டி.வி.-செல்போன் நிறுவனத்துக்கு ரூ. 1 கோடி அபராதம்: குரோர்பதி நிகழ்ச்சியில் முறைகேடு நடந்ததாக புகார்.
`குரோர்பதி' நிகழ்ச்சியில் முறைகேடு நடந்ததாக ஸ்டார் பிளஸ் டெலிவி ஷன் மற்றும் ஏர்டெல் நிறுவனத்துக்கு ரூ. 1 கோடி அபராதம் விதிக் கப்பட்டுள்ளது.
ஸ்டார் பிளஸ் டெலி விஷன் நிறுவனமும் ஏர்டெல் செல்போன் நிறுவனமும் இணைந்து கோன்பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை நடத்தின. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு சரியாக பதில்களை தெரிவித்தவர்களுக்கு பரிசுத் தொகைகளும் வழங்கப்பட்டன.
இந்த குரோர்பதி நிகழ்ச்சி யின் ஒரு பகுதியாக ``ஹர் சீட் ஹாட் சீட்'' என்ற நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
இதில் மொபைல் போன் மூலம் பதில்களையும் தகவல் களையும் எஸ்.எம்.எஸ். மூலம் நேயர்கள் அனுப்பினார்கள். 5 கோடியே 80 லட்சம் எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டன. இதன் மூலம் எஸ்.எம்.எஸ். கட்டணமாக ரூ. 5.8 கோடி தான் கிடைத்திருக்க வேண்டும்.
ஆனால் ரூ. 13.92 லட்சம் கிடைத்துள்ளது. ஒரு எஸ்.எம்.எஸ். செய்திக்கு கட்டணம் ரூ. 2.40 வசூலித்து இருக்கிறார்கள். வழக்கமாக கட்டணத்தை விட இது கூடுதல். இதன் மூலம் முறை கேடு நடந்துள்ளதாக புகார் கூறப்பட்டது.
இந்த புகாரை தேசிய நுகர்வோர் பாதுகாப்பு கமிஷன் விசாரித்தது.
இந்த கமிஷனின் தலைவர் ஷா இதை விசாரித்து இந்த நிகழ்ச்சியில் முறைகேடு நடந்துள்ளது, ஏர்டெல் மற்றும் ஸ்டார் பிளஸ் நிறுவனம் ரூ. 1 கோடி அபராதம் செலுத்த வேண்டும். எஸ்.எம்.எஸ். கட்டணமாக ரூ. 13.92 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. சாதா ரண கட்டணத்தை விட கூடுதலாக ரூ. 8.12 கோடி கிடைத்துள்ளது.
பரிசுத் தொகை ரூ. 1 கோடி தொகையை கட்ட ரூ. 7 கோடி வருமானம் கிடைத்திருக்கிறது என்று தீர்ப்பு கூறினார்.
( நன்றி: மாலைமலர் )
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Saturday, September 13, 2008
யார் குரோர்பதி ?
Posted by IdlyVadai at 9/13/2008 04:49:00 PM
Labels: செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
6 Comments:
//இதன் மூலம் எஸ்.எம்.எஸ். கட்டணமாக ரூ. 5.8 கோடி தான் கிடைத்திருக்க வேண்டும்.
ஆனால் ரூ. 13.92 லட்சம் கிடைத்துள்ளது.//
லட்சம் பெருசா கோடி பெருசா? ஒரே கன்பியூசன்!
இலவச கொத்தனாரின் சந்தேகம் தான் எனக்கும்
Some problems with the numbers. should be 13.92 crores, i suppose
did they refund the balance amount to the people who send the SMS?
aravindaan said...
did they refund the balance amount to the people who send the SMS?
-----------------------------------
For refund of your SMS amount, please send one SMS confirming that the SMS is sent by you???!!!
Sonnalum solvaanga Sir.....
I don't understand. Didn't the people who sent the SMS not know that these SMSes are charged at a higher rate? Special numbers always attract higher SMS rate (even those SMSes to Sun Music etc..).
After referring to other news websites - looks like the fine of 1 crore is for not keeping the consumers informed that the prize money would be paid from the profits arising out of the premium sms charge being applied and is not a fair business practice. It is not because the sms charges were at a premium.
I would blame the people more than the TV show and the mobile company.
Post a Comment