பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, September 08, 2008

வயலின் வித்வான் குன்னக்குடி வைத்தியநாதன் காலமானார்



இசைமழை நின்று விட்டது..



வயலின் இசை என்றாலே ரசிகர்களின் நினைவுக்கு வருபவர் குன்னக்குடி வைத்தியநாதன் (வயது 73). அந்த அளவுக்கு வயலின் இசைத்துறையில் புகழ்பெற்று விளங்கினார். பக்தி பாடல்களுக்கு மட்டுமின்றி சினிமா பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார். பத்மஸ்ரீ, சங்கீத மாமணி, சிறந்த இசையமைப்பாளர் உள்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். கடந்த ஒருவாரமாக உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் இரவு 8.45 மணி அளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது உடல் நள்ளிரவு சென்னை மந்தவெளி கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டது. இறுதிச்சடங்கு செவ்வாய்க்கிழமை மாலை நடக்கிறது.

கொட்டாம்பட்டி ரோட்டிலே குட்டி போற சோக்கிலே என்று இவர் பாடிய பாடல் பெரும் புகழ் பெற்றது. இவரது மறைவு இசை உலகம் மற்றும் திரையுலகத்திற்கு பெரும் இழப்பு.

7 Comments:

Kanchana Radhakrishnan said...

ஆம்..ஒரு சமயம் மழைக்காக சென்னை புழல் ஏரியில் அமிர்தவர்ஷினி ராகம் மீட்டிய இசைப்புயல் ஓய்ந்துவிட்டது
:-((((((((

கலைக்கோவன் said...

கடந்த சில வாரங்களுக்கு முன்,
ஜெயா டிவியின் அரி கிரி அசெம்பிளியின் (பாகம்-2)
முதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
உடை பற்றிய பாஸ்கியின் கிண்டலான கேள்விக்கு ....
தனக்கு விழுகின்ற சால்வையை,
தாம் உடையாக தைத்து போட்டு கொள்வதில்,
தமக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார்.

அரி கிரி அசெம்பிளியின் பாகம்-1 யும் அவர் தான்
துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று
காலை 7-7:30 ஜெயா பிளஸ் அவரது
இசையை ஒளிபரப்பியது.
நன்றி ஜெயா பிளஸ்.

திரை இசையில் புராண படங்களுக்கு
இசையமைத்து காலம் மறக்காத
இனிய கானங்களையும் தந்துள்ளார்.

தமிழில் முதல் சினிமாஸ்கோப் படமான
ராஜராஜ சோழன் இவரது இசையில் வெளிவந்தது.

சன் dth-ன் காமெடி திரையில் ..,
அசத்த போவது யாரு மீண்டும் ஒளிபரப்பானது.
குன்னக்குடி வயலின் கேட்டிருக்கீங்களா ....?
என்னும் ஜோக் சொல்லப்பட்டது.
ஆனால் ...
கொடுக்க இனி அவர் நம்முடன் இல்லை.

பாடிய ..,
பேசிய..,
வயலின் ஒன்று ..,
மூச்சை நிறுத்திகொண்டது.

அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்

enRenRum-anbudan.BALA said...

He really was a genius in playing the violin and a remarkable personality !

Today, I remember the day (about 10 years back) when he gave a stupendous performance near the Parthasarathy temple, Triplicane during a Utsavam.

May his soul RIP !

Tech Shankar said...

அன்னாருக்கு இதயஞ்சலி.

இன்று (09/09/08) காலை, 9 மணிக்கு பொதிகை அலைவரிசையில் குன்னக்குடி வைத்தியநாதன் அய்யா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அய்யா அவர்களின் வயலின் இசையை ஒளிபரப்பினார்கள் அதைப் பார்த்துவிட்டுத்தான் அலுவலகம் வந்தேன்.

Tech Shankar said...
This comment has been removed by the author.
Ravi said...

What is amazing about KV sir was the way he took music to everyone. He did not have the rigidness associated with many Carnatic musicians. And the liveliness... it has to be seen to experience it. Though many ridiculed the way he adorned himself with the shawls presented to him (in the form of shirts), I truly felt that this was the best way to acknowledge the gifters' token of love.

My salutations to this wonderful musician and may his soul rest in peace and may his music continue to entertain us and the generations to come.

Ramkumar said...

No birth for him