திருச்சியில் நடந்த தி.மு.க.முப்பெரும் விழாவில் முதல்- அமைச்சர் கருணாநிதிக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது
திருச்சியில் நடந்த தி.மு.க. மு�பெரும் விழாவில் முதல்- அமைச்சர் கருணாநிதிக்கு பெரியார் விருதினை பொதுச்செயலாளர் அன்பழகன் வழங்கினார். உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கலைஞர் விருதும், மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கு அண்ணா விருதும், பொதுப்பணித்துறை அமைச்சர் துரை முருகனுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருதும் வழங்கப்பட்டது.
விருது பெற்றவர்களை பாராட்டி மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம்,
புள்ளியியல் துறை இணை மந்திரி ஜி.கே.வாசன்,
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு,
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி,
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்,
எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன்,
எல்.கணேசன் எம்.பி,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தலைவர் காதர்மொய்தீன் எம்.பி,
வக்புவாரிய தலைவர் ஐதர் அலி,
புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி,
கட்டிட தொழிலாளர் சங்க தலைவர் பொன்.குமார்,
தமிழ் மாநில தேசிய லீக் பொதுசெயலாளர் திருப்பூர் அல்தாப்,
திருச்சி ஜோசப் கல்லூரி அதிபர் லாசர் ஆகியோர் பேசினார்கள்.
இறுதியாக பாராட்டுக்கு நன்றி தெரிவித்து முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்.
- செய்தி
துக்ளக் கேள்வி பதில்
கே : தி.மு.க. நடத்தும் முப்பெரும் விழாவில் முதல்வர் கருணாநிதிக்கு பெரியார் விருது வழங்க தேர்வு செய்யப்பட்டதற்காக, அரசியல் தலைவர்கள் முதல் பல்வேறு துறையினரும் அவருக்கு நேரில் சென்று வாழ்த்துத் தெரிவிப்பது பற்றி?
ப : கலைஞரே, கலைஞரைப் பாராட்டி, கலைஞர் விருதை அளித்து, கலைஞர் அதைப் பெற்றுக்கொண்டால் கூட – இவர்கள் எல்லாம் அவருடைய "சாதனை'க்காக, அவரை வாழ்த்துவார்கள்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, September 22, 2008
கருணாநிதிக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது
Posted by IdlyVadai at 9/22/2008 03:52:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
6 Comments:
//// உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கலைஞர் விருதும், மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கு அண்ணா விருதும், பொதுப்பணித்துறை அமைச்சர் துரை முருகனுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருதும் வழங்கப்பட்டது.
///
இவர்களுக்கு எதற்காக இந்த விருதுகள் என்று யாருக்காவது தெரியுமா?
இட்லி-வடை விருது என்று ஒன்றை ஏற்படுத்தி வீரமணிக்கு சத்யராஜ கையால தரச் சொல்லலாம் :).
வீரமணி அதையும் வாங்கிக் கொள்வார் :(.
தமிழ் நாட்டுல என்னையா நடக்குது... அவனவன் இஷ்டத்துக்கு விருது வாங்கிக்கிரங்க.. இவுங்களுக்கு எல்லாம் என்ன தகுதி அருகதை இருக்கு இத வாங்க... இவங்களுக்கு வெக்கமாகவே இருக்காதா! பாவம்யா அந்த இறந்து போன தலைவர்கள்... நாட்டை கெடுகிரவங்களுக்கு உயர்ந்த தலைவர் பேர்ல விருது...அய்யகோ...என்செய்வேன்...
And then, who got the Stalin Award?
கலைஞரே, கலைஞரைப் பாராட்டி, கலைஞர் விருதை அளித்து, கலைஞர் அதைப் பெற்றுக்கொண்டால் கூட – இவர்கள் எல்லாம் அவருடைய "சாதனை'க்காக, அவரை வாழ்த்துவார்கள்.
Superb comment by Mr. Cho avargal...
Cho avargale neenga neradiyagave sollirukkalam adhu Sadhanai alla...SODHANAI...endru...
Thanks a lot for ur comment...
தகுதியான நபருக்கு கொடுக்கப்பட்டுள்ள பொருத்தமான விருது.
தன்னுடைய ஆட்களை வைத்து "வைக்கம் வீரர்", "பெரியார்" போன்ற விருதுகளை தனக்குத் தானே பெற்றுக்கொண்டவர் ஈ.வெ.ரா.
அவருக்கு எப்படி அந்த பட்டங்கள் கிடைத்தனவோ அதே முறையில் கருநாநிதியும் அந்த "பெரியாரின்" பெயருள்ள விருதை தனக்குத் தானே பெற்றுக் கொள்கிறார். பட்டங்கள் பெறுவதும், இளைஞரணி தலைவரை நியமிப்பதும் அந்த ஈ.வெ.ரா தோற்றுவித்த திராவிடர் கழக மரபில் வந்தவை.
இந்த மரபை நீங்கள் எதிர்க்கலாமா? மரபை எதிர்த்து கதைகள் எழுதும் பீருநீவெந்துதாவே இனிமையான கனி மொழிக்காக வேலை செய்துகொண்டிருக்கும்போது, நீங்கள் இப்படி எழுதுவது தமிழ் இனத்திற்கே செய்யும் மிகப் பெரிய துரோகம்.
அதனால், விரைவில் உங்களுக்கும் ஒரு பட்டம் கொடுக்கப்படும். அந்தப்பட்டத்தில் "பார்ப்பன" என்னும் அடைமொழி இருக்கப்போவது நிச்சயம்.
Post a Comment