தப் படத்தைப் பார்த்ததுதான் எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சி. கலாச்சார அதிர்ச்சி.

குசேலனில் வரும் ட்ரிபிள் எக்ஸ் படங்களை ஒத்த காட்சிகளை சுரணையுணர்வு உள்ள ஒருவர் குழந்தைகளோடு உட்கார்ந்து எப்படிப் பார்க்க முடியும்? மேற்கத்திய நாடுகளில் ட்ரிபிள் எக்ஸ் படங்கள் பார்ப்பதற்கென்றே தனித்தனி திரையரங்குகள் உள்ளன என்பதும், அங்கே நாம் குழந்தைகளைப் பார்க்க முடியாது என்பதும் உங்களுக்கே நன்கு தெரியும். நீங்கள் மற்ற அரசியல்வாதிகளைப் போன்றவர் அல்ல; நன்கு உலக ஞானம் உள்ளவர்.

குசேலனில் நயன் தாரா வரும் காட்சிகள் மற்றும் வடிவேலு காமெடி ஆகியவற்றை ஒருவர் குழந்தைகளோடு சேர்ந்து உட்கார்ந்து பார்க்க முடியும் என்று உண்மையிலேயே நீங்கள் நம்புகிறீர்களா?

செக்ஸ் என்பதில் எந்தவித ஆபாசமும் இல்லை என்று நம்புகிறவன் நான். ஆனால் குசேலனில் வரும் மேலே குறிப்பிட்ட காட்சிகள் அந்தவிதமாகவா இருக்கின்றன? அருவருப்பு, ஆபாசம் என்பதன் உச்சக்கட்டமாக அல்லவா அந்தக் காட்சிகள் அமைந்திருக்கின்றன?

தமிழ்ச் சமூகத்தைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்குவதே இந்த மாதிரிப் படங்கள்தான் என்று நான் நினைக்கிறேன். குழந்தைகளுக்கு மிகச் சிறிய வயதிலேயே செக்ஸ் பற்றிய தவறான புரிதல்களை ஏற்படுத்தி சமூகத்தில் குற்றச்செயல்கள் அதிகரிக்க வைப்பதில் இம்மாதிரி படங்களே முதன்மைக் காரணிகளாக இருக்கின்றன.

இன்னொரு விஷயம். அந்த ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திலும் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி இருக்கும். அதிலும் தினந்தோறும் இப்படிப் பட்ட குப்பைப்படங்களிலிருந்து பல்வேறு ஆபாசங்கள் அரங்கேறும். அதையெல்லாம் அந்த ஆதரவற்ற குழந்தைகள் பார்த்துக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் அவர்களோடு நீங்களும் சேர்ந்து ஒரு திரையரங்கில் பார்ப்பதென்பது இந்த ஆபாசத்தையும், அருவருப்பையும் நீங்களும் சேர்ந்தே ஆதரிக்கிறீர்கள் என்றல்லவா அர்த்தமாகிறது?

த்ரிஷா தனது பிறந்த நாள் அன்று அந்த அனாதைக் குழந்தைகளைச் சந்தித்து மிட்டாய் கொடுப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், கனிமொழி அதைச் செய்யலாமா? நீங்கள் சட்டம் இயற்றுபவர்களின் வெகு அருகாமையில் உள்ளவர். அப்படிப்பட்ட நீங்கள் இந்த அனாதைக் குழந்தைகளின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட வேறு எத்தனையோ ஆக்கபூர்வமான காரியங்களைச் செய்யலாமே? அதை விட்டு விட்டு இப்படி அவர்களோடு குசேலன் படம் பார்ப்பது வெறும் ‘ஷோ ’ என்பதோடு நின்று விடுகிறதே?

மேலும் ஒன்று. அது என்ன அனாதைக் குழந்தைகளோடு குசேலன் சினிமா? ஏன் டி.ஏ.வி. மற்றும் பத்மா சேஷாத்ரி, அல்லது நீங்கள் படித்த சர்ச் பார்க் கான்வெண்ட் குழந்தைகளோடு குசேலன் சென்று பாருங்களேன். அது உங்களால் முடியாது. சாத்தியமே இல்லை. ஏனென்றால் அந்தப் பள்ளிக் குழந்தைகளெல்லாம் வூடி ஆலன் படங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும். நீங்களும் வூடி ஆலன் பார்த்து வளர்ந்தவர்தானே? அப்படியானால், உங்களுக்கு வூடி ஆலன்; அனாதைக் குழந்தைகளுக்கு குசேலனா? என்ன நியாயம் இது கனிமொழி?

டி.ஏ.வி., பத்மா சேஷாத்ரி மற்றும் சர்ச் பார்க் கான்வெண்ட் குழந்தைகள் இன்று வூடி ஆலன் பார்த்து, நாளை ஐ.ஐ.டி.யில் பயின்று அடுத்த நாள் அமெரிக்கா சென்று கொண்டிருக்க, உங்களோடு குசேலன் பார்த்த குழந்தைகள் மட்டும் இங்கே கடற்கரையில் சுண்டல் விற்பவர்களாகவும், ஜேப்படித் திருடர்களாகவும், கூலி வேலை செய்பவர்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும், இல்லையா? மற்றபடி இந்த அனாதைக் குழந்தைகளுக்கு நாம் என்னவிதமான வாழ்க்கையை வழங்கியிருக்கிறோம் சொல்லுங்கள்?

அன்புடன்,

சாரு நிவேதிதா.

12.8.2008.

பின் குறிப்பு:

இக்கடிதத்தைத் தங்கள் மீதான விமர்சனமாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால் இதற்கு முன்பு பல முறை பல்வேறு விஷயங்களில் நாம் கருத்து முரண்பாடு கொண்டு காரசாரமாக விவாதித்து இருக்கிறோம். அதன்படியே இதையும் ஒரு விவாதமாகவே கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

நன்றி: பெண் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் அதிகம் பார்க்கும், ஹிட் ரேட் ஸ்பெஷலிஸ்ட் எழுத்தாளரின் இணையத்தளம்

24 Comments:

Selva said...

I also felt bad about article. HE says he speaks for women and third gender but very often his writings portray women as objects. this is a best example. good that you have republished it.

Anonymous said...

I think you have not heard this saying
"Kudi Karan Pechu, Pozhudu Vidinja Pochu".

Don't take that fellow seriously. He always blabbers - whether drunk or otherwise.

Anonymous said...

அட நம்ம சாரு ஐயாவா...?! :)

ees said...

இந்த வரிகளை படித்த உடனே நீங்கள் அவரை தான் நக்கல் அடிக்கிறீர்கள் என புரிந்தது ... ஆனால் இன்று உங்கள் பதிவை படிப்பதற்கு சற்று முன்பு தான் அவரது பதிவை படித்தேன் ,, நமீதா சம்பந்தமாக எதுவும் இல்லையே என்று யோசிப்பதற்குள் அடுத்த வரி தெளிவு படுத்தி விட்டது...

அவரு எப்பவும் இப்படி தான் .... நூறு எழுதினா அதுல பத்து தான் தேறும் .... நீங்க தேவை இல்லாம ஒரு பக்கத்த வாடே பண்ணிடீங்க ....

Anonymous said...

ஹா ஹா ஹா....!!

rapp said...

:):):) super nakkal idlyvadai.

Anonymous said...

Who is saru nivedidta IDLY. HE OR SHE.....

IS HE/SHE a writer...Novelist...or a columinst.....

Please let me know.

MURALI

Anonymous said...

இட்லி வடை

பெண் காலேஸ் ஸ்டுடண்ட்ஸ் படிப்பதில் தவறில்லை அவர்கள் வயது வந்தவர்கள் ஆனால் இன்னும் மேஜர் வயதை எட்டாத சிறு குழந்தைகள் இவரது ப்ளாகைப் படிப்பதாகப் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார். இவருக்கு பத்தாம் கிளாஸ் படிக்கும் பிள்ளைகள் மாதுளம் பழம் கொண்டு தந்தார்களாம் இந்தக் கண்றாவி எழுத்தை மெச்சி :((( அப்படியானால் இவர் ப்ளாக் அல்லவா ஆபாசமான ப்ளாக். குசேலனைச் சொல்ல இவருக்கு என்ன தகுதி இருக்கிறது. லெதர் பாருக்கு வந்திருந்த இரண்டு பெண்களின் இடையை ரசித்து அப்படியே அவர்களை பின்னால் இருந்து துகிலுரித்து அங்கேயே புணர வேண்டும் என்று எழுதும் இந்த ஆபாச எழுத்தாளன் குசேலனைப் பற்றி கனிமொழிக்கு கடிதம் எழுதுவது வேடிக்கைதான். தமிழ் நாட்டில் அரசியல் மட்டும் அல்ல இலக்கியமும் இலக்கியவாந்திகளும் மாபெரும் நாற்றமெடுக்கும் அழுகிய சாக்கடையாளர்களே. கழுத விட்டையில் முன் விட்டை என்ன பின் விட்டை என்ன?
[ edited ]

Krish said...

அவரு எழுதின ஒரே புத்தகம் சீரோ டிகிரி நினைக்கிறேன். ரொம்ப காலமா அதப்பத்தியே பேசுறாரு! எல்லாத்துக்கும் அதைத்தான் கொடுக்கிறார். வேற புத்தகமே அவரு எழுதலையா?
ஏன் கோணல் பக்கங்கள் கொடுக்க மாட்டேங்கறார்!

R.Gopi said...

Charu in line with Manjal Kavignar (MK). I am not surprised as Charu is known for writings like these.

Avaru idha pola ezhudhalennaa thaan enakku avar mela sandhegam varummmm.

As usual, NETHI ADI from Idlyvadai.

Anonymous said...

அவர் எடுத்திருக்காவிட்டால் வழக்குப் போடுவேன் என்று நமீதா மிரட்டினாரோ, என்னமோ.சாருவின்
எழுத்து ஈவ் டீசிங் என்று நமீதா போலிஸில் புகார் கொடுத்திருந்தால்
சாருவை கைது செய்து உள்ளே தள்ளியிருப்பார்கள்.பெயிலில் வருவது கூட கடினம்.இப்படியெல்லாம்
நடந்து விடும் என்று யாராவது சொல்லிய்ருப்பார்கள்.எனவே பயந்து
போய் சத்தம் போடாமல் அதை எடுத்து விட்டார். ஆனால் குட்டிக்
கதைகளில் ஒரு பெண்ணின் உடலின்
ஒரு பகுதியின் அளவைப் பற்றி
எழுதுகிறார்.அதிலும் அவரது வக்கிர
புத்தி வெளிப்படுகிறது.

enRenRum-anbudan.BALA said...

போட்டுத் தாக்கு ;-)

சாரு மாதிரி நீங்களும் நாளைக்கு பதிவைத் தூக்கி எங்களை கேனையன் ஆக்காம இருந்தா சரி தான் :)

எ.அ.பாலா

Anonymous said...

அந்த ஆபாச எழுத்தாளர் மன நோயாளியோ என்ற சந்தேகம் எனக்கு நீண்ட நாளாக உள்ளது.

Anonymous said...

http://charuonline.com/sep08/KuttiKathaigal108(52).html

குட்டிக் கதைகள் நூற்றியெட்டு (52)“தாம் தூம் பார்த்துட்டீங்களா?”

“இல்லியே, அது ‘போர்’னு பத்திரிகைல எழுதியிருக்காங்களே?”

”அதெல்லாம் சும்மா. என் ஃப்ரெண்ட்ஸ்லாம் அது செம ரொமாண்டிக்கா இருக்கறதா சொல்றாங்க...”

“ஓ, அப்படின்னா நாம போகலாமே? இப்போதான் ரம்ஸான்ங்கிறதுனால க்ளாஸ்லாம் அவ்ளவா இல்லேன்னு சொன்னியே...ஒருநாள் கட் அடிச்சுட்டு வா, போலாம்...”

“அய்யய்யோ, எங்க வீட்டுக்குத் தெரிஞ்சா என்னெ கொன்னே போட்ருவாங்க...அது முடியாது. வேணும்னா ஒன்னு பண்ணலாம். நான் என் ஃப்ரெண்ட்ஸோட வர்ரேன். நீங்களும் வாங்க...வேணும்னா நீங்களும் விஷால், அலெக்ஸையெல்லாம் அழைச்சுட்டு வாங்க...”

“ஏய், இடியட்...அப்படி வந்தா ஏதோ ஸ்கூல் பசங்களை வாத்தியாருங்க எக்ஸ்கர்ஷன் அழைச்சுட்டு வந்தாப்ல இருக்குன்டீ...ஏன்டி இப்படி கூட்டாஞ்சோறு ஆக்குறதுலயே இருக்குறீங்க? நானும் நீயும் மட்டும் தனியா போவோம். அப்போதான் அப்படியே உன்னைத் தடவ கிடவ வசதியா இருக்கும்...”

“ஓ...ரொம்ப எக்ஸ்பீரியன்ஸ் போல...”

“ஏய்...ஏய்... இது வரைக்கும் நான் எந்தப் பெண்ணோடவும் தனியா சினிமாவுக்குப் போனது இல்லடீ...”

“என்னது, போனது இல்லையா? எங்க அம்மாவ நீங்க லவ் பண்ண போது போனது இல்ல? உங்க லவ்வப் பத்திதான் இன்னமும் ஊரே பேசுதே?”

“ஏன்டி...நாகூர் மாதிரி ஒரு ஊர்ல ஒரு ஆணும் பெண்ணும் தனியா சினிமாவுக்குப் போக முடியுமா? அதுவும் 35 வருஷத்துக்கு முன்னாடி? ஏதோ பக்கத்துப் பக்கத்துத் தெருங்கறதால லவ் பண்ணோம்...சரியா நாங்க பேசிக் கிட்டது கூட இல்லடீ...அப்புறம் டெல்லில அந்தப் போலீஸ் கமிஷனரோட பொண்ணு...அவ என்கூட வெளிய வரவே பயப்படுவா, யாராவது பார்த்து அவ அப்பாட்ட போட்டுக் குடுத்துருவாங்கன்னு...அவளோடயும் வெளிய போனது இல்ல...”

“ஓ...”

“இப்போ நீதான் மூணாவது...என்னுடைய கடைசி காதல்...”

“அப்போன்னா அந்த பானு?”

“அவ என் ஃப்ரெண்ட்...அவ்வளவுதான்...”

“சரி, மீரா ஆண்ட்டியோட போயிருப்பீங்கள்ள?”

“ஏய், சொல்றதை நம்புடீ...மீராவை நான் திருமணம் செய்து கொள்ளும் போது என் மகனுக்கு பத்து வயசு...ஸோ, சினிமாவுக்கெல்லாம் நாங்க மூணு பேராதான் போயிருக்கோம்...”

“சரி, உங்க கிட்ட ஒண்ணு கேக்கணும்...நான் என்ன கமலினி முகர்ஜி மாதிரியா இருக்கேன்? என் ஃப்ரெண்ட்ஸ்லாம் சொல்றாங்க...எனக்கு அப்படித் தோணலியே?”

“ஓ மை காட்...உன்னைப் பற்றி நான் அலெக்ஸிடமும், விஷாலிடமும் சொல்லும் போது அதையேதான் சொல்லுவேன். யெஸ்...ஆனா நேத்து சரோஜா பார்த்தேன். அதில வேகான்னு ஒரு பொண்ணு நடிக்கிறா...எக்ஸாக்ட்லி நீதான்...அப்படியே அச்சு அசலா உன்னை மாதிரியே இருக்கா...தேவதை..ஆனா ஒரே ஒரு வித்தியாசம்...”

“என்ன?”

”அவளுக்கு 36 இருக்கும்...”

“அப்படியா? 36 வயசுங்கிறீங்க, தேவதைங்கிறீங்க...?”

“ஏய், எல்கேஜி...36ன்னது வயசு இல்லடீ...”

“பின்ன?”

“ப்ரெஸ்ட்டு டீ...”

“ஓ, அதையெல்லாம் பாத்திங்களா?”

“ஏய்...வேணும்னா பார்ப்பாங்க...கண்ணுல படாதா?”

“ஓ...”


***


11.9.2008.


9.15 a.m.


இந்த ‘எழுத்தாளரை' எதால் அடிக்கலாம் :(.

Anonymous said...

ungalukkum avarukkum enna problem?avarai pottu ipdi naaradikkureenga?

கதிர் said...

தொடர்ந்து சாருவை கலாய்த்து வரும் இட்லியின் போக்கை வன்மையாக கண்டிக்கிறேன்.

Anonymous said...

இவ,
நீங்கள் நக்கலடிப்பதில் தவறே இல்லை. என்ன பண்ணினாலும் மனிதர் திருந்த மாட்டார். இவருக்கெல்லாம் ஒரு வாசகர் கூட்டம் வேறு. அது போக, நீங்க நக்கல் பண்ணிருக்கரத கண்டனம் வேற தெரிவிக்கறாங்க!

Anonymous said...

தனி மனித ஒழுக்கம் என்பது அவரிடம் எள்ளளவும் இல்லை. அவருக்கு ரசிகர் கூட்டம் வேறு.

Anonymous said...

ஒரு காலத்துல சுமார் நாலு வருஷம் முன்னால சாருவ நான் கண்ணா பின்னானு கலாய்ச்சு இருக்கேன், அத அந்த ஆளு அப்சாளினு ஒரு கதையாவே எழுதினான். நான் யாருன்னு இட்லி வடைக்கி தெரியும். சமயம் வரும் போது சொல்றேன்

manikandan said...

அவரே எடுத்துவிட்ட ஒரு பதிவ நீங்க போட்டு இருக்கீங்க. இது கேவலம் இல்லையா ?அவராவது எந்த ஒரு pretensionum இல்லாம எழுதறேன்னு சொல்றாரு. நீங்க ? இட்லிவடை பதிவு பின்னூடத்துல மயிருன்னு ஒரு வார்த்தைக்கூட வராம பாத்துகறீங்க ! ஆனா ஒருத்தர் எழுதி, ஏதோ ஒரு காரணத்துக்காக remove பண்ணின பதிவ கூட மறுபிரசுரம் பண்றீங்க. அதுவும் அவர நக்கல் பண்ணி. அவரோட வெப்சைட் ஹிட் 2 லட்சம் தான். ஆனா உங்களோடது ஐந்து மடங்கு ஜாஸ்தி ! ஆனாலும் அவர் ethics follow பண்றா மாதிரி நடிக்கணும். உங்களுக்கு ஒரு responsibilityum கிடையாது ! என்ன ஒரு பொறுப்புணர்வு !

இந்த பதிவ ஒரு நக்கலா மட்டுமே பாத்தா நல்லா தான் இருக்கு.

Anonymous said...

aana onnu idlyvadai....charunna yaarunne theriyadha ennai maari neraya perukku avara introduce panni avarukku free publicity thedi kuduthuteenga.

Anonymous said...

இந்த லட்சணத்துல எல்லா தொலைக்காட்சியிலும் (தொல்லைகாட்சி) கருத்து சொல்ல வந்து விடுகிறார்..

என்ன கொடும இட்லிவடை

Anonymous said...

அப்பதிவின் தறம் குறைந்திருந்ததால் தானே எடுத்துவிட்டார். அதை நீங்கள் எந்த தயக்கமும் இன்றி வெளியிட்ருப்பது கேள்விக்கு உரியதே.

Anonymous said...

http://pathivubothai.blogspot.com/