பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, September 29, 2008

திமுகவின் அடுத்த திட்டம் இலவச அரிசி, கேபிள்- விஜயகாந்த் தகவல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் முன்னிலையில் பகவத்சிங் ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாதர் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 5000 பேர் ஏ.எம்.காமராஜ் தலைமையில் தேமுதிக வில் நேற்று மாலை இணைந்தனர். விஜயகாந்த் பேச்சு கீழே...

விஜயகாந்த் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்ய முடியும் என்று கேள்வி கேட்கிறார்கள். 5 முறை முதலமைச்ச ராக கருணாநிதி இருந்தும் விலைவாசி குறையவில்லை. எதற்கெடுத்தாலும் கவிதை எழுதும் முதலமைச்சர் விலை வாசி உயர்வுக்கு கவிதை எழுதுகிறாரா?

எது எதற்கோ மத்திய அரசை மிரட்டும் முதல்வர் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ஏன் மத்திய அரசை மிரட்டவில்லை.

தேமுதிக ஆட்சிக்கு வந்தால் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் என நாங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தோம். இது சாத்தியமல்ல என்று கூறியவர்கள்தான் 10 மளிகை பொருட்கள் அடங்கிய பாக்கெட் 50 ரூபாய்க்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

அரசு 50 ரூபாய்க்கு தருவதாக கூறிய மளிகை பொருட்களை அக்டோபர் 2ம் தேதிக்கு முன்பே தேமுதிக அலுவலகத் தில் விழா நடத்தி ரூ.38க்கே என்னால் தரமுடியும். ஆனால் திமுகவினரே அதை வாங்கிச் சென்று கெட்டுப்போன பொருட்களைத் தான் விஜயகாந்த் தருகிறார் என்று குறை கூறுவார்கள். அதனால் அந்தத் திட்டத்தை தள்ளி வைத்துள்ளோம்.

திமுகவின் அடுத்த இலவசம் ரேஷன் அரிசியாகத்தான் இருக்கும். மேலும் நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் கேபிள் கனைக்ஷனையும் இலவசமாக வழங்குவோம் என அறிவிப்பு வரும் என்று தகவல் கிடைத்துள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒன்றிரண்டு சீட்டிற்காக எதற்கு விஜயகாந்த் வீட்டு வாசலை மிதிக்க வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் கூறியிருக் கிறார். இவர்களிடம் கம்யூனிஸ்ட் கட்சிகள் சென்றால் மட்டும் முதல்வர் பதவியா கொடுக்கப் போகிறார்கள்.

மக்கள் இன்றுள்ள நிலையில், அடுத்து தேமுதிக ஆட்சிதான் என்று நான் அடித்துச் சொல்வேன். இதேபோல் திமுகவும், அதிமுகவும் சொல்ல முடியுமா?

நான் நானாகவேதான் இருக்கிறேன். கூட்டணியைப் பற்றி யோசிக்கவே இல்லை. கட்சியின் வளர்ச்சியைப் பார்த்து கூட்டணிக்காக என்னை தேடி வருகிறார்கள். தேடி வருபவர்களை வரவேற்று உபசரிப்பதுதானே நமது பண்பாடு.

மதுரையில் ஒரு திரைப்படத்தை திரையிட முடியாமல் தியேட்டர் உரிமையாளர்கள் மறைமுகமாக மிரட்டப்படுகிறார்கள். ஆனால் முதல்வரோ அவ்வாறு ஏதும் புகார் இல்லை என்கிறார். முதல்வரின் மகனை பற்றி யார் புகார் கூறமுடியும்.

மதுரைக்கு இவர் (கருணாநிதி) முதலமைச்சரா? அல்லது இவரது மகன் முதலமைச்சரா? வல்லபாய் படேல், காந்தி போன்றவர்கள் வாங்கிக் கொடுத்த சுதந்திர நாட்டில் இன்று சர்வாதிகாரம் நடந்து வருகிறது.

நமது முதல்வர் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறேன் என்கிறார். ஆனால் அவர் பணக்காரர்களின் சிரிப்பில் பணத்தைதான் பார்க்கிறார்.
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து மக்களை ஏமாற்றி வருகின்றன.

ஆட்சிக்கு வராமலேயே மக்களுக் காக சிந்திப்பதால் என்னால் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி, வட்டியில்லா கடனாக ஆட்டோக்கள், படிக்காத மற்றும் படித்த ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க முடிகிறது.

இங்கு வந்திருக்கும் பெண்கள் நினைத்தால் நாட்டின் தலையெழுத் தையே மாற்ற முடியும். அதிமுக தோழிக்காக இருக்கிறது. திமுக குடும்பத்திற்காக இருக்கிறது. இந்த இரு கட்சிகளும் ஏமாற்றும் கட்சிகள். மக்களுக்காக பாடுபடும் ஒரே கட்சி தேமுதிகதான்.

3 Comments:

M Arunachalam said...

This is off-topic.

Anybody interested to vote in the American Presidential Election can visit my blog KURATTAI ARANGAM in the following URL:

http://hereisarun.blogspot.com/2008/09/want-to-vote-in-american-presidential.html

Arun

Anonymous said...

5000 பேர் முதல்ல dyfi ல் இருந்தாங்களா இல்லை சினிமா துணை நடிகர்களை சப்ளை செய்பவர்கள் ஏற்பாடா?

Anonymous said...

"வல்லபாய் படேல், காந்தி போன்றவர்கள் வாங்கிக் கொடுத்த சுதந்திர நாட்டில்"

நேரு மிஸ்ஸிங். காங்கிரசுக்கு ஸிக்னல்?

தமிழ் நாட்டில் இதுக்கு முன்னாடி யாராவது (BJP தவிர) படேல் பேர் சொல்லியிருக்காங்களா?