பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, September 29, 2008

எங்கள் அணி தான் முதல் அணி - விஜயகாந்த்

கல்கியில் வந்த விஜயகாந்த் விளாசல் என்ற தலைப்பில் வந்தது...

கம்யூனிஸ்ட் தலைவர்களோடு சந்திப்பு, இளைஞரணி மாநாட்டுக்கான தயாரிப்பு, நடிகர் வடிவேலுவோடு மோதல் என பரபரப்பாகவே இருக்கிறது, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் அரசியல் களம். அவர் நம்மோடு பேசியதிலிருந்து இங்கே...!

இளைஞர் மாநாடு : அதிகாரம் எங்களிடம் இல்லாவிட்டாலும், தனிப் பட்ட முறையிலும், கட்சி சார் பிலும், நிறைய உதவிகளை இளைஞர்களுக்குச் செய்து வருகிறோம். விருத்தா சலத்தில் கம்ப்யூட்டர் மையம் நடத்தி வரு கிறோம். தி.மு.க. பிரமுகர்களின் பிள்ளை களும் படிக்கிறார்கள். சமீபத்தில் 600 கம்ப்யூட் டர்கள் வாங்கி தமிழ் நாடு முழுவதும், பயிற்சி மையங்கள் நடத்தக் கொடுத்துள் ளோம். 100 ஆட்டோக் கள் வாங்க நிதியுதவி செய்கிறோம். இவற்றையெல்லாம் விட மிக முக்கியமாக ஒரு லட்சம் இளைஞர்களுக்குத் தனியார் துறையில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தர இருக்கிறோம். தி.மு.க. அரசு, தொலைக்காட்சிப் பெட்டிகளை கட்சிக் காரர்களுக்குக் கொடுப்பது போல செயல் பட மாட்டோம்.

பாசமிகு கம்யூனிஸ்டுகள் : நான் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் வரதராஜன் அவர்களைச் சந்தித்த வுடன், பலவிதமான யூகங்கள் உலவி வருகின்றன. கம்யூனிஸ்ட்கள் எந்தவித சுயலாபமும் எதிர்பாராமல் மக்களுக்கு உழைத்து வருபவர்கள். வறுமையையும், ஊழலையும் ஒழிக்கவேண்டுமென்று உண்மையிலேயே போராடி வருபவர்கள். “விஜயகாந்த் மூன்றாவது அணிக்கு தலைமை தாங்குவாரா?” என்றெல்லாம் பேச்சு துவங்கிவிட்டார்கள். மூன்றாவது அணி என்று சொல்லாதீர்கள். நாங்கள் முதல் அணி. ஒன்று மட்டும் நிச்சயம். தி.மு.க. - அ.தி.மு.க.வோடு நேரடி யாகவோ அல்லது மறை முகமாகவோ எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள மாட்டோம்.

தமிழன் ஏமாற்றப்படுகிறான் : தமிழர் களை கருணா நிதியும், ஜெயலலிதா வும் ஏமாற்றி, சுரண்டி அரசியலில்
பிழைப்பது ஒரு பக்கம் இருக்க,
சுற்றியுள்ள மாநிலங்கள் தமிழகத்தை வஞ்சிக்கின்றன. கர்நாடகம், காவிாிக்குத் தடைபோடுகிறது. பாலாற்றில் அணை கட்டப் போகிறோம் என்று ஆந்திர அரசு நம்மை மிரள வைக்கிறது. முல்லைப் பாிெயாறு பிரச்னையில் தமிழகத்தை வஞ்சிக்கிறது கேரளா. மொத்தத்தில் தேசிய நீரோட்டத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட தமிழனை குறுகிய சிந்தனைக் குத்தள்ளிவிடு கிறார்கள் இவர்கள். எந்தப் பிரச்னையையும் தீர்க்க முயற்சி
செய்யா மல், கவிதை எழுதுவது, குடும்பத் தைக் கொஞ்சுவது என்று நேரத்தைச் செலவு செய்து கொண்டிருக்கிறார் கருணாநிதி.

வீராசாமி வெற்றுச்சாமி : கடந்த சில மாதங்களாக ஆற்காடு வீரா சாமி மீது நிறைய விமர்சனங்கள் வைத்தாகி விட்டது. ஆனால் எதற்கும் அசராமல் இருக்கிறார் அவர். ‘காற்று வீசினா கரண்ட் கிடைக்கும்’ என்று சொல்வதற்கு ஒரு அமைச்சர்! தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளுமே, கடந்த பத்தாண்டுகளில், தமிழகத்தின் மின் தேவையைக் கணக்கில் கொண்டு, மின் உற்பத்தியைப் பெருக்க முயற்சி செய்ய
வில்லை. தன் குடும்ப நலத்துக்கு, தங்களுக்கு வேண்டிய இலாக் காக்கள் பெறுவதற்கு, மத்திய அரசைப் பயன்படுத்திக்கொள்ளும் கருணாநிதி, நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் தமிழகத்துக்கு மட்டுமே என்று ஏன் போராடவில்லை? நெய்வேலி முதல்கட்ட மின்நிலையம் அமைக்கப்பட்டபோது, தமிழகம் மட்டுமே அதன் பயனாளி என்று முடிவெடுக்கப்பட்டது கருணாநிதிக்குத் தாிெ யுமா?

பள்ளிக் கணக்கு ; புள்ளிக் கணக்கு : உள்ளாட்சி அமைச்சர் ஸ்டாலின், சுயஉதவிக் குழுக்கள் துவக்கப்பட்டதற்கு காரணம் தி.மு.க. அரசு தான் என்கிறார். ஆனால் ப.சிதம்பரமோ, “காங்கிரஸ் அரசுதான் சுயஉதவிக் குழுக் களை அறிமுகப்படுத் தியது; ஆனால் பத்திாி கைகள் அதைப் போடுவதில்லை” என்று கண்ணீர் வடிக்கிறார். மத்திய திட்டக் குழு துணைத் தலைவர் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் பற்றிப் புள்ளிவிவரம் சொல்லிவிட்டுச் சென்றால், ஸ்டாலின், தமிழ்நாடு உச்சாணிக் கொம்பில் இருப்ப தாக அவர் ஒரு புள்ளிவிவரம் தருகிறார். இரண்டுக்கும் தொடர்பே இல்லை. பாவம், ஸ்டாலினுக்குப் பள்ளிக் கணக்கும் தாிெயலை; புள்ளிக் கணக்கும் தாிெயலை. படுத்தும் பா.ஜ.க. :இந்தக் கட்சி அதிகாரத்தில் இருக்கும் மாநிலங்களில் சிறுபான்மை யோர் மீது வன்முறை ஏவி விடப்படுகிறது. சிறுபான்மை யோரைக் காக்கும் பாிெய கடமை பெரும்பான்மையோருக்கு உண்டு. மேலும் மதமாற்றத்தில் சிறுபான்மை யோர் ஈடுபடுகிறார்கள்.. என்று சொல்வது சாியல்ல. மனிதன் மதம் மாறுவது என்பது அவனது தனிப்பட்ட உாிமை. உளப்பூர்வமாக ஒருவன் வேறு மதத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால்,
விரைவில் தாய் மதம் திரும்பிவிடுவான். மேலும் இந்தப் பிரச்னைகளை யெல்லாம் விட மனிதனின் வறுமையைப் போக்க முயலவேண்டும். இதை பா.ஜ.க. உணர்ந் தால் அந்தக் கட்சிக்கு நல்லது.

எப்படிச் சாத்தியம்? : எங்கள் செல் வாக்கை வீழ்த்தத்தான் மலிவு விலை ஒரு ரூபாய் அாிசியைக் கொண்டு வந்திருக்கிறார் கருணாநிதி.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரேஷன் பொருட்களை வீட்டுக்கே கொண்டுவந்து கொடுப்போம் என்று சொன்னதைக் கிண்டலடித் தார்கள். இப்போது இரண்டு கோடி பொட்டலங்கள் போட்டு மசாலா சாமான்களை எப்படிக் கொடுக்கப் போகிறார்கள்? கறவை மாடு கொடுப்போம் என்று சொன் னதற்கு சிாித்தார்கள். இப்போது வீட்டுக்கு மாடு திட்டத்தை அரசே அறிமுகப் படுத்துகிறது. அரசு ஊழியம் செய்யும் பெண்களுக்கு ஆறு மாதம் பிரசவ கால விடுமுறை கொடுக்கவேண்டும் என் றோம். மத்திய அரசு இப்போது ஆணை போட்டிருக்கிறது.

வடி(பொடி)வேலு :
சிலரது தூண்டுதலின் பாிேல் பகடைக் காயாகச் செயல்படும் வடிவேலு, இப்போது நேரடியாக என்னை வம்புக்கிழுக்கிறார். என்னுடைய படங் களில் நடிக்கும் போது, முதல்வர் என்று வசனம் பேச நான் சொன்னேன் என் றும், “அது முடியாது” என்று மறுத்ததால்தான் கோபம் என்றும் கூறுகிறார் வடிவேலு. கடைந்தெடுத்த பொய். என் படங்கள் அனைத்துமே சிரியஸான படங்கள். அவற்றில் காமெடிக்கு அதிக வேலை இல்லை. கருணாநிதி - ஜெயலலிதா என்ற இரு தலைகளை எதிர்த்து துணிந்து அரசியல் செய்துகொண்டிருப்பவன் நான். என்னை எதிர்த்துப் போட்டி போடுவேன் என்று சொல்லி சிாிக்க வைக்கிறார் வடிவேலு. அவரை எங்கள் கட்சியின் கடைக்கோடி தொண்டன்கூட தோற்கடிப்பான். எங்கள் கவனத்தைச் சிதறடிக்க வேண்டாம் என்பதே அவருக்கு என் அட்வைஸ்.
தமிழகத்தின் நலன் கருதுமா தே.மு.தி.க.? - கல்கி தலையங்கம்


யார் விரும்பினாலும் விமர்சித்தாலும், விஜயகாந்த் இன்று தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய அரசியல் சக்தியாக விளங்குவதை மறுப்பதற்கில்லை. திரளான மக்கள் அவரது கூட்டத்துக்கு வருகின்றனர்; அவரைத் தலைவராக ஏற்றுள்ளனர்.

ஆனால், கூட்டத்துக்கு வரும் அத்தனை பேரும் தமக்குத்தான்
வாக்களிப்பார்கள் என்று விஜயகாந்த் அனுமானிப்பது தப்புக்கணக்காகி விடும். எம்.ஜி.ஆர். தனித்துக் கட்சி ஆரம்பித்தபோது எழுந்தது போன்ற ஆர்வ அலை, இப்போது தமிழக அரசியலில் இல்லை. இந்தச் சூழலில், விஜயகாந்த் தனியாகப் போட்டியிடுவதால் சில பல தொகுதிகளை வென்று நல்ல எதிர்க்கட்சியாக விளங்கலாமேயொழிய ஆட்சி அமைக்கவோ, ஆட்சி அமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கவோ முடியாது. ஆனால், அவர் தனித்துப் போட்டியிடுவதால் வோட்டுகள்
பிாிந்துபோய், வலுவான அரசு அமைவதற்கான சூழல் நிச்சயம் பாதிக்கப்படும். தமிழ்நாட்டுக்கு இந்த இக்கட்டைத் தர விஜயகாந்த் விரும்புகிறாரா?

கம்யூனிஸ்டுகள் காாிேயது போல், அவர்களுடன் இணைந்து மூன்றாவது அணி அமைத்தாலும் இதே இக்கட்டுதான் ஏற்படும். மேலும், கொள்காீைதியான மோதல்கள் ஏற்படாமல் கம்யூனிஸ்டுகளு டன் எந்தக் கட்சியும் நீடித்து ஆட்சி செய்வது துர்லபம். தி.மு.க., அ.தி.மு.க.வுடனான கூட்டணி என்கிற பேச்சுக்கே இடமில்லை; பா.ம.க.வும் விஜயகாந்தை ஏற்கவில்லை என்கிற சூழலில், காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கிற ஒரு சாத்தியக்கூறு மட்டுமே மிஞ்சுகிறது.

மைனாாிட்டி ஆட்சி அமைப்பதில் தவறில்லை என்று கருதிய தி.மு.க. தலைவர் கூட, இன்று பா.ம.க.வும் கம்யூனிஸ்டுகளும் கூட்டணியிலிருந்து விலகிவிட்ட அச்சத்தினால், காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கு அளிக்க முன்வந்துள்ளார்! இதுபோன்ற ஸ்திரமற்ற நிலைமைக்கு
இடங்கொடாமல், தே.மு.தி.க. எதிர்வரும் தேர்தலில் சிறந்த முறையில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம்; அதன் துணையுடன் அரசு அமைப்பதாகவே பிரசாரம் செய்யலாம்.

தி.மு.க., அ.தி.மு.கவின் அரசியல் போக்கு பிடிக்காமல் சலித்துப்
போயிருக்கிற தமிழக மக்களுக்கும் இந்த மாற்றுக் கூட்டணி வரவேற்கத்தக்கதாகத் தோன்றும்.

ஆனால் ஒன்று, தி.மு.க.வில் குடும்பச் சண்டை, அ.தி.மு.க.வில் ஜெயலலிதாவின் ஏகபோகம், காங்கிரஸில் உட்கட்சிப் பூசல் என்று நிலவுவது போல் மிகப் பாிெய குறைபாடுகள் தமது கட்சியிலும் ஏற்பட விஜயகாந்த் அனுமதிக்கக்கூடாது; “ஊழலை இரவோடு இரவாக ஒழிக்க முடியாது” என்று பின்வாங்கவும் கூடாது.

“நேர்மையான ஆட்சி, தகுந்த அதிகாாிகளைக் கொண்டு தரும் சிறந்த நிர்வாகம்” என்பவை தேர்தல் வாக்குறுதிகளாக வழங்கப்பட்டால், அனுபவமற்ற நடிகருக்கு வோட்டுப் போட யோசிப்போர் கூட ஆதரவு
நிலைக்கு மாற வாய்ப்பு இருக்கிறது. இலவச அரசியல் என்னும் நச்சுக் காற்றால் மாசுபட்டுள்ள தமிழகத்தில் புத்துணர்ச்சித் தென்றல் வீசும். தங்கபாலு ஏற்கெனவே விஜயகாந்துடன் கைகோப்பது குறித்து ஆர்வம் காட்டியிருக்கிறார். ராகுல் காந்தியும் சிந்திக்க வேண்டும்.
( நன்றி: கல்கி )

3 Comments:

மணிகண்டன் said...

என்ன கருமம்டா இது !

ராமய்யா... said...

இப்போ எல்லாம் இ வ பதிவுகள் குறைந்து கொண்டே வருகிறது???

அழிப்பான் said...

very nice article .