பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, September 08, 2008

இட்லிவடை பே[ய்] சைட் ஆகிறது!

இட்லிவடை பே[ய்] சைட் ஆகிறது! தகவலுக்கு கீழே படியுங்கள்...

இட்லிவடை பிளாக்கை கட்டணம் செலுத்திப் படிக்கும் ஒன்றாக ஆக்கலாமா என்று எல்.கே.ஜி மற்றும் ப்ரீ கேஜி படிக்கும் சிறுவர்கள் சிலரிடம் ஆலோசித்தேன். எல்லோரும் கோரஸாக வேண்டாம் என்றனர். வேண்டும் என்று சொன்ன பையன் ஒருவன் தான். அவன் பெயர் பாடிகாட் முனி.(பிளாகை ஏதோ சாக்கலேட் என்று நினைத்துவிட்டான் பாவம்). வேண்டாம் என்று கூறிய சிறுவர்கள் கூறிய காரணம்: ” இப்போது இந்த இணைய தளத்தின் மொத்த வாசகர் எண்ணிக்கை 14 1/2 தான். இதைக் கட்டணத் தளமாக மாற்றினால் நீங்க மட்டும் தான் படிப்பீர்கள். இப்படியே இலவச இணைய தளமாக இருந்தால் இந்த 14 1/2 பேர் நாளைக்கே பதினாலரை கோடியாகவும் கூடும். சரோஜா தேவி, சவீதா பாபிக்கு அடுத்த படியாக உங்களுக்குத்தான் வாசகர் தளம் அதிகம். எனவே அதை மறுதலித்து விட்டு வெறும் 14 1/2 பேருக்கான தளமாக மாற்றாதீர்கள். ( நல்ல வேளை சரோஜா தேவி இப்போது இல்லை. சவீதா பாபி ஹிந்தியில் பேசுகிறாள். )

இதற்கு முனி வைத்த எதிர்வாதம்: “துக்ளக் ஆன்லைனில் படிக்க ஒரு வாரத்திற்கான கட்டணம் 20 டாலர். ஆக, மாதத்திற்கு 80 டாலர். எனவே இட்லிவடை ஆன்லைன் தளத்துக்கும் கட்டணமாக 100 டாலர் வைக்கலாம். நூறு வாசகர்கள் நூறு டாலர் கட்டினால் உங்கள் நிலை சீரடையும்.

முனிக்கு மறுப்பு: என்ன இது "அஞ்சு கோடி பேர் அஞ்சு கோடி தடவை அஞ்சு பைசா திருடுறது தப்பா?" என்ற அந்நியன் வசனம் மாதிரி பேசறீங்க. இட்லிவடை பதிவுகள் பாதி துக்ளகிலிருது சுடுவது தானே, அப்படி இருக்க எப்படி இட்லிவடை 100 டாலர் பெரும் ? இருந்தாலும் குசேலன், தசாவதாரம், இப்ப எந்திரன் போன்ற உப்புசப்பு இல்லாத பதிவுகளுக்கு மக்கள் இட்லிவடைக்கு வருகிறார்கள். அதனால் நிச்சயம் 100 டாலர் தருவர்கள். அதை தவிர துக்ளகை விட இட்லிவடை தளம் ஒரு சமுதாய, கலாச்சார மாற்றம் (ஏன் புரட்சியை என்று கூட சொல்லலாம் ) கொண்டு வரும் ஒரு தளம். அதனால் இட்லிவடையும், துக்ளக்கும் ஒன்றா ? சிந்தியுங்கள்..

முனி “இட்லிவடையாரே, இப்படி சொல்லிச் சொல்லியே உங்களைத் தெருவில் நிற்க வைத்து விடுவார்கள். உங்களுடைய எழுத்தைப் படிக்காவிட்டால் தூக்கமின்றிப் புரள நூறு பேர் இருக்கிறோம். ஏன் என்றால் பாதி நேரம் கரண்ட் கட். நூறு பேர், நூறு டாலர்...யோசித்துப் பாருங்கள். ”

யோசித்தேன். யோசித்துக் கொண்டிருக்கும் போது ஒரு நல்ல காரியம் நடந்தது. நுரையீரலுக்குக்கீழ் பகுதி - கல்லீரலுக்கு மேல் பகுதி சோதனைக்காக இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப் பட்டு ‘நலம் ’ என்ற நற்சான்றிதழுடன் விடுவிக்கப் பட்டேன். (டாக்டர் என் எழுத்தை படித்துவிட்டு என்னை வீட்டுக்கு அனுப்பிவிட்டார், இப்போது அந்த டாக்டர் நலமின்றி கீழ்பாக்கத்தில்). செலவு: 15,000 ரூபாய். தினசரி வயகரா 3 என்ற மாத்திரையை உட்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டேன். ஒரு மாத்திரை விலை பிளாக்கில் 50 ரூ. நான் தினசரி இரண்டு சாப்பிட வேண்டும். இதை வேறு விதமாக செய்யலாம், ஆனால் இந்த மாத்திரையை விடப் பல மடங்கு விலை அதிகம்.

இப்படி நான் ஒரு ‘கன்றாவியான எழுத்தாளனாக இருப்பது மற்றவர்களின் துரதிர்ஷடம்தான். வாசகர்களுகு அபிநவ் பிந்த்ராவின் ஞாபகம் வருகிறது. இந்த மாதிரி எழுத்தாளனை சுடாமல் ஒலிம்பிக்ஸில் போய் எதையோ சுடுகிறார். இதனால் இந்தியாவிற்கு என்ன நன்மை. இவர்களை சுட்டாலாவது இந்தியாவிற்கு நன்மையாக இருக்கும்.

இப்போது உள்ள சாய்ஸ் இரண்டுதான். என்னுடைய பணத் தேவை கருதி 14 1/2 பேருக்கான இணைய தளமாக மாற்றலாம். நிச்சயம் 14 1/2 பேர் நூறு டாலர் கட்டிப் படிப்பார்கள். அவர்கள் முட்டாள்கள். அவர்களின் பெயர் கூட எனக்குத் தெரியும். ( என்னை துரத்துபவர்கள் என்று சைடில் போட்டிருக்கேன்) நாளை 14 வாசகர்களை ஒரு கோடியாக பெருக்கலாம்.

ஆனால், என்னுடைய எழுத்து அபிநவ் பிந்த்ராவின்..... போன்றது. டாய்லட் இருக்க வேண்டும் பெங்களூரோ, சென்னையோ, பாபநாசமோ, கவலையில்லை அவசரத்துக்கு ஒதுக்குபுறமாக எங்குவேனா டைப் செய்து பதிவேற்றம் செய்ய முடியும். கல்லூரி மாணவிகளுடன்(குட்டிகள்) ‘ மோக்கா ’ காஃபி ஷாப்புக்குச் சென்றால் எனக்கு ஒரு 500 ரூ. செலவாகும். ஆனால் குட்டிக் கதைகள் என்ற நாவலை எழுதலாம். இல்லாவிட்டால் உத்தமத் தமிழ் எழுத்தாளன் மாதிரி பகவத் கீதைக்கு விளக்கவுரையும், தேவன் புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழை போட்டு எழுதிக் கொண்டிருக்க வேண்டியிருக்கும்.

எனவே எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. 14 பேர் கூட வேண்டாம். ஒரு 4 பேர் போதும். அந்த 4 பேரும் மாதம் முன்னூறு டாலரை எனக்கு அனுப்பி வைத்தால் உங்கள் மூலமா பதினாலு கோடி பேர் இந்த இணைய தளத்தை இலவசமாகப் படிக்கலாம். எனக்காக வேண்டாம்; இந்த பதினாலு கோடி பேருக்காக 4 பேர் முன்வருவீர்களா?

பணம் அனுப்ப விருப்பமுள்ளோர் சைடில் இருக்கும் உண்டியலில் ஒரு ஐந்து பைசா போடுங்கள்.


8.8.8
11:10 am
பாதி எழுதிக்கொண்டிருக்கும் போது, என்னை கீழ்பாக்கம் மருத்துவமனை காவலர்கள் அழைத்து செல்லும் நாள்.

பிகு: இந்த பதிவு டூப்ளிகேட்; ஒரிஜினல் காமெடி 'அங்கே' :-)

32 Comments:

Anonymous said...

'andha' sitedhan ennoda monday morning blues kku best remedy. kalailaye poi parthu sirichuttu vandhutten.

adhellam sari, 'bagavathgeethai' ezhuthalar irukkattum, 'devan' ezhuthalarai edhukku sammandhamillama vambukku izhukkureenga.

யோசிப்பவர் said...

ஆ! துரத்துபவர்களுக்கு காட்ஜெட் கொடுத்த பிளாக்கரே! துரத்துவதை நிறுத்துவதற்கு எப்பொழுது பட்டன் கொடுக்கப் போகிறாய் அப்படின்னு ஒரு திறந்த மடல் பதிவு எழுதலாமான்னு யோசித்துக் கொண்டிருக்கிறேன்!!;-)

வால்பையன் said...

சபிதா பாபி தமிழிலும் வருகிறது

இலவசக்கொத்தனார் said...

நல்லா இருங்க சாமி!! :))

வெண்பூ said...

செம நக்கல் இட்லி வடை. ரொம்ப நாள் கழித்து உங்களிடமிருந்து ஒரு நல்ல நையாண்டி.

****

அவரு இப்ப எழுதுற "காசே இல்ல" புராணத்த படிக்கவாவது நாம அந்த பக்கம் போறோம். :) அவரு பே சைட் பண்ணினா அத படிக்க கூட யாரும் வரமாட்டாங்க (அப்படின்னு நினைக்கிறேன், யாராவது பாயாதீங்கப்பா என் மேல)

Anonymous said...

அய்யா வணக்கம் இந்த கட்டுரை ஒருத்தருக்கு சவுக்கடின்னு நினைக்கிறேன்..நேற்றுதான் அவரோட கட்டுரை படித்தேன் இன்று நீங்கள் கிளித்துவிட்டீர்கள்...வாழ்த்துக்கள்

Anonymous said...

http://tamil-stories.blogspot.com

குழந்தைகள் படிக்க அல்ல.

Tech Shankar said...

ஹல்லோ சார். ஏன் இப்படி. நல்லாதானே இருந்தீங்க..

மாயவரத்தான் said...

hahahhaha...

ரெண்டு மாசமா கூவியும் ஒருத்தனும் பதில் போடலயாமே?

ஓசியில படிக்கவே அவனவன் தெரிச்சு ஓடுறான். இதில காசு வேறயா?

போருஆப்லைன்.காம்

Anonymous said...

http://www.organiser.org/dynamic/modules.php?name=Content&pa=showpage&pid=253&page=2

Please post this with a tamil synopsis. Thanks

Crescent and Cross replace Sun and Lotus in Kendriya Vidyalaya emblem

Krish said...

யாருங்க அவரு? யாராவது clue கொடுங்களேன்

Anonymous said...

avaru paeru "chaa" la aarambichu "ru" la mudium.....

Anonymous said...

Who else but Mr.Charu Nivedita.

-- Nokia Fan

இரா. வசந்த குமார். said...

மீரு போஸ்டு ச்சூஸ்தானு... நெம்ப லாஃபிஸ்தாணு...இட்லிவடை சாரு... கலக்கிட்டீங்க சாரு...!!!

;-)))

Anonymous said...

IV,
aana idhellam over nakkal.

http://www.charuonline.com/sep08/Alosanai.html

யோசிப்பவர் said...

இ.வ.,
நான் இட்லிவடையை மட்டும் துரத்தி, சாருவை துரத்தாததால், முதலில் உங்கள் கிண்டல் அவரைத்தான் குறிக்கிறது என்று தெரியாமல் போய் விட்டது. இப்பொழுது புரிகிறது. சாருவை துரத்துவது ரொம்ப முக்கியம்!!!;-)

கால்கரி சிவா said...

I know Saroja Devi, who is this? Savitha Bahabi

Anonymous said...

சாரு என்ற பெருமாள் Matter பண்ண பொது மக்கள் Meter போட வேண்டும்.. பிறகு அந்த பலான விஷயத்தை இலக்கிய (உலக) தரத்தில் தமிழ்நாடு, கேரளா மற்றும் ஸ்பானிஷ் நாட்டு மக்களுக்கு அவர் சொல்லித் தருவார். இதைப் போய் கிண்டல் பண்ணி விட்டீர்களே..

பி.கு: அவரை கிண்டல் செய்தால் அவருடைய டீ கடையில் டீ குடித்த செலவை உங்கள் தலலயில் கட்டி விடுவார்.

அவர் குறிப்பிடும் நண்பர் (நிக்கி) - ஒரு தமிழ் பத்திரிக்கையின் இளவல் ஒரு lady matterla மாட்டி escapuuuuu..

Krish said...

காசுக் கொடுத்து படிக்கற மாதிரி அந்த தளத்தில் ஒன்னும் இல்லையே!!!

Anonymous said...

Calgary..you r waste!

Innum sarojadevi kalathilaya irukkeenga?

Anonymous said...

Idlyvadai, thamizmanam payaluvalukku ennachu?

R.Gopi said...

ஆனால், என்னுடைய எழுத்து அபிநவ் பிந்த்ராவின் தங்கம் போன்றது. கையில் லேப்டாப் இருந்ததால் பெங்களூர் சென்ற போதும் அங்கிருந்து டைப் செய்து பதிவேற்றம் செய்ய முடிந்தது. கல்லூரி மாணவிகளுடன் ‘ மோக்கா ’ காஃபி ஷாப்புக்குச் சென்றால் எனக்கு ஒரு 500 ரூ. செலவாகும். ஆனால் குட்டிக் கதைகள் என்ற நாவலை எழுதலாம். இல்லாவிட்டால் உத்தமத் தமிழ் எழுத்தாளன் மாதிரி பகவத் கீதைக்கு விளக்கவுரைதான் எழுதிக் கொண்டிருக்க வேண்டியிருக்கும்.

-----------------------------------

Adhurudhu Adhurudhu un kuthamaa??

Anonymous said...

thuglak VARUSATHUK'KU 20$ thaan'nu yaaraavadhu avarukku sollungappa. VARUSAM/VAARAM vithiyaasam theriyala.. ennaththai solla..

Anonymous said...

savita bhabi is in all languages

Anonymous said...

நாங் கொஞ்சம் லேட்டுதானுங்க. இட்லி வடை படிக்கலனா டெய்லி தூக்கம் வரமாட்டேன்குதுங்க. என்னடா பே சைட்ன்க்றாங்க... இனி... எப்டி படிக்க போர்றேன் என குழம்பி தவித்தபோது... ஆஹா...நம்ம இட்லியின் ரசிக மணிகளின் பின்னூட்டம் மட்டும் இல்லன்னா...நச்சுன்னு பஞ்ச் வைக்க... இட்லிக்கு நிகர் இட்லிதான். இட்லிவடை சாரு... கலக்கிட்டீங்க சாரு...!!!

Anonymous said...

HA HA HA... NEWS IPPO ANGA POI IRUKKUM...

நல்லதந்தி said...

பீருநிவேதிதாவை இப்படி வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டீர்களே!!

Anonymous said...

Did you send this to charu.

Selva said...

Selva:
Because of this only I don't read tamil blogs. Hereafter i am going to read only malayalam blogs. Only there they respect the writers and only malayalam people have rasanai. What to do? this is my fate to have been born here.I pray to my guru Saibhaba so that at least in the next jenmam i may be born in my porno-dream land France. -Idlivadai paavam antha 'uthamamillatha ezhuthalar.

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

பேருந்தில் வெளியூர்களுக்கு பயணம் செய்த எல்லாருக்கும் இந்த அனுபவம் கிட்டியிருக்கும்

ஒரு சிறுவனோ சிறுமியோ அச்சடித்த அட்டை ஒன்றை எல்லாரிடமும் தருவார்

அதில் யாசகம் கேட்டு ஒரு புலம்பல் இருக்கும்.

என்னவோ இப்ப அது ஞாபகம் வருது

Anonymous said...

who is that 'Nikki'? Any idea? antha nikki yarunga anony??

Anonymous said...

இ.வ யாரை பத்தி எழுதியிருக்காருன்னு தெரியுது.. அந்த தளம் சும்மா படிக்கவே லாயக் இல்ல..இதுல காசு வேற குடுக்கணுமா ? வேணும்னா அந்த ஆளை..(அதாங்க... தளம் ஓனர் ..குடிகார மூஞ்சி..) வேணும்னா எங்களுக்கு காசு குடுக்க சொல்லுங்க.. போனா போகுதுன்னு படிக்கிறோம்..
சில மார்கெட் போன / புது நடிகர்கள்.. தனக்கு தானே அடை மொழி கொடுத்துக்கிறது..பிறந்த நாள் போஸ்டர் அடிச்சி சுய வாழ்த்து தெரிவிச்சிக்கிரதுன்னு..புளிப்பு காட்டுற மாதிரி.. இந்த ஆளும் ....ங்கறது..நல்லாவே தெரியுது...