பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, September 22, 2008

கலைஞர் தூண்டுதலின் பேரில் வழக்கு - விஜயகாந்த் குற்றச்சாட்டு

முதலமைச்சர் கருணாநிதியின் தூண்டுதலின் பேரிலேயே என் மீதும், எனது கட்சியினர் மீதும் பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விஷயத்தில் நடிகர் வடிவேலு பகடைக்காயாக பயன்படுத்தப் பட்டுள்ளார் என்று அவர் கூறியுள்ளார். தேமுதிகவின் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் என்னுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை பொறுக்க முடியாமலும் இத்தகைய பொய் வழக்குகளை போடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்த மாதம் சென்னையில் நடைபெற உள்ள தேமுதிகவின் இளைஞர் அணி மாநாட்டை தடுப்பதற்காக குறுக்கு வழியில் கருணாநிதி செயல்படுவ தாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.



சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

என் மீதும், எனது கட்சியினர் மீதும் ஆளுங்கட்சியினர் தூண்டுதலால் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இதற்கு நடிகர் வடிவேலு பகடைக் காயாக பயன்படுத்தப்பட்டுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், ஒவ்வொரு மணி நேரமும் ஒரு மாதிரி மாற்றி மாற்றி சொல்லி, தப்புத் தப்பாக கூறியிருக்கிறார். இது அனைத்தும் பொய்யாகும்.

கடந்த முறை ஒரு சம்பவம் நடந்த போது நான் கோவையில் இருந்தேன். அங்கிருந்து புதுக்கோட்டைக்கு சென்ற போது, என்னுடன் வந்த டிரைவர்கள் மீது வழக்கு போட்டிருக்கிறார்கள். இதிலிருந்தே பொய் வழக்கு என்று தெரியும்.

நான் சட்டத்தை மதிப்பவன். யாருக்கும் இதுவரை இடைஞ்சல் செய்ததில்லை. எத்தனையோ தயாரிப்பாளர்களை காப்பாற்றித்தான் எனக்கு பழக்கம். அப்படிப்பட்ட என் மீது பொய் வழக்கு போடுவது வேதனையாக உள்ளது.

படத்தில் வரும் காமெடி போல வடிவேலு பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாட்டில் திமுக போலீசும், அதிமுக போலீசும் எப்போது ஒழிகிறதோ அப்போது தான் நல்லகாலம் ஏற்படும். போலீஸ் உடையை அணிந்து நடிப்பதே எனக்கு கேவலமாக இருக்கிறது.

என் மீது எத்தனை பொய் வழக்கு தான் போடுவது. இது இளைஞர் அணி மாநாட்டை கெடுப்பதற்காக கருணாநிதி நடத்தும் மலிவான அரசியலாகும். நான் வளர்ந்து வருவதை கண்டு பொறுக்காமலும், மார்க்சிஸ்ட் தலைவர்கள் என்னுடன் பேசுவதை பொறுக்க முடியாமலும், குறுக்கு புத்தியுடன் அவர் செயல்படுகிறார்.

நான் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என்று அறிவித்தால், அன்றைய தினமே 10 பொருட்கள் 50 ரூபாய்க்கு நியாயவிலை கடைகளில் தரப்படும் என்று அறிவிக்கிறார். காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு என்று கூறி, பாண்டிச்சேரியிலும் எங்களுக்கு பங்கு தர வேண்டும் என்று சொல்கிறார். எதையாவது சொல்லி பதவியில் நீடிக்க வேண்டும் என்பதே கருணாநிதியின் எண்ணமாகும். பதவி ஆசையால் அவர் செய்யும் தவறுகளுக்கு தண்டனை நிச்சயம் கிடைக்கும். அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும். யாராக இருந்தாலும் தவறுக்கான தண்டனையிலிருந்து தப்ப முடியாது.

எனது கட்சித் தொண்டர்கள் மிகவும் கட்டுப்பாடானவர்கள். எந்த வன்முறையிலும் இறங்காதவர்கள். எனக்கு பாதுகாப்பு எனது தொண்டர்கள் தான்.

திமுக ஆட்சியில் ரவுடியிசம் பெருகி விட்டது. கருணாநிதி காவிரி பிரச்சனையிலிருந்து, பாலாறு, முல்லைப்பெரியாறு போன்ற எந்த பிரச்சனையையும் தீர்க்கவில்லை. 1974ல் கச்சதீவை தாரைவார்த்தார், வருமானவரி வழக்கிற்காக காவிரி வழக்கை வாபஸ் பெற்றார், தாண்டவராயன் நெல் கடத்தல் வழக்கே இவரைப்பற்றி கூறும். 1969 முதல் இன்று வரை அவர் குறுக்கு வழியில் தான் அரசியல் நடத்தி வருகிறார்.

எனது கல்யாண மண்டபத்தை இடித்தது முதல் பல இடையூறுகளை எனக்கு செய்து வருகிறார். என்னை எப்படி அழிப்பது என்பதிலேயே அவரது கவனம் உள்ளது. ஒரு காமெடி நடிகர் கோர்ட்டுக்கு வருவது சாதாரண விஷயம். இதற்காக ஒரு வருடம் கழித்து அவரை தாக்க வேண்டிய அவசியம் எனக்கு என்ன வந்தது. என்னை எதிர்த்து போட்டியிடுவதாக அவர் கூறியிருக்கிறார். கருணாநிதியே என்னை எதிர்த்து நின்றாலும் நான் பயப்படமாட்டேன்.

விலைவாசி ஏற்றம் போன்ற பல்வேறு பிரச்சனைகளில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதிலேயே கருணாநிதி கவனம் செலுத்தி வருகிறார். எனது தொண்டர்களிடம் மறியல் செய்யக்கூடாது என்று கூறியிருக்கிறேன். அவர்கள் எந்த வன்முறை சம்பவத்திலும் ஈடுபட்டதில்லை. சில இடங்களில் உணர்ச்சிவசப்பட்டு சில செயல்களில் அவர்கள் ஈடுபட்டிருக்கக்கூடும். உண்மை உறங்கும் போது, பொய்கள் ஊர் சுற்றி வரும்.

ஆனால், உண்மை ஒரு நாள் வெடிக்கும் போது அதன் விளைவு தெரியும். தமிழக சட்டசபைக்கு முன்னதாகவே தேர்தல் நடக்கும். இந்த அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். நான் தைரியமானவன். நியாயமானவன். மக்கள் பிரச்சனைக்காக சிறை செல்ல தயார். ஆனால், கெட்டதற்கெல்லாம் போலீஸ் துணை போனால் அடுத்த ஆட்சி வரும்போது, அத்தகைய போலீஸ்காரர்கள் எங்கு போவார்கள் என்று தெரியாது. அனைவரும் மாட்டிக்கொள்ளவேண்டியது வரும். மக்களுக்காக நியாயமான அரசியல் நடத்தி வருகிறேன். என்னால் எந்த வன்முறையும் எங்கும் நடந்ததில்லை

( நன்றி: மாலைசுடர் )

பிகு:

அஜீத் ரசிகர்கள் தான் வடிவேல் வீட்டை தாக்கி னார்கள் என்று செய்தி வெளியானது. என்றாலும் என்னை இதில் சேர்த்தது தவறு. இதையும் விஜயகாந்த் சொன்னார் :-)

வழக்கு பற்றிய விவரம்:

இந்திய தண்டனை சட்டப்பிரிவு 307 (கொலை முயற்சி), 506/2 (ஆயுதங்களுடன் வந்து கொலை மிரட்டல் விடுப்பது), 323 (சிறு காயம் ஏற்படுத்துவது), 427 (50 ரூபாய்க் கும் குறைவான சொத்துக்களை சேதப்படுத்தி அழிப்பது), 336 (மனித உடலுக்கும், மற்றவர்கள் உயிருக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்குவது), 448 (அத்து மீறி நுழைந்து தாக்குவது) 148 (கும்பலாக சேர்ந்து திட்டமிட்டு கலகம் ஏற்படுத்துவது), 147 (கும்பலாக கூடுவது), ஆகிய பிரிவு களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்குப் பிரிவுகளில் சில ஜாமீனில் வெளிவர இய லாத பிரிவுகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்குகளின் அடிப்படை யில் தே.மு.தி.க. கட்சி நிர் வாகிகள் சிலரிடம் விசா ரணை நடத்தவும் விருகம் பாக்கம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதை அறிந்ததும் சென்னை மாவட்ட தே.மு.தி.க. வக்கீல் பிரிவை சேர்ந் தவர்கள் நேற்று மாலை போலீஸ் கமிஷனர் சேகரை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் அவர் கள், நடிகர் வடிவேல் தன் வீட்டை மர்ம நபர்கள் தாக்கியதாகத் தான் புகார் கொடுத்துள்ளார். ஆனால் விருகம்பாக்கம் போலீசார் தே.மு.தி.க. வினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது பொய் வழக்கு. இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறி இருந்தனர்.

இதற்கிடையே விஜயகாந்த் மீதும் மற்றும் தே.மு.தி.க. நிர்வாகிகள்
மீதும் நடவ டிக்கை எடுக்கப்படலாம் என்று இன்று காலை தகவல் பரவியது. இதனால் தே.மு.தி.க. கட்சித் தொண்டர்கள் ஆவேசமானார்கள்.

இது குறித்து போலீஸ் கமிஷனர் சேகரிடம் கேட்கப்பட்டது.

நடிகர் வடிவேலு தனது புகாரில் விஜயகாந்த் தூண் டுதலின் பேரில் தான் மர்ம கும்பல் வீடு மற்றும் அலுவலகத்தில் கல்வீசி தாக்குதல் நடத்தியது என கூறியிருக்கிறார். அவரது புகார் அடிப்படையில் தான் விஜயகாந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற நபர்கள் குறித்து போலீ சார் புலன் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் முடிவில் தான், விஜயகாந்துக்கும், இந்த சம்பவத்துக்கும் தொடர் புள்ளதா என்பது தெரிய வரும். அதன் பிறகு தான் அவர் மீது நடவடிக்கை எடுக் கப்படும்.

தற்போது விசாரணை நியாயமான முறையில் நடந்து வருகிறது.


அப்டேட்
தேமுதிக தலைவர் விஜய்காந்தின் மேனேஜர் உள்ளிட்ட அக்கட்சியின் 13 பேருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

6 Comments:

Anonymous said...

//போலீஸ் உடையை அணிந்து நடிப்பதே எனக்கு கேவலமாக இருக்கிறது...

appadaa... tamilnattai aandavan kaappathittaan....!!!

inimae kodambakkam tailors payappada vaendaam...!!!

Anonymous said...

Whatever Vijaykanth said it is correct...But dont worry mr. vijay we are there to support you...only few people like the above anony is supporting manjal thundu...

We really need some good changes in TN. Hope you will do something good for TN poor and middle class people

Anonymous said...

வடிவேலு வழக்கில் கேப்டனை கைது செய்து அவரை அடுத்த முதல்வராக்க வேண்டுகிறோம் .

Anonymous said...

//Whatever Vijaykanth said it is correct...But dont worry mr. vijay we are there to support you...only few people like the above anony is supporting manjal thundu...//

yes mr.Vijaya kandu.. we are there to support you. We wont sleep till you become american president. Atleast pls try to become PM of england. For your caliber dont try anything lesser than this.

Anonymous said...

யொவ் இட்லி ஆறிபோன மேட்டரை உடுப்பா
இதோ சூடா ரோபோ @ எந்திரன் போட்டோ இருக்கு

http://www.smubla.com/albcast/?key=59000c889fb6e160ab066928912485d8

Anonymous said...

கேப்டன் அவர்களுக்கு..

வடிவேலை அடிப்பானேன்... பீயை சுமப்பானேன்...

இப்படிக்கு..

"நாக்க மு.க"


இதில் அசத்தியது யாரு ?