பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, September 15, 2008

திவிரவாதிகளை நாம் பிடிக்க மாட்டோம்!

தினமும் ஜம்மு-காஷ்மீரில் குண்டு வெடிப்பு என்று செய்திகள் நமக்கு பழக்கமாகிவிட்டது. ஆனால் தற்போது இந்தியா முழுவதும் இதே நோய் பரவியுள்ளது. காங்கிரஸ், பா.ஜ.க வழக்கம் இதை வைத்து அரசியல் செய்கிறார்கள். ஆனால் இதுவரை எதையும் உருப்படியாக கண்டுபிடித்து யாருக்கும் தண்டனை வழங்கவில்லை என்பது தான் உண்மை.

கூடிய சீக்கிரம், திருட்டு, கொள்ளை செய்திகள் போல் இந்த மாதிரி தீவிரவாதிகளின் நாசவேலைகளையும் படிக்க தொடங்கிவிடுமோம்.

இந்தியா என்ற அற்புத பூமியை நாம் தீவிரவாதிகளுக்கு பயிற்சி கூடமாக தாரைவார்த்து கொடுத்துவிட்டோம். அவர்களும் தங்கள் கைவரிசையை காட்டிக்கொண்டிருக்கிறார்கள். தீவிரவாதிகளுக்கு தெரியும், நாம் டிவி காமெரா முன்பு தான் வீரத்தை காமிப்போம் என்று.

இந்தியாவில், நாம் பிக்பாகெட் கேடிகளை தான் பிடிப்போம், தீவிரவாதிகளை இல்லை

1. டிசம்பர் 28, 2005 ஐ.ஐ.எஸ்.சி வளாகத்தில் துப்பாக்கி தாக்குதல். ஒருவர் பலி, இருவர் காயம். நேரம் மாலை 19:00 மணி

2. மார்ச் 8, 2006 வாரணாசி குண்டுவெடிப்பு - மூன்று குண்டுகள் வெடித்தது 28 பேர் பலி, 50 பேர் படுகாயம். நேரம் மாலை 18:30

3. ஜூலை 11, 2006 முன்பை ரயில் குண்டுவெடிப்பு: 209 பேர் பலி, 700 பேர் படுகாயம். நேரம் 18:24 - 18:35

4. மே 18, 2007 ஹைதராபாத், சார்மினார் அருகே உள்ள மெக்கா மசூதியில் குண்டுவெடிப்பு 14 பேர் பலி, 50 பேர் படுகாயம். நேரம் 13:30

5. ஆகஸ்ட் 25, 2007 - ஹைதிராபாத் இரண்டு குண்டுகள் வெடித்தது 32 பேர் பலி, பலர் காயம். நேரம் 19:50

6. அக்டோபர் 11, 2007 அஜ்மீரில் உள்ள சூஃபி ஞானி காஜா மொய்னு தீன் சிஷ்டி தர்காவில் குண்டுவெடிப்பு. 3 பேர் பலி, 17 பேர் படுகாயம். நேரம் 18:12

7. நவம்பர் 23, 2007 உத்தரபிரதேசம் 6 குண்டுகள் வெடித்தது, 15 பலி, 80 பேர் படுகாயம். நேரம் 1310 - 1325

8. மே 13, 2008 - ஜெய்பூரில் 7 குண்டுகள் வெடித்தது. 60 பேர் பலி, 200 பேர் படுகாயம். நேரம் 19:35

9. ஜூலை 25, 2008 பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பு ஒருவர் பலி நேரம் பகல் 13:30.

10. செப்டம்பர் 13, 2008 டெல்லி தொடர் குண்டுவெடிப்பு 30 பேர் பலி, பலர் படுகாயம். நேரம் மாலை 18:15.


எல்லா குண்டுவெடிப்பும் மாலை 18:00- 19:30 அல்லது பகல் 13:00 - 14:00 நடைபெற்றிருக்கிறது. இந்த நேரத்தில் என்ன விஷேசம் ?


பிகு: தன் செந்தத்தை குண்டு வெடிப்பில் பறி கொடுத்துவிட்டு அஸ்திக்கு சாம்பல் ஆகும்வரை இந்த கிழவர் காத்திருக்கிறார். அரசு மெத்தனமாக இருந்தால் நாளை இதே நிலமை தான் எல்லோருக்கும்.

11 Comments:

We The People said...

http://copymannan.blogspot.com/2008/09/blog-post_15.html

இது எப்படி இருக்கு ??!

We The People said...

நாமே பழியை யார் மேல் போடுவது என்று தேடி அலையும் போது, தீவிரவாதிக்கு ஜாலி தானே! அவன் செய்தாலும் பழிக்க பல கட்சியும், தலைவர்களும் இருக்கிறார்களே :)))

Anonymous said...

unless a leader like castro born ...no one can save india..
corruption corruption corruption every where......also religious fights as a pickle

அருண் said...

Well said Idly.

Anonymous said...

ச்சே இந்த சமயம் பாத்து விஜயகாந்த் அரசியல்ல பிசி ஆய்டாறு இல்லேன்னா தீவிரவாதிங்களோட சண்டையெல்லாம் போடுவாரே!!

இலவசக்கொத்தனார் said...

மதிய உணவுக்கு வெளி வரும் நேரம் / மாலை வீடு திரும்பும் நேரம்?

Anonymous said...

Fact 01 : தீவிரவாதிகளைப் பிடித்தால் சிறுபான்மையினர்(மத்திய அரசு) சட்டப்படி தண்டனை கிடைக்காது.
Fact 02 : கருணாநிதி கண்டனம் தெரிவிக்கமாட்டார். மேலும் ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற விழாக்கள் கொண்டாட மட்டும் வாழ்த்துக்கள் தெரிவிப்பார். ஹிந்து மதம் இன்னும் அழியட்டும் என்று நவில்வார். ஆனால் அவர் வீட்டில் உள்ளவர்கள் மட்டும் "சத்ரு ஸம்கார யாகம்" நடத்துவர்.(எந்த கோவில் - கடல் இருக்கும் கோவில் - முருகன் கோவில் - சுனாமி அண்டாத கோவில்)
Fact 03 : பொடா சட்டம் வேண்டாம் என்று கங்கணம் கட்டுவர்.
Fact 04 : சட்டம் தன் கடமையைச் செய்ய(ஹிஹிஹிஹி - அதுவும் இந்தியாவில்) வேண்டும்.

-- ஏங்கும் இந்தியத்தமிழன்

Anonymous said...

Even if you catch the terrorist & get him punishment as per the laws of the land through the highest court in the country, some politicians who are worse-than-terrorists, are trying to dilute that verdict because of the "community" he belongs to due to "vote-bank politics".

So, unless & until India tackles such politicians first, no use in crying hoarse over terrorism & its after-effects. Anybody who openly supports terrorism either through words or deeds or writings (there are many in the blog world), should be subjected to questioning & their true motives ascertained. In this process, there could be some really innocent people who may be suffering. But that is only a collateral damage which is inevitable. When the terrorists strike, it is only the innocents who suffer. So, if some innocents get caught for questioning to ferret out terrorists-in-waiting, we have to understand that its all part of the game.

Moreover, why such a hue & cry only for innocents who may get caught in terrorists questioning? Even in normal questioning by Maharashtra police due to the wrong information provided by Airtel, one innocent engineer has been questioned & jailed for a few months for some anti-Sivaji writing in the blog. So, when there is no hue & cry for that, I don't understand why should there be any for questioning to find out terrorists & their helpers.

Its high time POTA or a much more powerful law is the order of the day in India.

Krish said...

All these minority supporters can do anything for vote!
Modi said he warned central government about the blast. A person like Modi should come into power to eradicate the terrorism from the whole country.

R.Gopi said...

அமுதப்ரியன் said...

Fact 01 : தீவிரவாதிகளைப் பிடித்தால் சிறுபான்மையினர்(மத்திய அரசு) சட்டப்படி தண்டனை கிடைக்காது.
Fact 02 : கருணாநிதி கண்டனம் தெரிவிக்கமாட்டார். மேலும் ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற விழாக்கள் கொண்டாட மட்டும் வாழ்த்துக்கள் தெரிவிப்பார். ஹிந்து மதம் இன்னும் அழியட்டும் என்று நவில்வார். ஆனால் அவர் வீட்டில் உள்ளவர்கள் மட்டும் "சத்ரு ஸம்கார யாகம்" நடத்துவர்.(எந்த கோவில் - கடல் இருக்கும் கோவில் - முருகன் கோவில் - சுனாமி அண்டாத கோவில்)
Fact 03 : பொடா சட்டம் வேண்டாம் என்று கங்கணம் கட்டுவர்.
Fact 04 : சட்டம் தன் கடமையைச் செய்ய(ஹிஹிஹிஹி - அதுவும் இந்தியாவில்) வேண்டும்.

-- ஏங்கும் இந்தியத்தமிழன்
-----------------------------------

Well said Amuthapriyan. This is true.

Anonymous said...

யோசித்து பாருங்கள் தமிழர்களே.

மற்றொரு நாட்டு அரசாங்கத்திடம் கம்ப்ளைண்ட் செய்து உடனடியாக ஒரு பத்திரிக்கையையே தடை செய்யக்கூடிய ஒற்றுமை இருக்கிற ஒரு மத அமைப்பு ஒரு புறம்.

இந்துத்துவ வெறியர்கள், காவிப்படை போன்ற அவமானபடுத்தும் வார்த்தைகளை அனைத்து பத்திரிக்கைகளும் பயன்படுத்திவருகின்ற போதும் அதை எதிர்க்கமுடியாமல் இருக்கும் ஒற்றுமையில்லாத அமைப்புக்கள் மறுபுறம்.

தங்களது மதத்தை பரப்ப என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று எண்ணும் குழு ஒரு புறம்.

மதம் என்பது தனிப்பட்டவரின் சொந்த விஷயம், அதில் நாம் தலையிடக்கூடாது என்று நினைப்பவர்கள் மறுபுறம்.

காந்தியை கொல்லுவதற்கு முன்னர் கோட்ஸே தன்னுடைய கையில் இஸ்லாமிய பெயரை பச்சைகுத்திக்கொண்டார், குஜராத் கலவரத்தில் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் உள்ள சிசுவை கொண்றார்கள் என்று தொடர்ந்து சொல்லிவரும் கும்பல் ஒருபுறம்.

ஏதேனும் தீவிரவாதி இறந்துபோனால் அந்த ***னுடைய மரண ஊர்வலத்தில் லட்சக்கணக்கில் கலந்துகொள்ளும் கும்பல், அவனுக்கு ஆதரவாகவும், அவனை "ஷஹீத்" என்று வாழ்த்தியும் போஸ்டர் அடிக்கும் ஒருபுறம்.

எங்கு நாங்கள் குண்டு வைத்தாலும் சங்க பரிவாரங்கள்தான் காரணம், நாங்கள் குண்டு வைக்க காரணமான அவர்களே குற்றவாளிகள். எனவே, அவர்களை தூக்கில் போட்டுவிட்டு குண்டு வைத்தவர்களை, பாராளுமன்றத்தை தாக்கியவர்களை விடுதலை செய் என்று சொல்லும் கும்பல் ஒருபுறம்.

இவற்றை எல்லாம் தங்கள் கண்முன்னே பார்த்த பின்பும், அவர்களை கேள்விகேட்கும் புத்தி கூட இல்லாமல் இருக்கும் குழுக்கள், என்ன அடி அடித்தாலும் கம்னு இருந்துவிட்டால் "ரொம்ப நல்லவன்னு" சொல்லுவார்கள் என்று வடிவேல்போல அடிவாங்கிக்கொண்டிருக்கும் குழுக்கள் மறு புறம்.

காந்தி கொலைக்குப் பின்னால் கோட்ஸே உயிரோடுதான் சிறையில் இருந்தார். அவரை சிறையில் அடைக்கும்போது அவரது உடல் அடையாளங்களை குறித்துக்கொண்ட ரெக்கார்டிலோ, அப்போது அவரை சந்தித்த இஸ்லாமிய, ஹிந்து, பார்ஸி, கிருத்துவ நண்பர்களோ, அவர் தூக்கிலிடப்பட்ட பின்பு நடந்த பிரேதப் பரிசோதனையிலோ தெரியாத பச்சை குத்திக்கொண்ட கைகளை திடீரென்று கண்டுபிடித்து பரப்பும் கூட்டம் ஒருபுறம்.

அதே கூட்டம், இப்போது நடந்த குஜராத் கலவரத்தில் வயிறு கிழிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் யார் என்று அடையாளம் காட்டமுடியாமல் இருக்கும் விசித்திரமும், அந்த கர்ப்பிணி பெண்ணை தெரிந்தவர்கள்கூட யாரும் இல்லை என்று நம்பவைக்கும் விசித்திரமும், அதை எல்லா பத்திரிக்கைகளும் மீண்டும் மீண்டும் சொல்லுவதும் ஒரு புறம்.

இதை எல்லாம் கேள்வி கேட்டால் கொலை செய்யப்படும் மனிதர்கள் மறுபுறம்.

தாங்களே குண்டு வைத்துவிட்டு, அது மோடி வைத்த குண்டு என்று வாய்கூசாமல் சொல்லும் கூட்டம் ஒருபுறம்.

இப்படிப்பட்ட குற்றசாட்டிற்கு என்ன ஆதாரம் என்றுகூட கேட்காமல் இருக்கும் "ரொம்ப நல்லவஞ்ச" கூட்டங்கள் மறுபுறம்.

"தீவிரவாதத்தை கண்டிக்கிறோம்", தீவிரவாதத்தை செய்தது யாரக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும் என்று அறிக்கை விட்டுவிட்டு, பின்னர் "நாந்தான் குண்டு வைத்தேன்" என்று சொல்லும் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் கும்பல் ஒருபுறம்.

இந்த தீவிரவாதிகளை தூக்கில் போடக்கூட தைரியம் இல்லாத அமைப்புக்கள் மறுபுறம்.

அடிப்பதை பெருமையாக நினைப்பவர்களும், அடிவாங்குவதை பெருமையாக நினைப்பவர்களும் இருக்கும் உலகில் அழிந்துகொண்டிருக்கிறது மனித இனம்.

தங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று எண்ணி "அவர்களின்" தொழுகை நேரத்தில் மார்க்கெட்டுகளிலும், பால்வாடிகளிலும், மருத்துவமனைகளிலும் வெடிக்கும் குண்டுகளில் மாட்டி சாகும் "இவர்களும்", நீதியும் உங்களுக்கு என்ன பாடத்தை கற்று தருகின்றன?